A Tribute To My Teacher Bro. Anselm and to all other Teachers on Teachers Day…

 

தவறை   திருத்துவதில்  தந்தையாக … தோல்வியில் துவளாதே  என்று தட்டிக்  கொடுப்பதில்  ஒரு

தோழனாக   ….எங்கள்  வெற்றியை  வாழ்த்துவதில் ஒரு  தாயாக …

அறிவு  போதிப்பதில்  போதிமரமாக …. எங்கள்   வாழ்க்கையின்   வழிகாட்டியாக ..

உங்கள்  உளியால்  எங்களை எல்லாம்   செதுக்கி  வைத்தீர்கள்  ஒரு  சிற்பமாக !!!

ஆசிரியர்  உங்கள்  உதவியால்  உயர்ந்தோம்   நாங்கள் …

வாழ்வை  கற்றோம் …வளம்  பல  பெற்றோம் !!!

உங்களாலே  நாங்கள்  மனிதர்  ஆனோம்

உங்களிடமிருந்து  நாங்கள்  மனித  நேயம்  கற்றோம் …

எங்களை  உயர்த்திய  உங்களை …  எங்கள்

உயிர்  உள்ளவரை  மறவோம் ….

இன்றும் , என்றும்  வணங்குவோம்  உங்களை !!!!!

source :::: input from  a daily on Teachers Day….

Dedicated to my Dear Bro. Anselm and to all the other teachers on this Teachers Day…

natarajan

 

 

 

 

 

 

 

“உடைப்போம் தடை கற்களை …படைப்போம் ஒரு புது சரித்திரம் !!!”

தண்ணீர் விட்டா  வளர்த்தோம் நம் சுதந்திர  செடியை ?  …. செந்நீரும்

க ண்ணீரும்  விட்டு   பெற்றதல்லவா  நம் சுதந்திரக்   கொடி  !!!…..அது

என்ன  மாயமா  மந்திரமா  !!!  இல்லையே  !!!   கேட்க முடியுமா  நம்

முன்னோரிடம்  நாம்  ….கொடியின்  விலை என்னவென்று  !!!

விலை  மதிப்பில்லா  சுதந்திர  காற்று சுவாசிக்கும் நாம்  ஒரு

விலை  வைத்து விட்டோமே குடிக்கும் தண்ணீருக்கும்  குழந்தை

படிக்கும்  பள்ளிக்கும் !!!!

விலை இல்லா  இலவச பொருள்  கொடுத்து நமக்கும் ஒரு விலை

உண்டு என்று  சொல்லாமல் சொல்லி விட்டார்களே  , எல்லா

கட்சி  அன்பர்களும் !!!!

விலை மதிப்பில்லா  நேர்மைக்கு  சோதனை நேரம் இது !!!… நம் சுதந்திர

பாரத  இறையாண்மைக்கே  உலை  வைக்க  துடிக்கிறதே   ஒரு கூட்டம் !!!!

நிலைமை  பார்த்து  மலைத்து  துவள  வேண்டாம்  நாம் !!!

நினைத்து  பார்க்க வேண்டும்  நாம் , நம் முன்னோர் பட்ட  கஷ்டம்

நஷ்டம்  எல்லாம் ….

நாம்  சுவாசிக்கும்  இந்த சுதந்திர காற்று   நம் முன்னோர்  நமக்கு

விட்டு சென்ற   விலை மதிப்பில்லா  சொத்து !!!!

சோதனை  பல  இருந்தாலும்    சாதனை  படைக்க   காத்திருக்கும்

நம்  இளைய  தலை முறைக்கு  நாம்  செய்ய வேண்டியது  ஒன்றே  ஒன்று !!!!

நமக்கு  கிடைத்த  சொத்து  சுதந்திர  பாரதம் …..நன்று  நன்று !!!!

நாம் இனி   நமது குழந்தைக்கு   கொடுக்க  வேண்டியது

ஒரு வளமான  வலிமையான  தன்னிறைவு சுதந்திர  பாரதம் !!!!!

எ தற்கும்  ஒரு விலை உண்டு என்னும்  நிலை மாற்றிட

நாம்  எடுக்க வேண்டும் ஒரு  உறுதிப்பாடு இன்று …..

