இணைய தாத்தா பீட்டர் ஆக்லே!!!…

 

பீட்டர் ஆக்லே

பீட்டர் ஆக்லே

நீங்கள் பீட்டர் ஆக்லேயின் இணைய பேரன்களில் ஒருவர் என்றால் இந்நேரம், அவருக்காக கண்ணீர் சிந்தியிருப்பீர்கள். அவரது யூடியூப் சேனலில் உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருப்பீர்கள். ஆம், இணைய தாத்தா பீட்டர் ஆக்லே,86, இந்த உலகில் இருந்து விடைபெற்றிருக்கிறார். இணைய முன்னோடிகளில் ஒருவர் மறைந்துவிட்டார். யூடியூப் நட்சத்திரம் ஒன்று விடைபெற்று விட்டது.

உங்களில் சிலர் பீட்டர் ஆக்லேவை அறிந்திருக்கலாம். பலர், யார் இந்த இணைய தாத்தா என்று கேட்கலாம். இங்கிலாந்தின் ஓய்வு பெற்ற முதியவரான பீட்டர் ஆக்லே இளைஞர்களின் கூடாரம் என கருதப்படும் வீடியோ பகிர்வு தளமான யூடியூப்பில் நுழைந்து வீடியோ வழியே இக்காலத்து மொழியில் பேசி , யூடியூப்பாளர்களால் இணைய தாத்தா என கொண்டாடப்பட்டவர்.

புற்று நோயுடன் போராடி மறைவதற்கு முன்பாக ஆக்லே 400 க்கும் மேற்பட்ட யூடியூப் வீடியோக்களை பதிவேற்றியிருக்கிறார்.அவரது வீடியோக்கள் மொத்தமாக கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் யூடியூப்பில் அதிகம் பிரபலமானவராக (அதிக சந்தாதாரர்கள்) அவர் இருந்தார். இந்த உலகை விடைபெற்று செல்லும் போது கூட அவருக்கு யூடியூப்பில் 43,000 சந்ததாரர்கள் இருந்தனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிறந்த ஆக்லே, வயோதிகத்தில் கடந்த கால அனுபவத்தை திரும்பி பார்த்து அவற்றை இக்கால தலைமுறையுடன் பகிர்ந்து கொண்டு, இணைய உலகில் தனி இடத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

பெரியவர் பீட்டர் ஆக்லேவை இணையப்புகழ் பெற்றவர்களில் முக்கியமானவராக குறிப்பிட வேண்டும். இன்டெர்நெட் என்றாலே நமக்கானது இல்லை என்று ஒதுங்கி கொள்ளும் வயதானவர்கள் மத்தியில், ஆக்லே அதை ஆர்வத்தோடு அரவணைத்துக்கொண்டு வெற்றியும் பெற்றார். யூடியூப் மூலம் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட ஆக்லே, வயோதிகமும் தனிமையும் வாட்டிய காலத்தில் தனக்கான இளம் ஆதரவாளர்களை தேடிக்கொண்டதோடு, இக்காலத்து தலைமுறையுடன் அவர்களுக்கு புரியும் மொழியில் உரையாடலில் ஈடுபட்டு தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அவரது வீடியோக்கள் ஒரு வயதானவரின் அலுப்பூட்டம் அறிவுரையாகவோ, முதியவரின் புலம்பலாகவோ இல்லாமல் சுவாரஸ்யமும், புத்துணர்ச்சியும் தரக்கூடியதாக இருந்தது. அதுவே அவரை இணையம் கொண்டாடிய தாத்தாவாக உருவாக்கியது. இணையத்தில் பேச வேண்டிய மொழியை ஆக்லே தாத்தா நன்றாக அறிந்திருந்தார். அவரது யூடியூப் வீடியோக்கள் எதுவும் 2 முதல் 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததில்லை. சராசரியாக 5 நிமிடத்திற்குள் அவர் வீடியோவில் தான் சொல்ல வந்ததை முடித்துக்கொண்டார்.

இந்த வீடியோ வழியே அவர் தனது இளமைக்கால அனுபவம் துவங்கி எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டுள்ளார். ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம், திருமண வாழ்க்கை, தனிப்பட்ட அனுபவம் ஆகியவற்றை வீடியோவில் பேசியவர், கல்வி, வயோதிகம் போன்ற பொதுவான விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார். ஒவ்வொரு வீடியோவும் ஆயிரக்கணக்கானோரால் பார்த்து ரசித்து பாராட்டப்பட்டுள்ளது.

இவ்வளவு ஏன், யூடியூப்பில் அவர் அடியெடுத்து வைத்த முதல் வீடியோவே ஹிட்களை அள்ளி அவரை நட்சத்திரமாக்கியது. 2006ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் ஆக்லே தனது முதல் வீடியோவை பதிவேற்றினார். இது கொஞ்சம் ஆச்சர்யமானது தான். ஏனெனில் யூடியூப்பே அப்போது தான் அறிமுகமாகியிருந்தது. இளைஞர்கள் மத்தியில் பிரபலமான அந்த தளத்தில் இளசுகள் உருவாக்கிய வீடியோக்கள் தான் குவிந்திருந்தன. அந்த காலகட்டத்தில் யூடியூப் என்றால் என்ன என்று இணையவாசிகள் பலருக்குமே கூட புரியாத நிலையில், ஆக்லே யூடியூப்பில் அடியெடுத்து வைத்தார். இங்கு ஆக்லேவின் வாழ்க்கை பற்றி சில குறிப்புகள்.

பீட்டர் ஆக்லே, இங்கிலாந்தின் நார்விச் நகரில் 1927 ஆக்ஸ்ட் மாதம் பிறந்தவர். 18 வயதில் அவர் கடற்படையில் ரேடார் டெக்னிஷியனாக சேர்ந்தார். பின்னர் அவர் பேட்ரிசியாவை திருமணம் செய்து கொண்டார். தன் வாழ்க்கையில் மனைவி மற்றும் பைக்குகளை தான் அவர் மிகவும் நேசித்திருக்கிறார். 1990களின் இறுதியில் மனைவி பேட்ரிசியா இறந்துவிடவே ஆக்லே அது வரை இல்லாத தனிமையை அனுபவிக்கத் துவங்கினார். இந்த தனிமைக்கு மருந்தாக தான் அவர் இணையத்தை நாடி வந்தார்.

2006, ஆகஸ்ட் 5ம் தேதி அவர், ‘முதல் முயற்சி’ (First Try) எனும் பெயரில் முதல் வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றினார். காமிராவைk கூட சரியாக பார்க்காமல் பேசியவர், “நான் யூடியூப்பிற்கு அடிமையாகி விட்டேன் என்று துவங்கி, இளைஞர்கள் உருவாக்கும் ஆயிரக்கணக்கான வீடியோக்களை பார்க்ககூடிய இந்த அற்புதமான இடத்தில் நானும் என் வீடியோவை இடம்பெற வைக்கலாம் என நினைக்கிறேன்” என கூறியிருந்தார். 2 நிமிடம் மட்டுமே ஓடும் அந்த வீடியோ யூடிப்பில் அபார வரவேற்பை பெற்றது. முப்பது லட்சம் முறைக்கு மேல் பார்க்கப்பட்டது. அது மட்டுமா, யூடியூப்பில் இளசுகள் அவரை உற்சாகமக வரவேற்று கருத்தும் தெரிவித்தனர். பத்தாயிரம் பின்னூட்டங்களுக்கு மேல் குவிந்தன.

