அகிலம் எல்லாம் மதுரம் ….

கோவிந்தனின் சிறப்பைக் குலசேகர ஆழ்வார், திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிட்டுள்ளார். செடி போல கிளைத்துக் கிளம்பும் என் வினைகளை திருமாலே நீ தீர்த்து விடுகிறாய். நெடியவன் அவன் வேங்கடவன். அவனுடைய கோயில் வாசலில் வானுலகத்தினர் இங்கும் அங்கும் நடமாடித் திரிவார்கள். இப்படியாகத் திருமாலை புகழ்ந்து சொல்லிக்கொண்டே போகிறார் குலசேகர ஆழ்வார். குருவினை அறியும் உத்தியையும் சொல்லித் தருகிறார். இப்பாசுரத்தின் கடைவரியில் பவளவாய் காண்பதாகக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

திருமாலின் அவயத்தில் அகிலம் எல்லாம் மதுரம். கால் அழகு, விரல் அழகு, இடுப்பழகு, சங்கு, சக்கரம், கதை ஏந்திய கைகள் அழகு. தோள் அழகு, தொண்டையும் அழகு. இரு கன்னமும், கண்களும் அழகோ அழகு. நுதல் அழகு, சுருள் கேசமும் மகுடமும் அழகு. இவற்றையெல்லாம் இப்பாசுரத்தில் குறிப்பிடாமல், “ பவளவாய்” காண்பேனே என்று சொன்னதற்கு ஏதேனும் முக்கியக் காரணம் இருக்க வேண்டும். ஆழ்வார்கள் என்றாலே எம்பெருமானை ஆழ்ந்து சிந்திப்பவர்கள்.

பகவான் இவ்வுலகில் உள்ளவர்கள் எல்லோரும் உய்ய வேண்டும் என்பதற்காகக் கூறியது பகவத் கீதை. அதனை வெளிப்படுத்திய திருவாய் இதுதானே. எனவே பவள வாய் காண்பேனே என்றார். திருவாய் மலர்ந்து பகவான் சொன்னது:

சர்வ தர்மான் பரித்யஜ்ய

மாமேகம் சரணம் விரஜ

அகம்த்வா சர்வ பாபேப்யோ

மோஷயிஷ்யாமி மாசுக

இதில் ‘மாசுக’ என்றால் வருந்தாதே என்று பொருள். இதோ இந்தப் பவளவாயால்தானே இதனைச் சொன்னாய். அதனால் காண்பேனே! ஏதோ நாமெல்லாம் திருமலையில் பகவானைக் கண்டும் காணாமலும் தரிசித்து வெளியேறிவிடுகிறோம். நாம் என்னத்தைக் கண்டோம் பவள வாயையும், மணக்கும் பன்னீர் வாயையும். ஆனால் குலசேகர ஆழ்வார் படியாய் கிடக்கின்றேன் என்கிறார். இவர் 24 மணிநேரமும், வாரத்தில் 7 நாட்களும், ஆண்டின் 365 நாட்களும் அங்கேயே கிடக்கிறார். அவ்வளவு நேரமும் அங்கேயே கிடந்தாலும் பவள வாய் மட்டும்தான் காண்பதாகச் சொல்கிறார்.

அவரோ ஆச்சார்யன். ஸ்ரீஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்தானே! அவருக்கு பகவான், தன் திருவாய் மலர்ந்து பொன்னும் பொருளுமா அளிக்க வேண்டும்? சாதாரண மக்களோ வீடு வேண்டும், வாசல் வேண்டும் என்று கோரிக்கை மனுக்களை பகவானுக்கு அனுப்பி, பதிலுக்கு அவரது வாய் பார்த்து நிற்கின்றனர். அப்படியென்றால் குலசேகர ஆழ்வாருக்கு என்ன தேவை? குருவருள்தான் தேவை. ஜோதிடத்தில் பிரபலமாகக் கூறப்படுவது, குரு பார்க்க கோடி நன்மை. அப்படியென்றால் குரு யார்?

