Message For the Day….” Is there a Way to Escape from ‘karma’…” ?

Scholars say, it is impossible to escape karma. What they say is true to a certain extent. Now, you may wonder if there is a way to escape from the consequences of karma. Yes, it is possible for everyone, if they ‘earn’ the grace of God. Once you deserve and receive God’s grace, you will not be affected by karmaphala (consequences ofKarma). Hence, strive to earn divine grace. When you earn Divine grace, even if you have to experience the consequences of karma,you will not feel the pain. Consider the example of a bottle with medicine. The medicine will have an expiry date. After the expiry date, the medicine will lose its potency. Likewise, God’s grace will make the karmaphala ‘expire’, and nullify the effects of karma. The most important aspect here is to ‘deserve’ His Grace. You must cultivate necessary strength and willpower to deserve divine grace, and be free from the shackles of karma.   

Sathya Sai Baba

படித்து வியந்தது ….”தெய்வத்தின் நிழல் ரா.கணபதி”….

1935 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியில் பிறந்து 2012ஆம் வருடம் பிப்ரவரியில் சிவராத்திரியன்று மஹா பெரியவருடன் சங்கமமான ரா.கணபதியைப் பார்த்தால் 35 புத்தகங்கள்

எழுதியவர் போல் தெரியாது. எலும்பும் தோலுமாய் இருப்பார். சிறு வயதில் பிடித்த காச நோயின் வடு இறுதிவரை இருந்தது. பேசிக்கொண்டே இருப்பார். திடீரென்று மெளனத்திற்குப் போய் விடுவார். அப்படி இருந்ததால் தான் அவர் எழுத்தும் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும். ஆரியாம்பாள் இறப்பின் போது சங்கரர் பட்ட துயரத்தை இவர் வர்ணித்ததை அறிஞர் அண்ணா ரொம்பப் பாராட்டினாராம். அவர் தாயாரும் அந்தச் சமயத்தில் மறைந்ததால் அவர் மன நிலையும் அப்படி இருந்ததாகச் சொன்னாராம்.

இடை இடையே கர்நாடக கீர்த்தனைகளையும் பஜனைப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

பெரியவர் கட்டளைப் படிதான் ஆதி சங்கரர் வரலாற்றையும் கணபதி எழுதினார். இவருடைய “ஜய ஜய சங்கர’ தொடர் கல்கியில் 1962ஆம் ஆண்டு வெளிவந்தது. 10 ஆண்டுகள் கல்கியில் பணிபுரிந்தார். mail நாளேட்டில் கொஞ்சம் காலம். 25 ஆண்டுகள் எந்தப் பத்திரிகையையும் சாராமல் எழுதினார். புட்டபர்த்தியில் தங்கலாம் என்று சென்ற போது ஸ்ரீ சாய் பாபா “”உன் வேலை இங்கே இல்லை. தெய்வத்தின் குரல் எழுது. அதுவே உன் பிறவிப் பணி” என்றாராம்.

பல புத்தகங்கள் எழுதியிருந்தாலும், சத்ய சாய்பாபா பற்றி, ஸ்ரீ ராம கிருஷ்ணர் – ஸ்வாமி விவேகானந்தர், ஸ்ரீ சாரதா தேவி பற்றி, மீரா பாய், பகவான் ரமணர் பற்றி என்று பல மஹான்களைப் பற்றி அவர் எழுதியிருந்தாலும் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவர் உபன்யாசங்களையும், சம்பாஷணைகளையும் தொகுத்து அவர் ஏழு புத்தகங்களாக வானதி பதிப்பகம் மூலம் கொண்டு வந்த “தெய்வத்தின் குரல்’ தான் அவர் எழுத்துக்களுக்கு மகுடம் போல் திகழ்கிறது. “தெய்வத்தின் குரல்’தொகுப்பிற்காக ரா.க. ரொம்பவே சிரமப்பட வேண்டியிருந்தது. காரணம் பெரியவர் ஒரு விஷயத்தை ஓர் இடத்தில் ஆரம்பிப்பார். வேறு இடத்தில் முடிப்பார். ஒவ்வொரு விஷயத்தையும் அலசும்போது முன்னர் விட்டுப் போன விளக்கங்களை வேறு இடத்தில் சொல்வார். கணபதி அனைத்தையும் செவிமடுத்துக் கேட்டு சந்தேகம் இருந்தால் வேறு புத்தகங்களையோ நபர்களையோ பார்த்துத் தெரிந்து கொண்டு அப்படியும் குழப்பம் இருந்தால் பெரியவரிடமே கேட்டு குறிப்பு எடுத்துக் கொள்வார். அதுவும் பெரியவரின் சம்பாஷணைப் பாணியிலேயே இவரும் குறிப்பு எடுத்து எழுதினார். அந்த நூல் “ஸ்ர்ண்ஸ்ரீங் ர்ச் ஞ்ர்க்’ என்று ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் (ஹிந்தியில் மூன்று தொகுப்புகள் வந்துள்ளன) மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன் போன்றவர்கள் அந்த நூலை “ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி உபநிடதம்’ என்று புகழ்ந்திருக்கிறார்கள்.