இந்த வரவேற்பால் திக்குமுக்காடிய ஆக்லே தொடர்ந்து வீடீயோ மூலம் தனது அனுபவங்களை வெளியிட்டார்.

யூடியூப்பில் எப்படி அலுப்பூட்டாமல் பேச வேண்டும் என்பதை ஆக்லேவைப் பார்த்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். தனது வாழ்க்கை அனுபவங்களை நீட்டி முழக்காமல், சுருக்கமாக கூறியதோடு அதை சுவாரஸ்யமாக்கும் வகையில் ஒரு கதை அல்லது நிகழ்வுடன் இணைத்து சொல்லி வந்தார். ‘டெல்லிங் இட் ஆல்’ எனும் தலைப்பில் வெளியான இந்த வீடியோக்களை ஆயிரக்கணக்கானோர் விரும்பி பார்த்தனர்.

ஆக்லேவின் இணைய புகழ் அவரே எதிர்பாராதது. ஆரம்பத்தில் அதை எதிர்கொள்ள முடியாமல் அவர் தவிர்த்திருக்கிறார். அவர் ‘ஜெரியாட்ரிக் 1927’ எனும் பெயரிலேயே யூடியூப்பில் அறிமுகமானார். அதே பெயரிலேயே வீடியோவிலும் பேசினார். யூடியூப்பில் இளைஞர்களுக்கு போட்டியாக அவர் கலக்குவதை பார்த்ததும், மீடியா அவரைப் பேட்டி காண முற்றுகையிட்டது. துவக்கத்தில் இதற்கு ஆக்லே மறுத்து விட்டார். பின்னர் பல மாதங்கள் கழித்து பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

இணையப் புகழுடன் ஒதுங்கி விடாமல் தொடந்து சீராக அவர் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். மொத்தம் 435 வீடியோக்களை பதிவேற்றியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், பிப்ரவரி மாதம் கடைசி வீடியோவை பதிவேற்றினார். அநேகமாக இது தான் கடைசி வீடியோவாக இருக்கும் என்பது போல இறுதி குட்பையும் சொல்லியிருந்தார்.மார்ச் 23 ல் அவர் உயிர் பிரிந்தது.

யூடியூப் தளத்தில் அவரது சேனலுக்குள் எட்டிப்பார்த்தால் அவரைப்பற்றிய நெகிழ்ச்சியான நினைவுகளை அவரது இணைய பேரன்கள் பகிர்ந்து கொண்டிருப்பதை பார்க்கலாம்.

யூடியூப் இந்த சமூகத்தை பிரதிபலிப்பதாக ஆக்லே நம்பினார். அதுவே அவரை உலகம் முழுவதும் உள்ளவர்களோடு நேரடியாகப் பேசி நெருக்கமான தொடர்பை வளர்த்துக்கொள்ள வைத்தது.

பீட்டர்ஆக்லேவின் யூடியூப் பக்கம்: http://www.youtube.com/user/geriatric1927]

பீட்டர் ஆக்லேவின் இணையதளம்: http://askgeriatric.com/

சைப்பர்சிம்மனின் வலைத்தளம் http://cybersimman.wordpress.com/

source:::::: Cyber Simmhan in The Hindu … Tamil
natarajan

Your ” Take off With Natarajan ” Has Crossed 2 Lac Hits … A Feedback and ” Thank You” note To Each one of YOU ….

 

  • Best ever

    971views  on ONE Single Day ….

  • All time

    200,656views     ….Since Feb 2012…

 

Top Views by Country for all days ending 2014-04-03 (Summarized)

