படித்ததில் பிடித்தது …” பரிமளம் , மகனா ? மகளா ? ” !!!

1968-ஆம் ஆண்டு. முதலமைச்சராக அவையில் வீற்றிருக்கிறார் அறிஞர் அண்ணா. அப்போது நான் பொதுப்பணித்துறை அமைச்சர். மொழிப் பிரச்னை பற்றி வாக்குவாதம் நடக்கிறது. அவை உறுப்பினர் ம.பொ.சி. மீது எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன் ஒரு குற்றச்சாட்டு கூறினார். அதைத் தொடர்ந்து நடந்த விவாதத்தையும் அதை அண்ணா எவ்வாறு முடித்து வைத்தார்
என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
கருத்திருமன்: “”தமிழ்தான் என் உயிர். தமிழை ஆட்சி மொழி ஆக்கியதற்காக இந்த ஆட்சியைப் பாராட்டுகிறேன்” என்று ம.பொ.சி. சொன்னார். ஆனால் விவேகானந்தா கல்லூரியில் தன் மகனுக்கு ஆங்கிலப் படிப்பு வேண்டும் என்று கேட்டவர் அவர்.
ம.பொ.சி: எதிர்க்கட்சித் தலைவர், நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். என் பிள்ளை, உயர்நிலைப் பள்ளிப் படிப்புகூட முடித்ததில்லை. குற்றச்சாட்டை வாபஸ் பெற வேண்டும்.
கருத்திருமன்: எனக்கு வந்த தகவலைத்தான் சொன்னேன்.
அண்ணாதுரை: யார் மகனைப் பற்றி குறிப்பிடுகிறீர்களோ, அந்த தந்தையே தகவல் தவறு என்று கூறிவிட்ட பிறகு, தாங்கள் ஏற்றுக்கொள்ள என்ன தயக்கம்?
கருத்திருமன்: அவர் சிபாரிசு செய்த பிள்ளை என்றுதான் சொல்கிறேன். சொன்னது தவறென்றால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுப்பணித்துறை அமைச்சர் (நான்): எதிர்க்கட்சித் தலைவர் முதலில் ம.பொ.சி.யின் மகன் என்று குறிப்பிட்டார். இப்போது மகனில்லை; அவர் சிபாரிசு செய்த பிள்ளை என்கிறார்.
அண்ணாதுரை: தவறான தகவலை நம்பினால் என்ன ஆகும் என்பதற்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். என் மகன் பெயர் பரிமளம். நமது நண்பர் விநாயகம் ஒரு கூட்டத்தில் பேசும்போது, “அண்ணாதுரைக்கு பரிமளம் என்று ஒரு பெண் இருக்கிறாள்’ என்று குறிப்பிட்டு, அது பத்திரிகையிலும் வந்துவிட்டது. பிறகு ஒருநாள், விநாயகம் என் வீட்டுக்கு போன் செய்த போது, பரிமளம் பேசினான். “நீ யார்?’ என்று விநாயகம் கேட்க, “அண்ணாவின் மகன்’ என்று அவன் கூறினான். “அடடே! நீ ஆண் பிள்ளையா? பரிமளம் என்ற பெயரைப் பார்த்து பெண் என்று நினைத்துவிட்டேன்’ என்றார்.
முதலமைச்சர் அண்ணா இந்த நிகழ்ச்சியை விவரித்ததும் கருத்திருமன் எழுந்திருந்து, ம.பொ.சி. பற்றி தவறான தகவல் சொன்னதற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார். அண்ணா எடுத்துரைத்த சம்பவம், அவையை சிரிப்பில் ஆழ்த்தியதுடன் சூடாகத் தொடங்கிய வாக்கு வாதத்தை சுவையாகவும் மாற்றியது.
– “மலரும் நினைவுகள்’ புத்தகத்தில்  கலைஞர் கருணாநிதி .

source:::: Dinamani .Tamil Daily

natarajan

“OM ” Is Not Just A Mantra…But Also A Medicine…

Aum is medicine, not just mantra.

AumPramila Krishnan | Deccan Chronicle | Chennai::  Abdul Khader chants ‘Aum’ 30 times during his walk at Gill Nagar park every morning and swears it has significantly helped in healing his acute arthritic pain.

“I used to pray seated in a chair because of acute knee pain from arthritis acquired from long hours of doing business standing. Thanks to the yoga asanas, breathing exercises and the chanting of ‘Aum’, I am now able to kneel on the mat for my namaz five times a day,” said the 50-year-old grocer of MMDA colony in the city, talking excitedly about the wholesome healing experienced at the government yoga and naturopathy college hospital near Anna arch.

“When the doctors explained that chanting ‘Aum’ is not religious but provides therapeutic gain, I readily agreed to follow that. I am happy I did it,” Khader told Deccan Chronicle.

Dr Kanimozhi, assistant professor of yoga, says she had prescribed ‘Aum’ chanting for even cancer patients, along with other naturopathy medicines. “The chant controls the secretion of stress hormones and acts as a pain reliever. It is scientific as the chant creates a neuro and psycholinguist effect while a positive aura forms around your body when you do it.”

There are several patients at the hospital — including Muslims and Christians — who have benefited from chanting ‘Aum’, prescribed along with yoga asanas and nature healers, and gained relief from ailments such as pain, insomnia, stress, stuttering and other speech difficulties.

The case of 55-year-old Edwin, a senior army officer tormented by ankylosing spondylitis for over a year, is another example. He has healed from chanting ‘Aum’ and practising asanas and breathing exercises.

“Edwin’s case sheet reveals that after two months of practice, he could flex his joints and his sleep cycle got normal,” said Dr P. Prabhu, expressing happiness that more and more patients are turning to ‘Aum’ and other natural healers.

Courtesy: DC.
 source:::::input from a friend of mine ….
natarajan

Posted in Hindu HeritageHindu Scriptures and Hindu ResearchHindu way of Life | Tagged:  |

தீபாவளி பயணம் ….”அண்ணாச்சி நம்ம ஊரா ” ?!!!

பிறக்க ஒரு ஊர்; பிழைக்க ஒரு ஊர். இதுதான் நம் மக்களின் தலைவிதி’னு சிவாஜி பேசி நான் கேட்டப்ப, எனக்கு ரொம்ப சின்ன வயசு. அப்போ, ‘இதுல என்ன இருக்கு’னு தான் தோணுச்சு. ஆனா எங்க ஊரை விட்டுட்டு, சென்னைல வந்து வேலை பாக்குறப்போ தான், அது எவ்வளவு கஷ்டமான விஷயம்னு புரியுது.

