மாற்றத்தின் வித்தகர் …ஆசிரியர் ஜோதிமணி !!!

சின்ன வயதில் எல்லோருக்குமே நாம் என்னவாக வேண்டும் என்று ஒரு கனவு இருக்கும். நிச்சயமாக யாரும் ஊழல் செய்ய வேண்டும் என்றோ, செயல்படாமல் நாற்காலியைத் தேய்க்க வேண்டும் என்றோ கனவு காண்பதில்லை. எதையோ சாதிக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் கனவு காண்கிறோம். அந்தக் கனவை எவ்வளவு நாளுக்கு உயிரோடு வைத்திருக்கிறோம்? அந்தக் கனவுக்காக நாம் எவ்வளவு அர்ப்பணிப்பைக் கொடுக்கிறோம்? எந்தக் காலகட்டத்தில் அந்தக் கனவைப் பலிகொடுக்கிறோம்?

அறந்தாங்கி பக்கத்திலுள்ள சின்னக் கிராமமான அழியாநிலையைச் சேர்ந்த ஜோதிமணிக்கு வாத்தியார் கனவை ஊட்டிவிட்டது அவருடைய படிக்காத அம்மா காந்திமதி. ஆறாம் வகுப்பில் அவருக்கு ஆசிரியராக இருந்த வில்லியம் ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். தன்னுடைய கனவுத் தீயை அணையாமல் அடைகாத்து வளர்த்த ஜோதிமணி 19-வது வயதிலேயே அரசுப் பள்ளி ஆசிரியரானார். ஒரு கிராமத்து அரசுப் பள்ளி ஆசிரியராக உலகளந்தான்வயல், குறுந்திறக்கோட்டை, கூத்தாடிவயல், பெருங்காடு என்று அறந்தாங்கியைச் சுற்றியுள்ள கிராமங்களில் சின்னச் சின்ன மாற்றங்களாக முன்னெடுத்தவர் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆனார்.

இந்த ஒன்பது ஆண்டுகளில், ஓர் அரசுப் பள்ளிக்கான மிகச் சிறந்த முன்னுதாரணமாக மாங்குடிப் பள்ளியை மாற்றியிருக்கிறார் ஜோதிமணி. பசுமையான தோட்டங்கள் நிறைந்த பள்ளி வளாகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் தொடங்கி தொலைக்காட்சிப் பெட்டி வரையில் சகல வசதிகளையும் உள்ளடக்கிய வகுப்பறைகள், விரிவான நூலகம், சுத்தமான கழிப்பறைகள், படிப்போடு கூடவே ஒவ்வொரு மாணவருக்கும் கைத்தொழில் பயிற்சி, எல்லா மாணவர்களுக்கும் மின்னஞ்சல் முகவரிகள் என்று மாங்குடிப் பள்ளியை இன்றைக்குப் புதிதாகப் பார்க்கும் எவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துபோவார்கள். மாங்குடியின் வரலாறு தெரிந்தவர்களுக்கோ இது ஆச்சர்யம் அல்ல; அதிசயம்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் ஏழ்மையான குக்கிராமங்களில் ஒன்று மாங்குடி. ஆகப் பெரும்பான்மையினர் கூலித் தொழிலாளிகள். ஊரில் எந்த வசதியும் கிடையாது. ஏழு கி.மீ. தொலைவில் உள்ள நகரமான அறந்தாங்கிக்குத்தான் சகலத்துக்கும் செல்ல வேண்டும். ஊருக்கு பேருந்து போக்குவரத்துகூடக் கிடையாது. சுதந்திரத்தாலும் மக்களாட்சியாலும் மாங்குடி மக்கள் பெற்ற ஒரே பயன் அந்தப் பள்ளிக்கூடம். அதுவும் அரசுப் பள்ளிகளுக்கே உரிய சகல அழுக்கு அடையாளங்களோடுதான் இருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் ஜோதிமணி அங்கு வந்தார். கொஞ்சம்கொஞ்சமாக மாற்றினார் எல்லாவற்றையும். எப்படி?

“எனக்குப் படிப்பிச்சது, என்னை வளர்த்தது எல்லாமே அரசுப் பள்ளிக்கூடங்கள்தான். ஒரு மாணவனா நான் படிச்ச பள்ளிக்கூடங்களைப் பார்த்து எவ்வளவோ வேதனைப்பட்டிருக்கேன். அப்பவெல்லாம் எங்கம்மா சொல்வாங்க ‘தம்பி, இன்னைக்கு நீ படிக்கிறப்போ எதெல்லாம் பள்ளிக்கூடத்துல, உனக்குச் சங்கடமா இருக்கோ, அதையெல்லாம் நீ நாளைக்கு வாத்தியாராப் போய் மாத்தணும்பா’ன்னு. அதையே வைராக்கியமா வைச்சுக்கிட்டுதான் படிச்சேன்.