Country Views
India FlagIndia 139,939
United States FlagUnited States 28,860
Australia FlagAustralia 7,211
United Kingdom FlagUnited Kingdom 5,012
Canada FlagCanada 1,964
Singapore FlagSingapore 1,894
United Arab Emirates FlagUnited Arab Emirates 1,339
New Zealand FlagNew Zealand 1,138
Sri Lanka FlagSri Lanka 851
Malaysia FlagMalaysia 794
France FlagFrance 679
Germany FlagGermany 627
Oman FlagOman 600
Saudi Arabia FlagSaudi Arabia 464
Indonesia FlagIndonesia 445
Philippines FlagPhilippines 374
Hong Kong FlagHong Kong 294
Qatar FlagQatar 291
Netherlands FlagNetherlands 287
Pakistan FlagPakistan 281
Brazil FlagBrazil 228
South Africa FlagSouth Africa 227
Finland FlagFinland 219
Sweden FlagSweden 210
Italy FlagItaly 193
Thailand FlagThailand 161
Kuwait FlagKuwait 143
Ireland FlagIreland 136
Japan FlagJapan 135
Korea, Republic of FlagRepublic of Korea 132
Spain FlagSpain 130
Belgium FlagBelgium 126
Switzerland FlagSwitzerland 122
Taiwan FlagTaiwan 119
Russian Federation FlagRussian Federation 116
Mexico FlagMexico 111
Denmark FlagDenmark 100
Turkey FlagTurkey 99
Norway FlagNorway 99
Poland FlagPoland 94
Romania FlagRomania 92
Bahrain FlagBahrain 88
Kenya FlagKenya 83
Israel FlagIsrael 76
Hungary FlagHungary 72
Mauritius FlagMauritius 70
Bulgaria FlagBulgaria 65
Viet Nam FlagViet Nam 63
Austria FlagAustria 62
Greece FlagGreece 61
Estonia FlagEstonia 59
Nigeria FlagNigeria 58
Bangladesh FlagBangladesh 56
Egypt FlagEgypt 52
Dominican Republic FlagDominican Republic 48
Ukraine FlagUkraine 44
Czech Republic FlagCzech Republic 42
Argentina FlagArgentina 40
Portugal FlagPortugal 40
Nepal FlagNepal 40
Lebanon FlagLebanon 39
Iraq FlagIraq 39
Angola FlagAngola 38
Serbia FlagSerbia 34
Trinidad and Tobago FlagTrinidad and Tobago 32
Colombia FlagColombia 32
Chile FlagChile 28
Lithuania FlagLithuania 25
Puerto Rico FlagPuerto Rico 25
Slovakia FlagSlovakia 24
Maldives FlagMaldives 22
Croatia FlagCroatia 21
Jamaica FlagJamaica 21
Morocco FlagMorocco 20
Uganda FlagUganda 19
Jordan FlagJordan 19
Zambia FlagZambia 18
Venezuela FlagVenezuela 18
Cambodia FlagCambodia 17
Slovenia FlagSlovenia 17
Georgia FlagGeorgia 16
Macedonia, the former Yugoslav Republic of FlagMacedonia, the Former Yugoslav Republic 16
Peru FlagPeru 15
Fiji FlagFiji 14
Albania FlagAlbania 13
Cyprus FlagCyprus 13
Djibouti FlagDjibouti 12
Luxembourg FlagLuxembourg 12
Namibia FlagNamibia 12
Algeria FlagAlgeria 12
Guatemala FlagGuatemala 12
Brunei Darussalam FlagBrunei Darussalam 11
Bosnia and Herzegovina FlagBosnia and Herzegovina 11
Malta FlagMalta 11
Honduras FlagHonduras 10
Ethiopia FlagEthiopia 10
Tanzania, United Republic of FlagUnited Republic of Tanzania 10
Virgin Islands, U.S. FlagVirgin Islands 9
Myanmar FlagMyanmar 9
Ghana FlagGhana 9
Kazakhstan FlagKazakhstan 9
Costa Rica FlagCosta Rica 9
Palestinian Territory, Occupied FlagPalestine, State of 8
Uruguay FlagUruguay 7
Timor-Leste FlagTimor-Leste 7
Mongolia FlagMongolia 7
Tunisia FlagTunisia 7
Cameroon FlagCameroon 6
Cayman Islands FlagCayman Islands 6
Barbados FlagBarbados 6
China FlagChina 6
Zimbabwe FlagZimbabwe 6
Yemen FlagYemen 6
Moldova, Republic of FlagMoldova 6
Côte d'Ivoire FlagCôte d’Ivoire 6
Papua New Guinea FlagPapua New Guinea 5
Lao People's Democratic Republic FlagLao People’s Democratic Republic 5
Sudan FlagSudan 5
Suriname FlagSuriname 5
Ecuador FlagEcuador 5
Guernsey FlagGuernsey 5
Botswana FlagBotswana 5
Macao FlagMacao 5
Senegal FlagSenegal 5
Bolivia FlagBolivia 4
Iceland FlagIceland 4
Rwanda FlagRwanda 4
Grenada FlagGrenada 4
Paraguay FlagParaguay 3
French Polynesia FlagFrench Polynesia 3
Lesotho FlagLesotho 3
Jersey FlagJersey 3
El Salvador FlagEl Salvador 3
Armenia FlagArmenia 3
Latvia FlagLatvia 3
Azerbaijan FlagAzerbaijan 3
Iran, Islamic Republic of FlagIran, Islamic Republic of 2
Isle of Man FlagIsle of Man 2
Guyana FlagGuyana 2
Vanuatu FlagVanuatu 2
Montenegro FlagMontenegro 2
Bahamas FlagBahamas 2
Afghanistan FlagAfghanistan 2
Malawi FlagMalawi 2
Panama FlagPanama 2
Belarus FlagBelarus 2
Bhutan FlagBhutan 2
Monaco FlagMonaco 2
Libya FlagLibya 1
Saint Pierre and Miquelon FlagSaint Pierre and Miquelon 1
Seychelles FlagSeychelles 1
Virgin Islands, British FlagBritish Virgin Islands 1
Turks and Caicos Islands FlagTurks and Caicos Islands 1
Benin FlagBenin 1
Liechtenstein FlagLiechtenstein 1
New Caledonia FlagNew Caledonia 1
Togo FlagTogo 1
Andorra FlagAndorra 1
Guadeloupe FlagGuadeloupe 1
Saint Kitts and Nevis FlagSaint Kitts and Nevis 1
Anguilla FlagAnguilla 1
Mozambique FlagMozambique 1
Saint Lucia FlagSaint Lucia 1
Nicaragua FlagNicaragua 1
Réunion FlagRéunion 1
Solomon Islands FlagSolomon Islands 1
Holy See (Vatican City State) FlagVatican City 1
Belize FlagBelize 1
 Dear Visitor, Follower and commentator,
 Thanks a lot for your support and encouragement to me in ” Taking Off ” My site almost Every Day … My site has crossed 200000 hits yesterday ..2 April 2014 …and contniues its journey further…
 When I look at the Summary above provided by my site Administrators WORDPRESS ,  on the data of visitors for my site in various Countries in this World ,  i am pleasantly surprised to note the interest and enthusiasm  of different countrymen   ….totally unknown to me….in visiting my site and offering their valuable feedback and comments from time to time.
This kind of  connectivity thro social network  proves once again our Tamil Maxim ”  யாதும்  ஊரே  யாவரும் கேளிர் ” !!!… meaning  ” ALL  PLACES IN THIS WORLD  ARE  OUR PLACES AND ALL COUNTRYMEN IN DIFFERENT COUNTRIES IN THIS WORLD ARE OUR FRIENDS AND BROTHERS ” ..
Thanks once again to each one of YOU for the support and feedback … Thanks to WORDPRESS  for the excellent administration of the site with various inputs on the site materias on daily basis…
I am sure now that i will Take Off with YOU with more and more confidence for touching new heights .
Thanks Once again…
Natarajan

Why ” Ambulances ” are called so…?

 

Why Ambulances are Called Ambulances

ambulanceThe word “ambulance” ultimately derives from the Latin “ambulare,” meaning “to walk.” This gave rise to the French “hôpital ambulant,” essentially meaning “mobile hospital.” In the beginning, this didn’t mean as we think of it today, but was generally just used to refer to a temporary medical structure that could be easily moved, particularly early on referring to movable army medical hospitals.

“Ambulance,” in English, first appeared around 1798, which also referred to these temporary hospital structures at first.

Mobile medical transport vehicles were also being called ambulances in French around this time thanks to Frenchman Dominque-Jean Larrey and his “flying ambulance” (ambulance volantes). These ambulances were designed to get injured soldiers off the battlefield and to medical aid during battle, rather than waiting until the fight was over as was common before.

By the mid-nineteenth century, the word (in English) extended to refer to any vehicle used to transport the wounded from battle fields to the military hospitals. One of the first instances of this was during the Crimean War (1853-1856). Shortly thereafter, during the American Civil War, such medical transport vehicles were known as “ambulance wagons.” The former, “ambulance,” name for mobile medical vehicles has stuck around ever since.

 

source:::: today i founout .com

natarajan

” OK ” … Now 175 … Not Out !!!

OK!

OK! Source: ThinkStock

WHATEVER you’re doing, wherever you might be, take a moment to reflect on the most popular word in the English language, OK?

Yesterday it was 175 years since OK — or, as some prefer, okay — first appeared in print, on page two of The Boston Morning Post, then one of the most popular newspapers in the United States.

“I think OK should be celebrated with parades and speeches,” Allan Metcalf, an English professor in Illinois who is the world’s leading authority on the history and meaning of OK, told AFP.

“But for now, whatever you do (to mark the anniversary), it’s OK.”

