வாரம் ஒரு கவிதை …”யாருக்கு யார் சேவகர் ? “

 

யாருக்கு  யார்  சேவகர் ?
+++++++++++++++++++++++
அரசாங்க  வேலையோ  தனியார்  கம்பெனி
வேலையோ …கீழ் மட்ட ஊழியர் முதல்
மேல் மட்ட அதிகாரி வரை அனைவருக்கும் இருக்கு
“திறன் காணும் சோதனை ” காலம் (“Probation”)
பணியில்  சேர்ந்தவுடன் அங்கு!
திறனில் குறை இருந்தால் அரை குறையாக
முடிந்து விடும்  சேவகரின்  பணிக் காலம்!
பணியில் அமர்த்தியவருக்கும்  தெரியும்
பணியில் சேர்ந்தவருக்கும் தெரியும்
பணி நியமனம் ஒரு “பணிக்  கொடை “
அல்ல என்று !
திறன் இருந்தால் மட்டுமே பணி
தொடரும்!  இல்லையேல் மீண்டும்
வேறு  வேலை தேடும் பணி தொடரும்
அந்த ஊழியருக்கு !
ஊழியருக்கு எல்லாம் “திறன் காணும்
சோதனை ”  காலம் இருக்கு !
மக்கள் உங்களுக்காக ஊழியம் செய்கிறேன்
என்று சொல்லி ” மக்கள் சேவகர் “
நாற்காலியில் அமரும் நம் “மக்கள்
சேவகர்களுக்கு” இன்று வரை இல்லையே
ஒரு ” திறன் காணும் சோதனைக் காலம் ” ?
அது ஏன் ?
திறமை இல்லையேல் சேவகரை பதவி
நாற்காலியில் இருந்து உடனே கீழே இறக்கும்
அதிகாரம் இருக்க வேண்டாமா அவரை
வேலையில்  நியமித்த மக்களுக்கு ?
“மக்கள் சேவகருக்கு ” மட்டும் அப்படி என்ன
ஒரு விதிவிலக்கு … உத்திரவாதம் (Guarantee )அவர்
“பணிக்கு” ஐந்து ஆண்டு என்று ?
நடராஜன்
10/05/2019

வாரம் ஒரு கவிதை…..” கிடைக்குமா நல்ல செய்தி எனக்கு ” ?

 

கிடைக்குமா நல்ல செய்தி எனக்கு ?
+++++++++++++++++++++++++++++++
என் பெண்  பாஸ் பண்ணி விட்டாள் 10ஆவது !
பையனும்  பிளஸ் டூ  பாஸ் செய்து விட்டான்
நல்ல  மார்க்  வாங்கி !
நான்தான் என்ன செய்யப் போகிறேனோ
தெரியவில்லை !
எந்த தேர்விலும் நான் வெற்றி பெற்றது
இல்லையே இதுவரை !
இந்த தேர்தல் முடிவு நாளிலாவது கிடைக்குமா
ஒரு நல்ல செய்தி எனக்கு ?   தப்பிப் பிழைக்குமா
என் மானம்   என் குழந்தைகள் முன்னால் ?
( ஒரு வேட்பாளரின் புலம்பல் !)
K.Natarajan
04/05/2019

வாரம் ஒரு கவிதை …” வருவாயா நீ ” பானி ” ?

 

வருவாயா  நீ …” பானி ” ?
===========================
பேய்  மழை  வேண்டாம் எங்களுக்கு
பணி முடக்கிடும் புயல் காற்றும்
வேண்டாம்  எங்களுக்கு !   நீ
வருவாய் , ஒரு மழை தருவாய் என்று
காத்திருக்கோம் “பானி “!
நீ வருவாயா ? எங்கள் மண்ணும்
மனமும் குளிர ஒரு பெரு மழை தருவாயா நீ ?
ஆடி அசைந்து   நீ வரும் முன்னரே
 விருந்தாளி உன்னைப் பற்றி விமர்சனம்
ஒரு நூறு !  முகம் திரிந்து நோக்கக்
குழையும் விருந்தாக மாறி சினம் கொண்டு
நீ  தடம் மாறி செல்ல வேண்டாம்”பானி”
கண்ணில் நீருடன் காத்திருக்கோம்
உன் வரவுக்கு ..எங்கள் கண்ணீரைக்
காணிக்கையாக  ஏற்றுக்கொள் “பானி ” நீ !
இயற்க்கை அன்னை நீ அருள் மழை
பெரு மழை வடிவில் பொழிய வேண்டும்
இந்த மண்ணுக்கு ! எங்கள் ஆனந்தக்
கண்ணீரும்  உன் மழைப் பொழிவுடன்
சேர்ந்து நனைக்க வேண்டும் என் மண்ணை !
வருவாயா நீ “பானி” ?   கருமேக ஆடை
கட்டி  இதமான ஒரு நாட்டியம் ஆட என் மண்ணில் !
K.Natarajan
29/04/2019