மானேஜர் கால்ல கைல விழுந்து, ஒரு மாசத்துக்கு முன்னாடி இருந்து ஐஸ் வெச்சு, ஊரைப்பத்தி பதிவெல்லாம் போட்டு, அதை அப்படியே அகஸ்மாத்தா அவருக்கு அனுப்பி, படிக்க வைச்சு, தீபாவளிக்கு ‘லீவ்’ வாங்குறத பத்தி மட்டுமே தனியா ஒரு மெகா சீரியல் எடுக்கலாம்.இப்படி லீவ் எல்லாம் வாங்கிட்டு, எத்தனை ‘பேன்’ வைச்சாலும் காத்தே வராத, மூலையில இருக்குற கோயம்பேடு ‘முன்பதிவு’ மையத்துல, எப்படியோ டிக்கெட் ‘புக்’ பண்ணிட்டேன்.தீபாவளிக்கு முந்தின நாள், அரக்கப் பரக்க தி.நகர்ல சுத்தி, சொந்தக்காரன் பங்காளிக்கெல்லாம் துணி எடுத்து; அடையார் ஆனந்தபவன்ல சண்டை போட்டு ஒரு கிலோ காரம், ஒரு கிலோ இனிப்பு வாங்கிட்டு; எட்டு மணி பஸ்சுக்கு ஏழரை மணிக்கே பெருங்களத்தூர்ல வந்து நின்னாச்சு.நம்ம ஆட்களுக்குன்னு இது அமையுதா, இல்லை……
”அண்ணாச்சி! நம்ம ஊரா?”
“நீங்க எந்த ஊரு?”
“மேலச்செவலு. நீங்க?”
“நமக்கு பாளையங்கோட்டை.”
“சரி அண்ணாச்சி, ஊருக்கு இனிப்பு ஒண்ணும் வாங்கல கேட்டியளா. ஒரு நிமிசம் நம்ம பொட்டிய பாத்துக்கிட்டீங்கன்னா, ஓடிப்போயிட்டு ஓடியாந்துருவேன்”
சொந்த ஊர்ல இருக்கும்போது ஒருத்தன ஒருத்தன் கண்கொண்டு பாக்கோமோ இல்லையோ, இந்த மாதிரி சமயத்துல பாசம் பொங்கிரும் நமக்கும்.
”அதுக்கென்னா… போயிட்டு வாங்க”னு, அனுப்பி வைச்சேன். போனவன் ரொம்ப நேரமா வரவேயில்ல. அவன் பொட்டியெல்லாம் பாத்தா, சென்னைய காலி பண்ணிட்டு போற மாதிரி இருந்தது.
ஒருவேளை பஸ் வந்துட்டா என்ன பண்ணுற துங்கற யோசனைல இருக்கும்போதே, ஓடியாறென்னு சொன்னவன், கால்ல எட்டு போட்டுக்கிட்டு வுந்தான்.
“இனிப்பு எங்கவே?”
“அந்த கடைக்கு முன்னால நம்ம கடை இருந்ததுல்லா”னு கேவலமா சிரிச்சான்.
பயங்கர குடி. என்ன கருமத்த குடிச்சுத் தொலைச்சானோ தெரியலை, ஆனா அது, என் கொடல தான் பொரட்டி எடுத்துச்சு.
“இந்தாரும் உம்ம பொட்டி. இனிமே எங்கேயும் போவாதேயும். என்னால பாக்க முடியாது”
“அண்ணாச்சி சாப்பிடுவியளா?” கைப் பெருவிரலை வாய்க்கு காமிச்சு கேட்டான்.
“இல்லை அண்ணாச்சி”
“ஐயோ உங்களுக்கும் சேத்துல்லா வாங்கிட்டேன். தீவாளிக்கு கூட இருக்குறவங்களுக்கு இது கூட செய்யலைனா எப்படி?”
“அய்யோ. எனக்கு பழக்கமில்லை. உங்க அன்புக்கு…நன்றி.” இவங்கிட்ட இருந்து எப்படி தப்பிக்க?
மணி எட்டாச்சு, எட்டரையாச்சு. வண்டி வந்தபாடில்ல.
‘சரி, தீவாளி நேரம், சென்னைக்குள்ள கூட்டமா இருக்கும் அதான் லேட்டாகுது’னு நின்னுகிட்டிருந்த எனக்கு, ரொம்ப கோவமாயிருச்சு.
மணி 10! ஆனா பஸ் வர்றதுக்கு எந்த அறியையும் காணோம், குறியையும் காணோம்.
ஒன்பது மணி பஸ்சுக்கு போறவங்க, பத்து மணி பஸ்சுக்கு வந்தவுங்கனு நிக்க எடமில்லை. நிக்க எடமில்லாதவன் எல்லாம் ‘டாஸ்மாக்’ல போய் உட்காந்துட்டானுவ.
நானாவது ‘நான் – ஏசி’ பஸ். ‘ஏசி’ பஸ்ல போறவன் எல்லாம் செத்தான். காலைல மப்புலதான் போய் எறங்கணும்.
அரசு பஸ் தான் லேட்டுனு பாத்தா, ஆம்னி பஸ்சுக்கும் இதே நிலைமைதான்.சில ஆம்னி பஸ்ல எல்லாம் டிக்கெட் குடுக்கும்போது, டிரைவர் ‘போன் நம்பரோ’, கண்டக்டர் ‘நம்பரோ’ சேத்தே குடுக்கறாவ. அது மட்டுமில்லாம நம்ம ‘பாயிண்டுக்கு’ வண்டி வாறதுக்கு முன்னால ஒரு ‘மெசேஜ்’ கூட வரும்.ஆனா, அரசு பஸ் எங்க நிக்குதுன்னு யாருக்குமே தெரியாது. நம்ம மேலச்செவல்காரரு, எனக்குனு வாங்கினதையும் குடிச்சிட்டு, பயங்கர கொசுக்கடிலயும் சிரிச்சுட்டே நின்னாப்புல.மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, நாஞ்சில் நாடுன்னு நம்ம பக்க தமிழெல்லாம் எதிரொலிக்கிறப்பத் தான், “எல்லா தீவாளி வண்டியும் பை-பாஸ்லயே நிறுத்திட்டானாம்யா. கோயம்பேட்டுல இருக்குறவனுக்கே வண்டி வல்லயாம்”னு, ஒருத்தன் சொன்னான்.
நாசமா போச்சு. பெருங்களத்தூர் பஸ் ஸ்டாப் கட்டணக் கழிப்பிடத்துல தான் தீவாளிக் குளியலைப் போடணும்னு தலையில எழுதி இருந்தா என்ன பண்ண முடியும்?
அடப்போங்க… குளியல் என்ன, கூடி நின்ன கூட்டத்தால, ஒண்ணுக்குக் கூட இருக்க முடியாத நெலம! ‘டாஸ்மாக்குல’ பத்து மணிக்கு முன்னாடி போய், ரெண்டு பீர் குடிச்சவன் எல்லாம் என்ன பண்ணனும்னு தெரியாம தவிச்சுட்டானுவ. கண்ணுல மரண பீதி.கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் கூட இல்ல. பொம்பளையாள் இருக்குற எடத்துல முக்கால்வாசி பயலுவ குடிச்சிருந்தானுவோ, எதுனா எக்குத் தப்பு நடந்தா பாக்கக் கூட யாருமில்ல. ஒரு வேளை தப்பைத் தட்டிக் கேக்க நம்ம இங்க இருக்கோம்னு அவிங்களுக்கு தெரிஞ்சிருக்கோ என்னமோ!
ஒருவழியா, 12 மணி வாக்குல பஸ் வந்து, நின்னப்போ மேலச்சேவல் நல்ல தூக்கம். ‘சரி ஊர்க்காரனாச்சே’னு ஏத்தி விட்டா, ‘கண்டக்டர்’கிட்ட அப்பத்தான் டிக்கெட் வாங்க துட்டை நீட்டுறான்! கண்டக்டரு, என்னல்லாம் வைய்ய முடியுமோ வைஞ்சிட்டு, டிரைவருக்கு பின்னாடி இருந்த ஒரு எடத்துல உட்கார வெச்சுட்டார்.

