Message For the Day…” Realize that the Whole World is a Manifestation of the Divine…”

When you walk on the road in an evening and suddenly find a thick piece of long rope lying on the ground, instinctively you think of it as a snake and get scared! Where did this fear come from? How does it disappear? Did the snake change into a rope for your fear to disappear? No! The rope is still a rope, you mistook it to be a snake! The hallucination effect you had is a result of the worldly point of view. Realize that the whole world is a manifestation of the Divine (Brahman). Your vision is blurred by ignorance, illusion and hallucination, which sees the world as material objects and not as Divine Creations. Know that all you see in the world and think as real is actually unreal and false. The spiritual point of view clarifies your vision, and will let you experience truth as truth and will remove any fear.

Sathya Sai Baba

Image of the Day…New Moon…

New moon: night side of moon facing Earth

What is the ghostly image at the top of this post? It’s a new moon. Its lighted half is facing entirely away from Earth.

The image above is imaginary. It’s as if you flew in a spaceship to a place where you could see the night side of the moon. Why do we say imaginary? Because, when the moon is new, its night face is facing us on Earth … and we can’t see the moon at this time.

We can’t see the new moon from Earth, except during the stirring moments of a solar eclipse. Then the moon passes in front of the sun, and the night portion of the moon becomes visible to us, surrounded by the sun’s fiery corona.

Once each month, the moon comes all the way around in its orbit so that it is more or lessbetween us and the sun. If the moon always passed directly between the sun and Earth at new moon, a solar eclipse would take place every month. But that doesn’t happen every month. Instead, in most months, the moon passes above or below the sun as seen from our earthly vantage point.

On the day of new moon, the moon rises when the sun rises. It sets when the sun sets. It crosses the sky with the sun during the day. That’s why we can’t see the new moon in the sky. It is too close to the sun’s glare to be visible. Plus its lighted hemisphere is facing away from us.

Then a day or two later, the moon reappears, in the west after sunset. Then it’s a slim waxing crescent visible only briefly after sunset – what some call ayoung moon.

Each new lunar cycle is measured beginning at each new moon. Astronomers call one lunar cycle a lunation.

As the moon orbits Earth, it changes phase in an orderly way. Follow these links to understand the various phases of the moon.

Source::: Earth sky news site

Natarajan

Message For the Day…” Heart Filled with Love and Compassion is the Real Temple…”

The alarm clock wakes us by ringing the alarm at the right time. Similarly great sages of ancient times woke up human beings from the slumber of ignorance, warned them at the appropriate time and in the correct manner. They often gave powerful messages that warned all to stop ignoring and start recognizing the Omnipresent Divinity. Words of such great souls must constantly ring in your hearts and guide and illumine your lives. Jesus Christ proclaimed that everyone is an embodiment of Divinity in this human form and every being is a messenger of God. He demonstrated in his life that every ounce of this human body till the last drop of blood must be dedicated to the service of humanity. Jesus declared, “A heart filled with love and compassion is the real temple of the Lord!” Your true offering to the Loving Divine would be the dedication of your life to practice their teachings with your heart and soul.

Sathya Sai Baba

” துடிப்பான தனுஷ்கோடியைத் தெரியுமா? ” …Part 2

பாம்பன் பால மறுகட்டமைப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.

பாம்பன் பால மறுகட்டமைப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.

 

பொறியாளர் ஸ்ரீதரன் (வலது).

பொறியாளர் ஸ்ரீதரன் (வலது).

 

பி.ராமச்சந்திரன்

பி.ராமச்சந்திரன்

 

உயிரோட்டமான தனுஷ்கோடி அழிந்த அத்தியாயத்தை வாசித்த ஏராளமான வாசகர்கள் கேட்ட கேள்வி: “இப்படி ஒரு பேரழிவைப் பற்றி நமக்கு ஏன் முழுமையாகத் தெரியவில்லை? இந்தச் செய்திகளெல்லாம் ஏன் நம்முடைய பாடப் புத்தகங்களில் இல்லை?”

நம்முடைய பெரும்பாலான வரலாறுகள் களத்தில் அல்ல; தலைநகரங்களில் சௌகரியமான இடங்களில் உட்கார்ந்திருப்பவர்களால் உருவாக்கப்படுகின்றன என்பது ஒரு காரணம். அரசின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பதிவுகளைத் தொகுப்பவர்கள், மக்களிடம் உள்ள பதிவுகளைச் சீந்துவதே இல்லை என்பது ஒரு காரணம். பதிவுசெய்யப்படாத எவ்வளவு பெரிய உண்மையும் வரலாறு ஆவதில்லை என்பது முக்கியமான காரணம்.

