” பழமொழி …அர்த்தமுள்ள பொன் மொழிகள் !!!

c1446-corridorof1000pillarsinramanathaswamytempleinrameswaram-tamilnadu1928

பழமொழிகளில் நாட்டுப்புற மருத்துவம்

மக்களால் பயன்படுத்தப்படும் பழமொழிகளால் மக்களின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும், சமுதாயப் பின்னணியையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய பழமொழிகளில் மருத்துவச் செய்திகளும், நோய் ஏற்படாமல் இருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும், மற்றும் மருந்துப் பொருட்களும் கூறப்படுவதுடன், ஆதனால் தீரும் நோய் பற்றியும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

“இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு;
கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு”

எள், கொள்ளு என்பவை இரண்டும் உணவு வகைகள் ஆகும். எள் என்பது நல்ல சத்துள்ள உணவாகும். மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள் எள்ளைத் தின்றால் நன்கு உடல் பெருக்கும் என்றும், அதிகமான உடலைக் கொண்டவர்கள் கொள்ளைத் தின்றால், உடல் மெலிந்து போதுமான அளவோடு இருக்கும் என்றும் இப்பழமொழி கூறுகிறது.

“ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்”

மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய 4448 நோய்களுக்கும் அடிப்படை வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும். இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது. ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும். இந்நீர் மூலிகைகளின் மீது பட்டு வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது. வாதநோய் தொடர்பாக நரம்புக்கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன. இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும், பயன்படுகின்றன. வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது. இத்தகைய மருத்துவகுணம் கருதியே நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் சோற்று நீரை அருந்துகின்றனர்.

“வேலம் பட்டை பித்தத்தைப் போக்கும்; ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்”

வேலம்பட்டையை இடித்து ஒரு குவளை நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி அரைக் குவளையாக்கித் தினமும் காலை, வேளை மட்டும் குடித்துவர பித்த நோய்களான, வயிற்றுப்புண், பித்தமயக்கம், கைகால் குடைச்சல் குணமாகும். ஆலமரத்தின் பட்டையைக் குடிநீராக்கி குடித்து வர வாய்ப்புண், வாய்நாற்றம், சிரங்கு, கரப்பான்படை, ஆகியன விலகும் என்கிறது பழமொழி.

“மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்”

மாங்காய் என்பது மாங்காய் ஊறுகாயைக் குறிக்கும், மாங்காய் ஊறுகாய் பசியைத் தூண்டுகிறது. எனவே உணவில் மாங்காய் ஊறுகாயைச் சேர்த்துக் கொள்வதால் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை இப்பழமொழி விளக்குகிறது.

“ஒரு போது உண்பான் யோகி; இருபோது உண்பான் போகி; முப்போது உண்பான் ரோகி”

ஒரு வேளை உணவை உட்கொண்டு ஆழ்ந்த யோகப் பயிற்சி மேற்கொள்வதால், மூளையின் அடிப்பகுதியில் ஹைப்போதாலமஸ் என்னும் அமைப்பிற்குக் கீழே உள்ள சுரப்பியிலிருந்து அமிர்தம் என்று சித்தர்களால் கூறப்படும் முறையும், மேலும் நரை திரை நோய்கள் அணுகாது. இருவேளை உணவை உட்கொள்வதால் வாழ்வு நோயற்று இன்பமுடையதாக இருக்கும். மூன்றுவேளை உணவு கொள்பவர்கள் நோயாளிகளாகவே இருப்பர். அஜீரணம், மலச்சிக்கல், குடல்நோய் போன்றவற்றால் இவர்கள் பாதிக்கப்பட்டு, எந்நேரமும் நோயுடன் போராடி வாழும் நிலையை உண்டாகும்.

அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்

சில குழந்தைகள் பிறக்கும்போதே நோய்களின் அறிகுறியுடன் பிறக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் பகுதிகள் நீல நிறமாக இருப்பின் குழந்தை செவ்வாப்பு என்னும் நோயால் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். இதற்குரிய மருந்தாகக் கழுதைப் பால் புகட்டப்படுகிறது. என்பதனை இப்பழமொழி குறிக்கிறது. கழுதைப்பால், செவ்வாப்பு நோயைக் குணப்படுத்த வல்லது, கழுதைப்பாலில் இருந்து தோற்றம் பெற்றது இப்பழமொழி.

ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்”

இதனைக் கிராமப்புற மக்கள் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று வழங்குகின்றனர். ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுவே இதன் பொருளாகும். நாட்டுப்புற மருந்துகளில் மூலிகைச் செடிகளும் அவற்றின் வேர்கள் மற்றும் பட்டைகளும் பயன்படுகின்றன. இவற்றுள் குறைந்தது ஆயிரம் வேர்களின் பயன்பாடு பற்றி ஒருவன் தெரிந்திருந்தால் தான் அரை வைத்தியன் என்ற நிலையைப் பெற இயலும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது.

“அரசனை நம்பிப் புருஷனை கைவிட்டாளம்”

அரச மரத்தைச் சுற்றிவந்தால் குழந்தைப் பாக்கியம் ஏற்படும் என்று யாரோ, கூறக்கேட்ட ஒருத்தி கணவனுடன் சேராமல், அரசமரத்தை மட்டுமே சுற்றி வந்தாளாம். அரசமரம், வேம்பும் இணைந்த மரத்தினைச் சுற்றிவர காற்றானது கருப்பையில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை வாய்ந்தது என்பதை அறிந்தே நம் முன்னோர்கள் பிள்ளையார் சிலையை இந்த மரத்தின் கீழ் வைத்தனர். குழந்தைப் பாக்கியமற்ற பெண்கள் கும்பிடுவதற்கு இதுவே முக்கிய காரணம் ஆகும்.

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

ஆலும் என்பது ஆலமரத்தின் விழுதினையும், வேலமரம் என்பது கருவேல மரத்தின் குச்சிகளையும், நால் என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். இது பொதுமக்கள் அனைவராலும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பழமொழியாகும். ஆலமரத்தின் விழுதினையும், கருவேல மரத்தின் மரக்குச்சிகளையும் நன்கு மென்று பல்விளக்க, பல் நன்கு பளபளப்புடனும், பல் ஈறுகள் நல்ல பலத்துடனும் காணப்படும் என்னும் செய்தி இப்பழமொழியில் விளக்கம் பெறுகிறது.

“பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”

மருத்துவக் குணம் கொண்ட மிளகு நம் உணவில் பயன்படுத்தப்படும் பொருள்களுள் ஒன்றாகும். இந்த மிளகு நஞ்சு நீக்கும் தன்மையுடையது. பகைவர்களின் வீட்டில் உண்ணும் உணவில் விஷம் கலந்திருந்தாலும், பாம்பின் விஷம் தாக்கியவர்களுக்கு விஷத்தின் தன்மையைக் கண்டறிவதற்கு மிளகு பயன்படுகிறது. பாம்பால் கடியுண்டவருக்கு மிளகின் எரிப்புச் சுவை தெரியாவிட்டால் உடம்பில் விஷம் தாக்கி விட்டதாகக் கூறுகின்றனர்.

“ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ”

ஆவாரைப் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து எடுத்து இடித்து வைத்துக் கொண்டு தேனீர், டீப்பொடி இவைகளுக்குப் பதிலாக உபயோகித்து வர உடல் வறட்சி, உடல் நாற்றம், சர்க்கரை நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாக்குவதால், ஆவாரைப் பூவின் மகத்துவத்தைக் குறிக்க வந்த பழமொழியாகும்.

Source:::: Input from a Friend of mine

Natarajan

” மாட்டு வண்டி போகாத ஊருக்கும் உன் பாட்டு வண்டி போகுமே அய்யா … “

ஜூன்  24   இன்று  கவியரசு கண்ணதாசன்  பிறந்த நாள் …  அவரைப்  பற்றிய  நினைவலைகள்  சில ….இன்றைய “தினமலர்”  நாள் இதழில்

படித்தேன் … அது  உங்கள் பார்வைக்கும்  இப்பொழுது …

 நடராஜன்

‘நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை…
எந்த நிலையிலும் எனக்கு
மரணமில்லை…’
தான் இறக்கும் சில மாதங்களுக்கு முன் தனக்கு தானே இரங்கட்பா எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இவை. காலத்தால் அழியாத ‘கிளாசிக்’ பாடல்களின் ‘கிங் மேக்கர்’.

