Message Given by HH Mahaperiavaa on 15 AUGUST 1947…

MESSAGE GIVEN BY HIS HOLINESS PUJYASHRI CHANDRASEKHARENDRA SARASWATHI MAHASWAMIJI on 15 AUGUST 1947 – Independence Day ]

On this happy occasion when our country Bharat has attained Independence, the people of this ancient country must pray whole heartedly and with one mind to Sri Bhagavan. Let us all pray to God to vouch safe to us strength of mind and energy to engage ourselves more and more in attaining spiritual knowledge. It is only by the grace of Almighty that we can safeguard the freedom that we have achieved and also help all the living beings on earth to lead a happy life.

It is worthy to note that luckily the Chakra of Bhagavan, who is the embodiment of Dharma, has its place in the centre of our National Flag. This Chakra reminds us of the moral values enjoined by Emperor Ashoka, who is historically famous as Devanampriyaha. Further, the Chakra makes us contemplate on the spiritual discipline imparted by Bhagavan Krishna in the Bhagavad Gita. That Dharma which shines in the form of a Chakra is clear from Lord Krishna’s reference to the Chakra as “Evam pravartitam chakram” in Verse 16 of the III chapter of the Bhagavad Gita. Also in Verses 14 and 15 of the same chapter Bhagavan avers that ” The human body originates from food, food grains grow because of rains, rain showers because of performance of Yajnas(Vedic Sacrifices), these Yajnas are prescribed in the Veda and that the Veda has emanated from Brahman who is in the form of Akshara(Sound recorded as letter of the alphabet)”. Thus, the Dharma Chakra explains to us that the supreme Brahman is manifest in Vedic sacrifices. May this Independence, dawning with the rightful remembrance of Emperor Ashoka, grant us such fruits as Aram(Dharma or Righteousness) Porul(Wealth), Inbam(Happiness) and Veedu(Moksha – deliverance), by the grace of God.

There are three stripes in our National Flag. They are of dark green, white and orange colours. These colours seem to indicate to us, that military strength for protection from enemies and evil, wealth for welfare and prosperity, and knowledge for the sake of proper administration are essential for the nation. It may be remembered that dark green is the colour of Durga – the Parasakti who is the mother protector, Mahalakshmi, the goddess of wealth and prosperity is of orange colour(golden hue) and Saraswathi the source divine of all knowledge is white in colour. It is a happy coincidence that the colour of the three Shakthis(Goddesses of Power) are seen in the three stripes of the National Flag.

For long, the Indian Nation has strived hard for winning freedom. By the grace of God, by the blessings of great men, and by the unique sacrifice of the people, independence has been won. Let us all pray to the Omnipresent God to shower his grace so that with the hard won freedom, our country becomes prosperous, is rid of famine, and there are no social skirmishes and the entire nation lives in an atmosphere of amity and kindness.

Now that freedom has been attained by the nation, all of us must also try to develop Independence. If we understand ourselves fully we may consider ourselves as independent. We are not capable of controlling the senses. We are unable to suppress desire and control anger, which always troubles us. Whichever thing in whatever measure we obtain does not lead us to contentment. Worldly sufferings cause worry to us. The mind gets confused on noticing these sufferings. What is the way out of all these? we must try to control, albeit gradually the mind which has been functioning vigorously for such a long time. Once the mind is set at rest, we will not be in need of anything. That state of mind which ensures complete freedom is what we must attempt to achieve.

Every day atleast some time should be set APART for practising the control of mind and bereft of other thoughts, we must meditate upon God. Then gradually, the mind will become calm, whereupon we will have the mental power to subjugate desire and anger. Spiritual knowledge will accrue fast for him who practises such meditation. Only these who attain such true spiritual knowledge can truly be independent citizens.

Any woman other than one’s wife must be respected as one’s own mother. We must regard other living beings as we would regard ourselves. Even at the risk of death, truth alone must be spoken. Petty social feuds must be averted totally, Every one must strive for improving his knowledge and his spiritual attainments and move with others in an atmosphere of kindness. We must sincerely wish that all people should live happily and peacefully.