வசுதேவ சுதம்தேவம் கம்ச சானூர மர்த்தனம்

தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

எனவே ஜகத்குருவானவன் கிருஷ்ணன். அவனே அனைவருக்கும் குல குருவாகும் தகுதி உடையவன். குலத்தைக் காக்கும் தெய்வம் எனவே குல தெய்வம். எப்படி? சந்தியாவந்தன சுலோகத்தில் ஒன்று,

ஆகாசம் பதிதம் தோயம்

யதா கச்சதி சாகரம்

சர்வ தேவ நமஸ்காரம்

கேசவம் பரிகச்சதி

கடைசி வரியைக் கவனிக்க வேண்டும். இதன் பொருள் கேசவனையே சாரும். எது கேசவனைச் சாரும். சர்வ தேவ நமஸ்காரம் – அனைத்து தேவதைகளுக்கும் செய்யப்படும் பிரார்த்தனை கேசவனைப் போய்ச் சேரும்.

அது எப்படி சுவாமி கேசவனைப் போய் சேரும் என்றால், முதல் இரு வரிகளின் பொருளைப் பார்க்க வேண்டும். அவ்வரிகளின் பொருள், வானத்திலிருந்து பெய்யும் மழையானது, பூமியில் வீழ்ந்தாலும் இறுதியில் கடலில்தான் போய் கலக்கிறது. அதுபோல, சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் பரிகச்சதி.

சிலருக்கு குல தெய்வம் எது என்று தெரியாது. இவர்கள் தங்கள் இல்லத்திலேயே வேங்கடவானுக்கு மாவிளக்குப் போட்டால் அவர்களுக்கே தெரியாத அவர்களின் குல தெய்வத்திற்கு அந்த வேண்டுதலை அனுப்பிவிடுவார் பெருமாள். இதனை செய்ய முறை உண்டு. இரு நுனி வாழை இலையிட்டு மாவிளக்குப் போடுவது போல வெண்பொங்கலை உருட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இதில் இரு நெய் விளக்கு ஏற்றி சிறிது நேரத்திற்குப் பிறகு படைக்க வேண்டும். விளக்கொளியை மலையேற்றிய பின் குடும்பத்தில் உள்ள அனைவரும் வெண்பொங்கலை பிரசாதமாக உட்கொள்வார்கள். இவ்வழக்கம் கிராமப்புறங்களில் இப்போதும் காணப்படுகிறது.

source::::  Article by  ராஜேஸ்வரி ஐயர்  in The Hindu ….TAMIL
NATARAJAN

” குலதெய்வம் பூஜை சரியா செய்கிறாயா ? “….

பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது.

இருந்தும் அந்த விவசாயி,சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.

பெரியவர் அவரிடம், குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார்.

குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர்.

சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”

ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.

உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?”

ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.”

அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.”

ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?”

அப்படித்தான் வெச்சுக்கோயேன்…”

என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”

நான் அப்படிச் சொல்லவே இல்லையே!”

அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!”

காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”

அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா… அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”

நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.

அவரும் ஒரு பத்து நாள் கழித்து, சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.

சபாஷ்… அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!

சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?”

அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே!”

அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.

சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது?” – என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். அது…?

ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.

அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”

– பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!

அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?

ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.

இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”

– பெரியவர் விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது.

இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால், அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.

நான் ஒன்றும் முட்டாளில்லை என்று அவர் வீராப்பா பேசி, நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.

இப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்துவர மாட்டாரே! அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய் விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலும் ஒரு வழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில், வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான் இம்மட்டில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். உடம்புக்கு உணவுப் பொருளால் சக்தி ஏற்படுவது போல், மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது.

ஒரு குலதெய்வத்தின் பின்னால், இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளது. குல தெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும் அதுதான் நிகழ்ந்தது.

