வாரம் ஒரு கவிதை….” அலையின் தாகம் …” !!!

1fb2b-baby-sleeping1

வாரம் ஒரு கவிதை… ” புறக்கணிப்பு ” !!!

stock-photo-beautiful-yellow-sunflower-petals-closeup-1975445

வாரம் ஒரு கவிதை ….” ஒரு கவிதையின் டைரி ” !!!

 

ஒரு  கவிதையின் டைரி
…………………
  என் கவிதை சொன்னது …இது என் டைரி என்று !
ஒரு டைரியில்  கதை இருக்கும் …கவிதையும்  இருக்கும்
கவிதைக்கே   ஒரு டைரியா ? ! …. வியந்தேன்  நான் !
உன் கதை என்ன ….படிக்கலாமா உன் டைரி நான் ?
கேட்டேன்  கவிதையை !…. படிக்கணும் நீ கட்டாயம் …அது
என் கதை அல்ல …உன் கதை…உன்  முதல் கவிதை !
சொன்னது  என் கவிதை !..பிரித்தேன்…படித்தேன் …என்
கவிதை  டைரியை !… என் முதல் கவிதை அதில் முதல் பக்கத்தில் !
படித்துப் படித்துப் பார்த்தேன் …தேன் என இனித்தது என்
கவிதை…விண்ணில் பறந்தேன்  நான் … இந்த மண்ணில்
இல்லை என் கால் ! .. என்னுள்  ஒரு பாரதியும் கம்பனுமே !
சிரித்தது கவிதை … என் டைரி குறிப்பையும் மறக்காமல்
படி இப்போது …சொன்னது என் கவிதை ! படித்தேன்
அதன் குறிப்பை …” என்ன அய்யா கவிதை இது ? எதுகை
இல்லை …மோனை  இல்லை … ஒரு கவிதைக்கு சொந்தம்
சொல்ல சந்தமும் இல்லை .. இது என்ன கவிதை ? கவிதை
விதை விதைக்காத  ஒரு கதை அய்யா  இது” அதிர்ந்தேன் நான்!
இது  கவிதை …அது கவிதை  என்னும் நாளில் என்
புதுக் கவிதை  இதை   இதுவா கவிதை  என கேக்குதே என்
கவிதையே   தன்  டைரியில் !…. இது என்ன டைரியா ?
இல்லை கம்பன் வீட்டுக் கட்டுத்  தறியா ? !!!
நடராஜன்
8 june 2016

வாரம் ஒரு கவிதை …” காகிதக் கப்பல் ” !

 

காகித கப்பல்
………….
மழை நீரின் ஓட்டத்தில் நான் விட்ட முதல்  கப்பல் ….காகித கப்பல்!
இன்று வரை  மனத்திரையில் ஓடுதே  என் முதல்  கப்பல் பயணம் !
ஒன்றல்ல … பலப் பல …. ஒன்று கவிழ்ந்தாலும் மற்றது தொடரும்
அதன் பயணத்தை …கை வைக்கவில்லையே   நான் என் தலையில்
அன்று…”கவிழ்ந்தது என் கப்பல் என்று ” !
 கப்பல் ஒட்டிய பெருமை மட்டுமே என் முகத்தில் …அந்த
மகிழ்ச்சி ஒன்றுதான் மனதில் நின்றது அன்று !
நீரின் ஆட்டத்திலும் ஓட்டத்திலும் அதன்  பாதையில் வெகு நேர்த்தியாய்
பயணம் செய்து “ஒருவர் வாழ்க்கை பயணமும் இப்படித்தான்” என்று
எனக்கு கோடிட்டு  பாடம் சொன்னதே அந்த காகித கப்பல் !
பால பாடம் அதைப்  படிக்கத் தவறி விட்டேன் நான் அன்று !
காலச்சக்கர ஓட்டத்தில் ஓடும் காகித கப்பல் தானே நம் வாழ்க்கையும் !
வாழ்வின் ஓட்டத்தில்  ஒரு  வாசல்  வழி மூடினாலும்  இறைவன்  மறு
வாசல் வழியைத் திறக்கிறானே நமக்கு  !
மாற்று வாசல் திறப்பது தெரியாமல்  மூடிய கதவு முன்னால் நான்
நின்று ” கவிழ்ந்து விட்டதே என் கப்பல் ” என்று  புலம்புவது
ஏன் இன்று ?….
காகித கப்பல் சொன்ன பாடம் படிக்க நான் மறந்து விட்டதாலா ?  நான்
செய்த தவறு நீ செய்ய வேண்டாம்  தம்பி !
காகிதக் கப்பல் பயணம்  இன்று உன் வாழ்வில் நீ பார்க்காத
ஒன்றாக  இருந்தாலும் அந்த கப்பல் எனக்கு சொன்ன
செய்தியை  மறக்க வேண்டாம் நீ !
ஆட்டம் ஏதும்  இன்றி உன் வாழ்க்கை ஓட்டம்  உன்னை வெற்றி சிகரம்
தொடவைக்கும்  ஒரு ஆகாயக் கப்பலாக மாறும் நிச்சயம் !
natarajan