Dharmo Rakshati Rakshitaha

Attachments:

Maha Periyava addressing with Bilva Maalai ....jpg

Source::::www.periva.proboards.com

Natarajan

Read more: http://www.periva.proboards.com/thread/4889/message-periyava-given-independence-august#ixzz3A9sk0EjA

Message For the Day…” Education Without Right Conduct is of No Value …”

All of you are sparks of the Divine. Just as a spark of the fire from the furnace, after a while, turns into ash, you too forget your divine origin. When you pursue your education, you must also pursue spiritual discipline, which will lead you to Divinity. Those that study in Institutions that have a spiritual discipline, must consider themselves extremely fortunate. If you choose to adhere to the ideals learnt and practice even a small fraction of the Lord’s teachings, you will realize the true purpose of education and the true objective of human life. Education without right conduct is of no value. You must make use of what you have learnt, not just for earning a living but also for service to the society. Only then your degrees will have any meaning. Whatever job you take up, wherever you work, you must continue the practice of spiritual discipline and aim for Self realisation.

Sathya Sai Baba

” மறைந்து போன வயிற்று வலி…”

போன இடம் தெரியாத வயிற்று வலி…..

காட்டுப்பள்ளி எஸ்டேட் உரிமையாளர் சண்முகசுந்தர முதலியார். அவரது மேனேஜர் கிருஷ்ணானந்தம். இருவரும் மஹாபெரியவாளின் பக்தர்கள்.

1965-ஆம் வருடம் மஹான் தண்டையார்பேட்டையில் முகாமிட்டிருந்தபோது, தாம் காட்டுபள்ளிக்கு விஜயம் செய்வதாக முதலியாரிடம் சொன்னார். முதலியாருக்கு அளவற்ற மகிழ்ச்சி.

கிருஷ்ணானந்தத்தின் மனைவிக்குத் தொடர்ச்சியாக வயிற்று வலி. மஹாபெரியவாளிடம் முறையிட்டுப் பிரசாதம் வாங்கிக் கொடுத்தார். இதற்கிடையில் ஒரு நாள் மஹான் எப்போதோ கிருஷ்ணானந்தம் சொன்னதை நினைவில் கொண்டு,
”உன் மனிவிக்கு சிகிச்சை அளிக்க வேலூர் போவதாகச் சொன்னாயே நாளையே அழைத்துப் போ” என்று புன்சிரிப்போடு, அவரைச் சோதிப்பது போலக் கூறினார்கள்.

அதன்படியே இவரும் தயாராகி, மனைவியை மைலாப்பூரில் ஒரு உறவினர் வீட்டில் தங்க வைத்து அடுத்த நாள் வேலூர் போகத் திட்டமிட்டார்.

ஆனால் நடந்ததோ வேறு. முதலாளியிடமிருந்து மஹாபெரியவா அதே நாளில் காட்டுப் பள்ளிக்கு விஜயம் செய்வதாகத் தகவல் வர, கிருஷ்ணானந்தம் எல்லாம் தெய்வச் செயல் என்று மனைவியுடன் ஊருக்கே திரும்பிவிட்டார். வேலூர் பயணம் தவிர்க்கப்பட்டது. மேலும் எதிர்பாராத விதமாக காட்டுப் பள்ளியிலேயே மஹாபெரியவா சாதுர்மாஸ்ய வியாச பூஜையை செய்யத் திட்டமிட்டார்.

போக்குவரத்து வசதியில்லாமல் படகில் வந்து போகும் கிராமத்திற்கு இப்படி ஒரு வாய்ப்பு கிட்டியதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.

மஹான் அங்கேயே நாலரை மாதங்கள் தங்கி, பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருந்தார்.

முதலியாரின் மேனேஜர் தன் மனைவி படும்பாட்டை மஹானின் முன் முறையிட்டார். மஹான் கிருஷ்ணானந்தத்தின் மனைவியை அங்கே அழைத்து வந்து ஒரு வாரம் தங்கும்படி சொல்ல, மேனேஜரும் அவ்வாறே செய்தார். அவரது மனவி தினமும் குளித்துவிட்டு, பூஜைக்கு சென்றார். வயிற்றுவலி தாங்காமல் அந்தப் பெண்மணியும் கண்களில் நீர் தளும்ப அமர்ந்திருப்பார். கருணாமூர்த்திக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?

