“விடை காண முடியாத கேள்வி ” …


கும்பகோணத்தில் மடம் இருந்தபோது, ஒருநாள் பெரியவா ப்ரும்மசூத்ர பாஷ்ய பாடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஒரு வித்வான் ஏதோ சந்தேகம் கேட்கவும், பெரியவா “பாமதி” யிலோ, “பரிமளத்தி”லோ இதுக்கு விஸ்தாரமா பதில் இருக்கு. அத படிச்சா போறும்………மடத்து லைப்ரரில அந்த புஸ்தகம் இருக்கா பாக்கலாம்” என்றார்.

லைப்ரரி பொறுப்பாளர், அதை யாரோ வித்வான் எடுத்துக்கொண்டு போயிருப்பதாக சொன்னார்.

அதே சமயம் தெருக்கோடியில் பேரீச்சம்பழக்காரன் குரல் கேட்டது.

“பழைய புஸ்தகத்தை போட்டுட்டு செலபேர் பேரீச்சம்பழம் வாங்கியிருப்பா……..ஒடனே போய் அவன்ட்ட இருக்கற அத்தனை புஸ்தகங்களையும் வெலைக்கு வாங்கிண்டு வா” என்று ஒரு தொண்டரை அனுப்பினார்.

ஒரு கட்டு புஸ்தகத்தோடு அவர் வந்தார். எல்லாம் அபூர்வமான சம்ஸ்க்ருத புஸ்தகங்கள்! பழுப்பேறின காகிதம்!

“சாஸ்த்ரிகளே! என்னென்ன புஸ்தகம் இருக்குன்னு பாருங்கோ!”

வரிசையாக படித்துக்கொண்டே வந்தார். ……….”பாமதி”யும், “பரிமள”மும் ” அதில் இருந்தன!

பாஷ்ய பாடம் நடக்கும் போது பேரீச்சம்பழக்காரன் வருவானேன்? இல்லாத புஸ்தகங்கள் விலைக்கு வாங்கின புஸ்தகங்கள் நடுவில் இருப்பானேன்?

விடை காண முடியாத கேள்வி!

source::::www.periva proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/6347/#ixzz2rMpXNFlB

” You Forgot Our Enmity and Came Home …” !!!

Enmity developed between two close relatives in a village on account of claims over property. The bitterness led to a case in the court. There was not the barest exchange of a civil word between the two. The defendant’s son was to be married. He brought the invitation and placed it before Periyaval.

Periyaval looked at the attendant nearby and said, “Ask him if he will visit all his relatives and invite them?”

“Yes…we will visit all the relatives to invite them…”

After a minute’s pause, Periyaval said, “Ask him if he will visit the plaintiff also”.

The gentleman hesitated for a while. “I thought that if I went there and was insulted, it would be very hurting”.

“No such thing will happen. Give him the invitation in person and tell him that he must attend the wedding”.

The defendant went to the complainant’s house in trepidation. he recalled Periyaval’s words. “It is not in our culture to disrespect visitors. Everyone is essentially good’.

The complainant never dreamt that his sworn enemy would visit him in his house. When he saw the defendant, he hugged him to his bosom.

“Welcome, welcome”, he said happily and accepted the invitation. “You forgot our enmity and came home to invite me! I shall certainly come to participate in the celebrations”, he assured his relative.

The gentleman who had gone to give the invitation had a sudden change of heart. “Such a good man’, he thought. “Why did I develop such enmity for him?”

“Brother”, he said, “Let us forget about the case and the courts. Let us settle the matter amicably”.

The two gentleman raised their hands in salutation in Periyaval’s direction.

source:::www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/1162/enmity-desolved?ixzz2rEiZtYBa=undefined#ixzz2rMmXzJLP

” What is The Meaning Of ‘ Equipoise’ ? …”

Another interesting episode as narrated by SriMatam Balu mama.

”CAN YOU NOTICE ANY TRACES OF SADNESS/”

SriMatam, camp in Ilaiyaaththaankudi.

A Government officer, along with his friends( four or five) was proceeding to Ilaiyaththankudi. They were conversing among themselves. In between many topics, came that of Mahaswamikal.