எனக்கும் இந்தக் குலதெய்வ விஷயம் மனசுக்குள் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போனபோது என் பார்வையே மாறிப்போனது. அந்தக் கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும்போது, என் தாத்தன் தொட்ட தூண்.. என் தாத்தன் நின்று மூச்சுவிட்ட இடம்.. என் முப்பாட்டன், அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு.. அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை, அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா?
ஒன்று உறுதி. அந்தப் பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரகம்! இந்தக் குலதெய்வ விளக்கமும், இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று.

Article by ….Indira SoundraRajan
(நன்றி : தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

source::::www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/5975/kula-deivam-maha-perivas-explanation#ixzz2oYvdGOVk

Message For the Day…”Education Should also Purify Heart”…

True education means trying to manifest the inner divinity in man. How is this manifestation to be brought about? Students must receive education that illumines every aspect of life – the economic, the political, the moral, the spiritual and the physical, the mental and the social environment of man. It should not be confined to one specific sphere. Many students consider book knowledge as education. This gives them only superficial knowledge. They need practical knowledge which will enable them to lead righteous lives. Education should also result in the purification of the heart. Men and women must be taught to be sincere in thought, word and deed, as a mark of humanness. Students must also revere their parents at all times and promote the cause of social improvement. They must co-operate with all fellow-beings. These are the things all students should learn.

Sathya Sai Baba

In Homage to Uthradom Thirunal Marthanda Varma …

 

Uthradom Tirunal Marthanda Varma

Uthradom Tirunal Marthanda Varma

Kerala lost one of the last links with its royal past with the passing away of Uthradom Tirunal Marthanda Varma, head of the royal family of erstwhile Travancore, in the early hours of Monday.  16 Dec.2013.  . Mr. Varma, a witness to the transformation from imperial rule to a democratic polity, was a common presence in the social and cultural scene of the city.

He had stood guard over the age-old traditions, rites and rituals of Sree Padmanabhaswamy Temple ever since 1991, when he was anointed the trustee and “dasa” of the temple following the death of his elder brother and last sovereign of Travancore, Sree Chithira Tirunal Balarama Varma. Mr. Varma, born as the younger son of Maharani Sethuparvathi Bayi and Ravi Varma Koyi Thampuran on March 22, 1922, was educated in the Kowdiar Palace by a group of 14 tutors in various subjects. He later graduated from the then Travancore University with Economics, Politics and History as specialisations in 1943. He was the recipient of the Moncombu Aandi Iyer Gold Medal for the best student in Sanskrit.

 

 

source :::::Mahesh Krishnamurthy  in Sage of Kanchi Blog and Youtube and The Hindu

natarajan

” மார்கழி என்றால் …..”

 

“வைகறையின் செம்மை இனிது.

மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க.

உஷையை நாங்கள் தொழுகின்றோம்.

அவள் திரு.

அவள் விழிப்பு தருகின்றாள்.

தெளிவு தருகின்றாள்.

உயிர் தருகின்றாள்.

ஊக்கந் தருகின்றாள்.

அழகு தருகின்றாள்.

கவிதை தருகின்றாள்.”

– வைகறைப் பொழுதை வாழ்த்தும் பாரதியின் வார்த்தைகள் இவை.

வைகறை எப்போதும் அழகு; மார்கழியிலோ கூடுதல் அழகு; தமிழர் வாழ்வியலில் இன்னும் அழகு. முன்பனி, பின்பனி, நான்கு திசைகளில் வரும் வாடை, தென்றல், குடக்கு, குணக்கு என எல்லாவற்றையும் போற்றிய எம் மக்கள் பனிப் படலத்தைத் தன்மீது போர்த்திக்கொள்ளும் மார்கழியைக் கொண்டாடுவதுதான் எத்தனை அழகு?

