Message For The Day….Don”t Expect Grace of God by Simply Visiting Sacred Places …

You ask for Grace, which is rare and is available at a high cost. However, you pay only trash and are disappointed that you are unable to secure it! Isn’t it sheer avarice! You claim that you have been visiting Puttaparthi (or other sacred places) and have served there, longer than 18 years or so and expect huge chunks of Grace. But it is not the years that matter – what matters is the depth to which the roots of Karma (past actions) have grown from your previous births. It takes a long time and systematic effort to clear the field of all those growths – that effort is the sadhana, of good actions and worship (Karma and Upasana).

 

Sathya Sai Baba

கொஞ்சம் சிரிங்க !!!

வகுப்பறை ஓரத்தில் ஓர் உயரமான பையன் நின்றிருந்தான். அவனது கவனம் படிப்பு பக்கம் இல்லை. இதைக் கவனித்த ஆசிரியர் அவனை அழைத்து கேள்விகள் கேட்டார்.
“”பானிபட்டு போர் எப்போது நடந்தது?”
“”தெரியாது சார்”
“”போரஸ் பத்தி சொல்லு”
“”எனக்குத் தெரியாது”
“”சரி, குப்தர்களில் முதல் மன்னன் யார்?”
“”தெரியாது”
“”எல்லாக் கேள்விக்கும் தெரியாது.. தெரியாதுங்கிறியே… போன வாரம்தானே பாடம் நடத்தினேன்.. அப்ப நீ எங்கே போயிருந்தே?”
“”டூர் போயிருந்தேன்”
“”வெட்கமா இல்லை உனக்கு? ஒரு கேள்விக்குக் கூட பதில் தெரியலை… டூர் போனேன்னு சொல்றியே?”
“”இந்தக் கேள்வியெல்லாம் என்கிட்ட ஏன் சார் கேக்குறீங்க? நான் இங்கிருக்கிற கரண்ட் மீட்டர் சரியா இருக்கான்னு செக் பண்ண வந்திருக்கேன்”
.
உடம்பை நல்லா பார்த்துக்கோ
வேளா வேளைக்குச் சாப்பிடு
சரியா தூங்கு
நீ ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கணும்
ஏன்னா…
டிஸ்கவரி சேனல்ல சொன்னாங்க….
கொரில்லா இனம் அழிஞ்சிட்டு வருதாம்.
source :::::Dinamani …Tamil Daily

natarajan

படித்ததில் பிடித்தது …டாக்ஸி டிரைவராக மாறிய பிரதமர் !!!!

ஜூன் மாதம். மதியம்.

பிரதமர் தனது அலுவலகத்தில் உள்ள ஓர் அறைக்குள் நுழைகிறார். வெளியே வரும்போது அவர் உடை மாறியிருக்கிறது. ஒரு டாக்ஸி டிரைவரைப் போல உடை. கண்களில் சன் கிளாஸ். தலையில் தொப்பி.

கறுப்பு நிற மெர்சிடெஸ் டாக்ஸியில் டிரைவர் சீட்டில் ஏறி அமர்கிறார் பிரதமர். தலைநகரின் மையப் பகுதிக்குக் கார் பறக்கிறது. சாலையில் ஒருவர் டாக்ஸிக்காக கையை நீட்டுகிறார். அவரை ஏற்றிக் கொண்டு கார் செல்கிறது. பிரதமர் டாக்ஸி டிரைவராக இருந்து கொண்டு, பின் சீட்டில் அமர்ந்திருக்கும் பயணியிடம் பேச்சுக் கொடுக்கிறார். அரசியல், தொழில், பொருளாதார வளர்ச்சி என்று ஏதேதோ பேசிக் கொண்டே போகிறார். பிரதமர் என்று தெரியாத பயணி தனது மனதில் பட்டதை எல்லாம் எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்கிறார்.

“இதுக்குத்தானே இந்த வேஷம்?’ என்று மனதுக்குள் மகிழ்கிறார் பிரதமர்.