‘நல்ல வேளை, இவன் எனக்குப் பக்கத்துல இருக்குற சீட்டுக்கு வரலை’னு சந்தோஷமா போய் பார்த்தா, எனக்குப் பக்கத்துல அவனையும்விட மொரட்டுக் குடிகாரன் ஒருத்தன்! தலையெழுத்து.’12 மணிக்கு வந்தாலும், நாலு மணிக்குள்ள ஊரு போய்ச் சேர்ந்துருவேன்’ங்கற வெறியில நம்ம டிரைவர் ஓட்டினாரு பாருங்க…பஸ்ல குடிச்சிருந்த அத்தனை பேரும், ரெண்டு வாரத்துக்கு முன்னாடி சாப்பிட்டது வரைக்கும் வாந்தி எடுத்துட்டாங்க.அதுலயும் நம்ம முன்சீட்காரர், டிரைவர் முதுகுலயே வாந்தி எடுத்து, அதனால வண்டி ஒரு அஞ்சு நிமிஷம் நின்னு கெளம்பிச்சு.இதெல்லாம் தாண்டி, காலைல 11 மணிக்கு வீட்டுக்கு வந்தப்போ, சொந்தக்காரன், பங்காளினு எல்லா பயலும் படத்துக்கு போயிட்டானுவோ. ச்ேச… இவ்வளவு கஷ்டப்பட்டு வந்து, என்னத்தக் கண்டோம்?காலைல எண்ணெய் தேச்சுக் குளிக்க, பட்டாசு வெடிக்க எல்லாம் பாக்கியமே இல்லாம, பட்டணத்து வாழ்க்கைக்கு திரும்புறதுக்கு, தீவாளி முடிஞ்ச அடுத்த நாளே பஸ்சுக்கு வந்து நின்னேன்.
“பாஸ்! சென்னைல எங்க?”
“அம்பத்தூர்.”
“ஒரு அஞ்சு நிமிசம் நம்ம பைய பாத்துகிடுதியளா? இந்தா வந்திருதேன்…”
“நான் ஊருக்கே போகலைடா!!”

source::: Dinamalar…Tamil Daily

natarajan

“வேர் என நீ இருந்தாய் …வீழ்ந்து விடாது இருந்தேன் நான் ” …

நடக்க முடியாத கணவனை சக்கரம் பொருத்திய பலகையில் அமரவைத்து இழுத்துச் செல்லும் பழனியம்மாள். (கோப்புப்படம்)

நடக்க முடியாத கணவனை சக்கரம் பொருத்திய பலகையில் அமரவைத்து இழுத்துச் செல்லும் பழனியம்மாள். (கோப்புப்படம்)

நான்கு மணி நேரத்தில் காதல், நான்கு நாட்கள் டேட்டிங், நாற்பது நாட்களுக்குள் திருமணம், 4 மாதங்களுக்குள் விவாகரத்து என ‘நவீன’ காதல், பல பரிமாணங்கள் அடைந்திருப்பதை பல சம்பவங்கள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றன. ஆனால், காதல் திருமணம் செய்த கணவன் போலியோவால் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாத நிலையில், 40 ஆண்டுகளாக சக்கரம் பொருத்திய பலகையில் அமர வைத்து, ஊர்சுற்றி பிச்சையெடுத்து அவரைக் காப்பாற்றிய ஈரோட்டைச் சேர்ந்த அதிசயப் பிறவி பழனியம்மாள் தற்போது பரிதவித்துப் போய் இருக்கிறார்.

இதுநாள்வரை தனக்கு துணையாக இருந்த ஆசைக்கணவனின் திடீர் மறைவுதான் பரிதவிப்புக்குக் காரணம். ஒரு பெண்ணின் வைராக்கியம் என்னவெல்லாம் சாதிக்கும் என்பதற்கு மவுசி என்று அழைக்கப்படும் பழனியம்மாளின் வாழ்க்கை ஒரு உதாரணம்.

கண்டதும் காதல்…

ஈரோட்டை அடுத்த எல்லப்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் போலியோவால் பாதிக்கப்பட்டு, சிறு வயது முதல் நடக்க முடியாத நிலையில் இருந்தார். இவர் மீது, அதே பகுதியைச் சேர்ந்த பழனியம்மாளுக்கு இரக்கத்தினால் உருவானது காதல். ஆனால், இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, எதிர்ப்பை மீறி காதல் மணம் புரிந்தனர் இந்த தம்பதி. கால்கள் ஊனமுற்றதால் எந்த வேலைக்கும் செல்ல முடியாத கணவன், அவரைத் தனியே விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்ல முடியாத நிலை. இந்த காரணங்களால், கணவன் அமரும் வகையில், சக்கரம் பொருத்திய பலகையை தயார் செய்து, அதில் அவரை அமர வைத்து, பிச்சைப்பாத்திரம் ஏந்தினார் பழனியம்மாள்.

தத்தெடுப்பு

தங்களுக்கு குழந்தை யில்லை என்ற குறை யைப் போக்க, இரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்து, அவர்களை யும் வளர்த்து ஆளாக்கியது பழனியம்மா ளின் மனோதிடம். குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்குத் திருமணம் செய்துவைப்பது வரை, குறையேது மில்லாமல் நடத்தி வைத்தனர் இந்த பாசக்கார தம்பதி.

தாங்கள் வளர்த்த குழந்தைகள், குடும்பத்தோடு வெவ்வேறு பகுதிகளில் குடியேறினாலும், அவர்களோடு ஒண்டிப்பிழைக்க இவர்களின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. இதனால், சக்கர வண்டியில் கணவனை இழுத்தபடியே, பழனியம்மாளின் பயணம் தொடர்ந்து வந்தது. இந்த பாசத் தம்பதியைப் பார்க்கும் ஒவ்வொருவரும் வியப்பும், ஏக்கமும் அடைவது வாடிக்கை. யார் கண்பட்டதோ, கடந்த வாரம் ஆறுமுகம் உடல்நலக்குறைவால் இறந்து போனார். அவர் பாசமாக வளர்த்த குழந்தைகள், தகவல் கேட்டு பதறியடித்தபடி வந்து, தங்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகளை நடத்தினர்.

