Message for the day…”Make a list of all the things for which you have cried so far. You will find that you have craved only for paltry things, for momentary distinctions, and for fleeting fame. From now on, you should cry only for God, for your own cleansing and consummation.”

Make a list of all the things for which you have cried so far. You will find that you have craved only for paltry things, for momentary distinctions, and for fleeting fame. From now on, you should cry only for God, for your own cleansing and consummation. You should weep, wailing for the six cobras that have sheltered themselves in your mind, poisoning it with their venom – Lust, anger, greed, attachment, pride and malice. Quieten them as the snake charmer does with his swaying flute. The music that can tame them is the singing aloud of the name of God. And when they are too intoxicated to move and harm, catch them by the neck and pull out their fangs as the charmer does. Thereafter they can be your playthings; you can handle them as you please. When these are laid low, you will gain equanimity. You will be unaffected by honour or dishonour, profit or loss, joy or grief!

Source…http://media.radiosai.org/

Natarajan

” என் கவிதைகள் “… தினமணி நாளிதழின் மதிப்புரை ….

என் கவிதைகள் – கே. நடராஜன். பக்.106 விலை ரூ.90 ஸ்பீடு பிரிண்டர் சென்னை:

 

சுவடுகள் தந்த அனுபவம் சுவடுகள் ஏற்றிடும் வாழ்வின் தொகுப்பு, என சித்தர் சுவாமிகளின் முகப்பு வரிகளுடன் கே. நடராஜனின் என் கவிதைகள் நூலுக்குள் நுழைந்தால். மணி மணியான நூறு தலைப்புகள், அத்தனையும் தினமணி கவிதை மணியில் கொடுக்கப்பட்ட தலைப்புகள், அதற்கு அவர் எழுதிய கவிதைகளை தொகுத்து வெளியிட்டுள்ளார்.

கே.நடராஜன்.  விமான நிலைய ஆணையத்தில் 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற அவரின் கவிதை தாகத்திற்கு தினமணி கவிதை மணி நீரூற்றியதாக அறிமுக உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது தமிழாசியர் பள்ளி பருவத்தில் அவரை ஊக்கப்படுத்தியதை நினைவு கூர்கிறார்.

உணர்வுகளின் தொகுப்பு, வார்த்தைகளின் அலங்காரம், என்று மட்டுமலாமல், கருத்துச் செரிவு, இலக்கண நடையுடன் கவிதைகளை கொடுக்கப்பட்ட தலைப்பில் இருந்து பிறழாமல் எழுதி வாரம் தோறும் பங்கெடுத்த கே.நடராஜன் அவரின் அனைத்து கவிதைகளையும் தொகுத்துள்ள விதமும் நேர்த்தி மிக்கதாக இருக்கிறது. முன்னாள் ஐ.ஏ.எஸ் என். விட்டல் இந்த தொகுப்பிற்கு அணிந்துரை கொடுத்துள்ளார்.

எல்லையற்று விரிந்து கிடக்கும் வானத்தை போல் கவிஞரின் கற்பனையும் அப்படியானதே.. காற்று வேகத்தில் உருவாக்கப்பட்ட கவிதைகள் ஆயினும் கருத்துக்கள் கல்வெட்டில் செதுக்க தகுத்தவை என்று பாராட்டியுள்ளார். அவரின் திறமை அனைத்து கவிதைகளிலும் பளிச்சிடுகிறது என்றாலும் “பறவையின் மனசு” , “வாழ்க்கையின் தூரங்கள்”, “இன்றைய தாலாட்டு”, “நிழல் தேடி” என பல கவிதைகளை சொல்லலாம்.

Source….

வீண் செலவு இல்லாத ஒரு திருமணம் …! Waste less Destination Wedding Plan …

 