மார்கழி என்றால், ‘முன்பே வந்து என்னை எழுப்புவேன் என்று சொன்னாயே, இன்னும் உறங்குகின்றாயோ, நாங்கள் முன்வந்து உன்னை எழுப்ப வேண்டியதாகியுள்ளதே, என்ன வினோதம் இது. பெருமாளை அத்தன் என்று அழைத்தாய் நீ, ஆனந்தன் என்று அழைத்தாய், அமுதன் என்று அழைத்தாய் நீ. இதெல்லாம் வெறும் வாய்ஜாலமோ. நீ இனி தூங்கிக்கொண்டே இருந்தால், உன் இரு கண்களும் மிக நீண்டு வளர்ந்துவிடும் எனும் அபாயத்தை மறந்துவிடாதே, விரைவில் நீராடிவிட்டு இறைவனை வழிபட வா’ என்று துயில் எழுப்பும் திருப்பாவை, திருவெம்பாவைக் கவிதைகள்.

மார்கழி என்றால், திருப்பாவை, திருவெம்பாவைக் கவிதைகளை அடாணா, பிலஹரி, வராளி, குந்தளவராளி, சங்கராபரணம், சிந்துபைரவி, தேஷ், பெஹாக் ராகங்களில் பாடிய எம்.எல்.வசந்தகுமாரியின் மறக்க முடியாத குரல். மார்கழி என்றால், கவிதையை ஆண்ட ஆண்டாள் பாசுரங்கள்.

மார்கழி என்றால், பாவை நோன்பு. மார்கழி என்றால், வீதிகள்தோறும் வெள்ளிக் கம்பளம் விரித்தது போன்று அரிசி மாவில் ஐந்து புள்ளி ஐந்து வரிசை, ஏழு புள்ளி ஏழு வரிசை, ஒன்பது புள்ளி ஒன்பது வரிசை என வளைந்து நெளியும் விதவிதமான கோலங்கள்.

மார்கழி என்றால், சூரிய விடியலுக்குக் காத்திராமல் அதற்கு முன்பே நீராடி விடியற்காலம் நான்கு மணிக்கே தொடங்கும் உஷ கால பூஜை. உஷ கால பூஜையில் வாசிக்கப்படும் பௌளி, பூபாளம்; காலை காலசந்தி பூஜையின்போது வாசிக்கப்படும் மலைய மாருதம், பிலஹரி, சாவேரி; சூரியன் உச்சியை அடையும் மத்திம காலத்தில் வாசிக்கப்படும் மத்தியமாவதி, சுருட்டி; உச்சிப் பொழுதிலிருந்து சூரியன் சாயுங்காலமான சாயரட்சை காலத்தில் வாசிக்கப்படும் கல்யாணி, பூர்விகல்யாணி; இரண்டாம் காலம், சுவாமி படுக்கைக்குச் செல்லும் முன் அர்த்தஜாம பூஜையில் வாசிக்கப்படும் நீதேனுகாலாம்பரி ராகங்கள்.

மார்கழி என்றால், முன்புறம் சுருட்டி, வாசமாலை, முகபடாம் போர்த்திய யானையின் அலங்காரம், எக்காளம், திருச்சீர்னம், டவுண்டி, நகரா என இசைக் கருவிகளின் இசையின் நடுவே மிதந்து வரும் சுவாமியின் வீதியுலா.

மார்கழி என்றால், இசை விழா.

மார்கழி என்றால், எதையும் கொண்டாடிப் பார்க்கும் எம் மக்களின் பண்பாட்டுச் சான்று.

மார்கழி என்றால், ஞாபகங்கள்.

மார்கழி போற்றுதும், மார்கழி போற்றுதும்!

source::::: தேனுகா  in The Hindu ….Tamil

natarajan

தேனுகா, கலை விமர்சகர், தொடர்புக்கு: dhenuga.srinivasan@gmail.com

படித்ததில் பிடித்தது …. “பெருமாளை துணைக்கு அழைப்பது ஏன் ?”

புரிந்தது  …..தெளிந்தது !!!