‘ஆலம் விழுதுகள் போல், உறவு கள் ஆயிரம் இருந்துமென்ன… வேரென நீ இருந்தாய்… நான் வீழ்ந்து விடாதிருந்தேன்’ என்ற பாடல் வரிகளைப் போல், இதுநாள்வரைத் தனக்கு சுகமான சுமையாய் இருந்த கணவன், தன்னை விட்டுப்பிரிந்த சோகத்தில் தவித்துப் போய் இருக்கிறார் பழனியம்மாள்.

முதியோர் உதவித் தொகை வேண்டி…

இருந்தும், யாரின் துணையுமின்றி தன் சொந்தக்காலில் நின்றிட வேண்டுமென்பதற்காக, முதியோர் உதவித்தொகை வேண்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்திருக்கிறார் அவர். பாசம், பதிபக்தி, வைராக்கியம், மனோதிடம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, மனிதநேயம் என என்னென்ன நல்ல குணங்கள் இருக்க வேண்டுமோ, அவையனைத்தையும் தன் வாழ்நாளில் கடைபிடித்த பழனியம்மாளுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல. அனைவரின் கடமையும்கூட.

source:::::  Story by Govindarajan in The Hindu….Tamil
natarajan

படித்ததில் பிடித்தது …இந்த நாளின் பெயர் தேன்சிட்டு !!!

ஆண் தேன் சிட்டு

காலையில் நாம் கண்விழிக்கும்போது அற்புதமான பாடல் ஒன்றைக் கேட்டால் எப்படி இருக்கும்?

கல்லூரி நாட்களில் இளையராஜாவின் ஏதாவதொரு பாடலைக் காலையில் கேட்டுவிட்டுக் கல்லூரிக்குச் செல்வது வழக்கம். அந்த நாள் முழுவதும் காதுக்குள்ளே அந்தப் பாடலின் நாதம் ஓடிக்கொண்டேயிருக்கும். அப்படித்தான் ஏதோ ஒரு நாளில் கண் விழிக்கும்போது பறவைகளின் குரலுக்குப் பழகினேன். ஏதாவது ஒரு பறவையின் குரல் என்னை எழுப்பும். முதல் தடவை நான் எழுந்தது அக்காக்குயிலின் கூவலுக்கு. அதிகாலையில் இடைவிடாமல் “அக்கா அக்கா அக்கா அக்கா அக்கக்கக்கா… பிரெய்ன் பீவர் பிரெயின் பீவர்” என்று கத்திக்கொண்டிருந்தது. தொலைவிலிருந்து கத்தினாலும் அதிகாலையில் அதன் குரல் மிகவும் துல்லியமாகக் கேட்டது. உடனே, கைபேசியில் அதன் கூவலைப் பதிவுசெய்துகொண்டேன். தொடர்ந்து வந்த நாட்களில் அக்காக்குயில் நள்ளிரவிலோ அதிகாலையிலோ பகலிலோ என்று எல்லா நேரங்களிலும் கூவுவதைக் கேட்க முடிந்தது. அது தூங்குமா இல்லையா என்று வியப்பாக இருந்தது. பிறகு, பதிவுசெய்வதை விட்டுவிட்டு, உற்றுக்கேட்பதில் மட்டும் ஈடுபட்டேன்.

பெயரறியாப் பறவையின் அழைப்பு

அதன் பிறகு, பெயரறியாப் பறவையொன்று என்னை எழுப்ப ஆரம்பித்தது. ஆங்கிலத்தில் ‘மேக்பை-ராபின்’என்று அதன் பெயரைப் பிறகு தெரிந்துகொண்டேன். எங்கும் பரவலாகக் காணப்படும் இந்தப் பறவைக்குத் தமிழில் என்ன பெயர் என்று நான் பல புத்தகங்களில் தேடிப்பார்த்தும் பலரிடமும் கேட்டும் பலனில்லை. பிற்பாடு தியடோர் பாஸ்கரனிடம் கேட்டபோது, சில இடங்களில் அந்தப் பறவையை சுப்பிரமணிக்குருவி என்று அழைப்பார்கள் என்று சொன்னார். நான் என்னுடைய கவிதைத் தொகுப்பில் சோலைப்பாடி என்ற பெயரை இதற்குக் கொடுத்திருந்தேன். ஆனால், சோலைப்பாடி என்ற பெயர் உண்மையில் ஷாமா என்ற பறவையினத்தின் தமிழ்ப் பெயர் என்று தியடோர் பாஸ்கரன் சொன்னார். அதனால், ஒரு வசதிக்காக மேக்பை-ராபினை நான் ‘காலைப்பாடி’என்ற பெயரில், அதாவது நான் வைத்த பெயரில் அழைக்கிறேன். காலை சரியாக 5.25-க்குக் காலைப்பாடி எழுப்பிவிடும். அதற்கு விதவிதமான சத்தங்கள் உண்டு. அதன் சத்தத்தை நானும் என் அக்காவின் குழந்தையும் பறவையின் ராகத்தோடு இப்படி ஒலிபெயர்ப்போம்: “பால்காரர் வந்தாச்சு எழுந்திரிடி… பால்காரர் வந்தாச்சு எழுந்திரிடி… கதவத் திறந்திரடி…”

பால்காரர் வரும் நேரத்துக்கு அந்தப் பறவை கத்துவதோடு நாங்கள் இயற்றிய வரியோடும் அதன் ஒலி பொருந்திப்போகிறது. அப்போது எழுந்திருக்கவில்லையென்றால், சற்று நேரத்தில் தையல்சிட்டு வந்து “ட்டுவ்வி ட்டுவ்வி ட்டுவ்வி” என்றும் வேறு சில விதங்களிலும் சத்தம்போட ஆரம்பித்துவிடுவார். அப்போதும் எழுந்திரிக்கவில்லை என்றால், சற்று நேரத்தில் தேன்சிட்டுக்கள், தவிட்டுக்குருவிகளின் பட்டாளம்,கொண்டைக்குருவிகள் எல்லாம் வந்து இரைச்சல் போட ஆரம்பித்துவிடும். அப்போதும் எழுந்திருக்கவில்லை என்றால், அந்த நாளை நான் இழந்துவிட்டேன் என்று பொருள்.

ஒரு நாள் எப்படி இரண்டு நாள்?

யாரோ சொல்லி எங்கோ படித்த ஞாபகம்: “நீங்கள் அதிகாலையில் எழுந்தால் உங்களுக்கு அன்று கிடைப்பது இரண்டு நாள்.”

அது உண்மைதான் என்பதை என் அனுபவத்தில் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பறவைகள் அதிகாலையில்தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அந்தச் சமயத்தில் பலவிதமான ஒலிகளையும் எழுப்பும். மனிதச் சத்தங்களும் இயந்திரங்கள், வாகனங்கள் போன்றவற்றின் சத்தங்களும் இல்லாத சமயம் என்பதால், பறவைகளின் ஒலி மட்டும்தான் அப்போது கேட்கும். அதுவும் துல்லியமாகவும் ஏதோ கச்சேரி நடப்பதுபோன்றும் கேட்கும். அந்தத் தருணத்தில் விழித்துக்கொண்டால் மட்டுமே அந்த நாளை நாம் காப்பாற்ற முடியும்.

