
Shankarachariya
“பணத்துக்காக எதையும் விடாதே …”
கும்பகோணம் ரங்கராஜ ஐயங்கார் (இன்றைய அஹோபில மட ஜீயங்கார் ஸ்வாமிகள்) 1971ம் வருடம் ரிக்வேதம் பயின்றதும் அதன் பின் வைதீகத் தொழிலில் தன் ஜீவனத்தை மேற்கொள்ளலாமென்று நினைத்ததும் சரிதான் என்றாலும் மஹாபெரியவா அதற்கான உத்தரவைத் தரவில்லை.
அந்த வைணவ அன்பர் 1968ம் ஆண்டிலிருந்தே மஹாபெரியவாளின் பக்தர்களில் ஒருவர். வைதீகத் தொழில் வேண்டாம் என்ற அவரிடம் மஹான் என்ன சொன்னார் தெரியுமா?
“நீ மேற்கொண்டு எல்லா வேதங்களையும் படிக்கணும். அதற்கு உபகாரம் செய்ய நான் ஏற்பாடு பண்றேன். நீ மேலே படி” என்று அன்புக் கட்டளை இட்ட மஹான், அவர் குடும்பம் நடத்த மாதம் ரூ.200/- கொடுக்க ஏற்பாடு செய்ததோடு நில்லாமல், சுயமாக அவரே தனது ஆகாரத்தை சமைத்து சாப்பிடும் உயர்ந்த வழக்கத்திற்கும் வழி செய்து அருளினார்.
ரங்கராஜ ஐயங்காரின் குடும்பமோ பெரியது. இவருடைய சகோதரிகளின் திருமணத்தையும் தமது கருணை உள்ளத்தால் பெரியவா நடத்தி வைத்தார்.
மஹான் பண்டரிபுரத்தில் இருந்தபோது ஐயங்கார் ஸ்வாமிகள் அங்கே சென்று அவரை நமஸ்கரித்தார். அப்போது மஹான் அவரிடம் கேட்டார்:
“நீ எனக்கு நமஸ்காரம் செய்யலாமா?”
அதற்கு ஐயங்கார் ஸ்வாமிகள் சொன்ன பதில்:
“எங்கள் சம்பிரதாயம் பிரகாரம் யக்ஞோபவீதம், சிகை இல்லாத சன்னியாசிகளை தரிசித்தாலே ஸ்நானம் செய்யணும்னு இருக்கு” என்றார்.
“அப்போ நீ ஏன் எனக்கு நமஸ்காரம் செய்யறே?”
“சாட்சாத் விஷ்ணு அம்சம்தான் இந்த ஜோதி ஸ்வரூபம் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று தன் வைணவப் பார்வைக்கு ஈஸ்வரரான மஹா பெரியவா அருளிய தரிசனத்தை மெய்சிலிர்ப்போடு கூறி மகிழ்ந்தார்.
இந்த பரம பக்தரான வைணவப் பெரியவருக்கு மஹானின் அருள், ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது.
இவரது குடும்பம் பெரியதென்றாலும் அதை நன்றாக நடத்திச் செல்லக்கூடிய அளவுக்கு வருமானமே இல்லை. சகோதரிகளின் திருமணம், தினசரி நடைமுறைகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க, இதர காரியங்கள் எல்லாவற்றிற்கும் பணம் தேவை. தொடர்ந்து வேதங்களைக் கற்றுக் கொள்ள இவர் முயற்சி செய்து கொண்டு இருந்தபோதுதான் 1978ம் வருடம் இவரை ஜெர்மனிக்கு வரச்சொல்லி ஒரு அன்பர் கேட்டுக் கொண்டார்.
“ஜெர்மனிக்குச் சென்றால் கை நிறையப் பணம். அதனால் குடும்பத்தின் வறுமை நீங்கும்” என்றெல்லாம் ஐயங்கார் ஸ்வாமிகளின் உள்ளத்தில் ஆசை தோன்ற ஆரம்பித்தது. மாத சம்பளம் மூவாயிரம். அத்துடன் திரும்பி வரும்போது கையில் மூன்று இலட்சம் பணம் தரப்படும் என வாக்குறுதி. இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் இருந்தால் தன் குடும்பம் ஒரு நல்ல நிலைமைக்கு வரும்” என்று நினைத்த ஐயங்கார் ஸ்வாமிகள் அழைப்பு விடுத்தவரிடம் வருவதாக ஒப்புக் கொண்டு ‘மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.