“உடைப்போம்  தடைக்கற்களை …. படைப்போம்  ஒரு

புது  சரித்திரம் !!!

மலர  வேண்டும்  புது  பாரதம் …  வளர  வேண்டும் அது  வலிமையுடன்

நம்  குழந்தைகள்  கையில் !!! ”

நடராஜன் …..AUG 15 2013

chennai

அழகு தமிழ் ஆத்திச்சூடி , அருமையான ஆங்கிலத்தில் !!!

1. அறம் செய விரும்பு / …1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don’t forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don’t prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don’t betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don’t forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don’t despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don’t freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don’t shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don’t flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don’t forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don’t land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don’t play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don’t sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don’t forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don’t hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don’t swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don’t vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don’t hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don’t gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don’t show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don’t be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don’t sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don’t attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don’t defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don’t listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don’t forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don’t compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don’t depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don’t jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don’t over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don’t involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don’t dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don’t comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don’t encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don’t vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don’t accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don’t over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don’t be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don’t join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don’t agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don’t self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don’t gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don’t be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don’t premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

காலத்தால்  அழியாத ஆத்திச்சூடியின்  ஆங்கில  வடிவாக்கம்  மேலே !!!!…தமிழ்  தெரியாத அன்பர்களுக்கும் , தமிழ் புரியாத குழந்தைகளுக்கும்  இது  ஒரு நல்ல  வழிகாட்டி !!!!

படித்தும் , பகிர்ந்தும்  பயன்  பெற  வேண்டி  விழைகிறேன் …

நடராஜன்

 

Source…Input from a friend of mine.
natarajan

 

“நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ” சொன்னபடி வாழ்ந்த வாலி இன்று இல்லை…

வாலி கடந்து வந்த பாதை…(1931-2013)   கவிஞர் வாலி காலமானார்...! திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

கவிஞர் வாலி, 1931 அக்., 29ல் திருச்சிக்கு அருகே உள்ள திருப்பராய்த்துறையில் பிறந்தார். இவரது பெற்றோர் ஸ்ரீனிவாச அய்யங்கார் – பொன்னம்மாள். பின் ஸ்ரீரங்கத்துக்கு குடி பெயர்ந்தார் வாலி. இளம் வயதில் நண்பர்களின் உதவியுடன் நேதாஜி எனும் கையெழுத்து பத்திரிகையை துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. இதில் பங்கேற்ற பல இளைஞர்களில் ஒருவர் தான், பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா. துவக்க விழாவுக்கு திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததாலும், வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக்கொடுக்கும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. இதன் மூலம் வாலியின் கவிதை திறன் வெளிப்பட்டது.

வாலியானது எப்படி…?

தமிழ் மேல் பற்று கொண்டிருந்த இளம் வயதில் வாலி ஓவியத்தில் ஈடுபாடு மிக்கவராக இருந்தார். பள்ளிப் பருவத்தில், பிரபல ஓவியர் மாலி மீது கொண்ட பற்றினால், தானும் ஒரு சிறந்த ஓவியராக வரவேண்டும் என விரும்பினார். இதையடுத்து நீயும் அவரைப் போல வரவேண்டும் என இவரது பள்ளி நண்பர் பாபு, இவருக்கு வாலி எனப் பெயர் வைத்தார்.

வாலிப கவிஞர்…!

எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சிக்குப் பின், சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பை முடித்தார். இவரை சினிமாவுக்கு பாட்டெழுத அழைத்து வந்தவர் டி.எம்.சவுந்தர்ராஜன். 1958ம் ஆண்டு பாடலாசிரியராக சினிமாவில் கால்பதித்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் முதல் இன்றைய தனுஷ், சிம்பு வரை சுமார் மூன்று தலைமுறை சினிமாவிற்கு 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். குறிப்பாக எம்.ஜி.ஆரின் சூப்பர்-டூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த பெருமைக்குரியவர் வாலி என்று சொல்லலாம். இவரது பாடல்வரிகளில் விஷேசம் என்னவென்றால் தூய தமிழ் வார்த்தைகள் மட்டுமல்லாது போஃக், ஹிப்-ஹாப் போன்ற பாடல்களையும் கலந்து கட்டி தனது பாடல் வரிகளில் கொடுக்கும் வல்லமை படைத்தவர். இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றவாரும் பாடல்களை கொடுத்தவர்.

