” என்ன காப்பி சாப்பிட்டாச்சா …. !!!!”

 

மஹான் கொடுத்த காப்பி



காஞ்சிமாமுனிவர் கேரள மாநிலம் கொல்லங்கோடு என்ற ஊரில் முகாமிட்டிருந்த சமயம். அப்போது அங்கே வேதத்திற்கான ஆய்வு சபையை அவர் கூட்டி இருந்தார். விஷ்ணுபுரம் வேதபண்டிதர் ஒருவரும் அந்த சபைக்காக அங்கே அழைக்கப்பட்டு இருந்தார்.

மடத்தில் அன்புக்கட்டளையின்படி, காப்பி என்பது தவிர்க்கப்பட்ட பானமாக இருந்தது. உடலின் நன்மைக்காகவும் மற்றும் ஏதோ ஒரு தெய்வ சூட்சுமத்தை அறிந்ததாலோ என்னவோ மடத்து சிப்பந்திகளும் காப்பி தயாரிப்பதையோ, அருந்துவதையோ தடை செய்து, மிகவும் கடுமையான நியமமாக மஹான் ஸ்ரீமடத்தில் கடைப்பிடிக்கச் செய்திருக்கிறார்.

இருந்தாலும் காப்பி பழக்கம் தவிர்க்க முடியாத ஒன்றல்லவா? தொடர்ந்து பல வருடங்களாக அந்தப் பானத்தை அருந்துபவர்களுக்கு, குறித்த நேரத்தில் அது கிடைக்காமல் போனால் தாங்க முடியாத தாபம் ஏற்படுவதுண்டு. இதே நிலையில் தான், விஷ்ணுபுரம் பண்டிதரும் அந்த அதிகாலை காப்பிக்காக ஸ்ரீமடத்தில் தவித்துக்கொண்டிருந்தார்.

அப்போது யாரோ ஒரு அன்பர், அவரை மட்டும் தனியாக வெளியே அழைத்துச் சென்று, இவர் கேட்காமலேயே சூடாகக் காப்பியைக் கொண்டுவந்து கொடுத்தார். பண்டிதருக்கு ஒரே ஆனந்தம். போன உயிர் வந்தது போல் மகிழ்ச்சி. சிறிது நேரத்தில் வேத சபை கூடியது. மஹான் சபைக்கு வந்ததும் அவரை நமஸ்கரித்துவிட்டு இந்த பண்டிதர் அவர் அருகில் சென்றார்.

“என்ன காப்பி சாப்பிட்டாச்சா?” பெரியவா தனக்கே உரிய தெய்வீகப் புன்சிரிப்போடு கேட்டதும், ஆடிப்போய் விட்டார் பெரியவர். யாருக்குமே தெரியாதென்று தான் செய்த காரியத்தை, மஹான் தன் தவறை சுட்டிக்காட்டுவது போல் கேட்டதும், அவருக்கு மனதில் பயம் தோன்றிவிட்டது.

“வந்து வந்து ஏதோ கொடுத்தான்” என்று பட்டும்படாமலும் , பளிச்சென்று சொல்லாமலும் குற்ற உணர்வோடு இருந்தார்.

“நான் தான் உங்களுக்குக் கொடுக்கச் சொன்னேன்” என்று சிரித்துக்கொண்டே மஹான் சொன்னபோது, தன் மீதுள்ள கரிசனத்தை அறிந்த அந்த முதிய பண்டிதர் ஆடித்தான் போய்விட்டார். மடத்தில் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வெளியே இருந்து இங்கே வருபவர்கள் ஏன் தங்களின் பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்? இதை நன்றாக அறிந்த மஹான் தான் விஷ்ணுபுரம் வேதபண்டிதருக்கு, விதிவிலக்கு அளித்திருந்தார். 

இப்படி வேண்டியதை வேண்டியவாறு எல்லோருக்கும் அருளும் மாபெரும் தெய்வமான காஞ்சி மஹானை நாம் சரணடைய வேண்டாமா?  

 

source:::: http://www.periva.proboards.com

natarajan

Message For the Day…” Ensure Your Kids are on The Right Path at All Times…”

 

Young students are innocent. Their hearts and minds are pure, and they are selfless. In the primary school, you will find that many of them observe perfect discipline and are well behaved. By the time they are in secondary school, the purity and discipline slowly decreases. When they reach a college or university, everything becomes topsy-turvy! What really happens in between? As they grow in years, their mental balance is upset; they lose the steadiness of mind and self-control. They are exposed to undesirable influences. At this stage, teachers and parents must practice exemplary behavior and ensure that the children are on the right path at all times. Students also must bear in mind that all the regulations and discipline that are prescribed are for their highest good and in their own interests.   

