” இது தேவராஜ ரகசியம் ” !!!

பெரியவா தேனம்பாக்கத்தில் தங்கியிருந்த சமயம். ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் சீமா பட்டாசாரியாரை அழைத்து வரும்படி சொன்னார். அவரும் வந்து வந்தனம் செய்தார்.

“இன்னிக்கு என்ன திதி?”

பட்டர் மெதுவாக “ஏகாதசி” என்றார்.

“உபவாசம் நமக்கு மட்டும் தானா? இல்லே, வரதனுக்கும் தானா?”

பட்டர் திகைத்துப் போய் நின்றார்.

“பெருமாளுக்கு இன்னிக்கு நைவ்வேத்யம் ஏன் செய்யல்லே?”

அதிர்ச்சியடைந்த பட்டர் நாக்குழற “தெரியல்லே.. விசாரிச்சிண்டு வரேன்” என்று கலவரத்துடன் கோயிலுக்குச் சென்றார்.

விசாரணையில் உள்கட்டில் ஏதோ தவறு நடந்துள்ளது என்ற உண்மை தெரிய வந்தது. அதை சரி செய்து, தக்க பிராயச்சித்தம் செய்து, பெருமாளுக்கு திருவமுது படைத்து, பிராசதத்தை பெரியவாளுக்கு திருவமுது படைத்து, ப்ரஸாதத்தை கொண்டுவந்து சமர்ப்பித்தார் பட்டர்.

வரதராஜ பெருமாளுக்கு நைவ்வேத்தியம் நடக்கவில்லை என்பது பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? தெரிந்திருந்தாலும், அதைப்பற்றி அவர்கள் கவலைப் படுவானேன்?

தேவரகசியம் என்கிறார்களே? அது இதுதானோ? இல்லை, இது தேவராஜ ரகசியம்..! (வரதராஜருக்கு, தேவராஜன் என்ற திருநாமம் உண்டு.)

source::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/4736/#ixzz2a7FxzaDh

“இன்று பூஜைக்கு தபோவனம் சுவாமிகளை கூப்பிட்டிருந்தேன் ”

காஞ்சி மஹானை சந்தித்த ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்

மஹான் களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது. ஆனால் அவர்களை வழிபடுபவர்களின் மனப்பக்குவத்தில் தான் வித்தியாசம் ஏற்படுகிறது. ஒரு குருநாதரை ஏற்று கொண்டு மற்றவரை வெறுக்காமல், மஹானுக்கு மஹான் வித்தியாசம் என்ற நிலை மேற்கொள்ளாமல் அனைவரும் சமம் என்று வணங்கவேண்டும் .

ஒரு சமயம் தபோவனத்தில் பகல் வேளையில் குருநாதர் (ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்) முன்னிலையில் அமர்ந்து பாடி கொண்டிருந்தோம். திடீரென்று எழுந்த ஸ்வாமிகள் உள்ளே சென்று பின் வெகு நேரமாகியும் வெளி வரவில்லை. நாங்கள் தொடர்ந்து பாடிகொண்டிருந்தோம். சுமார் 2 மணி நேரம் கழித்து அப்போது தான் குளித்துவிட்டு வந்தது போன்ற தோற்றத்துடன் வெளியே வந்தார். வந்தவுடன் சொன்னார் “அங்கே இளையாத்தங்குடியில் ஆச்சார்யாள் பெரிய பூஜை பண்றாங்க. அதுக்கு ஸ்வாமி யை கூப்பிட்டு இருந்தாங்க. போய் வர நேரம் ஆகிவிட்டது”.

பலருக்கு அது ஸ்வாமியின் பல ஆச்சரிய லீலைகளில் ஒன்று என தோன்றினாலும் ஒரு சிலருக்கு ட்டும் சுவாமியின் வார்த்தைகளில் சந்தேகம் வந்தது. சிறிது நேரத்திற்கேல்லாம் பஜனை முடிந்தது. சந்தேகப்பட்ட நபர்கள் ஊர் திரும்பி செல்ல உத்தரவு வேண்டி நின்றனர். ஸ்வாமி அவர்களை “இருந்து விட்டு நாளை போகலாம்” என்று கூற அவர்களும் ஸ்வாமியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தங்கிவிட்டனர்.