‘கவியரசர்’ என்றதும் குழந்தை கூட கூறிவிடும் பெயர் தான் கண்ணதாசன். 1924 ஜூன் 24ல் சிறுகூடல்பட்டியில் பிறந்து பட்டி தொட்டியெல்லாம் தன் பாடல் வரிகளை பாய்ச்சிய அந்த காவிய நாயகனுக்கு இறைவன் அளித்த வாழ்நாள் 54 ஆண்டுகள் மட்டுமே.’மாட்டு வண்டி போகாத ஊரிலும் உன் பாட்டு வண்டி போகுதடா…’ என பாராட்டும் அளவிற்கு சினிமா பாடல்களை தன் எழுத்து ஏணியில் ஏற்றி ஊர் முழுதும் உலா வந்த அந்த காவிய
புத்தகம் பிறந்த தினம் இன்று. வருடங்கள் கடந்தாலும் நினைவிலும், செவியிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் கவியரசரின் நினைவுகளை அவருடன் நெருக்கமானவர்கள் இதோ பகிர்ந்து கொள்கிறார்கள்….

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி

விசாலாட்சி, கண்ணதாசன் மகள் : அப்பாவிற்கு தெய்வ பக்தி அதிகம். அவர் சந்தித்த அனுபவங்களை தான் பாடலாய் தந்தார். பிசியான பாடலாசியராக இருந்தாலும் குடும்பத்தார் மீது அலாதி பிரியம் கொண்டவர். எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை வைத்து நிறைய பாடல்கள் எழுதியுள்ளார். என் அம்மாவுக்காக ‘தாைழயாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா…’ போன்ற பாடல்களை எழுதினார். ‘பூ முடிப்பாள் இந்த பூங்குழலி… புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி…’ பாடலை என் அக்காக்கள் திருமணத்திலும், என் திருமணத்திலும் பாடச் சொல்லி அருகில் நின்று அவரும் பாடுவார்.பாசமலர் பாடலில் வரும் ‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம்தென்றலே..’ என்ற வரிகள் அவருக்கு மிகவும் பிடிக்கும். மறைந்தாலும் கண்ணதாசனின் மகள் என்ற பெருமையை என் தந்தை அளித்திருக்கிறார். பொன்னம்மாள் கண்ணதாசன் அறக்கட்டளை மூலம் அவர் நினைவாக உதவிகள் செய்து வருகிறோம்.