வாரம் ஒரு கவிதை …” இழந்தது கிடைக்குமா எனக்கு ? “

 

இழந்தது  கிடைக்குமா  எனக்கு ?
===================================
வீடு இருந்தது… வீட்டை சுற்றி மரம் இருந்தது
மரம் நிறைய பறவைகள் கூட்டுக்குள்ளும்,
மரத்தின் கிளைகளிலும்!!! …வீட்டுக்குள்ளே
கிணறு  இருந்தது … கிணறு நிறைய தண்ணீர்!
வீட்டின் பின்னால் தோட்டம் .  தென்னம்
பிள்ளையும் வீட்டின் பிள்ளைகளோடு
பிள்ளைகளாக !
என் வீடு ,தோட்டம் இருந்த இடம்
இப்போ ஒரு பெரிய அடுக்கு மாடி
குடியிருப்பு ! என் ஒரு வீடு இருந்த
இடத்தில் இருக்கு இப்போ ஒரு நூறு வீடு !
பறவைக்கூடு போல நானும் ஒரு வீட்டுக்குள் !
தொலைத்து விட்டேன் என் பெரிய வீட்டை
கை நிறைய காசு , அடுக்கு மாடி சொகுசு
என்னும் மாய வலையில் சிக்கி !
தாத்தா நான் புலம்புகிறேன் இப்போ
தொலைத்து விட்டேனே ,தெரியாமல்
தொலைத்து விட்டேனே என்று !
என் புலம்பல் கேட்ட பேரன் கேட்டான்
தொலைந்தது என்ன என்று சொல்லுங்க
தாத்தா …நான் தேடி எடுத்துக் கொடுக்கிறேன்
உங்களுக்கு  என் கூகுள்  தேடல் வழியே !
நான் என்ன பதில் சொல்ல என் பேரனுக்கு ?
K.Natarajan
25/04/2019

30-Yr-Old Gomathi Stuns Everyone, Creates History By Winning India’s First Gold At Asian Athletics Championships

The second day at the 23rd Asian Athletics Championships ended on a high note for India. Months of hard work, grit, determination and practice finally paid off for unheralded half miler Gomathi Marimuthu and shot putter Tejinderpal Singh Toor. Both of them clinched a gold medal each. By the end of Monday, India’s medal tally stood at 2 gold, 3 silver and 5 bronze.

For the 30-year-old athlete, this was her first major win at an international stage. She ran her way, all the way from the back of the pack, just to stun the crowd by winning the 800m race. Gomathi clocked a personal best time of 2 minutes 02.70 seconds in the half-mile event to win a gold for India. Recently, her previous best (2:03.21) was the golden run at the Federation Cup at Patiala.

Years of intense struggle

For Gomathi, it has been ten long years of intense struggle. As a farmer’s daughter, she had only started professionally running when she was 20. “I did not realise until I crossed the finish line that I won a gold medal. The last 150m was a very tight race,” she said. This was only the third international event for Gomathi. While she has always been interested in sports, it was her friend Shruthi from Holy Cross College in Trichy, who inspired her to take it up seriously.

“When I was growing up, there was no one to tell me that I can make a living out of sports. I never understood the significance until I joined college. I just wanted to get a job and support my family,” she told The New Indian Express.

The only one to go to college among two other siblings, Gomathi landed a job with the Income Tax department in Bengaluru and started training regularly. Her intense hard work got recognised as she got selected for the Asian Championships in Pune in 2013. That year, she had finished seventh in the 800m final and two years later, at the same event in China, she finished fourth.

While Gomathi dreamed of clinching the gold next time around, tragedy struck her family. In September of 2016, her father passed away due to colon cancer and in December, Gomathi suffered groin injury. With a few months time, her coach, Gandhi died of a heart attack. “I had no one to train me. I had to provide for the family as well,” she lamented. An injury is the worst that can happen to an athlete who started as late as Gomathi. She had to wait for almost two years before she could train again, however, she was unstoppable.

