
source::::glasbergen.com
natarajan

“ஒபாமா, மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் எல்லாம் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் நான் முடிவு செய்வேன். வீட்டில் யார் துணி துவைப்பது, பாத்திரம் துலக்குவது போன்ற வேலைகளை என் மனைவி முடிவு செய்வாள்’’ என்ற கணவன் – மனைவி ஜோக் இங்கு மிகப் பிரபலம். ஆனால், நாளாக நாளாக இந்த ஜோக் உண்மையாகிவருகிறது. இப்போதெல்லாம் ஒபாமா என்ன செய்ய வேண்டும், மன்மோகன் சிங் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் யார் வேண்டுமானாலும் முடிவுசெய்கிறார்கள். கேட்கவோ பார்க்கவோ ஒரு கூட்டம் இருக்கிறது என்பதற்காக டி.வி-யிலோ, சமூக ஊடகங்களிலோ எல்லாப் பிரச்சினைகளுக்கும் கருத்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக எழுதப்பட்டது அல்ல இந்தக் கட்டுரை. ஆனால், எல்லாப் பிரச்சினைகளுக்கும் நம்மாட்கள் எப்படி அடுத்தடுத்த நிமிஷங்களில் கருத்து சொல்கிறார்கள் என்பதை யோசித்துப்பாருங்கள்… பிரமித்துப் போவீர்கள். ஒருவர் ஒரு விஷயத்தில் நிபுணராக இருக்கலாம்; இரண்டு விஷயங்களில் நிபுணராக இருக்கலாம். அதெப்படி எல்லா விஷயங்களிலும்? தெரியவில்லை!
சமூக வலைதளங்களில் பின்னிஎடுக்கும் ஒரு நண்பர் சொன்ன தகவல் இது, “சனிக் கிழமை மதியத்துக்குப் பிறகு ஃபேஸ்புக்கில் போடும் ஸ்டேட்டஸுக்கு மதிப்பு கிடையாது. காலையில் 11 மணிக்கும் மதியம் 3 மணிக்கும் ஸ்டேட்டஸ் போட்டுப்பாருங்கள், நல்ல ஹிட்ஸ் அள்ளும்.”
நம்மூரில் வணிக நிர்வாகவியல் படிப்புகள் வந்த புதிதில், அதற்காகப் பிரத்யேக மாகப் பேராசிரியர்கள் யாரும் கிடையாது. கல்லூரிகளில் என்ன செய்வார்கள் என்றால், பெரிய நிறுவனங்களில் இருக்கும் அதிகாரிகளை அழைத்து வந்து, எப்படி நிறுவனங்களை நடத்த வேண்டும், பிரச்சினை களை எப்படிக் கையாள வேண்டும் என்று பாடம் எடுப்பார்கள். கூடிய சீக்கிரம், அதுபோல டி.வி. சேனல்களுக்குச் செல்லும் முன்பு அங்கு இருப்பது நீல நிற மேடைப் பின்னணியா, பச்சை நிறப் பின்னணியா; எந்தப் பின்னணிக்கு எப்படிப்பட்ட ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும்; நாற்காலியில் நேராக அமராமல் கால் மேல் கால் போட்டு 40 டிகிரி கோணத்தில் சாய்வாக ஏன் அமர வேண்டும்; எதை எடுத்தாலும் முந்திக்கொண்டு எப்படிக் கருத்துச் சொல்ல வேண்டும்; ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவிக்கும்போது எந்தக் கிழமை எந்த நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றெல்லாம் வகுப்புகள் நடத்துவார்கள்போல கருத்துப் புயல்கள்.
“இர்பான் பதான் பந்து வீசும் சமயத்தில் என் அருகில் இன்னொரு வர்ணனையாளராக வாசிம் அக்ரம் இருப்பார். அதுபோன்ற சமயத்தில் நான் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ பற்றிப் பேசக் கூடாது என்பது எனக்குத் தெரியும்’’ – இது கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே சொன்ன வார்த்தைகள். சச்சின் எப்படி பேட் பிடிக்க வேண்டும் என்று கருத்துச் சொல்பவர்கள் பலர் கிரிக்கெட்டே தெரியாதவர்கள்.
