கொஞ்சம் சிரிங்க, பாஸ்…
“நீங்க உங்க மனைவிக்கு ரொம்ப பயந்து நடப்பவரா?”
“ச்சே, ச்சே… நடக்கறப்ப அந்த பயத்தை வெளில காட்டிக்க மாட்டேன்.”
#####
நோயாளி : டாக்டர் நீங்க ஒரு காரியம்….. செய்யணும்
டாக்டர் : நான் ஆபரேசன் மட்டும்தான் பண்ணுவேன்….. காரியம் எல்லாம் ஐயர் தான் செய்வார்.
#####
நீதிபதி: ஒரே வீட்டை ஏன் பதினைந்து முறை கொள்ளை அடிச்சே?
திருடன்: ஐயா நான் அவங்க பாமிலி திருடன், எப்புவுமே விஸ்வாசமா இருப்பேன்.
#####
1:- “ காதலிக்கும் மனைவிக்கும் என்னங்க வித்தியாசம்?”
கவிஞர்:- “ காதலி கரும்பைப்போன்றவள்
மனைவி இரும்பைப்போன்றவள்”
1: – ???
#####
ஆவி1 :விஷம் குடிச்சி சாக போனேன்..விஷத்துல கலப்படம் பிழைச்சிக்கிட்டேன்..
ஆவி2 :அப்புறம் எப்படி செத்த?
ஆவி1 :காப்பாத்த மருந்து கொடுத்தாங்க..மருந்துல கலப்படம் செத்துட்டேன்..
####
டீச்சர்: நாம் பேசும் மொழியை ஏன் தாய் மொழி என்று சொல்கிறோம் ?
மாணவி : எப்போதும் அம்மாக்கள் பேசுவதாலேயும், அந்த வாய்ப்பு அப்பாக்களுக்கு குறைவாக கிடைப்பாதலேயும், நாம் பேசும் மொழி தாய் மொழி என்று அறியப்படுகிறது.
#####
டாக்டர்-“ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”
நோயாளி -“ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”
#####
பையன்-அம்மா எதிர் வீட்டு ஆண்டி பேரு என்னம்மா?
அம்மா-விமலாடா..
பையன்-அப்பாவிக்கு இது கூட தெரிய மாட்டேதுங்கும்மா அந்த ஆண்டிய “டார்லிங்”னு கூப்பிடுறார்.
#செத்தான்டா_சேகரு
#####
”இந்த ஒரு கீரைக்கட்டை ஐந்து ரூபாய்னு சொல்றீயே ,நேற்றுக்கூட இரண்டு ரூபாய்னு தானே சொன்னே ?”
”இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடலே.. .அந்த கீரைக்கட்டு இப்பவும் இருக்கு ,ஒரு ரூபாய்க்கே தர்றேன் ,வாங்கிகிறீங்களா ?
#####
வாத்தியார்-டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்-நாங்க எல்லாரும் முட்டாளுங்க சார் நீங்க எங்களை அடிக்கிறதால அடி முட்டாள் சார்
நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?”
“போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்.






7. King Ferdinand has no immediate living relatives and decides to hold a contest to find a worthy successor for when he dies. He gives a seed to every contestant and explains that the person with the healthiest and most beautiful plant will win the throne.