மறுநாள் காலையில் தினசரி வழிபாட்டுக்கு ஒரு புதிய தம்பதியர் வந்தனர். ஸ்வாமி அவர்களை பார்த்து “நாம் எங்கிருந்து வருகிறது” என்று கேட்க அவர்கள் ” இளையாத்தங்குடியிலிருந்து வருகிறோம்” என்றனர். அதற்க்கு ஸ்வாமி “அப்படியா! அங்கு என்ன விசேஷம் ” என்று கேட்க அவர்கள் சொன்னார்கள் ” நேற்று மஹா பெரியவர்கள் விசேஷ பூஜை பண்ணினார்கள். நைவேத்யம் செய்யும் சமயம் ஒரு ஆடு வந்தது. பெரியவாள் அந்த நைவேத்தியத்தை அதனிடம் காண்பிக்க அந்த ஆடு சிலவற்றை சாப்பிட்டவுடன் பெரியவாள் தீபாரதனை பண்ணினார்கள். பிறகு அந்த ஆடு அங்கிருந்து போய் விட்டது. அப்போது பெரியவாள் “இன்றைய பூஜைக்கு தபோவனம் பெரியவாளை கூப்பிட்டுருந்தேன். அவர்கள் தான் இப்போது வந்து சென்றார்க்ள்” என்று சொன்னவுடன் நாங்கள் ஊருக்கு கிளம்பும் சமயம் அவரிடம் தபோவனம் பெரியவாள் யார் ஸ்வாமி என்று கேட்க அவர் தங்களை பற்றி சொல்லி அவசியம் தரிசித்து வரவும் என்று ஆசிர்வதித்து அனுப்பினார் என்றனர்.

உடன் இருந்த அந்த சந்தேகப்பட்ட நபர்கள் நால்வரும் வெட்கி தலை குனிந்தனர்.

 

source::::input from my friend

natarajan

“மகாபெரியவரும் அவர் குரு ஸ்ரீ ஆத்ம போதேந்திராளும் “…..

M SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
MECHARI BRAHMASRI PATTU SASTRIGAL NARRATES….

We read so many articles about Mahaperiyava….It gets even more interesting if the concerned person from that incident narrates this to you after you read it. Kanjira Shri Ganesh Kumar narrated this incident to me after I read this first article few years back…..

”மகா பெரியவாளோட அனுஷ ஜயந்தியை, வருஷம் தவறாம நடத்திண்டு வரேன். சில வருஷத்துக்கு முன்னால, ஜயந்தித் திருநாள் தருணத்துல நடந்தது இது.

ஒரு மாலை நேரம்… அன்பர் ஒருத்தர் அயோத்தியா மண்டபத்துக்கு வந்தார். ‘என் பேரு சுவாமிநாதன். நீங்க ஏன் மகாபெரியவாளோட பாதுகை யையும் திருவுருவப் படத்தையும் வைச்சு அனுஷ ஜயந்தி நடத்தறேள்? பஞ்சலோக விக்கிரகம் பண்ணி, அதுக்குண்டான வழிபாடுகளைச் செஞ்சு, ஜயந்தி விழாவை நடத்தலாமே?’ன்னு என்னைக் கேட்டார்.

அதோட நிக்காம, ஒரு பையிலிருந்து ரெண்டு பித்தளை சொம்புகளை எடுத்துக் கொடுத்து, ‘மகாபெரியவாளின் பஞ்சலோக விக்கிரகம் செய்யறதுக்கு முயற்சி பண்ணுங்க. நிச்சயம் அது கைகூடும். மாம்பலத்துலயே அவர் கோயில்ல குடியிருந்தபடி எல்லார்க்கும் அருள்பாலிக்கப் போறார், பாருங்க’ என்று சொல்லி, ஒரு ஓரமா இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தார்.

பத்து நிமிஷம் கழிச்சுப் பார்த்தா, அங்கே அவரைக் காணோம்! மண்டபம் முழுக்கத் தேடியும் கிடைக்கலே. பக்தர்கள்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னதும், பஞ்சலோகத் திருமேனி பண்றதுக்கு, எல்லாரும் ரொம்ப ஆர்வத்தோட உதவி பண்ணாங்க.

அப்புறம்… மகாபெரியவாளோட திருவுருவத்தை பஞ்சலோக விக்கிரகமா வடிக்க, சுவாமிமலைக்குப் போனோம். அங்கே… கோயிலுக்குப் பக்கத்துலயே இருக்கிற தேவ சேனாபதி ஸ்தபதியைப் பாத்தோம். மகாபெரியவாள்மேல ரொம்ப பக்தி கொண்டவர் அவர். வயசானவர். ‘இத்தனை வயசுக்குப் பிறகும், மகாபெரியவாளோட பஞ்சலோக விக்கிரகம் பண்ற பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்கே’ன்னு சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டார். ஒரு நல்ல நாள் பார்த்து, விக்கிரகம் பண்ற வேலையை ஆரம்பிச்சு, பிரமாதமா தயாரிச்சு முடிச்சார் (பெரியவாள் விக்கிரகம்தான், அவர் பண்ணின கடைசி விக்கிரகம்).

