படித்ததில் பிடித்தது …”.உன் இரண்டு சொட்டு கண்ணீர் எனக்கு போதும்” !!!

ஸ்ரீ குருவாயூரப்பனின் மகிமைகளை எடுத்துரைக்கும் ‘ஸ்ரீமத் நாராயணீயம்’ பாடிய நாராயண
பட்டதிரியை நாம் அறிவோம். நாராயண பட்டதிரியுடன் ஸ்ரீ குருவாயூரப்பன் நிகழ்த்திய
உரையாடல் மிகவும் சுவையானது, ரசிக்கத்தக்கது.
தம் முன் தோன்றிய ஸ்ரீகுருவாயூரப்பனிடம், பகவானே… நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனம்
என்ன?” என்று பட்டதிரி கேட்கிறார்.
நெய்ப் பாயசம்” – இது குருவாயூரப்பன்.
ஒருவேளை நெய்ப் பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால், நான் என்ன செய்வது?”
‘‘அவலும் வெல்லமும் போதுமே!”
‘‘சரி பகவானே… அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்க எனக்கு வசதி இல்லை என்றால்?”
‘‘வெண்ணெய், வாழைப்பழம், பால், தயிர் – இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடு. ஏற்றுக்
கொள்கிறேன்.”
‘‘மன்னிக்க வேண்டும் பகவானே… தற்போது தாங்கள் சொன்ன நான்கும் என்னிடம் இல்லை என்றால்?”
‘‘துளசி இலைகள் அல்லது ஒரு உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தரும்!”
‘‘அதுவும் என்னிடம் இல்லை என்றால்?” – பட்டதிரியின் குரல் தழைந்து போகிறது.
‘‘எனக்கு நைவேத்தியம் செய்து வைக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ
அழுவாய் அல்லவா… அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப்
போதும்” என்று பகவான் சொன்னதும், ‘ஓ’வென்று கதறி அழுதே விட்டார் பட்டதிரி.
தெய்வங்கள், தன் பக்தர்களிடம் எதையும் எதிர் பார்ப்பதில்லை

source:::::input from a friend of mine …

natarajan

படித்ததில் பிடித்தது …பணம் மட்டும் செல்வம் இல்லை !!!

மனதைத் தொட்ட வரிகள்!

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.
உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.
உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.
ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

சுயநலம் என்பது சிறு உலகம்.அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான.
வெற்றியின் ரகசியம் -எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.

நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை

நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

பறக்க விரும்புபவனால் படர முடியாது.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது.
ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவ தவறவிடுகிறோம்.

source:::::unknown… input from a friend of mine

natarajan

Message For The Day…Instead of Seeking Comforts Seek Wisdom..

The pleasure one gets from physical, mental and intellectual pursuits is transitory. Good deeds may grant heaven but it is a temporary habitation from where a person has to journey down to earth to live life again. This is akin to being elected to an important but short term public office. One may bask in the glory and fame during the term of office, thanks to the votes cast in one’s favour. However, once the term is over, one becomes an ordinary person again! The game now starts all over again by repeating popular slogans to become more popular and beg for votes to win the election. You must journey to reach the terminus where ignorance dies and wisdom is born, resulting in no more birth and death cycles. The mind is a fertile field for ignorance. Do not seek more and more comfort and convenience (sukham), instead, seek wisdom.

 Sathya Sai Baba

Message For The Day….Good Health..Both Physical&Mental Ensures One”s QualityLife …

People suffer from two types of ills – physical and mental. Physical ailments are caused by the dis-equilibrium of the three tempers of Vata, Pittha and Sleshma (air, bile and phlegm) and mental illnesses are caused by the dis-equilibrium of the three qualities of serenity, passion and inertia (Sattwa, Rajas and Tamas). One unique fact about these two types of illnesses is that the cultivation of virtue cures both the diseases. Physical health and mental health are interrelated. Physical health is a prerequisite for mental health and good mental health ensures physical well-being. An attitude of generosity, of fortitude in the presence of sorrow and loss, a spirit of enthusiasm to do good, and to be of service to the best of one’s capacity – these build up the mind as well as the body. The sheer joy derived from service reacts on the body and makes you free from diseases.