ஓர் உதாரணம்

தனுஷ்கோடியை மூழ்கடித்த புயலின்போது, பாம்பன் பாலமும் உருக்குலைந்தது. ரயில்வே நிர்வாகம் 6 மாதக் கெடு தந்து, பாலத்தைச் சீரமைக்க ஒரு அணியை இறக்கியது. வெறும் 46 நாட்களில் இந்தப் பணிகளை முடித்தார் பொறியாளர் ஸ்ரீதரன். இது வரலாறு. ஸ்ரீதரனின் பணி கொண்டாடப்பட வேண்டியது என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம், அந்தப் பணி அவ்வளவு சீக்கிரம் முடிவதற்கு முக்கியப் பங்காற்றியவர்கள் சுற்றுவட்டார மீனவ மக்கள். தங்கள் சொந்த வீட்டு வேலையாகப் பாலத்தின் கட்டுமான வேலையில் பங்கேற்றவர்கள் அவர்கள். இன்றைக்கு அவர்களுடைய பங்களிப்பு, மறக்கப்பட்ட கதை. காரணம் என்ன?

நாட்டுப்புறப் பாடல்களில் வரலாறு

தனுஷ்கோடி மீனவ மக்களிடம் ஒரு மரபுண்டு. கரை வலை இழுக்கும்போது பாட்டுப் பாடுவது. அவர்கள் வாழ்வைச் சீரழித்த புயலுக்கு இந்தப் பாடல்களில் முக்கிய இடம் உண்டு. அந்தப் பாடல்கள் வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் வாயிலாக நாட்டுப்புறங்களில் ஊர்ஊராகப் பரவியிருக்கிறது. அதன் தாக்கத்தில் வெளியூர்க்காரர்களும் புயல்பாட்டு பாடி யிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று செ. போத்தி ரெட்டியின் ‘தனுக்கோடி நாட்டுப்புறப் புயற்பாடல்கள்’ புத்தகத்தில் காணக்கிடைத்தது. கடலோரத்தில் ஊர்ஊராக அலைந்து, மக்களிடம் பேசி நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்திருக்கிறார் போத்தி ரெட்டி.

இந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் வேம்பார் பாக்கியம் எனும் பனைத் தொழிலாளி. புயல் அடித்த தேதியில் தொடங்கி, பார்வையிட வந்த எம்ஜிஆர் முதலானவர்களைத் தொட்டு, பாட்டெழுதியவர் பெயர் வரை சொல்லும் இந்தப் பாடல், நம்முடைய நாட்டுப்புறப் பாடல்கள் எந்த அளவுக்குப் புறக்கணிக்க முடியாத மக்கள் ஆவணம் என்பதற்கு ஒரு சான்று.

தனுஸ்கோடி நாட்டுப்புறப் புயல் பாடல்

தனுஸ்கோடி பாம்பன் முதல்

தயங்காத இராமேஸ்வரம்

அநியாயப் புயலடித்து

அழிந்த கொடுமை பாடுகிறேன்

அமைதியாகக் கேளும்

இந்தக் கதையை எந்த நாளும்

*

கண்டோர் நடுநடுங்க

காற்றுமழை புயலடிக்க

மண்டலத்தில் இக்கதையை

மனத்தெளிவாகப் பாடுகிறேன்

மக்களைப் போல நினைத்து

சபை மன்னிக்கணும் பிழைபொறுத்து (தனுஸ்கோடி)

*

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து

அறுபத்து நாலாம் ஆண்டில்

வாய்மையுள்ள டிசம்பர் மாதம்

வளருந்தேதி இருபத்திரெண்டில்

அடித்ததே புயற்காற்று

பாம்பன் தனுஸ்கோடியைப் பாத்து (தனுஸ்கோடி)

*

ஐயாயிரம் ஜனத்துக்குமேல்

ஆணும் பெண்ணும் அவதிப்பட்டார்

பேய்மழையும் காற்றினாலே

பேதலித்து உயிரைவிட்டார்

ஐயோ துயரமாச்சே

சில ஊரழிந்து போச்சே (தனுஸ்கோடி)

*

மாலை எட்டு மணிக்கு மேலே

மதிப்படங்கா சாமத்திலே

வேலை சோலிதான் முடித்து

வீற்றிருக்கும் வேளையிலே

வருகுதையா ரயிலு

வண்டியைப் புரட்டுதையா

வடகடலும் தென்கடலும்

மண் மோதித் தான் கிளம்பி

தொடர்பாகச் சந்தித்துமே

சூறாவளிப் போல் கொதித்து

வண்டியைத் தூக்கி அடிக்க

மக்கள் மருவி மருவித்துடிக்க (தனுஸ்கோடி)