எல்லா ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து, அக்டோபர் 31ம் தேதி புறப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இவ்வளவு நடந்திருந்தும், இதுபற்றி இவரது கிராமத்தில் இருந்த தந்தையிடம் கூட சொல்லாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்தார். அவரிடம் சொல்லாமல் அயல் நாட்டிற்குப் போக முடியுமா? அக்டோபர் 27ம் தேதி கிராமத்திற்குப் போனார்.
தகவலைக் கேட்டவுடன், தந்தை ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்டார்.
“மஹாபெரியவா கிட்டே உத்தரவு வாங்கிட்டியோ?”
“இல்லேப்பா, மஹானிடம் சொன்னா அவர் உத்தரவு தருவாரோ மாட்டாரோங்கிற சந்தேகம் எனக்கிருக்கு. அப்படி அவர் உத்தரவு தரலைன்னா, இவ்வளவு வருமானத்தை விட்டுட மனசு கேட்காதே. அதனாலே தான் நானே முடிவு எடுத்துண்டு கிளம்பறேன். நமக்கோ பணத்தேவை அதிகம். எனக்கும் இதைத் தவிர வேறு வழி தெரியல்லேப்பா” என்றார்.
அன்றிரவு அவர் கிராமத்தில் தங்கி விட்டார். மன உளைச்சலில் அவர் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது, திடீரென அவர் முன் மஹான் தோன்றினார்.
மஹான், ஐயங்கார் ஸ்வாமிகளின் தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்துவிட்டு,
“நீ போகத்தான் போறாயா?” என்று ஏக்கத்தோடு கேட்பதாக ஐயங்கார் ஸ்வாமிகளுக்குத் தோன்றியது.
அது முழுமையான கனவுமல்லாமல், முழுமையான நினைவுமல்லாமல் தெரிந்ததில் இவருக்கு மஹா பெரியவா ஏதோ உத்தரவிடுவது போலத் தெரிந்தது. அதனால் மறுதினம் தாமதிக்காமல் மஹானைத் தரிசித்து அவரது அனுமதியைப் பெறக் கிளம்பிவிட்டார்.
அப்போது மஹான், கர்நாடகாவில் பதாமி என்னும் நகருக்கு அருகில் இருந்த வனசங்கரி என்னும் சிறுகிராமத்தில் முகாமிட்டிருந்தார்.
மஹானின் தரிசனத்திற்கு முன், ஐயங்கார் ஸ்நானம் செய்து கொண்டு இருந்தபோது, மடத்து சிப்பந்தி ஒருவர் வந்து இவரிடம், “உன்னை பெரியவா வரச்சொல்லி உத்தரவாகியிருக்கிறது” என்றார்.
தான் வந்திருப்பதையோ, வந்திருக்கும் நோக்கமோ யாருக்குமே தெரியாத நிலையில், மஹான் வரச் சொல்லியிருப்பது இவருக்கு அளவுகடந்த வியப்பைத் தர நேராக மஹானின் முன் நின்று தரிசித்தார்.
“எப்போ கிளம்பப் போறே?” என்று பெரியவா கேட்டதும், தரிசனம் முடிந்ததும் தன் ஊருக்கு எப்போது போகிறோம் என்பதைத்தான் மஹான் கேட்கிறார் என்று ஐயங்கார் ஸ்வாமிகள் நினைத்துத் “தரிசனம் முடிந்ததும் கிளம்புவதாக உத்தேசம்” என்றார்.