இதுக்கு மேல என்னால் முடியாது

அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு பாடல் வரிகள் எழுதும்போது கமல், காதல் தோல்வியை மையப்படுத்தி ஒரு பாட்டு எழுதுங்கள் என்று வாலியிடம் சொல்லியிருக்கிறார். அவரும் சுமார் 5 பாடல்களை கமலுக்கு எழுதி கொடுத்துள்ளார். ஆனால் கமல் திருப்திபடவில்லை. பின்னர் இறுதியாக 6வதாக ஒரு பாட்டை எழுதி கமலிடம் கொடுத்து, இதுக்கு மேல் என்னால் பாடல் எழுத முடியாது என்று சொல்லியுள்ளார். அந்தப்பாடல் தான் உன்ன நெச்சேன் பாட்டு படிச்சேன் என்ற பாடல்… அந்தப்பாடல் தான் தேசிய விருது பெற்றது.

பன்முக வாலி

பாடலாசிரியராக மட்டுமல்லாமல், அவதார புருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம், வாலிப வாலி… உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். மேலும் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் 17 திரைப்படங்களுக்கு, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். வடை மாலை எனும் திரைப்படத்தை, மாருதிராவுடன் சேர்ந்து இயக்கியுள்ளார்.

பிடித்தது

* வெற்றிலை பாக்கு பிரியரான இவர், 15 வயதிலிருந்து தொடர்ந்த இப்பழக்கத்தை, 76 வயது வரை தொடர்ந்தார். பின் நிறுத்திவிட்டார். கவிதை, உரைநடை, சிறுகதை உட்பட, 15 புத்தகங்களை எழுதியுள்ளார்.

* வெள்ளை மற்றும் சந்தன நிற ஆடையை விரும்பும் இவர், இதுவரை, வெளிநாடு எங்கும் சென்றதில்லை. இவருக்கு இஷ்ட தெய்வம், முருகன்; பிடித்த விளையாட்டு, கிரிக்கெட்.

மனம் மாறி வாலி

கவிதையின் இமயமாக கருதப்படும் வாலி இளமைக்காலத்தில் வறுமையின் காரணமாக தனது வாழ்க்கையில் ஒருமுறை தற்கொலை முடிவை எடுத்தார். அப்போது கண்ணதாசன் சுமைதாங்கி என்ற படத்துக்காக எழுதிய’  ‘மயக்கமா  கலக்கமா வாழ்க்கையில் வருத்தமா “என்ற பாடலில் ” உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்து பார்த்து நிம்மதி தேடு ” என்ற பாடல் வரியைக் கேட்டு வாலி மனம் மாறி, தற்கொலை முடிவை கைவிட்டார். இதன் பின் தன்னம்பிக்கையுடன் புதிய வாழ்க்கையை தொடங்கினார்.

விருதுகள்…

வாலியின் கலைச்சேவையை பாராட்டி 2007ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இதுதவிர தமிழக அரசு மாநில விருதுகளை ஐந்து முறை (எங்கள் தங்கம் -1970, இவர்கள் வித்தியாசமானவர்கள் – 1979, வருஷம் பதினாறு, அபூர்வ ராகங்கள் – 1989, கேளடி கண்மணி – 1990, தசாவதாரம் – 2008) பெற்றுள்ளார்.

கடைசி பாடல்…

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் காவியத்தலைவன் படத்திற்காக எழுதப்பட்டுள்ள கோடாளி மூடிச்சு போட்டு… என்று தொடங்கும் பாடல் தான் வாலி எழுதியிருக்கும் கடைசி பட பாடல். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

வாலியின் பிரபலமான பாடல் வரிகள்….

