Message For the Day… “Understand The Importance of Upholding Truth in Daily Life…”

The difference between Rama and Ravana can be understood in three key aspects. Rama embodied the following characteristics: He rejoiced in the wellbeing of the whole Universe (Sarva Loka Hithe Ratah). He was the embodiment of wisdom (Sarva Jnana Sampannah). He was filled with all the virtues (Sarve Samuditha Gunaihi). You must learn and practice this important lesson for the welfare of this world. Lord Rama promoted the well-being of all by adhering to Truth and setting an example of righteous conduct. From His life, we must also understand the supreme importance of upholding Truth in our daily life. All of you tend to speak a great deal. We must keep up the promises we make and live up to what we say or preach. Introspect within yourselves as to how truthful is ur speech. Without truth, speech has no value.   

Sathya Sai Baba

 

“பயமுருத்தினால்தான் மடத்து ஞாபகம் உனக்கு வருமா !!!” …

 

பயமுறுத்தினா தான் ஞாபகம் வருமோ!

1976, பாளையங்கோட்டையில், நாங்கள் தங்கியிருந்த காலம். நள்ளிரவு வேளை. தாகம் எடுக்கிறதே என்று எழுந்து தண்ணீர் குடம் வைத்திருந்த இடம் பக்கமாகப் போனேன். ஸ்விட்சைப் போட்டு விட்டு, குடத்தைப் பார்த்தால், அதன் கழுத்தில் ஏதோ ஒன்று சுற்றியிருப்பது போல் தோன்றியது. அது லேசாக அசைந்தது. அதன் பின் தான் உறுதி செய்தேன். அது பாம்பு என்பதை…. எனக்கு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது.

ஹாலில் எல்லாரும் படுத்திருந்தார்கள். பாம்பை விரட்டப்போய், அது ஹாலுக்குள் வந்து விட்டால், ஏக கலாட்டா ஆகி விடும். குடும்பத்தார் பதறிப் போய் விடுவார்கள். நான் நின்ற இடத்தில் இருந்தபடியே பூஜை அறையைப் பார்த்தால் தெரியும்.அங்கே பல சுவாமி படங்களின் மத்தியில், காஞ்சி மஹாபெரியவரின் படம் நடுநாயகமாக இருக்கும்.

இதற்குள் பாம்பு இறங்கியது. அந்த அறை மிகவும் வழுவழுப்பாக இருந்ததாலோ என்னவோ, மிகவும் மெதுவாக ஊர்ந்தது. ஹால் பக்கம் போய்விடுமோ என்று பயந்திருந்த வேளையில், ஸ்வாமி படங்கள் இருந்த பக்கமாகப் போனது. மஹாபெரியவர் படத்தின் முன்னால், தலையைத் தூக்கிப் பார்த்தது. பிறகு, அங்கிருந்த ஒரு துவாரத்தின் வழியாக வெளியேறிவிட்டது.

எனக்கு அப்போது தான் மூச்சே வந்தது. பிறகு, குடும்பத்தாரிடம் தகவல் சொன்னேன். அடுத்தநாளே, காஞ்சி மடத்துக்குப் பயணமானேன். மஹாபெரியவரைத் தரிசனம் செய்தேன்.

பெரியவா, அப்போது சொன்னது என்னை அப்படியே திகைப்பில் ஆழ்த்திவிட்டது.

”பயமுறுத்தினா தான் மடத்து ஞாபகம் உனக்கு வருமோ?”

நான் பெரியவா காலில் தடாலென விழுந்து விட்டேன்.

ஆஹா, வீட்டிற்குள் பாம்பு வந்து, நான் பயந்து போனது எப்படி அவருக்குத் தெரிந்தது? என்னே அவரது ஞானம்! பாம்பின் வடிவாய் வந்ததே அவர் தானோ?

இன்னொருசம்பவத்தையும் குறிப்பிடுகிறேன்.