 

 
ஒரு துறவி தன் சீடனுடன் குடிலில் அமர்ந்திருந்தார்.
ஒரு குடும்பஸ்தர் வந்தார்.
“”சுவாமி! எனக்கு ஆயிரம் கடன்கள். பெண்ணுக்கு கல்யாணம் செய்ய வழியில்லை. உடல்நிலையும் சரியில்லை. இந்த பிரச்னை தீர யோசனை கூறுங்கள்…” என்று கேட்டார்.
“”அப்பனே! இதுவிதிப்பயன். மாற்றலாகாது. பெருமாள் நாமத்தை மனதார உச்சரி; கஷ்டங்களைக் குறைக்கலாம்,” என்றார் துறவி.
வந்தவர் விரக்தியாய் கேட்டார்.
“”உங்கள் கூற்றுப்படி, விதிப்படி தான் எல்லாம் நடக்குமென்றால், பெருமாளை துணைக்கு அழைப்பானேன்! அவன் நாமத்தை
சொல்லுவானேன்!”.
குரு சிரித்தார்.
“”மகனே! பெருமாள் கிருஷ்ணாவதாரம், ராமாவதாரம் எடுத்தார். மனிதரூபத்தில் இருந்தார். அவர் நினைத்தால் எல்லாவற்றையும் மாற்றியிருக்க முடியும். ஆனால், அதர்மத்தை நடக்க விட்டதும், பெரும் துன்பப் போராட்டத்திற்குப் பின், தர்மத்தை வெல்லச் செய்ததும். விதியின் வலிமையை உணர்த்துவதற்காகத் தான்! காய்ச்சல் வந்தால், மருந்து சாப்பிட்டு அதைக் குறைப்பது போலத்தான் விதியின் பாதை. அந்தப் பாதையை மாற்ற முடியாது. ஆனால், அதன் கடுமையை குறைக்கவே கடவுளிடம் வேண்டுகிறோம், புரிகிறதா!” என்றார்.
வந்தவருக்கு நன்றாய் புரிந்தது, மனம் தெளிந்தது

 

ஒரு பணக்காரரும், பரம ஏழையும் திருப்பதி சென்றனர். வேங்கடவன் அருள்வேண்டி தரிசனம் செய்தனர்.
அது திருவிழா காலம். எனவே, வழக்கமான கூட்டத்தை விட இரண்டரை மடங்கு கூட்டம்.
தரிசனம் முடித்த அவர்கள், லட்டுக்காக வரிசையில் காத்து நின்றனர். பணக்காரருக்கு நான்கு லட்டுகள் கிடைத்தது. ஏழையால் ஒன்றே ஒன்று தான் வாங்க முடிந்தது.
அவனுக்கு மிகவும் வருத்தம். மலைப்பாதையில் திரும்பி வரும் போது, ஒரு துறவியைச் சந்தித்தான்.
“”சுவாமி! செல்வந்தர்களால் எல்லாமே வாங்க முடிகிறது. ஏழையாய் பிறந்த பாவத்தால் என்னால், ஒரு லட்டு கூட அதிகமாக வாங்க முடியவில்லை,”. அவன் பரிதாபமாக சொன்னது கேட்டு, குரு சிரித்தார். அமைதியாய் பேசினார், “”மகனே! அந்த பணக்காரனுக்கு நாலு லட்டு கிடைத்திருக்கலாம். ஆனால், அவரால் துளிக்கூட உண்ண இயலாது. அவர் சர்க்கரை வியாதிக்காரர். ஆனாலும், அவர் அவற்றை வாங்கியது ஏன் தெரியுமா! தன் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்தளிக்க..! பக்தியின் நோக்கம் என்ன தெரியுமா?
பிறருக்கு பகிர்ந்தளித்தல் தான்! அவரவருக்கு கிடைப்பதில், எவ்வளவு முடியுமோ அவ்வளவை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். அது மட்டுமல்ல! இதிலே இன்னொரு தத்துவமும் புதைந்து கிடக்கிறது.
திருப்பதி லட்டு அமிர்தம் போல் சுவையானது. இதை யாருக்காவது சிறு துண்டு கொடுத்தால் கூட, இன்னொரு துண்டு கிடைக்காதா என ஏங்க வைக்கும். இறைவனின் கருணையும் அப்படித்தான்.
அவனது கருணை மழையில் சிறுதுளியாவது கிடைக்காதா என்றுதான், ஒவ்வொரு பக்தனும் ஏங்குகிறான்.
உனக்கு கிடைத்த இந்த ஒரு லட்டில் சிறு துண்டை, நீ எடுத்துக்கொள். மீதியை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடு. ஏழுமலையான் உன் வீட்டிற்கே வந்து விடுவான்,” என்றார்.
ஏழையின் மனம் தெளிந்தது.

