” கணபதிக்கு தினமும் நெய் தீபம் …”

 

காஞ்சி மஹான் எப்போது எந்த இடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்று சொல்லவே முடியாது.அன்றொரு நாள் மடத்தில் பின்கட்டிலுள்ள சதுரமான பாறாங்கல்லின் மீது மஹான் அமர்ந்திருந்தார். அப்போது பாறை உறுத்தலாக தெரியவே, மஹான் அதை என்னவென்று தடவிப்பார்த்தார்கள். கல்லில் ஏதோ எழுத்துக்கள் செதுக்கப்பட்டிருந்தது அவர் கண்களுக்குத் தெரிந்தது. உடனே மடத்து சிப்பந்திகளிடம் சுண்ணாம்பைக் கொண்டு வரச்செய்து பாறாங்கல்லின் மீது லேசாகத் தடவச் சொன்னார்கள். தமிழில் எழுதப்பட்டிருந்த அந்தக் கல்வெட்டில் இருந்த எழுத்துக்கள் தெளிவாகத் தெரிந்தன.

கணேசருக்கு தினசரி நெய் தீபம் போடுவதற்காக, சில ஆடுகளை அளித்திருப்பதாக அதில் ஒருவரின் எண்ணம் எழுத்து வடிவமாக இருந்தது.

மஹாபெரியவா பழங்கால விஷயங்களை எங்கிருந்தாலும் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர். தொல்பொருள் ஆய்விலும், கல்வெட்டு ஆராய்ச்சியிலும் மிகவும் அக்கறையோடு ஈடுபடுவார். அதனால் அத்துறை நிபுணர்களை உடனே அங்கே வரவழைத்தார். வந்த நிபுணர்கள் கல்வெட்டை மிகவும் உன்னிப்பாக ஆராயந்து அது ராஜ ராஜசோழன் காலத்துக் கல்வெட்டு என்றும் அதில் குறிப்பிட்டுள்ள கணேசமூர்த்தி, காஞ்சி மடத்திற்குள் ஆதிசங்கரர் மண்டபத்தின் வாயிற்படிக்கு வெளியில் உள்ள கணபதியே என்றும் தங்களின் ஆராய்ச்சி முடிவைச் சொன்னார்கள்.

இதை அறிந்த மஹான், சென்னையைச் சேர்ந்த சில பக்தர்களை உடனே காஞ்சி வருமாறு பணித்தார்கள். அவர்களிடம் கல்லில் காணப்பட்ட செய்திகளை விவரமாகக் கூறி, “பரம பக்தர் ஒருவர் கணேசருக்கு தினசரி நெய்தீபம் ஏற்றுவதற்காக தர்மம் செய்துவிட்டுப் போயிருக்கிறார். அவ்விதம் நடக்காவிடில் தமக்குப் பாவம் வந்து சேரும்” என்று கவலையோடு மஹான் வந்த வேதவிற்பன்னர்களிடம் தெரிவித்து இருக்கிறார். அவர் மனம் வாட பக்தர்கள் பொறுப்பார்களா? தினசரி நெய்தீபம் ஏற்ற ஏற்பாடு செய்துவிடலாம் என்று அப்போதே அவர்கள் உறுதி அளித்தார்கள். அந்தக் கைங்கர்யத்திற்காக ஒரு டிரஸ்ட் உருவாயிற்று. ஏழை பக்தனின் விருப்பப்படி கணேசரின் சந்நிதியில் தினமும் நெய்விளக்கு எரியலாயிற்று. இது மிகவும் சிறிய விஷயந்தான்.

ஆனால், அதைக்கூட விட்டுவிடக்கூடாது என்கிற நற்குணம் மஹானிடம் இயற்கையாகவே இருந்தது. என்றோ, யாரோ எழுதிவிட்டுப் போன தர்மப் பணியை அலட்சியம் செய்யாமல் அதை நடைமுறைக்குக் கொண்டுவந்த மஹான், நடமாடும் தெய்வமாக இருப்பதில் வியப்பென்ன இருக்கிறது!

source::::www.periva.proboards.com

natarajan

Read more: http://www.periva.proboards.com/thread/6274/extract-book-venkatasamy-kanchi-periva#ixzz2qXhVf9rd

Strange … But True.. Amazing Hand Drawing ” Maze” !!!

