படித்து ரசித்த கவிதை ….” வருகிறது தேர்தல் ” !!!

 

வருகிறது தேர்தல்!

வருகிறது தேர்தல்
தயாராகுங்கள் ஏந்தல்களே!

வாக்குறுதிகளை
வக்கணையாய் கூறி
வாக்கு கேட்டு வரப் போகின்றனர்!

பாரீன் மாதிரி
ஆக்குவேன் என்பார் ஒருவர்…
‘சரக்கே’ கிடையாதென்பார் மற்றொருவர்…
வெற்றி பெற்றதும்
சரக்கை ஏற்றி
பாரீனுக்கே
பறந்து விடுவர்!

ஓட்டுப் போட
மெட்ரோ ரயிலில் கூட
மெனக்கெட்டு கூட்டி வருவர்…
ஓட்டு போட்டு முடிந்ததும்
பாசஞ்சர் ரயிலில் கூட
ஏற்றி விட மாட்டார்கள்!

பட்டொளி வீசி
பறந்த மூவர்ணக்கொடி
பிளக்ஸ் பேனர்களால்
மறைக்கப்படும்!

நேற்று வரை
நாயே பேயே என வசை பாடியவர்கள்
நாகரிகமாக
நடந்து கொள்வர்!
அழைக்காமலேயே
அலைபேசியில் பேசும் தலைவர்
வெற்றி பெற்றதும்
தொடர்பு எல்லைக்கு
வெளியே இருப்பார்!

பொதுத் தேர்வுக்கு
விழுந்து விழுந்து
படிக்கும் மாணவனுக்கும்
பொதுத் தேர்தலில்
விழுந்து விழுந்து
வாக்கு கேட்கும்
வேட்பாளருக்கும்
பெரிய வித்தியாசமில்லை!

மாணவன் வெற்றி பெற்றால், ‘காலேஜ்’
‘மாண்புமிகு’ வெற்றி பெற்றால், ‘எங்கேஜ்!’

நாம்
ராமாவரத்தை பார்த்திருக்கோம்…
கோபாலபுரத்தை பார்த்திருக்கோம்…
தைலாபுரத்தை பார்த்திருக்கோம்…
போயஸ் தோட்டத்தை பார்த்திருக்கோம்…நெல்லுக்கு ஆசைப்பட்டு
சொல்லுக்கு சீட்டெடுக்கும்
பரிதாபத்திற்குரிய
பொது ஜன கிளியை எவராவது
பார்த்திருக்கிறீர்களா?
மாற்றமே மானிட
தத்துவம் என்பதை அரசியல்வாதிகள்
கடன் வாங்குவது இருக்கட்டும்…
வாக்களித்த மக்களுக்கு
நன்றியோடு பணியாற்றுவோருக்கு
வாக்களிப்போம்!

உங்கள் ஓட்டுகள்
சட்டமன்றத்திற்கு
மாண்புமிகுகளை அல்ல
மனிதர்களை அனுப்பட்டும்!

பாலா சரவணன்,
சென்னை. in http://www.dinamalar.com

Natarajan

வாரம் ஒரு கவிதை ….” இணை (த) யத்தில் வாழும் எம் தமிழ் …”

இணை(த)யத்தில்  வாழும்  எம்  தமிழ் !
……………………………..
இன்பத்தமிழ் நம்  இதயத்துடிப்பு …உயிர் மூச்சு ! இனிய தமிழ்
இன்று இணையத்தில்  இணைக்குதே  தமிழ் இனத்தை !
பல கோடி தமிழ் மக்கள் உலகின் எந்தக்  கோடியில் இருந்தாலும்
 தேடி வந்து அவரை இணைப்பது  இணையத் தமிழ் அன்றோ !
இதயம் திறந்து பேச  சிறந்த ஓர் வாயிலான தமிழ் இணையம்
இன்று உலகத் தமிழர் பலரை இணைக்கும் பாலம்  !
தாய் மொழி கல்வி எட்டாக்கனி ஆன பின்னர்  நம் பிள்ளைகள்
பலருக்கு இணையத்தமிழ் இனிக்கும் தமிழ் !
தமிழ் இணையம் அவருக்கு ஒரு தமிழ் பள்ளிக்கூடம் !
இயல் , இசை , நாடகத் தமிழ் கண்ட நம் செம்மொழி
இன்று இணையத் தமிழாகவும் வெற்றி உலா வரும் காலம்
இணையத்தின் பொற்காலமே !
natarajan
19 april 2016

வாரம் ஒரு கவிதை …” வள்ளுவம் வாழ்வது எங்கே ? “

வள்ளுவம்  வாழ்வதெங்கே ?