*

ஐந்நூறு ஜனத்துக்கு மேல்

ஆணும் பெண்ணும் ரயிலில் வர

கால்கள்தான் முறிந்து

கடலோடு போகுதய்யா

ஐயோ பரிதாபம்

இது யாருபோட்ட சாபம் (தனுஸ்கோடி)

*

தனுஸ்கோடி ஊர்களெல்லாம்

தலைக்கு மேலே தண்ணீர் வர

துணியுடைகள் இல்லாமலே

தொங்குதய்யா வீட்டின் மேலே

மதில் இடிந்து சாய

மக்கள் தண்ணீரில் குதித்துப்பாய (தனுஸ்கோடி)

*

ஐயையோ மனைவி மக்கள்

அநியாயமாய்ப் போகுதென்று

மெய்சோர்ந்து மன்னவனும்

மெதுவாக இழுக்கும்போது

குடும்பத்தோட புரட்டி வெள்ளம்

கொண்டு போகுதே சுருட்டி (தனுஸ்கோடி)

*

வள்ளங்களும் விலாஞ்சிகளும்

வளைக்கச் சென்ற தோணிகளும்

வெள்ளத்திலே அடியும்பட்டு

பள்ளத்திலே இழுக்குது பார்

ஐயோ மக்கள் அலற

அடிபட்டுக் குடலும் சிதற (தனுஸ்கோடி)

*

வெள்ளரிப்பழம் போல

வெடித்துப்பிணம் மிதக்குதைய்யா

அள்ளிக்கொண்டு புதைப்பதற்கு

ஆளுதவி கிடையாமல்

அலையடித்து ஒதுக்க

நாய்நரி கடித்து இழுக்க (தனுஸ்கோடி)

*

இராமேஸ்வரம் ஊர்களிலே

தெருக்களெல்லாம் தண்ணீர் ஓட

பூமான்கள் கோவிலெல்லாம்

புரட்டித்தூக்கி அடிக்குது பார்

ஐயோ மக்கள் வாட

அடுத்த திட்டில் ஏறி ஓட (தனுஸ்கோடி)

*

சித்தம் புகழ் நடிகரவர்

ஜெமினி கணேசன் சாவித்திரி

அத்த ராத்திரி வேளையிலே

அமைந்தாரே கோவிலுக்குள்

ஆயாசப்பட்டார்

நடிகர் அழுதும் கண்ணீர் விட்டார் (தனுஸ்கோடி)

*

உடுப்பதற்கோ உடையுமில்லை

உண்பதற்கோ உணவுமில்லை

படுப்பதற்கோ பாயுமில்லை

பறக்குதுபார் வெள்ளத்திலே

பார்க்க பார்க்க துக்கம்

பார்த்துப் போனாலுமே ஏக்கம் (தனுஸ்கோடி)

*

கக்கன்ஜி நெடுஞ்செழியன்

காமாராஜர் அண்ணாதுரை

முக்கியமாய் எம்ஜியார்

பாம்பன் செய்தி கேட்டார்

பாங்காகவே புறப்பட்டார் (தனுஸ்கோடி)

*

ஏரோப்பிளேன் மீதேறி

எல்லோருக்குமாய் சோறுகட்டி

வாறார்கள் தனுஸ்கோடி

வந்துபார்த்தார் இராமேஸ்வரம்

சோர்ந்து கண்ணீர் விட்டார்

சோற்றுமூட்டை தூக்கிப்போட்டார் (தனுஸ்கோடி)

சோறு சோறு சோறு என்று

சுழலுதய்யா மக்களெல்லாம்

ஆரு சோறு போட்டாலும்

அரை வயிறு நிறையுதில்லே

நைந்தோடுது சோறு

மண்ணில் புரட்டித் தின்பதைப்பாரு (தனுஸ்கோடி)

*

சண்டாளப் புயலடித்து

தனஉயிரும் வீடும் போச்சே

கண்டு கவர்மெண்டாரும்

கனகோடி நிதி கொடுத்தார்

காமராஜரைத் தேடு

வேம்பார் பாக்கியம் கவிபாடு!

(மக்களின் பாடல் அவர்கள் வார்த்தையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.)

*

“புயல் தெரியலீயே… ரயிலை அனுப்பிட்டேனே!”