பறக்கும் நாட்கள்

ஒருமுறை பக்கத்துவீட்டுச் சின்னப் பையனுடன் பறவை பார்த்தலுக்குச் சென்றிருந்தேன். எதையோ நினைத்துக்கொண்டிருந்த நான் அவனிடம், “இன்னைக்கு என்ன கிழமை?” என்று கேட்டேன். பறவை பார்ப்பதில் மும்முரமாக இருந்த அவன் “தேன்சிட்டு” என்றான். ஒரு கணம் என்ன என்று வியப்பில் பார்த்துவிட்டு அதற்கப்புறம் யோசித்தேன். அவன் சொல்வது ஏன் உண்மையாக இருக்கக் கூடாது? இந்த நாளின் பெயர் தேன்சிட்டு என்று இருந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும். அடுத்த நாள் கொண்டலாத்திக் கிழமை, அதுக்கு அடுத்த நாள், குக்குறுவான் கிழமை, அப்புறம் மரங்கொத்திக் கிழமை. கிழமைகளுக்குப் பறவைகளின் பெயர்களை ஏன் சூட்டக் கூடாது? உலகில் நமக்குத் தெரிந்தவரை பல மொழிகளிலும் சமுதாயங்களிலும் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் பெயரைத்தான் கிழமைகளுக்குச் சூட்டுகிறார்கள். எந்த மொழியிலாவது கிழமைகளுக்குப் பறவைகளின் பெயர்கள் சூட்டியிருக்கிறார்களா என்று தேடிப்பார்க்க வேண்டும். குறைந்தபட்சம் ஏதாவது பழங்குடிகளின் மொழியிலாவது அப்படி இல்லாமலா இருக்கும்?

சொல்லப்போனால், பறவைகளுக்கும் நாட்களுக்கும் நிறைய ஒற்றுமை. நாட்களே பறவைகள்தானே? நாள் கணக்கில், மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில், யுகக் கணக்கில் நாட்கள் வருகின்றன போகின்றன, வலசை வரும் பறவைகளைப் போல. எங்கிருந்து வருகின்றன; எங்கு செல்கின்றன? தேன்சிட்டு, தேனை உறிஞ்சுவதுபோல நாட்களெல்லாம் நம் ஆயுளைக் கொஞ்சம்கொஞ்சமாக உறிஞ்சிக்கொண்டிருக்கின்றன. மரங்கொத்தி மரத்தைக் கொத்துவதுபோல் நாட்கள் நம்மைக் கொத்துகின்றன. மீன்கொத்தி மீனைப் பிடித்துச்செல்வதுபோல நாட்கள் ஒரு நாள் நம்மைப் பிடித்துச் செல்கின்றன. அதே நேரத்தில், குயிலின் பாடலைப் போல இனிமையான நாட்களும் இருக்கின்றன. மயில்தோகைபோல மகிழ்ச்சியாக விரியும் நாட்களும் இருக்கின்றன. ஆந்தைபோல அப்படியே அசையாமல் இருக்கும் நாட்களும் இருக்கின்றன. ஒரே மாதிரி எந்த இரண்டு பறவையும் கிடையாது, ஒரே மாதிரி எந்த இரண்டு நாட்களும் கிடையாது. சில மதங்களில் காலத்தைப் பறவையாக உருவகித்துக் காலப்பறவை என்று சொல்வதுண்டு. நாம் சாதாரணமாகப் பேசும்போதும் எழுதும்போதும்கூட “நாட்களெல்லாம் பறந்தோடிவிட்டன” என்று சொல்வது வழக்கம்.

இன்றைய நாளை, தேன்சிட்டு நாளாக நான் அறிவிக்கிறேன். நான் இப்படி அறிவிக்கும்போது என் வீட்டுத் தோட்டத்தில் தேன்சிட்டின் கூடொன்று சுவரில் மாட்டிய நாள்காட்டிபோல் அசைவதைப் பார்க்கிறேன். அதன் உள்ளிருந்து எட்டிப்பார்க்கிறது குஞ்சுத் தேன்சிட்டு, காற்றில் சலசலக்கும் நாள்காட்டியிலிருந்து எட்டிப்பார்க்கும் அடுத்த நாளைப் போல.

ஆசை – தொடர்புக்கு: asaidp@gmail.com

source::::The Hindu….Tamil
natarajanபடித்ததில்

சென்னையில் உணவுக்கு ஒரு ஆலயம் !!!

எத்தனையோ தெய்வங்களுக்கு ஆலயங்கள், இந்த நாட்டில் உள்ளன. ஆனால், சென்னையில், உணவுக்கு ஒரு ஆலயம் உள்ளது.சென்னை, பெரம்பூரில், அருள்ஜோதி அன்ன ஆலயம், கடந்த 18 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு, காலை, மதியம், இரவு என, மூன்று வேளையும், பசி என்று வருவோருக்கு, இல்லை என்று சொல்லாமல், உணவளித்து வருகிறார் சதீஷ்ராஜ் ‘அடிகளார்’,

 

1995ல் இருந்து…:

கடந்த 1995ல், வீட்டிலேயே, சொந்த செலவில், அன்னதான பணியை சதீஷ்ராஜ் துவங்கினார். பின், நன்கொடையாளர்கள் வழங்கிய அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் அளவு அதிகரிக்க, 1999ல், கென்னடி சதுக்க பிரதான சாலையில் தனியே அன்னதானக் கூடம் அமைத்தார்.இங்கு, தற்போது, மூன்று வேளையும் அன்னதானம் நடந்து வருகிறது. இதுதவிர, தினமும், 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகளில், உரிய அனுமதி மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் மாணவ, மாணவியருக்கு, காலை உணவாக, அரிசி கஞ்சி வழங்கி வருகிறார்.ஆலய அன்னதானத்திலும், இந்த உணவு ஆலயம் பங்கேற்கிறது. சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கோவில்களில், சுழற்சி முறையில், மதிய சாப்பாடு, அன்ன ஆலயத்தில் இருந்து அனுப்பப்படுகிறது.இந்த வகையில், தினமும், ஏறத்தாழ 5,000 பேர், அருள்ஜோதி அன்ன ஆலயம் மூலம் பசியாறி வருகின்றனர்.