1.. என் ஆதரவு ” டெஸ்டினேஷன் வெட்டிங் பிளானுக்கு “
2. பழக்கம் வழக்கம் என்று சொல்லி லட்சம் பல செலவு செய்து தங்கள் பகட்டு , பணம்
   செல்வாக்கு என்ன என்று ஊருக்கு காட்டும் வழக்கமான திருமணத்தில் மணமகனும்
   மணமகளும் வெறும் காட்சி பொம்மைகளே ! அக்னி சாட்சியாக நடக்கவிருக்கும்
   மண நாளுக்கு முந்தைய தினமே இந்த இரண்டு ” பொம்மைகளை ” வைத்து அவர்
   பெற்றோர்  நடத்தும் “பொம்மலாட்டம்” அவர் செல்வாக்கை வெளிச்சம் போட்டுக்
   காட்டும் ஒரு விளம்பர படம் ! ஆதலால் , என் வாக்கு “வேஸ்ட் லெஸ்  டெஸ்டினேஷன்
   வெட்டிங் பிளானுக்கு ” மட்டுமே !
3. இன்றைய திருமணத்தில் தவிர்க்கப் பட வேண்டிய குறைகள் சில ..
   1. ஆடம்பர திருமண அழைப்பிதழ்
   2. ஆடம்பர ஆடை  அணிகலன்கள்
   3. ஆடம்பர விருந்து
   4. பகட்டு மேடை அலங்காரம் , மின் விளக்கு அலங்காரம்
   5. மெல்லிசை நிகழ்ச்சி  என்னும் பெயரில் திருமண மண்டபமே அதிரும்
      அதிர்வலைகள் !
   6.வாழ்த்து கூற விரும்பும் விருந்தினர் வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ..
     வயது முதிர்ந்த தம்பதியரும் வரிசையில் நிற்கும் அவலம் !
   பின்பற்றப் பட வேண்டிய நிறைகள் சில …
   1. மங்கள  இசை
   2. மென்மையான மண மாலைகள்
   3. வேத மந்திர  உச்சாடனம் … அவரவர்  மதம், குல வழக்கம்  மனதில் கொண்டு
   4. ஹோமம் , அக்னி சாட்சி …அவரவர்  மதம் , குல வழக்கப் படி
   5. அவரவர் குடும்ப பெரியவர் மற்றும் முக்கிய உறவினர் முன்னிலை …
   6. எளிய சிறப்பு உடை …எளிமையான குடும்ப விருந்து …
4.  வரவேற்பு , இரவு விருந்து  என்னும் பெயரில் வீணடிக்கப்படும் வறட்டு ஜம்ப செலவு
    பணத்தை , “வருங்கால சேமிப்பு வைப்பு நிதியாக ” மாற்றி மணமக்களுக்கு திருமண
    பரிசாக கொடுக்கலாமே !
5. என்னுடைய புதிய ” டெஸ்டினேஷன் வெட்டிங் ” மற்றும் ” வேஸ்ட் லெஸ் வெட்டிங் “
   திட்டம் .
   1. மணமகன் , மணமகள் வழியில் நீண்ட  திருமண வாழ்க்கை  ..பொன் விழா
      வைர விழா கண்ட முதிய அனுபவம் மிகுந்த தம்பதியர் இல்லத்தில்
      நடக்க வேண்டும் ஒரு ” டெஸ்டினேஷன் வெட்டிங் ” .
   2. இலட்சிய தம்பதியர் முன்னிலையில் அவர்கள் ஆசியுடன் நடக்கும்
      ஒரு திருமணம் புது மண தம்பதிக்கு தாங்களும்  அந்த
      லட்சிய தம்பதி போல வாழ்க்கை நடத்திக் காட்ட வேண்டும் என்னும்
      ஆசை விதையை அவர் மனதில் விதைக்கும் .
   3. இல்லத்தில் நடக்கும் இனிய மண விழா என்பதால் முக்கிய உறவுகள்
      தவிர மற்றவருக்கு இணைய தள நேரலை மூலம் திருமண நிகழ்வு
      மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளப் படும் .
    4. திருமண வாழ்த்து சொல்ல விரும்பும் மற்ற சுற்றமும் , நட்பும்
       திருமண இணைய தளத்தில் தங்கள் மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள்
      பதிவு செய்வர் .
    5. திருமண பரிசு கொடுக்க விரும்பும் அன்பர்கள் திருமண இணைய
       தளத்தில் அறிவிக்கப் பட்டு உள்ள  மணமக்களின் வங்கி கணக்கில்
       செலுத்த அன்பு வேண்டுகோள் … பரிசு காசோலையும் அனுப்பும் வசதி !
    6. பரிசு விபரமும் திருமண இணைய தளத்தில் பதிவு செய்யப் பட்டு விடும் .
    7. வாழ்த்துக்கும் , பரிசுக்கும் நன்றி இணைய தளத்திலோ அல்லது
       அவரவர் மின் அஞ்சல் மூலமாகவோ  தெரிவிக்கப்படும் .
    8. இனிய மண நாள் நிகழ்வு புகைப் படங்கள் தொகுப்பு  மற்றும்
       ஒளிநாடா (வீடியோ ) திருமண இணைய தளத்திலேயே பதிவேற்றப்பட்டு
       வேண்டும் சமயம் பார்த்து மகிழவும்  மற்றும் சுற்றம் நட்புடன்  பகிர்ந்து
       கொள்ளவும் வழி வகுக்கும் .
    9. இந்த மாதிரி ” டெஸ்டினேஷன் மற்றும் வேஸ்ட் லெஸ் வெட்டிங் ” மணமக்களின்
       சந்ததியருக்கும் ஒரு நல்ல முன் மாதிரி ஆகும் !
    10. ஒரு நல்ல ஆரம்பம் …அதுவே அந்த குடும்பத்தின் பழக்கமாகவும்
        வழக்கமாகவும் மாறிட இது ஒரு நல்ல வாய்ப்பு !
The above input sent by me to the Tamil Daily Dinamani  in response to a Contest announced by them a fortnight back  has secure Second Prize in the contest.
Source …www.dinamani.com dated 27th Dec 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை….” கொண்டாடப்படும் தினங்கள் “