 

Over 30 years ago, a man spent 7 years hand-drawing the most complex, unbelievable and probably unsolvable maze I’ve ever seen. His daughter recently posted the following photos on Twitter and, needless to say, the entire Internet is exploding with questions about her dad.

So who is the man behind it? A professor? A mathematician? A wizard? No, no, and no. The correct answer is… the university janitor.

Art connoisseurs are going crazy over this, both for its artistic brilliance and its impossibility to solve. To think a university janitor was behind this shows that we should never judge anyone by their occupation or position in life. This is awesome work.

To date, no additional information has been shared about the maze or the man behind it. But it’s without a doubt one of the most humble, remarkable creations I’ve ever seen.

Source: Twitter User Kya7y’s / Buy A Copy Of “Papa’s Maze” Here & viralnova site

natarajan

 

Homage to Lal Bahadur Shastri ….

11 JAN  1966… The Day on which  Shri Lal Bahadur Shastri  died under tragic circumstances at Tashkent , Russia  while on Official tour to that country ….Few quotable Quotes of this Great Man are posted in my blog today as a mark of Respect and Rememberance  ……  Natarajan

11 Jan 2014

1964+India%2527s+Lal+Bahadur+Shastri+Family+Press+Photo

Source::::ebay… Family Photo of Shri . LalBahadur Shastri

 Quotes…

Quote 1: That loyalty to the country comes ahead of all other loyalties. And this is an absolute loyalty, since one cannot weight it in terms of what one receives

Quote 2: True democracy or the swaraj of the masses can never come through untruthful and violent means.

Quote 3: The rule of law should be respected so that the basic structure of our democracy is maintained and further strengthened.

Quote 4: The economic issues are most vital for us and it is of the highest importance that we should fight our biggest enemies – Poverty, unemployment.

Quote 5: We want freedom for our country, but not at the expense or exploitation of others, not us to degrade other countries…I want the freedom of my country so that other countries may learn something from my free country so that the resources of my country might be utilized for the benefit of mankin

Quote 6: The preservation of freedom, is not the task of soldiers alone. The whole nation has to be strong.

Quote 7: We all have to work in our respective spheres with the same dedication, the same zeal and the same determination which inspired and motivated the warrior on the battle front. And this has to be shown not by mere words, but by actual dee

Quote 8: The basic idea of governance, as I see it, is to hold the society together so that it can develop and march towards certain goals

Quote 9: Those who govern must see how the people react to administration. Ultimately, the people are the final arbiters.

Quote 10: Success in science and scientific work come not through the provision of unlimited or big resources, but in the wise and careful selection of problems and objectives. Above all, what is required is hard sustained work and dedication.

Quote 11: If I were a dictator, religion and state would be separate. I will die for it. But it is my personal affair. The State has nothing to do with it. The State would look after secular welfare, health, communications, foreign relations, currency and so on, but not your or my religion. That is everybody’s personal concer

Quote 12: Among the major tasks before us none is of greater importance for our strength and stability than the task of building up the unity and solidarity of our people.

Quote 13: Sampling out corruption is a very tough job, but I say so in all seriousness that we would be failing in our duty if we do not tackle this problem seriously and with determination.

Quote 14: India will have to hang down her head in shame if even one person is left who is said in any way to be untouchable.

Quote 15: We believe in peace and peaceful development, not only for ourselves but for people all over the world.

natarajan

“பச்சை மா மணி போல் ….” !!!

இரவு வேளை.

விஷய ஞானமுள்ள அடியார் ஒருவர் வந்து பெரியவாள் முன் உட்கார்ந்தார்.

“ஆகாரம் பண்ணியாச்சா?”

” ஆச்சு”

“என்ன சாப்பிட்டே?”

“உப்புமா”

ஒரு நிமிட இடைவெளிக்குப் பின் பெரியவாள் சொன்னார்கள். “உனக்கு ஒரு கதை தெரியுமோ? உப்புமாக் கதை”

“தெரியாது”

“கேளு. ஒரு பக்தன் ஸ்ரீரங்கத்துக்குப் போனான். பெருமாளை சேவித்தான். ஒரு சத்திரத்தில் ராத்திரி சாப்பிடப் போனான். உப்புமா போட்டார்கள். உப்புமா சரியாக வேகவில்லை.சின்னச் சின்னதாய் நிறைய கல் வேறே இருந்தது. பல்லில் அகப்பட்டு, வாயெல்லாம் புன்ணாகி , சிவப்பாகி விட்டது. நிறைய மிளகாய் தாளித்துப் போட்டிருந்ததால், காரம் தாங்கவில்லை. கண்களில் நீர் வழிந்து, சிவந்து போச்சு. அப்போ, ரொம்ப சிரமத்திலே ஒரு பாட்டுப் பாடினான். உனக்குத் தெரியுமோ?”