ஒரு சமயம் கர்நூலில் பெரியவர் முகாமிட்டிருந்தார். நாங்கள் குடும்பத்துடன் பெரியவரைத் தரிசனம் செய்தோம். ஊருக்குக் கிளம்பும் வேளையில், பெரியவர் என்னை அழைப்பதாக ஒருவர் தகவல் சொன்னார். நான் பெரியவா முன் நின்ற போது, “உன் குடும்பத்தில் யாரோ சந்நியாசம் வாங்கியிருக்க வேண்டுமே?” என்றார்.

“எனக்குத் தெரிந்து அப்படி யாருமில்லையே பெரியவா!” என அவரிடம் சொன்னேன். பெரியவா என்னிடம் “நீ ஊருக்குப் போய், பெரியவர்களிடம் விசாரித்து, மடத்துக்குத் தகவல் கொடு” எனச்சொல்லி விடை கொடுத்தார்.

நான் ஊருக்குப் போய் உறவினர்களிடம் விசாரித்தேன். அவர்கள் கூறிய பதில் என்னை திகைக்க வைத்தது.
“ஒரு வாரம் முன்பு தான், என் ஒன்றுவிட்ட சகோதரி மகன் ஆடிட்டர் சீனிவாசன், சேலம் கந்தாஸ்ரமத்தில் துறவறம் மேற்கொண்டு விட்டார்” என்ற தகவல் தான் அது.
பெரியவரின் அந்த ஞானசக்தியை எண்ணி என் கண்கள் பனித்தன. அவர் நடமாடும் தெய்வம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::www.periva.proboards.com

natarajan

 

 

 

Message For the Day…” God Tests His Devotees out of Intense Love and Compassion…”

 

One Sankaranti day, Rukmini, Sathyabhama, Jambavati, Gopikas, and Draupadi among others were with Lord Krishna, joyously munching sugarcane. Krishna, in order to test them, pretended as if His finger was cut. God always tests His devotees. Test is nothing but a taste of God. If the devotee is successful in the test, he/she receives God’s bounteous Grace. God does not conduct tests as a sign of hatred or enmity; He always does it out of intense love and compassion. As soon as Krishna’s finger was cut, it started bleeding. Sathyabhama asked a servant to quickly get a piece of cloth. Rukmini ran herself. Draupadi saw this and immediately tore a piece of her own sari and tied it to Lord Krishna’s thumb to stop the bleeding. Witnessing this, Rukmini and Sathyabama were ashamed that their love and actions did not match Draupadi’s love. Later Lord Krishna showered infinite grace when Draupadi needed it the most.

 

Sathya Sai Baba

” இன்னும் என்ன இருக்கு …பசியைக் கிளறி விட்டாயே …” !!!

ஒருமுறை காசியிலிருந்து திரும்பும் வழியில் பெர்ஹாம்பூரில் சாதுர்மாஸ்ய அனுஷ்டிக்கும்போது நெடுநாட்கள் சுத்த உபவாசமிருந்தார் பெரியவா. அதையும் மடத்தினருக்கே தெரியாமல் ரொம்ப ரகசியமாக செய்தார். மடத்து கஜானாவை நிர்வகித்து வந்த ராமச்சந்திர ஐயருக்கு எப்படியோ ரகசியம் தெரிந்து விட்டது. பெரியவாளிடம் சென்று உபவாசத்தை விடுமாறு வேண்டினார்.