In his 2001 book, OK: The Improbable Story of America’s Greatest Word, Metcalf calls OK “the most frequently spoken (or typed) word on the planet” — used more often than “Coke” or an infant’s “ma.” Concise and utilitarian, it’s quintessentially American in its simplicity. Etymologically, it has no direct relationship with Latin or Greek or any other ancient tongue.

Oxford Dictionaries, on its website, rejects speculation that OK is derived from the Scottish expression “och aye,” the Greek “ola kala” (it’s good) or the French “aux Cayes,” which refers to a Haitian port famous for its rum.

Rather, it favours a theory — shared by Metcalf — that it’s an abbreviation of “orl korrekt,” a derivative of “all correct” from the 1830s when jokey misspellings were all the rage, like internet memes are today.

 

OK could be an abbreviation of orl korrekt.

OK could be an abbreviation of orl korrekt. Source: ThinkStock

 

First use

Credit for finding its first use in print goes to Allen Walker Read, a Columbia University professor who died in 2002 after a lifetime interest in ok.

It appeared in the Post in the context of an article concerning the ironically named Anti-Bell Ringing Society, founded in 1838 to oppose a municipal law in Boston prohibiting the ringing of dinner bells.

Society members were en route to New York, it reported, adding cryptically that if they should transit Rhode Island en route home, the newspaper editor in the New England state might well “have the ‘contribution box,’ et ceteras, o.k. — all correct — and cause the corks to fly, like sparks, upward.”

Other abbreviations proliferated at the time, like NG for “no go,” GT for “gone to Texas” and SP for “small potatoes.” But OK truly entered the national lingua franca in 1840, when spin doctors for Democratic presidential nominee Martin Van Buren, a native of Kinderhook, New York, insisted to voters that it meant “Old Kinderhook.”

 

Feeling OK?

Feeling OK? Source: ThinkStock

 

‘I’m OK, You’re OK’

Today, OK is used “to ask for or express agreement, approval or understanding” or to add emphasis to a sentence, as in “I’m going to stay here, OK?” according to its entry in the Merriam-Webster dictionary.

“I’m OK, You’re OK,” published in 1967, remains one of the best-selling self-help books of all time, while Rodgers and Hammerstein declared Oklahoma in song to be OK! in their eponymous 1943 musical.

There’s also the OK Corral in Tombstone, Arizona — but in this instance, OK stands for Old Kindersley and the infamous 1881 shootout that supposedly took place there but actually occurred down the street.

Internationally, OK has travelled remarkably well on the wings of American popular culture — and found a niche in the digital era, fitting easily into 140-character Twitter and text messages.

Using Google Glass eyewear, in fact, calls for a voice command that begins: “OK, Google Glass.” “It’s a nice, short abbreviation and it fits abbreviations in other languages,” said Metcalf, the executive secretary of the American Dialect Society who teaches at MacMurray College.

“It’s distinctive, yet easily pronounced and very readily understood … It uses the vowel O, the vowel A and the consonant K — and those are found in almost all languages of the world,” he added.

“So if you’re speaking with somebody who has a totally different language than you, chances are you can get by with gestures and OK in various tones of voice.” Metcalf, who blogs about the English language for the Chronicle of Higher Education, personally celebrates OK’s birthday by ordering up to four dozen frosted cookies with OK in green on a white background.

 

OK is everywhere.

OK is everywhere. Source: ThinkStock

 

Global OK Day

In New York, retired English tutor Henry Nass has been pounding the sidewalks of Manhattan, handing out cards to passers-by inviting them to celebrate “Global OK Day.”

“Some people say OK too much. I can’t say there’s anyone who uses it too little,” Nass, who is making customised US postage stamps honouring his pet word, said in a telephone call.

Letting the anniversary pass without fanfare was Okay, Oklahoma, population 620, where residents trace its toponymy to the long-gone Okay Truck Manufacturing Company in the early 20th century.

Four hours’ drive from Okay, OK, as it’s known by the US Postal Service, is Okay, Arkansas — but don’t expect any OK festivities there, either. The one-time limestone quarry town has been all but abandoned for years.

 

source::::news.com.au

natarajan

“பயமுருத்தினால்தான் மடத்து ஞாபகம் உனக்கு வருமா !!!” …

 

பயமுறுத்தினா தான் ஞாபகம் வருமோ!

1976, பாளையங்கோட்டையில், நாங்கள் தங்கியிருந்த காலம். நள்ளிரவு வேளை. தாகம் எடுக்கிறதே என்று எழுந்து தண்ணீர் குடம் வைத்திருந்த இடம் பக்கமாகப் போனேன். ஸ்விட்சைப் போட்டு விட்டு, குடத்தைப் பார்த்தால், அதன் கழுத்தில் ஏதோ ஒன்று சுற்றியிருப்பது போல் தோன்றியது. அது லேசாக அசைந்தது. அதன் பின் தான் உறுதி செய்தேன். அது பாம்பு என்பதை…. எனக்கு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது.

ஹாலில் எல்லாரும் படுத்திருந்தார்கள். பாம்பை விரட்டப்போய், அது ஹாலுக்குள் வந்து விட்டால், ஏக கலாட்டா ஆகி விடும். குடும்பத்தார் பதறிப் போய் விடுவார்கள். நான் நின்ற இடத்தில் இருந்தபடியே பூஜை அறையைப் பார்த்தால் தெரியும்.அங்கே பல சுவாமி படங்களின் மத்தியில், காஞ்சி மஹாபெரியவரின் படம் நடுநாயகமாக இருக்கும்.

இதற்குள் பாம்பு இறங்கியது. அந்த அறை மிகவும் வழுவழுப்பாக இருந்ததாலோ என்னவோ, மிகவும் மெதுவாக ஊர்ந்தது. ஹால் பக்கம் போய்விடுமோ என்று பயந்திருந்த வேளையில், ஸ்வாமி படங்கள் இருந்த பக்கமாகப் போனது. மஹாபெரியவர் படத்தின் முன்னால், தலையைத் தூக்கிப் பார்த்தது. பிறகு, அங்கிருந்த ஒரு துவாரத்தின் வழியாக வெளியேறிவிட்டது.

எனக்கு அப்போது தான் மூச்சே வந்தது. பிறகு, குடும்பத்தாரிடம் தகவல் சொன்னேன். அடுத்தநாளே, காஞ்சி மடத்துக்குப் பயணமானேன். மஹாபெரியவரைத் தரிசனம் செய்தேன்.

பெரியவா, அப்போது சொன்னது என்னை அப்படியே திகைப்பில் ஆழ்த்திவிட்டது.

”பயமுறுத்தினா தான் மடத்து ஞாபகம் உனக்கு வருமோ?”

நான் பெரியவா காலில் தடாலென விழுந்து விட்டேன்.

ஆஹா, வீட்டிற்குள் பாம்பு வந்து, நான் பயந்து போனது எப்படி அவருக்குத் தெரிந்தது? என்னே அவரது ஞானம்! பாம்பின் வடிவாய் வந்ததே அவர் தானோ?

இன்னொருசம்பவத்தையும் குறிப்பிடுகிறேன்.