இரண்டு மனம் வேண்டும்

சொ.சொ.மீ.சுந்தரம், கண்ணதாசனின் கவியரங்க நண்பர்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினேன். 1976ல் மதுரையில் நடந்த கவியரங்கத்தில் என் பேச்சை கேட்டு பாராட்டிய கண்ணதாசன், சொ.சொ.மீ., சுந்தரம் என்பது ‘சொல்லுக்கு சொல் மீறும் சுந்தரம்’ என பாராட்டினார். கவியரங்கங்களில் தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்தார். கண்ணன் மீது அவருக்கு கொள்ளை பிரியம். எங்கு வந்தாலும் நன்கு உறங்குவது அவருக்கு மிகவும் பிடிக்கும். புதுச்சேரி கம்பன் கழகம் நடத்திய கவியரங்கத்திற்கு சென்ற போது 9.30க்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சிக்கு 9.15 வரை அவர் வரவில்லை. அதன் செயலாளர் அருணகிரி, தமிழாசிரியர் ஒருவரை அழைத்து கண்ணதாசனை அழைத்து வரும் வரை இறைவணக்கம் பாடுமாறு கூறிச் சென்றார். ஒரு விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த கண்ணதாசனை கண்டுபிடித்து எழுப்பிய போது ‘துாங்கிவிட்டேன் அருணகிரி… வாருங்கள் செல்லலாம்’ என முகத்தை துடைத்துவிட்டு ஒரு ‘கப்’ காபியோடு மேடையேறியவர் தன் பேச்சில் அத்தனை பேரையும் கட்டிப்போட்டார். அந்த கூட்டத்தில் தனக்கு பிடித்த இரு பாடல்களை அவர் பாடினார். ‘இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்… நினைத்து வாழ ஒன்று, மறந்து வாழ ஒன்று…’ என்று பாடி முடிக்க அங்குள்ள அனைவர் கண்ணிலும் கண்ணீர்.’பார்த்தேன் நினைத்தேன் பக்கம் வர துடித்தேன்… உனைத் தேன் என நான் நினைத்தேன்…’ என தொடங்கி ‘முடித்தேன் ஒரு துளி விடாமல் குடித்தேன்…’ என மற்றொரு பாடலை பாடி அவர்களின் சோகத்தை போக்கினார். மது அருந்தும் போது தான் கண்ணதாசன் பாடல் எழுதுவார் என பலரும் நினைக்கின்றனர். அது தவறு. மது இருக்கும் போது அவரிடம் பாடல் வராது, பாடல் வரும் போது அவரிடம் மது இருக்காது. ‘மருதமலை மாமணியே முருகைய்யா… தேவரின் குலம் காக்கும் வேலய்யா…’ என்ற பாடலை எழுதியதற்காக சின்னப்பதேவர் ‘பிளாங் செக்’ ஒன்றை கண்ணதாசனுக்கு வழங்கினார். வறுமையில் இருந்தாலும் தன் உதவியாளர் கண்ணப்பனை அழைத்த கண்ணதாசன், ‘இந்த காசோலையை கண்ணாடி போட்டு மாட்டு; இது தான் என் பெருமைக்கு எடுத்துக்காட்டு’ என்று கூறினார்.’நான் இந்திய ஜனாதிபதி போல் சம்பாதிக்கிறேன்… அதே நேரத்தில் இந்தியா போல் கடன் வாங்குகிறேன்…’ எனக்கூறுவார்.திரைப்பட பாடல்களை மட்டும் வைத்து கண்ணதாசனை மதிப்பிடக்கூடாது. அவை அல்லாது கவியரங்கம், இசை, பேச்சு என கண்ணதாசனின் திறமைகளை அருகில் இருந்த பார்த்தவர்களின் நானும் ஒருவன்.

காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்


கவிஞர் முத்துலிங்கம்:
 மதுரை மாணிக்கத் தமிழை, கோடம்பாக்கத்திற்கு கூட்டி வந்த பெருமை கண்ணதாசனுக்கு உண்டு. இலக்கியப் புலவர்கள் இலக்கியத்தில் இயம்பாமல் விட்ட நுணுக்கமான கருத்துக்களை, சினிமாவில் தீட்டியவர். இலக்கிய சாற்றை பிழிந்து, திரைப்பாடலில் தந்தவர்.பாவமன்னிப்பில், ‘சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்…,’ துவங்கும் பாடலில், ‘காலம் ஒருநாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்,’ என்ற சரணம், எனது நம்பிக்கையை உயர்த்திய வரிகள்.’மயக்கமா, தயக்கமா? மனதிலே குழப்பமா?…, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு,’- கண்ணதாசனின் பாடல் வரிகள் கவிஞர் வாலிக்கு நம்பிக்கையூட்டி, திரைப்பாடல்கள் எழுதவைத்தவை.கண்ணதாசன் கவிதை மட்டுமின்றி, உரைநடையில் புதிய நடையாக சிறு வாக்கியங்களாக சீர்திருத்தி எழுதியது அகவற்பா போல் இருக்கும். ‘வனவாசம்’ சிறந்த முன்னுதாரணம். அதற்கு ஈடான உரைநடை இலக்கியம், இலக்கிய உலகில் இல்லை.எம்.ஜி.ஆருக்கு ‘மீனவ நண்பன்’ படத்தில், ‘தங்கத்தில் முகமெடுத்து…,’பாடல் எழுதினேன். ‘நன்றாக இருந்தது’ என கண்ணதாசன் பாராட்டினார்.முதன்முதலாக நான், கண்ணதாசன், கங்கை அமரன் இணைந்து ‘கிழக்கே போகும் ரயில்’ படத்திற்கு பாடல் எழுதினோம். ‘மாஞ்சோலை கிளிதானோ, மான்தானோ…,’ பாடலை நானும், ‘கோயில் மணி ஓசைதனை கேட்டதாரோ…,’ பாடலை கண்ணதாசன், ‘பூவரசம் பூ பூத்தாச்சு…’பாடலை கங்கை அமரனும் எழுதினோம்.கண்ணதாசனிடம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் அதிபர் டி.ஆர்.ராமண்ணா, ‘நீங்கள்
இயற்றிய மாஞ்சோலை கிளிதானோ’ பாடல் நன்றாக உள்ளது. இதுபோல், எனது படத்திற்கு ஒரு பாடல் எழுத வேண்டும்,’ என்றாராம். கண்ணதாசன்,’அதை நான் இயற்றவில்லை. முத்துலிங்கம் எழுதியது. அவருக்கு, சந்த நடையில் நன்றாக எழுதவரும். அவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்,’ என்றாராம். எத்தனை கவிஞர்களுக்கு இப்படி பெருந்தன்மை இருக்கும்.அனைத்திலும் கண்ணதாசன் வெற்றி பெற்றாலும், அவர் தோற்ற இடம் அரசியல். நெப்போலியனுக்கு ‘வாட்டர்லுா’ போல, கண்ணதாசனுக்கு அரசியல்தான் ‘வாட்டர்லுா’. ஒரு கவிஞன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் கண்ணதாசன். ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கும் அவரே முன்னுதாரணம். இருந்தாலும், ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை,’ என்ற அவரது பாடல் வரிகள் அவருக்குப் பொருந்தும்.

Source::::Dinamalar… Tamil Daily  June 24

Natarajan

 

மனதை தொட்ட வரிகள் …” புதிர் கன்னி நான் … “

புதிர்கன்னி!

மீட்டப்படாத வீணையாக மீளாத்துயரில் நான்
விவாக வயலில் நடவு செய்யப்படாத பயிராக நான்
முற்றியும், அறுவடைக்கு ஆளில்லாமல் நான்
முழுமை பெறாத வாசல் கோலமாய் நான்
யாரும் கேட்காத இசைத்தட்டாய் நான்
கண்ணன் ராசி இல்லாத கன்னியாக நான்
பொருளாதார சுமையை சுமக்கும் கழுதையாக நான்
யாரும் வாசிக்காத கவிதையாக நான்
திருமணச் சந்தையிலே விலைபோகாமல் நான்
ஆம்… நான் முதிர்கன்னி… வாழ்க்கை பயணத்தில் புதிர்கன்னி!

— பி.ராஜ்குமார், நெய்வேலி. in DINA MALAR… SUNDAY VARAMALAR…

Natarajan

“எனது பாதை நேரானது நெரிசலற்றது…” மோடியின் கவிதை வரிகள் !!!

 

பிரதமர் நரேந்திர மோடிக்கு கவிதை எழுத வரும். சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இங்கே அவருடைய இரு கவிதைகள்.

நமது

மாலை மயங்கும் நேரம்

தனிமையில் களிக்கிறோம் நாம்

என் உடலும் உள்ளமும் பொங்குகின்றது

“தரணேதர்’ திருவிழா.

எவரிடமும் கொடுக்க – வாங்க

பரிமாறிக்கொள்ள எதுவுமில்லை

எனது உனது என்பதும் இருந்ததில்லை

இவ்வுலகில் இருப்பவை யாவையுமே என்னை

மனம் நிறைந்து அகமகிழச் செய்கின்றன.

 

எனது பாதை நேரானது நெரிசலற்றது

குறுக்கு நெடுக்குகள் கொண்டதுமில்லை

மாலை மயங்கும் நேரம்

தனிமையில் களிக்கிறோம் நாம்

 

ஒரு மதமுமில்லை;

சம்பிரதாயமுமில்லை மனிதன் மனிதன்தான்

வெளிச்சத்தில் வேற்றுமையும் உண்டோ?