அவரும் உடனே பிக்ஷை தயாரித்து கொண்டிருந்த பணியாளரை கூப்பிட்டு, மறுதினம் தம் உணவில் இன்ன இன்ன சேர்க்கும்படி கூறினார். “கஜானா” சந்தோஷம் தாங்காமல் திரும்பினார். திரும்பியபின் அவருக்கு சந்தேகம் எழுந்தது. “ஆனானப்பட்ட அன்னதான சிவன் போன்றவர்களின் வேண்டுகோளுக்கும் மசியாத பெரியவாளா நம் கோரிக்கைக்கு இத்தனை சுலபமாக மசிந்து விட்டார்?” என்ற சந்தேகம். பிக்ஷை தயாரிக்கும் பாரிஷதரிடம் போய் குடைந்தார். அவருடைய சந்தேகம் சரியானதே என்று நிரூபணமாயிற்று. “நீங்க அந்தண்டை போனதுமே பெரியவா, “அவர் மனசு சமாதானமாறதுகக்காகத்தான் அப்படி சொன்னேன். அதை அடியோட மறந்துடு”ன்னார்” என்று அந்த பாரிஷதர் நிஜத்தை கக்கி விட்டார்.

“கஜானா” மறுபடி பெரியவாளிடம் போனார். பல முறை போனார். அனால் அவர் வாயை திறக்கவே பெரியவா இடம் கொடுக்காமல் அடியார்கள், சிப்பந்திகள், பண்டிதர்கள் என்று எவரையேனும் சுற்றிலும் வைத்து கொண்டு ரொம்பவும் சீரியசாக ஏதாவது அலசி கொண்டிருந்தார். இப்படி பல நாட்கள் ஓடின. கடும் உபவாசமும் தொடர்ந்தது. கடைசியாக ஒருநாள் இரவு 10 மணிக்கு மேல் “கஜானா”விடம் பெரியவா பிடிபட்டார். சுக்ரவார பூஜை சற்று தள்ளாட்டத்துடனேயே முடித்துவிட்டு, ஓய்வுக்கு பெரியவா சாய்ந்த சமயத்தில் கஜானா அவரை பிடித்து விட்டார்.

“நாளைக்கு பெரியவா வயிறார பிக்ஷை பண்ணலேன்னா நான் மடத்தை விட்டே போய்டறேன்” என்று முரண்டு செய்து பார்த்தார் கஜானா.

அதுவும் பலிக்கவில்லை. முகமெல்லாம் சிரிப்பாக பெரியவா “நீ இல்லாட்டா மடம் நடக்காதோ?” என்றார்.

“அப்போ இந்த லோகத்தை விட்டே போய்டறேன்” என்று தம்மை மீறிய ஆவேசத்துடன் சொல்லி அழுதே விட்டார் கஜானா.

“சரி! பிக்ஷை பண்ணறேன். நாளைக்கு என்ன? இப்பவே பண்றேன். வயிறார பண்ணனும்னியே பண்றேன், பண்ணி வைக்கறையா?” என்றார் பெரியவா
“காத்துண்டு இருக்கேன்” என்று கஜானா நமஸ்காரம் செய்தார். அந்த இரவு வேளையில் பெரியவா பாலும் பழமும் தவிர எதுவும் உட்க்கொள்ளமாட்டார் என்று நினைத்தார். பெரியவா உட்கொள்ளும் அளவு தெரிந்த பிக்ஷை பாரிஷதரை கூப்பிட்டார்.
“அவனை ஏன் கூப்பிடறே? ஒன்னையேதானே பிக்ஷை பண்ணி வெக்க சொன்னேன்? நீயும் ஒப்புத்துண்டையே!””அளவு தெரியாததால அவனை கேட்டுக்கலாம்னு…..” கஜானா இழுத்தார்.

“அளவு தெரியாட்டா என்ன? இருக்கறதை ஜாடா கொண்டா”
“சரி நாம் பழக்கூடைகள், தட்டுகள் யாவும் கொண்டு வந்து வைப்போம். பெரியவாளே வேண்டியதை எடுத்து கொள்ளட்டும்” என்று கஜானா நினைத்து அவ்வாறே செய்தார்.
அதியாச்சரியமான கட்டளை பெரியவாளிடமிருந்து பிறந்தது “சுக்ரவார நைவேத்யம் சொஜ்ஜி, சுண்டல் எங்கே? கொண்டா சட்னு”
கஜான ஓடோடிபோய் பெரிய பெரிய பத்திரங்களில் நிறையவே இருந்த சொஜ்ஜியையும், சுண்டலையும் சமர்ப்பித்தார்.