” Periaval knows Samskrit well…”
“He also knows Tamizh, Telugu and Kannada..”
He knows only a few words in English; may have a little working knowledge..”
when we talk, if some English words pop up, He will understand..”

They reached the camp, and were waiting outside the room where Periava was staying.After ten minutes, Periava came out. surrounding Him were a lot of devotees, who were well versed in English, and Periava was talking to them.

“In every language, there are certain peculiar words. Such words can not be translated in other languages that easily. In ENGLISH language, there is a word called “EQUIPOISE”. Can you tell me the meaning of that word? ..”

Each one gave his own explanation but not one word could convey the exact meaning of that word.

Periava saw our Govt. officer and his friends and asked them if they knew.

Our Govt. officer sweated profusely. He tried to explain
something but failed in his attempt.

“EQUIPOISE” means “MENTAL EQUANIMITY”—-said Periava .
Every one was stunned!. He diverted the talk to some other topic. He didn’t give room for the others to feel bad..

After He walked some distance, HE stopped in the centre of the hall..

At some distance, an old lady was sitting, and with her eyes closed, was doing some Japam.

“How does that lady look?”—asked Periava.

” Very calm, quiet, and without any worries in her mind…” answered our friends.

“Do you know, who she is?”—asked Periava.

Nobody answered.

” There was a great writer, by name K.S.Venkataramani. He has written a lot of books.KANDAN, The Patriot, MURUGAN, The Tiller( I have read them too!) are all famous.In these novels the rural setting is very natural.

” He brought a French ‘Thathva Gnani’ by name Paul Brunton to Thiruvannamalai, and brought him to me also. He had a very good bonding with our ‘THATHVAM’

“This couple had a son. K.S.V. passed away. The son is in mental hospital.”

” She doesn’t have any friends, or relatives, no money, nothing, but mountains of sadness! Can you see any trace of those worries on her face?”

” That stage is called “EQUIPOISE”!

Where did Periava do M.A. in English?

“Vaak Dhevatha lives in His tongue!

source:::: http://www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/2499/mahaperiava-dharsana-anubhavangal-3?ixzz2qpGXks5v=undefined#ixzz2qtVbPNmn

” அம்பாள் ‘படி’ அளப்பாள்” …. !!!


பெரியவாள் காசி யாத்திரை (1933) செல்லும் வழியில் ஒரு ஆந்திர குக்கிராமம் ஒன்றில் முகாமிட்டபோது ஸ்ரீ ஸி.எஸ்,விக்கு (விச்வநாதையர்) பொத்துக்கொண்டு வந்து விட்டதாம்.

“எடுத்துச் செலவழிப்பதற்கு நம் மடத்தில் என்ன கொட்டியா கிடக்கிறது? இந்தத் தரித்திரம் பிடித்த ஊரில் இத்தனை யானையையும்,ஒட்டையையும்,ஜனங்களையும் கட்டித் தீனி போடுவதென்றால் எப்படி?” என்கிற ரீதியில் பெரியவாள் காதுபடப் பொரிந்து தள்ளி விட்டாராம்.

பெரியவாள் அவரைக் கூப்பிட்டார். சாந்தமாக ” நீ ஏன் பதட்டப்படறே? நாம நல்ல காரியத்தை உத்தேசிச்சுப் பொறப்பட்டிருக்கோம்.நம்ப லக்ஷ்யம் நன்னாயிருந்தா அம்பாள் கை கொடுக்காமப் போவாளா? அவதானே எல்லாருக்கும் படியளக்கிறா? நமக்கும் நிறைய அளப்பா”என்றாராம்.

மறுநாள், விச்வநாதய்யரால் நம்பவே முடியவில்லை! அந்தக் கிராமத்தில் ஏதாவது திருவிழா நடந்ததா, அல்லது சந்தை கூடிற்றா, அல்லது இப்படி எதுவுமே
நடக்காமல் பெரியவாளின் சக்தி மட்டும்தான் வேலை செய்ததா என்று அவருக்குச் சொல்ல தெரியவில்லை.

