” வருக வருக ஜய ஆண்டே … ”

வருக வருக ஜய ஆண்டு

சித்திரைக் கோடையில்
சூடான காற்றும்
மர நிழலில்
ஒய்வு கொள்ளும்!

மரநிழலும்
மரத்தடியில்
வெய்யிலைக் கண்டு
வெளிறிப் போகும்!

வெய்யிலில்
வேப்ப மரங்கள்
வியர்வைத்துளியாய்
பூக்களைச் சிந்தும்!

பூக்களாம் மகிழ்ச்சியை
நம் நெஞ்சில் பரப்பி
ஜயப் புத்தாண்டு
ஜயமே கொடுக்கும்!

 

source:::: A.V. Ramanathan  on 14..04 2014

natarajan

ஜயப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Message For the Day… “Give up Ego and Enjoy Bliss…”

Suppose you dream that you are being bitten by a snake, and are struggling with pain, shouting and frantically searching for medicines. Now even though you are bitten by a snake, do you take medicine to remove the poison? No, you don’t do that, because this happened in your dream. You perhaps will even forget the pain, as soon as you wake up, isn’t it? Similarly today you are in deep slumber of ignorance and worldly attachments and hence undergo a lot of suffering. The world is ephemeral and full of misery. You suffer only because of ignorance and body attachment. The moment you are awakened from the slumber, your problems will be solved. Anyone and everyone who aspires to lead a happy life must reduce body attachment. You develop ego because of your position, associations, physical strength or wealth. If you want to enjoy bliss, never give any scope for ego.   

 

Sathya Sai Baba

 

Try This Trick for Password Management !!!

 

If you’re  scrambling to change your password following the Heartbleed bug and don’t know where to start, this trick may be one of the simplest solutions yet.

Not only does it generate a password that’s random enough to keep intruders away, but it also ensures that you’ll be able to remember it.

Yuriy Guts, a research and development software engineer at Eleks Labs, detailed a comprehensive password creation method on the company’s R&D blog.

The first step in Guts’ process involves thinking of a movie or television show, a line from a song, or any other reference that you associate with that website.

For example, you might want to think of a movie that reminds you of one of your best friends to help you create a strong Facebook password. Grab the most memorable line from that movie.

Once you’ve come up with your quote or phrase, add a few transformations to make it more difficult to guess. For example, Guts suggests replacing each space with an underscore, capitalizing the second letter of each word, adding a number at the end of the phrase that denotes the number of words in it, or any similar method.

If you’re using the line “I’m king of the world!” from the movie “Titanic,” your password may look something like this:

Im_kIng_oF_tHe-wOrld5

The trick works even better if you’ve got inside jokes or phrases that only you would know or remember. After you’ve created this password, store it in some type of management system in case you forget it. Guts advises that you change your passwords every 12 months by repeating those steps.

The idea of using a phrase to help you remember your password isn’t particularly new. But what makes Guts’ approach more interesting is that each phrase is specifically tailored to an individual website or app— meaning you’re creating a password that’s easy to remember while also guaranteeing all of your passwords are different from one another.

Since the password method requires you to generate a phrase or sentence, it’s much easier and more natural to type it quickly when logging in rather than pecking at the keyboard to input some obscure string of characters.

More From Business Insider 

Message For the Day…” Ensure Your Kids are on The Right Path at All Times…”

 

Young students are innocent. Their hearts and minds are pure, and they are selfless. In the primary school, you will find that many of them observe perfect discipline and are well behaved. By the time they are in secondary school, the purity and discipline slowly decreases. When they reach a college or university, everything becomes topsy-turvy! What really happens in between? As they grow in years, their mental balance is upset; they lose the steadiness of mind and self-control. They are exposed to undesirable influences. At this stage, teachers and parents must practice exemplary behavior and ensure that the children are on the right path at all times. Students also must bear in mind that all the regulations and discipline that are prescribed are for their highest good and in their own interests.   

 

Sathya Sai Baba

 

 

Message For the Day…”With Self Confidence, You Can Achieve Anything…”

 

People today depend on their intelligence, physical strength and money, but do not have as much confidence in their own Self. When you have Self-Confidence, you can achieve anything. You may have wealth or money (Dhana Bala), but how long will it last? It is like a passing cloud; it comes and goes. How long will this wealth called people (Jan Bala) – family and friends, last? As long as you have power, position and wealth, people will surround you. Hence all of these are transitory. You will receive true respect in this world, when you have the strength of the Soul. Therefore, lead your lives with the strength of the Divine to attain the Divine. With faith in God, you must resort to good activities. As is the action, so is the result. Every step you take, must lead you to His proximity. Make every effort to get close to God. Then, you will be triumphant in life.  