“தெரியாது”

“என்ன அப்படிச் சொல்றே? பச்சை மால் மலை போல் மேனி…..”

“இது எனக்குத் தெரியும்.”

“இவன் கொஞ்சம் மாற்றிப்பாடினானாம். பச்சை மா (வேகாத மாவு) , மணி போல் மலை ( உப்புமாவில் மணி மணியாகக் கற்கள்) , பவள வாய் (சாப்பிட்டவனுக்கு, வாய் புண்ணாகிச் சிவந்தது), செங்கண் ( காரம் தாங்காமல் கண்ணீர் வழிந்ததில், கண்களும் சிவந்து விட்டன), அச்சுதா….”

அருகிலிருந்தவர்களுடன் பெரியவாளும் சேர்ந்து கொண்டு குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள்!

Source—-Mahaperiaval Dharisana Anubavankal—–vol. 7  &www.periva.proboards.com

Compiler—T.S.Kothandarama Sarma.

Publishers——Vanathi Pathippakam.

natarajan

Read more: http://www.periva.proboards.com/thread/2934/mahaperiavas-humour#ixzz2pshvR4G2

What is The Story Behind This Photograph ?

image

PHOTOGRAPH BY SUBHASISH KARMAKAR  …India
Subhasish Karmakar’s painting-like photo has lots of elements that contribute to its interesting composition. What’s going on in the photo and why is it one of his favorites?

Q: What’s the story behind this photo?

A: The young boy in the photograph is my then two-year-old son. In July 2012, we went for a family adventure trip to Lahaul and Spiti Valley, which is in the remote areas of Himachal Pradesh, India. My wife, my daughter, and my son accompanied me.

This photograph was taken on our way to Dhankar Monastry. I was walking back to the car after taking a few photographs of the local people. My two-year-old son suddenly peeped through the car window to call me. The reflection of the surrounding mountains and the cloud and my wife’s shawl hung to protect the sunlight, superimposed with the innocent face, created a very surreal, painting-like impression on the glass. I took three to four shots; this, in my opinion, came out the best.

Q: What do you like to take pictures of and why?

A: The interrelationships between human beings and nature or the environment in which they live have always fascinated me as a person, and this has been the subject of most of my photographs. Nothing gives me more pleasure than capturing human emotions and how those emotions subtly change depending on the environment or the context.

See more of Subhasish’s images in his Your Shot gallery.  

source:::: National Geographic…..Pictures  We Love…

natarajan

 

“நீ பாக்காட்டா என்ன … நான் உன்னைப் பாக்கறேன் …”

உத்தமமான குருவானவர், தன் சிஷ்யர்களை மட்டுமில்லை, சாமான்யமாக அவர்களுடைய திருஷ்டியில் படும், வஸ்துக்கள் அனைத்தையும் தன் பார்வையால் கடாக்ஷிப்பது. அந்த கடாக்ஷத்தை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கிறதோ இல்லையோ, அந்த கடாக்ஷமே தன் வேலையை செய்ய ஆரம்பித்து விடும்.

மீன், தன் குஞ்சுகளை பார்வையாலேயே ரக்ஷிப்பது போன்றது மஹான்களின் திருஷ்டி. அதனால்தான் நம் குழந்தைகளை மஹான்களின் சன்னிதானத்திற்கு அழைத்துப் போவது.

அக்குழந்தைகளுக்கு மஹான்கள் யாரென்று கூட புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களின் மேல் சூழ்ந்துள்ள தோஷங்களை நிவர்த்திக்கும் சக்தி அந்த திருஷ்டிக்கு உண்டு.

காஞ்சி மகாபெரியவாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு பெண் இருந்தாள். அவளுடைய புருஷனுக்கோ, கடவுள், மஹான்கள், கோவில் என்று எதிலுமே நம்பிக்கை இல்லை. அதிலும் மஹான்கள் எல்லோருமே நம்மை போல் சாதாரண மனிதர்கள்தான்! என்ற ஒரு பேதைமை உண்டு.