இது ஏதோ திரைப்படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சியல்ல.

அந்தக் காலத்து மன்னர்கள் மாறுவேடமணிந்து நகர்வலம் வந்ததைப் போல இந்தக் காலத்தில் ஒரு பிரதமர் உண்மையாகவே இப்படிச் செய்திருக்கிறார், நார்வே நாட்டின் பிரதமர் ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க்.

நார்வேயில் வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து பதவியில் இருக்கிறது இடதுசாரிகளின் ஆதரவு பெற்ற லேபர் பார்ட்டி. லேபர் பார்ட்டிக்கு இந்த ஆண்டு தேர்தலில் கணிசமாக வாக்குகள் குறையும் என்று ஒரு கருத்துக் கணிப்பு சொன்னது. இது உண்மைதானா? மக்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்று நேரடியாகத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார் லேபர் பார்ட்டியைச் சேர்ந்த பிரதமர் ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க்.

வயது 54 ஆனாலும் இளைஞனுக்குரிய குறும்புத்தனம் இன்னும் போகவில்லை. அதனால் அவர் டாக்ஸி டிரைவராக உருமாறினார். காரில் ரகசியமாக வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

இத்தனைக்கும் அவர் கார் ஓட்டி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. காரில் கிளட்சை அழுத்துவதாக நினைத்துக் கொண்டு தானியங்கி பிரேக்கை மிதித்து, அடிக்கடி காரை பயங்கரமாகக் குலுங்கச் செய்திருக்கிறார். பயங்கரமான அதிர்வுடன் கார் அவ்வப்போது நின்று, தலைநகர் ஆஸ்லோவின் வீதிகளில் பயணித்திருக்கிறது. காரில் பயணம் செய்தவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். காரை விட்டு இறங்கியதும் தங்களுடைய கருத்தை வெளிப்படையாகச் சொன்னார்கள்.

“”நீங்கள் கார் ஓட்டியது படுமோசமாக இருந்தது. இவ்வளவு படுமோசமான டிரைவிங்கை என் வாழ்க்கையில் இதுவரை நான் அனுபவித்ததேயில்லை”

இன்னொருவர் சொன்னார்: “”நான் உயிருடன்தான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். கடவுளுக்கு நன்றி”

இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க்.

“”மக்கள் உண்மையிலேயே என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது எனக்கு முக்கியம். மக்கள் மனதில் நினைப்பதை எந்தத் தடையுமில்லாமல் பேசும் இடம் டாக்ஸி என்பதால் டாக்ஸி டிரைவராக மாறினேன். இன்றைய அரசியலைப் பற்றி மக்களின் நேர்மையான விமர்சனத்தைத் தெரிந்து கொண்டேன்” என்கிறார் அவர்.

அவர் கார் ஓட்டிக் கொண்டே பயணிகளிடம் பேச்சுக் கொடுத்தது, பயணிகள் அவரிடம் பேசியது எல்லாம் வீடியோவில் பதிவாகி, இப்போது இணைய தளங்களின் மூலம் உலகம் முழுவதும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

“”நீங்கள் தேர்தலில் தோற்றுவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகி டாக்ஸி டிரைவர் ஆகிவிடுவீர்களா?”

என்று ஓர் இளம் பத்திரிகை நிருபர் குறும்பாகக் கேட்டார்.

அதற்கு ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க் சிரித்துக் கொண்டே சொன்னார்:

“”நான் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானால் நாட்டுக்கும், தோல்வியடைந்தால் டாக்ஸி டிரைவராகி பயணிகளுக்கும் என்னால் முடிந்த அளவுக்குச் சிறப்பாகப் பணியாற்றுவேன்”

இது தேர்தலுக்கான ஸ்டண்ட் என்று காட்டமாக விமர்சித்திருக்கிறது நார்வேயின் கன்சர்வேட்டிவ் கட்சி.

இப்படி ஸ்டண்ட் அடிக்கவும் துணிச்சல் வேண்டுமே?