கொஞ்சம் தெரிந்தவர்கள் இப்படிக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்றால், ஒன்றுமே தெரியாதவர்கள், “இப்போதுதான் படத்துக்குப் போனேன்; சாயங்காலம் குளிக்கப்போகிறேன்” என்றெல்லாம் பதிவு போட்டுக் கொல்கிறார்கள். ஸ்டேட்டஸ் போடுவது ஒரு போதை என்றால், எத்தனை லைக்ஸ் விழுந்திருக்கின்றன என்று எண்ணிக்கொண்டே இருப்பது போதை ஊறுகாய். மது போதைக்குக்கூட ஓர் எல்லை உண்டு. இந்த போதைக்கு?
வாசு கார்த்தி – தொடர்புக்கு: vasucarthi@gmail.com
In 1999, 37 year old Bill Morgan was a truck driver living in a travel trailer in Australia. That’s when disaster struck- while working, he got in a pretty bad accident that he nonetheless survived. However, medication he was given during his recovery resulted in him having an extreme allergic reaction that ultimately caused his heart to stop.
After being clinically dead for fourteen minutes, they were able to get his heart going again. Sometimes with that span, the person may have suffered brain damage and may even be essentially a vegetable, though there are many factors involved as to whether that will be the case (more on this very soon in an upcoming article from our resident writer who is also a paramedic).
In Morgan’s case, it at first looked like that might have happened. After they got his heart going again, he was comatose and given how long he’d been clinically dead for, it was recommended twice that life support be removed and he be allowed to die.
Nonetheless, after 12 days, he miraculously came out of his coma and was, shockingly, completely fine, suffering no apparent brain damage or other long term problems from the event.
Not being interested in driving truck anymore, he then found a different job and- as near death experiences are wont to do, it made him reevaluate his life, including within a year making the decision to propose to Lisa Wells, his long-time girlfriend.
She accepted.
No doubt feeling pretty lucky not only to be alive, but to have his girlfriend agree to marry him, he bought a scratch lottery ticket. The result? He won a car worth about $17,000 Australian (today about $23,903 US and $25,099 Australian).
Normally winning a car isn’t a big enough story to get the media to pay attention to you, but given that Morgan had recently been clinically dead for 14 minutes, the local Melbourne news decided to do a feature on him.
In the process, they asked Morgan if he wouldn’t mind buying another lotto ticket and then scratching it off on camera for them, as a sort of re-enactment of his winning scratch.
He happily obliged. After scratching the ticket on camera, though, he stopped, looked at the camera, and rather than be excited and saying something like “I just won a car” as part of the reenactment, he instead said “I just won $250,000. I’m not joking!” This was the jackpot for that particular scratch lotto he was playing (today about $369,102 Australian or $351,526 US ).
Needless to say, the reporters on scene got more than they bargained for during the reenactment, as did Morgan, who immediately called his fiancée to tell her the good news about his win and that they would now be able to get a house.
As for his fiancée, of the second win, she told the media, “I just hope he hasn’t used all his good luck up”.
source:::::today i foundout.com
natarajan
எங்காவது ஒரு ரூபாய்க்கு தோசை கிடைக்குமா? அதுவும் இந்தக் காலத்தில்… தமிழரசுவின் மினி ஓட்டலில் கடலைச் சட்னி, சாம்பார் சகிதம் சுடச்சுட ஒரு ரூபாய்க்கு தோசை தருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு பக்கத்தில் இருக்கிறது திருவம்பட்டு. பச்சைக் கம்பளத்தை விரித்துப் போட்டதுபோல் சுற்றிலும் வயல்கள்.. அதன் மத்தியில் அமைந்திருக்கும் எழிலான இந்த கிராமத்தில்தான் தமிழரசுவின் ஒரு ரூபாய் தோசைக்கடை உள்ளது. கிராமத்து மணம் கமழும் சிறிய கடை என்றாலும் காலையில் வியாபாரம் களைகட்டி விடுகிறது.
“அந்தக் காலத்துல எல்லாம் தீபாவளி, வருஷப் பொறப்புன்னாதான் எங்க வீடுகள்ல இட்லி, தோசையைப் பாக்க முடியும். மத்த நாள்ல பழைய கஞ்சியோ கூழோதான். நம்ம புள்ளைங்க தினமும் இட்லி, தோசை சாப்பிடணும்கிறதுக்காக இந்த கடையை ஆரம்பிச்சேன். ஆனா, இப்ப இந்த ஊரு சனமே வந்து சாப்பிட்டுப் போகுது’’ அகவை அறுபதைக் கடந்த தமிழரசு தனது மலிவு விலை தோசைக்கடைக்கு அறிமுகம் கொடுத்தார்.