Getting back up

Since the beginning of 2019, Gomathi started participating in various state and national level championships, At the Federation Cup in March, an event that served as a selection trial for Doha, she finished first. While her timing was good enough to fetch a gold at the 2017 Asian Championship in Bhubaneswar, due to her long absence from the field, Athletics Federation of India asked her to appear in another round of trials in Patiala a few days ago, where she was given a green signal to represent India at the Championship in Doha.

Gomathi’s story is truly inspirational, just like her performance at the 800m run. While she has scripted history, it is her never-say-die attitude which helped Gomathi through tougher times. The Logical Indianapplauds her determination and her achievement at such a prestigious world forum.

Image Credit: News18

Source……..www.thelogicalindian.com

Natarajan                                                                                                                 

வாரம் ஒரு கவிதை ….” பார்த்து நடந்து கொள் …தம்பி “

 

பார்த்து  நடந்து கொள் …தம்பி !
+++++++++++++++++++++++++++++++
காசை தண்ணீர் போல செலவு செய்றான் பாரு
இப்படி ஒரு சொல் கேட்டோம் நாம் ஒரு காலம் !
இன்று காசு கொடுத்தாலும் தண்ணீர் இல்லை !
தெரு குழாயில் தண்ணீர் பிடித்து தாகம் தணித்த
காலம் மாறி கையில் வாட்டர் பாட்டிலுடன்
சுற்றுகின்றோம்  இன்று !
தண்ணீரை காசு போல கணக்கு பார்த்து செலவு
செய்யும் காலத்தில் நாம் இன்று !
தண்ணீருக்கு வந்த நிலைமை சுவாசிக்கும்
காற்றுக்கும் வர வேண்டாம் ..தம்பி !
பார்த்து நடந்து  கொள்  தம்பி ..
.
ஒரு வாரத்துக்கு  தேவையான  ஆக்ஸிஜன்
சிலிண்டர் ஒன்று இலவசம் உங்களுக்கு சுவாசிக்க
என்று தேர்தல் நேரத்தில் கட்சிகள் எல்லாம்
அறிவிக்கும் அவலம் நேர வேண்டாம் உன்
காலத்தில் !
பார்த்து நடந்து கொள் …தம்பி நீ !
K .நடராஜன்
17/04/2019

Meaning of 60 Tamil NewYear Names …

One vattam is made of 60 years. After every sixty years, the years are repeated, as we do in months and weeks. The 60 years are as follows