வேதாத்திரி மகரிஷி:

அன்ன ஆலயம் அமைத்தது குறித்து சதீஷ்ராஜிடம் கேட்ட போது, ”என்னை விளம்பரப்படுத்தும் வகையில் நான் எதுவும் கூறமாட்டேன். இருந்தாலும், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கிறேன்,” என்றபடி, பதிலளிக்க துவங்கினார்.”ஆரம்பத்தில் நானும் சாதாரணமாக வேலை, வீடு என்று சென்று கொண்டுஇருந்தேன். ஒருநாள் மனிதனாய் பிறந்த நாம், ஏதாவது சேவை செய்ய வேண்டும் என எண்ணி, அன்னதானம் செய்ய துவங்கினேன். வேதாத்திரி மகரிஷி மீதிருந்த பற்றால், பின்னாளில் சேவையே வாழ்க்கையாகி விட்டது. ஆரம்பத்தில் சொந்த செலவில் நடந்த அன்ன ஆலயப் பணிகள், இப்போது பொதுமக்களின் நன்கொடை மூலம் குறைவில்லாமல் நடைபெறுகின்றன,” என்றார் அவர்.அன்னதானம் தான், அறங்களில் தலை யானது என்ற அவர், ”முன்பின் அறியாத, தொடர்பே இல்லாத ஒருவர் தரும் அன்னதானம், எங்கோ ஒருவரின் வயிற்றுப் பசியை போக்குகிறது. அவரது வாய் வாழ்த்தா விட்டாலும், அவரது பசியாறிய உணர்வு, தானமளித்தவர்களை மனதார வாழ்த்தும்,” என்றார்.

‘மக்களால் நடக்கிறது’:

”பொதுமக்கள் தரும் நன்கொடையை நாங்கள் பணியாட்களை அனுப்பி வாங்கு வோம். தற்போது, பலரது நன்கொடையை நேரில் சென்று பெற முடியாத அளவுக்கு, நன்கொடைகள் குவிகின்றன. இந்த அன்னதானப் பணியில் நான் வெறும் கருவி மட்டுமே. மக்கள் தான் இதை நடத்துகின்றனர்,” என, நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.அருள்ஜோதி அன்ன ஆலயத்தில் தொடர்ந்து ஆறு மாதத்திற்கு மேல் ஒருவரை காண முடியாது. அதன் பின், அவர் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டிருப்பார் என, உறுதியுடன் தெரிவிக்கிறார் சதீஷ்ராஜ்.

இப்படியுமா?

உரையாடல் முடிந்ததும் தம்பதியராய் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றபோது, சதீஷ்ராஜும், அவரது மனைவியும் மறுத்து விட்டனர்.இன்று 100 பேருக்கு சாப்பாடு போட்டு விட்டு, ‘போஸ்’ தரும் சிலருக்கு மத்தியில், தினமும் 5,000 பேருக்கு உணவளிக்கும் தம்பதியர், செய்தியாக கூட தங்களுக்கு விளம்பரம் வேண்டாம் என, மறுத்தது, உண்மையிலேயே அதிசயமாகத் தான் இருந்தது.

 

source:::::Dinamalar …Tamil Daily

natarajan

படித்ததில் பிடித்தது ….மறக்க முடியாத ஆயிரம் ரூபாய் !!!

ஒரு நாள் வாகினி ஸ்டுடியோவுக்குள் நடந்து போய்க் கொண்டிருந்தேன். புரொடக்ஷன் மேனேஜர் ஜெகன்னாதன் என்னை பார்த்து, “நாகேஷ், வாகினியில் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில், ஒரு படம் எடுக்கிறோம். ஜெமினி கணேசன் ஹீரோ. இன்னிக்கு எடுக்கப்போகிற காட்சியின் துவக்கத்தில், ஒரு சர்வர், டேபிளை துடைப்பது போல, ஒரு காட்சி இருக்கிறது. அந்த ஒரு ஷாட்டில் நீ நடிக்கணும். எவ்வளவு பணம் வேணும்… 500 ரூபாய் போதுமில்லையா?’ என்று கேட்டார்.
நான், “சரி’ என்றதும், காத்திருக்க சொன்னார். அப்போது, அந்தப் பக்கம், ஒரு வயதான மனிதர், தன் உடலை, வில் போல பின்னுக்கு வளைத்துக் கொண்டு, நடந்து போய்க் கொண்டிருந்தார். அவர் என் கவனத்தை ஈர்த்தார். அவர் கையில், ஒரு சிகரெட் பெட்டியும், ஒரு தீப்பெட்டியும் இருந்தது. என் குசும்பு புத்தி சும்மா இருக்குமா… கிடு கிடுவென்று, அவரிடம் போனேன். அவரது தோள் பட்டையைத் தொட்டு, “ரொம்ப கஷ்டப் பட்டு, சிகரெட் பெட்டியைத் தூக்கிக்கிட்டு போறது போல இருக்கு. என்கிட்ட வேணும்ன்னா கொடுங்க. நான் எடுத்து கிட்டுவர்றேன்…’ என்றேன். அவர், “ஹா… ஹா’ என்று, சுருக்கமாக சிரித்துவிட்டு, தன் பின்னோக்கிய, வில் நடையைத் தொடர்ந்தார்..
சிறிது நேரத்தில், எனக்கு அழைப்பு வந்தது. செட்டுக்குள் போனேன். ஜெகன்னாதன், “ஒரு முறை, ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம்’ என்றார்.
நான், ஒரு சிறு டவலை வாங்கி, தோளில் போட்டு, தட்டு, டம்ளர்கள் போடுகிற பக்கெட்டை எடுத்துக் கொண்டேன். டேபிளில் இருந்த ஒரு டம்ளரை, மேலே தூக்கிப் போட்டுவிட்டு, அந்த டேபிளை சுத்தம் செய்துவிட்டு, மறுபக்கம் வேகமாக வந்து கீழே விழப்போகும் டம்ளரை, லாவகமாக பக்கெட்டில் பிடித்துக் கொண்டேன்.
“சபாஷ், ரொம்ப நல்லா நடிக்கிறியேப்பா…’ என்று, ஒரு குரல் கேட்டது… செட்டுக்கு வெளியே, ஒருவரின், நடையைக் கேலி பண்ணினேனே… அதே மனிதர்! வாகினி ஸ்டுடியோ அதிபரான சக்ரபாணி. “சார் கொஞ்ச நேரத்துக்கு முன், நீங்க நடந்து வந்துகிட்டிருந்த போது, யாருன்னு தெரியாம உங்களைக் கேலி செய்துட்டேன். தயவு செய்து, மன்னிச்சிடுங்க…’ என்று, காலில் விழாத குறையாக, கெஞ்சினேன்.
“அதை நான் எப்பவோ மறந்தாச்சு… நீ ரொம்ப நல்லா நடிக்கிறியே…’ என்றவர், அடுத்தபடியாக, “உனக்கு எவ்வளவு பணம் பேசியிருக்கு?’ என்று கேட்டார். 500 ரூபாய் என்றார் ஜெகன்னாதன்.
“தமிழ்ல நடிக்கத்தானே, 500 ரூபாய் பேசியிருக்கு. நீயே தெலுங்கிலேயும், இந்த காட்சியை பண்ணிடு. இரண்டுக்குமா சேர்த்து, 1000 ரூபாய் வாங்கிக்கோ…’ என்றார். எனக்கு நடப்பது எல்லாம் கனவா, நிஜமா என்ற, சந்தேகம் வந்து விட்டது. தமிழ், தெலுங்கு இரண்டு படங்களின் காட்சிகள் எடுக்கப் பட்டன.
புரொடக்ஷன் மேனேஜர் ஜெகன்னாதனைக் கூப்பிட்டு, 1000 ரூபாய்க்கு, செக் எழுதிக் கொண்டு வரச் சொன்னார்.
நான், “சார் சார் செக்கெல்லாம் வேணாம்…’ என்றேன். என்னைப் பார்த்து சிரித்தபடி, “வாகினி பெரிய கம்பெனி. செக்கெல்லாம் திரும்பி வராது; பயப்படாதே…’ என்றார்.
“அதுக்கு இல்லை சார்! எனக்கு அவசரமா பணம் தேவைப்படுது. அதனால், பணமா கொடுத்தீங்கன்னா ரொம்ப சவுகரியமா இருக்கும்…’ என்றேன்.
“அப்படியா… சரி’ என்று சொல்லி, ஜெகன்னாதனிடம், “காரில் இவரை அழைச்சிட்டு நேரே பேங்குக்குப் போய், செக்கை பணமா மாத்தி, கொடுத்துவிடு. இவரையும், இவரது இடத்தில் கொண்டு போய் விட்டு விட்டு வா…’ என்றார்.
அந்த ஆயிரம் ரூபாயை, என் வாழ்வில் மறக்கவே முடியாது. அந்தப் பணத்தில், ஒரு பட்டுப் புடவை, ஒரு தாலி, பிரவுன் கலரில் ஒரு பேண்ட் வாங்கி, நான் காதலித்த ரெஜினாவை பதிவுத் திருமணம் செய்து கொண்டேன்.
— “சிரித்து வாழ வேண்டும்’ நூலில் நடிகர் நாகேஷ்.  