கடையின் ஒரு பகுதியில் பெரிய தோசைக் கல்லில் ஒரே நேரத்தில் பத்துப் பதினைந்து தோசைகளை வரிசைகட்டி வார்த்துக் கொண்டிருந்தார் தமிழரசுவின் மருமகள் ஷீலா. இன்னொரு பக்கம் ஷீலாவின் கணவர் ஜீவா, மந்தார இலையில் பார்சல் கட்டிக் கொண்டிருந்தார்.
கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து தோசைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு தமிழரசுவிடம் பேச்சுக் கொடுத்தோம்…
நான் சின்னப் புள்ளையா இருந்தப்ப கருக்கல்லேயே கழனிக்கு போயிடுவேன். காலையில பத்து மணிக்கு அம்மா கூழ் கொண்டாருவாங்க. அதைக் குடிச்சிட்டு வேலை செய்வோம். மத்தியானத்துக்கு பழைய சோறும் வெங்காயமும். ராவிக்கு (இரவு)தான் சுடுசோறு. இட்லி, தோசை எல்லாம் தீபாவளிக்கு தீபாவளிதான்.
கல்யாணம் முடிஞ்சதும் ஓட்டல் கடை ஆரம்பிக்கலாம்னு முடிவு செஞ்சேன். வீட்டுக்காரியும் தலையாட்டினா. 1984ல ரோட்டோரமா குடிசை போட்டு கடை ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல 10 பைசாவுக்கு தோசை குடுத்தோம். அப்புறம் 25 பைசா, 50 பைசா, 75 பைசான்னு ஏத்திக்கிட்டே வந்து 2000ல ஒரு ரூபாயாக்குனோம். அதுக்குப் பின்னாடி 13 வருஷமா விலை ஏத்தல. ஊர்க்காரங்க சப்போர்ட் இருந்தா நீங்ககூட ஒரு ரூபாய்க்கு தோசை குடுக்கலாம். மொத்தத்துல, இது நமக்கு நாமே திட்டம் மாதிரித்தான்… பெருமிதமாய் சொன்னார் தமிழரசு.
“ஒரு ரூபாய்க்கு தோசை குடுத்தா கட்டுப்படி ஆகுமா?’’ என்ற கேள்விக்கு பதில் சொன்னார் ஷீலா. “கிராமத்துல வெளையுற உளுந்து, நெல்லு எல்லாமே கம்மியான ரேட்டுக்கு எங்களுக்கு குடுக்குறாங்க. அதனால எங்களுக்கு கையக் கடிக்காது. சனங்ககிட்டயிருந்து அரிசி, உளுந்து சல்லிசா வாங்கி, அவங்களுக்கே கம்மி விலைக்கு தோசை குடுக்குறோம். வீட்டாளுங்களும் சாப்பிட்டது போக தினத்துக்கு முந்நூறு, நானூறு ரூபாய் கையில நிக்கும். பணம், காசுக்கு அதிகமா ஆசைப்படாம, மக்கள் நினைச்சா எல்லா ஊர்லயும் இதுபோல தோசைக்கடை போடலாம்’’ என்றார் ஷீலா.
வெங்காய விலை எகிறிக் கிடப்பதால் காரச்சட்னியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தி ருக்கிறார்கள். கடலைச் சட்னியும், சாம்பாரும் ஏழெட்டு தோசைகளை உள்ளே தள்ள வைக்கிறது. டிப்ஸ் கொடுக்கும் காசில் காலை டிபனை முடித்துவிடலாம் திருப்தியுடன்.

பிரதமர் மன்மோகன் சிங் அபூர்வமாக, “இந்தியாவின் தேசிய அவமானம் இது” என்று ஒப்புக்கொண்ட பிரச்சினை ஒன்று உண்டு ஏழ்மை, இந்தியக் குழந்தைகளைச் சூறையாடுவது. வளர்ச்சிபற்றி வாய் கிழியப் பேசும் இந்நாட்டில்தான் ஒவ்வொரு நாளும் 3,000 குழந்தைகள் பசிக்கொடுமையால் உயிரிழக்கின்றன; 42% குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் எடை குறைந்தவையாக இருக்கின்றன. இந்தியாவில் ஏழ்மை ஒழிப்புக்கான முயற்சிகளும் வறுமை ஒழிப்புக்கான போராட்டங்களும் அவ்வளவு எளிதானதல்ல.