மஹான் லேசாகப் புன்முறுவலித்தவாறே,
“நீ ஊருக்குப் போறதே பத்தி நான் கேட்கலே, அசல் தேசம் போகணும்னு ஏற்பாடு செஞ்சுண்டிருக்கியே, அதைத் தான் கேட்டேன்” என்று மஹான் சொல்ல, ஐயங்கார் ஸ்வாமிகளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீள்வதற்குள், மஹான் தொடர்ந்து அதிர்ச்சிகளை அளித்தவாறு பேசலானார்:
“நீ இங்கு வந்த காரணத்தை நான் சொல்லவா? முந்தா நாள் நான் உன்னைத் தடவிக்கொடுத்து, ‘என்னை விட்டுப் போறயா?’ன்னு கேட்டேன்…. இல்லையா? அதனாலேதான் போகும்போது பார்த்துட்டுப் போகலாமுன்னு இங்கே வந்திருக்கே” என்றார். எப்பேற்பட்ட அதிசயத்தை மஹான் சர்வ சாதாரணமாகச் சொல்கிறார் என்று திகைத்துப் போய் நின்றார் ஐயங்கார் ஸ்வாமிகள்.
தன்னை கிராமத்துக்கு வந்து ஆட்கொண்டது பிரமை அல்ல என்பதை அறிந்த அவர் கண்களில் நீர் மல்க, மஹானின் பொற்பாதங்களில் வீழ்ந்தார். மஹான் அவரை ஆசீர்வதித்தவாறே சொன்னார்.
“உன் ஆசாரத்தை விடாமல் இரு. பணத்துக்காக எதையும் விடாதே. ஆசாரம் தான் முக்கியம். எங்கே போனாலும் அவரவர் ஆசாரத்தை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்” என்பது மஹானின் அருள்வாக்கு. ஐயங்கார் ஸ்வாமிகள் என்ன செய்திருப்பார் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்……..
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
source:::: http://www.periva.proboards.com
natarajan
” அவன் நந்தன் அம்சம் …” இவர் தேடி கொடுக்கிற தெய்வம் !!!
தேடித் தேடித் போய் கொடுக்கிற தெய்வம்…
உயிர் உருக்கும் சம்பவம் இது…
எத்தனை முறை நினைத்தாலும் கண்களில் கண்ணீர் வரும்.ஸ்ரீ கணேச சர்மா மாமா அவர்கள் சொல்லும் போது அவரும் நெகிழ்வார். நம்மையும் நெகிழ பண்ணுவார்.
ஐயன் ஏதோ ஒரு கிராமத்தில் முகாம். காலை எங்கோ செல்லும் போது வயல்வெளியாக செல்வார் பரிவாரத்துடன்.
தூரத்தில் ஒரு குடியானவர்(ன் போட முடியவில்லை) கோவணாண்டியாக, ஐயனை பார்த்து கைகூப்பிக்கொண்டு நிற்பார்.
ஐயன் சென்று விடுவார்.
திரும்பி வரும்போது வயக்காடு மேட்டில் பூசணி, வாழை, பரங்கி என்று நிறைய காய் கறி கீரை பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்.
ஐயன் சொடுக்கி தன் உயிரே ஆன அந்த குடியானவ பக்தரை கூப்பிடுவார்.
‘சாமி நான் கொடுத்த வாங்கிப்பீங்களோ ன்னு தான், காய் கறி… எடுத்துப்பிங்களா சாமி?’.
ஐயன் கருணையோடு நோக்கி… சொல்வார் பாரிஷதரிடம் ,’இன்னிக்கு பிக்ஷைக்கு இதெல்லாம் தான். எடுத்துக்கோங்கோ’.
அங்கே நிற்காது கருணை வெள்ளம். சிறிதே தூரம் சென்று நட்ட நாடு சாலையில் நின்று ஸ்ரீ மடம் பாலு மாமா அவர்களிடம் ஏதோ விஷயம், உப்பு பெறாது என்போமே, அதை ஆரம்பிப்பார். இதை ஏன் இங்கே வெட்ட வெளியிலே, நட்ட நாடு ரோட்டிலே, மொட்டை வெயிலிலே என்று பாலு மாமா பாடாத பாடு படுவார். ஸ்ரீ கணேச சர்மா மாமா சொல்லி கேட்கவேண்டும்.
கிழக்காலே மேற்காலே, தெக்காலே, வடக்காலே, ஒத்தை காலை மடிச்சிண்டு, தலைல வஸ்த்ரம் போட்டுண்டு போடாம, குனிஞ்சு, நிமிந்து என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம். அப்புறம் கிளம்பி, ஸ்நானம் ஆகி, பூஜை முடிஞ்சு, பிக்ஷை பண்ணி, விஸ்ராந்தி பண்ணிக்கும் போது மெதுவாக, ஸ்ரீ பாலு மாமாவிடம் கேட்டாராம் ஐயன்.