 

source:::: Dinamani tamil daily.

natarajan

படித்ததில் பிடித்தது ….தோப்புக்கரணம் எதற்காக ?…

விஷ்ணு காத்தல் தொழில் புரிய வேண்டி அதற்காக சில ஆயுதங்களைப் பெற்றார். அதில் ஒன்று சக்ராயுதம். அவர் அந்தச் சக்கரத்தை ஒரு போரில் ஏவ, அது சக்தி இழந்து திரும்பி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விஷ்ணு, வேறு ஒரு வலிமையான ஆயுதம் வாங்குவதற்காக சிவனை வழிபடச் சென்றார்.

அப்போது வாசலில் இருந்த விநாயகப் பெருமானை வணங்காமல் விஷ்ணு உள்ளே சென்றார். இதனால் விஷ்ணு மீது விநாயகருக்கு கோபம் வந்தது. இதை அறியாத விஷ்ணு, சிவனை போற்றி வணங்கி 1000 தாமரை மலர்களால், சிவனின் ஆயிரம் திருநாமங்களாகிய சஹஸ்ர நாமம் கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை செய்தார். மனம் மகிழ்ந்த சிவபெருமான் முன்பொரு முறை ஜலந்தாசுரன் என்ற அரக்கனை மாய்க்க தம் கால் நகங்களால் உருவாக்கி இருந்த சக்கரப் படையை விஷ்ணுவுக்கு கொடுத்தார். விஷ்ணு திரும்பி வரும்போது வாயிலில் இருந்த விநாயகப் பெருமான் வழிமறித்தார்.

விஷ்ணுவின் கையிலிருந்த சக்கரத்தை பிடுங்கி தம் வாயில் போட்டுக்கொண்டார். அதனைக் கண்டு அதிர்ந்த விஷ்ணு, தாம் விநாயகப் பெருமானை வணங்காது சென்றது தவறுதான் என்பதை உணர்ந்தார். அவரை வணங்கி, தமது நான்கு திருக்கரங்களாலும் இரு காதுகளையும் பற்றிக்கொண்டு பலமுறை உட்கார்ந்து எழுந்து தோப்புக்கரணம் போட்டார். இந்தச் செயல் நகைச்சுவையாக இருந்ததால் விநாயகர் கோபம் மறந்து விழுந்து விழுந்து சிரித்தார்.

அப்போது அவர் வாயில் இருந்த சக்கரம் வெளியில் விழுந்தது. அதனை எடுத்து விநாயகப் பெருமானிடம் வணங்கி ஆசி பெற்றார் விஷ்ணு. இந்த கணபதி விகடச்சக்கர விநாயகர் எனப் போற்றப்படுகிறார். இவர் காஞ்சி

புரம் கோயிலில் வீற்றிருந்து அருளாட்சி செய்கிறார். இப்படி தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து அருள்புரிவார் என்பதாலேயே இச்செயல் நடைமுறைக்கு வந்தது.

 

source ::::Dinamani …Tamil daily

natarajan

படித்ததில் பிடித்தது … ” எது மூட நம்பிக்கை ” ?

ஆண்டவன் மீதும் சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கும் நம்பிக்கையே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவாளர்கள் உண்டு. அவர்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் கெட்டிக்காரத்தனம் என்றும் நம்முடைய நம்பிக்கைகள் மட்டும் மூடத்தனம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். நான் சொல்கிறேன். நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை… எதுவும் கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத்தனம். அதிலே தனியாக ஒரு மூட நம்பிக்கை ஏது?

 

 

 

நம்பிக்கை என்பது இப்படி நடக்கும் என்று ஆசைப்படுவது. அப்படி நடக்காமலும் போய்விடலாம். அப்போது அது மூடத்தனமாகிவிடுகிறது. ஆண்டவனை நம்புவதிலும், அதே நிலைதான். அது தோல்வியுற்றால் மூடத்தனம். வெற்றி பெற்றால் கெட்டிக்காரத்தனம்.