ஒருமுறை அந்த அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் பெரியவாளை தரிசனம் பண்ண ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் போட்ட நிபந்தனை “நா அங்க வருவேன். pant shirt தான் போட்டுப்பேன். பஞ்சகச்சம் விபூதி எதுவும் கெடையாது. அவரை நமஸ்காரம் பண்ண மாட்டேன். உனக்காக வரேன் ஆனா,அவரைப் பாக்க மாட்டேன். தள்ளிதான் நிப்பேன்”.

பாவம் அந்த அம்மா ஒத்துக் கொண்டாள். போனார்கள். அவர் காலில் போட்டிருந்த ஷூவைக் கூட கழற்றவில்லை.

அந்த அம்மா மானசீகமா பெரியவாளிடம் பிரார்த்தனை பண்ணினாள் கணவருக்கு நல்ல புத்தி வேண்டி.

நம்ம பெரியவா சாக்ஷாத் காமாக்ஷித் தாயாரில்லையா? “நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்” என்று சொல்லுவதுபோல், மேனாவுக்குள் இருந்து லேசாக எட்டி அந்த மனுஷனைப் பார்த்தார்.

அவ்வளவுதான்! கொஞ்ச நாள் கழித்து கணவர் “வாயேன்…போய் மடத்ல ஸ்வாமியை பார்த்துட்டு வருவோம்”. சாதாரண வேஷ்டி, ஷர்ட், லேசான விபூதி கீற்று! கொஞ்சநாள் கழித்து, பஞ்சகச்சம், குடுமி வைத்துக் கொள்ள ஆரம்பித்து, நாட்கள் செல்ல செல்ல, அந்த அம்மாவை விட பெரியவா மேல் பித்தாகிப் போனார்.

வேலையை விட்டார். பெரியவா படத்தை வைத்துக் கொண்டு சதா பஜனை, தியானம் என்று பரம பக்தராக மாறிவிட்டார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால்…….

பெரியவா அன்று ஒரே ஒரு தடவை அவரை கடாக்ஷித்ததுதான்! அப்புறம் ஒரு வார்த்தை பேசக் கூட இல்லை!

மஹான்களின் திருஷ்டி பிரபாவம்!

source:::: http://www.periva.proboards.com

Read more: http://www.periva.proboards.com/thread/6148/#ixzz2pQAhGWuc

natarajan

“பணத்துக்காக எதையும் விடாதே …”

கும்பகோணம் ரங்கராஜ ஐயங்கார் (இன்றைய அஹோபில மட ஜீயங்கார் ஸ்வாமிகள்) 1971ம் வருடம் ரிக்வேதம் பயின்றதும் அதன் பின் வைதீகத் தொழிலில் தன் ஜீவனத்தை மேற்கொள்ளலாமென்று நினைத்ததும் சரிதான் என்றாலும் மஹாபெரியவா அதற்கான உத்தரவைத் தரவில்லை.

அந்த வைணவ அன்பர் 1968ம் ஆண்டிலிருந்தே மஹாபெரியவாளின் பக்தர்களில் ஒருவர். வைதீகத் தொழில் வேண்டாம் என்ற அவரிடம் மஹான் என்ன சொன்னார் தெரியுமா?

“நீ மேற்கொண்டு எல்லா வேதங்களையும் படிக்கணும். அதற்கு உபகாரம் செய்ய நான் ஏற்பாடு பண்றேன். நீ மேலே படி” என்று அன்புக் கட்டளை இட்ட மஹான், அவர் குடும்பம் நடத்த மாதம் ரூ.200/- கொடுக்க ஏற்பாடு செய்ததோடு நில்லாமல், சுயமாக அவரே தனது ஆகாரத்தை சமைத்து சாப்பிடும் உயர்ந்த வழக்கத்திற்கும் வழி செய்து அருளினார்.

ரங்கராஜ ஐயங்காரின் குடும்பமோ பெரியது. இவருடைய சகோதரிகளின் திருமணத்தையும் தமது கருணை உள்ளத்தால் பெரியவா நடத்தி வைத்தார்.

மஹான் பண்டரிபுரத்தில் இருந்தபோது ஐயங்கார் ஸ்வாமிகள் அங்கே சென்று அவரை நமஸ்கரித்தார். அப்போது மஹான் அவரிடம் கேட்டார்:

“நீ எனக்கு நமஸ்காரம் செய்யலாமா?”