இந்த நேரத்துல, கையில பணம் குறைச்சலா இருந்துது. விக்கிரகத்தை வாங்கிண்டு வரணும்னா, சுமார் 5,000 ரூபா வரைக்கும் தேவையா இருந்துது. ‘எல்லாம் பெரியவா பார்த்துப்பா’னு தைரியமா இருந்தேன். திடீர்னு ஒருநாள், கடம் விநாயக்ராமோட தம்பி சுபாஷ் சந்திரனோட வீட்டுக்கு, அவரோட மாப்பிள்ளை கஞ்சிரா வித்வான் கணேஷ்குமார் அமெரிக்காலேருந்து போன் பண்ணியிருக்கார்.

‘மாம்பலத்துல மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்னு ஒருத்தர், காஞ்சி மகா பெரியவாளோட பஞ்சலோக விக்கிரகத்தைச் சிரமப்பட்டுப் பண்ணியிருக்காராம். ‘அவருக்குப் பணம் கொடுத்து ஒத்தாசை பண்ணு’ன்னு அதிகாலைல, மகா பெரியவா என் சொப்பனத்துல வந்து சொன்னார்’னு கணேஷ்குமார் சொல்லிருக்கார். சுபாஷ் சந்திரனோட மனைவி கீதா நேர்ல வந்து, ‘இந்த 6,000 ரூபாயை உங்க கிட்ட கொடுக்கச் சொன்னார்’னு முழு விவரமும் சொல் லிக் கொடுத்தப்ப, ஆச்சரியத்துல அசந்து போயிட்டோம் நாங்க!

பணத்துக்கு என்ன பண்றதுன்னு தவிச்ச கொஞ்ச நேரத்துலயே, 6,000 ரூபாய் கைக்கு வந்தா எப்படி இருக்கும் எனக்கு? அப்படியே உருகிப் போயிட்டேன். இத்தனைக்கும் எனக்குப் பணம் தேவைப்படறதுன்னு யார்கிட்டயும் நான் ஒரு வார்த்தைகூடச் சொல்லலை. ஆனா, எங்கேயோ அமெரிக்காவுல இருக்கிற கணேஷ் குமாரோட சொப்பனத்துல வந்து, மகாபெரியவாளே சொல்லிருக்கார்னா, பெரியவாளோட மகிமையை என்னன்னு சொல்றது! ஆறு வருஷத்துக்கு முன்னால நடந்த சம்பவம் இது!

பணம் கைக்கு வந்ததும், வைகாசி அனுஷ ஜயந்தி நடத்தறதுக்கு முன்னேயே, ஜூன் மாசம் 3-ம் தேதி ராத்திரி, சுவாமிமலையில ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமியை கண் குளிரத் தரிசனம் பண்ணிண்டு, வடவாம்பலம் வழியா வந்து, அங்கே ஸ்ரீஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல மகா பெரியவாளோட பஞ்சலோக விக்கிரகத் திருமேனியை ஒரு வாகனத்துல வெச்சு, தீபாராதனை காட்டினோம்.

பூஜையெல்லாம் முடிச்சுட்டு, வண்டியைக் கிளப்பினா… ம்ஹூம்.. வண்டி ஒரு அடிகூட நகரலை. அங்கேயே நின்னுடுத்து. டிராக்டரைக் கொண்டு வந்து இழுத்துப் பார்த்தோம்; லாரியைக் கொண்டு வந்து கட்டி இழுத்தோம்; ம்ஹூம்… வண்டி அசைவேனாங்கறது! கிட்டத்தட்ட விடியற்காலை நேரமும் வந்தாச்சு. அந்த நேரத்துல, விவசாயி ஒருத்தர் ரெண்டு சிநேகிதர்களோடு அங்கே வந்தார். அவர் தினமும் ஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல பிரார்த் தனை செஞ்சுட்டுதான் கூலி வேலைக்குப் போவாராம்.

எங்ககிட்ட வந்த அந்தக் குடியானவர், ‘என்ன நடந்துது?’ன்னு கேட்டார். ‘ஏனோ தெரியலை; வாகனம் நகரவே இல்லை’ன்னு சொன்னோம். அப்ப, அவர் சொன்ன வார்த்தைகள், எங்களை மெய்சிலிர்க்க வெச்சுடுச்சு!

‘மகா பெரியவாளும் அவரோட குருவும் ஆத்மார்த்தமா சம்பாஷணையில இருக்கிற நேரத்துல, நீங்க எப்படிக் குறுக்கிடலாம்? பாதிப் பேச்சுல, பெரியவாளைப் பிரிச்சு எப்படி சென்னைக்குக் கூட்டிட்டுப் போகலாம்? இப்ப… அவங்க சம்பாஷணையை நிறுத்திட்டாங்க. இப்போ வண்டியை இழுத்துப் பாருங்க, நல்லாவே நகரும்’னார். அதோட நிக்காம, எங்களோட அவரும் சேர்ந்து, ‘ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர‘ன்னு சொல்லிண்டே வாகனத்தை நகர்த்தறதுக்கு உதவி பண்ணினார். வண்டியும் எந்தச் சிரமமும் இல்லாம நகர்ந்தது. வழியிலயும் எந்தவித அசௌகரியமும் இல்லாம, விக்கிரகத்தை நல்லபடியா சென்னைக்குக் கொண்டு வந்தோம்.