ஆகவே, நம்பிக்கை என்ற மூடத்தனம் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. அதில் ஆஸ்திகன் மட்டுமென்ன தனி ஜாதி! இதுவரை எந்த நம்பிக்கை எல்லா நேரங்களிலும் பலித்திருக்கிறது? ஆனால், நம்பிக்கை என்ற மூடத்தனத்தை ஏன் எல்லாருமே மேற்கொள்கிறார்கள்? அதிலே மனத்துக்கு ஒரு சாந்தி.

தெய்வ நம்பிக்கை, நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்குமாகவே ஏற்பட்டது. விஞ்ஞான நம்பிக்கையைப் போல் ஒரு கட்டத்தில் தோல்வியுற்றாலும் மறு கட்டத்தில் வெற்றி பெறுவதுதான் தெய்வ நம்பிக்கை.

“ஒரு சூத்திரதாரியின் கைப்பொம்மைகள் நாம்” என்பது மறுக்க முடியாதது. மரணம் என்ற ஒன்று, அதைத் தினசரி வலியுறுத்துகிறது. இவ்வளவுக்குப் பிறகும், தெய்வ நம்பிக்கையைச் சிலர் மூட நம்பிக்கை என்று சொல்வார்களானால், “நான் ஒரு மூடன்’ என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமைப்படுகிறேன்.

முட்டாள்தனத்தில் இருக்கிற நிம்மதி கெட்டிக்காரத்தனத்தில் இல்லை. உடம்பிலோ எல்லா நோயும் இருந்தும் “ஒன்றுமே இல்லை’ என்று நம்புகிற முட்டாள் ஆரோக்கியமாகவே இருக்கிறான். ஒரு நோயும் இல்லாமலேயே ஒவ்வொரு மயிர்க்காலையும் பார்த்து, “”இது அதுவாக இருக்குமோ? என்று ஆராய்ச்சி செய்கிற அறிவாளி, நித்திய நோயாளியாகச் சாகிறான்.

“சுடு’ என்று சொன்னவுடனேயே யாரைச் சுடுகிறோம் என்று பார்க்காமலே சுடுகின்ற படைகள்தாம் நாட்டுக்கு வெற்றி தேடித் தந்திருக்கின்றன. அந்த நேரத்தில் படைகள் பகுத்தறிவை உபயோகிக்கத் தொடங்கினால்… பகுத்தறிவு மிஞ்சும்… நாடு மிஞ்சாது!

போரில் தயக்கம் காட்டிய அர்ஜுனனைப் பார்த்துக் கண்ணன் அதைத்தான் சொன்னான்.

“போர்’ என்று வந்த பின் உறவினர்கள் என்ற ஆராய்ச்சி வெற்றிக்கு உதவாது’ என்றான். கடைசியில் கண்ணன் மீது மூடநம்பிக்கை வைத்து அர்ஜுனன் காண்டீபத்தைத் தூக்கினான். முடிவு வெற்றியாகக் கனிந்தது.

கீதையில் கர்மயோகம் மானிடக் கடமைகளை வலியுறுத்துகிறது. பக்தியோகம், தியானத்தை வலியுறுத்துகிறது. கடமையும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது. தியானமும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது.

“மனம் உண்டானால் வழி உண்டு’ என்பது பெரியோர் வாக்கு. அது மானிட தர்மத்துக்கும் பொருந்தும். தியான தர்மத்துக்கும் பொருந்தும். ஆகவே, தெய்வ நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொல்வதைப் பற்றி நான் வருந்தவில்லை. இந்த மூடனும், அந்த அறிவாளியும் நம்மிடம் தான் வரப்போகிறார்கள்” என்ற நம்பிக்கை தெய்வத்துக்கு இருக்கிறதே! யார் என்ன செய்ய முடியும்?!

 

source :::::Dinamani …Tamil Daily

natarajan

Just For Laugh !!!…” Growing Weak..Tripped and Rupeed ” !!!

Please enjoy the fun & pun.!