லாந்தலானால் என்ன அகலானால் என்ன?

நிலைத்த இடத்தில் தொங்கும் சரவிளக்கல்லவே

மாலை மயங்கும் நேரம்

தனிமையில் களிக்கிறோம் நாம்.

இப்படிப்பட்ட மனிதர்கள்

 

பேச வேண்டிய இடத்தில் பேசமாட்டார்

பேச வேண்டா இடத்தில் பேசுவர்

இப்படிப்பட்ட மனிதர்கள்

எடை வைக்கோல் ஒத்ததே.

 

குரலின் கண்களைத் திற

சொல்ல வேண்டியதை சொல்லிவிடு

கபட மௌனத்தின் ஆடம்பரத்தை

வட்டோடு சுட்டுவிடு.

 

ஒருபொழுதும் முகஸ்துதியின்

மடியில் அமரவேண்டாம்

பேச வேண்டிய இடத்தில் பேசமாட்டார்

பேச வேண்டாத இடத்தில் பேசுவர்

எவருடைய நிந்தனை சொற்களையும்

கேட்டு வாய் திறவாமல் அமர்வதும் பாபமாகும்.

 

உண்மை பேசி ஏற்றுக்கொள்பவன்

எல்லா தவறுகளிலிருந்தும் விடுபடுகிறான்.

 

காற்றின் அலைகளில் மரத்தின் கௌரவம்

இணைந்து ஆடுகிறது.

 

பண்டுகாலந்தொட்டு இயற்கையில் எதுவுமே

பொய் பேசியதில்லை.

 

தமிழாக்கம்: ராஜலக்ஷ்மி சீனுவாசன்

திசை எட்டும்’ மொழிபெயர்ப்பு காலாண்டிதழ் வெளியிட்ட குஜராத்தி சிறப்பிதழிலிருந்து…

Source:::: Dinamani Kadhir… Tamil Weekly

Natarajan

 

படித்து ரசித்தது …புது கவிதை சில …

இயற்கையின்பங்கு

நீ போட்டு முடித்துவிட்டுபோன
கோலத்தை
மரத்திலிருந்த பூக்களை உதிர்த்து
தன்பங்குக்கு அழகாக்குகிறது
இயற்கை
-சிவபாரதி, திருவாரூர்.

தூரமில்லை

தகவல் தொடர்பில் சுருங்கிவிட்ட உலகில்
அருகருகே உள்ளவர்களோடு
செல்போசியில் பேசுகையில்
தூரமாய் போய்விடுகின்றன.
பக்கத்து பக்கத்து வீடுகள்
-விகடபாரதி, வடபாதிமங்கலம்

முரண்

தீவிர பாதுகாப்பு,
குண்டு வெடித்தபின்
சமாதான கூட்டம் முடிந்தது அடிதடியுடன்
கொட்டும் மழையில்
மந்திரி திறந்து வைத்தார்
தண்ணீர்ப் பந்தல்
-ஆர்.சிவானந்தம், கோவில்பட்டி

தேடல்

தினம், தினம் கடலைத்தேடி
நீந்தி அலைகிறது
கண்ணாடி தொட்டியில் மீன்.
-சோலை அய்யப்பன், சோழசிராமணி.

வெண்ணிலா

மின்கட்டணம்
கட்ட வேண்டாத
உலக பொதுவிளக்கு
இதற்கு மாதம் ஒருநாள்
விடுப்பு.

-ந.வெற்றிவேல், சாாத்தான்குளம்  

Source::::Kalki … Tamil weekly

Natarajan

” வர வேண்டும் ஒரு அஞ்சல் அட்டை எனக்கு நாளைக்கு … அப்பா “…

நினைவலைகள் …

இன்று 31 மே…என் தந்தை மறைந்த நாள் …7 வருடம் முன்பு. அதிகம் பேச மாட்டார் …ஆனால் முகத்தில் தெரியும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று. மனதில் பட்டதை பட் என்று சொல்லும் பழக்கம் … கடமை தவறா அரசு அதிகாரி. நேர்மை வழி வளர்ந்து அந்த வழியில் தன் பிள்ளைகளையும் நடக்க செய்தவர் …

புது வருட வாழ்த்து, திருமண வாழ்த்து முதல் இரங்கல் செய்தி வரை , எல்லோருக்கும் ஒரு அஞ்சல் அட்டை செல்லும் அவரிடம் இருந்து !!!