கொண்டாடப் படும் தினங்கள்
—————————-
இன்று பிறந்த நாள் ….நாளை திருமண  நாள்
நாளை மறு நாள் குழந்தை  பிறந்த நாள் !
பணம் படைத்த அவனுக்கு தேவை ஒரு காரணம்
ஒரு நாளைக் கொண்டாட … அவன் செல்வாக்கை
பறை சாற்ற ! இல்லா விட்டால் அவன் ஒரு
செல்லாக் காசு  அவன் சமூகத்தில் !
தினம் தினம் கொண்டாட்டம்தான் அவன் வீட்டில் !
தினம் தினம் ஒரு வேளை சோற்றுக்கே
திண்டாட்டம் இன்னொருவன் வீட்டில் !
வயிறார அவன் சாப்பிடும் தினம் மட்டுமே
அவனுக்கு கொண்டாட்ட தினம் !
இல்லாதவனும்  கொண்டாடும் தினமாக
இருக்க வேண்டும்  ஒவ்வொரு நாளும் !
இல்லை இனிமேல் திண்டாட்டம் ஒருவருக்கும்
இங்கே என்னும் நல்ல நாள் வர வேண்டும் என் நாட்டில் !
திண்டாட்டம் இல்லா கொண்டாட்டம் எல்லா
நாளும் இருந்து  விட்டால் எந்த ஒரு நாளை
கொண்டாட்ட  தினம் என்று சொல்வோம் நாம் ?
Natarajan  in http://www.dinamani.com dated 25th Dec2017

வாரம் ஒரு கவிதை….. ” மனத்திற்கிட்ட கட்டளை “

மனத்திற்கிட்ட கட்டளை
———————
நான் சொல்வதை  கேள் நீ …அலையாதே இங்கும் அங்கும்
இட்டேன் கட்டளை நான் என் மனதுக்கு !
யாருக்கு யார் கட்டளை இடுவது ? கேட்டது என் மனம் !
அலைவதே என் வேலை …வேலை நிறுத்தம் நான் செய்தால்
நீ ஒரு ஜடம் ! தெரியுமா உனக்கு …சொன்னது மனம் !
நான் போகும்  போக்கில் எல்லாம் நீ போக மட்டும்
நினைக்காதே …இதை மட்டும் நினைவில் வை நீ மனிதா !
மனம் நான் அறிவேன் நீ எந்த வழியில் பயணம் செய்ய
வேண்டும் என்று …இடுவேன்  கட்டளை உனக்கு
நான் அடிக்கடி ! நடக்கவேண்டும் நீ என் சொல்படி !
மறக்க வேண்டாம் மனிதா நீ … நான் உனக்கிடும்
கட்டளை எல்லாம் அந்த இறைவன் உன்
மனத்திற்கிட்ட கட்டளையே !
Natarajan  in http://www.dinamani.com dated 17th DEC 2017

9 Famous Quotes That Are Often Misused…

There are many quotes that are constantly used at will by many of us, but do we actually know where they came from or what their full extent really is? Here are 9 famous quotes that are used in part, or even completely incorrectlly.

1  ” Money is the root of all evil ”

The idea that money is inherently evil appears to stem from a quote that appears in the King James Bible, specifically in 1 Timothy 6:10. The thing is, however,  that the quote got misconstrued from the actual Bible verse, which says: “For the love of money is the root of all evil: which while some coveted after, they have erred from the faith, and pierced themselves through with many sorrows.”

 

2 “Winning is not everything ”

This motivational quote also happens to be a misquote. It comes from a UCLA Bruins football coach known as “Red” Sanders. At a physical education workshop in 1950, he said: “Winning isn’t everything. Men, it’s the only thing!”

 

3 “The proof is in the pudding ”

This one is a complete misquote, because the actual quote says “the proof of the pudding is in the eating”. In other words, you actually have to try food to determine whether it’s good to eat or not. “The proof is in the pudding” actually makes no sense at all.