மஹா பெரியவர் மிகச் சில சமயங்களில் ஆன்மீகம் தவிர இதர விஷயங்களைப் பேசியதும் உண்டு. அந்த நேரங்களில் ஹாஸ்ய நொடிகளும் உண்டு. அதிலும் பலப் பல விஷயங்கள் வெளி வரும் என்பார் கணபதி. அவரே பெரியவரை சமயம் வாய்த்தபோது ஒருமுறை “”ஏன் உங்களை பெரியவான்னு கூப்பிடறா” என்று கேட்டாராம். அவர் நமுட்டுச் சிரிப்புடன் “”பெரிய வாய். ஓயாம பேசறேன் இல்லயா, அதனாலோ என்னவோ” என்றாராம். “”இல்லை. மஹா வாக்கியங்களை உபதேசம் பண்ற வாய்”என்றார் இவர்.

“”சரி அப்ப ஏன் பெரியவாள்னு சொல்றா” என்று பீடாதிபதி கேட்டதற்கு “”எங்க காம க்ரோதத்தை நீங்க வாளால் அறுத்து எரியறதாலே” என்று சட்டென்று கணபதி சொன்னாராம். தான் சார்ந்துள்ள “காமகோடி’ என்கிற பீடத்திற்கான பெயர்ப் பொருத்தத்தைப் பெரியவர் ஒருமுறை சொன்னாராம். “”காமகோடின்னா தர்மார்த்த காமகோடின்னுஅர்த்தம். காமத்தின் கோடியிலே என்ன இருக்கும்? மோஷம்”என்றாராம்.

ரா.கணபதியின் “மைத்ரீம் பஜத’ புத்தகத்திலிருந்து மஹா பெரியவர் சம்பந்தமான ஒரு சம்பவம்: சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியில் ஸ்ரீ மஹா பெரியவர் முகாமிட்டிருந்த சமயம். ஒரு சின்ன பெண் ஸ்ரீ ராம ஜயம் எழுதிய நோட்டு கொடுத்து வெள்ளிக் காசு பெரியவரிடம் கேட்டது. அப்போது ஒரு லட்சம் நாமம் எழுதினால் தங்கக் காசும் 12,500 எழுதினால் வெள்ளிக் காசும் பெரியவர் தந்த சமயம். வெள்ளிக் காசு கேட்டவுடன் மலர்ந்த முகத்துடன் நோட்டை வாங்கிக் கொண்டு காசு கொடுத்து அனுப்பினார். சற்று நேரத்திலேயே கண்ணைக் கசக்கிக் கொண்டு அவள் திரும்ப இவரிடம் வந்து நின்றாள். “”காசு எங்கேயோ தொலைந்து போய்விட்டது” என்று அழுதாள்.

“”நீ எவ்வளவு எழுதினாய்” என்று பெரியவர் கேட்டார்.

“”8,500 நாமம் எழுதினேன்”.

“”பின்னே ஏன் 12,500 எழுதினது போல் வெள்ளிக் காசு கேட்டாய்?”

“”பொய் சொன்னேன்”.

