The Man Who Died Came Back to Life for Hitting Jackpots !!!

 

In 1999, 37 year old Bill Morgan was a truck driver living in a travel trailer in Australia. That’s when disaster struck- while working, he got in a pretty bad accident that he nonetheless survived. However, medication he was given during his recovery resulted in him having an extreme allergic reaction that ultimately caused his heart to stop.

After being clinically dead for fourteen minutes, they were able to get his heart going again.  Sometimes with that span, the person may have suffered brain damage and may even be essentially a vegetable, though there are many factors involved as to whether that will be the case (more on this very soon in an upcoming article from our resident writer who is also a paramedic).

In Morgan’s case, it at first looked like that might have happened.  After they got his heart going again, he was comatose and given how long he’d been clinically dead for, it was recommended twice that life support be removed and he be allowed to die.

Nonetheless, after 12 days, he miraculously came out of his coma and was, shockingly, completely fine, suffering no apparent brain damage or other long term problems from the event.

Not being interested in driving truck anymore, he then found a different job and- as near death experiences are wont to do, it made him reevaluate his life, including within a year making the decision to propose to Lisa Wells, his long-time girlfriend.

She accepted.

No doubt feeling pretty lucky not only to be alive, but to have his girlfriend agree to marry him, he bought a scratch lottery ticket. The result? He won a car worth about $17,000 Australian (today about $23,903 US and $25,099 Australian).

Normally winning a car isn’t a big enough story to get the media to pay attention to you, but given that Morgan had recently been clinically dead for 14 minutes, the local Melbourne news decided to do a feature on him.

In the process, they asked Morgan if he wouldn’t mind buying another lotto ticket and then scratching it off on camera for them, as a sort of re-enactment of his winning scratch.

He happily obliged. After scratching the ticket on camera, though, he stopped, looked at the camera, and rather than be excited and saying something like “I just won a car” as part of the reenactment, he instead said “I just won $250,000.  I’m not joking!” This was the jackpot for that particular scratch lotto he was playing (today about $369,102 Australian or $351,526 US ).

Needless to say, the reporters on scene got more than they bargained for during the reenactment, as did Morgan, who immediately called his fiancée to tell her the good news about his win and that they would now be able to get a house.

As for his fiancée, of the second win, she told the media, “I just hope he hasn’t used all his good luck up”.

 

source:::::today i foundout.com

natarajan

” ஒரு ரூபாய்க்கு சுடச்சுட ஒரு தோசை ” !!!

மொறுமொறுவென தயாராகிறது ஒரு ரூபாய் தோசை

மொறுமொறுவென தயாராகிறது ஒரு ரூபாய் தோசை

எங்காவது ஒரு ரூபாய்க்கு தோசை கிடைக்குமா? அதுவும் இந்தக் காலத்தில்… தமிழரசுவின் மினி ஓட்டலில் கடலைச் சட்னி, சாம்பார் சகிதம் சுடச்சுட ஒரு ரூபாய்க்கு தோசை தருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு பக்கத்தில் இருக்கிறது திருவம்பட்டு. பச்சைக் கம்பளத்தை விரித்துப் போட்டதுபோல் சுற்றிலும் வயல்கள்.. அதன் மத்தியில் அமைந்திருக்கும் எழிலான இந்த கிராமத்தில்தான் தமிழரசுவின் ஒரு ரூபாய் தோசைக்கடை உள்ளது. கிராமத்து மணம் கமழும் சிறிய கடை என்றாலும் காலையில் வியாபாரம் களைகட்டி விடுகிறது.

“அந்தக் காலத்துல எல்லாம் தீபாவளி, வருஷப் பொறப்புன்னாதான் எங்க வீடுகள்ல இட்லி, தோசையைப் பாக்க முடியும். மத்த நாள்ல பழைய கஞ்சியோ கூழோதான். நம்ம புள்ளைங்க தினமும் இட்லி, தோசை சாப்பிடணும்கிறதுக்காக இந்த கடையை ஆரம்பிச்சேன். ஆனா, இப்ப இந்த ஊரு சனமே வந்து சாப்பிட்டுப் போகுது’’ அகவை அறுபதைக் கடந்த தமிழரசு தனது மலிவு விலை தோசைக்கடைக்கு அறிமுகம் கொடுத்தார்.

கடையின் ஒரு பகுதியில் பெரிய தோசைக் கல்லில் ஒரே நேரத்தில் பத்துப் பதினைந்து தோசைகளை வரிசைகட்டி வார்த்துக் கொண்டிருந்தார் தமிழரசுவின் மருமகள் ஷீலா. இன்னொரு பக்கம் ஷீலாவின் கணவர் ஜீவா, மந்தார இலையில் பார்சல் கட்டிக் கொண்டிருந்தார்.

கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து தோசைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு தமிழரசுவிடம் பேச்சுக் கொடுத்தோம்…

நான் சின்னப் புள்ளையா இருந்தப்ப கருக்கல்லேயே கழனிக்கு போயிடுவேன். காலையில பத்து மணிக்கு அம்மா கூழ் கொண்டாருவாங்க. அதைக் குடிச்சிட்டு வேலை செய்வோம். மத்தியானத்துக்கு பழைய சோறும் வெங்காயமும். ராவிக்கு (இரவு)தான் சுடுசோறு. இட்லி, தோசை எல்லாம் தீபாவளிக்கு தீபாவளிதான்.

கல்யாணம் முடிஞ்சதும் ஓட்டல் கடை ஆரம்பிக்கலாம்னு முடிவு செஞ்சேன். வீட்டுக்காரியும் தலையாட்டினா. 1984ல ரோட்டோரமா குடிசை போட்டு கடை ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல 10 பைசாவுக்கு தோசை குடுத்தோம். அப்புறம் 25 பைசா, 50 பைசா, 75 பைசான்னு ஏத்திக்கிட்டே வந்து 2000ல ஒரு ரூபாயாக்குனோம். அதுக்குப் பின்னாடி 13 வருஷமா விலை ஏத்தல. ஊர்க்காரங்க சப்போர்ட் இருந்தா நீங்ககூட ஒரு ரூபாய்க்கு தோசை குடுக்கலாம். மொத்தத்துல, இது நமக்கு நாமே திட்டம் மாதிரித்தான்… பெருமிதமாய் சொன்னார் தமிழரசு.

“ஒரு ரூபாய்க்கு தோசை குடுத்தா கட்டுப்படி ஆகுமா?’’ என்ற கேள்விக்கு பதில் சொன்னார் ஷீலா. “கிராமத்துல வெளையுற உளுந்து, நெல்லு எல்லாமே கம்மியான ரேட்டுக்கு எங்களுக்கு குடுக்குறாங்க. அதனால எங்களுக்கு கையக் கடிக்காது. சனங்ககிட்டயிருந்து அரிசி, உளுந்து சல்லிசா வாங்கி, அவங்களுக்கே கம்மி விலைக்கு தோசை குடுக்குறோம். வீட்டாளுங்களும் சாப்பிட்டது போக தினத்துக்கு முந்நூறு, நானூறு ரூபாய் கையில நிக்கும். பணம், காசுக்கு அதிகமா ஆசைப்படாம, மக்கள் நினைச்சா எல்லா ஊர்லயும் இதுபோல தோசைக்கடை போடலாம்’’ என்றார் ஷீலா.

வெங்காய விலை எகிறிக் கிடப்பதால் காரச்சட்னியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தி ருக்கிறார்கள். கடலைச் சட்னியும், சாம்பாரும் ஏழெட்டு தோசைகளை உள்ளே தள்ள வைக்கிறது. டிப்ஸ் கொடுக்கும் காசில் காலை டிபனை முடித்துவிடலாம் திருப்தியுடன்.

Topics:

தமிழகம்|விழுப்புரம்| source::::The Hindu…Tamil

natarajan

The Best One liners From Warren Buffett…

Sure, the competition isn’t all that tough right now, but Warren Buffett this week looked like the most popular man in Washington.

The Oracle of Omaha was in DC speaking to the 400 attendees at Fortune’s Most Powerful Women Summit. He charmed the crowd by playing his ukulele Tuesday night, earning a standing ovation from the likes of Facebook’s Sheryl Sandberg and IBM’s Ginni Rometty.During his one-on-one interview Wednesday with Fortune’s Carol Loomis, he laid out a straightforward, optimistic look at the economy, his life and women in business.