தனுஷ்கோடி புயல் மனரீதியாக அடித்துப் போட்டவர்களில் பி. ராமச் சந்திரன் முக்கியமானவர். புயலில் அடித்துச் செல்லப் பட்ட பயணிகள் ரயிலை அனுப்பிவைத்தவர். அப்போதைய, ராமேசுவரம் ரயில் நிலையத்தின் நிலைய அதிகாரி. அங்குள்ள மீனவ மக்களோடு மிக நெருக்கமான உறவைப் பராமரித்த ராமச்சந்திரனை ராமேசுவரத்தைவிட்டு மாற்றக் கூடாது என்று மனு மீது மனு போட்டு 9 ஆண்டுகள் அந்த ஊரிலேயே தக்கவைத்திருக்கின்றனர் உள்ளூர் மக்கள். ராமச்சந்திரனுக்கு இப்போது 93 வயதாகிறது. தனுஷ்கோடி புயலைப் பற்றிப் பேச ஆரம்பித்ததும், ஒரு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுதவர் கண்ணீரின் இடையே பேசினார்.

புயல் நாளை நினைவிருக்கிறதா? அதை எப்படி மறக்க முடியும்?

இப்படிப் புயலடிக்கும்னு இந்தப் பாவிக்கு யாரும் சொல்லலீயே… புயல் தெரியலீயே… ரயிலை அனுப்பிட்டேனே… (அழுகிறார்)

ஆனால், பாம்பனுக்குத்தானே நீங்கள் ரயிலை அனுப்பினீர்கள்?

ஆமா, பாம்பனுக்கு நான் அனுப்பிச்சேன். அங்கேயிருந்து தனுஷ்கோடிக்கு பாம்பன் ஸ்டேஷன் மாஸ்டர் அனுப்பிச்சார். யாருக்குமே புயல் இப்படிச் சுருட்டும்னு தெரியலையே… (அழுகிறார்)

அப்போது சம்பவ இடத்துக்குப் போனீர்களா?

அதிகாரிகளோட படகுல போனேன். எங்கே பார்த்தாலும் மனுச ஒடம்பு மிதக்குது. ஐயோ, கொடுமை, கொடுமை… (மீண்டும் அழுகிறார்)

சரி, நாம் அதை விட்டுவிடலாம்… பாம்பன் பால மறுகட்டமைப்பில் மீனவ மக்கள் பங்களிப்பைச் சொல்ல முடியுமா?

(கண்களைத் துடைத்துக்கொண்டு…) அவா ஒத்தாசை இல்லேன்னா நடக்குற கதையா அது! உள்ளூர் மீனவா மட்டும் இல்லை; வெளியூர் மீனவாவும் வந்தா. மாப்ளாஸ் வந்தா. எல்லாருமா ஓடி ஓடி ஒழைச்சுதான் பாலத்தைத் திரும்ப தூக்கி நிறுத்தினா.

கடலோர மக்களிடையே நீண்ட நாட்கள் வேலை செய்திருக்கிறீர்கள். அவர்களுடனான உங்கள் உறவைச் சொல்லுங்களேன்…

ரொம்ப நல்ல மனுஷா. நான் தஞ்சாவூர் ஜில்லாக்காரன். ஊரை மறந்துட்டு அவாளோடேயே இருந்துடலாமானு நெனைச்சுருக்கேன். அவ்ளோ நல்ல மனுஷா.

அவாளுக்கு நான் ஸ்டேசன் மாஸ்டர் மட்டும் இல்லை. மனு எழுதிக் கொடுக்குறவன், கடுதாசி படிச்சுக் காட்டறவன், பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துல சேர்க்க யோஜனை சொல்லுறவன்… கூடையோடு மீனைத் தூக்கிட்டு வந்துட்டு, ‘சாமி… உங்களுக்குக் கொடுக்க எங்களுக்கு இங்கே மீனைத் தவிர என்ன இருக்கு? மீன் சாப்பிடாதவராப் போயீட்டீங்களே’ன்னு வருத்தத்தோடு போவா. அவாள விட்டு வந்துட்டேனேயொழிய இன்னும் எம் மனசுல அவா அப்படியே இருக்கா!

– சமஸ்

தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

Source:::: The Hindu… Tamil
Natarajan

” துடிப்பான தனுஷ்கோடியைத் தெரியுமா? “…. Part One …

காலங்காலமாகத் தமிழ்க் கடலோடிகளுக்கு வணிகத்தில் முக்கியமான கேந்திரம் கொழும்பு. தவிர, கலாச்சாரரீதியாகவும் நம் கடலோர மக்களின் வாழ்வில் கொழும்பு பிணைந்திருந்தது. ஒருமுறை எழுத்தாளர் ஜோ டி குரூஸிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன வார்த்தைகள் அந்த நாட்களின் நெருக்கத்தை நமக்கு உணர்த்தும்: “அன்றைக்கெல்லாம் ஊரில் ஒரு பிள்ளை நல்ல சட்டை போட்டிருந் தால், அது கொழும்பு சட்டையாக இருக்கும். நல்ல மிட்டாய் சாப்பிட்டால், அது கொழும்பு மிட்டாயாக இருக்கும். கடற்கரையில் அதுவரைக்கும் பார்த்திராத ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பார்த்தால், அதுவும்கூட கொழும்பு வண்ணத்துப்பூச்சியாக இருக்குமோ என்று பேசிக்கொள்வோம்.”