ஆனால் சொல்லத் தெரிந்தது, மறுநாள் காலையிலிருந்து அந்த நிர்மாநுஷ்யக் குக்கிராமத்தில் புற்றீசலாகப் பக்தர்கள் பெரியவாளை வழிபட வந்து கொண்டேயிருந்ததுதான். வந்தது மட்டும் இல்லை.

அக்காலத்தில் வெள்ளி நாணயம் வழங்கி வந்ததல்லவா? வந்த பக்தர்கள் யாவரும் இப்படி நாணயங்களைக் கொண்டு வந்து கொட்டினார்கள். “நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா இதை (எஸ்,வி.என்னிடம் கூறியது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு-கட்டுரை-1960-பின் பாதியில்) அந்த மாதிரி ஒத்தை ஒத்தை ரூபாயா வந்து குன்று மாதிரி குவிஞ்சதேயில்லை! மடத்து ஜாகையிலே எல்லாத்தையும் சேத்துக் குவிச்சு எண்ணிட்டுப் படியாலே எடுத்து எடுத்துச் சாக்கிலே போட்டுக் கட்டினோம்.

பெரியவாள்,”அம்பாள்,’படி’ அளப்பாள்’னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே ‘படியாலே’ அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?”ன்னா!

“பெரியவாளுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. பெரியவா செய்ய முடியாதது எதுவும் இல்லை. இருந்தாலும் ‘எங்களைக் கூட வெச்சுண்டு ஆட்டம் போட்டிருக்கா” என்று முடித்தார் விச்வநாதையர்
source:::: http://www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/5902/#ixzz2qtSzm8HJ

படித்ததில் பிடித்தது …பணம் மட்டும் சந்தோஷம் கொடுக்காது …

அரசு ஊழியர் ஒருவர் பெரியவாளை நமஸ்கரித்து விட்டுத் தன் கஷ்டங்களையெல்லம் சாங்கோபாங்கமாக விவரித்தார். “பணம் இல்லாதவன் பிணம் என்பது சரியான வார்த்தை! கடன் வாங்கி குடித்தனம் பண்ண வேண்டியிருக்கு. இன்னும் கொஞ்சம் பணம் இருந்தால் சந்தோஷமாக இருப்பேன்”. “உன்னோட சம்சாரம் – குழந்தைகள் எல்லோரும் உன்கிட்ட பிரியமா இருக்காளா?” கேட்டார் பெரியவா “எல்லோருக்கும் என்னிடம் ரொம்பப் பிரியம். எனக்குத் தலைவலின்னா கூட தவிச்சுப் போயிடுவா…” என்றார் இவர். “சரி.. உட்காரு” அவரும் சற்றுத் தள்ளி ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டார். பத்து நிமிஷத்துக்குள் ஒரு பெரிய மனிதர் மனைவியுடன் வந்தார். பெரிய தோரணை. பழக்கூடை, புஷ்பக்கூடை சகிதம் வந்து பெரியவாளை நமஸ்கரித்து சொன்னார்: ”நான் ஏழையா இருந்தால் செளக்கியாமா இருப்பேன். பங்களா, கார் – எதுவும் நிம்மதியைக் கொடுக்கல்லே. எனக்குச் சக்கரை வியாதி. எந்த ஒரு நல்ல பொருளையும் வாயில் போட முடியல்லே… இரண்டு பையன்ளும் குட்டிச் சுவராகப் போய்விட்டார்கள். உலகத்திலுள்ள அத்தனை கெட்ட பழக்கமும் இருக்கிறது. நிறைய கடன். வயதான காலத்தில் நிம்மதி இல்லாமல் இருக்கின்றோம்” என்றார். இதையேல்லாம் அர்சு ஊழியர் கேட்டுக் கொண்டிருந்தார். தன்னுடைய வாழ்க்கையே மேல் என்று அவருக்கு தோன்றிவிட்டது. பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு நிம்மதியாக சென்றார். இதற்க்குத்தான் உம்மாச்சி தாத்தா அவரை உட்கார வைத்தாரோ ??? பெரியவா…. “பணம் சந்தோஷத்தை கொடுக்காது என்பதற்க்கு இது ஒரு உதாரணம்” என்று கூறினார்கள் பெரியவா.

 source::::input from a friend of mine 

natarajan

” உன் பெயர் என்ன ?… ‘நாராயணசுவாமி ‘…” !!!