source:::::Dinamalar…Sunday Varamalar

natarajan

மாற்றத்தின் வித்தகர் …. பத்மா கோபாலன் !!!

சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சிப் பள்ளி. நம்ப முடியாத ரம்மியத்தோடு காட்சியளிக்கிறது அதன் மழலையர் பிரிவு வளாகம். வெளியே வரிசையாகப் போடப்பட்டிருக்கும் செருப்புகள், சாப்பாட்டு டப்பாக்கள், தண்ணீர் போத்தல்கள் ஒவ்வொன்றிலும் நேர்த்தி. வகுப்பில் வரிசையாகப் பாய்த் தடுக்கில் அமர்ந்திருக்கிறார்கள் குழந்தைகள். அவர்கள் முன் மரத்திலான உருளைகள், கட்டுமான படிகங்கள், காய்கறிகள்… ஒவ்வொரு குழந்தையும் அவற்றை வைத்து தன் மனதுக்கேற்ற கட்டுமானங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது; காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருக்கிறது; கோதுமை மாவில் பல்வேறு வடிவங்களைச் செய்துகொண்டிருக்கிறது. ஆசிரியை இங்கு அதிகாரி கிடையாது; அவர் சக தோழர். குழந்தைகளோடு குழந்தைகளாக அமர்ந்து சொல்லிக்கொடுக்கிறார்கள். பாடுகிறார்கள். ஆடுகிறார்கள். குழந்தைகள் தமிழ் – ஆங்கிலம் இரண்டையுமே அற்புதமாகப் படிக்கிறார்கள். சகலமும் நேர்த்தி. வித்தியாசம் சீக்கிரமே புலப்படுகிறது. இவர்கள் படிப்பது மாண்டிசோரி கல்வி முறையில். உலகெங்கும் மிகச் சிறந்த முறை – அதேசமயம் பணக்காரக் குழந்தைகள் மட்டுமே படிக்கக் கூடிய முறை – என்று சொல்லப்படும் கல்விமுறை. சென்னை மாநகராட்சியின் 40+ பள்ளிக்கூடங்களில் உள்ள 3000+ ஏழைக் குழந்தைகளும் இப்போது இந்தக் கல்விமுறையில்தான் படிக்கிறார்கள். சர்வதேச அளவில் மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னோடி நடவடிக்கை இது.

அற்புதமான இந்த மாற்றத்தின் முன்னோடி… பத்மா கோபாலன். வயது எத்தனை தெரியுமா? 82.

கதர் உடை, பொட்டு நகை கிடையாது… கம்பீரத்தை அணிகலனாக்கிக்கொண்டிருக்கிறார் பத்மினி. பத்து ஆண்டுகளுக்கு முன் மயிலாப்பூரில் ஒரு மாநகராட்சிப் பள்ளியைத் தத்தெடுத்த பத்மினி தன் சொந்த செலவில், அங்கு ரூ. 1 லட்சம் கல்வி உபகரணங்களை வாங்கிக்கொடுத்து, அந்தப் பள்ளிக்கான ஆசிரியை – ஆயாக்களுக்கும் சம்பளம் கொடுத்து மாண்டிசோரி மழலையர் பிரிவைத் தொடங்கிவைத்தது மாற்றத்தின் முதல் விதை. அடுத்தடுத்த ஆண்டுகளில் அவருடைய ‘ராம்சரண் அறக்கட்டளை’ மாநகராட்சியின் எட்டுப் பள்ளிக்கூடங்களுக்குச் சென்றது. இப்போது ஏனைய பள்ளிகளில் மாநகராட்சி நிர்வாகமே இந்தக் கல்விமுறையைக் கையில் எடுத்திருக்கிறது. ஒபாமா இந்தக் கல்விமுறையைத்தான் கொண்டுவர விரும்பினார். அமெரிக்காவில் அவரால் கொண்டுவர முடியவில்லை. அங்கு முடியாதது இங்கு சாத்தியமாகி இருக்கிறது.

“என் தலைமுறையைச் சேர்ந்த இந்தியப் பெண்களோட கதை என்னவா இருக்குமோ, அதே கதைதான் என்னோடதும். ஒரு பெரிய குடும்பத்துல பிறந்தேன். நல்லா படிச்சேன். பி.ஏ. முடிச்சேன். கல்யாணம் ஆனதும் குடும்ப வேலைகளோட ஒதுங்கிட்டேன். ரெண்டு குழந்தைங்க. பொண்ணு டாக்டரா இருக்கா. பையன் ஆடிட்டரா இருக்கான். குடும்பத்துக்காகத்தான் எல்லாருமே உழைக்கிறோம்னாலும் அது மட்டும்தான் கடமையாங்கிற கேள்வி சின்ன வயசுலேர்ந்தே ஓடிக்கிட்டு இருக்கும். ஒரு காலம் வரைக்கும் என் வீட்டுலேயே சாயுங்கால நேரங்கள்ல ஏழைக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துக்கிட்டு இருந்தேன். அப்புறம் உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு என்னால உதவிகளைச் செஞ்சுக்கிட்டு இருந்தேன்.

