நெல்லுக்கிறைத்த நீர்
…………………..
தண்ணீர் விட்டா வளர்த்தோம் நம் சுதந்திர செடியை ?
கண்ணீரும் செந்நீரும் விட்டு வளர்த்த கொடி மரமல்லவா அது !
கேட்க முடியுமா நம் முன்னோரிடம் அந்த கொடியின் விலை என்ன என்று ?
விலை மதிப்பில்லா சுதந்திரக் காற்று சுவாசிக்கும் நாம் விலை வைத்து
விட்டோமே குடிக்கும் நீருக்கும் , குழந்தைகள் படிக்கும் படிப்புக்கும் !
விலை இல்லா பொருள் கொடுத்து எனக்கும், உனக்கும், எவருக்கும்
ஒரு விலை உண்டு என்று சொல்லிவிட்டதே நம் அரசியல்
கட்சிகள் ! விலை மதிப்பில்லா நேர்மைக்கே ஒரு சோதனை காலம் இது !
நிலைமை கண்டு துவள வேண்டாம் தம்பி …நீ ! சோதனை பல
கண்டாலும் சாதனை புரிய காத்திருக்கும் நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று !
எடுக்க வேண்டும் ஒரு உறுதிப்பாடு நீ இன்று…
“என் முன்னோர் செய்த தியாகம் விழலுக்கு இறைத்த நீர் அல்ல …
அது நெல்லுக்கு இறைத்த நீரே அன்றும் ,இன்றும், என்றும் ! …என் தேசம் என்
சுவாசம் !
எதற்கும் விலை போகாமல் நான் காண்பேன் ஒரு புதிய பாரதம் “
தடைக் கற்கள் யாவும் உனக்கு படிக்கற்கள் ஆகும் …புதிய
பாரதமும் பொலிவுடன் மலரும் ஒரு வல்லரசாக …!
நாளை உனதே தம்பி ! நாளைய பாரதமும் உன்னை நம்பிதான் தம்பி !
Natarajan
My Kavithai in http://www.dinamani.com