‘ஏண்டா பாலு, ஒன்னை ரொம்ப நேரம் வெயில்ல கால் கடுக்க நிக்க வெச்சுட்டேனோ?’.
வெச்சாச்சு. வெச்சுட்டு என்ன கேள்வி வேறே? எப்படி கேட்க முடியும்?
மாமா சொன்னார்களாம், ‘அதெல்லாம் ஒன்னும் இல்லே’.
சும்மா விடுமா நம் தெய்வம்? ‘இல்லேடா, ஒன்னை ரொம்ப நிக்க வெச்சுட்டேன். ஏன் ன்னு கேளு?’.
இதுவேறயா, பண்றதையும் பண்ணிப்பிட்டு…
ஏன்? பெரியவா?’.
‘இல்லே, என்னை முன்னாடி பார்க்கணும் ன்னா நீ என்ன பண்ணுவே?’
‘இது என்ன கேள்வி பெரியவா, இதோ ஒங்க முன்னாடி வந்து நின்னு நன்னா நன்னா பாத்துட்டு போவேன்’.
‘சரி, பின்னாடி இருந்து என்னை பார்க்க?’.
விடமாட்டாரே… ‘இதோ, பின்னாடி போய் உங்க முதுகை பார்த்துண்டு நிப்பேன், பக்கவாட்டிலேயும் அப்படித்தான்’ என்றார் மாமா முன்யோசிதமாய்.
‘அதெல்லாம் சரி டா, ஒன்னாலே இதெல்லாம் முடியும். அங்கே வயல்ல வெயில்ல நின்னு வேலை பார்த்துண்டு இருந்தானே, அவன் நந்தன் அம்சம் டா. அவனால இதெல்லாம் பண்ண முடியுமா? இதுக்கெல்லாம் நேரம் இருக்குமா? அதுனால தான் நான் திரும்பி திரும்பி நின்னு அவன் நன்னா பார்க்கற மாதிரி பண்ணினேன்’.
வேறு எதுவும் சொல்லவேண்டுமா?
இதுவல்லவோ தேடித் தேடித் போய் கொடுக்கிற தெய்வம்…
Source: Shri Karthi Nagaratnam in Kanchi Maha Periva -My Guru
Read more: http://periva.proboards.com/
“காமாக்ஷி காப்பாற்றினாளா ?” !!!

இது பெரியவாளின் ஒரு பக்தையை பற்றியது .
கல்கத்தாவில், அந்த பக்தை கணவருடன் , அப்போது அவரது வேலை நிமித்தமாக இருந்த கால கட்டத்தில் நடந்த சம்பவம்.
அன்றும் கணவர் ஆபீஸ் போன அப்புறம் வாசலில் பெல் அடித்ததும் , கதவை திறந்தார் , அந்த பெண்மணி . நக்சலைட்டுகள் 3- 4 பேர் திமு திமு என்று உள்ளே நுழைந்தும் என்ன செய்ய, என்றே தெரியாத அவர் தன்னை கொல்ல அவர்கள் தயாராக இருப்பதை அவர்கள் பேச்சின் மூலம் புரிந்து கொண்டார்.
பயத்தில் வெலவெலத்து போன அந்த மாது அவர்கள் கேட்ட படி சாய் போட்டு கொடுத்து விட்டு, அவர்களிடம் ஒரு போன்கால் போட்டு கொள்ள அனுமதி கேட்டார்.
சென்னையில் விடுதிஇல் படித்து வரும் தன் அன்பு குழந்தைகளிடம் ஒரு நிமிடம் பேசினார் .