source ::::Dinamalar …Tamil Daily

natarajan

படித்ததில் பிடித்தது …”காசி எங்கு இருக்கிறது ” ?

 

புண்டலிகன் என்பவன் “நாம் காசிக்கு போய் புண்யம் தேடிக்கொண்டால் என்ன?” “என்று முடிவெடுத்து, “அப்பனே எங்களையும் அழைத்து சென்றால் நாங்களும் காசியில் புண்யம் அடைவோமே” என்ற தாய் தந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு காசிக்கு புறப்பட்டவன் வழியில் ஒரு ஊரில் ஒரு முனிவரை சந்திக்கிறான். அவரது ஆஸ்ரமத்திலேயே தங்கவைக்கிறார் அவனை.
“சுவாமி நீங்கள் யாரோ?”
“குக்குடன் என்று அழைக்கிறார்கள்”
“ஓ! குக்குட முனிவர் நீங்கள் தானோ?. காசிக்கு எத்தனை முறை சென்றிருக்கிறீர்கள்?”
“காசி எங்கிருக்கிறது?”
“ச்சே! காசியே தெரியாத ஒரு முனிவரா!. இவரிடம் போய் நேரத்தை வேஸ்ட் பண்ணி விட்டோமே” என்று வருந்தினான். அன்றிரவு தூக்கம் வரவில்லை. எதோ சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தவன் எதிரில் நிறைய தேவலோக மங்கையர் குடம் குடமாக அந்த ஆஸ்ரமத்திற்கு ஜலம் விட்டு அலம்பி அந்த ஜலத்தில் தாங்களும் ஸ்நானம் செய்கிறார்களே! முதலில் அழுக்காகவும் கருத்தும் இருந்த ஆடைகள் கூட ஸ்நானம் செய்த உடன் கண்ணை பறிக்க திவ்ய தேஜஸ் அவர்களுக்கு கிடைத்தது. அவர்கள் போய் விட்டார்கள்.
மறுநாள் காலை இது பற்றி ஒன்றும் கேட்கவில்லை. அன்று இரவும் அழுக்காக வந்த பெண்கள் ஆஸ்ரமத்தை அலம்பி ஸ்நானம் செய்து பள பளவென்று திரும்பும்போது புண்டலிகன் கேட்டான் “நீங்கள் யார்?.” ஐயா, நாங்கள் கங்கை யமுனை சரஸ்வதி போன்ற பல புண்ய நதிகள். தினமும் பல பாபிகள் எங்களில் ஸ்நானம் செய்து அவர்கள் பாபங்கள் எங்களிடம் சேர்வதால் தினமும் இரவில் குக்குட மகரிஷி ஆஸ்ரமம் வந்து எங்களை மீண்டும் பரிசுத்தம் செய்துகொண்டு திரும்புவது வழக்கம்.”
“அப்படியா”
“ஆம். தமது தாய் தந்தையரை போற்றி வணங்கி கடைசி வரை பணிவிடைசெய்து அவர்களுடைய பூரண ஆசி பெற்ற புண்யாத்மா. இவருக்கு நிகர் எங்களுக்கு தெரிந்து வேறு யாருமில்லை” புண்டலிகன் ஓடினான். காசிக்கு அல்ல, வீட்டுக்கு. தாய் தந்தை காலில் விழுந்தான் கதறினான். தன் தவறுக்கு ப்ராயசித்தமாய் அன்று முதல் அவர்களை கண்போல் பேணி காத்தான். காசிக்கு கூட்டி போனான். தன் ஊரான பண்டரிபுரத்தில் அவர்களை தெய்வமாய் பணிவிடை செய்து இவனை போல் சத் புத்திரன் இந்த வையத்தில் இல்லை என பெயர் பெற்றான். அப்போது தான் அதிசயம் நிகழ்ந்தது. “விட்டலா, உன்னை காண வேண்டுமே” என்று ஒருமுறை வேண்டினான். வயோதிக பெற்றோரை விட்டு ஒரு கணமும் பிரிய முடியாத நிலையில் எங்கே