“இனிமையான ‘ழ ‘ இருக்கும் இடம் ‘தமிழ் ‘ “…!!!

தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் [பெரியவா] அறிவு
முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது.
ஒரு முறை கி.வா.ஜ விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று
கேட்டார். மேலும்”சம்ஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட
மொழி என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்
வந்தது சொல்லுங்கள்!” என்கிறார். கி.வா.ஜ. அடக்கமாக,
“பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார்.

“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது.
இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை
அவற்றைக் குறிப்பதாகவே இருக்கும்.

மழலை,குழல்,அழகு,குழந்தை, சுழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’
வருகிற எல்லாமே நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான
“ழ’வைத் தம்மிடத்தில் உடையது ‘தமிழ்'[தமி+ழ்] என்று
சொல்லலாமா?” என்கிறார். உடனே கி.வா.ஜ., “இதைவிடப்
பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா
மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!” என்றாராம்.

சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும்
“யாமா மாநீ யாமா மா” என்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும்
கடினம்.அவற்றுள் இன்றைப் பெரியவா எடுத்து, மிகவும்
கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்து மிக எளிமைப்படுத்திப்
பொருள் சொன்னார்.பெரிய வித்வான்களே பிரமித்துப் போனார்கள்.

“அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடிய பாடல்களில் ஒன்று,
முக்கால்,அரை,கால்,இருமா,மாகாணி,ஒருமா,கீழரை என்று
குறந்துகொண்டே வர்ம். அளவுகளை வைத்து எழுதுகிறார்
தெரியுமா?” என்று கேட்டு,

முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்

அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்

விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்

கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது…..

என்ற பாட்டைபெரியவா எடுத்துக் காட்டுகிறார். அதன் பொருளையும்
தனக்கே உரிய முறையில்,

“முக்கால்-னா மூன்று கால்கள். வயதான பின் இரண்டு காலில்
நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றவது காலாகப்
பயன்படுத்துகிறோமே..அந்த நிலை வருவதற்குள்,
‘முன்னரையில் வீழாமுன்’..நரை வருவதற்கு முன்னாலே,
‘விக்கலும் இருமலும்’ வருவதற்கு முன்..யமனுடைய
காலடி நம்மை அணுகவதற்கு முன்…ஊருக்கு வெளியிலுள்ள
‘மாகாணி’ என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்..காஞ்சியில்
ஒரு மாமரத்தின் கீழ் உள்ள ஏகாம்பரேசுவரரை
இன்றைக்கே துதிப்பாய்!”

என்று மிக அழகாக விளக்குகிறார். மேலும்,
“என்ன அழகு பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற
எண்ணுக்குக் கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு
அளவுகளையும் கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச்
சொல்லி மகிழ்ந்தார்.எதையுமே இப்படி விளக்கமாகப்
பொழிந்து தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்.

source:::: periva.proboards.com

natarajan
Read more: http://www.periva.proboards.com/thread/389/periyavas-expertise-tamil-literature#ixzz2ljOGNEwU

” Why Turkeys are Called Turkeys ” !!!

why turkeys are called turkeys.

 

In the sixteenth century, when North American turkeys were first introduced en masse to Europe, there was another bird that was popularly imported throughout Europe and, most relevant to this article, England, called a guinea fowl.  This guinea fowl was imported from Madagascar via the Ottoman Empire.

The merchants who imported the guinea fowl were thus known as “turkey merchants.”  The guinea fowl eventually were popularly referred to as “turkey fowl,” similar to how other product imported through the Ottoman Empire acquired their names, such as “turkey corn,” “turkey wheat,” etc.

The North American turkey was first introduced to Spain in the very early sixteenth century and popularly introduced to all of Europe shortly thereafter.  The animal was thought by many to be a species of the type of guinea fowl that was imported via the Ottoman Empire and thus, began also being called a “turkey fowl” in English, with this eventually being shortened to just “turkey.”

  • One generally considered fictitious origin for naming a turkey such, comes from the Hebrew “tuki” (Hebrew for peacock).  If no one knew anything about the history of the turkey being introduced to the English speaking world, this might seem very plausible.  However, the historical evidence does not back up this “tuki” origin.

 

source:::::today i foundout .com

natarajan

” தீராத கோபம் …யாருக்கு லாபம் ” ?