ஒரு சமயம் கர்நூலில் பெரியவர் முகாமிட்டிருந்தார். நாங்கள் குடும்பத்துடன் பெரியவரைத் தரிசனம் செய்தோம். ஊருக்குக் கிளம்பும் வேளையில், பெரியவர் என்னை அழைப்பதாக ஒருவர் தகவல் சொன்னார். நான் பெரியவா முன் நின்ற போது, “உன் குடும்பத்தில் யாரோ சந்நியாசம் வாங்கியிருக்க வேண்டுமே?” என்றார்.

“எனக்குத் தெரிந்து அப்படி யாருமில்லையே பெரியவா!” என அவரிடம் சொன்னேன். பெரியவா என்னிடம் “நீ ஊருக்குப் போய், பெரியவர்களிடம் விசாரித்து, மடத்துக்குத் தகவல் கொடு” எனச்சொல்லி விடை கொடுத்தார்.

நான் ஊருக்குப் போய் உறவினர்களிடம் விசாரித்தேன். அவர்கள் கூறிய பதில் என்னை திகைக்க வைத்தது.
“ஒரு வாரம் முன்பு தான், என் ஒன்றுவிட்ட சகோதரி மகன் ஆடிட்டர் சீனிவாசன், சேலம் கந்தாஸ்ரமத்தில் துறவறம் மேற்கொண்டு விட்டார்” என்ற தகவல் தான் அது.
பெரியவரின் அந்த ஞானசக்தியை எண்ணி என் கண்கள் பனித்தன. அவர் நடமாடும் தெய்வம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::www.periva.proboards.com

natarajan

 

 

 

” இன்னும் என்ன இருக்கு …பசியைக் கிளறி விட்டாயே …” !!!

ஒருமுறை காசியிலிருந்து திரும்பும் வழியில் பெர்ஹாம்பூரில் சாதுர்மாஸ்ய அனுஷ்டிக்கும்போது நெடுநாட்கள் சுத்த உபவாசமிருந்தார் பெரியவா. அதையும் மடத்தினருக்கே தெரியாமல் ரொம்ப ரகசியமாக செய்தார். மடத்து கஜானாவை நிர்வகித்து வந்த ராமச்சந்திர ஐயருக்கு எப்படியோ ரகசியம் தெரிந்து விட்டது. பெரியவாளிடம் சென்று உபவாசத்தை விடுமாறு வேண்டினார்.

அவரும் உடனே பிக்ஷை தயாரித்து கொண்டிருந்த பணியாளரை கூப்பிட்டு, மறுதினம் தம் உணவில் இன்ன இன்ன சேர்க்கும்படி கூறினார். “கஜானா” சந்தோஷம் தாங்காமல் திரும்பினார். திரும்பியபின் அவருக்கு சந்தேகம் எழுந்தது. “ஆனானப்பட்ட அன்னதான சிவன் போன்றவர்களின் வேண்டுகோளுக்கும் மசியாத பெரியவாளா நம் கோரிக்கைக்கு இத்தனை சுலபமாக மசிந்து விட்டார்?” என்ற சந்தேகம். பிக்ஷை தயாரிக்கும் பாரிஷதரிடம் போய் குடைந்தார். அவருடைய சந்தேகம் சரியானதே என்று நிரூபணமாயிற்று. “நீங்க அந்தண்டை போனதுமே பெரியவா, “அவர் மனசு சமாதானமாறதுகக்காகத்தான் அப்படி சொன்னேன். அதை அடியோட மறந்துடு”ன்னார்” என்று அந்த பாரிஷதர் நிஜத்தை கக்கி விட்டார்.

“கஜானா” மறுபடி பெரியவாளிடம் போனார். பல முறை போனார். அனால் அவர் வாயை திறக்கவே பெரியவா இடம் கொடுக்காமல் அடியார்கள், சிப்பந்திகள், பண்டிதர்கள் என்று எவரையேனும் சுற்றிலும் வைத்து கொண்டு ரொம்பவும் சீரியசாக ஏதாவது அலசி கொண்டிருந்தார். இப்படி பல நாட்கள் ஓடின. கடும் உபவாசமும் தொடர்ந்தது. கடைசியாக ஒருநாள் இரவு 10 மணிக்கு மேல் “கஜானா”விடம் பெரியவா பிடிபட்டார். சுக்ரவார பூஜை சற்று தள்ளாட்டத்துடனேயே முடித்துவிட்டு, ஓய்வுக்கு பெரியவா சாய்ந்த சமயத்தில் கஜானா அவரை பிடித்து விட்டார்.

“நாளைக்கு பெரியவா வயிறார பிக்ஷை பண்ணலேன்னா நான் மடத்தை விட்டே போய்டறேன்” என்று முரண்டு செய்து பார்த்தார் கஜானா.

அதுவும் பலிக்கவில்லை. முகமெல்லாம் சிரிப்பாக பெரியவா “நீ இல்லாட்டா மடம் நடக்காதோ?” என்றார்.

“அப்போ இந்த லோகத்தை விட்டே போய்டறேன்” என்று தம்மை மீறிய ஆவேசத்துடன் சொல்லி அழுதே விட்டார் கஜானா.

“சரி! பிக்ஷை பண்ணறேன். நாளைக்கு என்ன? இப்பவே பண்றேன். வயிறார பண்ணனும்னியே பண்றேன், பண்ணி வைக்கறையா?” என்றார் பெரியவா
“காத்துண்டு இருக்கேன்” என்று கஜானா நமஸ்காரம் செய்தார். அந்த இரவு வேளையில் பெரியவா பாலும் பழமும் தவிர எதுவும் உட்க்கொள்ளமாட்டார் என்று நினைத்தார். பெரியவா உட்கொள்ளும் அளவு தெரிந்த பிக்ஷை பாரிஷதரை கூப்பிட்டார்.
“அவனை ஏன் கூப்பிடறே? ஒன்னையேதானே பிக்ஷை பண்ணி வெக்க சொன்னேன்? நீயும் ஒப்புத்துண்டையே!””அளவு தெரியாததால அவனை கேட்டுக்கலாம்னு…..” கஜானா இழுத்தார்.

“அளவு தெரியாட்டா என்ன? இருக்கறதை ஜாடா கொண்டா”
“சரி நாம் பழக்கூடைகள், தட்டுகள் யாவும் கொண்டு வந்து வைப்போம். பெரியவாளே வேண்டியதை எடுத்து கொள்ளட்டும்” என்று கஜானா நினைத்து அவ்வாறே செய்தார்.
அதியாச்சரியமான கட்டளை பெரியவாளிடமிருந்து பிறந்தது “சுக்ரவார நைவேத்யம் சொஜ்ஜி, சுண்டல் எங்கே? கொண்டா சட்னு”
கஜான ஓடோடிபோய் பெரிய பெரிய பத்திரங்களில் நிறையவே இருந்த சொஜ்ஜியையும், சுண்டலையும் சமர்ப்பித்தார்.

