Kavithai
வாரம் ஒரு கவிதை….” என் முதல் கனவு “
என் முதல் கனவு
—————
அம்மாவின் கருவறையில் நான் கேட்ட முதல் ஒலி
அம்மாவின் குரலும் பாட்டும் …இதுதான் உன் அம்மா
என்று என் அம்மாவின் முகத்தை என் மனத்
திரையில் படம் பிடித்துக் காட்டியது
என் முதல் கனவே ..அதுவே நான்
பார்த்த முதல் ஒலியும் ஒளியும் !
நான் கண்ட அந்த முதல் கனவு நனவு ஆனது என்
அம்மாவின் முகம் நான் பார்த்த முதல் நாள் !
வாழ்வில் எத்தனை எத்தனை கனவுகள் !
கனவு அத்தனையும் நனவாகவில்லையே !
அத்தனை ஏன் ? நேற்று இரவு கண்ட
கனவு என்ன என்று விடிந்தால் புரிவதில்லையே !
என் முதல் கனவு மட்டும் எனக்கு இன்னும்
மறக்க வில்லையே ! ஏன் ?
அது எனக்கு முதல் கனவு மட்டும் அல்ல !
நனவை கனவில் அடையாளம் காட்டிய
இனிய புதுமைக் கனவும் அதுவே !
இன்றும் என்றும் அதுவே எனக்கு
முதல் கனவு ! முடிவே இல்லாத
முதன்மை கனவும் அதுவே !
My Kavithai in http://www.dinamani.com dated 26th Nov 2017
Natarajan
வாரம் ஒரு கவிதை ….” யாருமில்லாத மேடையில் …”
யாருமில்லாத மேடையில் …
————————–
குளியல் அறையில் நான் பாடிய
பாட்டு …யாருமில்லாத மேடையில்
அரங்கேறிய என் முதல் கச்சேரி !
என் வீட்டு மொட்டை மாடியில்
நான் ஆடிய நடனம் …யாருமில்லாத
மேடையில் என் முதல் நாட்டியம் !
நிலைக் கண்ணாடி முன் நின்று
நான் பேசிய பேச்சு ..யாருமில்லாத
மேடையில் என் முதல் சொற்பொழிவு !
யாருமில்லாத மேடையில் பேசி,
பாடிய நான் இன்று யாரும் இல்லாத
ஒரு அரங்கு முன்னாலும் பேசத்
தெரிந்த ஒரு திறமைசாலி !
ஆம் …எனக்கு வேலை இன்று
ஒரு தொலைக் காட்சி செய்தி
வாசிக்கும் மேடையில் !!!
My Tamil Kavithai in http://www.dinamani.com dated 19th Nov 2017
Natarajan
வாரம் ஒரு கவிதை…. ” உன் குரல் கேட்டால் …”
உன் குரல் கேட்டால் …
————————
சிட்டுக் குருவி நீ இசைக்கும் உதய ராகம்
கேட்டு பட்டென நான் எழுந்து ஓடி வருவேன்
நான் ஒரு காலம் …அது ஒரு கனாக் காலம் !
அதிகாலை நேரம் உன்ன உணவு தேடி என்னை
நீ நாடி வந்த காலம் எனக்கு பொற்காலம் !
ஒரு பிடி அரிசி நான் கொடுப்பேன் உனக்கு
ஒரு மணி அரிசியும் இருக்காது மீதம்
நீ மீண்டும் வானில் பறக்கும் நேரம் !
சிட்டுக் குருவி உன் குரல் இப்போது
நான் கேட்டால் ஓடி வர மாட்டேன் …
பறந்தே வருவேன் நான்… ஒரு விருந்து
உனக்கு கொடுக்க !
வர வேண்டும் மீண்டும் நீ …உன்
குரல் இசை கேட்டு துள்ளி ஆட
வேண்டும் நான் !
My Kavithai for this week in http://www.dinamani.com dated 12th Nov 2017
Natarajan