முதலியாரின் மைத்துனரை அழைத்து குளத்தங்கரைக்குப் பக்கத்தில் குளியலறை போன்று தற்காலிக ஏற்பாடாக தென்னக்கீற்றினால் அமைக்கப்பட்டது.

மறுநாள் அந்த அம்மாள் ஸ்நானம் செய்தபின், சுவாசினிகள் பூஜைக்கு அமர்ந்தபோது,

“இந்த அம்மாவை குளியலறைக்கு அழைத்துப் போய் இரு ஸ்டூல்களைப் போட்டு ஒன்றில் உட்காரவைத்து, அபிஷேகத் தீர்த்தத்தை பாதத்தில் படாமல் எல்லா ஜலத்தையும் சிரசில் விடுங்கள் என்றார்” மஹான்.

அபிஷேக தீர்த்தம் உதவியாள் மூலமாக அனுப்பப்பட்டது. சிரசில் நீர் கொட்டும்போது மேனேஜர் மனைவி மெய்மறந்த நிலையில் இருந்தாராம். ஸ்நானம் முடிந்தவுடன் புத்துணர்ச்சி பெற்று வயிற்றுவலி போன இடம் தெரியாமல் வலி நீங்கப் பெற்றவராக வந்தாராம். அதற்குப் பிறகு வயிற்றுவலி அந்த அம்மையாருக்கு வரவே இல்லை.

இப்படிப்பட்ட அதிசயமான அனுபவம் வேறு யாருக்கும் கிட்டியிருக்காது என்று கிருஷ்ணானந்தம் நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார்.

மஹாபெரியவாளெனும் மாபெரும் தெய்வம் தன்னை அண்டியவர்களுக்கெல்லாம் அற்புதமான அனுபவங்களை அருளிக் காத்து நிற்கிறார்.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::: http://www.periva.proboards.com
Natarajan
Read more: http://periva.proboards.com/thread/7364/abhisheka-theertham-book-venkatasaamy#ixzz37nO9aX95

” உன் அடுத்த ப்ரோக்ராம் என்ன … ? ” ….

தேடி வந்தருள் தந்த தெய்வம்….

ரத யாத்திரையில் எளிய பக்தர் கூறிய சம்பவம், ஆட்கொண்டருளும் மஹா பெரியவா கருணையை எடுத்து இயம்புகிறது.

அந்த ஏழைக்கும் வறுமைக்கும் நெருங்கிய தொடர்பு. அவர் பட்ட கஷ்டங்களைச் சொல்ல இயலாது. 1984-ஆம் ஆண்டு மஹாபெரியவா திருமங்கலம் கிராமத்திற்கு விஜயம் செய்தபோது, அங்கே முகாமிட்டிருந்த தெய்வத்தை தரிசிக்க இந்த ஏழை பக்தர் போவதுண்டு.

இந்தப் பாமரனுக்கு மஹாபெரியவா இன்னார் என்பதோ, அவர் தம் மேன்மையை அறிந்து அவர் மீது பக்தி கொள்ளும் மனோ நிலையோ இல்லை. ஆனால் தினமும் வீட்டில் சாப்பாட்டிற்கே வழி இல்லாததால் மஹான் இருக்கும் முகாமில் அன்னதானம் நடைபெறுவதால் அந்த இடத்திற்குச் சென்று வயிறு நிறைய உணவருந்தினார். வறுமை மட்டும் அப்படியே இருந்தது.

மஹானின் முகாம் கிராமத்தை விட்டுச் சென்ற பிறகு அந்த மதிய வேளை உணவுக்கும் திண்டாட்டம். நான்கைந்து பேர் அடங்கிய குடும்பத்தை அவரால் காப்பாற்ற முடியாமல் பணச்சிக்கல், கடன் என்று பிரச்னைகள் எழ, தன் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி அவருக்குப் புலப்படவில்லை.

இப்படி முடிவெடுத்த அவர், எல்லோரும் சிறப்பாக போற்றிக் கொண்டாடும் காஞ்சி மஹானைத் தரிசித்த பின் தன் உயிரைப் போக்கிக் கொள்ளலாம் என்ற முடிவோடு காஞ்சிக்கு வந்தார்.