 

Sathya Sai Baba

 

 

” யாகம் நடந்த தீவின் பெயர் என்ன தெரியுமா ” ?

 

மகாபெரியவாள் சிவாஸ்தானத்தில் தங்கியிருந்தார்கள். அங்கிருந்த ஸ்ரீ பிரம்மபுரீஸ்வர்ர் ஆலயத்துக்கு அப்போதுதான் பெருமை வந்த்து. பிரும்ம ஸ்வரூபியான் பெரியவாளைத் தரிசிக்க வந்த அடியார்கள் எல்லாரும் பிரும்மபுரீஸ்வர்ரையும் நிச்சயமாகத் தரிசனம் செய்தார்கள்.

நாங்கள் பெரியவாளைத் தரிசனம் செய்யச் சென்றிருந்தோம். அன்றைக்குப் பெரியவா, மௌனம் ! ஆனால். அவர்களுடைய அருட்பாரிவையே பக்தர்களுக்குப் போதுமானதாக இருந்த்து.

அந்த்ச் சமயம் பார்த்து, இந்தோனேஷியாவிலிருந்து ஒரு சரித்திர ஆராய்ச்சியாளர் தரிசனத்துக்கும், சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கவும் வந்தார்.

நல்லகாலமாக, அன்றைக்குக் காஷ்ட மௌனம் இல்லை; கைகளால் ஜாடைகள் காட்டினார். அதை விவரித்துச் சொன்னார், அணுக்கத் தொண்டர்.

அவருக்குச் சரித்திர ஞானம் – அதுவும், இந்தோனேஷிய சரித்திரம் ! – இல்லவேயில்லை.

நான் மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியராதலால், தொண்டர் கூறியதை மேலும் தெளிவாக ஆங்கிலத்தில் கூறி வந்தேன்.

இந்தோனேஷியா என்பது அநேகம் தீவுகளின் தொகுதி. அவற்றில், ஒரு தீவில், ஒரு இந்து மன்னர் நட்த்திய யாகத்தைப் பற்றி மிகவும் ஆர்வத்துடன் கூறினார், அந்த ஆராய்ச்சியாளர்.

“யாகம் நடந்த தீவின் பெயர் என்ன?” என்று ஜாடை மூலமாகவே பெரியவா கேட்டார்கள்.

ஆராய்ச்சியாளருக்குத் தெரியவில்லை, நூற்றுக்கணக்கான தீவுகளின் பெயரை நினைவில் வைத்துக் கொள்வது சாத்தியமில்லை என்றாலும், சில முக்கியமான் தீவுகளின் பெயர்களைக் கூறத் தொடங்கினார். அவர் ஒன்றொன்றாகத் தீவின் பெர்யரைச் சொன்னதும், ‘அது இல்லை’ என்ற பாவனையில் பெரியவா தலையை அசைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆராய்ச்சியாளருக்கே அலுப்பு வந்துவிட்ட்து. “நூற்றுக்கணக்கான தீவுகள் இருக்கும்போது, அவைகளின் பெயர்கள் பெரியவாளுக்கு மட்டும் தெரிந்திருக்கப் போகிறதா என்ன?” என்ற எண்ணமும் தோன்றியிருக்க்க் கூடும்.

பெரியவா, பக்தர்களின் கூட்ட்த்தில் பார்வையைச் செலுத்தினார். பின், தன் செவியின் கீழே, கைவிரல்களை வட்டமாக வைத்து, ‘என்ன பெயர்?’ என்று கேட்பது போல ஜாடை காட்டினார்கள்.

ஒருவர், “குண்டலம்” என்று மெல்லிய குரலில் கூறினார்.

பெரியவா, ‘அதுதான்! .. அவனிடம் சொல்லு …’ என்று ஜாடை காட்டினார்கள்.

அங்கு நடப்பதையெல்லாம் விந்தையுடன் பார்த்துக் கொண்டிருந்த இந்தோனேஷிய ஆராய்ச்சியாளரிடம், ‘குண்டலம்..” என்ற சொல் இரைந்து கூறப்பட்ட்து.

ஒரு துள்ளு துள்ளினார், அவர்.

“ஆமாம்! அந்த யாகம் நடந்த தீவின் முதற்சொல் குண்டலம் தான்!” என்று பக்தர்களிடம் கூறிவிட்டு, பெரியவாளிடம் முழுப் பெயரையும் தெரிவித்தார்.