“அதி”க்கும் மேற்பட்ட ஆச்சரியம் நிகழ்ந்தது. பெரியவா அவ்வளவையும் வெகு விரைவில் உட்கொண்டு பாத்திரங்களை காலி செய்தார். “இவ்வளவுதானா?” என்று வேறு கேட்டார்.

பன்னிரண்டு திருவோணம் அட்டேன்;
“இன்னம் உவப்பன் நான்” என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்!…………என்று ஆய்ச்சி மொழியாக ஆழ்வார் பாடியது உண்மையாயிற்று.

பழக்கூடையும் சடுதியில் காலியாயிற்று “இன்னும் என்ன இருக்கு” என்று கேள்வி கஜான வெலவெலத்து போனார்.

“வயிறார பண்ணறேன்னு ஒப்புண்டு பசியை கிளறிட்டியே! உசிர் போறதே!” என்ற பெரியவாளின் வார்த்தையை தாங்காமல் ஒரு பெரிய கூஜா பாலை திருமுன் வைத்தார். கடகடவென்று அதையும் பெரியவா காலி பண்ண, தடதடவென கஜானா கன்னத்தில் போட்டுகொண்டு அவரது பாதத்தில் தடாலென விழுந்தார்.

“பெரியவா க்ஷமிக்கணும். இனிமே ஒருநாளும் பெரியவாளை தொந்திரவு பண்ண மாட்டேன்” என்று விக்கினார்.
குழந்தையாக சிரித்த பெரியவா, “இனிமே என் வம்புக்கு வரமாட்டியோல்யோ?” என்று கை தூக்கி ஆசிர்வதித்தார்…

 

source::::www.periva.proboards.com

natarajan

Read more: http://www.periva.proboards.com/thread/1207/fast-feast#ixzz2xFGBx7Gw

” நாகேஷை நடிகராக்கிய நாடக நடிகர் ….” !!!

 

கிருஷ்ணா ராவ் – ருக்மணி அம்மாளின் ஒன்பது குழந்தைகளில் கடைக்குட்டியாகப் பிறந்தவர் நாகேஷ். அப்பாவின் சட்டைப் பையிலிருந்து பணம் திருடி, அடிக்கடி சினிமா பார்க்கும் பழக்கம் உள்ளவராக இருந்தார். ஆனால், சினிமா வில் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. பள்ளிக்கூட நாடகங்களில் ஆர்வத்துடன் நடித்தபோதிலும் படிப்பில் முழுக் கவனம் செலுத்தி முதல் மாணவராக இருந்தார்.

கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் படிக்கும்போது அம்மை நோய் தாக்கியதில் முகம் முழுக்கத் தழும்புகள் ஏற்பட்டதில் ரொம்பவே கலங்கிப்போய்விட்டார். உள்ளூரில் இருக்கப் பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறி ஐதராபாத்துக்குச் சென்று பல வித வேலைகளைச் செய்தார். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக இருந்த அப்பாவின் ஆலோசனைப்படி ரயில்வே தேர்வு எழுதி சென்னை மண்டலத்தில் குமாஸ்தாவாகப் பணியில் சேர்ந்தார்.

மேற்கு மாம்பலத்தில் தங்கியிருந்த அவருக்குக் கவிஞர் வாலி (அப்போது வாலி அல்ல, ரங்கராஜன். சினிமாவுக்குப் பாட்டெழுதத் தீவிரமாக முயற்சி செய்துவந்தார்), ‘தங்கப் பதக்கம்’ ஸ்ரீகாந்த், பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான தாராபுரம் சுந்தர்ராஜன் ஆகியோர் நண்பர்களாக இருந்தார்கள். இவ்வளவு சினிமா வாசனை பக்கத்தில் அடித்துக்கொண்டிருந்தபோதும் நாகேஷின் மனம் சினிமாவை நாடவில்லை. அப்படி நாட வைத்தது ஒரு பிழை செய்த பேறு.

அவர் குடியிருந்த அறைக்குப் பக்கத்தில் இருந்த தேவி பாடசாலையில் நாடக கோஷ்டிகள் அடிக்கடி ஒத்திகை நடத்துவார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அங்கு சென்று வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார் நாகேஷ். அப்படி ஒருநாள் போகும்போது ஒரு நடிகர் கம்ப ராமாயணத்தில் வரும் குகன் படலப் பாடலைத் தப்புத்தப்பாய்ப் பாடியிருக்கிறார். சின்ன வயது முதல் சிறு பிசகுமில்லாமல் மனப்பாடம் செய்துவைத்திருந்த கவிச்சக்ரவர்த்தி கம்பனின் பாடலை ஒரு நடிகன் கொடூரமாகக் கொலை செய்வதை அவரால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. திடகாத்திர மான அந்த நடிகரைத் திருத்த முயன்ற நாகேஷ், அவர் முன் போய் நின்றார்.

“சார்! தப்பா நெனைக்காதீங்க. இஷ்டப்பட்டு கம்பன் எழுதின பாட்டை நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு தப்புத்தப்பா பாடறீங்க. நான் வேணும்னா அந்த வரிகளை தெளிவா எழுதித் தரட்டுமா?’’ என்று நாகேஷ் கேட்டதும் ஆத்திரம் அடைந்துவிட்டார் அந்த நடிகர். “யாருய்யா கண்டவனை எல்லாம் உள்ளே விட்டது?’’ என்று கம்பெனி ஆட்களைப் பார்த்து சத்தம்போட்டுவிட்டு, நாகேஷை மிக நெருங்கி வந்து, “நடிப்புனா என்னன்னு தெரியுமா? ஒம்மூஞ்சிக்கெல்லாம் நடிப்பு வருமா? இப்போதைக்கு உன்னோட மொகத்துல மட்டும்தான் தழும்பு இருக்கு. இன்னும் கொஞ்சம் நேரம் இங்கே இருந்தீன்னா ஒடம்பு முழுக்க தழும்பாயிடும்’’ என்று எச்சரித்ததைப் பார்த்து நாகேஷ் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

அன்று இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்தார் நாகேஷ். மறுநாள் அலுவலகத்தில், நாடகம் நடத்தும் மாராவிடம் வாய்ப்பு கேட்டார். முதலில் ஏளனமாகப் பார்த்து மறுத்தவர், நாகேஷின் தொடர் கெஞ்சலால் சம்மதித்தார். வயிற்று வலிக்காரன் வேடம்.

முதலில் மேடையில் தோன்றிய நாகேஷ், ‘அம்மா’ என்ற ஒற்றை வார்த்தையை, வயிற்றைப் பிடித்தபடி பல மாடுலேஷன்களில் பேச, கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது. தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., வயிற்று வலிக்காரனாக நடித்தவரின் பெயரென்ன என்று கேட்டுத் தெரிந்துகொண்டு நாகேஷுக்குப் பரிசுக் கோப்பை வழங்கினார். பிறகு சினிமா அவரை அரவணைத்துக்கொண்டது. நகைச்சுவை வேடம், குணசித்திர வேடம் எனப் பல விதமான பாத்திரங்கள் ஏற்று நடித்த அவர், நாயகனாகவும் கலக்கினார். ‘அதிர்ஷ்டக்காரன்’ படத்தில் இளம் நாயகி படாபட் ஜெயலட்சுமிக்கும் முன்னணிக் கதாநாயகியாக இருந்த கே.ஆர். விஜயாவுக்கும் ஜோடியானார்.