“அதி”க்கும் மேற்பட்ட ஆச்சரியம் நிகழ்ந்தது. பெரியவா அவ்வளவையும் வெகு விரைவில் உட்கொண்டு பாத்திரங்களை காலி செய்தார். “இவ்வளவுதானா?” என்று வேறு கேட்டார்.

பன்னிரண்டு திருவோணம் அட்டேன்;
“இன்னம் உவப்பன் நான்” என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்!…………என்று ஆய்ச்சி மொழியாக ஆழ்வார் பாடியது உண்மையாயிற்று.

பழக்கூடையும் சடுதியில் காலியாயிற்று “இன்னும் என்ன இருக்கு” என்று கேள்வி கஜான வெலவெலத்து போனார்.

“வயிறார பண்ணறேன்னு ஒப்புண்டு பசியை கிளறிட்டியே! உசிர் போறதே!” என்ற பெரியவாளின் வார்த்தையை தாங்காமல் ஒரு பெரிய கூஜா பாலை திருமுன் வைத்தார். கடகடவென்று அதையும் பெரியவா காலி பண்ண, தடதடவென கஜானா கன்னத்தில் போட்டுகொண்டு அவரது பாதத்தில் தடாலென விழுந்தார்.

“பெரியவா க்ஷமிக்கணும். இனிமே ஒருநாளும் பெரியவாளை தொந்திரவு பண்ண மாட்டேன்” என்று விக்கினார்.
குழந்தையாக சிரித்த பெரியவா, “இனிமே என் வம்புக்கு வரமாட்டியோல்யோ?” என்று கை தூக்கி ஆசிர்வதித்தார்…

 

source::::www.periva.proboards.com

natarajan

Read more: http://www.periva.proboards.com/thread/1207/fast-feast#ixzz2xFGBx7Gw

” நாகேஷை நடிகராக்கிய நாடக நடிகர் ….” !!!

 

கிருஷ்ணா ராவ் – ருக்மணி அம்மாளின் ஒன்பது குழந்தைகளில் கடைக்குட்டியாகப் பிறந்தவர் நாகேஷ். அப்பாவின் சட்டைப் பையிலிருந்து பணம் திருடி, அடிக்கடி சினிமா பார்க்கும் பழக்கம் உள்ளவராக இருந்தார். ஆனால், சினிமா வில் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. பள்ளிக்கூட நாடகங்களில் ஆர்வத்துடன் நடித்தபோதிலும் படிப்பில் முழுக் கவனம் செலுத்தி முதல் மாணவராக இருந்தார்.

கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் படிக்கும்போது அம்மை நோய் தாக்கியதில் முகம் முழுக்கத் தழும்புகள் ஏற்பட்டதில் ரொம்பவே கலங்கிப்போய்விட்டார். உள்ளூரில் இருக்கப் பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறி ஐதராபாத்துக்குச் சென்று பல வித வேலைகளைச் செய்தார். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக இருந்த அப்பாவின் ஆலோசனைப்படி ரயில்வே தேர்வு எழுதி சென்னை மண்டலத்தில் குமாஸ்தாவாகப் பணியில் சேர்ந்தார்.

மேற்கு மாம்பலத்தில் தங்கியிருந்த அவருக்குக் கவிஞர் வாலி (அப்போது வாலி அல்ல, ரங்கராஜன். சினிமாவுக்குப் பாட்டெழுதத் தீவிரமாக முயற்சி செய்துவந்தார்), ‘தங்கப் பதக்கம்’ ஸ்ரீகாந்த், பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான தாராபுரம் சுந்தர்ராஜன் ஆகியோர் நண்பர்களாக இருந்தார்கள். இவ்வளவு சினிமா வாசனை பக்கத்தில் அடித்துக்கொண்டிருந்தபோதும் நாகேஷின் மனம் சினிமாவை நாடவில்லை. அப்படி நாட வைத்தது ஒரு பிழை செய்த பேறு.