Still, he wasn’t afraid to take on the dysfunction in Washington and said it was “so stupid” to even think that the U.S. could default on its debt. Highlights from Buffett’s time on stage:

On the fight over the debt limit:

  • “We have spent 237 years since 1776 building a reputation as the most wonderful country on earth, and one that’s entrusted with having the reserve currency of the world. … That is being put in jeopardy now and it could be destroyed in a little while. A great reputation is like virginity. It can preserved, but it can’t be restored.”
  • “The whole idea of a debt limit is a terrible, terrible mistake. If you’re going to spend more than you take in, what are you going to do except raise the debt limit? So it becomes this political weapon of mass destruction. It really is like a nuclear bomb. It’s something that maybe you talk about but never dream of using.”

On the economy:

  • “The country’s coming back. You can’t stop the United States. We get through everything.”
  • “I’ve filed a tax return every year since I was 13. The last decade has been about the lowest tax rate. It was tougher when I was selling shirts at Penney’s.”

On women:

  • “People in power don’t give it up easily. And to some extent, it just doesn’t surface much. Look at how far the country came using half of its talent. Think of what we can do using all of it.”
  • “I went to public school and I had nothing but women teachers and they were terrific. But the idea of setting limits as to what talented people can do is crazy.”

On Berkshire Hathaway:

  • “I started out feeling like I wanted to be private. I like looking in the mirror and making decisions and not getting any negative votes. Over time, I’ve found it more fun to run a public company. It’s a podium. I can play out ideas and explain why I do things. It’s a teaching mechanism, even.”
  • “I’m running Berkshire for the people who want to stay in and not the ones who want to get out. I don’t care what the company earns this quarter; I care about where we’ll be in five years.”

On his outlook on life:

  • “I’m 83 and I’m having more fun in my life than ever before. The main thing is to be involved in something you love.”
  • “The secret sauce in America is that you’re trying to make your lives better tomorrow.”

This piece is a part of LinkedIn’s live coverage around Fortune’s Most Powerful Women Summit. For more, go here.

Photo: Stuart Isett/Fortune Most Powerful Women/Flickr, used under a Creative Commons license.  

source::::Jacky Carter in Linked in  site

natarajan

“ஐம்பது ரூபாய் அம்பது கோடிக்கு நிகர் ” !!!

 

 

ஆந்திர அரசின் ஆலோசகராக இருந்த Dr S V நரஸிம்மன் பெரியவாளை தர்சிக்க வந்தார். 
“கல்கத்தால நல்ல சென்டரான எடத்ல, நல்ல விசாலமா ஒரு வீட்டை வாங்கு. மண்டபம் வெச்ச மாதிரி வீடு. அதுல வங்காள புள்ளை கொழந்தேளுக்குன்னு தனியா ஒரு ஸாமவேத பாடசாலை ஒண்ணை ஆரம்பி! ஏதாவது வீடு இருக்கா?”
“அங்க தென் இந்திய பஜனை ஸமாஜ் இப்போ ஒரு வாடகைக் கட்டடத்ல இருக்கு. அது நல்ல சென்டரான எடம்..”
“ரொம்ப நல்லதாப் போச்சு! அந்த கட்டடத்தை வாங்கிடு! பஜனை ஸமாஜ்காரா அவா பாட்டுக்கு அதுல இருக்கட்டும்.”
“அதை வாங்கணும்ன்னா நெறைய ஆகும் பெரியவா….எங்கிட்ட அவ்ளவ் பணம் இல்லியே! “
“எவ்ளோவ் ஆகும்?”
“கிட்டத்தட்ட அம்பது கோடி வேண்டியிருக்குமே!..” பெரியவா உத்தரவிட்டதை நிறைவேற்றவும் ஆசையாக இருந்தது. அதே சமயம் பணத்துக்கு என்ன செய்வது? என்ற கவலையும் சேர்ந்தது.
“நீ…இப்போ நேரா மெட்ராஸ் போ! அங்க அண்ணாத்துரை ஐயங்கார்கிட்டேர்ந்து அம்பது ரூவா வாங்கிக்கோ! அது அம்பது கோடி பெறும்!…” புன்னகைத்தார். 
ஐம்பது கோடிக்கு ஐம்பது ரூபாயா? பெரியவா சொல்லிவிட்டார் என்பதால் உடனே மெட்ராஸ் வந்தார். அண்ணாத்துரை ஐயங்காரிடம் விஷயத்தை சொல்லி அவரிடமிருந்து முதல் பணமாக ஐம்பது ரூபாயைப் பெற்றுக் கொண்டு, அன்றே கல்கத்தா போய்ச் சேர்ந்தார். பஜனை ஸமாஜ் இருந்த கட்டடத்தின் சொந்தக்காரர் ஆஸுடோஷ் முகர்ஜி, பெரிய்..ய கோடீஸ்வரர். அவரை நேரில் சந்தித்து இது பற்றிப் பேசுவதற்காக அவருடைய பங்களாவுக்குச் சென்றார் நரஸிம்மன்.
இவர் உள்ளே நுழைந்ததும் “வாருங்கள்! வாருங்கள்! உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்!…” என்றார் ஆஸுடோஷ் முகர்ஜி. இவருக்கோ ஒரே ஆச்சர்யம்!
“நேற்று இரவு என்னுடைய கனவில் அன்னை மஹா காளி வந்தாள்! நீங்கள் குடுக்கும் பணம் எதுவானாலும் வாங்கிக்கொண்டு, அந்தக் கட்டடத்தை குடுத்து விடும்படி எனக்கு உத்தரவிட்டாள். அன்னையோட உத்தரவை நிறைவேற்ற, உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று பெங்காலியில் மிகுந்த நெகிழ்வோடு கூறினார். திரு.நரஸிம்மன் மானசீகமாக பெரியவாளின் திருவடிகளை நமஸ்கரித்தார். என்ன லீலை இது? “நீ…இப்போ நேரா மெட்ராஸ் போ! அங்க அண்ணாத்துரை ஐயங்கார்கிட்டேர்ந்து அம்பது ரூவா வாங்கிக்கோ! அது அம்பது கோடி பெறும்!…” ….என்று கூறிவிட்டு, ஆஸுடோஷ் கனவில் மஹாகாளியாக வந்து உத்தரவையும் போட்டு, இதோ…..ஐம்பது ரூபாயில் ஐம்பது கோடி அந்தர்த்தானமானது! பகவான் அலகிலா விளையாட்டுடையான் என்று மஹான்கள் கொண்டாடுவார்கள். தனியாக “செஸ்” விளையாடுவது போல், பகவான் நம்மையெல்லாம் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான். கீதையில் “உனக்குண்டான கர்மத்தை செய். பலனை எங்கிட்ட விட்டுடு” என்று சொன்னதை பெரியவா ப்ரூவ் பண்ணிக் காட்டினார். 
உடனேயே மளமளவென்று காரியங்கள் நடந்தன. மூன்றே மாசத்தில் பஜனை சமாஜ் புதுப்பிக்கப்பட்டு, “வேத பவன்” என்ற பெயரில் பெரியவா சொன்னமாதிரி ஸாம வேத பாடசாலையும் தொடங்கப்பட்டு, இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.

 

source:::::input from a friend of mine…

natarajan

” கிடைக்குமா தங்கப் புதையல் “!!!…விடை கிடைக்கும் விரைவில் !!!

பொதுவாக சாதுக்களுக்கும் சாமியார்களுக்கும், கடவுள் தான் கனவில் தோன்றுவார். ஆனால் மத்தியபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் இருக்கும் சங்க்ராம்பூர் என்கிற ஊரில் உள்ள சாமியாரான ஷோபன் சர்க்காரின் கனவில் தங்கப்புதையல் வந்தது.

அதுவும் சாதாரண தங்கப்புதையல் அல்ல. பத்து லட்சம் கிலோ தங்கப்புதையல். இந்த தங்கப்புதையல் மட்டும் உண்மையானால் ஏறக்குறைய இந்தியா அடுத்த 12 ஆண்டுகளுக்கு தங்கமே இறக்குமதி செய்யவேண்டிய தேவையிருக்காது. அவ்வளவு தங்கம் அங்கே புதையுண்டு இருப்பதாக கூறுகிறார் ஷோபன் சர்க்கார்.