பெரியவா புன்னகைத்தார். ஆராய்ச்சியாளருக்கு மகா ஆச்சரியம் ! தன்னுடன் வந்திருந்தவர்களிடம், அவர்கள் மொழியில் தன் வியப்பை வெளிப்படுத்திப் பேசி, பெரியவாளின் பூகோள ஞானத்தைப் பெரிதும் போற்றினார்.

ஆனால் பக்தர்களுக்கெல்லாம் உண்மை தெரியும். பெரியவா, ஞானக் களஞ்சியம்; ஞான ஊற்று; அனைத்து ஞான்ங்களையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ரத்தினப் பெட்டகம்.

ஆசிரியனான எனக்கு நன்றாகவே புரிந்த்து – ‘இது, வெறும் படிப்பு அறிவு அல்ல !”

இந்த அதிசய நிகழ்ச்சி நடந்தபோது நாங்களும் அதைக் காணக் கிடைத்த்து, எங்கள் பாக்கியம்.

 

http://www.periva.proboards.com   Source: Maha Periyavaal Darisana Anubhavangal – Part 4
As narrated by Sri V.Sundaram, Cuddalore

Contributed by Forum Member Shri Sankara Narayanan

natarajan

” காலையில் ரெண்டு நிமிஷம் ‘ ராமா ராமா ‘ சொல்லுங்கோ “…..

 

பெரியவாள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துகொண்டிருந்தார்கள்.

எதிரே, ஒரு பெரிய மரம். தடினமான குரங்கு ஒன்று வந்து மரத்தில் ஏறியது. பின், இருபது – முப்பது குரங்குகள் அந்த லீடர் குரங்கை தொடர்ந்து மரத்தில் ஏறின.

பெரியவாள், ஒரு கூடை மாம்பழத்தை மரத்தடியில் போட சொன்னார்கள்.

லீடர் குரங்கு என்ன உத்தரவு எப்படி போட்டதோ தெரியவில்லை! ஆனால், மற்ற குரங்குகள் ஒவ்வொன்றாக வந்து பழத்தை எடுத்துகொண்டு மேலே சென்றன. லீடர் குரங்கு மட்டும் ஒரு பழத்தை கூட தொடவில்லை!

பெரியவாள் சொன்னார்கள்:

“குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன.

“காட்டில், யானைகளுக்கு ஒரு தலைமை யானை இருக்கும். அந்த லீடர் யானையை follow பண்ணித்தான் மற்ற யானைகள் செல்லும்.

“ஒரு கட்டெறும்பு செத்துபோனால், மற்ற கட்டெறும்புகள் அதை இழுத்துச் செல்லும்.

“ஒரு காக்கை இறந்து போனால், மற்ற காக்கைகள் மரத்தில் உட்கார்ந்துகொண்டு துக்கமாய் கதறும்.

“ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால் செய்ய முடிகிறதில்லை!”

கவனமாக கேட்டுகொண்டிருந்த பக்தர்கள், ஒரே குரலாக, “பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் செய்கிறோம்” என்று பக்தியோடு பதிலளித்தார்கள்.

“சரி, காலையில் இரண்டு நிமிஷம், சாயங்காலம் இரண்டு நிமிஷம், எனக்காக ஒதுக்குங்கள். இருபத்திநான்கு மணி நேரத்தில், நாலு நிமிஷம் தான் கேட்கிறேன்.

“காலையில், இரண்டு நிமிஷம் “ராம, ராம” என்று சொலுங்கோ; சாயங்காலம் இரண்டு நிமிஷம் “சிவ, சிவ” ன்னு சொலுங்கோ…”

“அப்படியே செய்கிறோம்” என்று சுமார் நூறு பேர்கள் தெரிவித்து கொண்டார்கள்.

அமளி அடங்கியதும், பெரியவாள் அருகிலிருந்த தொண்டர்களிடம், “பத்து பன்னிரண்டு பேர்களாவது , சொன்ன சொல்லை காப்பாத்துவா” என்றார்கள்.

அந்த, யாரோ பத்து பன்னிரண்டு புண்ணியாத்மாக்களை உருவாக்குவதற்காகத்தான்., ஆழமான கருத்துடன், அரைமணி lecture!

குரங்கு, காட்டு யானை, கட்டெறும்பு, காக்கை – நமக்கு நல்ல வழிகாட்டிகள்; “ஆச்சார்யர்கள்”.

அவர்களை (அவைகளை) யாவது follow பண்ணலாம் தானே?

 

source::::www.periva.proboards.com

natarajan

“பயமுருத்தினால்தான் மடத்து ஞாபகம் உனக்கு வருமா !!!” …

 

பயமுறுத்தினா தான் ஞாபகம் வருமோ!