இலங்கையுடனான இந்த உறவில் ஏனைய பகுதியினரை விடவும் கூடுதல் நெருக்கம் தனுஷ்கோடி தீவுக்காரர்களுக்கு இருந்தது. பல ஆண்டுகளாகவே தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே படகுகள் வாயிலாகச் சரக்குப் போக்கு வரத்து நடந்துவந்தது. மலையகத் தொழிலாளர்களும் தமிழ்நாடு வந்துபோக இந்தத் தடத்தைப் பயன்படுத்திவந்தனர்.

தனுஷ்கோடி ஈர்த்த பெரும் கூட்டம்

இந்துக்களிடம் காசிக்கு எப்படி ஒரு மரியாதை உண்டோ, அப்படி ஒரு மரியாதை, அந்தக் காலந்தொட்டு தனுஷ்கோடிக் கும் உண்டு. சீதையை மீட்க இலங்கைக்குக் செல்ல கடலில் வானரங்கள் கட்டியதாகச் சொல்லப்படும் ‘ராமர் பாலம்’ தொடங்குமிடம் தனுஷ்கோடி. இந்தப் பாலக் கட்டுமானப் பணியை ராமர் தன்னுடைய வில்லால் தொட்டு அடையாளப் படுத்திய முனை என்பதாலேயே தனுஷ்கோடி (வில் – தனுஷ், முனை – கோடி) என்ற பெயர் வந்தது என்றும் கதை உண்டு. எல்லாவற்றுக்கும் மேல் காசியில் நீராடியவர்கள் தனுஷ்கோடியில் நீராடினால்தான் யாத்திரை பூர்த்தி அடையும் என்று நிலவும் நம்பிக்கை பல்லாண்டு காலமாக இங்கு ஆயிரக் கணக்கான யாத்திரிகர்களை ஈர்த்துவருகிறது.

ஆங்கிலேயர்கள் போட்ட திட்டம்

இந்தப் பின்னணியில் 19-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே சென்னை – தனுஷ்கோடி- தலைமன்னார் – கொழும்பு போக்குவரத்துத் திட்டத்தை யோசித்துக்கொண்டிருந்தார்கள் ஆங்கிலேயர்கள். சர் ஹென்றி கிம்பர் தென் இந்திய ரயில்வே பொறுப்பில் அமர்ந்தபோது, இந்தத் திட்டம் செயலாக்கம் பெற ஆரம்பித்தது. அதாவது, சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை ரயில் பயணம். அங்கிருந்து தலைமன்னாருக்குக் கப்பல் பயணம். அங்கிருந்து கொழும்புக்கு ரயில் பயணம். இதுதான் அந்தப் போக்குவரத்துத் திட்டம்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பாம்பன் பாலம் கட்டப்பட்டது. இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டதால், இரு ஊர்கள் நகரங்கள் ஆயின. தனுஷ்கோடியும் தலைமன்னாரும்.

தனுஷ்கோடியின் புது அழகு

இந்தப் பயணத்துக்கெனப் பிரத்யேகமாக ‘கர்ஸான்’, ‘தி எல்ஜின்’, ‘ஹார்டிஞ்’ எனும் மூன்று நீராவிக் கப்பல்கள் கட்டப்பட்டன. ‘போட் மெயில்’ என்ற ரயில் விடப்பட்டது. 1914 பிப்ரவரி 24-ம் தேதி பயணம் தொடங்கியது. இந்த விரைவு ரயில் தவிர, பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டது. மண்டபம் முதல் தனுஷ்கோடி படகுத்துறை வரை.

தனுஷ்கோடியில் இதற்காக உருவாக்கப்பட்ட படகுத்துறை, ரயில் நிலையம், பெரிய அஞ்சல் நிலையம், சுங்கத் துறை அலுவலகம், மருத்துவமனை, பள்ளிக்கூடம் போன்ற புதிய கட்டுமானங்கள் அந்த ஊரின் அழகையும் செல்வாக்கையும் இன்னும் மேலே கொண்டுசென்றன.