வள்ளுவம் வாழ்வது எங்கே…?
வள்ளுவம் வாழ்வது இங்கே அங்கே என்றில்லாமல்
எங்கும்  வாழ்கிறது வள்ளுவம் என்னும்  வாழ் நெறி  தத்துவம் !
தங்கத் தமிழில் வள்ளுவன்  தந்த இரண்டு அடி குறட்பாவில்
இல்லாத செய்தி இது என்று  இன்று வரை ஒன்று இல்லையே !
மொழி மத பேதம் மறந்து கடல் கடந்தும் பல மொழியில் ,குரலில்
ஒலிப்பது வள்ளுவன்  குறள் ஒன்று மட்டுமே !..அன்னை
தமிழுக்கு இருக்காதா பூரிப்பு ? ..இங்கு அங்கு என்றில்லாமல்
எங்கும்  நிறைந்திருக்கும் தன் பிள்ளை வள்ளுவனை நினைத்து !
நம் இதயத்தில் இறைவனை வைத்துக்கொண்டு இறைவன் எங்கே
எங்கே என்று தேடவும் வேண்டாம் !
திருக்குறள் நம் கையில் இருக்கையில்
வாழ் நெறி தத்துவம் எங்கே எங்கே என  நாம் அலையவும் வேண்டாம் !
Natarajan

” சித்திரை மகளே …வருக …வருக …” !!!

சித்திரை மகளே வருக!

சித்திரை மகள்
நித்திரை நீங்கி
முத்திரை பதிக்க
தமிழ் புத்தாண்டாக
தவழ்ந்து வருகிறாள்!

பங்குனி திங்களுக்கு
விடை கொடுத்து
பொங்கும் புதுவெள்ளமாக
பவழவாய் திறந்து
சுடர் விடும் சூரியனின்
வாழ்த்துடன் வருகிறாள்!

சித்திரை மகளை
ஆதவன் மட்டுமா
ஆசையோடு
ஒளிக்கதிர்களோடு
வரவேற்கிறான்!

அன்பு உள்ளங்கள்
ஆடும் மயில்கள்
பாடும் குயில்கள்
துள்ளி ஓடும்
புள்ளி மான்கள்!

விரிந்த மலர்கள்
விழும் அருவிகள்
வீசும் தென்றல்
பேசும் கிளிகள்!
இசைபாடும் மூங்கில்கள்
வளைந்தோடும் நதிகள்
ஓசையிடும் கடல் அலைகள்
விரிந்த செவ்வானம்
எல்லாம் மகிழ்வோடு
வரவேற்கும் பொழுது….

மனிதர்களே…
மங்கள மேளம் கொட்ட
சித்திரை மகளை
நாமும்
வணங்கி வரவேற்போம்!

Source….
பூ.சுப்ரமணியன்,
சென்னை.  in http://www.dinamalar.com

Natarajan

வாரம் ஒரு கவிதை ….” வாக்கு உன் செல்வாக்கு ” !

வாக்கு  உன்  செல்வாக்கு !
…………………..
உன் கையில் தான் இருக்கு தம்பி இந்த
நாட்டின் நம்பிக்கை …
வாக்குறுதி   பல கொடுத்து பல  பேர் வாக்கு கேட்டாலும்
யாரும் அரியணை ஏற முடியுமா உன் செல்வாக்கு இல்லாமல் ?
பலர் சொல்லும் வாக்கை மட்டும் நம்பி உன் வாக்கை ஒரு செல்லாத வாக்கு
ஆக்கிவிடாதே  தம்பி …ஒன்று மட்டும் உறுதி தம்பி !
உன் செல்வாக்கின் முன் மற்றெல்லாம் ஒரு செல்லா காசுதான் !
இதோ வந்து விட்டது தருணம் ..உன் செல்வாக்கை மற்றவர்
தெரிந்து கொள்ள …புரிந்து கொள்ள !
மறக்காமல் பறை சாற்று உன் செல்வாக்கு  என்னவென்று !
Natarajan
5 april 2016