அஞ்சல் அட்டை அவரின் தனி அடையாளம் ஆனதால் , அவருக்கு தேவைப்படவில்லை ஒரு மின்அஞ்சல் முகவரி அடையாளம் !!!

நாளை 1 ஜூன் என் பேரனின் முதல் பிறந்த நாள் … நான் ஒரு கவிதை வடிவில் என் அப்பாவைக் கேட்கிறேன் …அவ்ர்

நல் வாழ்த்துக்களை என் பேரனுக்கு. இது வெறும் கவிதை அல்ல … என் நினைவலைகளில் இருந்து பிறந்த உணர்ச்சி

வரிகள்….

நடராஜன்

மே 31 2014

ஆயிரம் பிறை கண்டாய் … வந்த வேலை முடிந்து விட்டது என நீ நினைத்தாயோ ?

சொந்தமும் பந்தமும் மறந்து நீ மறைந்து விட்டாய் பிறை ஆயிரம் கண்ட மறு வருடம் !

பறந்து விட்டது வருடம் 7 இன்றுடன் நீ விண்ணில் பறந்து …

மறக்க முடியுமா அப்பா உன்னை ? என் அப்பா உன்னை ஒரு நல்ல

தாத்தாவாகவும் பார்த்த உன் பிள்ளை நான்! என்னை தாத்தாவாக பார்க்க நீ இல்லையே இன்று இங்கு ..

இயற்க்கையின் விதி அது … அது போகட்டும் … எனக்கு இந்த மண்ணில்

முகவரி தந்த தந்தை உன்னிடம் இருக்கிறதே என் முகவரி …இது வரை உங்க

ஒரு வரி அஞ்சல் அட்டையும் வரவில்லையே எனக்கு … ஏன் அப்பா ?

அஞ்சல் அட்டைதானே உங்க அடையாளம் …

வர வேண்டும் ஒரு அஞ்சல் அட்டை எனக்கு நாளைக்கு அப்பா…நீங்க

தர வேண்டும் நீங்க உங்க நல் வாழ்த்துக்க்கள் ஒரு ஆயிரம் …என் பேரனுக்கு அதுவே சிறந்த

பரிசாகும் , அவன் முதல் பிறந்த நாள் அன்று { 1 ஜூன் 2014 }

உங்கள் அன்பு பிள்ளை

நடராஜன்

வாலியின் கவிதைகளில் ஒன்று…

 

vaali

சாக்கடையில் விழுந்தாலும்
சந்தனத்தில் விழுந்தாலும்
எதுவுமே –
ஒட்டிக் கொள்ளாமல்
உள்ளது உள்ளபடியே
எழுந்து வருகிறது –
என்னுடைய நிழல்.
நிழலுக்கு இருக்கும் – இந்த
நிட்காமிய ஞானம் – என்
உடலுக்கும் வாய்க்குமாயின்-
ஆதிசங்கரரைப் போல்
அடியேனுக்கும் –
கள்ளும் ஒன்று;
காய்ச்சிய ஈயமும் ஒன்று!’——கவிஞர் வாலி

 

source:::::DINAMANI .COM

Natarajan

” முடிந்ததா உங்க பிரச்சனை … ” ?

 

வெடித்தது  ஒரு  குண்டு  ….  மடிந்தது  ஒரு இளந்தளிர்  …

இடி  விழுந்தது  ஒரு  குடும்பத்தில் …. சோகத்தில்

முடிந்தது  அவர்தம்   கனவு … சொல்லுங்க  இப்போ …

கொடிய வர்களே …. முடிந்ததா  உங்க  பிரச்சனை

விடியலை  பார்க்காமல்  மடிந்த அந்த   இளம் தளிருடன்  ?

 

நடராஜன்

 

 

 

 

 

 

ஒரு “மை”…. அது உனக்கு பெரு “மை “…!!!