மஹானின் எதிரே ஒன்றும் சொல்லாமல் மெளனமாக நின்றார்.

மஹான் கருணையோடு இவரைப் பார்த்தார். நடந்தது, நடப்பது, நடக்கப்போவது என்று எல்லாவற்றையும் தெரிந்தவராயிற்றே அவர்.

“உன் அடுத்த புரோகிராம் என்ன?” என்று ஒரு கேள்வியைத் தன் முன்னே நிற்பவரிடம் கேட்டார்.

வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் இருக்கும் அந்த எளியவர் என்ன பதில் சொல்வார்? தனது தற்கொலை திட்டத்தையா மஹானிடம் தெரிவிப்பார்?

“என்ன செய்றதுன்னே தெரியல்லே சாமி, எங்க ஊருக்குத்தான் போகணும்” என்றார்.

சொன்னதில் தனக்கு ஆறுதல் கிட்டாதா என்கிற ஏக்கம் தொனித்தது.

“நான் உனக்கு பஸ் சார்ஜ் தர்றேன்…. இப்படியே உன் ஊருக்குப் போகாதே…… நேரே இங்கிருந்து மெட்ராஸ் போய் பாரிஸ் கார்னர்லே இறங்கி, அங்கிருந்து மறுபடியும் பஸ் பிடிச்சு உன் ஊருக்குப் போ” அந்த நபர் புரிந்து கொள்ள முடியாத கட்டளையாகச் சொல்லி அனுப்பினார்.

மடத்திலிருந்து அவரது பஸ்சார்ஜுக்குப் பணம் கொடுக்கப் பட்டது.

‘காஞ்சியிலிருந்து வேலூர் பக்கம் உள்ள தன் கிராமத்திற்கு நேரடியாகப் போகச் சொல்லாமல், சென்னைக்குப் போய் தன் ஊருக்கு ஏன் இந்த சாமியார் போகச் சொல்கிறார்?” என்று புரியாதவராய் மஹானின் கட்டளைப்படியே கிளம்பினார்.

சென்னை பாரிஸில் இறங்கி தன் ஊருக்குப் போக பஸ் நின்று கொண்டிருந்த இடத்திற்குப் போக, அங்கே தெய்வம் அனுப்பிய தூதராக ஒருவர் வந்தார். இவரது பால்ய நண்பர். வெகு தினங்களுக்குப் பிறகு இந்தச் சந்திப்பு. நண்பர் அவரை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று வயிறு நிறைய டிபன் வாங்கிக் கொடுத்தார். மஹானின் கருணையை எண்ணியபடி, நண்பர் தன் குடும்பத்தைப் பற்றிக் கேட்டபோது தான் பட்ட அவலத்தை அழுதபடியே கொட்டித் தீர்த்தார்.

பரமேஸ்வரரே, தன் காருண்யத்தினால் அனுப்பிய நண்பரல்லவா?

இவருக்கு ஆறுதல் சொல்லி எல்லா கடன்களையும் அடைத்து, குடும்பத்தை தற்காலிகமாக கவனித்துக் கொள்ளவும் பணம் தருவதாகச் சொல்லி, அப்படியே செய்து இவரைக் காப்பாற்றினார்.

அவல நிலையில் இருந்து விடுபட்டவர் வேலையும் கிடைக்கப் பெற்று, 25 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பெண்ணின் கல்யாணத்தையும் விமரிசையாகச் செய்து, மஹாபெரியவா ரதயாத்திரையாக சிலை ரூபத்தில் தரிசனம் தர வந்தபோது தனது நன்றியைக் கண்ணீராகக் கொட்டித் தீர்த்தார்.