எப்போது போவது விட்டலன் கோவிலுக்கு? மனதில் ஆசையை அணை போட்டு விட்டான் புண்டலிகன். விட்டலனுக்கு தெரியாதா நிலைமை? வந்து விட்டான் புண்டலிகன் வீட்டுக்கு. வாசலில் வந்து நின்று மெல்ல கதவை தட்டின பாண்டுரங்கனை புண்டலிகன் பார்த்து விட்டான். அவனால் எழுந்து செல்ல முடியாமல் அவன் மடியில் அவன் தாய் தந்தை தலை வைத்து உறங்கிகொண்டிருந்தனர். ஒரு கையால் அவர்களுக்கு விசிறிக் கொண்டிருந்தான். பாண்டுரங்கன் வாசலில் காத்துகொண்டு நிற்பதை உணர்ந்த புண்டரிகன் சுற்று முற்றும் பார்த்தான் அவன் கண்ணெதிரே கையருகில் ஒரு செங்கல் தான் தென்பட்டது. அதை ஒரு கையால் எடுத்து வாசலில் போட்டு “இதில் இரு. இவர்கள் எழுந்ததும் வருகிறேன்” என்றான். பாண்டுரங்கனும் வெகு நேரம் அந்த செங்கலில் கால் வலிக்க கை இடுப்பில் வைத்து நின்று கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து புண்டலிகன் வெளியே வர முடிந்தது. பாண்டுரங்கனை வணங்கினான் “உனக்கு என்ன வரமப்பா வேண்டும்?”
” எனக்கு என் பெற்றோரின் ஆசியே யதேஷ்டமாக இருக்கிறதே. நீ இதே இடத்தில் நின்று உலகில் மற்றவர்களுக்கும் அருள வேண்டுகிறேன்” அந்த இடத்தில் தான் இன்றும் கோயில் கொண்டு, அதே செங்கல் மேல் நின்று இடுப்பில் கையுடன் பாண்டுரங்கன் விடோபாவாக (செங்கல் மேல் நிற்பவன்) நமக்கெல்லாம் காட்சியளித்து காக்கின்றான்.

source:::: input from a friend of mine

natarajan

Message For The Day…Do Not Postpone Learning Lessons of Silence and Prayer…

Once a miser lived in a leaky house. Rain water poured through the roof, into his house and he sat through it all night. Neighbours, seeing his plight, suggested he get the roof repaired. The miser remarked, “Let the rains subside, how can I repair it now?” And when the rains stopped, he replied, “Why should I worry about the leaks, now that the rains have stopped?” Do not take this approach. Instead of choosing to suffer when the rains come, as they are sure to do, wouldn’t it be wise to repair the roof right now? This example conveys the importance you must give to acquainting yourself with spiritual primers and textbooks without postponing this by even a moment. Begin right now, the first lessons of silence, prayer and repeating the Name of the Lord. It is never too soon to start the spiritual journey.

 Sathya Sai Baba