வாரம் ஒரு கவிதை ….” தண்ணீர் “

தண்ணீர் …
+++++++++++++
தண்ணீர் …தண்ணீர்  நாடகமும்
திரைப்படமும்  பார்த்த நேரம் புரியவில்லை
தண்ணீரின் அருமை பெருமை !
திரை இயக்கத்தின் பெருமை பேசி
அப்போதே மறந்து விட்டோம் தண்ணீரின் அருமை !
தண்ணீர் தண்ணீர் என்று கலங்கினான்
இந்த மண்ணின் விவசாயி வாடிய அவன்
பயிர்  பார்த்து ….அப்போதும் தெரியவில்லை
நகரவாசி  நமக்கு  தண்ணீரின் அருமை !
காற்று மட்டும் வரும் தண்ணீர் குழாய் ,
வறண்டு கிடைக்கும் குளம் குட்டை ஏரி,
அரண்டு மிரண்டு இருக்கு நம் நகரமே இன்று !
“தண்ணீர் இல்லை எங்க வீட்டிலும்  ” என்னும்
ஒரே ஓரு வார்த்தையில் இணைந்துவிட்டோம் நகர
வாசிகள் அனைவரும் இன்று! சாதி ,மத ,மொழி
இனம் பேதம் ஏதும் இல்லை இந்த ” இணைப்புக்கு ” !
“தண்ணீர் இல்லை” என்னும் விதியால் இணைந்த
நாம்  சாதி ,மதம் ,  மொழி பேதம் பாராமல்
மனதாலும் இணைவது எப்போது ?
K.Natarajan
in http://www.dinamani.com dated 19/06/2019

வாரம் ஒரு கவிதை ….” சுய தரிசனம் “

சுய தரிசனம்
++++++++++++++
கண்ணாடியில் பார்க்கிறோம் நம்
முகத்தை  தினமும் .. திரும்பத் திரும்பப்
பார்த்து ரசிக்கிறோம் …அது சுய தரிசனம் !
கண்ணாடியில் தெரிவது இல்லை நம் சுய ரூபம் !
பார்த்தவுடன் தெரிவதில்லை நம்
சுய ரூபம் தன் மூக்கு கண்ணாடி
வழியே நம்மைப் பார்க்கும் அடுத்தவருக்கும் !
நம் கண்ணாடியும் காட்டுவதில்லை
நம் சுய ரூபத்தை ! அடுத்தவரும்
பார்ப்பதில்லை நம் சுய ரூபத்தை அவர்
கண்ணாடி வழியே !
நம்மைப் படைத்த இறைவனுக்கு மட்டும்
தெரியும் அவன் வசிக்க ஏற்ற இடமா நம்
இதயம் என்று ! நம் சுய ரூபம் என்ன என்று !
இறைவன் வசிக்க ஏற்ற இடமாக நம்
இதயத்தை மாற்ற தேவை ஒரு சுய
பரிசோதனை …சுய தரிசனம் நமக்கு !
இதயத்தில் இறைவன் குடி புகுந்து விட்டால்
ஒரு கட்டண தரிசனமும்  தேவை இல்லையே
நமக்கு அந்த இறைவனை தரிசிக்க !
K.Natarajan
in http://www.dinamani.com  dated 12/06/2019

வாரம் ஒரு கவிதை ….” சித்திரம் பேசுதடி …”

சித்திரம் பேசுதடி …
+++++++++++++++++++
 நீல வண்ண சித்திரம் என்னை
விண்ணிலிருந்து  பார்த்து ரசிக்கும்
மனிதா நீ மண்ணில் என்னை சிதைப்பது
என்ன நியாயம் ?
உன் பூமித்தாய் கேட்கிறேன் உன்னை
உரிமையுடன் ! நீ இருக்கும் சோலைவனம்
விட்டு வேற்று கிரகத்துக்கு செல்கிறேன்
என்கிறாயே ! உன் விண்வெளி போட்டியிலும்
பூமி நான் சரித்திரம் படைப்பேன்  மனிதா !
ஏன் தெரியுமா …சித்திரம் நான் உனக்கு
மட்டும் சொந்தம் இல்லை … உன் பிள்ளைகளுக்கும்
நான் சொந்தம் ! புரிந்து நடந்து கொள் மனிதா !
நடராஜன்.K
in  http://www.dinamani.com  dated 06/062019
06/06/2019

Morning Breakfast for my Winged Guests at my Terrace …..

Every Day a  Group of pigeons wait for me to serve Food to them on their Table and Floor . of my Terrace.

On one such day i videographed their presence thro my mobile camera .

May like to see and Share

K.Natarajan

03/06/2019

 

 

 

வாரம் ஒரு கவிதை ….” கண்டெடுப்பின் காலக் குறிப்புகள் “

கண்டெடுப்பின் காலக்  குறிப்புகள்
=================================
கடலில் மட்டும் முத்துக்கள் இல்லை
இந்த மண்ணின் அடியிலும் புதைந்து
கிடக்குது நம் முன்னோர் வடிவமைத்த
நகரமும் கோயிலும் அழகு சிற்பங்களுடன்
காலத்தால் அழியாத அடையாள சின்னமாய் !
எந்த தொழில் நுட்பம்   இருந்தது நம் முன்னோருக்கு
அன்று ? ஆண்டுகள் பல கடந்தும் அவர் பேர்
சொல்லுதே இன்னும் !
கணிணி யுகத்தில் வாழும் நாம்  முறையாக
பதிவு செய்ய வேண்டும் நம் நாட்டின்
அருமை பெருமையை ஒரு பொக்கிஷமாக !
விட்டு செல்ல வேண்டும் நம் பெயர் சொல்லும்
பாத சுவடுகளை இனி வரும் தலை முறை
பின் தொடர்ந்து நடக்க !
இனம் மதம் மொழி தாண்டி நாம் இன்று
பதிக்கும் பாத சுவடு கல்லில் வடித்த சிற்பமாய்
அடையாளம் காட்டும் நம் புனித மண்ணை
ஒரு புதிய பூமியாக என்றென்றும் !
K.Natarajan   in http://www.dinamani.com dated  01/06/2019
01/06/2019

வாரம் ஒரு கவிதை ….” கண் திறப்பாரா கடவுள் ” ?