அந்த ஊரில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜா ராம்பக்ஷ் சிங் என்கிற மன்னரின் பாழடைந்த அரண்மனை இடிபாடுகள் இருக்கின்றன. அந்த இடிபாடுகளுக்கு அடியில் தான் இந்த தங்கம் புதையுண்டு இருப்பதாக கூறுகிறார் ஷோபன் சர்க்கார்.

வடநாட்டு வீரப்பாண்டிய கட்டபொம்மன்?

இந்த ராஜா ராம்பக்ஷ் சிங் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டின் வீரப்பாண்டிய கட்டபொம்மனின் கதையை ஒத்து இருக்கிறது. வீரப்பாண்டிய கட்டபொம்முவைப் போல ராஜாராம்பக்ஷ் சிங்கும் பிரிட்டிஷ் அரசை எதிர்த்திருக்கிறார். இவரது படைகளுக்கும் பிரிட்டிஷ் படைகளுக்கும் இடையிலான மோதலின் இறுதியில் ராஜாவின் படைகள் தோற்று, பிரிட்டிஷ் படைகள் வென்றதாகவும், சிறைபிடிக்கப்பட்ட ராஜா தூக்கிலிடப்பட்டதோடு, அவரது அரண்மனை பீரங்கியால் வெடிவைத்து தகர்க்கப்பட்டதாகவும், பதிவுகள் இருக்கின்றன. இது நடந்தது 1857 ஆம் ஆண்டு.

அப்படி பிரிட்டிஷாரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட ராஜா ராம்பக்ஷ் சிங்கின் பாழடைந்த அரண்மனையின் இடிபாடுகளுக்கு அடியில்தான் பத்துலட்சம் கிலோ தங்கம் புதையுண்டு இருப்பதாகக் கூறுகிறார் சாது ஷோபன் சர்க்கார். இந்த தங்கத்திற்கு காவலாக ராஜா ராம்பக்ஷ் சிங்கின் ஆவி அங்கே உலவுவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

இந்த தங்கத்தை உடனடியாக அரசாங்கம் தோண்டி எடுக்க வேண்டும் என்றும், அதன் மூலம் அங்கே அலையும் மன்னர் ராஜா ராம்பக்ஷ்சிங்கின் ஆவிக்கு விடுதலையளிக்கவேண்டும் என்றும் ஷோபன் சர்க்கார் மத்தியப் பிரதேச அரசுக்கும் இந்திய நடுவணரசுக்கும் கடிதம் மூலம் வேண்டுகோள் வைத்தார்.

மத்தியப்பிரதேச அரசின் மவுனமும் மத்திய அமைச்சரின் நடவடிக்கையும்

மத்தியப் பிரதேச அரசு இதை பெரிதுபடுத்தவில்லை என்றாலும், மத்திய அரசில் அமைச்சராக இருக்கும் சரண்தாஸ் மஹந்த், இந்த சாதுவின் கடிதத்தை மதித்து, மத்திய தொல்பொருள் துறைக்கும், இந்திய அரசின் நிலவியல் ஆய்வுக்கழகத்திற்கும் இந்த குறிப்பிட்ட இடத்தில் பரிசோதனைகள் செய்யும்படி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, இந்திய அரசின் நிலவியல் ஆய்வுக்கழக அதிகாரிகள் இந்த ஊருக்கு வந்து, பாழடைந்த அரண்மனை இடிபாடுகளை ஒட்டி நிலத்திற்கு அடியில் தங்கம், வெள்ளி போன்ற எளிதில் வெப்பத்தை கடத்தும் உலோகங்கள் இருக்கிறதா என்பதை கண்டறியும் நுண் உணர் கருவிகளைக் கொண்டு ஆரம்பகட்ட பரிசோதனைகளை நடத்தி, தமது கண்டுபிடிப்புக்களை மத்திய அரசிடம் கொடுத்திருக்கிறார்கள்.

பத்துலட்சம் கிலோ தங்கப்புதையல் இருப்பதாக கூறுகிறார் சாமியார்பத்துலட்சம் கிலோ தங்கப்புதையல் இருப்பதாக கூறுகிறார் சாமியார்

 

இந்த அறிக்கையில் என்ன தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து பிபிசியிடம் பேசிய தொல்லியல் துறையின் அகழ்வாய்வுகளுக்கான இயக்குநர் சையத் ஜமால், அங்கே நிலத்துக்கு அடியில் உலோகம் இருப்பதை நிலவியல் ஆய்வுகள் உறுதி செய்திருப்பதாக தெரிவித்தார்.

தங்கம் வெள்ளி போன்ற உலோகம் இருப்பது உறுதி

இந்திய நிலவியல் ஆய்வுத் துறையின் அறிக்கையை மூன்று நான்கு நாட்களுக்கு முன்னர் தான் பார்த்ததாக தெரிவித்த சையத் ஜமால், அந்த இடத்தில் அகழ்வு செய்தால் அங்கே தங்கம், வெள்ளி மற்றும் அதுபோன்ற எளிதில் வெப்பத்தை கடத்தும் உலோகங்கள் கிடைக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

“ஆனால் இந்த உலோகங்களின் அளவு எவ்வளவு என்பது குறித்து அவர்கள் ஒன்றும் கூறவில்லை. தொல்லியல் துறையைப் பொறுத்தவரை நாங்கள் அகழ்வில் கிடைக்கும் ஒரு பொருளின் கால அளவு என்ன என்பதை மட்டுமே அறுதியிட்டு கூற முடியும். மற்றவிவகாரங்கள் குறித்து எங்களால் ஒரு கருத்தும் தெரிவிக்க முடியாது”,என்றார் இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாய்வுகளுக்கான இயக்குநர் சையத் ஜமால்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாளை வெள்ளிக்கிழமை இந்த இடத்தில் தொல்லியல் துறை தனது அகழ்வுப்பணிகளை துவங்க இருக்கிறது. அதன் முடிவில் அரண்மனை இடிபாடுகளுக்கு அடியில் இருப்பது, தங்கமா, வெள்ளியா அல்லது வேறு உலோகமா என்பது தெரிந்துவிடும்.

அங்கே மட்டும் தங்கப்புதையல் கிடைத்தால், ஏற்கெனவே தனக்கு அமானுஷ்யமான சக்திகள் இருப்பதாக கூறிவரும் அந்த ஊர் சாமியார் ஷோபன் சர்க்கார், ஒரே நாளில் உலகப்புகழ் பெற்றுவிடுவார்.

மாறாக, அங்கே தங்கம் கிடைக்காவிட்டால், சாமியார் ஷோபன் சர்க்கார் தனது ஆசிரமத்தை வேறு ஊருக்கு மாற்றவேண்டிய சூழல் எழலாம். அவரோடுகூட அரண்மனை இடிபாடுகளில் உலவுவதாக அவர் கூறும் மன்னரின் ஆவியும் அவருடன் சேர்ந்து செல்ல நேரலாம்.

source::::bbc.com Tamil

natarajan

Malala at Oval Office With President Obama & First Lady …

President Obama, First Lady Michelle Obama and their daughter Malia meet Malala Yousafzai in the Oval Office. PHOTO: AFP

 

Pakistani global icon Malala Yousafzai told US President Barack Obama to call off the highly controversial drone campaign in the tribal regions as these are fuelling resentment among the people.

The teenage activist met with President Obama and First Lady Michelle Obama in the Oval Office on the same day the Nobel Peace Prize was awarded to the Organisation for the Prohibition of Chemical Weapons (OPCW).

“I thanked President Obama for the US work in supporting education in Pakistan and Afghanistan and for Syrian refugees. I also expressed my concerns that drone attacks are fuelling terrorism. Innocent victims are killed in these acts, and they lead to resentment among the Pakistani people. If we refocus efforts on education, it will make a big impact,” Malala, an advocate for girls’ education and the target of a Taliban assassination attempt, said in a statement after the meeting.

Malala’s statement came two days after Tehreek-e-Taliban Pakistan’s chief Hakimullah Mehsud came out of hiding to offer a quid pro quo in a BBC interview: Stop US drone strikes and Taliban would cease fire.