போட் மெயில் சுவாரசியங்கள்

வெகு சீக்கிரம் சென்னை – தனுஷ்கோடி – தலைமன்னார் – கொழும்பு பயணம் பல்வேறு தரப்பினரையும் ஈர்க்கும் பயணம் ஆகிவிட்டது. காரணம், விசேஷமான சில அனுபவங்கள். சென்னையிலிருந்து ஒரு ரயில் பயணம், அப்புறம் ஒரு கப்பல் பயணம், திரும்பவும் இன்னொரு ரயில் பயணம்… இது மூன்றுக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் எடுத்தால் போதும். ‘போட் மெயில்’ ரயில் பெட்டிகள் இன்றைக்கு உள்ளதைப் போல அன்றைக்கே உள்ளுக்குள் நடந்து செல்லும் வசதியைப் பெற்றிருந்தன. ரயிலுக்குள்ளேயே ஒரு பெட்டியில் கேன்டீன் இருந்தது. இதேபோல, இந்தப் பயணத்துக்கென வடிவமைக்கப்பட்ட கப்பல்களும் விசேஷ அனுபவங்களைத் தந்தன.

சுமார் 260 அடி நீளமும் 38 அடி அகலமும் கொண்ட இந்த நீராவிக் கப்பல்கள் நல்ல இரும்பால் கட்டப்பட்டவை. கப்பலின் மேற்பகுதியில் மாலுமிகள் பயன்படுத்தும் இடத்தையொட்டி, நடைமேடை. அதில் கூரை வேயப்பட்ட பகுதியில் உட்கார்ந்து பயணிகள் கடலை ரசிக்கலாம். ஐரோப்பியப் பயணிகளுக்கு அவர்கள் கலாச்சாரத்துக்கேற்ற வசதிகளும் இந்தியப் பயணிகளுக்கு நம் கலாச்சாரத்துக்கேற்ற வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. மூன்றாவது வகுப்புப் பயணிகளுக்குக்கூடத் திருப்தியான வசதிகள் உண்டு. முக்கியமாக, நம்மாட்கள் ஆடு, மாடுகளை ஏற்றிச் செல்ல கப்பலில் தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

என்னே உபசரிப்பு!

இந்த சுவாரசியங்களையெல்லாம் தாண்டி, தனுஷ்கோடி மக்கள் தங்கள் உபசரிப்பால் வெளியூர் மக்களின் உள்ளங்களைக் கொள்ளையடித்திருந்தனர். ‘ராம விலாஸ்’ இட்லி – வக்ரிணி சாம்பாருக்காகவே தனுஷ்கோடி செல்லலாம் என்று சொல்லும் அளவுக்கு அருமையான உணவகங்கள் தனுஷ்கோடியில் தோன்றியிருந்தன.

தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்குச் செல்ல கப்பல் பயணம் ஒன்றே கால் மணி நேரம். ஏற இறங்க எல்லாம் சேர்த்து இரண்டரை மணி நேரம் ஆகும். அதற்குள்ளாகவே பலருக்கு வாந்தி வந்துவிடும். ராம விலாஸ்காரர்கள் என்ன செய்தார்கள் என்றால், வக்ரிணி சாம்பார் என்று ஒரு சாம்பார் வைத்தார்கள். தேங்காய் தவிர்த்த சாம்பார் இது. அதேபோல, இஞ்சி சட்னி. பயணிகளுக்குச் செரிமானத் தொந்தரவு தராத உணவாகத் தர வேண்டும் என்று இப்படிப் பார்த்துப் பார்த்து பக்குவமாகச் செய்த அயிட்டங்களுக்கு ஒரு பெரிய கூட்டமே மயங்கிக்கிடந்தது. ஒருகட்டத்தில் ஐந்தடி அண்டாவில் சாம்பார் வைக்க வேண்டிய சூழல் உருவானதாம். அப்படியும் சாம்பார் போதாமல், அடுத்த அடுப்பில் பருப்பைப் போடுவார்களாம். இதேபோல, அப்போதே பிடித்த மீனைச் சமைத்துத் தந்த அசைவ உணவகங்களும் கொடி கட்டிப் பறந்திருக்கின்றன. அதில் விசேஷம் என்னவென்றால், எண்ணெய் சேர்த்தால், கடல் பயணத்தில் தொந்தரவு வரலாம் என்பதற்காக மீனைப் பொரிக்காமல் சுட்டும் அவித்துப் புட்டுவைத்தும் கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் தவிர, சத்திரங்கள் வேறு தனியே வாரி வழங்கியிருக்கின்றன. தஞ்சாவூர் ராஜா சத்திரம் அவற்றில் புகழ்பெற்ற ஒன்று.