அதற்கு ஐயங்கார் ஸ்வாமிகள் சொன்ன பதில்:
“எங்கள் சம்பிரதாயம் பிரகாரம் யக்ஞோபவீதம், சிகை இல்லாத சன்னியாசிகளை தரிசித்தாலே ஸ்நானம் செய்யணும்னு இருக்கு” என்றார்.

“அப்போ நீ ஏன் எனக்கு நமஸ்காரம் செய்யறே?”

“சாட்சாத் விஷ்ணு அம்சம்தான் இந்த ஜோதி ஸ்வரூபம் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று தன் வைணவப் பார்வைக்கு ஈஸ்வரரான மஹா பெரியவா அருளிய தரிசனத்தை மெய்சிலிர்ப்போடு கூறி மகிழ்ந்தார்.

இந்த பரம பக்தரான வைணவப் பெரியவருக்கு மஹானின் அருள், ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது.

இவரது குடும்பம் பெரியதென்றாலும் அதை நன்றாக நடத்திச் செல்லக்கூடிய அளவுக்கு வருமானமே இல்லை. சகோதரிகளின் திருமணம், தினசரி நடைமுறைகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க, இதர காரியங்கள் எல்லாவற்றிற்கும் பணம் தேவை. தொடர்ந்து வேதங்களைக் கற்றுக் கொள்ள இவர் முயற்சி செய்து கொண்டு இருந்தபோதுதான் 1978ம் வருடம் இவரை ஜெர்மனிக்கு வரச்சொல்லி ஒரு அன்பர் கேட்டுக் கொண்டார்.

“ஜெர்மனிக்குச் சென்றால் கை நிறையப் பணம். அதனால் குடும்பத்தின் வறுமை நீங்கும்” என்றெல்லாம் ஐயங்கார் ஸ்வாமிகளின் உள்ளத்தில் ஆசை தோன்ற ஆரம்பித்தது. மாத சம்பளம் மூவாயிரம். அத்துடன் திரும்பி வரும்போது கையில் மூன்று இலட்சம் பணம் தரப்படும் என வாக்குறுதி. இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் இருந்தால் தன் குடும்பம் ஒரு நல்ல நிலைமைக்கு வரும்” என்று நினைத்த ஐயங்கார் ஸ்வாமிகள் அழைப்பு விடுத்தவரிடம் வருவதாக ஒப்புக் கொண்டு ‘மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.

எல்லா ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து, அக்டோபர் 31ம் தேதி புறப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இவ்வளவு நடந்திருந்தும், இதுபற்றி இவரது கிராமத்தில் இருந்த தந்தையிடம் கூட சொல்லாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்தார். அவரிடம் சொல்லாமல் அயல் நாட்டிற்குப் போக முடியுமா? அக்டோபர் 27ம் தேதி கிராமத்திற்குப் போனார்.

தகவலைக் கேட்டவுடன், தந்தை ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்டார்.

“மஹாபெரியவா கிட்டே உத்தரவு வாங்கிட்டியோ?”

“இல்லேப்பா, மஹானிடம் சொன்னா அவர் உத்தரவு தருவாரோ மாட்டாரோங்கிற சந்தேகம் எனக்கிருக்கு. அப்படி அவர் உத்தரவு தரலைன்னா, இவ்வளவு வருமானத்தை விட்டுட மனசு கேட்காதே. அதனாலே தான் நானே முடிவு எடுத்துண்டு கிளம்பறேன். நமக்கோ பணத்தேவை அதிகம். எனக்கும் இதைத் தவிர வேறு வழி தெரியல்லேப்பா” என்றார்.

அன்றிரவு அவர் கிராமத்தில் தங்கி விட்டார். மன உளைச்சலில் அவர் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது, திடீரென அவர் முன் மஹான் தோன்றினார்.

மஹான், ஐயங்கார் ஸ்வாமிகளின் தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்துவிட்டு,
“நீ போகத்தான் போறாயா?” என்று ஏக்கத்தோடு கேட்பதாக ஐயங்கார் ஸ்வாமிகளுக்குத் தோன்றியது.