நாளை எந்த செய்தி கேட்டாலும் அதை சுவாமி கொடுத்தது என்று எடுத்துகொள்ள வேண்டும் என்றார். வீட்டின் ஹால் பகுதிக்கு வந்த அவர் , பெரியவா படத்தையும் அதை அடுத்து இருக்கும் காளி மாதாவின் படத்தையும் பார்த்து பூரண பக்தி யோடு நமஸ்கரித்தார் . இன்னிக்கு ஏகாதேசி .இன்று இந்த சோதனைக்கு உளாகி இருக்கேனே என்று வருத்தப்பட்டார்
அவர்களை பார்த்து ஓரே போடாக போட்டு விடுங்கள். வேறு ஒன்றும் என்னை செய்து விடாதீர்கள் என்று மனமுருக சொன்னார். பெரியவா படத்தை பார்த்து மனமுருகி வேண்டினார். தரையில் அவரை வேண்டி கொண்டே படுத்தார்
அப்ப அந்த அதிசயம் நடந்தது. நக்சலைட்டுகள் மேலே பார்த்தவர்கள் கண்ணுக்கு , பெரியவா போட்டோ இருந்த இடத்தில் பயங்கர உருவத்தோடு பவதாரிணி காட்சி கொடுத்தாள் .காளி பக்தர்கள் ஆன அவர்கள் திகைத்து போனார்கள் .
ஒரு காளி இருந்த இடத்தில இப்ப எப்படி ரெண்டாவது உக்ர காளி வந்தாள் என்று ஸ்தம்பித்து போனார்கள். காளியை மதிக்கும் அவர்கள் அந்த அம்மையாரையும் அம்பாள் ரூபமாக பார்க்க தொடங்கினர்.
“மன்னித்து விடுங்கள் தாயே ” என்று எடுத்தனர் ஓட்டம் .
கணவர் வந்தவுடன் கண்ணீரை அடக்க முடியாமல் சொரிந்த அந்த மாது உடனே பெரியவாளை பார்க்க காஞ்சிக்கு புறப்பட்டார். மடத்தில் என்றும் போல அன்றும் ஒரே கூட்டம் . வரிசையில் வந்த அந்த பெண்மணி பக்தி பெருக்கோடு கலங்கிய கண்களோடு பெர்யவாளை நமஸ்கரிக்க , “காமாக்ஷி காப்பதினாளா ” என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்கு தெரியும் என்பதை உணர்த்தினார் உம்மாச்சி தாத்தா.
உண்மையான குரு பக்திக்கு என்றும் ஒரு குறையும் வராது .
Source: Shri Well-bred Kannan
In Homage to Uthradom Thirunal Marthanda Varma …

Uthradom Tirunal Marthanda Varma
Kerala lost one of the last links with its royal past with the passing away of Uthradom Tirunal Marthanda Varma, head of the royal family of erstwhile Travancore, in the early hours of Monday. 16 Dec.2013. . Mr. Varma, a witness to the transformation from imperial rule to a democratic polity, was a common presence in the social and cultural scene of the city.
He had stood guard over the age-old traditions, rites and rituals of Sree Padmanabhaswamy Temple ever since 1991, when he was anointed the trustee and “dasa” of the temple following the death of his elder brother and last sovereign of Travancore, Sree Chithira Tirunal Balarama Varma. Mr. Varma, born as the younger son of Maharani Sethuparvathi Bayi and Ravi Varma Koyi Thampuran on March 22, 1922, was educated in the Kowdiar Palace by a group of 14 tutors in various subjects. He later graduated from the then Travancore University with Economics, Politics and History as specialisations in 1943. He was the recipient of the Moncombu Aandi Iyer Gold Medal for the best student in Sanskrit.
source :::::Mahesh Krishnamurthy in Sage of Kanchi Blog and Youtube and The Hindu
natarajan
” என் ஆசி உங்களுக்கு என்றும் உண்டு ” !!!
வடநாட்டைச் சேர்ந்த பெரிய தொழிலதிபர். பிரபலமானவர். அவர் தன் குடும்பத்தாருடன் ஆசாரிய ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்தார். முன்பு ஸ்வாமிகள் வடநாட்டு யாத்திரை சென்றபோது ஸ்வாமிகளின் குழுவினருக்கு மிகவும் உதவியாக இருந்தவர். புன்னகையுடன் அந்தத் தொழிலதிபரைப் பார்த்துக் கொண்டிருந்தார் ஆசாரிய ஸ்வாமிகள்.
என்ன சொல்லப் போகிறார் என்பதை முன்கூட்டியே ஸ்வாமிகள் புரிந்திருப்பார் போலும்.