புதிய வானம் புதிய பூமி, ஏமாற்றாதே ஏமாறாதே, வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கைகளில்,, கண் போன போக்கிலே கால் போகலாமா, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன், நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், மன்னிக்க வேண்டுகிறேன், தரைமேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் , இறைவா உன் மாளிகையில், நான் மலரோடு தனியாக ஏன், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், அம்மா என்றழைக்காத உயிர் இல்லையை, மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள், அந்த நாள் ஞாபகம் நெஞ்சினிலே வந்ததே நண்பனே, கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது.

வாலி அவர்கள் இன்று மண்ணுலகை விட்டு சென்றாலும் அவர் தந்த காலத்தால் அழியாத பாடல்கள் பல என்றும் இந்த உலகம் இருக்கும் வரை இருக்கும் என்பது திண்ணம்…!!

source:::: Dinamalar …Tamil Daily &Yahoo India

natarajan

“மயக்கமா கலக்கமா ” வாலியின் வெற்றிக்கு வித்திட்ட கண்ணதாசன் வரிகள் !!!

விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்?

கவியரசு கண்ணதாசன் அவர்கள் எத்தனையோ காலத்தால் அழியாத தன்னம்பிக்கை
பாடல்களை தந்திருக்கிறார். ஆனால் அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல
திகழ்வது ‘சுமைதாங்கி’ படத்தில் வரும் ‘மயக்கமா கலக்கமா’ பாடல் தான்.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் உச்சகட்ட சோதனை, துன்பம், விரக்தி என்ற
ஒரு நிலை ஏதாவது ஒரு தருணத்தில் வரும். வறுமை, இயலாமை, பழி சொல்,
துரோகம், எதிர்பாராத சோகம், பிரிவு, என ஏதாவது ஒரு ரூபத்தில் துன்பம்
நம்மை தாக்கும் அந்த தருணங்களில் நமக்கிருக்கும் கடவுள் நம்பிக்கையே கூட
அசைத்து பார்க்கப்பட்டுவிடும். உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்பாது
என்பது போல அதுல இருந்து எந்த சேதாரமும் இல்லாம தப்பிச்சு வர்றதெல்லாம்
அத்துணை சுலபமில்லே. அந்த சமயத்தில் என்ன ஆறுதல் எங்கு தேடினாலும்
மனதுக்கு அமைதி கிடைப்பது இல்லை.
அது போன்ற நேரங்களில் அனைவரும் கேட்க வேண்டிய பாடல் தான் இந்த ‘மயக்கமா
கலக்கமா’ பாடல். பாடலை கேட்ட நொடிகளில் துவண்டு கிடக்கும் உள்ளங்கள்
தெளிவு பெரும். வாழ்வில் நிச்சயம் ஜெயிப்போம் என்கிற எண்ணம் வேரூன்றும்.
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோரும் வேதனை இருக்கும்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோரும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடு
ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா

சமீபத்தில் ஒரு நாள் கண்ணதாசன் அவர்கள் எழுதிய நூல்கள் சிலவற்றை
வாங்குவதற்கு தி.நகரில் அவரது இல்லத்திலேயே அமைந்துள்ள கண்ணதாசன்
பதிப்பகம் போயிருந்தேன்.
அப்படியே கண்ணதாசனின் புதல்வர் திரு.காந்தி கண்ணதாசன் அவர்களையும்
சந்தித்தேன். அப்போது இந்த ‘மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா’ பாடல்
பற்றி பேசினோம். அப்போது திரு.காந்தி கூறிய சில விஷயங்கள் சிலிர்க்க
வைப்பவை.
இதற்கிடையே, ‘மயக்கமா கலக்கமா’ பாடல் பற்றி காந்தி கண்ணதாசன் அவர்கள்
கூறியவைகளை இங்கே தருகிறேன். படியுங்கள்… சிலிர்த்துப்போவீர்கள்!
எதற்க்கெடுத்தாலும் விதியை நொந்து இறைவனை வசைபாடுவதை விட்டேவிடுவீர்கள்!
ஊருக்கு திரும்ப இருந்த கவிஞர் வாலி… பாடலை கேட்டு பின்னர் மனம் மாறிய சம்பவம்!
திரையுலகில் எப்படியாவது வெற்றி பெறவேண்டி கவிஞர் வாலி
ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி சென்னை வந்த சமயம் அது. ஆல் இந்திய ரேடியோ,
நாடக சபாக்கள் என தனக்கு கிடைத்த ஒன்றிரண்டு வாய்ப்புக்களை வைத்து
சென்னையில் காலத்தை தள்ளுகிறார் வாலி. ஆனால் அவர் எதிர்பார்த்த திரையுலக
பிரேக் கிடைக்கவேயில்லை. போதிய வருமானம் இன்றி சென்னையில் அவரால் காலம்
தள்ள முடியவில்லை. அவ்வப்போது ஏதாவது வாய்ப்புக்கள் வந்தாலும் எதுவும்
சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.
நாகேஷ், வாலி இவர்கள் எல்லாம் ஒரே அறையில் தங்கியிருந்த காலகட்டம் அது.
இவர்களை பார்க்க பாடகர் பி. பி.ஸ்ரீனிவாஸ் அங்கே அடிக்கடி வருவார்.
மூன்று பேரும் எங்கவாது ஒன்றாக செல்வார்கள். ஒரு பக்கம் வறட்சி,
மறுபக்கம் வறுமை… ஒவ்வொரு நாளும் கொடுமையாக இருந்தது வாலிக்கு.