தீராத கோபம் யாருக்கு லாபம்!
எனக்கு தெரிந்த தனியார் பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் இது: அன்று வகுப்பறையில், ஆசிரியை மாணவர்களிடம், ‘மறக்க முடியாத கோபமோ அல்லது மன்னிக்க முடியாத கோபமோ, யார் மீதேனும் உங்களுக்கு இருக்கிறதா, சந்தர்ப்பம் கிடைத்தால், யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா?’ என்று கேட்டார்.
எல்லா மாணவர்களும், ஒரே குரலில், ‘ஆமாம்…’ என்றனர். ஒவ்வொருவரையும் தனித் தனியே அருகில் அழைத்த ஆசிரியை, ‘மன்னிக்கவும், மறக்கவும் முடியாத அளவுக்கு, எத்தனை கோபங்கள் உள்ளன…’ என்று கேட்டார். ஒவ்வொருவரும் பத்து, பதினைந்து என்று அடுக்கிக் கொண்டே போயினர்.
இதையெல்லாம் அமைதியாக கேட்ட ஆசிரியை, அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு சிறு பையைக் கொடுத்து, வகுப்பறையின் மூலையில் இருந்த தக்காளி கூடையைச் சுட்டிக்காட்டி, ‘நீங்கள் சொன்ன எண்ணிக்கைப்படி, கூடையில் உள்ள தக்காளிகளை எடுத்து, உங்களுக்குக் கொடுத்த பையில் போட்டுக் கட்டுங்கள்…’ என்றார். மாணவர்களும், தங்களது பையில் தக்காளிகளைப் போட்டு மூட்டையாகக் கட்டிக் கொண்டனர்.
பின், அவர்களிடம், ‘இந்த மூட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும்; துாங்கும் போதும் அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்…’ என்று
உத்தரவிட்டார். புரிந்தும், புரியாமலும் மாணவர்கள் தலையாட்டினர்.
ஓரிரு நாட்கள் சென்றன; ஒரு குறையும் இல்லை. ஆனால், அதற்கு அடுத்து வந்த நாட்களில், தக்காளிகள் அழுகி, நாறத்துவங்கின. நாற்றம் அடிக்கும் மூட்டையுடன், வெளியே செல்ல கூச்சப்பட்ட மாணவர்கள், ஆசிரியையிடம் சென்று, மூட்டைகளைத் துாக்கி எறிய அனுமதி கேட்டனர்.
மெல்லப் புன்னகைத்த ஆசிரியை, ‘இந்த தக்காளியைப் போன்று தான், உங்கள் மனதுக்குள் இருக்கும் பகைமை உணர்வும், பழி வாங்கும் குணமும் அழுகி, நாறி கொண்டிருக்கிறது. எனவே, பகை – பழியை மறந்து, மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளியையும் தூக்கி எறியுங்கள்…’ என்றார். மாணவர்களுக்கு தெளிவு பிறந்தது.
அப்போதே, தக்காளி மூட்டைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவர்கள், தங்களுக்குள் இருந்த பகை, பொறாமையை மறந்து, ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டனர்.
இந்த தக்காளி கதை மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களான நமக்கும் தான்!
— எம்.பூபதி, மதுரை.  in Dinamalar…varamalar

natarajan

” வாங்க …வாழ்த்துவோம் ஸ்வர்ண லக்ஷ்மியை ” !!!

அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார் ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா..

 

.ஐநாவும் என்னை அழைக்கும்..

சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.
சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதியின் ஒரே மகள் சுவர்ணலட்சுமி.
சுவர்ணலட்சுமிக்கு பிறவியிலே கண்பார்வை இல்லை. இவருக்கு பார்வைவேண்டி பலவித முயற்சிகள் எடுத்த பெற்றோர் அந்த முயற்சிகள் தந்த தோல்வியினால் துவண்டு போகவில்லை, காரணம் தாங்கள் துவண்டு போனால் அது தங்களது மகளை பாதிக்கும் என்பதால் மகளின் விருப்பம், அவரது முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கை ஒதுக்கவும், சுவர்ணலட்சுமியின் வளர்ச்சியை செதுக்கவும் செய்தனர்.
சுவர்ணலட்சுமி சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பிரமாதமாக படித்து வருகிறார் தற்போது அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்
பாட்டு பாடுவது, கீபோர்டு வாசிப்பது, நீந்துவது, செஸ் விளையாடுவது என்று எதையும் விட்டு விடாமல் எதிலும் சோடை போகாமல் வளர்ந்து வந்த சுவர்ணலட்சுமிக்கு பள்ளியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பார்லிமெண்ட் அமைப்பின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி கிடைத்தது.
இந்த இடத்தில் குழந்தைகள் பாராளுமன்றம் பற்றி ஒரு சில வார்த்தை
இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமேவைத்து அமைக்கப்பட்டதுதான் இந்த குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தைகள் பாராளுமன்றங்கள் உள்ளன. சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே, இதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சூரியசந்திரன்.
குழந்தை திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது.
இந்த பாராளுமன்றத்தில் வெட்டி பேச்சு கிடையாது, வேட்டி கிழியும் அபாயமும் கிடையாது, வெளிநடப்பும் கிடையாது எல்லா பேச்சும் அளவானவை, ஆரோக்கியமானவை, குழந்தைகள் உரிமையை நிலைநாட்டுபவை, அவர்களது வளர்ச்சிக்கு வழிகாணுபவை.
ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்கள் மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகவல் தொடர்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுவர்ணலட்சுமிக்கு இயல்பாகவே சமூக சேவை எண்ணம் உண்டு. இதன் காரணமாக கடலூரில் தானே புயல் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டு 30 ஆயிரம் ரூபாயை சேகரித்து நேரடியாக சம்பவ இடத்திற்கு போய் பாதிக்கப்பட்ட மக்களிடம் அந்த நிதியை வழங்கினார்.
அதன்பிறகு அனைவருக்கும் தொண்டு செய்யும் எண்ணம் வரவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை கொண்டு வந்து அந்த ஒரு ரூபாயும் பள்ளி குழந்தைகள்தான் தரவேண்டும் என்று சொல்லி ஏழாயிரம் ரூபாயை ஏழாயிரம் பேரிடம் இருந்து வசூல் செய்தார். இந்த பணத்தை கொண்டு இரண்டு குழந்தைகளின் படிப்பு கட்டணத்தை கட்டியதுடன் சிலருக்கு சீருடையும் வாங்கிக் கொடுத்தார்.
இந்த நிலையில் அடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சுவர்ணலட்சுமி நிதி அமைச்சராக தேர்வானார் இவரது பேச்சு செயல்பாடு காரணமாக அடுத்து நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் குழந்தைகள் பாராளுமன்ற பிரதமராக தேர்வானார்.
இந்த நிலையில் ஐநாவின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி பேச அனுமதிக்கப்பட்டார், இவரது சிறப்பான பேச்சு காரணமாக அமெரிக்கா போய் திரும்பி சில மாதங்களிலேயே திரும்பவும் ஐநா அழைக்கப்பட்டு மீண்டும் போய் பேசிவிட்டு வந்தார்.
இப்படி ஒரு முறைக்கு இருமுறை ஐநா போய்வந்த சுவர்ணலட்சுமிக்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழா நடத்திவருகின்றன.
ஆரம்பத்தில் என்னிடம் பல விஷயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்’ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன. ‘எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம்’ என்பதைக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும்னு ஒரு முன் தயாரிப்போடு இருப்பேன்.
இந்த திட்டமிட்ட உழைப்பு என்னை தற்போது இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பாராட்டுக்கள் என்னை இன்னும் சமூகத்திற்கு உழைக்க தூண்டுகிறது. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகி இன்னும் நிறைய உழைக்க என்னை நான் தயார் செய்து கொண்டு வருகிறேன். நம்மை வாழவிடாமல் தடுப்பதற்கு நாட்டில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ஆனால் வாழவைக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் அந்த காரணத்தை பிடித்துக்கொண்டு நாமும் வளர வேண்டும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்க்க வேண்டும். பயமும், தயக்கமும்தான் நமது லட்சியப் பயணத்திற்கான தடைக்கற்கள் முதலில் அந்த தடைக்கற்களை தகர்த்து எறியுங்கள் என்று முழங்கும் சுவர்ணலட்சுமியை      வாழ்த்த  வார்த்தைகள் இல்லை !!!
– எல்.முருகராஜ்  in Dinamalar …Tamil daily

natarajan

“சாஞ்சாடம்மா சாஞ்சாடு …சாயக் கிளியே சாஞ்சாடு “!!!

 

தற்பொழுது பிறக்கும் முன்பே, பிறந்த உடனேயே போதிக்கும் வகுப்புகள் வந்துவிட்டன. உங்கள் குழந்தை மேதை ஆக வேண்டுமா? என்ற விளம்பரங்கள் எங்கும் காணப்படுகின்றன. அதிலும் விளம்பரங்களில் பிக்காசா, ஐன்ஸ்டீன், சாக்ரடீஸ் போன்ற வெளிநாட்டு அறிவாளிகளை காட்டுவார்கள். ராமானுஜம், சி.வி.ராமன், ஆர்யபட்டர் போல என்று காட்டுவதே இல்லை. நம் பெற்றோர் நம் குழந்தைகள் இந்தியர் ஆயிற்றே… எப்படி அவர்களை போல ஆக முடியும் என்று யோசிப்பது இல்லை.