கண் திறப்பாரா கடவுள் ?
++++++++++++++++++++++++++
வேண்டாத கடவுள் இல்லை ..செய்யாத பிரார்த்தனை
இல்லை ! கண் திறந்து பார்ப்பாரா கடவுள் ?
பூஜை அறையில் வேண்டி நின்றேன் கடவுளிடம்
இன்று காலை !
இதோ தந்து விட்டார் வரம் என் கடவுள் !
வாட்டர் டேங்கர் என் வீட்டு வாசலில் கொடுக்கிறது
ஒரு குரல் … குழல் இனிதல்ல , யாழ் இனிதல்ல
வாட்டர் டேங்கர் ஒலிப்பானே என் செவிக்கு
தேவ கானம் இன்று !
நாட் கணக்கில் மாதக்கணக்கில் காத்திருந்தேன்
கண் திறந்து விட்டார் கடவுள் இன்று !
நிறைந்தது என் வீட்டு வாட்டர் டேங்க்
மட்டும் அல்ல இன்று!  என் மனதும் தான் !!!
K .நடராஜன்
29/05/2019

வாரம் ஒரு கவிதை …”யாருக்கு யார் சேவகர் ? “

 

யாருக்கு  யார்  சேவகர் ?
+++++++++++++++++++++++
அரசாங்க  வேலையோ  தனியார்  கம்பெனி
வேலையோ …கீழ் மட்ட ஊழியர் முதல்
மேல் மட்ட அதிகாரி வரை அனைவருக்கும் இருக்கு
“திறன் காணும் சோதனை ” காலம் (“Probation”)
பணியில்  சேர்ந்தவுடன் அங்கு!
திறனில் குறை இருந்தால் அரை குறையாக
முடிந்து விடும்  சேவகரின்  பணிக் காலம்!
பணியில் அமர்த்தியவருக்கும்  தெரியும்
பணியில் சேர்ந்தவருக்கும் தெரியும்
பணி நியமனம் ஒரு “பணிக்  கொடை “
அல்ல என்று !
திறன் இருந்தால் மட்டுமே பணி
தொடரும்!  இல்லையேல் மீண்டும்
வேறு  வேலை தேடும் பணி தொடரும்
அந்த ஊழியருக்கு !
ஊழியருக்கு எல்லாம் “திறன் காணும்
சோதனை ”  காலம் இருக்கு !
மக்கள் உங்களுக்காக ஊழியம் செய்கிறேன்
என்று சொல்லி ” மக்கள் சேவகர் “
நாற்காலியில் அமரும் நம் “மக்கள்
சேவகர்களுக்கு” இன்று வரை இல்லையே
ஒரு ” திறன் காணும் சோதனைக் காலம் ” ?
அது ஏன் ?
திறமை இல்லையேல் சேவகரை பதவி
நாற்காலியில் இருந்து உடனே கீழே இறக்கும்
அதிகாரம் இருக்க வேண்டாமா அவரை
வேலையில்  நியமித்த மக்களுக்கு ?
“மக்கள் சேவகருக்கு ” மட்டும் அப்படி என்ன
ஒரு விதிவிலக்கு … உத்திரவாதம் (Guarantee )அவர்
“பணிக்கு” ஐந்து ஆண்டு என்று ?
நடராஜன்
10/05/2019

வாரம் ஒரு கவிதை …” வருவாயா நீ ” பானி ” ?

 

வருவாயா  நீ …” பானி ” ?
===========================
பேய்  மழை  வேண்டாம் எங்களுக்கு
பணி முடக்கிடும் புயல் காற்றும்
வேண்டாம்  எங்களுக்கு !   நீ
வருவாய் , ஒரு மழை தருவாய் என்று
காத்திருக்கோம் “பானி “!
நீ வருவாயா ? எங்கள் மண்ணும்
மனமும் குளிர ஒரு பெரு மழை தருவாயா நீ ?
ஆடி அசைந்து   நீ வரும் முன்னரே
 விருந்தாளி உன்னைப் பற்றி விமர்சனம்
ஒரு நூறு !  முகம் திரிந்து நோக்கக்
குழையும் விருந்தாக மாறி சினம் கொண்டு
நீ  தடம் மாறி செல்ல வேண்டாம்”பானி”
கண்ணில் நீருடன் காத்திருக்கோம்
உன் வரவுக்கு ..எங்கள் கண்ணீரைக்
காணிக்கையாக  ஏற்றுக்கொள் “பானி ” நீ !
இயற்க்கை அன்னை நீ அருள் மழை
பெரு மழை வடிவில் பொழிய வேண்டும்
இந்த மண்ணுக்கு ! எங்கள் ஆனந்தக்
கண்ணீரும்  உன் மழைப் பொழிவுடன்
சேர்ந்து நனைக்க வேண்டும் என் மண்ணை !
வருவாயா நீ “பானி” ?   கருமேக ஆடை
கட்டி  இதமான ஒரு நாட்டியம் ஆட என் மண்ணில் !
K.Natarajan
29/04/2019