“சரி.. இனி சென்னை நமக்கு சரிப்பட்டு வராது… நம்ம ஊருக்கே போய்டவேண்டியது
தான்” என்று முடிவு செய்துவிட்டு தான் கொண்டு வந்த பெட்டியுடன்
ஸ்ரீரங்கம் திரும்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தார். அந்த நேரம் அங்கே
வந்த பி.பி.ஸ்ரீனிவாஸ்.. ‘சுமைதாங்கி’ங்கிற படத்துக்காக இன்னைக்கு ஒரு
பிரமாதமான பாட்டு பாடினேன்ய்யா.. கேக்குறியா?” என்று வாலியை கேட்க,
ஆர்வமுடன் கேட்கும் நண்பரிடம் மறுப்பு சொல்லமுடியாமல் வாலி அரைமனதுடன்
“சரி… பாடுங்க” என்று சொல்ல… ஸ்ரீனிவாஸ் ‘மயக்கமா கலக்கமா’ பாடலை பாடத்
துவங்குகிறார். பாடப் பாட நிமிர்ந்து உட்கார்ந்த வாலி, என்ன தோன்றியதோ
“இனிமே ஜெயிக்காம ஊர் திரும்புற பேச்சுக்கே இடமில்லே. மெட்ராஸைவிட்டு
ஜெயிக்காம நான் போகமாட்டேன். முயற்சி பண்ணா நிச்சயம் ஜெயிக்கலாம்ன்னு
இந்த பாட்டு எனக்கு புரிய வெச்சிடுச்சு” என்று சொல்லி பெட்டியை எடுத்து
உள்ளே வெச்சிடுறார். (அன்னைக்கு வெச்ச பெட்டியை அதுக்கு பிறகு வாலி
எடுக்கவே இல்லை. சொல்லப்போனா பீரோ பீரோவா வாங்கித் தள்ளிட்டார்.) இது
வாலி சாரோட லைஃப்ல நடந்த விஷயம்.
விரட்டியடிக்கப்பட்ட அதே இடத்தில்….
இந்த பாட்டு சம்பந்தமா அப்பாவோட (கண்ணதாசன்) லைஃப்ல நடந்த விஷயம் ஒன்னை
சொல்றேன் கேளுங்க.
அப்பா மெட்ராஸ்க்கு வரும்போது அவரோட வயசு 16 இருக்கும். காரைக்குடியில
இருந்து சென்னைக்கு கையில ஒரு பைசா கூட இல்லாம வர்றாரு. வருஷம் 1942
அல்லது 1943 இருக்கும். எக்மோர்ல ட்ரெயின்ல வந்து சாயந்திரம் இறங்குறார்.
எங்கே போறதுன்னு தெரியலே. அவருக்கு மெட்ராஸ்ல தெரிஞ்சதெல்லாம் மண்ணடில
இருக்குற எங்க ஊர்க்கரங்களுக்கு என்றே இருக்கும் ‘நகரத்தார் விடுதி’
தான். அதுக்கு கூட எப்படி போறதுன்னு தெரியாது. பஸ்ல போக கைல நையா பைசா
இல்லே. நடந்தே போவோம்னு மண்ணடிக்கு கிளம்புறார். பீச் வழியா போறாரு. அந்த
நேரம் பார்த்து இருட்டிடவே, இனிமே விடுதிக்கு போகமுடியாது…
லேட்டாயிடுச்சு… பூட்டியிருப்பாங்கன்னு அங்கேயே ஒரு ஓரமா படுக்குறார்.
ஆனா பாரா வந்த போலீஸ்காரர் படுக்க விடலே…. “யார் நீ? இங்கே எதுக்கு
படுத்திருக்கே?” அப்படின்னு கேட்டு இடத்தை காலி பண்ணச்சொல்லி
மிரட்டுறார். இவர் தன் நிலைமையை சொல்ல, “அதெல்லாம் தெரியாது. இடத்தை காலி
பண்ணு, இல்லே நாலணா காசு கொடுத்திட்டு அப்புறம் படு…” அப்படின்னு சொல்ல….
இருந்தாத் தானே கொடுக்குறதுக்கு… So, படுக்க கூட இடம் இல்லாம அந்த
இடத்திலிருந்து துரத்தப்பட்டார் கண்ணதாசன். “இந்த ஏழையிடம் நாலணா
இல்லாததால் பீச்சில் கூட படுக்க இடம் கிடைக்கவில்லை” அப்படின்னு
பின்னாளில் எழுதினார்.