எடுத்துக்கொண்ட வேடம் எதுவானாலும் அதில் பட்டையைக் கிளப்பிய அந்த மாபெரும் கலைஞன் திரையுலகில் நுழையக் காரணமாக அமைந்த அந்த நாடக நடிகருக்குத்தான் தமிழ் சினிமா நன்றி சொல்ல வேண்டும்.

source::::The Hindu….Tamil
natarajan

” சாமி கும்பிடனும்னு நினைத்தாலே , சாமி கும்பிட்ட மாதிரி… ”

 

கிராமத்தில் முகாம். விவசாய வேலை செய்யும் ஒரு பெண்மணி, தரிசனத்துக்கு வந்தாள் .

பெரியவாள் எதிரில் கையை கூப்பிக்கொண்டு நின்றாள். நெஞ்சு படபடவென்று அடித்து கொண்டிருந்தது.

“என்ன வேலை பண்றே?”

“வயல் வேலைக்கு போறேன், சாமி. ஆறு பசங்கள். மாமியா, என்கிட்ட இருக்கு. காலையிலே சோறாக்கி வெச்சிட்டு போயிடுவேன். இருட்டினப்புறம்தான் வீட்டுக்கு வருவேன். நான் எப்படி சாமியை கும்பிடறது? கோயிலுக்கு போறது? உடம்பும் களைச்சுப் போவுது. சாமி கும்பிடவே நேரமில்லே, சாமி..”

பெரியவாளின் திருக்கண்கள் கருணையால் நிரம்பியிருந்தன.

“சாமி கும்பிடனும்னு நினைகிறையே, அதுவே சாமி கும்பிட்ட மாதிரிதான்!

“காலையிலே சூரிய உதயம் ஆனவுடன், கிழக்கே சூரியனை பார்த்து ஒரு கும்பிடு போடு. சாயங்காலம் விளக்கு வச்சவுடனே மேற்கு திக்கு பார்த்து ஒரு கும்பிடு போடு.

“நீ கர்மயோகி. ஒரு விநாடி நேரம் தெய்வத்தை நினைச்சாலே போறும் – சகல புண்யமும் கிடைச்சிடும்..”

பெண்மணி கண்களை துடைத்து கொண்டாள். “சூரியனை கும்பிடு – சகல புண்ணியமும் கிடைச்சிடும்!” என்ன ஆறுதல்! என்ன கருணை!

பெரியவாள் பல வகையான பழங்களை அந்த பெண்மணிக்கு கொடுக்க சொன்னார்கள். தீனமாக வந்த மங்கை, திரும்பி போகும்போது, அரசியாக – மங்கயர்கரசியாக போனாள்.

பெரியவாள் ஞான சூரியன். கும்பிட்டாலே போதும் – சகல புண்ணியமும் கிடைச்சிடும்!   

source:::::www.periva.proboards.com

natarajan

 

Read more: http://www.periva.proboards.com/thread/2749/worship-sun#ixzz2x93e4r1c

” அவ்வை பாட்டியின் அகந்தையை அகற்றிய ஆறுமுகப் பெருமான் …”

அவ்வைப் பாட்டியின் கர்வபங்கம்….
அவ்வைப்பாட்டிக்கு தான்தான் அனைத்தையும்
கற்றுவிட்டதாக மண்டை கர்வம்.

அதே பாட்டிதான்   கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று எழுதி வைத்தாள்

ஆனால் அது ஊருக்குதான் உபதேசம் போலும்.

கல்லாதவரை அவமதிப்பதில்
யாரும் அவளுக்கு நிகரில்லை போலும்.

அவள் ஒரு பாட்டில் கூறுகிறாள்.

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து – தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி.

ஒரு காட்டில் மயில்கள் தன் அழகிய தோகையை விரித்து ஆடுவதைக் கண்ட வான்கோழி தன்னையும் மயில் போல பாவித்து அது தனக்கு உள்ள சிறகை விரித்து ஆடியதாம்.

அதில் என்ன தவறு.
அதை இழிவாக பேசுகிறாள் அவ்வைப் பாட்டி

இறைவன் படைப்பில் அனைத்துமே அழகுதான்.
அதை ரசிக்கும் பரந்த குணம் அவளுக்கு இல்லை.

இதை எதற்காக உதாரணம் காட்டுகிறாள் என்றால்
கல்லாதவன் கவி எழுதினால்
இதைப்போல் மட்டமாகத்தான் இருக்குமாம்.

கவி எழுதுவது என்பது இதயத்தில் தோன்றும்
உணர்சிகளின் வெளிப்பாடு .
அது ஊற்றுப்போல் வெளிப்படுவது.
அதற்க்கு வரைமுறைகள் கிடையாது

நாட்டுப்புறப் பாடல்களை இயற்றியவர்கள்
எந்த இலக்கணம் கற்றார்கள்?

கவி சக்ரவர்த்தி கம்பனே ஒரு ஏற்றம்
இறைப்பவனிடம் திணறிப் போனான்
என்பது வரலாறு.

க (கவிதைக்கு ) விதை (கலைமகளின் அருள்தான்)
என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள். .

தான் கற்றவர் என்ற கர்வம். அவளுக்கு.

ஆனால் இறைவனுக்கு அவனின்
எல்லா படைப்புகளும் ஒன்றுதான்.

அழகே உருவான முருகன். அவ்வைக்கு அளித்த அழகிய வடிவத்தை துறந்து காண்போர் வெறுக்கும் தொண்டு கிழவிபோல் வடிவை வேண்டிப் பெற்ற அவ்வையின் கர்வத்தை ஒடுக்க மனம் கொண்டான்.

அவள் நடந்து வரும் வழியில் ஒரு நாவல் மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான்.

பசியினால் களைத்து வந்த அவ்வை அவனைப் பார்த்து சிறுவனே கொஞ்சம் நாவல் மரத்தை உலுக்குகிறாயா ,நான் கொஞ்சம் நாவல் பழம் உண்டு பசியாறுகிறேன் என்றாள்

அப்போது அந்த சிறுவன் ,பாட்டி உனக்கு சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டான்

அவ்வை திடுக்கிட்டாள் .

பழத்தில் சுட்ட பழம், சுடாத பழம் என்று வகைகள் இருக்கிறதா என்று திகைத்தாள்

எனினினும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சுட்ட பழமே போடு என்றாள்

சிறுவன் மரத்தை உலுக்கினான்.
நாவல் பழங்கள் உதிர்ந்தன

பழங்களை பொருக்கி கையில் எடுத்தாள் அவ்வை பாட்டி.
அதில் மணல் ஒட்டிக்கொண்டிருந்தது.