அது முழுமையான கனவுமல்லாமல், முழுமையான நினைவுமல்லாமல் தெரிந்ததில் இவருக்கு மஹா பெரியவா ஏதோ உத்தரவிடுவது போலத் தெரிந்தது. அதனால் மறுதினம் தாமதிக்காமல் மஹானைத் தரிசித்து அவரது அனுமதியைப் பெறக் கிளம்பிவிட்டார்.

அப்போது மஹான், கர்நாடகாவில் பதாமி என்னும் நகருக்கு அருகில் இருந்த வனசங்கரி என்னும் சிறுகிராமத்தில் முகாமிட்டிருந்தார்.

மஹானின் தரிசனத்திற்கு முன், ஐயங்கார் ஸ்நானம் செய்து கொண்டு இருந்தபோது, மடத்து சிப்பந்தி ஒருவர் வந்து இவரிடம், “உன்னை பெரியவா வரச்சொல்லி உத்தரவாகியிருக்கிறது” என்றார்.

தான் வந்திருப்பதையோ, வந்திருக்கும் நோக்கமோ யாருக்குமே தெரியாத நிலையில், மஹான் வரச் சொல்லியிருப்பது இவருக்கு அளவுகடந்த வியப்பைத் தர நேராக மஹானின் முன் நின்று தரிசித்தார்.

“எப்போ கிளம்பப் போறே?” என்று பெரியவா கேட்டதும், தரிசனம் முடிந்ததும் தன் ஊருக்கு எப்போது போகிறோம் என்பதைத்தான் மஹான் கேட்கிறார் என்று ஐயங்கார் ஸ்வாமிகள் நினைத்துத் “தரிசனம் முடிந்ததும் கிளம்புவதாக உத்தேசம்” என்றார்.

மஹான் லேசாகப் புன்முறுவலித்தவாறே,

“நீ ஊருக்குப் போறதே பத்தி நான் கேட்கலே, அசல் தேசம் போகணும்னு ஏற்பாடு செஞ்சுண்டிருக்கியே, அதைத் தான் கேட்டேன்” என்று மஹான் சொல்ல, ஐயங்கார் ஸ்வாமிகளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீள்வதற்குள், மஹான் தொடர்ந்து அதிர்ச்சிகளை அளித்தவாறு பேசலானார்:

“நீ இங்கு வந்த காரணத்தை நான் சொல்லவா? முந்தா நாள் நான் உன்னைத் தடவிக்கொடுத்து, ‘என்னை விட்டுப் போறயா?’ன்னு கேட்டேன்…. இல்லையா? அதனாலேதான் போகும்போது பார்த்துட்டுப் போகலாமுன்னு இங்கே வந்திருக்கே” என்றார். எப்பேற்பட்ட அதிசயத்தை மஹான் சர்வ சாதாரணமாகச் சொல்கிறார் என்று திகைத்துப் போய் நின்றார் ஐயங்கார் ஸ்வாமிகள்.

தன்னை கிராமத்துக்கு வந்து ஆட்கொண்டது பிரமை அல்ல என்பதை அறிந்த அவர் கண்களில் நீர் மல்க, மஹானின் பொற்பாதங்களில் வீழ்ந்தார். மஹான் அவரை ஆசீர்வதித்தவாறே சொன்னார்.

“உன் ஆசாரத்தை விடாமல் இரு. பணத்துக்காக எதையும் விடாதே. ஆசாரம் தான் முக்கியம். எங்கே போனாலும் அவரவர் ஆசாரத்தை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்” என்பது மஹானின் அருள்வாக்கு. ஐயங்கார் ஸ்வாமிகள் என்ன செய்திருப்பார் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்……..

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source:::: http://www.periva.proboards.com

natarajan

Read more: http://www.periva.proboards.com/thread/6155/extract-sri-venkatasamys-book-mahaperiyavaa?page=1&scrollTo=10832#ixzz2p9KEUzn9

” சர்க்கரை பாலில் கரைவது போல ….” !!!