 

4.”Jack of all trades, but master of none ”

A few hundred years back, “jack” was simply slang for “laborer”. This ghost word is still seen in phrases like “lumberjack” and “steeplejack”. As a result, a “jack of all trades” was a laborer who was capable of doing a bit of everything. The “master of none” part of the quote is actually a modern addition, which contends that those can do a bit of everything have mastery over nothing.

 

5.:” Feed a cold , starve a fever ”

An old belief from medieval times states that “fasting is a great remedy for fever”, but modern medicine begs to differ. Some believe that the notion of starving a fever actually comes from a mistranslation of “feed a cold, stave a fever”, meaning that it’s a well-nourished person with a cold has a better chance of staving off a fever than a person that is undernourished.

6.” Great minds think alike ”

Greek philosopher Socrates left this one to the world. If he really did mean it in earnest, he probably would have written it down rather than killing himself by drinking hemlock. What you might not know about this famous quote is that it actually has a second part that’s often left out. In its entirety, it reads: “Great minds think alike…and fools seldom differ.”

7.” When one door closes another opens ”

This quote is alternately attributed to Alexander Graham Bell and Helen Keller, although neither of them were actually confirmed to have said it. The full quote actually says: “when one door closes another door opens, but we so often look so long and so regretfully upon the closed door that we do not see the ones which open for us.” As a result, make sure you look forward and don’t dwell when one of life’s metaphorical doors slams shut on you.

8. “Curiosity  killed the cat ”

The first known version of this quote was popularized by William Shakespeare. It goes “care killed the cat”, with “care” meaning “worry” in this context. It appears that “care” made way for the word “curiosity” in the late 1800s, but while that is uncertain, people almost always forget that the quote actually has a second part. It actually reads: “curiosity killed the cat…but satisfaction brought it back,” and means although being nosy will likely get you in trouble, knowing the truth in the end is often worth the risk that you take to find it.

9. Be the change you want to see in the world ”

Gandhi uttered many an inspiring phrase during his lifetime, however this has to be one of his most famous. In his original statement, the guru had said: “If we could change ourselves, the tendencies in the world would also change. As a man changes his own nature, so does the attitude of the world change towards him.”

Source….www.ba-ba mail.com

Natarajan

 

வாரம் ஒரு கவிதை…”மேகத்தில் கரைந்த நிலா …”

மேகத்தில் கரைந்த நிலா …
————————-
நிலவு உனக்கு மேகமே மேலாடை
மேலாடை உன் முகம் மறைக்க
முழு நிலவு நீயும் இள நிலவாய்
புன்னகைப்பாய் உன் மேலாடைக்குப்
பின்னால் எப்போதும் !
மேகம் கரைந்து மழை பொழியும்
நேரம் கரை புரண்டு ஓடுது மழை
நீர் வெள்ளம் என் மண்ணில் இன்று !
கடற்கரையின்  கரையிலும் கூட
மேகக் கரைசலின் தாக்கம்.. இது
வரை நான் பார்க்காத ஒன்று !
முழு நிலவு நாளில் உன் முகம் காண
வானம் பார்க்கிறேன் நான் இன்று !
மேக மேலாடைக்குப் பின்னால்
மறைந்து இருக்கிறாயா நிலவே ?
இல்லை …நிலவு  நீயும் மேகக் கரைசலில்
கரைந்து கீழே என் மண்ணில் விழுந்து
கடல் நீரில் கலந்து விட்டாயா ? …சொல்லு நிலவே !
Source…My Kavithai as appeared in http://www.dinamani.com dated 4th Nov 2017
K.Natarajan

வாரம் ஒரு கவிதை…” தீ தின்ற உயிர் “

 