பல ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி வீதிகளில், குழந்தைகளுக்காக உதவி கேட்டு நின்ற அந்த எளிய மனிதரை முதன்முதலில் பார்த்தபோது ஆச்சரியம். அவர் ஒரு விரிவுரையாளர். குமுழூர் அரசு ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றுபவர். ஒரு மளிகைக் கடைக்காரரிடம் அவர் உதவி கேட்டுக்கொண்டிருந்தார். அவர் கேட்ட உதவி ஒன்றும் அவ்வளவு பெரிய உதவி அல்ல. 25 குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு அளிக்க அந்த மளிகைக் கடைக்காரர் ஏதாவது பொருட்கள் தர வேண்டும். அவ்வளவுதான். மளிகைக் கடைக்காரர் மறுத்துவிட்டார். அசராமல் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அடுத்த கடையை நோக்கிச் சென்றார் விரிவுரையாளர். அங்கும் உதவி கிடைக்கவில்லை. இன்முகத்துடன் இன்னொரு நன்றி. அடுத்த கடையை நோக்கிப் பயணம். இன்னொரு நாள் அவரை, ஒரு காய்கறிக் கடையில் பார்த்தேன். சலுகை விலையில் அதே சமயம், காய்கறிக் கடைக்காரருக்கு நஷ்டம் ஏற்படாத விலையில் காய்கறி கேட்டுக்கொண்டிருந்தார். மற்றொரு நாள் உள்ளூர் பிரமுகர் ஒருவர் வீட்டில் பார்த்தேன். மறுநாள் அந்தப் பிரமுகரின் பிறந்த நாள். எவ்வளவோ செலவுகளுக்கு மத்தியில், “ஏன் 30 குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு தரக் கூடாது?” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
நாட்டிலேயே குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம்தான் முன்னோடி என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். காலை உணவுத் திட்டத்துக்கும் முன்னோடியாகிறது தமிழகம், விரிவுரையாளர் எஸ். சிவக்குமாரால். திருச்சியின் 25 அரசு சார் பள்ளிகளைச் சேர்ந்த பல நூறு ஏழைக் குழந்தைகளின் பசியைத் தீர்க்கிறது சிவக்குமார் அறிமுகப்படுத்திய ‘சமுதாயக் காலை உணவுத் திட்டம்’.
“நான் படிச்சது அரசுப் பள்ளிக்கூடங்களிலும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களிலும்தான். எங்க வீட்டில் பெரிய கஷ்டங்கள் எதையும் நான் சந்திக்கலை. அதே சமயம், கூடப் படிச்சவங்களோட கஷ்டத்தைப் பார்த்திருக்கேன். பலரோட படிப்பு அரசாங்கம் கொடுக்குற மதிய உணவுலதான் ஒட்டிக்கிட்டு இருந்ததுங்கிறதை நேரடியா உணர்ந்திருக்கேன். ஆனா, இன்னமும் எவ்வளவு குழந்தைகளைப் பசி கொன்னுக்கிட்டு இருக்குங்கிறதை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்து, ஒவ்வொரு பள்ளிக்கூடமா ஆசிரியர்களைச் சந்திக்கப் போனப்பதான் உணர்ந்தேன்.
அரசுப் பள்ளிக்கூடங்கள்ல காலை வேளைல பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போறப்பவெல்லாம் குழந்தைங்க மந்தமா நிக்குறதை அடிக்கடி பார்த்திருக்கேன். அதே மாதிரி காலை நேர வகுப்புகள்லயும் சில பிள்ளைங்க ரொம்ப சோர்வா உட்கார்ந்திருப்பாங்க. ஒருநாள் அப்படிப்பட்ட குழந்தைங்ககூடப் பேச ஆரம்பிச்சப்பதான் ஒரு விஷயம் தெரிஞ்சுது. காலையில வெறும் டீயும் பன்னும்தான் அவங்களோட உணவுங்கிறது. ‘சில பிள்ளைங்க மயக்கம் போட்டுக்கூட விழுந்துடுவாங்க; நாங்கதான் டீயோ வடையோ வாங்கிக் கொடுப்போம்’னு ஆசிரியர்கள் சொன்னாங்க. அன்னைக்கு முழுக்க நான் சாப்பிடலை. சாப்பாட்டுல கையை வைக்கும்போதெல்லாம் அந்தக் குழந்தைங்களோட முகம் வந்து மனசை வதைச்சுடுச்சு.