பழங்காலத்தில் சிறு குழந்தைகளுக்கும் விளையாட்டு வைத்து இருந்தனர். தற்பொழுது போல கெடுதலான பிளாஸ்டிக் பொம்மைகள் இல்லையே தவிர, மரத்தாலான பொம்மைகள் உண்டு. ஆனால் அப்பொழுது கூட்டு குடும்பம் என்பதால் நாள் முழுவதும் குழந்தைகளுக்கு விளையாட ஆள் இருந்து கொண்டே இருக்கும். அவர்களுக்கு பொழுது போகவில்லை என்பதை விட அவர்களுக்கு பொழுது போதவில்லை என்பதே சரியாக இருக்கும்.

சின்ன குழந்தை கொஞ்சம் உட்கார ஆரம்பித்தவுடன் ‘சாஞ்சாடம்மா சாஞ்சாடு..’ ஆரம்பித்து விடுவோம். அடுத்து ‘கை வீசு..’ அதற்கான பாடல்கள் ஆரம்பிக்கும். உட்காரும் வயதுக்கே பாட்டு பாடி விளையாடுவது நம் பாரம்பரியம். நிறைய குழந்தைப் பாடல்கள் உள்ளன.

குழந்தையை மடியில் உட்கார வைத்து, முன்னும் பின்னும் ஆட்டி…

“சாஞ்சாடம்மா சாஞ்சாடு

சாயக்கிளியே சாஞ்சாடு

குத்து விளக்கே சாஞ்சாடு

கோயில் புறாவே சாஞ்சாடு

மானே மயிலே சாஞ்சாடு

மரகதக் கிளியே சாஞ்சாடு

கண்ணே மணியே சாஞ்சாடு

கட்டிக் கரும்பே சாஞ்சாடு

மயிலே குயிலே சாஞ்சாடு

மடியில் வந்து சாஞ்சாடு”

இது அவரவர் இடத்துக்கு தகுந்தவாறு மாறுபடும். அதைத் தவிர, நிறைய குழந்தைப் பாடல்களும் உள்ளன. அடுத்து கைவீசம்மா கை வீசு, சோறூட்ட நிலா, நிலா ஓடிவா போன்றவை தமில் ரைம்ஸ் போட்டு விற்க ஆரம்பித்து உள்ளனர். நல்லது. அப்பா அல்லது அண்ணன், அம்மா மேலே உக்கார வைத்து யானை விளையாட்டு பாடி கொண்டே தாழ்வாரம் முழுக்க தவழ்ந்து யானை போல சுத்தி வருவர். பத்துக்கு பத்தில் எங்கு சுத்தி வருவது என்று கேட்டால் பதில்.. மனமிருந்தால் மார்க்கமுண்டு.

“யானை யான அழகர் யானை

அழகரும் சொர்க்கரும் ஏறும் ஆனை

குட்டி ஆனைக்குக் கொம்பு மொளச்சுதாம்

பட்டணம் எல்லாம் பறந்தோடிப் போச்சுதாம்”

அடுத்து பருப்பு கடைதல். குழந்தையை வைத்து சோறுட்டி சாப்பாட்டின் மேல் ஆர்வத்தைத் தூண்டும் விளையாட்டு. குழந்தையின் கையை எடுத்து வைத்து கொண்டு அதன் மேல் முட்டி கை வைத்து பருப்பு கடைய வேண்டும் அப்புறம் ஊட்டுவது போல செய்து காட்டவேண்டும். தொட்டுக்க வேணுமா என்று கேட்டு விரல்களை வைத்து இது சாம்பார், பொரியல் என்று விளையாட்டை நீட்டி கொண்டு போகலாம். கீரை பற்றியும் சொல்லலாம்.

“பருப்பு கடைஞ்சு,

நெய் ஊத்தி,

நல்லா பிசைஞ்சு

அப்பாவுக்குக் கொஞ்சம்

அம்மாவுக்குக் கொஞ்சம்

பாட்டிக்குக் கொஞ்சம்

தாத்தாவுக்குக் கொஞ்சம்

பாப்பாவுக்குக் கொஞ்சம்

கொடுத்திட்டு அடுப்பு கழுவி (அந்த காலத்தில் விறகடுப்பை கழுவி கோலம் போடும் வழக்கம் உண்டு)

சிலர் வெறும் கிச்சு, கிச்சு மூட்டுவர். சிலர் நண்டு ஊறுது நரி ஊறுது என்று சொல்லி கொண்டு கையை பிடித்து விரல்களால் ஊர்ந்து கைக்கு அடியில் கிச்சு, கிச்சு மூட்டுவர். குழந்தைகள் மிக விரும்பும் விளையாட்டு.