மகா பெரியவா, சாதாரணமானவரா என்ன? அவர், மகான் மாத்திரமில்லை; சாட்சாத் ஈஸ்வர அம்சம். இல்லேன்னா இதெல்லாம் நடக்குமா? இந்த பஞ்சலோக விக்கிரகத் திருவுருவமேனியைச் செஞ்சது நாங்களா? இல்லவே இல்லை. அவரோட காரியத்தை அவரே நடத்திண்டுட்டார். இப்ப… பாதுகையோடு பஞ்சலோக விக்கிரகமும் தரிசனத்துக்கு இருக்கு. அடுத்து, பெரியவாளுக்குக் கோயில் கட்டுற வேலைதான் பாக்கி. மகா பெரியவாளுக்கு கோயில்ங்கறது, பக்தர்களோட கோரிக்கைதான். இதையும் அவரே நடத்திக் கொடுத்துடுவார், பாருங்கோ!

ஒண்ணு மட்டும் சத்தியம்! ‘இன்னது நடக்கணும்’னு நாம சங்கல்பம் பண்ணிண்டாப் போதும்; அவரே நடத்தி வெச்சுடுவார். அவரோட அன்பாலதான் எல்லாமே இயங்கறது; மகா பெரியவா, கருணாமூர்த்தியாச்சே!” என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி, பஞ்சலோக விக்கிரகத் திருமேனியாகக் காட்சி தரும் காஞ்சி மகானைப் பார்த்த பட்டு சாஸ்திரிகள், அப்படியே வணங்கித் தொழுதார்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM

source:::: http://www.periva.proboards.com
natarajan
Read more: http://periva.proboards.com/thread/4721/mechari-brahmasri-pattu-sastrigal-narrates/#ixzz2Zn9MY1bb

” எங்கள் தெய்வம் இனி இவர்தான்” !!!

 

 
ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த எழுத்தாளர்
மணியன். பிற்காலத்தில் தனக்குச் சொந்தமாக-
இதயம் பேசுகிறது என்கிற பத்திரிகையை
ஆரம்பித்தார்.

அந்தப் பத்திரிகையில் அவர் வெளிநாட்டுக்குச்
சென்று இருந்தபோது நடந்த ஓர் அற்புதமான
விஷயத்தைக் குறிப்பிட்டு இருக்கிறார். எந்த
நாட்டிற்குப் போனாலும் அவர் தங்கும் அறையில்
இருக்கும் மேஜை மீது காஞ்சி மகானின் படத்தை
வைத்து, தினமும் வணங்குவது வழக்கம். அவர்
அப்போது தங்கி இருந்தது ஓர் ஆங்கிலேயரின் வீடு.

வீட்டின் சொந்தக்காரர், மணியனிடம் 
“படத்தில் இருப்பவர் யார்?” என்று கேட்டு
இருக்கிறார். “அவர் நான் வணங்கும் தெய்வம்”
என்று பதில் சொன்னார் மணியன்.

“சக்தி வாய்ந்த தெய்வமா அவர்? நாம் நினைத்தது
நடக்குமா? என்று ஆங்கிலேயர் ஒரு வினா எழுப்ப
அதற்கும் மணியன் பதில் சொன்னார்.

“நாம் உண்மையாக வேண்டிக் கொண்டால்,
நிச்சயம் நாம் நினைத்தது நடக்கும். அந்த
கருணைக்கடல் அதை நிறைவேற்றி வைப்பார்.

மணியன் சொன்ன தோரணை,அவர் குரலில்
ஒலித்த
பக்தி, ஆங்கிலேயரை நம்பச் செய்தது.

“என் மகன் எங்கோ போய்விட்டான்…அவனைப்
பிரிந்து என் மனைவி ஓயாமல் அழுது கொண்டு
இருக்கிறாள். அதனால்தான் ஒரு நம்பிக்கையோடு
உங்களிடம் கேட்டேன்.

“எங்கள் குருவான காஞ்சி மகானை நீங்கள்
மனமுருகி
பிரார்த்தியுங்கள்..உங்களுக்கு அவரது அருள்
நிச்சயம் கிட்டும்.

மணியன் வாக்கை அப்படியே ஏற்றுக்கொண்ட
ஆங்கிலேயர், காஞ்சி தெய்வத்தின் படத்தின்
முன் நின்று மனமுருகி வேண்டி தனக்கு
அருள் புரியும்படி வேண்டிக் கொண்டார்.