வாரம் ஒரு கவிதை …” தீபத்தின் ஒளியில் ” !!!

 

தீபத்தின் ஒளியில் …
……………
ஒளியில் மிளிரும்  தீபம் … அதில் மலரும்    ஒளி   தீப  ஒளி  !
 
விழிக்கு  இமை போல் ஒளிக்கு  தீபம் அன்றோ !….ஒரு  தீபம்  
 
 தரும் ஒளியில்  படிக்கும்  பல விழிகள்! …கையில் தீபம் ஏந்தி அது  
 
காட்டும் வழியில்   நடக்கும்  கால்கள் பல …!   கலங்கரை 
 
தீப ஒளி காட்டும் தடத்தில் கரை சேரும்   கலங்களும்  பலப்  பல !
தீபம் சிறிதானாலும் அதன்  ஒளி  பெரியது ….வலியது !
 
 தீபத்தின்  ஒளியில் ஒருவர் காண்பது   அவர் வாழ்வின் ஒளிவிளக்கை !
 
தீபத்தில்  பெரிய தீபம் …. இறைவன்  படைத்தது  …!
 
 என் தீபம் … உன் தீபம்  என்று  சொந்தம் சொல்ல முடியாத 
 
உலகின்  ஒளிவிளக்கு …. கதிரவன்  என்னும்  ஒரு  அற்புத  தீபம் !
 
சொல்லுங்க …இந்த அரிய  தீபத்தில் இல்லாத சக்தி  எந்த மின் சக்தியில் 
 
இருக்கு ?  இறைவன்  கொடுக்கும்  இந்த தீப ஒளி  நம்  வீட்டுக் 
 
கூரையில்  கிடைக்க  …..  “எங்கே   என் 
 
மின்சாரம்”  என்று அங்கும் இங்கும்   நாம் அலைவது  ஏன் ?   
 
நம் கையில் வெண்ணெய்  இருக்க  நெய் தேடி  இலக்கு இல்லாமல் 
 
இனியும்  நாம்  ஓட வேண்டுமா ?  சொல்லுங்க …  
 
இறைவன் படைத்த  அந்த அற்புத தீப  ஒளியின் துணையில்   நல்லதொரு 
 
வழி  தேடுவோம் இன்றே !   “இல்லை  இனிமேல் மின் பற்றாக்குறை “
என்ற   ஒரு  இனிய  விடியலுக்கும்  போடுவோம்  பாதை  உடனே !
Natarajan….. My Kavithai in http://www.dinamani.com on 23 May 2016
 

வாரம் ஒரு கவிதை ….” தேர்தல் நாள் ” !!!