ஒரு சாட்சியம்

இப்போது எண்பதுகளில் இருக்கும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளில் ஒருவரான மன்னார்குடி எஸ். ரங்கநாதன், தனுஷ்கோடியின் தீவிர ரசிகர்களில் ஒருவர். சிறுவனாக இருந்த காலத்தில் தொடங்கி போட் மெயிலில் சுற்றியவர். தனுஷ்கோடி பற்றிப் பேச ஆரம்பித்தால், இளமைப் பருவத்தில் சென்னை ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் தன்னுடைய நண்பரும் உறவினருமான எஸ். ரங்கராஜனுடன் கொழும்புக்கு விளையாடச் சென்றபோது அடித்த லூட்டிகளை நினைவுகூர்கிறார். இந்தியா முழுக்கச் சுற்றியிருந்தாலும் தனுஷ்கோடி பயண அனுபவமே தனி என்கிறார். அங்குள்ள மீனவ மக்களின் அன்பு ஒப்பிட முடியாதது என்கிறார். மிகச் சமீபத்தில் தனுஷ்கோடி போய்விட்டு வந்ததாகச் சொல்லும் அவர், அன்றைய நாளுடன் இன்றைய நாளை ஒப்பிட்டுக் கண்ணீர் வடிக்கிறார்.

பொன்விழா ஆண்டில் நடந்த கொடுமை

1964 தனுஷ்கோடி ரயில் நிலையத்துக்கும் படகுத் துறைக்கும் பொன்விழா ஆண்டு. இடைப்பட்ட 50 ஆண்டுகளில் துடிப்பான நகரமாக தனுஷ்கோடியை வளர்த்தெடுத்திருந்தார்கள் அங்குள்ள மீனவ மக்கள். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்தனர். பயணிகள் போக்குவரத்தைத் தாண்டி சரக்குப் போக்குவரத்தையும் வளர்த்தெடுத்திருந்தனர் தனுஷ்கோடி கடலோடிகள். இந்திய – இலங்கை உறவுச் சங்கிலி யில் முக்கியமான கண்ணியாக தனுஷ்கோடி உருவெடுத்திருந் தது. இதையெல்லாம் பிப்ரவரியில் நடந்த பொன்விழாவில் விமரிசையாகக் கொண்டாடினார்கள் தனுஷ்கோடிவாசிகள். அடுத்து பத்தே மாதங்கள். அவர்கள் வாழ்வின் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் உருக்குலைத்துச் சென்றது கடல்.

சூறையாடிய புயல்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில், 1964 டிசம்பர் 17-ம் தேதி புயல் சின்னம் உருவானது. டிசம்பர் 19-ல் அது புயலாக உருவெடுத்தது. இந்தியக் கடல் பகுதியில் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அப்படியொரு புயல் உருவாவதும் வலுவடைவதும் மிகமிக அபூர்வம் என்கிறார்கள் வானிலையாளர்கள். டிசம்பர் 21 அன்று அப்படியே மேற்காக நகர்ந்த அந்தப் புயல், டிசம்பர் 22 அன்று மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் வவுனியாவைக் கடந்து, அன்றிரவு அப்படியே தனுஷ்கோடிக்குள் புகுந்தது. புயலின் வேகம் அதிகரித்த சூழலில், ஊருக்குள் புகுந்தது கடல். 20 அடி உயரத்துக்கு மேல் அலைகள் எழுந்தன. கன மழை, சூறைக்காற்று, கடல் தாக்குதல். “ஊழித் தாண்டவம்போல இருந்தது” என்று அந்த நாளை நினைவுகூர்கின்றனர் தப்பிப் பிழைத்த தனுஷ்கோடிவாசிகள். ஒட்டுமொத்த ஊரையும் கடல் சூழ்ந்தது. பாதி ஊரைக் கடல் கொண்டுவிட்டது. எச்சங்களும்கூட நிர்மூலமாயின. கடலில் அடித்துச் செல்லப்பட்ட பட்டியலில், அன்றிரவு 11.55 மணிக்கு தனுஷ்கோடி ரயில் நிலையத்தை எட்ட சில நூறு கெஜங்களே மிச்சமிருக்கும்போது புயலில் சிக்கிய பாம்பன் – தனுஷ்கோடி பயணிகள் ரயிலும் அடக்கம்.