1 Prabhava(Sanskrit)

நற்றோன்றல் Nantrontral (Tamil) 1987–1988

2 Vibhava(Sanskrit)

உயர்தோன்றல் Uyarthontral(Tamil) 1988-1989

3 Sukla(Sanskrit)

வெள்ளொளி Velouli(Tamil) 1989-1990

4 Pramodoota(Sanskrit)

பேருவகை Peruvagai(Tamil) 1990-1991

5 Prachorpaththi(Sanskrit)

மக்கட்செல்வம் Makkatchelvam(Tamil) 1991-1992

6 Aangirasa(Sanskrit)

அயல்முனி Ayalmuni(Tamil) 1992-1993

7 Srimukha(Sanskrit)

திருமுகம் Thirumugam(Tamil) 1993-1994

8 Bhava(Sanskrit)

தோற்றம் Thotrram(Tamil) 1994-1995

9 Yuva(Sanskrit)

இளமை Ilamai(Tamil) 1995-1996

10 Dhaatu(Sanskrit)

மாழை Maazhai(Tamil) 1996-1997

11 Eesvara(Sanskrit)

ஈச்சுரம் Eechchuram(Tamil) 1997-1998

12 Bahudhanya(Sanskrit)

கூலவளம் Kulavalam(Tamil) 1998-1999

13 Pramathi(Sanskrit)

முன்மை Munmai(Tamil) 1999-2000

14 Vikrama(Sanskrit)

நேர்நிரல் Nerniral(Tamil) 2000-2001

15 Vishu(Sanskrit)

விளைபயன் Vilaipayan(Tamil) 2001-2002

16 Chitrabaanu(Sanskrit)

ஓவியக்கதிர் Oviyakathir(Tamil) 2002-2003

17 Subhaanu(Sanskrit)

நற்கதிர் Narkathir(Tamil) 2003-2004

18 Dhaarana(Sanskrit)

தாங்கெழில் Thaangkezhil(Tamil) 2004-2005

19 Paarthiba(Sanskrit)

நிலவரையன் Nilvaraiyan(Tamil) 2005-2006

20 Viya(Sanskrit)

விரிமாண்பு Virimaanbu(Tamil) 2006-2007

21 Sarvajith(Sanskrit)

முற்றறிவு Mutrarivu(Tamil) 2007-2008

22 Sarvadhari(Sanskrit)

முழுநிறைவு Muzhuniraivu(Tamil) 2008-2009

23 Virodhi(Sanskrit)

தீர்பகை Theerpagai(Tamil) 2009-2010

24 Vikruthi(Sanskrit)

வளமாற்றம் Valmattram(Tamil) 2010-2011

25 Kara(Sanskrit)

செய்நேர்த்தி Seinerththi(Tamil) 2011-2012

26 Nandhana(Sanskrit)

நற்குழவி Narkuzhavi(Tamil) 2012-2013

27 Vijaya(Sanskrit)

உயர்வாகை Uyarvaagai(Tamil) 2013-2014

28 Jaya(Sanskrit)

வாகை Vaagai(Tamil) 2014-2015

29 Manmatha(Sanskrit)

காதன்மை Kathanmai(Tamil) 2015-2016

30 Dhunmuki(Sanskrit)

வெம்முகம் Vemmugam(Tamil) 2016-2017

31 Hevilambi(Sanskrit)

பொற்றடை Potradai(Tamil) 2017-2018

32 Vilambi(Sanskrit)

அட்டி Atti(Tamil) 2018-2019

33 Vikari(Sanskrit)

எழில்மாறல் Ezhilmaral(Tamil) 2019-2020

34 Sarvari(Sanskrit)

வீறியெழல் Veeriyezhal(Tamil) 2020-2021

35 Plava(Sanskrit)

கீழறை Keezharai(Tamil) 2021-2022

36 Subakrith(Sanskrit)

நற்செய்கை Narseikai(Tamil) 2022-2023

37 Sobakrith(Sanskrit)

மங்கலம் Mangalam(Tamil) 2023-2024

38 Krodhi(Sanskrit)

பகைக்கேடு Pagaikedu(Tamil) 2024-2025

39 Visuvaasuva(Sanskrit)

உலகநிறைவு Ulaganiraivu(Tamil) 2025-2026

40 Parabhaava(Sanskrit)

அருட்டோற்றம் Aruttotram(Tamil) 2026-2027

41 Plavanga(Sanskrit)

நச்சுப்புழை Nachchupuzhai(Tamil) 2027-2028

42 Keelaka(Sanskrit)

பிணைவிரகு Pinaiviragu(Tamil) 2028-2029

43 Saumya(Sanskrit)

அழகு Azhagu(Tamil) 2029-2030

44 Sadharana(Sanskrit)

பொதுநிலை Pothunilai(Tamil) 2030-2031

45 Virodhikrithu(Sanskrit)

இகல்வீறு Eegalveeru(Tamil) 2031-2032

46 Paridhaabi(Sanskrit)

கழிவிரக்கம் Kazhivirakkam(Tamil) 2032-2033

47 Pramaadhisa(Sanskrit)

நற்றலைமை Natralaimai(Tamil) 2033-2034

48 Aanandha(Sanskrit)

பெருமகிழ்ச்சி Perumagazhchi(Tamil) 2034-2035

49 Rakshasa(Sanskrit)

பெருமறம் Perumaram(Tamil) 2035-2036

50 Nala(Sanskrit)

தாமரை Thaamarai(Tamil) 2036-2037

51 Pingala(Sanskrit)

பொன்மை Ponmai(Tamil) 2037-2038

52 Kalayukthi(Sanskrit)

கருமைவீச்சு Karumaiveechchu(Tamil) 2038-2039

53 Siddharthi(Sanskrit)

முன்னியமுடிதல் Munniyamudithal(Tamil) 2039-2040

54 Raudhri(Sanskrit)

அழலி Azhali(Tamil) 2040-2041

55 Dunmathi(Sanskrit)

கொடுமதி Kodumathi(Tamil) 2041-2042

56 Dhundubhi(Sanskrit)

பேரிகை Perikai(Tamil) 2042-2043

57 Rudhrodhgaari(Sanskrit)

ஒடுங்கி Odingi(Tamil) 2043-2044

58 Raktakshi(Sanskrit)

செம்மை Semmai(Tamil) 2044-2045

59 Krodhana(Sanskrit)

எதிரேற்றம் Ethiretram(Tamil) 2045-2046

60 Akshaya(Sanskrit)

வளங்கலன் Valangkalan 2046-2047

This is the reason for celebrating the 60-th birthday of a person because he is supposed to have lived a century and moves in to the same year he was born. This is very similar to celebrating centenary birthdays.

Source…..Thiagu.N

http://www.Quora.com

Natarajan K

13/04/2019