இப்படித்தான் அந்தத் தெய்வம் தனது கருணையால் வலியச் சென்று தன்னை நம்பியவர்களைத் தடுத்தாட்கொள்கிறது.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

Source:::: http://www.periva.proboards.com
Natarajan

” உன் ரெண்டாவது மகன் தில்லியிலா வேலை பாக்கறான் …? “

ஆகாயத்தில் ஆரத்தி காட்டி……

அஞ்சலை துப்புறவு தொழில் செய்பவள். அவளை வறுமை கடுமையாக வாட்டியது. அவளுக்கு இரண்டு செல்வங்கள். 1984ம் வருடம், நடமாடும் தெய்வமாம் காஞ்சி மஹான் பாரதமெங்கும் தமது புனித யாத்திரையை மேற்கொண்ட போது இந்தப் பெண் வசிக்கும் கிராமத்திற்கும் விஜயம் செய்தருளினார்.

மஹானைப் பற்றி தெரிந்து கொள்ளும் சூழ்நிலையில் அவள் இருக்கவில்லை. ”நம்ம ஊருக்கு ஒரு சாமியார் வந்து தங்கி இருக்காரே, அவரைப் பார்த்துவிட்டு வரலாம்” என்று நடமாடும் தெய்வம் முகாமிட்டு இருந்த இடத்திற்கு வந்தாள்.

தன்னுடன், தன் இரு பாலகர்களையும் அழைத்துச் சென்றிருந்தாள்.

பக்தை என்று குறிப்பட முடியாத அந்த நிலையில் ஏதோ பார்வையாளராய் வந்தவள், மஹானைப் பார்த்து வணங்கிவிட்டு தன் பிள்ளைகளோடு நகர எத்தனித்தாள். “பேர் என்ன கேளு” மஹான் உத்தரவு. “அஞ்சலைங்க” என்று சொன்ன அவள், தான் செய்யும் தொழிலையும் சொல்லி, தனக்கு இரு பிள்ளைகள் என்று ஒப்புவித்து விட்டு நகரும் நிலையில்தான் அப்போதும் அவள் மனநிலை இருந்தது.

“அவளைக் கூப்பிடு” சென்றவளை தெய்வம் அழைத்தது. அவள் வந்தாள் – பயம் ஒரு பக்கம்.

“உன் பேரு அஞ்சலைன்னு சொன்னியே……. நீ எதுக்கும் பயப்படமாட்டாயோ?” என்று அன்பும் குறும்பும் கலந்து காருண்ய மூர்த்தியின் வினா எழுந்தது.

அஞ்சலை மஹானின் தீட்சண்ய பார்வையால் ஆட் கொள்ளப்பட்டு அப்போது பரம பக்தையின் நிலைக்குத் தள்ளப்பட்டாள்.

விளையாட்டாக மஹான் இன்னொரு கேள்வியைக் கேட்க பக்தைக்கு வறுமையின் வேதனையிலும் சிரிப்புதான் வந்தது.

அந்தக் கேள்வி..

“உன் இரண்டாவது மகன் டில்லியிலா வேலை பார்க்கறதா சொன்னே?”

அந்த இரண்டாவது பையன், அஞ்சலையின் பக்கத்தில் புடைவைத் தலைப்பை விடாமல் பிடித்தபடி கிழிந்த நிக்கரும், அழுக்கான சட்டையும் மூக்கில் ஒழுகலுமாக பாலகனாகக் காட்சி தந்து கொண்டிருந்தான்.

இந்தக் கேள்வியைக் கேட்டு அஞ்சலை பதில் சொல்ல முடியாமல் நின்றாள்.

மஹான் அவளுக்குப் பூரண அனுக்கிரகம் பொழிந்து அனுப்பினார்.

அப்போதே மஹானை மனதில் இருத்திக் கொண்ட அந்த பக்தை, தன் இரண்டாவது பிள்ளையைப் பற்றிக் கேட்பதன் உட்பொருள் என்னவாக இருக்கும் என்கிற சிந்தனை துளியும் இல்லாமல் ‘மஹா பெரியவா பக்தி’ என்னும் அருள் மட்டுமே அவளுக்குப் பெரிதாகத் தெரிந்தது.

தினமும் குளித்து முடித்துவிட்டு கற்பூரத்தை வெளியே சூரியனுக்குக் காட்டுவாள். மனம் நிறைய மஹான் இடம் பெற்றிருந்தார். அவர் படம் கூட அவள் வீட்டில் இல்லை. தனக்கு அந்த அருகதை இல்லை என்று தன்னை சமாதானம் செய்து கொண்ட அவள், எந்த பக்தருக்கும் தோன்றாத எண்ணமாய் எங்கும் வியாபித்திருக்கும் மஹானை, ஆகாயத்தில் ஆரத்தி காட்டி ஆராதிக்கும் மனப் பக்குவத்தில் இருந்தாள்.