வாழ்க்கை முழுக்க ஒரு விஷயத்தை என்னால கவனிக்க முடிஞ்சுச்சு. பணம்னு உதவி கேட்டு வர்ற பெண்கள்ல பலர் கல்வி சம்பந்தமான தேவைக்காகத்தான் கேட்டு வந்தாங்க. ஏன் அந்த உதவியை நேரடியாச் செய்யக் கூடாதுன்னு யோசிச்சப்ப, ரெண்டு வழிகள் இருந்துச்சு. ஒண்ணு பள்ளிக்கூடம் தொடங்குறது; இன்னொண்ணு பள்ளிக்கூடங்களை நோக்கிப் போறது. முதல் வழி உதவி தேவைப்படுறவங்களை நம்மளை நோக்கி வரவழைக்கிறது; ரெண்டாவது வழி நாமளே அவங்களை நோக்கிப் போறது. நான் ரெண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தேன்.

மாநகராட்சிப் பள்ளிக்கூடங்கள்ல நுழையறது அவ்வளவு சுலபமா இல்லை. ஏகப்பட்ட கேள்விகள், தடைகள் எல்லாத்தையும் கடந்துதான் உள்ளே நுழைஞ்சோம். அப்படி நுழைஞ்சப்போ, இந்தக் குழந்தைகளுக்கு உலகத்திலேயே சிறந்த கல்விமுறையில சொல்லிக்கொடுக்கணும்னு முடிவு பண்ணினோம். அப்போ அறிமுகமானதுதான் மாண்டிசோரி முறை. காந்தி சிறந்த கல்விமுறைனு சொன்ன முறை இது. ஆனா, தொடக்கத்துல இந்த முறையைப் பத்தி விசாரிச்சப்ப யாரும் எனக்கு ஊக்கம் கொடுக்கலை. எல்லாருமே இந்த முறை ரொம்ப ஒசத்தின்னு சொன்னாங்க. ஆனா ‘அது ரொம்ப செலவாகும். ரொம்ப சுதந்திரமான முறை. சேரி குழந்தைகளுக்குச் சரிப்படாது’ன்னாங்க.

எனக்கு ரொம்ப கோவத்தையும் வைராக்கியத்தையும் கொண்டுவந்ததே இந்த வார்த்தைகள்தான். குழந்தைங்களோட குணத்துல சேரிக் குழந்தைங்க; அடுக்குமாடி குழந்தைங்கன்னு பாகுபாடு இருக்குதா என்ன? நான் இல்லேன்னு நெனைச்சேன். இன்னைக்கு என்னோட குழந்தைங்க அது நிரூபிச்சு இருக்காங்க. டெல்லிலேர்ந்து மனித வளத் துறையிலேர்ந்து வந்தாங்க. பிரமிச்சுப்போய்ட்டாங்க.

இந்தக் கல்விமுறையைப் பத்தி எவ்வளவோ சிறப்புகளைச் சொல்வாங்க. என்னைப் பொறுத்த அளவில நான் முக்கியமா நெனைக்குறது இந்தக் கல்விமுறை கொடுக்குற சுயமரியாதை. இங்கே சொல்லிக்கொடுக்குற முதல் விஷயமே எல்லோரும் சமம்கிறதுதான். ஒரு உதாரணம் சொல்றேன். ஆரம்ப காலத்துல ஒரு அதிகாரி இங்கே வந்தார். வழக்கமா இப்படி அதிகாரிங்க பள்ளிக்கூடத்துல போனா குழந்தைங்கள் எழுந்திருச்சு நிற்பாங்க இல்லையா? இவங்க எழுந்திருக்கலை. அவங்க பாட்டுக்குப் படிச்சுக்கிட்டு இருக்காங்க. இவருக்குக் கோபம். ஒரு குழந்தையைக் கூப்பிட்டு, ‘ஏன் எழுந்திருக்கலை’னு கேட்டார். அந்தக் குழந்தை பதிலுக்கு, ’ஏன் எழுந்திருக்கணும்’னு கேட்க, உறைஞ்சுட்டார் அந்த அதிகாரி. இதுதான் நான் முக்கியம்னு நெனைக்கிறேன்.

ஒரு குழந்தையும் சக மனுஷன்தான். அதுக்குனு சுயமரியாதை உண்டு. நாம மரியாதைங்கிறபேருல ஆரம்பத்துலேயே அதை அடக்கி ஒடுக்க ஆரம்பிக்கிறோம்.

நம்ம சமூகம் ஏன் இப்படி இருக்குனு யோசிச்சுப் பாருங்க. அடுக்குகள் தெரியும். ஒருத்தருக்கு மேல் ஒருத்தர்; அவருக்கு மேல் இன்னொருத்தர்னு அடுக்கப்பட்டு இருக்கிறது புரியும். தனக்குக் கீழ் இருக்குறவன் தனக்குப் பணியணும். இந்தப் பணிவை நாம மரியாதைனு சொல்றோம்; நான் பயம்னு சொல்ல விரும்புறேன். இந்தப் பயத்தை உடைச்சுட்டா போதும்; சுயமரியாதை வந்துடும்; எல்லாம் மாறிடும். அதை மாண்டிசோரி கல்விமுறை தருது. என்ன கொடுமைன்னா, ஏழைகளுக்கு அவசியமான இப்படிப்பட்ட கல்விமுறைகூட பணக்காரங்களோடதா இந்தச் சமுதாயம் மாத்திட்டது. அதை மாத்தினோம்னு நாங்க நெனைக்கிறோம்.

எவ்வளவோ பேரோட பங்களிப்பும் ஒத்தாசையும் இதுல இருக்கு. முதல்முதல்ல எங்களுக்கு அனுமதி கொடுத்த கமிஷனர் விஜயகுமார்ல தொடங்கி இன்னைக்கு மேயரா இருக்குற துரைசாமி வரைக்குமான அதிகாரிகள், சம்பளத்தை ஒரு பொருட்டா நெனைக்காம, தங்களோட குழந்தைங்களா நெனைச்சு அவங்களோட மல ஜலம் வரைக்கும் அள்ளுற எங்களோட ஆசிரியைகள், இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டுட்டு தானா முன்வந்து உதவுற நல்ல உள்ளங்கள்… இதுல நான் ஒரு பொருட்டே இல்லை” என்கிற பத்மினிக்கு வழிகாட்டி காந்தி.

“காந்தி சொல்வார்… ‘எந்த விசேஷ குணமும் இல்லாதவன். சாமானியர்களிலும் சாமானியன். என்னாலேயே இதைச் செய்ய முடியும் என்றால், உங்களால் இன்னும் முடியும்’னு. என்னைப் பத்தி யாராவது பெருமையா பேசுனா, நானும் அதையே சொல்வேன். என்னோட 72 வயசுல இந்தக் காரியத்தை நான் ஆரம்பிச்சேன். நிச்சயமா என்னைவிட எல்லோராலும் அதிகமாவே செய்ய முடியும்!”

 source:::::The Hindu …Tamil
 natarajan