அதுக்கப்புறம் அப்பா சினிமாவுல ஜெயிச்சு, படம்லாம் கூட தயாரிச்சார்.
‘விசாலாக்ஷி ஃபிலிம்ஸ்’ என்கிற சொந்த பேனர்ல ஜெமினி கணேசனை வச்சு ஸ்ரீதரை
டைரக்டரா போட்டு ‘சுமைதாங்கி’ங்கிற படம் எடுக்குறார். அந்த படத்துக்கு
இந்த ‘மயக்கமா கலக்கமா’ பாட்டு எழுதுறார்.
அந்த பாட்டை எங்கே ஷூட் பண்ணாரு தெரியுமா? அவரை எந்த இடத்துல படுக்கக்கூட
கூடாதுன்னு சொல்லி போலீஸ்காரன் விரட்டிவிட்டானோ அதே இடத்துல ஜெமினி
கணேசனை நடக்க வெச்சு அந்த பாட்டை ஷூட் பண்ணாரு. அந்த பாட்டப்போ நல்லா
பார்த்தீங்கன்னா தெரியும்.. ஜெமினி சார் நடக்கும்போது குறுக்கேயும்
நெடுக்கேயும் நாலஞ்சு கார்கள் போவும். அது அத்தனையும் அப்பாவோடது தான்.
இது தான் கண்ணதாசன் சினிமாவுல ஜெயிச்ச கதை!!”
எவ்ளோ பெரிய சாதனை…. என்ன ஒரு DETERMINATION!
“சார்.. இந்த வைர வரிகளிலேயே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது நாளை பொழுதை
இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் நிம்மதி தேடு & உனக்கும் கீழே உள்ளவர்
கோடி… நினைத்து பார்த்து நிம்மதி நாடு” என்கிற வரிகள் தான் சார். அங்கே
தான்  கவியரசு நிக்கிறார்.

source ::::input from a friend of mine

natarajan

உன்னுடன் பிறப்பது உன் தாய் !!!

இந்த மண்ணில் நீ பிறக்கும்போது பிறக்கிறாள் உன் தாயும் உன்னுடனே !!!

உன் வரவு நல்வரவாகும் அன்றே கிடைக்கிறது ஒரு பதவி உயர்வு –

உன்னால் பலருக்கு !!!..

உன் அம்மா அப்பாவுக்கு புது பதவி !!!! , அவர்கள் அப்பா அம்மாவுக்கும்

தாத்தா , பாட்டி என பதவி உயர்வு !!!!