அதை வாயிற் வைத்து ஊதினாள் மணல்துகள் அகல.

உடனே அந்தசிறுவன் கேட்டான்
என்ன பாட்டி, பழம் சுடுகிறதோ வாயால் ஊதி சாப்பிடுகிறாய்.

ஒரு மாடு மேய்க்கும் சிறுவன்
தன்னை திணற வைத்துவிட்டானே என்று
அதிசயித்தாள்.

அப்போது சிறுவனே நீ யார் ?

தான் கற்றவள் கல்லாதவர்கள் மூடர்கள்
என்று நினைத்த உன்னை சோதிக்க வந்தவன்.

உன் அகந்தையை விட்டுவிட்டு என்னைப் பார்
,நான் யார் என்பது புரியும்.
அவள் புரிந்துகொண்டாள்

இனி யாரையும் இழிவு செய்யாதே
என்று அறிவுறுத்தி மறைந்துபோனான்
ஞான பண்டிதன். .

அகந்தை கொண்ட மனிதர்களை யாரும் அழிக்கவேண்டாம். அவர்களே அதற்கான வழியை தாங்களே தேடிக்கொள்வார்கள் என்பதுதான் வரலாறு.

அந்த அறிவுரை நமக்கும்தான்.

 

source:::: Murugan Bhakti

natarajan

” குருவை வியக்க வைத்த குரு பக்தி …”!!!

மஹா பெரியவாளிடம் கைங்கரியம் செய்யும் பாக்கியம் பெற்றவர் ஏகாம்பரம் என்கிற அன்பர்.

“பேப்பர் – பேனா எடுத்துவந்து, நான் சொல்வதை எழுதிக்கொள்” என்று மகாகாவ் என்னும் இடத்தில் (குல்பர்கா அருகில்) முகாமிட்டிருந்தபோது, மஹான், ஏகாம்பரத்திடம் சொன்ன விஷயம் இது.

மஹா பெரியவா தன் பதின்மூன்றாவது வயதில் பட்டத்துக்கு வந்த புதிதில், அவருக்கு முன் காஞ்சி காமகோடி பீடாதிபதியாக இருந்த பரமாச்சார்யாரிடம் கைங்கரியம் செய்தவர்களை வரிசையாக அறிமுகப்படுத்தினார்களாம். அந்த வரிசையில் ஒருவரைக் காண்பித்து, ‘இவர்தான் முந்தைய குருவுக்கு மடிவஸ்திரம் தோய்த்துக் கொடுத்தவர்” என்று பெரியவாளிடம் சொல்லிவிட்டு. அவர் பக்கம் திரும்பி, “இனிமேல் இவர்தான் நமக்குப் பெரியவா, உன்னோட வஸ்திர கைங்கரியத்தை தொடர்ந்து பண்ணு” என்று சொன்னார். ஆனால், அந்த அன்பரிடமிருந்து பதில் வேறுவிதமாக வந்தது. “நான் முந்தைய பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்த கைகளால் வேறு எவருக்கும் செய்ய இயலாது” என்றார்.

இது தவிர, இன்னொன்றையும் மகான் எழுதிக்கொள்ளச் சொன்னார். கலவையில் மகானின் முகாம். பண்ருட்டியில் இருந்து ரெட்டியார் ஒருவர் மடத்துக்கு நிறையக் காணிக்கை அனுப்பியிருந்தார். அத்துடன் தன் வணக்கத்தையும் பெரியவாளுக்குச் சொல்லச் சொல்லி இருந்தார்.

“அவர் ஏன் நேரில் வரவில்லை ?” மகான் கேட்டார்.

அதற்கு காணிக்கை கொண்டுவந்தவர் சொன்ன பதில், “66-வது பீடாதிபதியான குருவை தரிசனம் செய்த கண்களால், அவருக்குப் பின்னர் வரும் குருவைத் தரிசிக்க மனம் ஒப்பவில்லை என்று ரெட்டியார் சொல்வார்”.

இந்த இருவரின் குருபக்தியையும் மெச்சி, இது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்றுதான் ஏகாம்பரத்திடம் சொல்லி எழுதவைத்தார். இதை இப்படியே ரேடியோவில் சொல்லும்படி ஏற்பாடுசெய்” என்று பெரியவா சொன்னார்.

ஆனால், குல்பர்காவில் இருந்து கொண்டு எதையோ சொல்லி, அது ரேடியோவில் வரவேண்டுமென்றால் எப்படி? எவ்வளவோ தடைகளைத் தாண்டியல்லவா இவற்றை ஒலிபரப்ப இயலும் ?

ஏகாம்பரம், “அது முடியாத காரியம் | “ என்று பெரியவாளுக்கு நிலைமையை விளக்கினார் !

“சரி, அதனால் என்ன, பத்திரிகைகளிலாவது வரட்டுமே ! அதற்கான ஏற்பாட்டைச் செய்யேன்” என்றார்.

“சரி” என்ற ஏகாம்பரம் ஓய்வெடுக்கப் போய்விட்டார். சற்று நேரத்துக்குள் ஏகாம்பரத்துக்கு அழைப்பு வந்தது. மகா பெரியவாளைப் பார்க்க ஒரு குழு வந்திருந்தது. அவர்களுக்காக்த்தான் ஏகாம்பரத்தை வரவழைத்திருந்தார் மகா பெரியவா.

“நான் காலையில் சொன்ன குருபக்தியை ஒலிபரப்ப முடியுமானு இவாளிடம் கேட்டுப் பாரேன் !”

குழுவில் இருப்பவர்கள் யாரென்று தெரிந்த ஏகாம்பரம் வியப்பினால் ஸ்தம்பித்துப் போய்விட்டார். அவர்கள் அனைவரும் அகில இந்திய வானொலியின் ஸ்டேஷன் டைரக்டர்கள். ஒரு டிரெயிங்குக்காக வந்தவர்கள், மகான் இங்கு இருப்பதால் தரிசிக்க வந்திருக்கிறார்கள்.

மகானின் எண்ணப்படி, குருபக்தியில் சிறந்த இருவரைப் பற்றியும் எடுத்துச் சொல்லி, “இதை ஒலிபரப்ப முடியுமா? “ என்று அவர்களிடம் கேட்டார் ஏகாம்பரம்.

“இது எங்களுக்குக் கிடைத்த பெரும்பேறு. உடனே அதற்கான ஏற்பாடு செய்கிறோம். இப்படி ஒரு நல்ல காரியத்துக்கு எங்களை உபயோகப்படுத்த மகான் நினைத்தது பெரும் பாக்கியம்“ என்று சொன்னவர்கள், அன்றே அதை ஒலிபரப்பவும் செய்தனர்.

பிரம்ம ஞானிகள் நினைத்தது நடக்கும் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையா ?

source::::www.periva.proboards.com

natarajan
Read more: http://www.periva.proboards.com/thread/3685/when-impossible#ixzz2x3evbLba