இந்த வாரக் கவிதை……” அணையட்டும் சாதீ …”

 

அணையட்டும்  சாதீ ….
…………….
“சாதிகள்  இல்லையடி பாப்பா” … பால பாடம் படித்தோம் அன்று!
பாடம் பாலருக்கு மட்டும்தானா ? மற்றவருக்கு இல்லையா ?
காலம்  மாற  மாற வாழ்வின் கோலம்  மாறுதே !
சாதியும் மதமும் நம் வாழ்வின் வேதமாய் உருமாறுதே
சாதித்தது என்ன நாம் இத்தனை காலம் ?
சாதிக்  கட்சி ஆயிரம் … சாதியின் பெயரில் வாக்கு வங்கி பல்லாயிரம்!
வீதிக்கு வீதி சாதியின் பெயர் சொல்லி அரசியல் செய்ய
தனித்  தனி தலைவர்கள் கூட்டம் ! அவர் பின்னால்
தன்  தனித்துவம் தொலைத்த மனிதரின் ஆட்டம் பாட்டம் !
சாதிக்கப்  பிறந்த  குழந்தைகள் அய்யா ..நாங்க  !
சாதியின் பெயரால் பொசுக்கலாமா எங்க வாழ்வை நீங்க ?
வேதம் ஓதும் சாத்தான் பேச்சுக்கு மயங்கலாமா  நீங்க ?
பாதம் பணிந்து கேட்கிறோம் நாங்க… எங்க  வாழ்வில்
ஒளி வீசும்  தீபமாய் இருக்க வேண்டிய  நீங்களே
சாதித்  தீயாக மாறி  எரிக்கலாமா   உங்க சந்ததியை ?
கருக்கி சுருக்கலாமா அவர்தம் வாழ்வை ?
பணிவன்போடு வேண்டுகிறோம் நாங்க …சாதித்தீ
வளர்த்து நீங்க சாதிக்கப் போவது என்ன அய்யா ?
உங்க சந்ததியைத் தொலைப்பது ஒரு சாதனையா ?
சற்றே யோசியுங்க ! இந்த வேதனை தொடரவேண்டுமா இன்னும் ?
அணைய வேண்டும் அய்யா …சாதித்  தீ !!!…இணைய வேண்டும்
மனித குலம் ஒரே அணியில்  தம் சாதி  மத  பேதம் மறந்து !
natarajan

What Birds teach us….Learn from Them…Keep Singing….!!!

Life is tough, and if you thought that the lives of animals were any easier, you’re wrong. Nature itself brings a lot of challenges we all have to face – whether you’re human or not. But essentially, life is created in such a way so as to enable us to withstand the challenges and overcome the hardships they bring. If there’s one creature in nature that’s a perfect example of this -it’s undoubtedly the bird, with all its patience and perseverance. Here’s what this beautiful animal can teach us about life…
We Can All Learn a Thing or Two from a Bird's Life...

 

We Can All Learn a Thing or Two from a Bird's Life...

 

We Can All Learn a Thing or Two from a Bird's Life...

 

We Can All Learn a Thing or Two from a Bird's Life...

 

We Can All Learn a Thing or Two from a Bird's Life...

 

We Can All Learn a Thing or Two from a Bird's Life...

 

We Can All Learn a Thing or Two from a Bird's Life...

 

We Can All Learn a Thing or Two from a Bird's Life...

 

We Can All Learn a Thing or Two from a Bird's Life...

 

We Can All Learn a Thing or Two from a Bird's Life...

 

We Can All Learn a Thing or Two from a Bird's Life...

 

We Can All Learn a Thing or Two from a Bird's Life...

 

We Can All Learn a Thing or Two from a Bird's Life...

 

We Can All Learn a Thing or Two from a Bird's Life...

 

We Can All Learn a Thing or Two from a Bird's Life...

 

We Can All Learn a Thing or Two from a Bird's Life...

 

Source……..www.ba-bamail.com

Natarajan

இந்த வாரக் கவிதை ….இலவசம் என்னும் வசியம் !!!