உலகுக்குத் தெரியாத மூன்று நாட்கள்

தனுஷ்கோடியில் டிசம்பர் 22 அன்று நடந்த இந்த ஊழித்தாண்டவத்தின் கதை 25-ம் தேதிதான் வெளியுலகுக்குத் தெரியும். மண்டபத்தின் கடல் கண்காணிப்பாளர் அனுப்பிய தகவலில், புயலில் ஊர் சிக்கிக்கொண்டதாகவும் அடித்துச்செல்லப்பட்ட ரயில் இன்ஜினில் ஆறு அங்குலம் மட்டுமே நீருக்கு மேல் தெரிகிறது; அவ்வளவு நீர் சூழ்ந்திருக்கிறது என்றும் தகவல் அனுப்பினார். ராமேஸ்வரம் இந்தப் புயலில் தப்பித்தது என்றாலும், பாம்பன் சிக்கியது. பாம்பன் பாலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அரசுக்குத் தகவல் சென்றதும், கடற்படைக் கப்பல்கள் மீட்புப் பணிக்கு வந்தன. தனுஷ்கோடிக்குள்ளேயே பாலம் அமைந்திருந்த மேட்டுப் பகுதியை நோக்கிச் சென்றவர்கள் மட்டும் உயிரைக் கையில் பிடித்துத் தத்தளித்துக்கொண்டிருந்தனர். ஊரைவிட்டு வெளியேற முயன்றவர்களும் அடித்துச்செல்லப்பட்டிருந்தனர். மிஞ்சியவர்கள் மீட்கப்பட்டு, மண்டபம் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மரணங்கள் எத்தனை?

தனுஷ்கோடி அழிவுகள் தொடர்பாக நம் அரசிடம் சரியான கணக்குகள் கிடையாது. உதாரணமாக, உயிரிழந்த ரயில் பயணிகள் என்று அரசு தரும் எண்ணிக்கை 115. அதாவது, 110 பயணிகள், 5 ஊழியர்கள். அன்றைக்குப் பயணத்தில் டிக்கெட் எடுத்தவர்களின் எண்ணிக்கையை வைத்துச் சொல்லப்படும் எண்ணிக்கை இது. வெளியூர்க்காரர்கள் மட்டுமே இரவு ரயிலில் டிக்கெட் எடுக்கும் வழக்கம் அன்றைக்கு தனுஷ்கோடியில் இருந்திருக்கிறது. உள்ளூர்க்காரர்கள் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் ரயிலில் தினமும் வருவார்கள் என்று சொல்கிறார்கள். உயிரிழந்த உள்ளூர் மக்களின் எண்ணிக்கை என்று அரசு சொல்லும் கணக்கும் இப்படித்தான்.

1961 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தனுஷ் கோடியின் மக்கள்தொகை 3,197. இதைத் தவிர, தனுஷ் கோடியை நம்பிப் பிழைத்த சுற்றுப்புற ஊர் மீனவ மக்கள் உண்டு. நாட்டுப்புறப் பாடல்கள் சொல்லும் தரவுகள்படி, புயலில் சிக்கிய மக்கள் எண்ணிக்கை ‘ஐயாயிரம் ஜனத்துக்கு மேல்’ இருக்கலாம். பக்தவச்சலம் அரசு மிகச் சொற்ப எண்ணிக்கையோடு தன் கணக்கை முடித்துக்கொண்டது. விரைவில், ‘வாழத் தகுதியற்ற ஊர்’ என்றும் அறிவித்தது. அரசாலும் ஊடகங்களாலும் வெகுவிரைவில் தனுஷ்கோடி ‘பேய் நகரம்’ ஆனது. வரலாற்றின் புத்தகங்களிலிருந்து தனுஷ்கோடி எனும் உயிர்ப்பான ஒரு பக்கம் கிழித்து வீசப்பட்டது.

சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

Source:::: The Hindu… Tamil
Natarajan

Laughter …The Best Medicine …” It is all Booked up for a Year … ” !!!

A newlywed farmer and his wife were visited by her mother, who immediately demanded an inspection of the place. The Farmer had genuinely tried to be friendly to his new mother-in-law, hoping that it could be a friendly, non-antagonistic relationship.

To no avail, she kept nagging them at every opportunity, demanding changes, offering unwanted advice and making life unbearable to the farmer and his new bride. While they were walking through the barn, the farmer’s mule suddenly reared up and kicked the mother-in-law in the head, killing her instantly.

At the funeral service a few days later, the farmer stood near the casket and greeted folks as they walked by. The pastor noticed that whenever a man would whisper something to the farmer, he would nod his head yes and say something. Whenever a man walked by and whispered to the farmer, however, he would shake his head, no and mumble a reply.

Very curious as to this bizarre behavior, the pastor later asked the farmer what that was all about. The farmer replied, “The women would say, ‘What a terrible tragedy’ and I would nod my head and say, ‘Yes, it was.’ The men would ask, ‘Can I borrow that mule?’ and I would shake my head and say, ‘Can’t. It’s all booked up for a year.’

Source:::ba-ba mail site

Natarajan