தீ தின்ற உயிர்
—————-
மகனே நீ உண்ணும் உணவு மணக்க.. தீ நான்
என் உயிர் கொடுக்கிறேன் தினமும் !
நீ உயிர் வாழ என் உயிர் தேவை உனக்கு நாளும் !
நான் உயிர் பிழைக்க நீ எதற்கு எனக்கு ?
மகனே … நீ ஏற்றி வைத்திருக்கிறாயே   சாதி மதத் தீ
அது … உன் அரசியல்  விளையாட்டில் நீ குளிர் காய !
பெட்டி பெட்டியாய் நீ பணம் சேர்க்க வட்டிக்கு
வட்டி , வட்டி மேல் வட்டி  என்னும் கந்து வட்டி
தீயும் நீ ஏற்றி வளர்க்கும் தீயே !  ஆனால்
மகனே ..கந்து வட்டி தீ ஒரு ஆட்கொல்லி தீ !
சாதி மத பேதம் இல்லாத கந்து வட்டி  கலாச்சாரம்
வட்டிக்கு கடன் வாங்கிய பலரை  உன் முன்னால்
முட்டி போட வைக்கும் … தட்டி கேட்க முடியாது உன்னை !
வட்டி கட்ட முடியாமல் புழுங்கி புகைந்து துடிக்கும்
ஒரு ஏழையின் குடும்பத்தை துடிக்க துடிக்க
பொசுக்குமே  உன் கந்து வட்டி தீ !
அவர் உயிரைப் பறித்து தின்றது உன்னுள் எரியும்
பணம் பணம் என்னும் பேராசை  தீ !
உன் பேராசை தீ தின்ற உயிரை,…  அக்னி நான்
தின்றேன் என்று மாற்றி சொல்லி விடாதே
மனிதா !
My Kavithai as appeared in http://www.dinamani.com dated 29th Oct 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை …” வான வேடிக்கை “

வான  வேடிக்கை ….
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இடி மின்னல் வேடிக்கை காட்டி வானம்
நான் தப்பாமல் நனைக்கிறேன் உன் மண்ணை !
வேடிக்கை காட்டியே  இந்த உலகுக்கு  உயிர்
கொடுப்பது  என்  வாடிக்கை !
உயிர் கொடுக்கும்  எனக்கு நீ கொடுக்கும் பரிசு
என்ன தெரியுமா உனக்கு ?..மகனே !
வான வேடிக்கை என்னும் பெயரில் வானம்
என் நாடித்  துடிப்பையே அடக்க நினைக்கிறாயே !
மகனே …இது நியாயமா ?
நீல வானம் வேண்டும்,  மாசில்லா காற்று
வேண்டும் எனக்கு என்று மேடையேறி பேசி விட்டு
எந்த ஒரு வெற்றி விழாவுக்கும் வேண்டும் ஒரு
வான வேடிக்கை என்று நீ கேட்பது வேடிக்கையிலும்
வேடிக்கை மகனே !
கரி எடுத்து என் முகத்தில் பூசி விட்டு ,வேண்டாம்
எனக்கு கரு வானம் …வேணும் எனக்கு
ஒரு நீல வானம் என்னும் உன் வாதம் ஒரு
ஒரு வேடிக்கை வினோதம் , மகனே !
My Kavithai in http://www.dinamani.com dated 23rd Oct 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை… ” நிசப்த வெளியில் …”

 

நிசப்த வெளியில் …
———————
கருவறை வாசம் மட்டுமே   நிசப்த வாசம் ஒரு சிசுவுக்கு
இந்த மண்ணில் வந்து பிறந்த  நேரம் முதல் சத்தம்
சத்தமே எங்கும்  எதிலும் !
சப்தம் தவிர்த்து நிசப்தம் தேடி ஓடுவது எங்கே ?
வாழ்வில் ஒலியும்  சப்தமும்  தேவைதான்
ஆனால் வாழ்வே சப்தமாகலாமா ?
ஒளி மயமான எதிர் காலம் தேடும்  குழந்தைக்கு
கிடைப்பது ஒலி மயமான இரைச்சலும் அலைச்சலும்தான் !
அண்ட வெளியிலும் இல்லையே இன்று நிசப்தவெளி !
நாளும் பல  விண்கலம் அண்டவெளியில் சுற்றி சுற்றி
நிசப்த வெளியின் தனித்துவமே தகர்ந்து விட்டதே !
சப்தம் மறந்து நிசப்தம் தேடி ஓடுவது எங்கே ?
நிசப்தம் தேடி நாம் ஓடிட வேண்டாமே  …நம் வீட்டைத்
தேடி ஓடி வரும் நிசப்த வெளி நாம் நினைத்தால் !
வாரம் ஒரு நாள் …ஒரே ஒரு நாள் …கொடுப்போம்
விடுமுறை நம் வீட்டு தொலைக் காட்சிப் பெட்டிக்கு !
எப்போதும் சிணுங்கும் கைபேசிக் குழந்தைக்கும்
தப்பாமல் தர வேண்டும் ஒரு நாள் ஓய்வு !
இரைச்சல் இல்லாத ஒரு ஒரு வீடும்  நிசப்த
வெளியே !  அலைச்சல் இல்லாத வழியும்
இதுதான் நிசப்தம் தேடி ஓடுவோருக்கு !
My Kavithai in http://www.dinamani.com dated 16th oct 2017
Natarajan