ஒரு குட்டி தேவதை நீ வரும் நேரம் புது உறவுகள் பல உருவாகும் !

சுட்டி உன் சிரிப்பு பார்த்து பட்டென பறக்கும் மனக்கவலை !!!!

குழந்தை உன் சிரிப்பில் கடவுளைப் பார்க்கும் உறவுகள் ….அவரவர்

குழந்தை காலத்தை நினைத்து ரசித்து சிரிக்கும் சமயம்

நீ சிரிக்கும் புன் சிரிப்பு , இறைவனின் அன்பு சிரிப்பல்லவா !!!!!

K.Natarajan

அஞ்சிலே ஒன்று பெற்றான் !!!!…கம்பன் கவி நயம் !!!!

 

அஞ்சிலே ஒன்று பெற்றான்

அஞ்சிலே ஒன்று பெற்றான்
                  அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
                ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே  ஒன்று பெற்ற
              அணங்கைகண்டு  ; அயலான் ஊரில
அஞ்சிலே ஒன்று வைத்தான்
              அவன்  நம்மை அளித்து காப்பான் 

இது கம்பராமாயணத்தில் பால காண்டத்தில் வரும் ஒரு பா ..தமிழ் சினிமா காரங்க சொல்லூர மாதிரி ரொம்ப எபெட் எடுத்து தான் கம்பர் இந்த பாடலை புனைந்திருக்க  வேண்டும் .

அனுமனுக்கு வணக்கம் வைக்கும்வகையில இந்த பா உருவாக்க பட்டிருக்கும் .
முதல் அடி கம்பர் ஆரம்பிக்கிறார் அனுமன் பிறப்பில்   அஞ்சிலே ஒன்றுபெற்றான் .அஞ்சு என்று கம்பர்  விளிப்பது ஐம்பூதங்களை என்பது வாசிக்கும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது .

அனுமனை வாயுபுத்திரன் என்றும் வாயுமைந்தன் என்றும் விளிப்பார்கள் .காரணம் அவன் வாயுபகவானின் வாரிசு என்கிற படியால் .அதே கருத்தை கம்பர் தன் பாவில்   அஞ்சிலே ஒன்று பெற்றான் என்றுஆரம்பித்திருக்கிறார்.

அடுத்து   அஞ்சிலே ஒன்றை தாவி        இந்த  கவி இடம் பெறும் படலம் பால காண்டம் சீதா பிராட்டியை தேடும் படலம் எனவே அஞ்சில் ஒன்றாகிய நீரை  கடக்க போவதை அதாவது கடலை கடந்து போவதை கம்பர் தன் பாணியில் எடுத்து விட்டிருக்கிறார்..அத்தோடு   அஞ்சிலே ஒன்று ஆறு ஆக   எனும் போது வான் வீதி வழியாக தாவி கடல் கடக்கிறான் என்கிறார் கம்பர்
எதுக்கு?  ஆருயிர் சீதாதேவியை காக்க கடல் தாண்டி செல்கிறான் ,சொல்கிறார் கம்பர்

கடல் தாண்டி அயலூர் அதாவது இலங்கை வருகிறான்,இங்கும் அந்த அஞ்சு என்பதை கம்பர் விடாமல் தொட்டு கொண்டே இருக்கிறார் .அஞ்சிலே  ஒன்று பெற்ற அணங்கை கண்டு இது சீதாபிராட்டி பற்றியது ,சீதா பூமா தேவி மகள் எனவே இந்த வரி இங்கு ..இதை விட அடுத்த வரி தன் முத்திரையை அழகாய் பதித்து விட்டு போயிருக்கிறார் கம்பர்

அஞ்சிலே ஒன்று வைத்தான்  இலங்கா புரிக்கு தீ வைத்தான் என்று முடித்து அவன் நம்மை காப்பான் என்று முடித்திருக்கிறார் கம்பர் …

source::::tamil manam blog site
Natarajan

ஒரு பாடலில் ராமாயணம் !!!

I would like to share the following sloka writen by
U.Ve vazhuthoor chakrapaani here.