Sathya Sai Baba

 

Message For the Day…” Happiness Has No Value Unless There Is also Sorrow …”

 

Rama chose to go to the forest to fulfill the pledge of His father. It may be asked: Did He go to the forest under any compulsion or out of His own resolve, or with a sense of dissatisfaction? No. Rama set out for the forest with the same sense of serenity and joy with which He looked forward to His coronation. Rama demonstrated the spirit of equanimity. He showed that pain or pleasure, profit or loss, victory or defeat, were the same to Him. In human life, pleasure and pain, happiness and sorrow alternate all the time. It is not a good quality to welcome pleasure and turn away pain. You must welcome sorrow in the same joyous spirit in which you greet happiness. Happiness has no value unless there is also sorrow. That is why it is said, “Pleasure is not secured from pleasure.” Pain is needed to secure pleasure. Rama demonstrated to the world the truth of this concept.

 

Sathya Sai Baba

 

 

 

” நேர்மை பற்றி பேச உரிமை உண்டா நமக்கு … ? ”

இது தேர்தல் காலம். நேர்மை, தூய்மை, ஊழல், லஞ்சம் என்பன உள்ளிட்ட சொற்களின் ஆதிக்கம் மிகுந்த காலம். பிரதமர் வேட்பாளர் முதல் எம்.பி. வேட்பாளர் வரையிலானவர்களின் நேர்மையைப் பற்றி அறிந்தோ அறியாமலோ பேசுகிறோம். சரி, இந்த ‘நேர்மை’யின் நிலைமை நம் அன்றாட வாழ்க்கையில் எப்படி இருக்கிறது?

நல்லனவற்றை தூரத்தில் வைத்து ஆராதித்தே பழக்கப்பட்டுப்போன நாம், அதன் கரம் பிடித்து நடக்க முயல்வதே இல்லை. அதனால்தானோ என்னவோ, இறைவனுடன் கூட வழிநடப்பதை தவிர்த்து அவருக்கு தனியாக இல்லம் அமைத்து கொடுத்து வணங்குகிறோம். வெறும் சொல்லாக பார்க்கப்பட வேண்டிய ‘நேர்மை’க்கு, என்று தூய்மை சாயம் பூசப்பட்டதோ, அன்றே அது ஊர் பஞ்சாயத்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுவிட்டது.

‘எங்கு பார்த்தாலும் ஊழல், ஊழல், ஊழல், ஐயகோ..!’ என்று தினம் தினம் செய்தித்தாளை பார்த்து விட்டு குமுறும் நடுத்தர வர்க்க தந்தை, தன் மகளுக்கு ஆயிரக்கணக்கில் லஞ்சம் (மன்னிக்கவும். அதிகாரப்பூர்வ சொல் – டொனேஷன்) கொடுத்து சிறந்தது எனக் கருதப்படும் பள்ளியில் எல்.கே.ஜி. சீட் பெற்று கொடுத்து பெருமை கொள்வதை என்னவென்று சொல்வது?

ஐந்து வயதில் பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்து விட்டு, அறுபதில் கரும்பாய் இருக்க வேண்டும் என்று எண்ணுவது எந்த விதத்தில் நியாயம்?

மகனின் பழக்கவழக்கத்தை வளர்க்கிறேன் என்ற பெயரில் மளிகைக் கடைக்கு அழைத்து செல்கிறார் தாய். கடையில் இருக்கும் ஏழை முதியவர் கணக்குப் பிழையில் பத்து ரூபாய் குறைத்து சொல்ல, சொன்னதை கொடுத்து விட்டு திரும்பும் தாயிடம், “பத்து ரூபாய் கூடுதலா வருமே மா?” என்று கேட்கிறான் மகன். “விடுடா. பத்து ரூபாய் லாபம்” என்று சொல்லி சிரிக்கும் தாய், மகனிடம் விதைப்பது நல்ல பழக்கவழக்கங்களை அல்ல, எளியவரை ஏய்ப்பது என்ற கொடூரமான விதையை. விதைப்பது சரியாய் இருந்தால்தானே வளர்வது முறையாய் இருக்கும்?