சில மணி நேரம் கடந்ததும், அவரது வீட்டு
போன் ஒலித்தது.ஆங்கிலேயர் போய் போனை
எடுத்தார். போனில் வந்த செய்தி அவருக்கு
அளவு கடந்த வியப்பை அளித்தது.

காணாமற்போன அவரது மகன்தான் பேசினான்,
தான் எங்கேயோ பொயிருந்ததாகவும்,
இப்போது ஊருக்கு வந்துவிட்டதாகவும்,உடனே
வீட்டுக்கு வருவதாகவும் தகவல் சொன்னான்.

ஆங்கிலேயருக்கு மெய் சிலிர்த்தது.காஞ்சி மகானை
வணங்கியபடியே,மணியனுக்கு நன்றி சொன்னார்.

“எங்கள் தெய்வம்…இவர்தான்….இந்த உருவில்தான்
தெய்வத்தைப் பார்ப்போம்” என்று கடல் கடந்து
எங்கேயோ இருந்த ஆங்கிலேய தம்பதிகள்
ஆனந்த அனுபவத்தில் உருகி நின்றார்கள்.

 
source :::::input from my friend 
natarajan

” இந்த பொன்னாடையால் என்ன பயன் ? “

காஞ்சி முனிவரின் ஜெயந்தி விழா நடந்து கொண்டிருந்தது அயோத்யா மண்டபத்தில்.

ரொம்பப் பிரமாதமாகவும் உருக்கமாகவும் பேசினார் அந்தப் பிரமுகர். கேட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருக்கும் வியப்பு.

பரமாச்சார்யார் மேல் இவருக்கு இத்தனை மதிப்பா ?!

அவருக்குப் பொன்னாடை போர்த்த வந்தபோது, “இந்தப் பொன்னாடையால் என்ன பயன் ? பெரியவரின் ‘தெய்வத்தின் குரல்‘ நூலை அன்பளிப்பாக அளித்தால் எவ்வளவோ உபயோகம் அல்லவா ?” என்று கூறினார்.

இதைக் கேட்ட இன்னொரு வி.ஐ.பி. நெகிழ்ந்து போய், தனிப்பட்ட முறையில் ‘தெய்வத்தின் குரல்‘ ஆறு பாகங்களையும் வாங்கி அவருக்கு அனுப்பி வைத்தார்!

அனுப்பியவர் பத்மா சுப்பிரமணியம்.

யாருக்குத் தெரியுமா ?

அப்துஸ் சமது!

source:::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/4737/#ixzz2ZDmy0TkB

“LIC பில்டிங்கில் எத்தனை மாடிகள் ? “

1956 – நவம்பர் நுங்கம்பாக்கத்தில் பெரியவா முகாமிட்டிருந்தா. ஒரு நாள் ராத்திரி 10 மணிக்கு மவுண்ட் ரோடில் நடந்து சென்று கொண்டிருந்தார். 15 பேர் கூட சென்று 
கொண்டிருந்தோம். இந்து பத்திரிகை ஆபீஸ் விஜயம்.

LIC கட்டிடம் அருகே வந்த போது கண்ணன பெரியவாளிடம் இது தான் புதுசா வந்திருக்கிற LIC அடுக்குமாடி கட்டிடம் என்று பெரியவாளிடம் கூறினார். சற்று நின்ற பெரியாவா என்னிடம் இதுலே மொத்தம் எததனை மாடிகள் என்றார்.

நான் தவறாக சொல்லி விட கூடாதென்று “சரியாக தெரியாது ..” என்றேன். “எண்ணி பார்த்துவிட்டு வா ..” என்று கூறி விறு விறு என்று நடக்க ஆரம்பித்தார். 

நான் இரண்டு மூன்று முறை எண்ணி’பார்த்தேன். பாதி எண்ணும் போதே கணக்கு விட்டு போய் மீண்டும் எண்ணும் படி ஆயிற்று . ஒருமுறை 12ம் மறுமுறை 13ம் வந்தது. அதற்குள் பெரியவா வெலிங்டன் டாக்கிஸ வரை சென்று விட்டிரு நதார். நான் ஓடி சென்று மூச்சிறைக்க நின்றேன். “எண்ணிட்டையா ? எத்தனை ? ” என்று பெரியவா கேட்டா. கீழிருந்து 13. டேரசை சேர்த்தா 14. ஆனா மாடிகள் 12 தான் வரது என்றேன். பெரியவா சிரித்து கொண்டார்.

“12 மாடிகளா ? இந்த வாரம் ஆனந்த விகடன் மேல் அட்டைலே வந்திருக்கிற பில்டிங் லே 18 மாடிகள் போட்டிருக்கே. நீ பார்த்தாயோ …? :” என்று கேட்டார். எனக்கு தூக்கி வாரி போட்டது. “நான் எண்ணி பார்க்கலே..” என்றேன். :”அப்புறம் போய் பாரு …” என்று நடந்தபடி கூறினார். கண்ணன் என்னை பார்த்து சிரித்தார் .