 
“பரீட்சையில் நிறைய மார்க் வாங்கினால்தான் மேலே மேலே படிக்க முடியும். இல்லையென்றால் வெறும் போஸ்ட்–கிராஜுவேட் படிப்புடன் நின்றுவிட வேண்டியதுதான்.

நான் எவ்வளவு முயன்றும் எண்பதுக்கு மேல் வாங்க முடியவில்லை. தொண்ணூறாவது வேணும். நியுமராலஜி பிரகாரம் பெயரை மாற்றி வைத்துக்கொண்டால் மார்க் நிறைய கிடைக்கும் என்றார்கள். எண்கணித ஜோதிடர் ஒருவரிடம் போனேன். நாராயணஸ்வாமி ( Narayanaswami ) என்ற பெயரை Narain என்று வைத்துக்கொள்ளச்சொல்கிறார். பெரியவா உத்தரவு கொடுத்தால் ‘நாரெய்ன்’ என்று வைத்துக்கொள்வேன்.”

பெரியவா ஸந்நிதியில், பதினைந்து பேர் நின்றுகொண்டிருந்தபோது தன் விண்ணப்பத்தைச் சொல்லிமுடித்தான், கல்லூரி மாணவன் ஒருவன்..

இதைச் சாக்காக வைத்துக்கொண்டு பெரியவா ஒரு சொற்பொழிவையே நிகழ்த்திவிட்டார்கள்.

” நாற்பது சம்ஸ்காரங்களில் ஒன்று, நாமகரணம். பலபேர்கள் முன்னிலையில், வேதமந்திரங்களைக் கூறி நிகழ்த்தப்படும் சடங்கு. நாமகரணம் செய்வதற்குத் ( பெயர் வைப்பதற்குத்)தான்
வேத மந்திரங்கள் இருக்கின்றன. நாமவிகரணத்திற்கு (பெயரை சிதைத்து மாற்றுவதற்கு) இல்லவே இல்லை.

சுவாமி பெயரைத்தான் வைக்கச் சொல்லியிருக்கு. ‘நம்பி பிம்பி என்று பெயர் வைத்தால் அதெல்லாம் பின்னால் காப்பாற்றாது; கண்ணன் பெயரை வையுங்கள்’ என்று ஒரு ஆழ்வார் பாடியிருக்கிறார்.

நாராயணசுவாமியை, அவ்வளவு நீளமாகக் கூப்பிடா விட்டாலும், நாராயணா, நாராயணா என்று அழைப்பார்கள். சுலபமா புண்ணியம் கிடைத்துவிடும்.

நியூமராலஜி என்று சமீப காலத்தில் பிரசித்தமாக இருக்கு. ஒவ்வொரு இங்க்லிஷ் எழுத்துக்கும் நம்பர் கொடுத்து, அதைக்கூட்டி, ‘நல்லது, கெட்டது’ என்கிறார்கள். இது சுதேசி சரக்கு இல்லை என்பது தெரிகிறது. எண்கணிதப்படி பெயர் மாற்றம் செய்து கொண்டவர்களில் பலர், நல்ல பலன் கிடைத்தது என்கிறார்கள். அது போகட்டும், நியூமராலஜியைப் பற்றி இப்போ தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.

பையனுக்கு நிறைய மார்க்கு வாங்கணும்னு கவலை; அதனால் பெயரைக் கொஞ்சம் மாற்றி வைத்துக்கொண்டால், ஆதாயம் கிடைக்காதா என்று பார்க்கிறான். அந்த ஆசை சரிதான்; வழி அவ்வளவு சரியில்லையே? என்று சிந்திக்க வைக்கிறது.

கல்வி அறிவை சரஸ்வதி கடாக்ஷம் என்பார்கள். சரஸ்வதியின் அருள் இருந்தால் படிப்பு வரும்; மார்க் வரும். அதற்கு என்ன செய்யணும்?