அவர் குடியிருந்த அறைக்குப் பக்கத்தில் இருந்த தேவி பாடசாலையில் நாடக கோஷ்டிகள் அடிக்கடி ஒத்திகை நடத்துவார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அங்கு சென்று வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார் நாகேஷ். அப்படி ஒருநாள் போகும்போது ஒரு நடிகர் கம்ப ராமாயணத்தில் வரும் குகன் படலப் பாடலைத் தப்புத்தப்பாய்ப் பாடியிருக்கிறார். சின்ன வயது முதல் சிறு பிசகுமில்லாமல் மனப்பாடம் செய்துவைத்திருந்த கவிச்சக்ரவர்த்தி கம்பனின் பாடலை ஒரு நடிகன் கொடூரமாகக் கொலை செய்வதை அவரால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. திடகாத்திர மான அந்த நடிகரைத் திருத்த முயன்ற நாகேஷ், அவர் முன் போய் நின்றார்.

“சார்! தப்பா நெனைக்காதீங்க. இஷ்டப்பட்டு கம்பன் எழுதின பாட்டை நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு தப்புத்தப்பா பாடறீங்க. நான் வேணும்னா அந்த வரிகளை தெளிவா எழுதித் தரட்டுமா?’’ என்று நாகேஷ் கேட்டதும் ஆத்திரம் அடைந்துவிட்டார் அந்த நடிகர். “யாருய்யா கண்டவனை எல்லாம் உள்ளே விட்டது?’’ என்று கம்பெனி ஆட்களைப் பார்த்து சத்தம்போட்டுவிட்டு, நாகேஷை மிக நெருங்கி வந்து, “நடிப்புனா என்னன்னு தெரியுமா? ஒம்மூஞ்சிக்கெல்லாம் நடிப்பு வருமா? இப்போதைக்கு உன்னோட மொகத்துல மட்டும்தான் தழும்பு இருக்கு. இன்னும் கொஞ்சம் நேரம் இங்கே இருந்தீன்னா ஒடம்பு முழுக்க தழும்பாயிடும்’’ என்று எச்சரித்ததைப் பார்த்து நாகேஷ் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

அன்று இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்தார் நாகேஷ். மறுநாள் அலுவலகத்தில், நாடகம் நடத்தும் மாராவிடம் வாய்ப்பு கேட்டார். முதலில் ஏளனமாகப் பார்த்து மறுத்தவர், நாகேஷின் தொடர் கெஞ்சலால் சம்மதித்தார். வயிற்று வலிக்காரன் வேடம்.

முதலில் மேடையில் தோன்றிய நாகேஷ், ‘அம்மா’ என்ற ஒற்றை வார்த்தையை, வயிற்றைப் பிடித்தபடி பல மாடுலேஷன்களில் பேச, கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது. தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., வயிற்று வலிக்காரனாக நடித்தவரின் பெயரென்ன என்று கேட்டுத் தெரிந்துகொண்டு நாகேஷுக்குப் பரிசுக் கோப்பை வழங்கினார். பிறகு சினிமா அவரை அரவணைத்துக்கொண்டது. நகைச்சுவை வேடம், குணசித்திர வேடம் எனப் பல விதமான பாத்திரங்கள் ஏற்று நடித்த அவர், நாயகனாகவும் கலக்கினார். ‘அதிர்ஷ்டக்காரன்’ படத்தில் இளம் நாயகி படாபட் ஜெயலட்சுமிக்கும் முன்னணிக் கதாநாயகியாக இருந்த கே.ஆர். விஜயாவுக்கும் ஜோடியானார்.