Interestingly, a gunman from the same infamous group had shot and critically injured Malala in October 2012 while she was returning home from school in Swat. She was flown to a hospital in Britain, where she now lives.

Malala said she was honoured to meet with the president, who is a Nobel Peace Prize recipient. She called for greater cooperation between the governments of the United States and Pakistan.

The White House said in a statement that in the meeting President Obama signed a proclamation to mark Friday as the International Day of the Girl.

“Across the globe there are girls who will one day lead nations, if only we afford them the chance to choose their own destinies.  And on every continent, there are girls who will go on to change the world in ways we can only imagine, if only we allow them the freedom to dream,” says the proclamation.

The White House said that the president and the first lady ‘welcomed’ Malala and thanked her for her “inspiring and passionate work on behalf of girls education in Pakistan”.

“The United States joins with the Pakistani people and so many around the world to celebrate Malala’s courage and her determination to promote the right of all girls to attend school and realize their dreams,” it said. “We salute Malala’s efforts to help make these dreams come true,” it added.

As the first lady has said, “Investing in girls’ education is the very best thing we can do, not just for our daughters and granddaughters, but for their families, their communities, and their countries”.

She has won a raft of international honours. She thrilled participants at a World Bank function on Friday and she was scheduled to speak at a book event at the Sidwell Friends School, which Obama’s daughters attend.

Published in The Express Tribune, October 13th, 2013. 

natarajan

சென்னையில் உணவுக்கு ஒரு ஆலயம் !!!

எத்தனையோ தெய்வங்களுக்கு ஆலயங்கள், இந்த நாட்டில் உள்ளன. ஆனால், சென்னையில், உணவுக்கு ஒரு ஆலயம் உள்ளது.சென்னை, பெரம்பூரில், அருள்ஜோதி அன்ன ஆலயம், கடந்த 18 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு, காலை, மதியம், இரவு என, மூன்று வேளையும், பசி என்று வருவோருக்கு, இல்லை என்று சொல்லாமல், உணவளித்து வருகிறார் சதீஷ்ராஜ் ‘அடிகளார்’,

 

1995ல் இருந்து…:

கடந்த 1995ல், வீட்டிலேயே, சொந்த செலவில், அன்னதான பணியை சதீஷ்ராஜ் துவங்கினார். பின், நன்கொடையாளர்கள் வழங்கிய அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் அளவு அதிகரிக்க, 1999ல், கென்னடி சதுக்க பிரதான சாலையில் தனியே அன்னதானக் கூடம் அமைத்தார்.இங்கு, தற்போது, மூன்று வேளையும் அன்னதானம் நடந்து வருகிறது. இதுதவிர, தினமும், 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகளில், உரிய அனுமதி மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் மாணவ, மாணவியருக்கு, காலை உணவாக, அரிசி கஞ்சி வழங்கி வருகிறார்.ஆலய அன்னதானத்திலும், இந்த உணவு ஆலயம் பங்கேற்கிறது. சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கோவில்களில், சுழற்சி முறையில், மதிய சாப்பாடு, அன்ன ஆலயத்தில் இருந்து அனுப்பப்படுகிறது.இந்த வகையில், தினமும், ஏறத்தாழ 5,000 பேர், அருள்ஜோதி அன்ன ஆலயம் மூலம் பசியாறி வருகின்றனர்.

வேதாத்திரி மகரிஷி:

அன்ன ஆலயம் அமைத்தது குறித்து சதீஷ்ராஜிடம் கேட்ட போது, ”என்னை விளம்பரப்படுத்தும் வகையில் நான் எதுவும் கூறமாட்டேன். இருந்தாலும், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கிறேன்,” என்றபடி, பதிலளிக்க துவங்கினார்.”ஆரம்பத்தில் நானும் சாதாரணமாக வேலை, வீடு என்று சென்று கொண்டுஇருந்தேன். ஒருநாள் மனிதனாய் பிறந்த நாம், ஏதாவது சேவை செய்ய வேண்டும் என எண்ணி, அன்னதானம் செய்ய துவங்கினேன். வேதாத்திரி மகரிஷி மீதிருந்த பற்றால், பின்னாளில் சேவையே வாழ்க்கையாகி விட்டது. ஆரம்பத்தில் சொந்த செலவில் நடந்த அன்ன ஆலயப் பணிகள், இப்போது பொதுமக்களின் நன்கொடை மூலம் குறைவில்லாமல் நடைபெறுகின்றன,” என்றார் அவர்.அன்னதானம் தான், அறங்களில் தலை யானது என்ற அவர், ”முன்பின் அறியாத, தொடர்பே இல்லாத ஒருவர் தரும் அன்னதானம், எங்கோ ஒருவரின் வயிற்றுப் பசியை போக்குகிறது. அவரது வாய் வாழ்த்தா விட்டாலும், அவரது பசியாறிய உணர்வு, தானமளித்தவர்களை மனதார வாழ்த்தும்,” என்றார்.

‘மக்களால் நடக்கிறது’:

”பொதுமக்கள் தரும் நன்கொடையை நாங்கள் பணியாட்களை அனுப்பி வாங்கு வோம். தற்போது, பலரது நன்கொடையை நேரில் சென்று பெற முடியாத அளவுக்கு, நன்கொடைகள் குவிகின்றன. இந்த அன்னதானப் பணியில் நான் வெறும் கருவி மட்டுமே. மக்கள் தான் இதை நடத்துகின்றனர்,” என, நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.அருள்ஜோதி அன்ன ஆலயத்தில் தொடர்ந்து ஆறு மாதத்திற்கு மேல் ஒருவரை காண முடியாது. அதன் பின், அவர் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டிருப்பார் என, உறுதியுடன் தெரிவிக்கிறார் சதீஷ்ராஜ்.

இப்படியுமா?

உரையாடல் முடிந்ததும் தம்பதியராய் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றபோது, சதீஷ்ராஜும், அவரது மனைவியும் மறுத்து விட்டனர்.இன்று 100 பேருக்கு சாப்பாடு போட்டு விட்டு, ‘போஸ்’ தரும் சிலருக்கு மத்தியில், தினமும் 5,000 பேருக்கு உணவளிக்கும் தம்பதியர், செய்தியாக கூட தங்களுக்கு விளம்பரம் வேண்டாம் என, மறுத்தது, உண்மையிலேயே அதிசயமாகத் தான் இருந்தது.

 

source:::::Dinamalar …Tamil Daily

natarajan

“ஊசி வாங்க சென்று ஊரையே வாங்கி வரலாமா ” !!!…சிந்திக்க வேண்டும் நாம் !!!

காற்று வாங்கப்போய் காதல் வாங்கி வருவதில் தவறில்லை. ஆனால் ஊசி வாங்கப் போய் ஊரையே வாங்கி வருவது அவசியமா? இன்று இதுதான் நடக்கிறது. வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் வீட்டைப் பூட்டிக்கொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக ஷாப்பிங் கிளம்பி விடுகிறார்கள். கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கிக் குவிக்கிறார்கள். காதில் கேட்டதையெல்லாம் அள்ளிக்கொண்டு வருகிறார்கள். அதுவும் தீராமல் அடுத்த வாரத்துக்கும் சிலவற்றைத் திட்டமிட்டே திரும்புகிறார்கள். மக்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் இந்த நுகர்வு கலாச்சாரம் எப்படி வந்தது?

அடுத்தவருக்காக வாழ்வதும் அடுத்தவரைப் பார்த்து வாழ்வதும்தான் முதலிரண்டு காரணங்களாக நிற்கின்றன. இது இல்லை என்றால் அவர்கள் என்ன சொல்வார்கள்? அதை வாங்கவில்லை என்றால் இவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற நினைப்புக்குத் தீனிபோடவே பலர் பல பொருட்களை வாங்குகிறார்கள். கொட்டாவி போலத்தான் ஷாப்பிங் செய்வதும். ஒருவர் நகவெட்டி வாங்கினாலும், அந்தத் தெருவில் இருக்கிற அனைவரும் அதையே வெவ்வேறு வடிவங்களிலும் தரங்களிலும் வாங்கிவிடுவார்கள்.