1976, பாளையங்கோட்டையில், நாங்கள் தங்கியிருந்த காலம். நள்ளிரவு வேளை. தாகம் எடுக்கிறதே என்று எழுந்து தண்ணீர் குடம் வைத்திருந்த இடம் பக்கமாகப் போனேன். ஸ்விட்சைப் போட்டு விட்டு, குடத்தைப் பார்த்தால், அதன் கழுத்தில் ஏதோ ஒன்று சுற்றியிருப்பது போல் தோன்றியது. அது லேசாக அசைந்தது. அதன் பின் தான் உறுதி செய்தேன். அது பாம்பு என்பதை…. எனக்கு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது.

ஹாலில் எல்லாரும் படுத்திருந்தார்கள். பாம்பை விரட்டப்போய், அது ஹாலுக்குள் வந்து விட்டால், ஏக கலாட்டா ஆகி விடும். குடும்பத்தார் பதறிப் போய் விடுவார்கள். நான் நின்ற இடத்தில் இருந்தபடியே பூஜை அறையைப் பார்த்தால் தெரியும்.அங்கே பல சுவாமி படங்களின் மத்தியில், காஞ்சி மஹாபெரியவரின் படம் நடுநாயகமாக இருக்கும்.

இதற்குள் பாம்பு இறங்கியது. அந்த அறை மிகவும் வழுவழுப்பாக இருந்ததாலோ என்னவோ, மிகவும் மெதுவாக ஊர்ந்தது. ஹால் பக்கம் போய்விடுமோ என்று பயந்திருந்த வேளையில், ஸ்வாமி படங்கள் இருந்த பக்கமாகப் போனது. மஹாபெரியவர் படத்தின் முன்னால், தலையைத் தூக்கிப் பார்த்தது. பிறகு, அங்கிருந்த ஒரு துவாரத்தின் வழியாக வெளியேறிவிட்டது.

எனக்கு அப்போது தான் மூச்சே வந்தது. பிறகு, குடும்பத்தாரிடம் தகவல் சொன்னேன். அடுத்தநாளே, காஞ்சி மடத்துக்குப் பயணமானேன். மஹாபெரியவரைத் தரிசனம் செய்தேன்.

பெரியவா, அப்போது சொன்னது என்னை அப்படியே திகைப்பில் ஆழ்த்திவிட்டது.

”பயமுறுத்தினா தான் மடத்து ஞாபகம் உனக்கு வருமோ?”

நான் பெரியவா காலில் தடாலென விழுந்து விட்டேன்.

ஆஹா, வீட்டிற்குள் பாம்பு வந்து, நான் பயந்து போனது எப்படி அவருக்குத் தெரிந்தது? என்னே அவரது ஞானம்! பாம்பின் வடிவாய் வந்ததே அவர் தானோ?

இன்னொருசம்பவத்தையும் குறிப்பிடுகிறேன்.

ஒரு சமயம் கர்நூலில் பெரியவர் முகாமிட்டிருந்தார். நாங்கள் குடும்பத்துடன் பெரியவரைத் தரிசனம் செய்தோம். ஊருக்குக் கிளம்பும் வேளையில், பெரியவர் என்னை அழைப்பதாக ஒருவர் தகவல் சொன்னார். நான் பெரியவா முன் நின்ற போது, “உன் குடும்பத்தில் யாரோ சந்நியாசம் வாங்கியிருக்க வேண்டுமே?” என்றார்.

“எனக்குத் தெரிந்து அப்படி யாருமில்லையே பெரியவா!” என அவரிடம் சொன்னேன். பெரியவா என்னிடம் “நீ ஊருக்குப் போய், பெரியவர்களிடம் விசாரித்து, மடத்துக்குத் தகவல் கொடு” எனச்சொல்லி விடை கொடுத்தார்.

நான் ஊருக்குப் போய் உறவினர்களிடம் விசாரித்தேன். அவர்கள் கூறிய பதில் என்னை திகைக்க வைத்தது.
“ஒரு வாரம் முன்பு தான், என் ஒன்றுவிட்ட சகோதரி மகன் ஆடிட்டர் சீனிவாசன், சேலம் கந்தாஸ்ரமத்தில் துறவறம் மேற்கொண்டு விட்டார்” என்ற தகவல் தான் அது.
பெரியவரின் அந்த ஞானசக்தியை எண்ணி என் கண்கள் பனித்தன. அவர் நடமாடும் தெய்வம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::www.periva.proboards.com

natarajan