“”அது தப்பு இல்லயா, அப்படிச் செய்யலாமா?”

என்று அவளைக் கேட்டவர் அங்கிருந்த பக்தர்களைக் கேட்டார்.

“”இந்தச் சிறுமி பாவம் அறியாமல் 12,500 ராம நாமாக்களுக்குப் பதில் 8,500 நாமா எழுதியுள்ளது.  இன்னொரு 4,000 நாமா குறைகிறது. நீங்க எழுதி சரி செய்ய முடியுமா”?

அங்கேயே கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் தாளும் எழுது கோலும் வழங்கப்பட்டன. 4000 பூர்த்தியானதும் அந்தச் சிறுமியிடம் அவர் சொன்னார்:

“”நீ 8500 தான் எழுதினதா நிஜத்தைச் சொன்னதால இவங்களை வெச்சு மீதியை எழுதிட்டேன். கணக்கு சரியாப் போயிடுத்து. வெள்ளிக் காசு தரலாம்னாலும் நீ உண்மையைச் சொன்னதுக்கு உனக்கு தங்கக் காசே தரேன்” என்று தங்கம் எடுத்துக் கொடுத்தார்.

என்ன அற்புதமான பேரம் பாருங்கள். சிறுமி செய்த தவறுக்குப் பரிகாரமாக 4000 நாமம் எழுதும் புண்ணியம் பக்தர்களுக்கு. தவறை ஒப்புக் கொண்டதால் சிறுமிக்கு வெள்ளிக்குப் பதில் தங்கக் காசு கருணா சாகரம் என்று இதனால் தான் அவருக்குப் பெயரோ?

“கருணைக் கடலில் சில அலைகள்’ என்ற அவர் புத்தகத்திலிருந்து இன்னொரு சம்பவம்: ஓர் இளைஞன் “”தான் படித்து இரண்டரை வருஷம் ஆகியும் வேலை கிடைக்கலை,

ஏழ்மையான குடும்பம், சகோதரி வேறு கல்யாணத்திற்கு நிற்கிறாள், எல்லோரும் அவனை  “தண்டச் சோறு’ என்று திட்டுகிறார்கள்” என்று சொல்லி அவரிடம் அழுதான்.

அவனைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு தன் முக்கிய பணிகளை அவர் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு வாரியத்தின் மேற்பார்வைப் பொறியாளராக இருந்த ஓர் அதிகாரி தரிசனத்திற்கு வந்தார். அவரிடம்

மஹா பெரியவர் தன் துறவுக் கோலைச்சுட்டிக் காட்டி “”இந்த தண்டத்துக்கு ஒரு வேலை போட்டுத் தருவீங்களா” என்று கேட்க அவர் அதிர்கிறார். “”ரெண்டரை வருஷம் ஆச்சாம். வேலை கிடைக்கலையாம். படிச்ச பையன். ஏழ்மையான குடும்பம். ஒரு வேலை கிடைக்குமா? எல்லாரும் அவனை தண்டம்னு திட்டறாங்களாம்”.

“”உத்தரவு பெரியவா”.

அந்த இளைஞனைக் கூப்பிட்டு அந்த சந்தோஷ செய்தியைச் சொல்லியபடி தன் துறவுக் கோலை சுவரில் சார்த்துகிறார். “”உம். ஒரு தண்டத்துக்கு வேலை கிடைச்சாச்சு.

இன்னொரு தண்டம் பார்த்துக் கொடுத்திருக்கு. தண்டம் தான் எங்களுக்கு ரக்ûக்ஷ. ப்ரஹ்மசாரிகளுக்கும் தண்டம் ரக்ûக்ஷ. ராஜ தண்டத்துக்கு அடங்கித் தான் நீதி, நியாயம்.

இந்த லோகத்திலே எதுவும் தண்டமில்லை” என்று திருவாய் மலர்ந்தருளினார் பெரியவர்.