Growing weak , I tripped and `rupeed’
Daniel P George TNN

“I don’t make jokes,” said American humourist Will Rogers sometime in 1962. “I just watch the government and report the facts.” As the Indian government watches helplessly at the rupee hurtling down the 60s against the American dollar, Indian netizens seem to have taken a leaf out of Rogers’s book.

A science-lover posted this: It has been announced that the concept of free falling in physics will be explained using the Indian rupee as an example.

A language enthusiast added: Since the rupee is falling, let’s start using it in normal conversations like a verb. Like, “I tripped and rupeed.”

Another one thought the rupee has just become “more down to earth than necessary.”

While the rupee remained the butt of many jokes, the smarter ones couldn’t resist the temptation of linking its fall to the neighbours.

“Pakistan has stopped printing fake 500 INR notes,” said a post on a social network. “Why? Because the overheads of making the notes have increased.”

China wasn’t spared either. “I think the Chinese would leave Arunachal Pradesh alone if they knew how bad the rupee is faring.”

Someone else took a dig at RBI, saying it has replaced the rupee with onion to regain parity with the US dollar.

Another netizen prayed: Dollar on escalator; rupee on ventilator; the nation in ICU;God save India!

Not every one was lamenting— one had this desi solution to save the currency: Make the rupee tie a `rakhi’ to the dollar and say, “Meri raksha karna! Meanwhile, there was this “official
announcement” from Dalal Street that the following terms have been revised:
BSE: Bombay Se Exit,
NSE: Nation Se Exit,
F/O: Future Over,
NIFTY: No Income For This Year,
FII: Fraudulent International Investors,
HNI: Has No Idea,
PMS: Pre Mediated Scam,
SIP: Suicide by Investing Patiently,
EBITDA: Exit Before It Tumbles Down Again.

And what did the rupee have to say about all these jokes?

 

“Well, I don’t appreciate.!!!

 

source :::::: Daniel  P George in TNN

natarajan

Message For The Day….What is Required to be Pursued to Attain Divinity ….

There are two very important statements in the Bhagavad Gita, which you must take to heart and profit from: Shraddhavan Labhate Jnanam (The one steady in faith gains wisdom and liberation) and Samshayaathma Vinashyathi (Doubt leads to perdition, spiritual ruin). Dwell on these axioms and practice the spiritual disciplines of repetition of the Lord’s name and meditation on His form. Gopis of Brindavan yearned for the Lord with purity in their hearts and attained union with Him. You too must fill your mind with His beautiful form and contemplate on the glory of the Lord. Then you can attain Divinity. This is the pursuit that is worthy, not the pursuit of fame, nor the friendship of the famous.

Sathya Sai Baba

 

D for Devi ..I for Ilango ..P for Prahaladha…and A for Anjaneya !!!

ரா.கணபதி அண்ணாவின் “மைத்ரீம் பஜத’ புஸ்தகத்திலிருந்து….

மேனா எனப்படும் பல்லக்கு ஸ்ரீபெரியவாளுக்குச் ‘சென்றால் ஊர்தியாம்; இருந்தால் சிங்காசனமாம்; புணையாம்’ (உறங்கப் பாயாம்)! ‘இருந்த திருக்கோல’த்தில் மேனாவுக்குள்ளிருந்து அவர் ராஜ்யபாரம் நடத்துவார். அப்படி ஒரு நாள்.

பக்கத்தில் ஒரு பெண் குழந்தை வந்து நின்றது.

“பேர் என்ன?” என்று விசாரித்தார் பெருமான்.

“தீபா” என்று கீச்சுக்குரலில் குட்டி கூறிற்று.

பெரியவாளுக்கு அது சரியாகக் காது கேட்கவில்லை. குழந்தையிடம், “நீ சொன்னது எனக்குக் கேக்கலியே! பலமாச் சொல்லும்மா”! என்றார்.

அது அழுத்தந்திருத்தமாக, “D for Donkey, E for Egg, இன்னொரு E for Elephant, P for People, A for Ant” என்றது.