 

Sathya Sai Baba

Message For The Day….Path of Wisdom leads to Path of Devotion …

The path of wisdom is much easier than the path of devotion – for it comes as a flash to those who can just sit quiet for a few minutes and analyze themselves. A car moves on its four wheels and the person who drives it, is inside, not outside; the driver within the car guides the speed of the engine, the brakes and the accelerator. So too, let your intellect, mind and senses be guided, from within. Board the train of Salokya – the constant remembrance of the Lord’s Name. This will take you to the next station, Sameepya – nearness and dearness to the Lord. The next halt will be atSaarupya, where you acquire and earn divine attributes, and finally you will reach the terminus, which is Saayujya, where you merge with the divine and experience yourself as but a wave in the ocean (Paramatma).   

Sathya Sai Baba

 

படித்ததில் பிடித்தது …”பஸ்ஸில் செல்லுங்கள் …நடந்து செல்லுங்கள்” !!!

கௌஹாத்தி நகரின் விமான நிலையத்திலிருந்து சிறிது தூரம்தான் சென்றிருப்பேன். என்னுடைய வாகனத்தைத் தாண்டி செங்கொடிகள் காற்றில் வேகமாக அலைபாய போலீஸ் வாகனம் ஒன்று சென்றது. பின்னால் தொடர்ந்து வந்த வாகனங்களிலும் செங்கொடி தாங்கிய போலீஸார். “என்ன, அஸ்ஸாமில் புரட்சி வெடிக்கிறதா?” என்று நண்பரிடம் கேட்டேன். “இல்லை, கிருஷ்ணன். இது இங்குள்ள பெரிய புள்ளி ஒருவருக்கு செக்யூரிட்டி. அபாயச் சங்கோடு இந்தக் கொடிப் பழக்கமும் இங்கு உண்டு. புரட்சியை மழுங்கடிப்பதற்கான உத்தியாகவும் இருக்கலாம்.”

அன்று மாலை நண்பர் வீட்டில் ஒரு தேநீர் விருந்து. பெரிய புள்ளிகள் சிலர் வந்திருந்தனர். அவர்களைப் பாதுகாக்க வந்த காவலர்கள். ஒருவருக்கு 10 பேர் என்ற வீதத்தில் இருந்தார்கள். விருந்தை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டவர்கள் அவர்கள்தான்.

“சமோசாவைத் தேடுகிறீர்களா? கிடைக்காது. எங்கள் போலீஸ்காரர்களுக்கு அதன் மீது மாளாத காதல். ஒருவருக்குக் குறைந்தது ஐந்து சமோசாக்களாவது தேவை. அஸ்ஸாமில் தொந்தியை அறிமுகம் செய்ததே எங்கள் போலீஸ்காரர்கள்தான்.”

இது நடந்தது திங்கட்கிழமை. அக்டோபர் 7, 2013.

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அக்டோபர் மாதத்தில்தான் இரு அசாமிய முதல்வர்களைச் சந்தித்தேன். ஒருவர் சரத் சின்ஹா. ஏழு வருடங்கள் முதல்வராக இருந்தவர். பதவியைத் துறந்த அன்று கக்கத்தில் குடையை இடுக்கிக்கொண்டு பஸ் பிடித்து வீடு திரும்பினார் என்று சொல்கிறார்கள். அவருக்குப் பாதுகாப்பு என்றாலே வெறுப்பு. போகும் இடங்களுக்கெல்லாம் பஸ்ஸில்தான் சென்றுகொண்டிருந்தார். மற்றவர் ஹிதேஷ்வர் சைக்யா. அப்போது முதல்வராகவே இருந்தார். சந்திக்க நேரம் கேட்க அவரது அலுவலகத்துக்கு போன் செய்தேன். அவரே போனை எடுத்தார். அந்தரங்கச் செயலாளர் விடுப்பில் இருந்தாராம். நான் அவரைப் பல தடவை சந்தித்திருக்கிறேன். சைக்யா மீது உல்ஃபா தீவிரவாதிகள் குறிவைத்திருந்தார்கள். இருந்தாலும், அவரைச் சுற்றி அதிக பாதுகாவலர்களை நான் என்றுமே பார்த்ததில்லை.