நேர்மை இச்சமூகத்தால் இரு வகையாய் அனுசரிக்கப்படுகிறது. ஒன்று அர்ச்சிக்கப்படுகிறது அல்லது வஞ்சிக்கப்படுகிறது. இரண்டுமே தவறென்ற போதிலும், அர்ச்சிக்கப்பட்டாலாவது செய்வது தவறென்ற உள்ளுணர்வு உள்ளத்தை உறுத்தும். நேர்மை வஞ்சிக்கப்படும்போது, நேர்மையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறது. செய்வது தவறென்றுகூட புரியாத பரிதாப நிலையே நிலவுகிறது.

சமீபத்தில் என் அலுவலகத்தில், போக்குவரத்து செலவுகளை திரும்பப் பெரும் சலுகை வழங்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட தொகை வரை பற்றுச்சீட்டு இல்லாமலே பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. பயணமே செய்யாதவரெல்லாம் பயணம் செய்ததாகக் கூறி ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டனர். நாங்கள் சிலர் மட்டும் உள்ளதை உள்ளபடி பெற்றுக் கொண்டோம். எதிர்பார்க்காத வகையில் அனைவரின் முன்னர் நாங்கள் காட்சிப் பொருளாய் தென்பட்டோம். ‘பிழைக்கத் தெரியாதவர்கள்’ என்ற பட்டத்தையும் பெற்று, அனைவருக்கும் எள்ளிநகையாட கைப்பொருளாய் சிக்கிக் கொண்டோம். குற்றவாளி கூண்டில் நிற்பதைப் போன்றே உணர முடிந்தது. கேள்வி மேல் கேள்வி, “நிறைய பணம் வச்சுருக்கியோ?” என்ற கேள்வி சற்று வதைக்கவே செய்தது. “அது என் பணம் இல்லையே. அதை எப்படி பெறுவது?” என்று மனம் கேட்க துடித்தாலும், கேட்டாலும் ஒரு பயனும் இல்லை என்று எண்ணி புன்னகைத்து விட்டு முடித்தேன்.

குறுந்தொழில் முதல் பெருந்தொழில் வரை வரி ஏய்ப்பு செய்வது, தவறான கணக்கு காண்பிப்பது, பற்றுச்சீட்டு இல்லாமல் விற்பனை செய்வது, தள்ளுபடி கிடைக்கும் என்பதால் பற்றுச்சீட்டு இல்லாமல் பொருள் வாங்குவது, சாலையோர கடைகளில் சாப்பிட்டுவிட்டு கணக்கு சொல்லும் போது 2 இட்லி குறைவாக சொல்வது, மொழி தெரியாத ஆட்களிடம் ஆட்டோக்காரர்கள் அதிக பணம் கேட்பது, வேலை நேரத்தில் கஸ்டமர்களை பார்க்கப் போவதாக சொல்லி மார்க்கெட்டிங் எக்சிக்யூடிவ்கள் வீட்டில் ஓய்வு எடுப்பது, விலை தெரியாத மக்களிடம் பொருட்களை அதிக விலைக்கு வியாபாரிகள் விற்பது… இது போன்ற சிறிய அளவில் செய்வதெல்லாம் தவறில்லை என்று நாம் எண்ணும் வரையில், பெரிய வணிகர்கள் கோடி கோடியாய் ஏய்த்து சம்பாதிப்பதையும், அரசியல்வாதிகள் கத்தை கத்தையாய் ஊழல் செய்வதையும் தட்டி கேட்க நமக்கு அருகதை இல்லை என்றும், அவர்கள் திருந்துதல் நடக்காத காரியம் என்றுமே எண்ணத் தோன்றுகிறது.

கேள்வி கேட்க வேண்டிய ‘நேர்மை’, கேலிப் பொருளாய் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுவதும், கேள்விக் கணைகளால் துளைக்கப்படுவதும், இந்தியாவுக்கு மட்டும் இல்லை, மானுடத்துக்கே இழி நிலை என்றே கொள்ள முடிகிறது. எப்போதும் போல, என்றாவது ஒரு நாள் நேர்மை அர்ச்சிக்கப்படவோ, வஞ்சிக்கப்படவோ இல்லாமல், இயல்பாக அனுசரிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

ARUN KRISHNAN   in THE HINDU… TAMIL

natarajan

 

 

 

” உங்கள் உடல் ஒரு கார் அல்ல- …” !!!