ஒரு “மை” … உன் விரலில் ஒரு கரு “மை”

வேண்டும் உனக்கு பொறு “மை” … ” மை ”

அதன் அரு “மை” தெரிய !!! பெரு “மை ”

உனக்குதான்… அந்த “மை” யின் வலி “மை”

புரியும் நேரம் !!!

நடராஜன்

” இலங்கை அழிந்ததேன் ?… இரவி மறைந்ததேன்? …” !!!

தமிழ்ச் சொற்சுவை உள்ளத்தே புகுந்து உணர்விலே ஒன்றி, கண்களில் நீர் கசியும் போதில்…
அடடா! அனுபவித்தவர்களுக்கே அதன் தரமும் சுவையும் புரியும். அற்றை நாளிலும் இற்றை நாளிலும் அடியேன் நாடுவது நல்ல நண்பர்களின் துணையை!
கவிஞர் நந்தலாலா – நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவருடன் பேசிக் கொண்டிருந்தாலே போதும்… கவிச்சுவையும் தமிழ்ச் சுவையும் பண்டை இலக்கிய வாழ்வின் சுவையும் ஒருங்கே உளத்தில் புகும்.
ஆறேழு வருடங்களுக்கு முன்னர் பொதிகை-தொலைக்காட்சியில் ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கின்றோம். அப்போதும் அச்சுவை பருகி மகிழ்வேன் யான்.
ஒரு நாள் காலை… பொதிகையில் நண்பர் நந்தலாலா சொல்லின் சுவையை தனிமையிலே எடுத்துச் சொன்ன வண்ணம் இருந்தார். கேட்டுக் கொண்டிருந்தேன் சுற்றுப் புறச் சூழல் மறந்து!
அற்புதமான நினைவாற்றல் அவருக்கு. காளமேகத்தின் சிலேடையை தொய்வின்றித் தொகுத்தளித்தார்.
சிறுவயதில் சொல் விளையாட்டு எங்களுக்கும் அத்துபடிதான். எல்லாம் நம் கிராமங்களில் பிறந்து, வளர்ந்து, நல்லோரிடம் தமிழ் படித்துப் பழகியிருக்க வேண்டும்… அந்த வாய்ப்பு கிடைத்தது நான் செய்த புண்ணியம்.
கவிஞர் நந்தலாலா சொன்ன ஓரிரு சொற்சுவையைக் கோடிட்டுக் காட்டாமல் இருந்தால் எப்படி?
அவருடைய சிறுவயதில் பெரியவர்கள் கேட்பார்களாம்… அந்தக் கேள்விகளுக்கு ஒற்றைச் சொல்லால் பதில் தரவேண்டும். இதுவும் ஒரு விளையாட்டு!
பெரியவர் கேட்பாராம்… “இலங்கை அழிந்ததேன்? இரவி மறைந்ததேன்?”
இதற்கான ஒற்றைச் சொல் பதில் – “இராமன் தாரத்தால்”!
அதெப்படி…? இலங்கை அழிந்தது – இராமன் தாரத்தால்! இரவி மறைந்தது – இரா மந்தாரத்தால்!
இன்னொன்று..
அக்ரஹாரம் கெட்டதேன்? விவசாயம் அழிந்ததேன்?
இதற்கான பதில்… “பார்ப்பான் இல்லாமையால்!”
பார்ப்பு எனும் வேதமோதும் வேதியன் இல்லாமல் அக்ரஹாரங்கள் கெட்டன. விவசாயத்தைப் பார்ப்பவன் இல்லாமல் அதுவும் அழிந்து வருகிறது!
தனிமையைப் பற்றிச் சொன்ன நந்தலாலா, ஒரு கவிதை நயத்தைச் சொல்லி விடைபெற்றார்…
இக்பால் சாகும்வரை உன் பிணத்தை நீதான் சுமக்க வேண்டும்!
– உள்ளத்தில் உழன்று கொண்டிருக்கிறது இந்த வாசகம்!

செங்கோட்டை ஸ்ரீராம் – in Dinamani…blog.dinamani.com

natarajan