நான் சற்று பின் தங்கினேன். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளுவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. ஒரு பத்திரிக்கையைப் புரட்டுவதிலும் அதில் வரும் செய்திகளைப் படிப்பதிலும், படங்களை பார்ப்பதிலும் சாதாரண வாசகருக்கும் பெரியவளுக்கும் எத்தனை வேற்றுமை இருக்கிறது என்று எண்ணி வியந்தேன். 

மேலட்டையில் பிரசுரமாயிருந்த அந்த நகைச்சுவையைப் படித்தவர்கள் சிரிப்பு வந்திருந்தால் சிரித்து விட்டுப்பத்திரிகையை புரட்டியிருப்பார்கள். சிரிப்பு வராதவர்கள் சிரிக்காமலேயே புரட்டியிருப்பார்கள். 

எத்தனை பேர் ” அந்த கட்டிடத்தில் எத்தனை மாடிகள் வரைய பட்டிருக்கின்றன” என்று பொறுமையாக எண்ணி பார்த்திருக்க போகிறார்கள்.. ? பிறரை சொல்வானேன்? நானே பார்க்கவில்லை. (அந்த ஜோக் என்னுடையது. படம் கோபுலு வரைநதது ).

எதையும் ஆராயந்து நோக்கும் பெரியவாளின் அபூர்வ சக்தி அதிசயிக்கக்தக்கது என்றால் அவரது நகைச்சுவை யுணர்வு மிகவும் ரசிக்கதக்கதாக இருக்கும்.

(From the experiences of Sri Baraneedharan, acclaimed tamil author)
source::::www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/4707/lic/#ixzz2Yf3g3AUm

” ஓ அதைத்தானே Stratosphere என்று சொல்வது ” !!!

மொழி ஆராய்ச்சியில் எடுத்தாலும் அப்படித்தான் பெரியவா பேசும் ஆங்கிலம் மிகவும் கடினமாக உயர்ந்ததாக இருக்கும்.

அகராதியைப் புரட்டாமல் அர்த்தம் தெரியாது.நூறு வருடத்துக்கு முன்பே அவர் கான்வென்டில் படித்தவர்.ஆகவே அற்புதமாக ஆங்கிலத்தில் உரையாடுவார்.

ஒரு முறை விமான நிலையத்தைக் காண, பெரியவா மீனம்பாக்கம் சென்றார். எல்லா இடங்களையும் பார்வையிட்டபின் இன்ஜினீயரிங் செக்ஷன் வந்தது. அங்குள்ளவற்றை ஒருவர் விவரிக்கப் பிரயத்தனப்பட்டார். அவருக்கு தமிழில் சரளமாகப் பேச வரவில்லை

ஆனால் பெரியவாளுக்குத் தமிழில் சொல்லாவிட்டால் புரியாதே என்று நினைத்தார். தெரிந்தவரை சொல்லிக் கொண்டிருந்தவரைப் பெரியவா, “பிளேன் மேலே பறக்கும்போது காதைத் துளைக்கும்படியா ஒரு சத்தம் வரதே அது கேட்டுண்டேதான் இருக்குமா? என்று கேட்க “ஒரு குறிப்பிட்ட லெவல் வரைதான் கேட்கும். அதற்கு மேலே போயிட்டா
விமானச் சத்தம் கேட்காது!” என்றார். அந்தப் பொறியாளர்.

“ஓ! அதைத்தானே Stratosphere-னு சொல்லுவா!” என்று பெரியவர் சொல்ல…பொறியாளருக்குத் தூக்கிவாரிப்போட்டது.

‘இத்தனை நேரம் தமிழ் வார்த்தைகளையே தேடிக் கொண்டிருந்தேனே.. இவருக்கு போயா ஆங்கிலம் தெரியாது என்று நினைத்தேன்!’ என்று வெட்கினார்.

இப்படித்தான் அடிக்கடி உத்தியோகம் மாறுகிற ஒருவர் வந்தார்.

“இப்போ எதில் இருக்கே?” என்று கேட்கிறார் பெரியவர்.

அவருக்குப் புரியணுமேன்னு நினைச்சு மிகவும் கஷ்டப்பட்டு, “அந்தக் கணக்கு போடற யந்திரத்துக்கு பேப்பர் தரும் வேலை!” என்றார்.

“Computer Stationery-தானே நீ சொன்னது?” என்று பெரியவர் அவர் சங்கடத்தைத் தவிர்க்கிறார்.எந்த மொழியை எடுத்துக்கொண்டாலும் அதில் ஆழங்கால் கண்டவராயிற்றே.
source::::: http://www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/4660/#ixzz2YNKcmReR

“ஒரு சோடா சாப்பிட்டு விட்டு போங்கோ ” !!!