 

மாமன்னன் போஜராஜனின் அரசவையில் ஒருசமயம் ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அவை நிரம்பி வழிந்தது. அப்படி ஒரு கூட்டம். அங்கு கற்றறிந்த பண்டிதர் ஒருவர் அரசவைக்குள் வர எண்ணினார். ஆனால், காலதாமதமாக வந்தார். வாயிற்காவலர் உள்ளே இடமில்லை என்று அவரைத் தடுத்தனர். “”நீ போய் அரசரிடம் அவரைக் கண்டு முக்கியமாக ஒன்றைப் பேச நான் வந்திருப்பதாய்ச் சொல்!” என்று கண்டிப்பாய்ச் சொல்கிறார் அவர். அவரின் எடுப்பான, களையான தோற்றத்தைக் கண்டு வாயிற்காவலன் அரசரிடம் சென்று “”நாங்கள் என்ன தடுத்தும் உங்களுடன் பேச வேண்டும் என்று பிடிவாதமாக ஒரு பண்டிதர் வெளியில் நிற்கிறார்” என்றான். அரசன் அந்த வாயிற்காவலனுடன் எதுவும் பேசவில்லை. ஒரு சேவகனை அழைத்து “”ஒரு கோப்பை நிறைய பாலை எடுத்துக்கொண்டு போய் அந்தப் பண்டிதரிடம் கொடு!” என்றான். அந்த சேவகனும் அவ்வாறே சென்று அந்தப் பண்டிதரிடம் பால் நிரம்பிய கோப்பையைக் கொடுத்தான்.

பால் கோப்பையைப் பார்த்த பண்டிதர் உடனே தன் தோளில் மாட்டியிருந்த ஜோல்னாப் பையைத் திறந்து அதனுள் இருந்த ஒரு பொட்டலத்தை எடுத்துப் பிரித்து அதிலிருந்த சர்க்கரையைப் பாலில் இட்டு அந்தக் கோப்பையை மீண்டும் மன்னரிடமே எடுத்துச் செல்லப் பணித்தார்.

பால் கோப்பை திரும்பி வந்ததைப் பார்த்த போஜராஜன் என்ன ஆயிற்று என்று வினவினான். “”அரசே.. அந்தப் பண்டிதர் எதுவும் பேசவில்லை. நீவிர் அனுப்பிய பால் கோப்பையைப் பார்த்ததும் தன் பையிலிருந்த ஒரு பொட்டலத்திலிருந்து சர்க்கரையை எடுத்து ஜாக்கிரதையாய்ப் பாலில் கலந்துவிட்டு உங்களிடம் கோப்பையைத் தரச் சொன்னார்!” என்றான் காவலாளி.

உடனே போஜராஜன் “”ஆஹா… என்னுடைய சபையில் இப்படிப்பட்டவர்தான் இருக்க வேண்டும். உடனே அவரை உள்ளே அழைத்து வாருங்கள்!”

என்று கட்டளையிட்டான்! அவையில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அரசன் பால் கோப்பையை வெளியே அனுப்ப அவர் சர்க்கரையைப் போட்டுத் திரும்ப உள்ளே அனுப்ப அரசர் அவரை உள்ளே அழைத்து வரச் சொன்னதைக் கேட்ட அவர்கள் அதன் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள விரும்பி துணிந்து அரசனிடமே கேட்டனர். அதற்கு போஜராஜன், “”அவையில் கூட்டம் முழுமையாக இருக்கிறது. உள்ளே இடமில்லை என்பதைத் தெரிவிக்கக் கோப்பை நிறையப் பாலை நிரப்பி அனுப்பினேன். ஆனால், அவரோ எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சர்க்கரை பாலில் கரைவதுபோல கூட்டத்தில் என்னைக் கரைத்துக் கொள்வேன். சர்க்கரையைப்போல என் தனித்துவத்தை எடுத்துவிட்டுச் சுற்றுப்புறத்தை இனிமையாக்குவேன். எந்த விஷயத்திலும் உட்புக மாட்டேன். பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட மாட்டேன். அப்படி நான் கரைந்து அந்தச் சூழலை  இனிமையாக்கும்போது நான் உள்ளே தாராளமாகச் செல்லலாமே என்று தெரிவித்தார் அந்தப் பண்டிதர்” என்று விளக்கினான்! (போஜராஜன் அவையில் அப்படிப்பட்ட பண்டிதருக்கு இடமில்லை என்று சொல்லலாமா?!)

“அமைதியை நோக்கி’ என்ற நூலில் இருந்து.

ஆங்கில மூலம்:  ஸ்வாமி முருகானந்த ஸரஸ்வதி

தமிழாக்கம்: காந்தலக்ஷ்மி சந்திரமவுலி.

source:::::dinamani tamil daily…Kadir

natarajan