ரா.கணபதியின் ஏழாவது “தெய்வத்தின் குரல்’ தொகுப்பை மஹா பெரியவர் பார்க்கவில்லை. அது வெளி வந்த ஆண்டு 2000. அதற்குப் பிறகு இரண்டு தொகுப்புகளுக்கு கணபதியிடம் விஷயம் இருந்ததாம். “ஆனால் என் புத்தியில் இருந்து எழுத வெச்ச பேய் மலை ஏறிடுத்து. என்னாலே இனி எழுத முடியாது” என்று நிறுத்திக் கொண்டுவிட்டார். “”அது என்னவோ வந்து ஆட்டம் காட்டிட்டுப் போயிட்டா பெரியவா” என்று மஹாசுவாமிகளின் வாழ்க்கையைப் பற்றி முத்தாய்ப்பாய் சொல்கிறார் ரா.க.

ஆட்டம் போட்டது பெரியவர் மட்டுமா? ரா.கணபதியும் தான்.

source…..ஸ்ரீதர் சாமா in http://www.dinamani.com

Natarajan

Message for the Day…” Scripture [ shastra] is like a Mother; She does not Giveup…”

People yield to delusion and become one with the darkness caused by false values and attachment to the unreal, the ‘me’ and ‘mine’. But the scripture (Shastra) is like a mother; she does not give up. She persists and pursues; she reminds you of your goal so that you will be saved. The scriptures are to be considered as the cause of the awareness of the incomprehensible, immeasurable and inexpressible Brahman. The scriptures are numberless, and a lifetime is too short. Aspirants are plenty; doubts and hesitations are numerous; steadfastness is meager. As a result, no one can claim full mastery. But you need not drink the entire ocean to know its taste; one drop is enough. Similarly, it is impossible to understand all the contents of the scriptures. But it is enough to grasp the important lesson that it teaches and put it into practice. The lesson is: constant remembrance of the Divine.

Sathya Sai Baba

படித்ததில் பிடித்தது …”ஒன்றை இழக்காமல் மற்றொன்றை அடைய முடியாது …”!!!

ஒன்றை இழக்காமல், மற்றொன்றை அடைய முடியாது என்பர். இது தெரிந்திருந்தும், கையில் உள்ளதை இழக்க விரும்பாமலும், அதேசமயம் எதிர்பார்ப்பை விட முடியாமலும், மனித மனம் அல்லாடுகிறது. ஆனால், யாருக்கு எதை, எப்போது தர வேண்டும் என்பது கடவுளுக்கு தெரியும்.


வயது முதிர்ந்த ஒருவர், வாத நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அது, குணமாவதற்காக குருவாயூர் சென்று, 48 நாட்கள் விரதமிருப்பதாக வேண்டி, பக்தியோடு குருவாயூரப்பனை வழிபட்டு வந்தார்.
தினமும் மூன்று வேளை குளத்தில் குளிப்பதும், குருவாயூரப்பனைத் தரிசனம் செய்வதுமாக இருந்தார். அவ்வாறு அவர் குளத்தில் குளிக்கும்போது, தன் சேமிப்பு பணமான, 2,000 ரூபாயை ஒரு துணியில் மூட்டையாக கட்டி, கரையில் வைத்து விட்டுக் குளிப்பார்.
அவர், எட்டு வயது சிறுவனை தன் உதவிக்காக வைத்திருந்தார். அவன், இப்பெரியவரை அழைத்துச் சென்று குளிக்க வைத்து, சாமி தரிசனமும் செய்ய வைப்பான். அதற்காக, அவனுக்குச் சம்பளமும் உண்டு. அப்பையனும், தன் கடமைகளை ஒழுங்காக செய்து வந்தான்.
கடைசி நாளான, 48வது நாள், தன் பண மூட்டையைக் கரையில் வைத்து, சிறுவனைக் காவலுக்கு இருக்கச் செய்து, குளத்தில் மூழ்கினார் பெரியவர். அவர் மனதில் ஏமாற்ற உணர்ச்சி ஏற்பட்டு, ‘என்ன குருவாயூர் இது… ஒரு மண்டலமாக விரதம் இருந்து வழிபாடு செய்றேன்; துளிக்கூட முன்னேற்றம் இல்ல. சரியாக நடக்க கூட முடியலயே…’ என்று வெறுப்போடு மூழ்கி எழுந்தார்.
அதே நேரம், கரையில் பண மூட்டைக்குக் காவலாக இருந்த பையன், பண மூட்டையை தூக்கியபடி ஓடத் துவங்கினான்.