“இப்ப பெரிய தொகையை தர்ம காரியங்களுக்கு உதவப் போகிறேன். இனி வருடா வருடம் எங்கள் கம்பெனிகளின் வருமானத்தில் கொஞ்சம் பணத்தை தர்ம காரியங்களுக்கு உதவ முடிவுசெய்து இருக்கிறோம். அந்தப் பணத்தைத் தங்கள் இஷ்டப்படி தர்ம காரியங்களுக்குக் கொடுத்து விடுங்கள் ஸ்வாமி!” என்று பெரிய தொகையை செக்கில் எழுதிக் கொடுத்தார் தொழிலதிபர். அவரது மகனும் மனைவியும் “ஆமாம் ஸ்வாமி, நாங்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதி தர்மத்துக்குக் கொடுக்கணும்னு முடிவு செஞ்சு இருக்கோம். இதுக்கு ஸ்வாமிகளின் அநுக்கிரஹம் வேணும்” என்றார்கள்.
செக்கைப் பார்த்தார் ஸ்வாமிகள். மிகப் பெரிய தொகை குறிப்பிடப்பட்டு இருந்தது செக்கில். பிரமித்தார். சிலிர்த்தார். மகிழ்ந்தார். அந்தத் தொழிலதிபரின் மனம் ஜாதியைக் கடந்து மாநிலத்தைக் கடந்து விரிந்து இருப்பதைப் புரிந்து கொண்டு அந்தக் குடும்பத்தின் மீது அருள் பார்வை செலுத்தினார். மௌனமாக ஸ்வாமிகளைத் தரிசித்தவண்ணம் இருந்தது அந்தக் குடும்பம்.
“உங்க தயாள குணத்தைக் கண்டு ரொம்ப சந்தோஷம். உங்க கம்பெனிகள் நன்னா இருக்கும். வருடாவருடம் லாபத்தில் ஒரு சிறு பகுதியை தர்ம காரியத்துக்குக் கொடுக்கப் போறேள். உங்க கம்பெனிகளின் லாபத்தில் சிறுபகுதி என்பது பெரிய தொகையாக இருக்கும். நான் சந்நியாசி. என் பொறுப்பில் இவ்வளவு பணம் இருக்க வேண்டாம். நீங்களே உங்கள் முன்னோர் பெயரில் ஒரு தர்மஸ்தாபனம் அமைத்து இந்தப் பணத்தையும் வருடா வருடம் லாபத்தில் சிறு பகுதியையும் அந்த தர்ம ஸ்தாபனத்தில் செலுத்துங்கள். அந்த தர்மஸ்தாபனம் மனிதநேயத்துடன் மக்களுக்கு உதவட்டும். நீங்களே ஒரு குழு அமைத்து அந்த தர்ம ஸ்தாபனத்தை நடத்துங்கள். என் ஆசி உங்களுக்கு என்றும் உண்டு” என்று சொல்லிக்கொண்டே அந்த செக்கைத் திரும்பக் கொடுத்தார் ஸ்வாமிகள்.
ஸ்வாமிகளின் செயலைக் கண்டு சிலிர்த்தார் தொழிலதிபர். முற்றும் துறந்த முனிவர் என்றால் இவர்தான் என்று எண்ணிய தொழிலதிபர் “ஸ்வாமி! தாங்கள் சொல்வது போல் தர்மஸ்தாபனம் அமைத்துச் செயல்படுகிறேன். முதல் காரியமாக தாங்கள் சொல்லும் திருப்பணியைச் செய்கிறேன். உத்தரவு வேணும் ஸ்வாமி!” என்று கேட்டார் தொழிலதிபர்.
சற்று நேரம் யோசனை செய்தார். சிதிலம் அடைந்த புராதனமான ஒரு கோயிலைச் சீரமைத்துக் கும்பாபிஷேகம் செய்யச் சொன்னார். அதைச் செய்ய ஒப்புக் கொண்டார் தொழிலதிபர்.
source::::www.periva.proboards.com
natarajan
Read more: http://periva.proboards.com/thread/5979/kanchi-mahaswamigal-sri-rangavasan/#ixzz2nbX0plTP