சரஸ்வதி ஸ்தோத்ரம் இருக்கு;ஸௌந்தர்யலஹரியிலே மூணு ஸ்லோகம், சரஸ்வத பிரயோகம்; மேதாஸூக்தம் என்று வேதமந்திரமே இருக்கு; குமரகுருபரரின் சகலகலாவல்லிமாலை, கம்பநாட்டாழ்வாரின் சரஸ்வதி ஸ்தோத்ரம்—–எல்லாம் பாராயணம் செய்யலாம்.

ஹயக்ரீவர் என்று விஷ்ணு அவதாரம். அவர்தான் சகல கலைகளுக்கும் ‘ட்ரெஷர்ஹௌஸ்’ என்பார்கள். ஹயக்ரீவ ஸ்தோத்ரம், மந்திரம் இருக்கு. மேதா தக்ஷிணாமூர்த்தி மந்திரம் இருக்கு.

இவைகளையெல்லாம் லக்ஷியம் செய்யாமல், இங்க்லீஷ் எழுத்துக் கணக்குப்படி பேர் மாற்றம் செய்து கொள்வது, சாஸ்திர சம்மதமாகப் படவில்லை.”

இத்தனை விஷயங்களையும் பொதுவாகச் சொல்லிவிட்டு, பின்னர் மாணவனைப் பார்த்தார்கள் பெரியவா.

அவன் கண்கள் கெஞ்சிக்கொண்டிருந்தன.

தொண்டர் மூலமாகப் பிரசாதம் கொடுக்கச் சொன்னபோது மாணவர் பெயரைக் கேட்கச் சொன்னார்கள் பெரியவா.

“நாராயணஸ்வாமி” என்று கம்பீரமாகப் பதில் வந்தது!

source::::www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/2799/numerology-analysis#ixzz2q3gzp3dZ

“பச்சை மா மணி போல் ….” !!!

இரவு வேளை.

விஷய ஞானமுள்ள அடியார் ஒருவர் வந்து பெரியவாள் முன் உட்கார்ந்தார்.

“ஆகாரம் பண்ணியாச்சா?”

” ஆச்சு”

“என்ன சாப்பிட்டே?”

“உப்புமா”

ஒரு நிமிட இடைவெளிக்குப் பின் பெரியவாள் சொன்னார்கள். “உனக்கு ஒரு கதை தெரியுமோ? உப்புமாக் கதை”

“தெரியாது”

“கேளு. ஒரு பக்தன் ஸ்ரீரங்கத்துக்குப் போனான். பெருமாளை சேவித்தான். ஒரு சத்திரத்தில் ராத்திரி சாப்பிடப் போனான். உப்புமா போட்டார்கள். உப்புமா சரியாக வேகவில்லை.சின்னச் சின்னதாய் நிறைய கல் வேறே இருந்தது. பல்லில் அகப்பட்டு, வாயெல்லாம் புன்ணாகி , சிவப்பாகி விட்டது. நிறைய மிளகாய் தாளித்துப் போட்டிருந்ததால், காரம் தாங்கவில்லை. கண்களில் நீர் வழிந்து, சிவந்து போச்சு. அப்போ, ரொம்ப சிரமத்திலே ஒரு பாட்டுப் பாடினான். உனக்குத் தெரியுமோ?”

“தெரியாது”

“என்ன அப்படிச் சொல்றே? பச்சை மால் மலை போல் மேனி…..”

“இது எனக்குத் தெரியும்.”

“இவன் கொஞ்சம் மாற்றிப்பாடினானாம். பச்சை மா (வேகாத மாவு) , மணி போல் மலை ( உப்புமாவில் மணி மணியாகக் கற்கள்) , பவள வாய் (சாப்பிட்டவனுக்கு, வாய் புண்ணாகிச் சிவந்தது), செங்கண் ( காரம் தாங்காமல் கண்ணீர் வழிந்ததில், கண்களும் சிவந்து விட்டன), அச்சுதா….”

அருகிலிருந்தவர்களுடன் பெரியவாளும் சேர்ந்து கொண்டு குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள்!

Source—-Mahaperiaval Dharisana Anubavankal—–vol. 7  &www.periva.proboards.com

Compiler—T.S.Kothandarama Sarma.

Publishers——Vanathi Pathippakam.

natarajan

Read more: http://www.periva.proboards.com/thread/2934/mahaperiavas-humour#ixzz2pshvR4G2