டேய்… திருடன் திருடன்…’ என்று கத்தியவாறு, அவனைத் துரத்தினார் முதியவர்.
பையன் ஓட, பின்னாலேயே முதியவர் ஓட, இருவருமாக மூன்று முறை கோவிலை வலம் வந்தனர். அதன்பின், கோவிலுக்குள் நுழைந்து, கொடிமரத்தைக் கடந்து, கருவறைக்குள் மறைந்த சிறுவன், குருவாயூரப்பனாக தரிசனம் தந்தார்.
திகைத்துப் போன முதியவர், ‘குருவாயூரப்பா… என்ன நியாயம் இது… என் வாத நோயையும் குணமாக்கல; பணத்தையும் கொள்ளையடிச் சுட்டீங்களே..’ என்று கண்ணீர் விட்டார்.
உடனே, குருவாயூரப்பன், ‘பக்தா… உன் நோயை தீர்க்கவில்லை என்றால், நீ, எப்படி இவ்வளவு தூரம் என்னைத் துரத்தி ஓடி வந்திருக்க முடியும்…’ என்றார்.
முதியவருக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. தன் வாதநோய் குணமாகி, கால்கள் நன்றாக இருப்பதை உணர்ந்தார். ஆனாலும், தன் பண மூட்டை போனது வருத்தத்தை கொடுத்ததால், ‘பகவானே… என் கால்கள் குணமாகி விட்டது; ஆனால், என் பணம் போய் விட்டதே…’ என்றார்.
‘நீ ரோகம் போய், ஆரோக்கியம் வேண்டுமென்று கேட்டாய்; ஆரோக்கியம் கொடுத்தேன். உன்னைப் போலவே, ஓர் ஏழை, தன் மகள் திருமணத்திற்குப் பணம் வேண்டுமென்று, என்னை வேண்டிக் காத்திருந்தான். உன் பணத்தை, அவனிடம் கொடுத்தேன்…’ என்றார் பகவான். உண்மையை உணர்ந்தார் முதியவர்.
இறைவனுக்குத் தெரியும். யாருக்கு, எப்போது, எதைக் கொடுக்க வேண்டுமோ, அப்போது அதைக் கொடுப்பார். அதனால், இறைவனை நினைப்போம்; இன்னல்கள் விலகி, சுகமாக இருப்போம்!
திருமந்திரம்!
சன் மார்க்கச் சற்குரு சந்நிதி பொய்வரின்
நன் மார்க்கமும் குன்றி ஞானமும் தங்காது
தொன் மார்க்கம் மாய துறையும் மறந்திட்டுப்
பன் மார்க்கமும் கெட்டுப் பஞ்சமும் ஆமே
கருத்து: ஞானத்தைப் போதிக்கும் சத்குருவின் முன் பொய் சொல்லக் கூடாது. சொன்னால், அதுவரை, குருநாதர் காட்டிய நல்வழியெல்லாம் குன்றி, ஞானமும் தங்காது. குருவை அடைவதற்கு முன், ஏதேனும் நல்வழியை அறிந்திருந்தாலும், அதுவும் மறைந்து விடும். வழி தெரியாமல், பல திசைகளிலும் திகைப்பே மிஞ்சும். வறுமை, தானே வந்து சேரும்.

Source…..பி.என்.பரசுராமன்  in http://www.dinamalar.com

Natarajan

Message For the Day….”Value and Significance of Image Worship”

Many people slander image worship, but its basis is really one’s capacity to see the macrocosm in the microcosm. The value of image worship is testified by experience; it doesn’t depend on one’s imaginative faculty. What is found in the form of the Lord (Virat-swarupa) is also found, undiminished and unalloyed, in the image form (Swarupa). Images serve the same purpose as metaphors and similes in poetry. They illustrate, amplify, and clarify. Joy comes not through the shape of things but through the relationship established. Not any child but her child makes the mother happy. So it is with each one and all things! With each and every thing in the universe, if one establishes that kinship, that Godly love(Iswara prema), then truly an overpowering joy can be experienced! Only those who have felt it can understand.