50-களிலும் 60-களின் முற்பகுதியிலும் தமிழ்நாடும் வேறுவிதமாக இருந்தது.

எங்கள் மாவட்டத்தில் சங்கரன்கோவிலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் மஜீத் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது, என் தந்தையுடன் பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறார். பஸ் நிலையத்தில் என்னை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தது நன்றாக நினைவிருக்கிறது.

மற்றொரு சம்பவம் நாங்குநேரியில் நடந்தது. காமராஜர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்திருந்தார். எனது அத்தையின் வீட்டில்தான் காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது. நான் காமராஜரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு காத்துக்கொண்டிருந்தேன். இரவு 12 மணியளவில் பின்னால் ஒரு போலீஸ் வாகனம் தொடர, அழுக்கு ஜீப் ஒன்றில் வந்தார். தொண்டர் ஒருவர் அருகில் வந்து “ஐயா, இந்த வீட்டில் ஃப்ளஷ் அவுட் வசதியில்லை” என்றார். அவர் “நான் என்ன செய்யப்போறேன்? ஒண்ணுக்குதான இருக்கப்போறேன்” என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றுவிட்டார். அங்குதான் இரவைக் கழித்தார். கட்டில்கூட இல்லாத வீடு. காமராஜரும் பஸ்ஸில் பயணம் செய்யத் தயங்கியிருக்க மாட்டார்.

நாம் வெகுதூரம் வந்துவிட்டோம்.

அக்டோபர் 10 அன்று தில்லி திரும்பியதுமே கண்ணில் பட்டது வீரப்ப மொய்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் என்பதுதான். வாரம் ஒரு முறை பயணம் செய்வாராம். தொலைக் காட்சியில் ரயிலேறு படலத்தைப் பார்த்தபோது அவரைப் பரிவார தேவதைகள் சூழ்ந்திருந்தார்கள். வாராவாரம் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய மற்ற அமைச்சர்களும் நினைத்தால், இவர்களுக்காகத் தனி ரயில்தான் விட வேண்டும். இல்லையென்றால்,

பொதுமக்கள் பயணம் செய்ய முடியாது.

அமைச்சர் ரயிலைப் பயன்படுத்தியது செய்தியாக ஆனது, பொதுப் போக்குவரத்து நமது நாட்டில் எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இன்னும் சில ஆண்டுகளில், ‘அமைச்சர் சாலையில் காலைப் பதித்தார்’என்பது செய்தியாக ஆனால், வியப்படைவதற்கு ஒன்றுமே இருக்காது.

நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், உங்கள் ஊரில் இருக்கும் முக்கிய கடைத்தெரு ஒன்றில் வாகனங்கள் நிறுத்திவைத்திருக்கும் இடத்துக்குச் சென்று எத்தனை அரசு வாகனங்கள் நிற்கின்றன என்பதைக் கணக்கெடுங்கள். இந்தியாவின் எந்த ஊருக்குச் சென்றாலும், அங்கு மக்கள் பொருட்கள் வாங்கும் இடத்தில் ‘பஞ்சாயத்துத் தலைவர்’‘தாளாளர்’‘ஆய்வாளர்’போன்ற சிவப்புப் பின்புலத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பலகைகளைத் தாங்கிய வாகனங்களைப் பார்க்காமல் இருக்க முடியாது.

அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் தொழிற்துறையில் முன்னணியில் இருப்பவர்களும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தாவிட்டால், சாலைகளும் பொதுப் போக்குவரத்தும் முன்னேற்றம் அடைய முடியாது. ‘அச்சுறுத்தல்கள் இருக்கின்றன, அதனால் பாதுகாப்பு தேவை’ என்பது மிகச் சில அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மட்டுமே பொருந்தும். இதுபற்றி உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்று வாதாடப்பட்டுவருகிறது. வரப்போகும் தீர்ப்பினால் பரிவார தேவதைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்தத் தீர்ப்பு வந்தவுடன் அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் பொதுப் போக்குவரத்தைக் கூடுமானவரை பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய, மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும். அரசு வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட வேண்டும். நம்மைப் போன்றவர்களும் கார்களைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும்.

இந்தியச் சாலைகள் எரிபொருளில் இயங்கும் தனியார் வாகனங்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஆனால், அந்த எண்ணத்தில்தான் பலர் இயங்குகிறார்கள். தில்லியைப் பொறுத்த அளவில், கார்களைப் பயன்படுத்துபவர்கள் மக்கள்தொகையில் 10 சதவீதம் இருப்பார்கள். ஆனால், 90 சதவீதச் சாலைகளை ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள். சென்ற 10 ஆண்டுகளில் இத்தகைய வாகனங்கள் வருடத்துக்கு 13 சதவீதம் அதிகரித்திருக்கின்றன. ஆனால், சாலைகள் அதிகரிப்பு 1 சதவீதம். நடந்துபோனாலே செல்லுமிடத்துக்கு வேகமாகச் சென்றுவிடலாம் என்ற நிலைமை வருவதற்கு வெகு நாட்கள் இல்லை. கார்களை விட, நமக்கு அதிக தேவை பஸ்கள் என்ற புரிதல் ஏற்படுவதற்கும் நாம் வெகு நாட்கள் காத்திருக்க வேண்டாம். தமிழக அரசுக்கு இந்தப் புரிதல் இருக்கிறது. இந்தியாவிலேயே மிகத் திறமையாக இயங்கும் மிகச் சில பொதுப் போக்குவரத்து நிறுவனங்களில் சென்னையில் இயங்கும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஒன்றாக இருக்க வேண்டும்.

நாமும் அரசோடு ஒத்துழைக்க வேண்டும்.

கார்களில் செல்வதைக் கூடிய மட்டும் குறைத்துக்கொள்ளுங்கள். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள். முடியுமானால், சைக்கிளில் அல்லது நடந்து செல்லுங்கள். அமைச்சர்களும் அதிகாரிகளும் நம்கூட வர வேண்டும் என்பதை வலியுறுத்திக்கொண்டே இருங்கள்.

பி. ஏ. கிருஷ்ணன், எழுத்தாளர், பொதுத்துறை நிறுவன நிர்வாக இயக்குனர் (ஓய்வு), தொடர்புக்கு – tigerclaw@gmail.com

source ::::::The Hindu ….Tamil
natarajan

Message For The Day….Divine Songs are Precious Gems That will Lead you to Divine Path …

Every being seeks rest, but the dust of sense-craving accumulates on the mind producing rust and threatening to ‘burst’ it! To remove the rust in your mind, listen to soulful compositions from great saints like Tyagaraja. Lay aside your cynicism for a while and listen to the captivating tunes and imbibe their essence. The science of spiritual culture and of the control of the mind has been developed, practised and perfected by thousands, for over thousands of years. The culture of India has stood the shock of ages and the fury of typhoons, using these methods. Sing and listen to the compositions of great saints in their traditional forms. Do not consider these divine compositions as mere paatalu (songs), they are truly mootalu (bundles) of precious gems, that will lead you on the baatalu (path) to the Divine.

Sathya Sai Baba

 

 

 

Message For The Day….Atma is the Underlying Source of All the Bliss …

Just as underground water is the sustenance of all trees, the Atma is the underlying source of all the bliss that the individual experiences. The process of digging a borewell to bring the underground water to surface level involves steady hitting, digging, and thumping through a pipe which holds and directs the drill. The people who do the boring take a lot of care to ensure that air does not go into the pipe, for then the drilling process becomes unsuccessful. FInally through a lot of effort, you bring the subterranean water to the surface level for human consumption. So too, you must undertake the repetition of the Lord’s Name (Japam) very intensely taking care that you do not allow the attachment to worldly objects (Vishaya vasana) to enter and interfere with the process.