எப்போதுமே என்னோட பகல் பொழுது என்னோட தொழிலுக்கானதுன்னா, சாயங்காலப் பொழுது பொதுப் பணிக்குன்னு வகுத்துக்கிட்டு வாழறவன் நான். அதுக்கு முன்னாடி எவ்வளவோ விஷயங்கள்ல நான் ஆர்வம் காட்டியிருக்கேன். படிக்காத குழந்தைகளுக்கான ‘வீதிப் பள்ளிகள்’, ‘வீடு தேடிக் கல்வி’ங்கிற மாதிரியான முயற்சிகள் அதெல்லாம். இதுக்குப் பின்னாடி, பசியைத் துடைக்குறதுதான் முதல் கடமைன்னு இறங்கினேன்.
முதன்முதலா சேவா சங்கம் பள்ளிக்கூடத்துல, அங்குள்ள தலைமை ஆசிரியை விசாலாட்சி உதவியோட இணைஞ்சு இந்தத் திட்டத்தைத் தொடங்கினேன். இன்னைக்குத் திருச்சியில மட்டும் 25 பள்ளிகள்ல காலை உணவு கொடுக்குறோம். இன்னும் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, ஏராளமான ஊர்கள்ல பலரும் இந்தத் திட்டத்தை முன்னெடுக்குறாங்க” என்று சொல்லும் சிவக்குமாரின் திட்டம் எளிமையானது.
“ஒவ்வொரு பள்ளியின் ஆசிரியர்களும் தங்களால் இயன்ற ஒரு தொகையைப் பள்ளிக் குழந்தைகளுக்காக அளிக்க வேண்டும். கூடவே, அந்தப் பகுதியில் உள்ள கொடையாளிகளை அடையாளம் கண்டு, உதவி கேட்க வாரத்தில் ஒரு நாள் மாலைப் பொழுதை ஒதுக்க வேண்டும். இவ்வளவுதான். எல்லாப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்துவிடலாம்” என்கிறார் சிவக்குமார்.
“உள்ளூர்ப் பிரச்சினைகளுக்கு உள்ளூர் வளங்களை வைத்தே தீர்வு காண்றதுதான் இதோட முக்கியத்துவம். அந்தந்தப் பகுதியில உள்ள வசதியானவங்களைத் தேடிப் பிடிப்போம். அவங்களோட பிறந்த நாள், அம்மா அப்பா நினைவு நாள் மாதிரியான முக்கியமான நாட்கள்ல குழந்தைகளுக்கு உணவு கொடுக்கச் சொல்லிக் கேட்போம். தவிர, அரிசி கொடுக்குறவங்க அரிசி கொடுக்கலாம்; மளிகைச் சாமான்கள் கொடுக்குறவங்க மளிகைச் சாமான்கள் கொடுக்கலாம். விறகுன்னு சொல்லி ரெண்டு மரத்துண்டுகளைக் கொடுத்தால்கூட வாங்கிப்போம். மளிகைக் கடைக்காரர்கள், காய்கறிக் கடைக்காரர்கள்கிட்ட சலுகை விலையில பொருட்களைக் கேட்டு வாங்குவோம். நன்கொடையாளர்களை நேரடியா கடைக்காரர்கள்கிட்டே பணத்தைக் கொடுக்கச் சொல்லிடுவோம். மதிய உணவு சமைக்கிற ஆயாக்களே கொஞ்சம் முன்னாடி வந்து சமைச்சுத் தந்துடுவாங்க.”
இந்தத் திட்டத்தின் முக்கியமான இன்னோர் அம்சம்: முறைகேடுகளுக்கு வழி இல்லாமல் நடத்தப்படுவது.
“உதவியை ஒரு ரூபாய்கூடப் பணமா வாங்குறது இல்லை. ஒண்ணு, உணவை நேரடியா சமைச்சு நீங்களே வந்து தரலாம்; இல்லைன்னா, பொருளா தரலாம். பொருட்கள் எல்லாமே பள்ளிக்கூடங்கள்ல எல்லோர் பார்வையிலேயும் இருக்குறதாலேயும் எல்லோரோட பங்களிப்பாலும் இது நடக்குறதாலேயும் வரவுசெலவுல முறைகேட்டுக்கு வழி இல்லை” என்கிறார்.