 

தேர்தல்  நாள்
…………
தேர்தல்  நாள் …ஒரு ஜனநாயகத் திருவிழா !…அது
தேர்வு நாள் உனக்கு  தம்பி ! தேர்தல் வினாத்  தாளில்
கேள்வி பல இருந்தாலும் உன் விடை ஒன்றே ஒன்றுதான் !
தெளிவாக இருக்கட்டும் உன் விடையும் தேர்வும் !
உன் தேர்வில் இருக்கு உன் எதிர் காலம் …சிந்தித்து
பதில் சொல்லு உன் விடை என்ன  என்று !
“நோட்டுக்கு  இல்லை என்  வோட்டு”  என்று சொல்லும் உனக்கு
அவசியமா  இலவசம்  என்னும் வசிய மருந்து ? யோசித்து விடை
எழுது !
தம்பி .. தெளிவான  ஒரு   வாக்கு சொல்ல  வேண்டும் உன்
செல்வாக்கு என்ன வென்று !…  காட்ட வேண்டும் உன் பிரதிநிதி
யார் என்று !…புரிந்து கொள்  நீ  ஒன்றை ! உன் வாக்கை
யாசிக்கும் பலர் தலை விதி இன்று உன் கையில் !
தேர்வு  நாள் இன்று யோசிக்காமல் நீ எழுதும் ஒரு விடை
உன்னை சொல்ல வைக்கும் ” என் பிரதிநிதி …என்
தலைவிதி ” …என்று  நாளை !  சிந்தித்து சரியான
விடை எழுது  உன் தேர்வு தாளில் !
Natarajan….in http://www.dinamani.com on 16 May 2016
Natarajan

படித்து ரசித்த கவிதை …” இவைகளும் குருவாகலாம் …” !!!

இவைகளும் குருவாகலாம்! 

………………………………………………….

பசிய இலைகள் பழுத்துப் போவதும்
முதிர்ந்த இலைகள் உதிர்ந்து போவதும்
புதிய தளிர்கள் முளைத்து வருவதும்
இயற்கையின் நியதி என்பதைக் காட்டுவதால்
மரம் கூட குருவாகலாம்!

அழுக்கு துணிகளைச் சுமந்து
ஆற்றுக்கு போவதில் வருத்தமுமில்லை
வெளுத்த துணிகளைச் சுமந்து
வீட்டுக்கு வருவதால் மகிழ்ச்சியுமில்லை
கடமையைச் செய்வதில் மட்டும்
கவனம் காட்டுவதால்
கழுதை கூட குருவாகலாம்!

வேண்டுதல் வேண்டாமை இல்லாமல்
வெறுப்பு, விருப்பு காட்டாமல்
ஆளுக்கு ஏற்றார்போல் ஆட்டம் போடாமல்
தன்முன் நிற்பவரின் தன்மையை
அப்படியே காட்டும் நேர்மையால்
கண்ணாடி கூட குருவாகலாம்!

எரியும் ஒளி விளக்கை
எப்படி சாய்த்தாலும்
கவிழ்த்தாலும்
ஒளிச்சுடர் மட்டும்
உயரப் பார்த்தே எரியும்
உன்னத லட்சியத்தை சொல்வதால்
விளக்கு கூட குருவாகலாம்!
தன்னைக் கரைத்து
சுற்றி இருப்பவர்களுக்கு
உன்னத ஒளி தந்து
ஒப்பற்ற தியாகம் செய்வதால்
மெழுகுவர்த்தி கூட குருவாகலாம்!

காற்றின் அலைக்கழிப்பில்
கலைந்து போனாலும்
மீண்டும் மீண்டும் முயற்சி செய்து
வலை பின்னும் கலையினால்
சிலந்தி கூட குருவாகலாம்!

உற்றுக் கவனிக்கிற
உயர்ந்த குணம் இருந்தால்
கற்றுக் கொள்ள நிறைய உண்டு
பெற்றுக் கொள்ள உங்களுக்கு
பிரியமுண்டா சொல்லுங்கள்!

source………
இளசை சுந்தரம், மதுரை.  in http://www.dinamalar.com

Natarajan

வாரம் ஒரு கவிதை …” உழைப்பே உன்னதம் ” !!!

 

வாரம் ஒரு கவிதை ….” வானமே எல்லை ” !!!

வாரம் ஒரு கவிதை …. ” பேசும் மௌனம் ” !!!