 Sathya Sai Baba

 

” அந்தக் கடைசி துளி நீர் ” ….

இதனைத் தலைப்பாக்கி ஓர் இணைய தளம், நச்சென்று நாம் எப்படி தண்ணீரைக் காப்பாற்ற வேண்டும் என ஒரு சில படங்களில் அறிவுறுத்துகிறது. இந்த தளம் பிரிட்டன் நாட்டு மக்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இயங்கினாலும், நீர் ஆதாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் இந்த உலகின் அனைத்து மக்களையும் பார்த்து நகைச்சுவை கலந்து, தகவல்களைத் தந்து எச்சரிக்கை செய்தியை வழங்குகிறது. இந்த அருமையான தளம் இயங்கும் முகவரி:http://everylastdrop.co.uk நம்முடன் தகவலைத் தந்து பேசும் இந்த தளத்தில் நுழைந்து, பின்னர், நாம் கீழாகச் செல்கையில், இதன் மேற்பகுதி மாறுகிறது. பகலாக இருப்பது இரவாகிறது. நமக்கு ஒரு செய்தி கிடைக்கிறது. ஒவ்வொரு நாளும், அன்றாட வாழ்க்கை முறையிலும், தொழிற்சாலைகளிலும், நாம் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறோம் என்று காட்டப்படுகிறது. நம் வாழ்வியல் முறைகளை மாற்றினால், எப்படி தண்ணீரை மிச்சப்படுத்தலாம் என்று காட்டப்படுகிறது. எடுத்துக் காட்டாக, நாம் வழக்கமாகக் குளிப்பதைக் காட்டிலும், ஷவர் மூலம் குளித்தால், எவ்வளவு தண்ணீரை மிச்சப்படுத்தலாம் என்று காட்டப்படுகிறது. அதே போல, ஆடைகளைத் தயாரிப்பதிலும், சாப்பிடும் முறைகளை மாற்றுவதிலும், மிச்சப்படுத்தும் தண்ணீரின் அளவு தெரிவிக்கப்படுகிறது. இதே திரையில் இன்னும் வேகமாக ஸ்குரோல் செய்து சென்றால், ஒன்றரை நிமிடம் இயங்கும் வீடியோ குறும்படம் காட்டப்படுகிறது. இதில் தண்ணீரை எவ்வாறெல்லாம் மிச்சப்படுத்தலாம் என்று பல தகவல்கள் தரப்படுகின்றன. இதை எல்லாம் பார்த்த பின்னர், ஒவ்வொருவரும் தண்ணீரை மிச்சப்படுத்தும் பல வழிகளைக் கடைப்பிடிப்பார்கள் என்பது உறுதி. பல் துலக்கும்போதும், துணிகளை சலவை செய்திடும்போதும் நிச்சயம் தண்ணீரைச் சிக்கனமாய்ச் செலவு செய்திட முயற்சிப்போம். இந்த அருமையான இணைய தளம் இயங்கும் முகவரி : http://everylastdrop.co.uk

Click Here

 source:::::computer malar from Dinamalar Tamil Daily

natarajan

Message For The Day….Way to Cleanse our Mind …Prayer and Devotion …

Prayer and contrition are the two disciplines by which the mind can be cleansed of egoism and hatred; Saint Tyagaraja was a fine example of how this can be done. His songs are pure fragrant blossoms of devotion. He sang soulfully the glory of Rama, with the welfare of the individual as well as the world in view. He was ever engaged in the process of examining his words and deeds, and evaluating them on the touchstone of devotion. As the bee in quest of honey wanders in search of the flowers, as the creeper clings fast and fondly to the tree lest it may fall, as the stream runs to the river and the river rushes to the sea, Saint Thyagaraja pined for Lord Rama. Lord Rama had to give him personal audience (Darshan) and come to his rescue several times. Through devotion,Tyagaraja ensured he experienced the Lord’s constant presence and always remained in peace and joy.

 

Sathya Sai Baba