அடுத்ததாக மக்களிடம் பொங்கிப் பிரவாகிக்கும் அழகுணர்ச்சி. இதை இந்தக் கோணத்தில் பார்த்தால் எவ்வளவு அழகு என்று சிலாகித்தே பல பொருள்களை வீட்டில் சேர்த்திருப்பார்கள். சுவரில் மாட்டுகிற ரோஜாக்கள் சிரிக்கிற அட்டையில் துவங்கி, தரையில் ஒட்டுகிற ஸ்டிக்கர் கோலம் வரை இவர்களின் அழகுத் தேடல் நீண்டுகொண்டே செல்லும். சில மாதங்கள் கழித்து இவற்றில் பல குப்பைத் தொட்டிகளில் பரிதாபமாய் முழிக்கும். குப்பையும் செல்வமாகும் என்பதை மாற்றிச் செல்வமும் குப்பையாகும் என்பதை நிரூபிக்கும் வித்தகர்கள் இவர்கள்.

மக்களை மாபெரும் நுகர்வோர்களாக மாற்றியதில் ஊடகங்களின் பங்கு இல்லாமலா? அவை காட்சிப்படுத்துகிற கவர்ச்சி விளம்பரங்களை நம்பித்தான் இன்று பல முதலாளிகள் பெரும் முதலாளிகளாகிக்கொண்டிருக்கிறார்கள்.

பிரபல நடிகர் பரிந்துரைக்கிற காபியைக் குடித்தால்தான் நம் தந்தையின் மனதையோ, மனைவியின் அன்பையோ புரிந்துகொள்ள முடிகிறது. காலை வேளையில் போருக்குத் தன் சேனைகளைத் தாயார்படுத்தும் தாய்மார்கள் பெயரே வாயில் நுழையாத ஏதேனும் வஸ்துவைச் சாப்பிடச் சொல்லிக் கொடுப்பார்கள். கௌரவமான அந்தக் காலை உணவை முடிக்காவிட்டால் இந்தச் சமூகத்தில் நம் அந்தஸ்து என்னாவது? அதை அப்படியே படம் பிடித்து ஃபேஸ்புக்கிலும் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யலாம் என்பது கூடுதல் வசதி!

கால் செருப்பு பிய்ந்து போனதெற்கெல்லாம் வகை தொகை இல்லாமல் ட்ரீட் கேட்கும் நண்பர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே கையைக் கடிக்காத விலைகளில் (அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள்) புதுப்புது பானங்களையும் நொறுக்குத் தீனிகளையும் உற்பத்தி செய்து குவிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். வாழ்க்கையைக் கொண்டாட இது போதாதா நமக்கு? அவற்றின் எடையோ, தரமோ நாம் கொடுக்கிற பணத்துக்கு ஈடாகுமா என்ற கவலை நமக்கெதற்கு? உறைகளைப் பாருங்கள். அவைதான் எவ்வளவு பளபளப்பாக, அழகாக இருக்கின்றன! அது போதாதா?

இவை போதாதென்று நம் மனநிலை புரிந்தே புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்துவார்கள் சில வணிகப் புலிகள். கையில் பணம் இல்லையென்றால் என்ன? சுலபத் தவணைத் திட்டத்தில் சேர்ந்து மாபெரும் லாபம் அடைய வலைவிரிக்கின்றன அங்காடித் தெருக்கள். புடவையோடு பிரஷர் குக்கரையும் சேர்த்தே வாங்கச் சொல்லி வற்புறுத்துகின்றன தள்ளுபடிச் சலுகைகள்.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியம் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிற நம் மக்களின் மனநிலைதான். அவசியத்துக்கும் அநாவசியத்துக்கும் இடையே இருந்த தாம்புக் கயிறு இடைவெளியை நூலிழையாக்கிவிட்டு அதையும் சில நொடி தயக்கத்துக்குப் பிறகு அறுத்தெறிந்துவிடுகிறோம். எதைப் பார்த்தாலும் வாங்கத் துணிகிறபோது, எச்சரிக்கும் மனசாட்சியைத் துச்சமாக நினைத்துத் தவிர்த்துவிடுகிறோம். உலகமயமாக்கலின் விளைவாகப் பல்கிப் பெருகியிருக்கும் வியாபாரச் சுழலில் விரும்பியே சிக்குகிறோம். நாம் அனைவரும் நல்ல வாடிக்கையாளர்கள்தான். ஆனால் இதுவே வாடிக்கையாகிவிடக் கூடாது.

வாங்கப்போகும் பொருட்களின் பட்டியலோடு ஷாப்பிங் செல்வது நல்லது. எதை வாங்குவதாக இருந்தாலும் அந்தப் பொருள் இல்லாமல் எந்தெந்த வேலைகள் தடைபடும், அதனால் நிகழப்போகும் ஆக்கப்பூர்வமான மாற்றம் என்ன என்பதை மனதில் வைத்து அந்தப் பொருளை உங்கள் பட்டியலில் சேருங்கள். அழகுணர்ச்சி தேவைதான். அதுவே நம் மன அழுத்தத்தை அதிகரித்துவிடக்கூடாது. தேவையில்லை என்றால் அது சும்மா கிடைத்தாலும் வேண்டாம் என்ற மனநிலைக்கு மாற வேண்டும். எல்லாவற்றையும் விட மிக முக்கியம், எது தேவையோ அந்தப் பொருள் மீது மட்டும் கண்கள் இருக்க வேண்டும். தவறியும் பக்கத்துப் பொருட்களின் மீது பார்வை திரும்பினால், பணம் திரும்பாது.

விஷயம் இதோடு முடிந்துவிடவில்லை. வீட்டுக்குத் திரும்பியதும் நீங்கள் வாங்கிய தேவையில்லாத பொருட்களின் பட்டியலைத் தயார் செய்யுங்கள். என்னதான் திட்டமிட்டுக் கிளம்பினாலும் யானைக்கும் அடி சறுக்குவது சகஜம்தானே. இரண்டு பட்டியல்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அதற்கு மேலும் நீங்கள் வாங்கிய பொருட்கள் தேவையானவைதான் என நினைத்தால், நீங்கள் மிகச் சிறந்த வாடிக்கையாளருக்கான விருதைப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.

source:::::The Hindu ….Tamil
natarajan

A Thought Provoking Painting ” Beijing 2008″…!!!

 

Amazing thought-provoking painting “Beijing 2008” by Chinese-Canadian artist Liu Yi.

The woman with the tattoos on her back is China. On the left, focused intensely on the game, is Japan. The one with the shirt and head cocked to the side is America. Lying provocatively on the floor is Russia. And the little girl standing to the side is Taiwan.

This painting, named “Beijing 2008”, has been the subject of much discussion in the west as well as on the internet. What’s interesting is that this painting is called “Beijing 2008”, yet it depicts four women playing mahjong, and conceals a wealth of meaning within…

China’s visible set of tiles “East Wind” has a dual meaning. First, it signifies China’s revival as a world power. Second, it signifies the military might and weaponry that China possesses has already been placed on the table. On one hand, China appears to be in a good position, but we cannot see the rest of her hand. Additionally, she is also handling some hidden tiles below the table.

America looks confident, but is glancing at Taiwan, trying to read something off of Taiwan’s expression, and at the same time seems to be hinting something at Taiwan.

Russia appears to be disinterested in the game, but this is far from the truth. One foot hooks coyly at America, while her hand passes a hidden tile to China, both countries can be said to be exchanging benefits in secret. Japan is all seriousness while staring at her own set of tiles, and is oblivious to the actions of the others in her self-focused state.

Taiwan wears a traditional red slip, symbolizing that she is the true heir of Chinese culture and civilization. In one hand she has a bowl of fruit, and in the other, a paring knife. Her expression as she stares at China is full of anger, sadness, and hatred, but to no avail; unless she enters the game, no matter who ends up as the victor, she is doomed to a fate of serving fruit.

Outside the riverbank is darkened by storm clouds, suggesting the high tension between the two nations is dangerously explosive. The painting hanging on the wall is also very meaningful; Mao’s face, but with Chiang Kai Shek’s bald head, and Sun Yat-Sen’s mustache.