பெரியவாள் மெய்யாலுமே அதில் வியப்படைந்தாலும் அவ்வியப்பை ஆயிரமாகப் பெருக்கி அபிநயித்து, “பேஷ், பேஷ், மஹா கெட்டிக்காரியா இருக்கியே! பொளந்து தள்றியே!” என்று குட்டியைச் சிலாகித்தார்.

அதற்கு ஏக மகிழ்ச்சி.

சின்னஞ் சிறிசிடம் பென்னம் பெரியவர் தொடர்ந்தார்: “நீ நன்னாதான் சொன்னே, ஆனா ஒம் பேரோட ‘டாங்கி’யையும் ‘எக்’கையும் சேக்கறதுக்குப் பதிலா நான் இன்னூரு தினுஸா சொல்லித் தரட்டுமா? ரொம்ப ஒஸ்த்தியானவாளோட சேத்துச் சொல்லித் தரேன். நீ D-e-e-p-aன்னு அஞ்சு எழுத்துல சொன்ன பேருக்கே இன்னுங் கொஞ்சம் ஈஸியா D-i-p-aன்னு நாலு எழுத்துலயும் ஸ்பெல்லிங் சொல்லலாம். அப்படி வெச்சுக்கலாம்.

“D for Devi, தேவின்னா என்ன தெரியுமா? ஒரே ஸ்வாமியே பல விதமா வருவார். அம்மாஸ்வாமியா அவர் ரொம்ப அன்போட வரச்சே தேவின்னு பேரு. அம்மன் கோவில்னு கோவில்லே பாத்திருக்கியோ?”

“பாத்திருக்கேன்”.

“அங்கே இருக்கிற அம்மன் தான் தேவி. எங்கே சொல்லு, D for Devi”.

“D for Devi”.

”பேஷ்! அப்புறம் நீ ரெண்டு E சொன்னதுக்குப் பதிலா ஒரே I. I for Ilango. இ-ள-ங்-கோ. சொல்லு”.

“இளங்கோ அப்படின்னா?”

“இளங்கோ-ங்கிறவர்தான் தமிழ்லயே ரொம்ப ஒஸ்த்தியான பொயட்ரி கதை எழுதினவர். கண்ணகி-ன்னு ஒரு அம்மாவைப் பத்தி பொயட்ரியாவே ஸ்டோரி சொன்னவர். அந்த ஸ்டோரி ரொம்ப நன்னா இருக்கும். எனக்கு இப்ப சொல்றதுக்கு டயம் இல்லே. அப்பாவைப் பொஸ்தகம் வாங்கித் தரச் சொல்லு. I for Ilango”.

“I for Ilango”

”அப்புறம் P for Prahlada – ப்ரஹ்லாதன்…”

“தெரியும், தெரியும். பக்தியா இருந்த boy. அவனுக்காக Godஏ சிங்கம் மாதிரி வந்து அவனுக்கு enemy-யா இருந்த father-ஐ kill பண்ணினார்”.

“பேஷ், பேஷ், நன்னா தெரிஞ்சு வெச்சுண்டிருக்கியே! கடைசியா, A for Anjaneya. ஆங்ஜநேயர் தெரியுமா?”

”ஊஹூம்”.

“ஹநுமார்?”

”தெரியும். Monkey-God”.

“அவரே தான். அவருக்கே தான் ஆஞ்ஜநேயர்னு பேரு. சொல்லு”.

“ஆஞ்ஜநேயர். A for Anjaneya.”.

“கரெக்டா சொல்லிட்டே! இந்தாம்மா!” என்று பாலகியிடம் கற்கண்டை வீசினார் அருளாளர்.

“D for Devi, I for Ilango” என்று சொல்லியவாறு துள்ளி ஓடினாள் சூட்டிகைச் சிறுமி.

எழுத்துக்களை அறியும்போதே மதத்திலும் இலக்கியத்திலும் பிடிமானம் ஏற்படுத்தித் தர ஜகத்குருவின் சுவையான பாடம்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source:::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/4964/maha-periyava-children-11/#ixzz2e2CyXn2j