“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுங்களா? உலகத்துல இருக்குற எடை குறைவான குழந்தைங்கள்ல சரிபாதிக் குழந்தைங்க நம்ம இந்தியக் குழந்தைங்க. பல ஆப்பிரிக்க நாடுகளைவிட மோசமான சூழல்லதான், பசி பட்டினியில இன்னைக்கும் நாம இருக்கோம். 100 ரூபாய் இருந்தா போதும்; 20 பிள்ளைகளுக்கு ஏதோ ஒரு கட்டுச்சாதமும் துவையலும் கொடுத்துடலாம். 50 ரூபாய்தான் இருக்குன்னாகூட கூழ் காய்ச்சிக் கொடுத்துடலாம். பசிக்குற நேரத்துல எதுவுமே அவங்களுக்கு தேவாமிர்தம்தான். நாங்க உணவு கொடுக்க ஆரம்பிச்ச பிறகு, பல பள்ளிக்கூடங்கள்ல குழந்தைங்களோட வருகைப் பதிவு கூடியிருக்கு. நேரத்துக்குப் பள்ளிக்கூடம் வர்றாங்க. படிப்புல காட்டுற ஆர்வம் அதிகரிச்சு இருக்கு. முன்னைவிடக் குழந்தைங்க தெளிவா இருக்காங்க” என்று சொல்லும் சிவக்குமார், காந்தியிடம் சுட்டிக்காட்டுவது அவருடைய எளிமையை.
“தன்னைக் கடையனிலும் கடையனாகத்தான் எப்போதும் நெனைச்சுக்கிட்டு இருந்தார் காந்தி. அந்த நெனைப்பு இருந்தா போதும். யாரிடமும் இணைஞ்சுக்கலாம். நான் என்னை அப்படித்தான் நெனைக்குறேன். நீங்க உதவின்னு சொல்றதைத்தான் நான் இணைஞ்சுக்குறதுன்னு சொல்றேன்; ஏன்னா, சமூகத்துல எல்லா நல்ல காரியங்களுமே நாலு பேர் கூடுறதாலதான் சாத்தியமாகும்” இணையக் கூப்பிடுகிறார் சிவக்குமார்.
சமஸ் – தொடர்புக்கு: writersamas@gmail.com
சமூகம்|லைஃப்ஸ்டைல்|சேவை| source::::: The Hindu…Tamil
ஏழையான கிழவி. அவளுக்கு மகேஸ்வரனைத் தெரியாது. மஹாபெரியவாளைத் தான் தெரியும்.
தினமும் வந்து வந்தனம் செய்வாள்.
பல செல்வந்தர்கள், பெரியவாளுக்குக் காணிக்கையாக, விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டுவந்து சமர்ப்பணம் செய்வதைப் பார்த்து, ‘தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே’ என்று ஏங்கினாள். ஒருநாள் மனமுருகி பெரிய்வாளிடம் சொல்லி விட்டாள்.
பெரியவாள் சொன்னார்கள் :
“அவர்கள் கொண்டுவந்து கொடுக்கிற எந்தப் பொருளையும் நான் தொடுவதுகூட இல்லை; நான் ஆசைப்பட்டுக் கேட்டதும் இல்லை; என் மனசுக்குப் பிடிக்குமான்னும் அவா நினைச்சுப் பார்த்ததில்லே! எனக்குப் பிடிச்ச ஒரு வேலை சொல்றேன், செய்கிறாயா?”
பாட்டி தவிப்போடு காத்து நின்றாள்.
“மாட்டுக் கொட்டிலில் இருந்து பசுஞ்சாணி எடுத்து, வரட்டி தட்டு. காய வைத்துக் கொண்டுவந்து கொடு. மடத்திலே தினமும் ஹோமம் நடக்கிறது. சுத்தமான பசுஞ்சாணி வரட்டி உபயோகப்படுத்தணும். அந்த நல்ல கார்யத்தை நீ செய்யேன்…”
பாட்டியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!
கோடிகளைப் புறக்கணிக்கும் பெரியவாள், வரட்டிகளைக் கேட்டு வாங்கிக் கொள்கிறார் – ஒரு பாட்டியிடமிருந்து.
ஒரு வரட்டி ஒரு கோடி பெறுமோ?
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
source::::periva.proboards.com
natarajan
Read more: http://periva.proboards.com/thread/5555/experience-mahaperiyavaa#ixzz2jBptfOCt