 

ஒரு நகைச்சுவைக் காட்சியில் வயிற்று வலி வந்த நோயாளியைச் சுற்றிப் பல மருத்துவர்கள் நிற்பார்கள். ஒருவர் குடல் நோய் மருத்துவர், அவர் உடனடியாகக் குடல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பார். சிறுநீரக மருத்துவர் கிட்னியில் இருக்கும் கல்லை உடைக்க வேண்டும் என்றும், எலும்பு மருத்துவர் எலும்பில் உடனே பிளேட் மாட்ட வேண்டும் என்றும் சொல்வார்கள்.

இப்படி ஒவ்வொரு சிறப்பு மருத்துவரும் ஒவ்வொன்றைக் கூற நோயாளி மயங்கிவிடுவார். தற்போது இந்த நகைச்சுவை மருத்துவ உலகில், மருத்துவமனைகளில் அன்றாடம் நடக்கும் சம்பவமாக மாறிவிட்டது. குடும்ப மருத்துவர் யார், அவருடைய தேவை என்ன என்பது பற்றி மனநல மருத்துவர் ஆ.காட்சன் கவனப்படுத்தும் விஷயங்கள்:

ஒரு டாக்டரை, இவர் எங்களுடைய பேமிலி டாக்டர் என்றும், இவர்கிட்டதான் எங்க குடும்பமே மருத்துவம் பார்த்துக் கொள்வோம் என்று சொல்லக் கேள்விபட்டிருப்போம். ஆனால், ஃபேமிலி டாக்டர் என்று அழைக்கப்படும் குடும்ப மருத்துவர் யார் என்று தெரிந்துகொள்வது அவசியம்.

முன்பெல்லாம் குடும்பத்தில் உள்ளவர்களுக்குச் சிறு வயதிலிருந்தே எந்த நோயாக இருந்தாலும் நன்கு பரிச்சயமான ஒரு மருத்துவரிடம் மட்டுமே, பெற்றோர் அழைத்துச் செல்வது வழக்கம். அந்த நபரின் உடல்நிலை, அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகள், குடும்பம், பொருளாதாரச் சூழ்நிலை, எந்த மருந்து ஒத்துக்கொள்ளும், எது ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பது போன்ற விவரங்கள் எல்லாம் அவருக்கு அத்துப்படியாகி இருக்கும்.

ஒருவேளை அவர் தனது மருத்துவ வரம்பை மீறிய நோயாக இருந்தால், எந்தச் சிறப்பு மருத்துவரிடம் அல்லது உயர் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும் என்பதை உங்களுக்கு வழிகாட்டும் அல்லது முடிவுஎடுக்கும் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்து சொல்வார் சரி, நோய்க்கும் குடும்ப மருத்துவருக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்கலாம்.

நம்பிக்கையே அடிப்படை காரணம்

ஒரு நோயாளியின் நோயைக் கண்டறிவது மற்றும் குணப்படுத்துவதில் அந்த நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே ஏற்படும் நம்பிக்கை மற்றும் புரிந்துகொள்ளலை அடிப்படையாகக் கொண்ட ஒரு உறவு தான் அடித்தளம் எனக் கூறுகிறார் எக்கிஹார்டு ஒத்மர் என்ற மருத்துவ அறிஞர். ஒரு நோயாளி மருத்துவரிடம் கொண்டுள்ள நம்பிக்கை, எதிர்பார்ப்பு, உணர்ச்சிகள்தான், மருத்துவர் – நோயாளி என்ற உறவை மேம்படுத்துவதுடன் நோய் குணமடைய ஒரு காரணியாகவும் அமையும்.

இதை உளப்பகுப்பாய்வின் தந்தை என்றழைக்கப்படும் 19-ம் நூற்றாண்டின் மனநல மருத்துவர் சிக்மண்ட் ஃபிராய்டு (Sigmund freud) தெளிவாக விளக்கியுள்ளார். தாய் – குழந்தை உறவு வளர்ச்சிக்கும், கணவன் – மனைவி உறவு |வாழ்க்கைக்கும் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு இந்த மருத்துவர் – நோயாளி உறவு என்பது மனரீதியாக மட்டுமல்ல, உடல் நோய்கள் குணமடைதலில் மருந்துகளுக்கு நிகரான முக்கியப் பங்கையும் வகிக்கிறது.