The speciality of this sloka is that the 1st letter is in the Tamil alphabetical order and it narrates the entire Ramayanam in one single sloka.

ஒரு பாடலில் ராமாயணம்

அன்றொருநாள் ராமன் வனம் சென்றதுவும்,
ஆங்கவனும் பொன்மானைக் கொன்றதுவும்,
இலக்குமி வடிவாம் சீதை மறைந்ததுவும்,
ஈடிலா ஜடாயு உயிர் பிரிந்ததுவும்,
உம்பி ஒருவனை ராமன் பெற்றதுவும்,
ஊறுசெய் வாலி தனை அழித்ததுவும்,
எம்பிரார்க்காய் அநுமன் கடல் கடந்ததுவும்,
ஏற்றமிகு இலங்கை தீப்பட்டதுவும்,
ஐயமின்றி அரக்கர் படை அழிந்ததுவும்,
ஒப்பாரின்றி இப்பாரை ஆண்டதுவும்,
ஓதுதற்கு ஏற்ற நூல் ஆனதுவும்,
ஔடதம் போல் உள்ளம் உவப்பதுவும்,
அ. .தன்றோ ஒரு பாடல் ராமகாதை.

 

source:::::A.V .Ramanathan

Natarajan

“அ”கர ராமாயணம் !!!!! ஆனந்த பாராயணம் !!!!!

ராமாயணக் கதை முழுதும் ‘அ’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால்
வடிவமைக்கப் பட்டுள்ளது.

அனந்தனே அசுரர்களை அழித்து,
அன்பர்களுக்கு அருள அயோத்தி
அரசனாக அவதரித்தான்.

அப்போது அரிக்கு அரணாக அரசனின்
அம்சமாக அனுமனும் அவதரித்ததாக
அறிகிறோம்.அன்று அஞ்சனை அவனிக்கு
அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன் ?

அவனே அறிவழகன்,அன்பழகன்,அன்பர்களை
அரவ-ணைத்து அருளும் அருட்செல்வன்!

அயோத்தி அடலேறு, அம்மிதிலை அரசவையில்
அரசனின் அரியவில்லை அடக்கி, அன்பும்
அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை
அடைந்தான்.

அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய
அனந்தராமனுக்கே! அப்படியிருக்க அந்தோ !
அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும்
அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு
அனுப்பினாள்.

அங்கேயும் அபாயம்!அரக்கர்களின் அரசன் ,
அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை
அபகரித்தான்

அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்கு
அளவேயில்லை. அயோத்தி அண்ணல், அன்னை
அங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும்
அளவில்லை.

அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியை
அடிபணிந்து, அவனையே அடைக்கலமாக அடைந்தனர்.

அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை
அரசனாக அரியணையில் அமர்த்தினர்.

அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும்
அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர்.
அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து
அளந்து அக்கரையை அடைந்தான்.

அசோகமரத்தின் அடியில், அரக்கிகள் அயர்ந்திருக்க
அன்னையை அடிபணிந்து அண்ணலின்
அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம்
அளித்தான்

அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள்
அநேகமாக அணைந்தன. அன்னையின் அன்பையும்
அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன்.

அடுத்து, அரக்கர்களை அலறடித்து , அவர்களின்
அரண்களை, அகந்தைகளை அடியோடு அக்கினியால்
அழித்த அனுமனின் அட்டகாசம், அசாத்தியமான
அதிசாகசம்.

அனந்தராமன் அலைகடலின் அதிபதியை
அடக்கி, அதிசயமான அணையை
அமைத்து, அக்கரையை அடைந்தான்.

அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின்
அஸ்திரத்தால் அழித்தான்.

அக்கினியில் அயராமல் அர்ப்பணித்த அன்னை
அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.

அன்னையுடன் அயோத்தியை அடைந்து
அரியணையில் அமர்ந்து அருளினான்

அண்ணல், அனந்த ராமனின் அவதார
அருங்கதை அகரத்திலேயே அடுக்கடுக்காக
அமைந்ததும் அனுமனின் அருளாலே.

source::::input from a friend of mine..
Natarajan