வாழ்க்கையில் படிப்படியாக வந்த சிரமங்களை பயமில்லாமல் எதிர்கொண்ட அஞ்சலை, சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு 2008-ஆம் ஆண்டு திரும்பவும் அந்த ஊருக்கு ரதயாத்திரையாக மஹானின் உற்சவ மூர்த்தி வந்தடைந்தபோது பேரானந்தம் அடைந்தாள்.

“பெரியவர் நம்மை விட்டுப் போகவே இல்லை; அப்படி நினைக்கிறவங்க அந்த தெய்வத்தைப் புரியாதவங்க. இந்த ரதத்திலே மெய்யாலுமே அவரு வந்திருக்காருன்னு நான் நிச்சயமா சொல்வேன்” என்று ரதயாத்திரையோடு சென்றவர்களிடம் தனது பக்தியை அஞ்சலை சொன்னாள்.

அவளுக்குப் பக்கத்தில் இருபத்தியேழு வயது நிரம்பிய அவளது இளைய மகன் – கிராமத்திற்கு வந்திருக்கிறான் – மஹான் ஆசி வழங்கிய பாலகன் இவன் தான். மஹான் சொன்னபடி அவன் தலைநகர் தில்லியில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக இருக்கிறான். இப்போது அவனது மகனுக்கு முடி இறக்க கிராமத்திற்கு வந்திருக்கிறான். இதை அவள் விபரமாகச் சொன்னபோது அன்றே அவன் டெல்லியில் வேலை பார்ப்பதாகச் சொன்ன மஹானின் அருளாசியை நினைத்து ஊர்வலத்தில் சென்ற பக்தர்கள் பரவசமடைந்தனர்.

மஹானே நேரில் வந்துவிட்டார் என்று ரதத்தை நோக்கிக் கை கூப்பிய அஞ்சலையைக் கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்தார்கள். இன்று இந்த அஞ்சலையைப் போன்ற பக்தர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள் என்பதை நம்மால் மறுக்க முடியாது.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

sOURCE:::: http://www.periva.proboards.com

Natarajan
Read more: http://periva.proboards.com/thread/7573/sarvajna-sarva-vyapi-mahaperiyavaa-venkatasaamy#ixzz37UAL20Hi

” இந்த தங்க கிண்ணம் தேசிய பாதுகாப்பு நிதிக்கு…”

அந்த அம்மாள் காஞ்சிமாமுனிவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். தாம் கண்ட ஆச்சர்யமான கனவு ஒன்றை ஸ்வாமிகளிடம் விவரித்தார். “நான் ஒரு தங்கக் கிண்ணத்தில் கற்கண்டும் திராட்சைப் பழமும் சமர்ப்பித்துத் தங்களிடம் ஆசியைப் பெறுவதுபோல் கனவு கண்டேன்” என்றார் அந்தப் பெண்மணி.

“அப்படியா, அதுமாதிரி செய்ய உனக்கு விருப்பம் இருந்தா அப்படியே செய்” என்றார் ஸ்வாமிகள்.

“இந்த ஏழையிடம் அதற்கான மனம் இருக்கிறதே தவிர பணம் இல்லையே!” என்று ஏக்கத்துடன் கூறினார் அந்தப் பெண்மணி.

“சௌகரியப்படும்போது செய்யலாம்” என்றார்கள்.

சிறிது காலம் சென்றது. அந்த அம்மாளின் பெரிய தகப்பனார் தம் சொத்தில் ஒரு பங்கை அந்தப் பெண்மணி பேருக்கு எழுதி வைத்து இறந்து போனார். அதன் பிறகு அந்த அம்மாள் சுமார் ரூபாய் நான்காயிரம் எடுத்துக் கொண்டு ஸ்வாமிகளிடம் வந்தார். ஒரு தட்டில் பணத்தைச் சமர்ப்பித்தார்.