இன்றைய மருத்துவ உலகம்

இத்தகைய மதிப்பு வாய்ந்த உறவு, இன்றைக்கு வெறும் சேவை அளிப்பவர் – வாடிக்கையாளர் என்ற நிலைக்கு மாறியதற்கு இரு தரப்பினருமே பொறுப்பு தான். பெரிய மால்களில் பலரும் விண்டோ ஷாப்பிங் செய்வதைப் பார்க்கலாம்.

அது போலத்தான் பல நோயாளிகள் அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்து, ஒவ்வொரு நோய் அறிகுறிக்கும் ஒவ்வொரு சிறப்பு நிபுணரைத் தேடி மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கும் நிலை உள்ளது. திருப்திக்காக ஒரே பிரச்சினைக்குப் பல மருத்துவர்களின் ஆலோசனையை நாடும் நிலை உள்ளது. இதை ‘டாக்டர் ஷாப்பிங்’ என்று சொல்லலாம்.

பின்விளைவுகள்

சுருக்கமாகச் சொன்னால் பல மெக்கானிக்குகளின் கையில் சிக்கிய காரின் கதைதான் இது. மொத்தத்தில், பரஸ்பரப் புரிந்துகொள்ளல் மற்றும் மருத்துவர் – நோயாளி இடையிலான உறவு ஏற்பட இரு பக்கத்தில் உள்ளவர்களும் வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

குடும்ப மருத்துவர் முறை மாறிவருவதால் நோய் கண்டறிவதில் காலதாமதம், வீண் அலைச்சல், பண விரயம் ஏற்படுவதுடன் மருத்துவத்தின் மீதான நம்பிக்கையும் குறைகிறது. மேலும் முன் காலங்களைக் காட்டிலும் நோயாளியின் உறவினருக்கும் மருத்துவ ஊழியருக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றத்தில் இடைவெளி அதிகரித்துள்ளதே காரணம்.

இதனால் சிறப்பு மருத்துவர்களைப் பார்ப்பதே தேவை இல்லை என்று அர்த்தமல்ல. தேவைப்படும் நேரத்தில், அது அவசியமான ஒன்றுதான். ஆனால், குடும்ப மருத்துவர் முறை என்பது, அதைக் காட்டிலும் அதிக நன்மைகள் நிறைந்த விஷயம். நவீனமயமாக்கத்தை பின்பற்றிச் சென்று, பாரம்பரியப் பழக்கங்களை நாம் மறந்து போயிருந்தாலும், நலம் பயக்கும் இந்த மருத்துவர் – நோயாளி உறவைப் பேணி காத்தால் நமது எதிர்காலச் சந்ததிகளுக்கு நல்வாழ்வு நிச்சயம்.

மனநல மருத்துவர் ஆ.காட்சன், தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

 

Message For the Day…” Honour Your Elders and Serve Them With Smile “….

 

Students and youngsters must have challenging attitude towards things and honour physical labour. You must be eager to be of service to those who need it on account of their disabilities. Honour your elders and do not miss any chance of serving or pleasing them. Whatever gives you health and joy, welcome it – but do not lower yourself by indulging in vulgar pastimes. Do not wander aimlessly in the streets or frequent cinema halls and mix with undesirable company, or cultivate bad habits for fun. Remember that you must raise your motherland to great heights through your hard work and effort. When you develop such virtues, the nation will prosper.

 

Sathya Sai Baba

Message For This Day… Sri Rama Navami…Significance of the Name RAMA…

Rama’s name is a life-giving essence with esoteric significance. It consists of three syllables: Ra + Aa + Ma. The combination of the three letters constitute the name ‘Rama’. Ra representing Agni (the Fire God), burns away all sins; Aa representing Surya (the Sun God), dispels the darkness of ignorance; and Ma representing Chandra (the Moon God), cools one’s temper and produces tranquility. The name Rama has the triple power of washing away one’s sins, removing one’s ignorance, and tranquilizing one’s mind. How can this profound meaning of the name Rama be imparted to mankind? This can be done only by the Divine coming in human form and demonstrating to mankind the power of the Divine. Rama was one who, while appearing to lead the life of an ordinary man, led the Life Divine. He demonstrated the ideal life of a spiritually realised person.

 

 

Sathya Sai Baba