The four women’s state of UnCloth represent the situation in each country. China is Unclad on top, clothed with a skirt and underwear on the bottom. America wears a bra and a light jacket, but is Unclad on the bottom. Russia has only her underwear left. Japan has nothing left.

At first glance, America appears to be most composed and seems to be the best position, as all the others are in various states of unclothedness. However, while America may look radiant, her vulnerability has already been exposed. China and Russia may look Unclad, yet their key private parts remain hidden.

If the stakes of this game is that the loser strips off a piece of clothing, then if China loses, she will be in the same state as Russia (similar to when the USSR dissolved). If America loses, she also ends up in the same state as Russia. If Russia loses, she loses all. Japan has already lost everything.

Russia seems to be a mere “filler” player, but in fact is exchanging tiles with China. The real “filler” player is Japan, for Japan has nothing more to lose, and if she loses just once more she is immediately out of the game.

America may look like she is in the best position, but in fact is in a lot of danger, if she loses this round, she will give up her position as a world power. Russia is the most sinister, playing along with both sides, much like when China was de-occupied, she leaned towards the USSR and then towards America; as she did not have the ability to survive on her own, she had to weave between both sides in order to survive and develop.

There are too many of China’s tiles that we cannot see. Perhaps suggesting that China has several hidden aces? Additionally China is also exchanging tiles with Russia, while America can only guess from Taiwan’s expression of what actions have transpired between Russia and China. Japan on the other hand is completely oblivious, still focused solely on her own set of tiles.

Taiwan stares coldly at the game from aside. She sees everything that the players at the table are doing, she understands everything that is going on. But she doesn’t have the means or permission to join the game, she isn’t even given the right to speak. Even if she has a dearth of complaints, she cannot voice it to anyone, all she can do is to be a good page girl, and bring fresh fruit to the victor.

The final victor lies between China and America, this much is apparent. But look closely; while America is capable, they are playing Chinese Mahjong, not Western Poker. Playing by the rules of China, how much chance at victory does America really have?

 

source::::nairaland forum site

natarajan

படிக்க ….சிந்திக்க ……”நான் விற்பனைக்கு இல்லை ” !!!

 

தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை

டிராக்டரின் இரும்புக் கலப்பைகள் என் நிலத்தாயை ஆழ உழுதபோது எனக்கு ஏற்பட்ட வலி, இதுவரை நான் உணராத வலி.  அப்படி வலித்தது.  இரும்புக் கலப்பைகளுக்குள் தக்காளிப் பழங்களோடு தக்காளிச் செடிகளும் குற்றுயிரும் குலை உயிருமாக மண்ணுக்குள் புதைகின்றபோதே மனசும் புதைந்து கொண்டிருந்தது.

மண்டையைப் பிளக்கும் வெயில் உடம்பைப் பிழிந்து வியர்வையை அருவியாக்கிக் கொட்டிக் கொண்டிருந்தது.  அந்தப் புழுக்கம் என் உடம்புக்கு பழகிப் போன ஒன்றாக இருந்தது.  ஆனால் திரண்டு நிற்கும் கண்ணீருக்குள் கண்கள் மூழ்கி அந்தக் காட்சியை என்னைக் காணவிடாமல் கலங்கடித்துக் கொண்டிருந்தன.

என்ன செய்ய…. உழுதவன் பார்த்த கணக்கு உருப்படியாகவில்லை.  மூன்று மாதங்கள் உழைப்பு கருகி விட்டது. ஆயிரம் அடிக்கு கீழே உள்ள நிலத்தடி நீரை இரண்டு நீர் மூழ்கி மோட்டார் வைத்து நிலத்திற்கு மேலே ஒரு மோட்டார் வைத்து எடுத்து செய்கிற விவசாயம் என்னுடையது.  கடவுள் புண்ணியத்தில் கரண்ட் மட்டும் அரசின் தயவால் இலவசம்.  அதற்கும் பணம் கொடுக்க வேணடிய நிலை இருந்தால், அய்யோ… என்று தலையில் கையை வைத்துக் கொண்டு போய் விடலாம்.

இரண்டு ஏக்கர் நிலம். இரண்டு தடவை உழவேண்டும்.  அதற்கு டிராக்டர் கூலி நான்கு மணி நேரத்திற்கு மூவாயிரம்… தொழு உரம் எட்டு டன்.  அதற்கு பத்தாயிரம்… அப்புறம் பாத்தி பிடிக்க இரண்டாயிரம்…. விதை இருநூறு கிராம்.  வீரிய ஒட்டு ரகம் ஐயாயிரம்… அந்த விதையை பாவி நாற்றங்காலாக உருவெடுக்க இருபத்தைந்து நாள்… அப்புறம், அதை நடவு செய்ய கூலி இரண்டாயிரம்… களை எடுக்க, மருந்தடிக்க, இப்படி தொட்டதுக்கெல்லாம் செலவு செஞ்சாத்தான் இரண்டு மாதம் கழித்து தக்காளி விளைச்சல் பார்க்க முடியும்… விதை பாவியதிலிருந்து விளைச்சல் பார்க்கிற வரைக்கும் ஒவ்வொன்றும் விவசாயிக்கு, பிரசவம் தான்.

இரண்டு மாதங்கள் பதினைந்து நாளைக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் தக்காளி பறிக்கலாம்.  அதற்கும் கூலி ஆள் விட வேண்டும்.  ஏக்கருக்கு மூன்று பேர் வேண்டும்.  எல்லாம் முடிஞ்சு இரண்டாயிரம் கிலோ முதல் விளைச்சலாக வந்து காரைக்குடி சந்தைக்குக் கொண்டு போனேன். கிலோ அஞ்சு ரூபாய்க்கு மேலே போகலை…. முதல் வருமானம் பத்தாயிரம் ரூபாயோடு வந்தேன்.  அப்புறம் நூறு கிலோ, இருநூறு கிலோன்னு பறிக்க முடிஞ்சது…. நேற்று வரைக்கும் அஞ்சு ரூபாய்க்கு போன தக்காளி இன்று கிலோ இரண்டு ரூபாய்க்கு எடுக்கிறேன்னு சொன்னான்.  பறிக்கிற ஆள் கூலிக்குக் கூட தக்காளி விலை போகலை… அதனால் தான் அப்படியே டிராக்டரை விட்டு உழுது போடுவோம்… கோடை மழை பெய்தால் அடுத்த உழவுக்கு சரியாக இருக்குமேன்னு நினைத்து உழச் சொன்னேன்.

நூறுநாள் வேலைத் திட்டம் வந்தாலும் வந்துச்சு…. ஆரம்பத்தில் இருநூறு ரூபாய் வாங்கினவங்க இப்போது இருநூற்று ஐம்பது ரூபாய் கொடுத்தாத்தான் தக்காளி பறிக்க வர்றேன்னு சொல்றாங்க… இருநூறு கிலோ தக்காளி பறிக்க கூலி எழுநூற்று ஐம்பது ரூபாய்….  அந்த தக்காளிக்கு மார்க்கெட்டுல விலை நானூறு ரூபாய்தான். கமிஷன் ஏஜெண்ட் கிட்டக் கேட்டால்….. “”தக்காளி விளைச்சல் அதிகம்…. மார்க்கெட்டுக்கு அதிகமாக வர்றதாலே விலை போகலை”ன்னு சொல்றான்….

எப்படியிருக்கு… நினைச்சுப் பாருங்க… இப்படி விவசாயம் பண்ற நான் கேனப்பயலாத் தானே உங்க பார்வைக்குத் தெரிவேன்… உங்களுக்கு மட்டுமா… என் மகனுக்கும்தான்….

“”நிலப் பத்திரத்தையும், வீட்டுப் பத்திரத்தையும் எடுத்து வையுங்க… சனி, ஞாயிறு நான் மட்டும் ஊருக்கு வர்றேன்… நான் திரும்பும் போது என்னோடு நீங்களும், அம்மாவும் வீட்டைப் பூட்டிட்டு சென்னைக்கு வர்றீங்க… அவ்வளவுதான்…” போனை பேசிவிட்டு வைத்து விட்டான்..  “நான் என்ன நினைக்கிறேன்… என்ன விரும்புறேன்…’ என்று பதில் தெரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை.