இலவசம் என்னும் வசியம்
…………………..
இது இலவசம் …அது இலவசம்  என கூவி உன்னை  அவர் அவர் தம்
வசம் இழுக்க காத்திருக்கு ஒரு பெரிய கூட்டம் ….எல்லாம் உன்
ஒரே  ஒரு ஓட்டுக்காக!!! ….சற்றே யோசி தம்பி …என்ன இல்லை
உன் வசம் ?
மசிய வேண்டுமா நீ  இலவச வசியம் காட்டி மயக்கும் கூட்டம் முன்னால்?
அவசியமா உனக்கு இன்னும்  உன் தன் மான இழப்பு ? நீ ஒருவன்
யோசிக்க ஆரம்பித்தால்  உன் பின்னல் திரளும் ஒரு பெரும் கூட்டம்
வசிய மருந்து நமக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்ல !
வசிய மருந்தும் வேண்டாம் …நீ  யார் வசமும் விழவும் வேண்டாம்
நீ இருக்க வேண்டும்  நீயாக …உன் முடிவு இருக்க வேண்டும்
தெளிவாக …உறுதியாக … உன் தேர்வு யார் என்று ..!!!
இன்று நீ எடுக்கும் முடிவு கட்டாயம் ஒரு நாள் யோசிக்க வைக்கும்
உன் வாக்கை  யாசிக்கும் கூட்டத்தையும் சேர்த்து !
உன்னால் முடியும் தம்பி…இந்த நாட்டின் எதிர் காலம் இருக்கு
உன் முடிவை நம்பி !!!
Natarajan

இந்த வாரக் கவிதை ….” பாதச் சுவடுகள் ” !!!

பாதச் சுவடுகள்
…………..
பல்லாயிரம் காலடி படும் பாதையில் …வடுவாய் பாதச்சுவடாய்
நல்லோர் சிலர் காலடி மட்டும் உருவாக்கும் ஒரு தனி வழிப்பாதையை !
காலத்தால் அழியாத  நல் வழி காட்டும் பாதை அது !
பாதச் சுவடு பதித்த நல்லோர் பலர்  வழி நடக்க விழையும் நாம்
பதிக்க வேண்டும் நம் காலடியையும்  ஒரு சுவடாக !
விதைக்க வேண்டும் நல் அறநெறி நம் பிள்ளைகள் மனதில் ..நம்
பாதச் சுவடு ஒன்றொன்றும்  சொல்ல வேண்டும் ஒரு நல் வழிப்பாடம் !
அது காட்ட வேண்டும் ஒரு தனி வழி ஒளிமிகு புதிய பாரதம் மலர !
மாறட்டும் நம் காலடி ஒன்றொன்றும் ஒரு பாதச் சுவடாக இன்றுமுதல்
அது தொடரட்டும் என்றென்றும் வழி வழியாக ! காலத்தால்
அழியாத நல்ல வழிகாட்டியாக !
Natarajan
14 March 2016

இந்த வாரக் கவிதை ….” துணையாய் தொடரும் நிழல்கள் “!!!

துணையாய் தொடரும் நிழல்கள் ….
………………………..
பிறந்த மண்ணை முத்தமிடும் குழந்தை தன்  அன்னையின் நிழலில்
மழலை அது நடை பயிலும்   தந்தையின் நிழலில் !
ஒரு நல்ல ஆசானின் நிழலில் கல்வி ….தக்க பருவத்தில்
இல்லறம் செழிக்க நல்லற நிழலாய் தொடரும்  ஒரு வாழ்க்கை துணை !
துணையாய் தொடரும் நிழல்கள்  இப்படி எத்தனை எத்தனை… ஒருவர்
வாழ்வில் !
காலம் மாறும் …காட்சியும் மாறும் !  தொடரும் நிழல் துணையும்
உருமாறும் !…
காலத்தின் கோலத்தில் மாற்றம் பல நிகழ்ந்தாலும் தொடர்ந்து
உறு துணையாகும் ஒரே ஒரு நிழல்…  நம் வாழ்வில் !
காட்சியும்  சாட்சியும் தேவை இல்லை இந்த நிழலுக்கு !
அதுதான் நம் மனசாட்சி !  வாழ்க்கையின்  நல்லாட்சிக்கு
என்றும் துணையாக தொடரும்  அதன் அரசாட்சி !
Natarajan