Sathya Sai Baba

Message For the Day…” Experience the God in His Natural Form, Natural Manner…”

God is omnipresent and is within you. The primary requisite to find Him within you is having pure and selfless love. Chant His Name with love. All living beings are bound by karma in this world. God loves the human form. Hence Avatars come in human form. You can experience His vision by following your duties (Karma marga), as declared in Bhagavad Gita. The Divine is being worshipped as a decorated idol or image, with an artificial form. You should experience the Lord in His natural form, in a natural manner. All the ornamentation a devotee resorts to does not please God. It may please the heart of other devotees, but God’s heart is not moved thereby. Only through love can God’s heart be moved and softened. Every devotee has that power. Instead of resorting to extravagant adulation of God or seeking petty favors from God, yearn for God alone and you will get everything. Endeavour to make God your intimate friend.

Sathya Sai Baba

 

Message For the Day…” I am the Doer “…Should be Rooted out From Your Heart…”

For this universal ailment of the cycle of birth and death (bhava-roga),listening to spiritual discourses (sravana) and singing God’s name(kirtana) is a mandatory prescription. God’s Name, Vedas and Puranas must be recited and listened to. Performing all these, if you do not awaken your own inner consciousness (antah-karana), you will fall into perdition. Hence, to attain God’s Grace, the feeling of ‘I-ness’ (ahamkara),which makes you say, “I am the doer”, should be rooted out from your heart. Everyone learned or illiterate, should feel an overwhelming urge to know God. God has equal affection toward all His children, for to illumine is the nature of light. So too, uttering God’s name, one can progress in the realisation of God, another may perhaps do wicked deeds! It depends on your usage of the light. Remember – the Lord’s name is without blemish, always and forever.

Sathya Sai Baba

” பெருமாள் கவுண்டர் சௌக்யமா இருக்காரா …” ?

18698_10153209347029244_3030028360467212073_n.jpg

“வயது கூடக் கூட ஞாபகசக்தி குறையுதே’ என்பவர்கள் பலர். ஆனால், காஞ்சி மகா பெரியவரின் ஞாபகசக்திக்கு அளவே இல்லை.

1928… மேட்டூர் அருகேயுள்ள நெருஞ்சிப்பேட்டை கிராமத்தில் மகாபெரியவர் முகாமிட்டு இருந்தார். பக்தர்கள் அவர் முன்னால் அமர்ந்திருந்தனர். அப்போது எங்கிருந்தோ “கோவிந்த கோவிந்த…’ என்ற கோஷம் காற்றில் மிதந்து வந்தது. “”இந்த சப்தம் எங்கிருந்து வருகிறது?” எனக்கேட்டார் பெரியவர்.

“”பக்கத்தில் பாலமலைன்னு ஒரு இடம்… அதன் உச்சியில் சித்தேஸ்வரர் கோயில் இருக்கு! அங்கு ஏறும் பக்தர்கள் தான் இப்படி கோஷமிடுவார்கள்,” என்றார் ஒருவர்.

“”சிவன் கோயிலில் கோவிந்த கோஷமா.. ஆச்சரியமா இருக்கே! நானும் அந்தக் கோயிலுக்கு போகணும்!” என்றார் பெரியவர்.

“”அந்த மலையில் ஏற வேண்டுமானால் 12 மைல் (18 கி.மீ.,) நடக்கணும். வழித்துணைக்கு ஆள் வேணும்,” என்ற ஒரு பக்தர், அங்கு வழிகாட்டியாக இருந்த பெருமாள் கவுண்டர் என்பவரை அழைத்து வந்தார்.

கவுண்டருக்கு அப்போது 25 வயதிருக்கும்.கவுண்டர் வழிகாட்ட பெரியவர் ஆர்வமாக மலையேறி சித்தேஸ்வரரை தரிசித்தார்.

“”நீங்க வேணுமானா பாருங்க! இந்த சித்தேஸ்வரருக்கு ஒருத்தர் தன் சொந்தச் செலவில் கோயில் கட்டுவார். இது நடக்கும்,” என்று தன்னுடன் வந்த பக்தர்களிடம் சொன்னார் பெரியவர்.