அடுத்து இரண்டு வயதுக்கு மேல் குழந்தைகளை கையை குழித்து வைத்து கொள்ள சொல்லி நாம் முஷ்டியை மடக்கி குத்த வேண்டும்.

அம்மா குத்து,

அப்பா குத்து,

பாட்டி குத்து,

பேரன் குத்து

பிள்ளையார் குத்து,

பிடிசிக்கோ குத்து.

இந்த பிடிச்சிக்கோ குத்து சொல்லும்பொழுது குழந்தை கையைப் பிடித்துக்கொள்ள வேண்டும். மாற்றி, மாற்றி விளையாடலாம். பிடிக்காமல்விட்டால் அவரின் முறை மாறும். சிறுவர், சிறுமிகளும் விளையாடும் பொழுதுபோக்கு விளையாட்டு.

இந்த விளையாட்டு முறைகள், பாடல்கள் வீட்டு வீடு, இடத்துக்கு இடம் கொஞ்சம் வேறுபடலாம். ஆனால் தலைமுறை தலைமுறையாக விளையாடி வந்த விளையாட்டுகளை நம் தலைமுறையோடு முடித்தால் அத்தனையும் மறந்தும், அழிந்தும் விடும். இது போன்ற விளையாட்டுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் கடமையாகும்.

கிருத்திகா தரண் – தொடர்புக்கு kirthikatharan@gmail.com

source:::::The Hindu..Tamil

natarajan

Message for the Day…Education and Educare …

What is education? It is of two types: The first type is collection of facts and knowledge about the external world, and sharing them with students. The second type is educare. Educare involves the deep understanding of the knowledge that springs from within, and imparting it to students. But today’s education gives knowledge only about the external world. Only culture or refinement can develop good personality and not this type of education. So only if education is blended with culture, it will shine forth as true education. What is culture? It is the cultivation of discrimination between good and evil, sin and merit, and truth and untruth that we experience in our daily life. It is also removal of one’s evil thoughts, feelings and qualities, and cultivation of good thoughts, feelings and qualities. Not only this, culture makes one broad-minded.

 Sathya Sai Baba

Laughter the Best Medicine …”School Ahead…Go Slow ” !!!

 

KIDS THINK FAST 

 

TEACHER: Why are you late?
WEBSTER: Because of the sign
.
TEACHER: What sign?
WEBSTER: The one that says, “School Ahead, Go Slow.”

TEACHER: Cindy, why are you doing your math multiplication on the floor?
CINDY: You told me to do it without using tables!

TEACHER: John, how do you spell “crocodile?”
JOHN: K-R-O-K-O-D-A-I-L”
TEACHER: No, that’s wrong.
JOHN: Maybe it’s wrong, but you asked me how I spell it

TEACHER: What is the chemical formula for water?
SARAH: H I J K L M N O!!
TEACHER: What are you talking about?
SARAH: Yesterday you said it’s H to O!

TEACHER: George, go to the map and find North America. 
GEORGE: Here it is!
TEACHER: Correct. Now class, who discovered America ?
CLASS: George!

TEACHER: Willie, name one important thing we have today that we didn’t have ten years ago.
WILLIE: Me!

TEACHER: Tommy, why do you always get so dirty? 
TOMMY: Well, I’m a lot closer to the ground than you are.

TEACHER: Ellen, give me a sentence starting with “I.” 
ELLEN: I is…
TEACHER: No, Ellen….. Always say, “I am.”
ELLEN: All right… “I am the ninth letter of the alphabet.”

TEACHER: “Can anybody give an example of COINCIDENCE?” 
JOHNNY: “Sir, my Mother and Father got married on the same day, same time.” 

TEACHER: “George Washington not only chopped down one of his father’s cherry tree, but also admitted doing it. Now do you know why his father didn’t punish him?”
JOHNNY: “Because George still had the axe in his hand.” 

TEACHER: Now, Sam, tell me frankly, do you say prayers before eating?
SAM: No sir, I don’t have to, my Mom is a good cook. 

TEACHER: Desmond, your composition on “My Dog” is exactly the same as your brother’s. Did you copy his?
DESMOND: No, teacher, it’s the same dog! 

TEACHER: What do you call a person who keeps on talking when people are no longer interested?
PUPIL: A teacher.

 source::::input from a friend of mine
natarajan