“எதுக்கு இந்தப் பணத்தை என்னிடம் கொடுக்கிறாய்!” என்று கேட்டார்கள். அதற்கு அந்த அம்மாள் தாம் முன்பு கூறியபடி தங்கக் கிண்ணத்தில் கற்கண்டும், திராட்சையும் சேர்த்துக் கொடுப்பதற்குப் பதில் பணமாகவே சமர்ப்பித்து விடலாம் என்று எண்ணியதாகக் கூறினார்.

“உன் சொப்பனத்தில் நீ எப்படிச் செய்கிறதாகக் கண்டாயோ அதுமாதிரி விருப்பமானால் செய்யலாம். அதுக்குப் பதில் பணமாகக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை” என்றார் ஆசார்ய ஸ்வாமிகள்.

அந்தப் பெண்மணி பணத்தைத் திரும்ப எடுத்துக் கொண்டு சென்றார். தங்கத்தினால் சிறிய கிண்ணம் ஒன்றைச் செய்வித்து, அதில் நிறைய கற்கண்டும், திராட்சைப் பழமும் வைத்து மறுபடியும் ஸ்வாமிகளிடம் கொணர்ந்தார். அந்தச் சமயம் அவர்கள் காட்டுப்பள்ளியில் எழுந்தருளி இருந்தார்கள். தங்கக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்ட ஸ்வாமிகள் அந்தப் பெண்மணிக்கு ஆசி வழங்கினார்கள். அந்த அம்மாள் தன் கனவு நிறைவேறியதனால் மிக்க மனநிறைவோடு விடை பெற்றுக் கொண்டார்.

பிறகு ஸ்வாமிகள் மடத்து அதிகாரியிடம், “இதைக் கணக்கில் சேர்த்துக் கொள்வதில் ஆக்ஷேபம் ஏதும் உண்டா?” என்று கேட்டார்கள். அதிகாரி சற்றுத் தயங்கினார். தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் அமலில் இருந்த சமயம் அது. அவருடைய தயக்கத்தைப் புரிந்து கொண்டார்கள் ஸ்வாமிகள். “இதை இப்படியே மடத்துக் கணக்கில் சேர்த்துவிட்டால் நான் ஒரு பொய்க்கு உடந்தையாக இருந்ததாக முடியும். நான் உங்களுக்கெல்லாம் வழி காட்டுகிற பீடத்தில் இருந்து கொண்டு ஒரு பொய் சொன்னால், அப்புறம் நீங்களெல்லாம் அதுபோல் ஒன்பது மடங்கு பொய்யைக் கூசாமல் சொல்லலாம் அல்லவா? எனவே எது நியாயமோ அதையே செய்ய வேண்டும்” என்று திருவாய் மலர்ந்தருளினார்கள்.

சரி. அப்படியானால் ஸ்வாமிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை ஊகிக்க முடியாமல் அதிகாரி திகைத்தார். “இந்தக் கிண்ணத்தைச் சென்னைக்குக் கொண்டு போய் தேசிய பாதுகாப்பு நிதிக்கு என்று முதல் மந்திரியிடம் சேர்த்து விடுங்கள்” என்று கூறி உடனே அதை அனுப்பி விட்டார்கள்.

அப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயம் – (1965). சென்னை சென்றிருந்தவர்கள் அப்பொழுதிருந்த முதல்வர் மூலமாக அந்த தங்கக் கிண்ணத்தை யுத்தத்தின் முன்னணியில் நின்ற நம் வீரர்களுக்கு அனுப்பி வைத்தார். அதிலிருந்த பிரசாதம் போர்முனையில் நின்ற நம் பாரத வீரர்களுக்கு விநியோகிக்கப் பெற்றது.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

* செல்வத்தில் சிறந்த செல்வம் நல்லறிவே. அதனால் அம்பிகையின் திருவடியில் சரணடைந்து நல்லறிவைத் தரும்படி வேண்டுங்கள்.


* இதயத்தில் கடவுள் குடியிருக்கிறார். அதில் கீழான சிந்தனையை அனுமதித்து குப்பைத் தொட்டியாக வைத்திருப்பது கூடாது.