எடுத்துக்கொண்ட வேடம் எதுவானாலும் அதில் பட்டையைக் கிளப்பிய அந்த மாபெரும் கலைஞன் திரையுலகில் நுழையக் காரணமாக அமைந்த அந்த நாடக நடிகருக்குத்தான் தமிழ் சினிமா நன்றி சொல்ல வேண்டும்.

source::::The Hindu….Tamil
natarajan

Message For the Day…” Spend some time Daily for Prayers…”

Just as you attend to the needs of the body regularly, feeding it three times a day to keep it in good running condition, so too spend some time regularly to keep your inner consciousness in good trim. Spend one hour in the morning, another at night and the third in the early hours of the dawn (the Brahma Muhurtha) for japam (contemplation) and meditation on the Lord. You will find great peace descending upon you and new sources of strength welling up within as you progress in this spiritual practice (Sadhana). After sometime, the mind will dwell on the Name, wherever you are and whatever you are engaged in. Peace and Joy will become your inseparable companions.

 

Sathya Sai Baba

 

Image of the Day…

 

MoonDay

The waning crescent moon on the morning of March 26, by VegaStar Carpentier Photography.

Photo credit: Vegastar Carpentier Photography

Here is the waning crescent moon over France on the morning of March 26, 2014. A waning crescent moon is sometimes called an old moon. It’s seen in the east before dawn.

Thank you to our friend VegaStar Carpentier for sharing this photo with us! You can see more of VegaStar Carpentier’s moon photos here

The March 27 moon was near Venus. Miss them? Photos here.

source::::earth sky news site

natarajan

 

 

Moon, Venus, Mercury before sunrise March 28

” சாமி கும்பிடனும்னு நினைத்தாலே , சாமி கும்பிட்ட மாதிரி… ”

 

கிராமத்தில் முகாம். விவசாய வேலை செய்யும் ஒரு பெண்மணி, தரிசனத்துக்கு வந்தாள் .

பெரியவாள் எதிரில் கையை கூப்பிக்கொண்டு நின்றாள். நெஞ்சு படபடவென்று அடித்து கொண்டிருந்தது.

“என்ன வேலை பண்றே?”

“வயல் வேலைக்கு போறேன், சாமி. ஆறு பசங்கள். மாமியா, என்கிட்ட இருக்கு. காலையிலே சோறாக்கி வெச்சிட்டு போயிடுவேன். இருட்டினப்புறம்தான் வீட்டுக்கு வருவேன். நான் எப்படி சாமியை கும்பிடறது? கோயிலுக்கு போறது? உடம்பும் களைச்சுப் போவுது. சாமி கும்பிடவே நேரமில்லே, சாமி..”

பெரியவாளின் திருக்கண்கள் கருணையால் நிரம்பியிருந்தன.

“சாமி கும்பிடனும்னு நினைகிறையே, அதுவே சாமி கும்பிட்ட மாதிரிதான்!

“காலையிலே சூரிய உதயம் ஆனவுடன், கிழக்கே சூரியனை பார்த்து ஒரு கும்பிடு போடு. சாயங்காலம் விளக்கு வச்சவுடனே மேற்கு திக்கு பார்த்து ஒரு கும்பிடு போடு.

“நீ கர்மயோகி. ஒரு விநாடி நேரம் தெய்வத்தை நினைச்சாலே போறும் – சகல புண்யமும் கிடைச்சிடும்..”

பெண்மணி கண்களை துடைத்து கொண்டாள். “சூரியனை கும்பிடு – சகல புண்ணியமும் கிடைச்சிடும்!” என்ன ஆறுதல்! என்ன கருணை!

பெரியவாள் பல வகையான பழங்களை அந்த பெண்மணிக்கு கொடுக்க சொன்னார்கள். தீனமாக வந்த மங்கை, திரும்பி போகும்போது, அரசியாக – மங்கயர்கரசியாக போனாள்.

பெரியவாள் ஞான சூரியன். கும்பிட்டாலே போதும் – சகல புண்ணியமும் கிடைச்சிடும்!   

source:::::www.periva.proboards.com

natarajan

 

Read more: http://www.periva.proboards.com/thread/2749/worship-sun#ixzz2x93e4r1c