விவசாயத்திற்கு இயந்திரங்கள் வந்தவுடன் மனிதர்கள் இயந்திரங்களாக மாறிப் போனார்கள்.  அறுபது வருடங்களுக்கு முன்னால் திரும்பிப் பார்க்கிறேன்.  அப்போது எனக்கு பத்து, பன்னிரெண்டு வயது இருக்கும்.  அப்பவே காலை ஆறு மணிக்கே தோட்ட வேலைக்கு அப்பா என்னைக் கூட்டிக் கொண்டு போய் விடுவார்.  இரண்டு ஏக்கர் நிலத்தை உழவு செய்ய மூணு ஏர்கள் விடுவார்கள்.  எப்போதும் அப்பாதான் முதல் ஏராக உழுவார்.  அதற்குப் பின்னால்தான் கூலிக்காக வெளியிலிருந்து வந்த இரண்டு ஏர்களும் செல்வார்கள்.  நான் போகும் அன்று அப்பா கடைசி ஏராகவும், கூலி ஆட்கள் அடுத்து நானும், எனக்குப் பின்னால் அப்பாவுமாக நான்கு ஏர்கள் உழுவோம். எனக்கு கற்றுக் கொடுக்கத்தான் இந்த ஏற்பாடு.

விதை பாவுவது, பாத்தி கட்டுவது, நாற்று நடுவது, களை எடுப்பது எல்லா வேலையும் எனக்குத் தெரியும்.  இருபத்தைந்து வயதில் நான் முழு விவசாயி ஆகிப் போனேனே தவிர, நான் படித்தது அந்தக் காலத்து பத்தாம் கிளாஸ் அவ்வளவுதான்.  அதனால் தான் என் மகனை விவசாயத்தின் பக்கமே தலைவைத்துப் படுக்க விடாமல் பட்டணத்திலேயே பணம் கட்டி படிக்க வைத்து முன்னேற்றி விட்டேன்.  நான் எந்தப் பட்டணத்தைப் பார்த்திருக்கிறேன்?  எல்லாமே அவனுடைய தன் முயற்சி.  செலவுக்குப் பணம் கேட்டு வருவான்.  கொடுப்பதோடு சரி.  புத்தியுள்ள பிள்ளை.  நல்லா வந்துட்டான்.  இப்போது அவன் கம்ப்யூட்டர் இன்ஜினியராக இருக்கிறான்.  அவன் மனைவியும் அதே வேலைதான்.

அவனாக லீவு நேரத்தில் குடும்பத்தோடு வந்து நான்கைந்து நாட்கள் இந்த கிராமத்தில் தங்கி விட்டுப் போவான்.  அதற்கே என்னுடைய பேரப் பிள்ளைகள் இரண்டும் வசதியில்லாத கிராமத்தைக் கண்டு நெளிவாங்க…

“”அப்பா… எப்பப்பா ஊருக்கு…?” என்று நச்சரித்து விடுவார்கள்.  ஆனால் அந்தப் பிள்ளைகளுக்கு ஒரே மகிழ்ச்சி…. தக்காளி எப்படி செடியில் விளையுது… கரும்புத் தோட்டம்…. புடலை பந்தல்… இப்படி பார்க்கும் போது, “”ஐ…” என்ற சத்தத்தோடு தொட்டு மகிழ்வார்கள்.  எனக்கு அது மகிழ்ச்சியாகத் தெரியும்.  பேரப் பிள்ளைகள் வந்தால் வீட்டில் தங்க மாட்டார்கள்… தோட்டத்தில்தான் பொழுதைக் கழிக்க நினைப்பார்கள்.

வயலில் நடுகிற நாற்றுக்கு காட்டுகிற அக்கறையை எந்த விவசாயியும் தான் பெற்ற பிள்ளைகளுக்கு காட்டமாட்டான்.  ஆனால் நான் அக்கறை காட்டினேன்.  அதுதான் இந்த வயசான காலத்திலே விழுதுகள் வேரைத் தாங்க நினைக்குது…

சரி… இந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை பட்டணம்… அதுவும் எப்படி இருக்குதுன்னுதான் பார்ப்போமோ….

கோடை காலமாக வேற இருக்கு…. இந்த வருஷம் மழை வேற பெய்யலை… நிலத்தடி நீர் மட்டம் குறைஞ்சு மோட்டார் இழுவை பத்தலை… ஒரு மாதம் கழிச்சு விவசாயத்தை ஆரம்பிக்கலாம்னு அதுவரை போறேன்…

“நிலமழகிய மங்கலம்’ – பெயருக்கு ஏற்றாற்போல் அழகான சோலையுள்ள இந்தக் கிராமத்தை விட்டு முதன் முறையாக வெளியேறப் போகிறேன்.  இன்று வெள்ளிக் கிழமை.  நாளை காலை வெங்கடேசன்  வந்து விடுவான்.  சென்னை சென்று விட்டு வரும் போது இந்த நிலம், இந்த வீடு எனக்குச் சொந்தமாக இருக்குமா? என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.  அழுகை எனக்கு முட்டிக் கொண்டு நின்றது.

பச்சை பசேலென இருந்த தோட்டத்தை சமப்படுத்தி கட்டாந்தரையாக்கி விட்டு பணம் கேட்டு என் எதிரே வந்து நின்றான் டிராக்டர் டிரைவர்.  பதினைந்து நூறு ரூபாய் தாள்களை எண்ணிக் கொடுத்தேன்.  தோளில் கிடந்த துண்டை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு அப்படியே நிலத்தில் குத்துக் காலிட்டு உட்கார்ந்தேன்.  உலர்ந்து கிடந்த செம்மண்ணை இரண்டு கைகளாலும் அள்ளினேன்.  கைவிரல்களின் இடுக்குகள் வழியே மெதுவாகச் சிதற விட்டேன்.

“உனக்கும் எனக்குமான சொந்தம் இன்னும் எத்தனை நாளைக்கு… ஒரு மாசமோ… இரண்டு மாதமோ தான்… உன்னை இழந்து விலகப் போகிறேன்… எனக்குப் பின்னால் நீ நித்தம் நித்தம் செத்து பிழைக்கும் விவசாயமா… இல்லை நிரந்தரமாக செத்துப் போகும் பிளாட்டாகவா…  கட்டிடமாகவா.. எனக்குத் தெரியாது… உனக்குச் சொந்தமில்லாத வியர்வையை உன்மீது தெளித்து வாழ்ந்திருக்கிறேன்… இப்போதும் உனக்குச் சொந்தமில்லாத உன்மீது ஒருமுறை கூட தெரித்து விழாத என் கண்ணீரை தெளித்து விடை பெறப் போகிறேன்… மன்னித்து விடு…’ விம்மிக் கொண்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்ட போது வாய் மட்டும் விரிந்து எச்சிலை வெளிக்காட்டியது…  கண்ணீர் நிலத்தில் விழுந்து காய்ந்தது.

மடியிலிருந்த துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தேன்..  மதியம் சாப்பிட முடியவில்லை… வீட்டுத் திண்ணையில் படுத்த போது உறக்கம் வராத தவிப்பு..  பீரோவில் எப்போதோ வைத்த பத்திரங்களை சாயங்காலம் தேடி எடுத்து அரை மனதோடு பத்திரப்படுத்தி வைத்தேன்.  விடியும் பொழுது நல்ல பொழுதாக வெங்கடேசனின் மனமாற்றச் செய்தியோடு விடிய வேண்டும் என்ற நம்பிக்கையோடு அன்று இரவு படுக்கைக்குப் போனேன்.

வயல்காட்டிற்கு போய் விட்டு வந்து படுக்கும் ஒவ்வொரு நாளும் அடித்துப் போட்டதைப் போல் அசத்தும் உறக்கம் அன்று புரண்டு புரண்டு படுத்தாலும் வரவில்லை.

விடியற்காலையில் வீடு வந்து சேர்ந்த வெங்கடேசனின் பிடிவாதம் நிலப் பத்திரப் பையோடு என்னைச் சென்னைக்கு கொண்டு வந்து சேர்த்து, இரண்டு நாட்களை வழியனுப்பி வைத்திருந்தது.