திருநெல்வேலி பக்கத்துக்காரர் ஒருத்தரோட கதைதான் இதுவும். அவர் பேர் சிவன். அந்தப் பக்கத்து கிராமத்துலே இருந்து மடத்துக்கு அடிக்கடி வந்து போவார் அவர்.வீர சைவர் பிரிவைச் சேர்ந்தவர். நெத்தியிலே பட்டை பட்டையா விபூதி பூசிண்டு, ‘சிவப் பழம்’ மாதிரி இருப்பார். சுத்தம் என்றால் அவ்வளவு சுத்தம். ஆசாரம் என்றால் அவ்வளவு ஆசாரம். சாப்பாட்டுல வெங்காயம் கூடச் சேர்த்துக்க மாட்டார்! அப்படி ஒரு கட்டுப்பாடு.

சிவன் காஞ்சிபுரம் வந்தார்னா, பெரியவாதான் அவருக்கு எல்லாம். அவருக்கு 80 வயசு. பெரும் பணக்காரர். மகா பெரியவாதான் அவருக்கு தெய்வம். பெரியவா சொல்றதுதான் அவருக்கு வேத வாக்கு!

காஞ்சிபுரம் வரபோது, கையிலே ஒரு மஞ்சள் பை எடுத்துண்டு வருவார். அதில் துண்டு, வேட்டி, விபூதி பிரசாதம், கொஞ்சம் போல பணம்… இவ்வளவுதான் இருக்கும்.
பெரியவாளோட சந்நிதானத் துல போய் உட்கார்ந்தார்னா, அவருக்கு நேரம்- காலம் போறதே தெரியாது. பத்து நாள் தரிசனம் பண்ணினாலும், அவருக்குப் போறாது.

சரி, பெரியவா கிட்டே பேசுவா ரோ? ஊஹூம். சந்தேகம் ஏதாவது கேட்பாரோ? அதுவும் இல்லை.

”பெரியவர் எங்கிட்டே பேசணும்னு அவசியமே இல்லீங்க! அவர் மனசுல நான் நிறைஞ்சிருக்கேன்கிறதுதான் எனக்கு முக்கியம்”னுவார். வெளியிடத்துக்கு வந்தார்னா சாப்பிட மாட்டார்; அவ்வளவு ஏன், ஒரு வாய் ஜலம்கூட வாங்கிக் குடிக்க மாட்டார்.

ஒரு தடவை தரிசனம் எல்லாம் முடிஞ்சு, பெரியவாகிட்டே உத்தரவு வாங்கிக்கப் போனார் சிவன். வழக்கமா கை அசைச்சு ஆசீர்வதிச்சு அனுப்பி வைக்கிறவர் அன்னிக்கு என்னவோ, ”கிளம்பியாச்சா ஊருக்கு? சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ? சரி, போறச்சே அதையாவது பண்ணுங்கோ!”ன்னு குறிப்பா சொல்லி விடை கொடுத்தார் பெரியவர்.

செங்கல்பட்டுலே பஸ் ஏறி, திருநெல்வேலிக்குப் புறப் பட்டுட்டார் சிவன். அதே பஸ்ஸூல நாலு பேர், வயசுப் பசங்க உட்கார்ந்திருந்தாங்க. பஸ்ஸூக் குள்ளே கத்தலும் கூச்சலுமா அவங்க பண்ணின அமர்க்களம் தாங்க முடியலை. ஆனா, அந்த முரட்டுப் பசங்களை யாரு கண்டிக்கிறது!

மதுரை நெருங்குறப்போ, ஒரு குக்கிராமத்துல பஸ்ஸை நிறுத்தினார் டிரைவர். அங்கே ஒரு பெட்டிக்கடை இருந்தது. பஸ்ஸின் ஜன்னல் வழியா பார்க்குறப்போ, அந்தப் பெட்டிக் கடையில சோடா பாட்டில்கள் அடுக்கி வெச்சிருக்கிறது சிவன் கண்ணுல பட்டுது. உடனே, ”ஒரு சோடாவாவது வாங்கிக் குடியுங்க”ன்னு பெரியவா சொன்ன வார்த்தைகள்தான் சட்டுனு ஞாபகத்துக்கு வந்துது.

சிவனுக்குத் தண்ணீர் குடிக்கவும் வேண்டியிருந்தது. அதே நேரம், பெரியவா உத்தரவை நிறைவேத்தின மாதிரியும் ஆச்சுன்னு கீழே இறங்கிப் போய், அந்தப் பெட்டிக் கடையில ஒரு சோடா வாங்கிக் குடிச்சுட்டு வந்தார் சிவன்.