ஆனால், ஆண்டுகள் வேகமாக ஓடி விட்டது. 62 ஆண்டுகள் சென்ற பின் 1990ல் சேட் ஒருவர் சித்தேஸ்வரரைத் தரிசிக்க வந்தார். அவரே கோயில் கட்டி கும்பாபிஷேகமும் செய்து வைத்தார்.

மேட்டூர் அணைக்கு வந்த பெரியவர், “”அடியிலே பொக்கிஷம்’ என்று சொன்னார்.

அங்கிருந்தவர்களுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. அதற்கான விளக்கமும் யாரும் கேட்கவில்லை. 70 வருடங்கள் கழித்து, அணையில் சில பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டது. உள்ளிருந்து அனுமன், ராமன், சீதா சிலைகள் கிடைத்தன. அப்போது தான் பெரியவர் சொன்னதன் அர்த்தம் ஊர் மக்களுக்கு புரிந்தது. சிலைகளை ஒரு மினிலாரியில் ஏற்றி காஞ்சிபுரத்துக்கு கொண்டு வந்தனர்.

அவற்றை பார்வையிட்ட பெரியவரிடம், “”இந்தச் சிலைகளைக் கொண்டு நாங்கள் கோயில் கட்ட தங்கள் ஆசிர்வாதம் வேண்டும்,” என்றனர். “விரைவில் நடக்கும்’ என ஆசிர்வதித்த பெரியவர், “”அது சரி…உங்க ஊருக்கு நான் 1928ல் வந்த போது, எனக்கு வழிகாட்டினாரே பெருமாள் கவுண்டர்…அவர் சவுகரியமா இருக்காரா!” என்று கேட்டார்.

வந்தவர்கள் சிலிர்த்துப் போனார்கள். நேற்று பார்த்த ஒருவரையே மறந்து விடும் இந்தக் காலத்தில், 70 வருடம் கழிந்தும் தன்னோடு வந்த வழிகாட்டியை பற்றி விசாரித்தது அவர்களுக்கு ஆச்சரியமளித்தது.

“”அவருக்கு 95 வயசாச்சு! இன்னும் நல்லாஇருக்கார்,” என்று அவர்கள் சொல்லவே, ஒரு தாம்பாளத்தில் புதுவஸ்திரங்கள் வைத்து, இதை அவரிடம் கொடுத்துடுங்கோ! நான் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்கோ” என்றார் பெரியவர்.

மகாபெரியவரின் கருணைக்கும், ஞாபகசக்திக்கும் ஈடு இணையே இல்லை…

Source……..www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/9055/#ixzz3Y32c4shA

Message For the Day….” Without Divinity there is no Bliss or Joy…”

Fix your faith firmly in the Lord and not on the things of the world. When you have strong faith in the Lord, your discrimination will be perfect. You will be guided by your Conscience, which will always lead you properly. In vedantic parlance, the Conscience is called‘Chit’. God is ‘Sat-Chit-Ananda’. Sat means Being, Chit means Awareness. When and where these two are combined, there is Bliss. This is the meaning of the divine name, BABA – Being +Awareness Bliss + Atma. All of you are aspirants of bliss. You must enjoy uninterrupted bliss. To attain that Ananda (Bliss), you must combine Sat (Being) and Chit (Awareness). Without Divinity, there is no bliss or joy. Hence always think of Him, Live in His presence.

Sathya Sai Baba

” ஹனுமான் பலமும் பாகவதர் பாரமும் …” !!!

ஜூன் 12 காஞ்சிப்பெரியவர் ஜெயந்தி

காஞ்சிப்பெரியவர் வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். அவரது அவதார நாளை ஒட்டி, அவர் நிகழ்த்திய நகைச்சுவை சம்பவம் ஒன்றை அறிவோமா!
கும்பகோணம் சிவாலயம் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள காஞ்சிப்பெரியவர் வந்திருந்தார். கும்பாபிஷேகம் முடிந்த கையோடு, மற்ற சிவத்தலங்களுக்குச் சென்று விட்டு மாலையில் மடத்திற்கு திரும்பினார். அந்த சமயத்தில் மடத்தில் பாகவதர் ஒருவர் ராமாயண உபன்யாசம் செய்து வந்தார்.