அடுக்குமாடி வீடு… குளு குளு அறை, எதற்கும் வீட்டை விட்டு வெளியே வராத அளவிற்கு வசதிகளோடு உள்பக்கமாக வீட்டை பூட்டிக் கொண்ட வாழ்க்கை… மகனும் மருமகளும் வேலைக்குப் போன பின்பு பேரப்பிள்ளைகளும், டி.வி.யும்தான் உலகமாக இருந்தது. இரண்டு நாட்கள் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  மூன்றாவது நாள் என்னால் இருக்க முடியவில்லை.

“”வெங்கி…”

“”என்னப்பா…?”

“”வய வரப்புன்னு சுத்திகிட்டே இருந்த உடம்பு… வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்க முடியலை… அது என்னப்பா… வெளிக்காற்றே வராமல் குளுகுளுன்னு அது நமக்கு சரியா வரலை… எங்கேயாவது காலாற நடந்துட்டு வர்றேன்”

நான் புறப்படத் தயாரானேன்.

“”அப்ப ஒண்ணு செய்யுங்க அப்பா…”

“”நீங்க…. தனியா போக வேண்டாம்… உங்க பேரன் முகிலனை கூட்டிட்டு போங்க..

கடைக்கு சாமான்கள் வாங்க போறான்.  அவனோட நீங்களும் போயிட்டு வாங்க.. அதற்குள் நிலம் சம்பந்தமாக ஆள் வந்திருவாங்க.. நம்ம ஊருக்கு பக்கத்து ஊர்காரங்கதான்… வெள்ளையபுரம்… சீக்கிரம் வந்து விடுங்க…”

பெரிய கடை வீதி… நடந்து போகும் போதே ஒவ்வொன்றாக காட்டிக் கொண்டு போனான் பத்தாம் வகுப்பு படிக்கும் பேரன் முகிலன்.

தெருவோரத்தில் சோபாக்களும், சேர்களும், அலங்கார பொம்மைகளுமாக இருந்தன.

நான்கைந்து நைந்து போன வடமாநில மனிதர்கள் அதை விற்கும் வியாபாரிகளாகத் தெரிந்தனர்.

“”முகிலா….” என்று தான் சொன்னேன்.

“”இதெல்லாம் பணக்கார வீடுகளில் வைக்கிற அலங்கார பொருட்கள் தாத்தா…”

அதை சிறிது நேரம் நின்று பார்த்தேன்.  அழகழகாக இருந்தன.

ஒரு இடத்தில் சாலையின் இரண்டு புறங்களிலும் தள்ளுவண்டிகளில் காய்கறி கடைகள், அடர்த்தியான மரங்களோ, விவசாய நிலங்களோ இல்லாத அந்த நகரத்தில் பச்சை பசேலென காய்கறிகள் அடுக்கி வைத்திருந்தார்கள் வியாபாரிகள்.

முகிலன் ஒரு தள்ளுவண்டி அருகில் போனான்.

தக்காளிகளைப் பொறுக்கி எடுத்து இரண்டு கிலோ போடச் சொன்னான்.  அந்தக் கடைக்காரன் என் மகன் குடும்பத்திற்குப் பழக்கப்பட்டவன் போலத் தெரிந்தது.

“”எப்பவும் அப்பா வருவாரு… இன்னைக்கு நீங்களா….?” என்று கேட்டான்.

தக்காளிகளை வாங்கிக் கொண்டு, “”எவ்வளவு?” என்று கேட்டான்.

“”கிலோ நாற்பது… எண்பது ரூபாய் கொடுங்க..”

“”கிலோ நாற்பதா…” எனக்கு நெஞ்சடைத்தது.

“”என்னப்பா… நாற்பது சொல்றே…?” நான் கேட்டேன்.

“”என்ன செய்யுறது… மழை இல்லை… விவசாயம் இல்லை… தக்காளி விளைச்சல் குறைஞ்சு போச்சு…  வரத்து குறைவு…”

கடைக்காரன் எனக்கு விவசாயம் பாடம் எடுத்துக் கொண்டிருந்தான்.

நான் பேசாமல் நகர்ந்தேன்.

“”ஏம்பா… பத்து ரூபாய் குறைச்சு வாங்கலாமில்லே…?”

“”தாத்தா… இது கிராமமில்லே… டவுன்… அவன் சொல்றது தான் விலை.  விலை குறைச்சுக் கேட்டா நம்மை ஏற இறங்கப் பார்ப்பான்”

அடுத்தது ஒரு உயரமான கட்டிடத்திற்கு அழைத்துப் போனான்.

“”தாத்தா… இது ஷாப்பிங் மால்…”

“”அப்படின்னா?”

“”இங்கே சினிமா தியேட்டர், ஹோட்டல், மளிகை கடை, காய்கறி கடை எல்லாமே இருக்கு…”

உள்ளே நுழைந்தபோது, குளு குளு காற்று வரவேற்றது. எதிரே இருந்த கடைக்குள் போனோம்.

ஒரு பெரியகடை முழுவதும் எல்லாவிதமான பழங்களும், காய்கறிகளும் அழகாக அடுக்கி வைத்திருந்தனர்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  தோட்டத்தில் பறிக்கிறபோது கூட இவ்வளவு அழகாக இருந்ததில்லை காய்கள்… அவ்வளவு அழகாக இருந்தன.

தள்ளுவண்டியை எடுத்துக் கொண்டு முகிலன் செல்ல பின்னால் சென்றேன்.

நான்கைந்து மாம்பழங்களும், ஆப்பிள்களும் வண்டியில் எடுத்துப் போட்டான்.  ஓரிடத்தில் எடை போட்டு பணத்தை கொடுத்து வாங்கிக்  கொண்டு வெளியில் வந்தோம்.

“”என்ன தாத்தா…. ஆச்சரியமாக இருக்கா?”

“”ஆமாம்… பணக்காரங்க வீட்டிலே இருக்க வேண்டிய பொருட்களை வீதியிலே விற்கிறாங்க… சாதாரண ஏழை மக்களும் வாங்குற சாப்பிடும் பொருட்களை குளு குளு அறையில் வைச்சிருக்காங்க… ஆச்சரியம் தானே?”

இரண்டு மணி நேரம் சுற்றி விட்டு வீடு வந்தபோது வீட்டிற்குள் இரண்டு பேர் உட்கார்ந்து என் மகனுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தான்.

“”அப்பா பேர்ல தான் இருக்கு…” அவர்களிடம் என் மகன் சொன்ன போது எனக்குப் புரிந்தது.  நான் எதுவும் பேசவில்லை.

“”ஒரு நல்ல நாளாகப் பார்ப்போம்.. போயிட்டு பேசுகிறேன்”

அவர்கள் விடை பெற்றார்கள்.

“”வீடு மட்டும் இருக்கட்டும்… தோட்டத்தை பத்து லட்சத்துக்குப் பேசியிருக்கிறேன்.  நீங்க சரின்னு சொன்னா… விற்று விடுவோம்.  எனக்குச் சரி…” என்றான் வெங்கடேசன்.

“”நான் உயிரோடு இருக்கும்வரை தோட்டத்தை விற்க வேண்டாம்பா…”

“”என்னப்பா… சொல்றீங்க…?”

“”இன்னும் பத்து  இன்னும் பத்து வருஷம் கழித்து

 

உங்க எல்லோருடைய கைகளிலும், நீங்க மடியிலும், கைகளிலும் வைச்சு படம் காட்டுறீங்களே… அதுதான்.. அதுக்குப் பேரென்ன…?” பெயர் தெரியாமல் நான் இழுத்தேன்.

“”கம்ப்யூட்டரா…” மகன் கேட்டான்.

“”ஆமா… அது தான்..   அதுவும் உங்க கைநிறைய பணமும் இருக்கும்… ஆனால் கத்திரிக்காயும், தக்காளியும் இருக்காது… அது என்னை மாதிரி ஆட்களால் தான் தர முடியும்.. உங்களால் முடியாது… என் வழியிலேயே நான் போறேன்.. என்னை விட்டு விடு… என்னை விற்று விடாதே….”

நிலப் பத்திரத்தை வாங்கிக் கொண்டேன்.  அன்று இரவே கிராமத்திற்கு திரும்ப பஸ்ஸில் ஏற்றி விடச் சொன்னேன் நான்.

 

source ::::குன்றக்குடி கி.சிங்காரவடிவேல்  in   Dinamani….Tamil Daily

natarajan