பஸ்ஸூக்குள்ள வந்து ஸீட்டைப் பார்த்தால், அவரோட மஞ்சள் பையைக் காணோம். அதுலே பெரிசா சாமானோ பணமோ இல்லேன்னாலும், அவரோட ஸீட்டுல இருந்ததாச்சே!

அப்போ அந்த நாலு முரட்டுப் பசங்களும், ”யோவ் பெரிசு! ஒன்னோட மஞ்சப் பையத் தேடறியா? அதா பார்… பின்னால ஸீட்டுல கிடக்குது. அங்கே போய் உக்காரு!”ன்னு கேலியா சொன்னாங்க.

மஞ்சள் பை பத்திரமாக கடைசி ஸீட்டுக்கு முன் ஸீட்டுல இருந்துது. ‘சரி, ஊர் போய்ச் சேர்ந்தா போதும்; இவங்களோடு நமக்கு என்ன வாக்குவாதம்!’னு அங்கே போய் உட்கார்ந்துட்டார் பெரியவர் சிவன். அந்த நாலு பசங்களில் ரெண்டு பேர், சிவன் இதுவரைக்கும் உட்கார்ந்து வந்த அந்த ஸீட்டுல போய் உக்கார்ந்துண்டாங்க.

ராத்திரி வேளை. பஸ் கிளம்பிச்சு. புறப்பட்டு ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். என்ன ஆச்சுன்னே தெரியலே, எதிர்ல அசுர வேகத்துல வந்த லாரி ஒண்ணு இந்த பஸ் மேல மோதிடுத்து.

சிவனோட இடத்துல அடமா போய் உட்கார்ந்துண்டு, ”யோவ் பெரிசு, பின்னால போய் உட்காரு”ன்னு எகத்தாளமா சொன்ன அந்த ரெண்டு இள வயசுப் பசங்களும், அங்கேயே ஆன் த ஸ்பாட் செத்துப் போயிட்டாங்க. பெரியவர் சிவன் சின்ன காயம்கூட இல்லாம தப்பிச்சுட்டார்!

‘ஒரு சோடாவாவது வாங்கிச் சாப்பிட்டுப் போங்க’ன்னு பெரியவா ஏன் சொன்னார்? மதுரை குக்கிராமத்துலே, டிரைவர் சரியா ஒரு பெட்டிக்கடை முன்னாடி எதுக்காக பஸ்ஸை நிறுத்தினார்? அங்கே சிவன் கண்ணுல படற மாதிரி சோடா பாட்டில்கள் அடுக்கி வெச்சிருப்பானேன்? பெரியவர் சொன்னாரேங்கிறதுக்காக ராத்திரி அகால வேளையில சோடா சாப்பிட பஸ்ஸை விட்டு சிவன் இறங்கக்கொண்டுதானே, அவரோட உயிர் தப்பிச்சுது?

இதெல்லாம் எப்படி நடக்கிறது! யோசிக்க, யோசிக்க… சிவன் அப்படியே ஓன்னு அழுதுட்டாராம். தான் உயிர் தப்பிச்சது ஒருபுறம் இருக்க, வயசுப் பசங்க ரெண்டு பேரும் அந்த ஸ்தலத்துலயே செத்துப்போனது அவர் மனசை என்னவோ பண்ணிடுத்து.

ஆனா, அவருக்கு ஒண்ணு மட்டும் புரிஞ்சுது. தனக்கும் இன்னிக்குக் கண்டம்தான். பெரியவரை பத்து நாள் தரிசனம் பண்ணிய புண்ணியம்தான் அந்தக் கண்டத்துலேர்ந்து தன்னைக் காப்பாத்தியிருக்கு. யோசிக்க யோசிக்க, அந்த மகான், ‘ஒரு சோடாவானும் சாப்பிட்டுட்டுப் போங்கோ’னு சொன்னது, தெய்வமே நேர்ல வந்து சொன்ன குறிப்பு மாதிரி தோணுச்சு அவருக்கு.

1983-ல், மகா பெரியவா யாத்திரை எல்லாம் போயிட்டுக் காஞ்சிபுரம் திரும்பினப்போ நடந்த சம்பவம் இது.

சிவனோடு நான் பேசிண்டிருந்தபோது, அவர்தான் உடம்பெல்லாம் சிலிர்க்க இந்தச் சம்பவத்தை விவரிச்சு சொன்னார். அதை நான் பெரியவாகிட்டே வந்து சொன்னேன்.
”சிவன் சௌக்கியமா இருக்காரோ?”ன்னு விசாரிச்சார் பெரியவா. தொடர்ந்து, ”நான்தான் அவரைக் காப்பாத்தினேன்னு சொன்னாராக்கும்! அசடு. நான் எங்கேடா காப்பாத்தினேன்! அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான்!”னார் பெரியவா.
அதைக் கேட்டு எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துப்போச்சு!

source:::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/4658/#ixzz2Y9227VZY