வாட்டசாட்டமான தோற்றமும், சிவப்பு நிறமும் கொண்ட பாகவதர், தனது அந்தஸ்தை பறை சாற்றிக் கொள்ளும் விதத்தில் வைரக்கடுக்கண், பத்து விரலிலும் தங்க மோதிரம், கழுத்தில் தொடங்கி வயிறு வரை அடுக்கடுக்காய் தங்கச் சங்கிலிகள், நான்கு விரல் கட்டை ஜரிகையுடன் பட்டு வேஷ்டி, அங்க வஸ்திரம், இடுப்பில் பச்சைத் துண்டு, சிரித்தால் தெரியும் தங்கப்பல், வெற்றிலை போட்டுச் சிவந்த வாய் என படாடோபமாக இருந்தார். போதாக்குறைக்கு தான் பேசும் போது கை தட்ட பத்து “ஜால்ராக்களையும்’
அழைத்து வந்திருந்தார்.

பெரியவரும் உபன்யாசம் கேட்க வருகிறார் என்பதை அறிந்த பக்தர்கள் திரளாக கூடினர். பெரியவர் அமர்ந்திருக்க, பாகவதர் உபன்யாசத்தை தொடங்கினார். அன்றைய தினம் அனுமன் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு வந்த விதத்தை விவரித்தார். ஜால்ராக்கள் தேவையில்லாத இடத்தில் கூட கை தட்டினர். அந்தளவு அவர் ஒரு புகழ் விரும்பி.
பேச்சின் இடையே அவ்வப்போது, “ம்ஹும்…ம்ஹும்…’ என்று பெருமூச்சுவிட்டபடி, முக்கி முனங்கினார் பாகவதர். பேச்சைக் கேட்டவர்களுக்கு இது மிகவும் சங்கடமாக இருந்தது. உபன்யாசம் முடியவும், பெரியவரை அருளுரை வழங்கும்படி விழாக்குழுவினர் கேட்டுக் கொள்ள, “பெரியவர் என்ன சொல்லப் போகிறார் என கேட்க பக்தர்கள் காத்திருந்தனர். ஏன்… பாகவதரும் கூடத் தான்!

பெரியவர் ஆசியுரை வழங்கும் போது, பாகவதரின் உபன்யாசம் பற்றியும் பேசினார்.

“”பாகவதர் ஆஞ்சநேயரின் பலம் பற்றி நமக்கெல்லாம் எடுத்துச் சொன்னார். சந்தோஷம் தான்…. ஒண்டி ஆளா சஞ்சீவி பர்வதத்தை தூக்கின போது கூட அவர் இப்படி முக்கி முனங்கினாரோ தெரியல…. ஆனா, பாகவதர் வரிக்கு வரி முக்கி முனங்கியது தான் ஏன்னே புரியலை! ஒருவேளை அவர் போட்டிருக்கிற வைர, தங்க நகைகளின் பாரத்தை சுமக்க முடியாமல் தான் இப்படி முக்கி முனங்கினாரோ என்னவோ….” என்று நகைச்சுவையுடன் சொல்ல பாகவதர் தலை குனிந்து கொண்டார்.

இதைக் கண்ட பெரியவர், “”மரக்கிளை உச்சில தேனெடுக்கிறப்போ, எடுப்பவரை தேனீக்கள் கொட்டுவதுண்டு. ஆனா, தேன் கிடைக்கிற ஆசையில அதை தாங்கிப்போம். அது மாதிரி, பாகவதரின் உபன்யாசத்தைக் கேட்கிறப்போ, இந்த சின்ன குறைபாட்டையும் நாமும் பெரிசா எடுத்துக்க வேண்டியதில்லை,” என்று அவரது சொற்பொழிவு நன்றாக இருந்தது பற்றியும் சொல்லி முடித்தார்.

Read more: http://periva.proboards.com/thread/7480/#ixzz3XqoTQ97p

Source……www.periva.proboards.com

Natarajan