ஆசிரியர் பணிக்கு வேலைக்குச் சேர்ந்தப்போ, அங்கே உள்ள யதார்த்தச் சூழல் புரிஞ்சுது. ஆரம்பத்துல துடிப்புல செஞ்ச எவ்வளவோ காரியங்கள் பகையையும் வசவையும்தான் வாங்கித்தந்துச்சு. எது ஒண்ணையும் நான் அவமானமா நெனைக்கலை. எல்லோர்கூடவும் கைகோத்துக்கிட்டேன். எந்த ஒரு மாற்றத்தையும் உடனேயோ, வெறும் உத்தரவுகளாலேயோ கொண்டுவந்துட முடியாதுங்கிறதைப் புரிஞ்சுக்கிட்டேன். சின்னச்சின்ன விஷயங்கள்தான் நான் கொண்டுவந்த எல்லா மாற்றங்களுக்கும் அடிப்படை.

முதல்முதல்ல பள்ளிக்கூடத்துல நான் செஞ்ச பொதுக்காரியம் என்ன தெரியுமா? பைப் இல்லாம ஒழுகிக்கிட்டு இருந்த குழாய்க்கு பைப் வாங்கி மாட்டினது. நம்மள்ல பலருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும். வீட்டுக்கு எதிர்ல, பாதையில, அலுவலகத்துல எங்கேயாவது ஒரு குழாய் பைப் இல்லாம தண்ணியைக் கொட்டிக்கிட்டு இருக்கிறதைப் பார்த்துக்கிட்டே கடந்திருப்போம். யாரும் கவலை இல்லாம கடக்கிறது இல்லை. அது நம்ம பொறுப்பு இல்லைனு நெனைக்கிறோம். ஒரு விவசாயக் குடும்பத்துல வந்த என்னால இப்படித் தண்ணி தாரைத்தாரையா போறதைச் சகிச்சுக்க முடியலை. பைப்பை வாங்கி மாட்டினேன். வெறும் அஞ்சு ரூபா சமாச்சாரம். எவ்வளவு தண்ணீர் மிச்சம்?

இப்படித்தான் ஒவ்வொரு விஷயமும். மாங்குடிக்கு வந்தப்போ, இங்கே உள்ள குழந்தைங்க அவ்வளவு மோசமான சீருடையில வந்தாங்க. அப்போ வருஷத்துக்கு ஒரு சீருடைதான் அரசாங்கம் தரும். பெற்றோரைக் கூப்பிட்டோம். அவங்க ஏழ்மையைக் காரணமாச் சொன்னாங்க. என்ன வழி? ‘இனி தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ பிள்ளைங்களுக்குப் புது துணி எடுக்கும்போது சீருடையாவே எடுத்துடுங்களேன்’னு கேட்டுக்கிட்டோம். குழந்தைங்க உடுப்பு மாறுனுச்சு. தினமும் குளிப்பாட்டி அனுப்பச் சொன்னோம். தலை வாராமல் வர்றதை மட்டும் மாத்த முடியலை. பள்ளிக்கூடத்துலேயே சீப்பு – கண்ணாடி வாங்கி வெச்சோம். நன்கொடையாளிகளைத் தேடிப்பிடிச்சோம். ஒவ்வொரு பைசாவுக்கும் வரவுசெலவு நேர்மையா பராமரிச்சதால உதவி செஞ்சவங்களே திரும்பத்திரும்பத் தேடிவந்து செஞ்சாங்க. பள்ளியோட அடிப்படைக் கட்டுமான வசதி உயர்ந்துச்சு.

சரி, பள்ளிக்கூடத்தோட அன்றாடச் செயல்பாட்டை உயர்த்துறது எப்படி? குழந்தைங்ககிட்ட கூட்டுமுயற்சியைக் கொண்டுவந்தோம். இங்கே நடக்குற ஒவ்வொரு செயல்பாடுக்கும் ஒரு குழு உண்டு. பள்ளி சுகாதாரக் குழு, தோட்டக் குழு, நூலகக் குழு, கணினிப் பராமரிப்புக் குழு… இப்படி. பள்ளிக்கூடத்துல உள்ள ஒவ்வொரு குழந்தையும் ஏதாவது ஒரு குழுவுல இருப்பாங்க. ஒவ்வொரு வகுப்பறைலேயும் ஒரு தபால் பெட்டி உண்டு. பள்ளிக்கூடத்துக்கு உள்ளே யாருக்கு யார் வேணும்னாலும் தபால் எழுதிப்போடாலாம். அந்தந்த வகுப்புக்குத் தபால்காரரா இருக்குற மாணவர் மற்ற வகுப்புத் தபால்கார மாணவர்கிட்டே கொடுத்து சம்பந்தப்பட்டவங்ககிட்டே சேர்த்துடுவார். இதோ பாருங்க, இன்னைக்கு வந்துருக்குற தபால்” என்று ஒரு அட்டையை நீட்டுகிறார்.

‘ஐயா, எங்கள் வகுப்பில் குழல் விளக்கு வேலை செய்யவில்லை. மழை பெய்யும்போது வெளிச்சம் இல்லாததால் படிக்கக் கஷ்டமாக இருக்கிறது. சரிசெய்ய வேண்டும்’ என்று எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் எழுதிய கடிதம் அது. “பிள்ளைகளிடம் எழுதும் பழக்கத்தை உருவாக்கிவிட்டால் போதும்; எதிர்காலத்தில் எதையும் எழுதிச் சமாளித்துவிடுவார்கள் அவர்கள்” என்கிறார்.

பள்ளிக்கூடத்தில் படித்து முடிக்கும்போது தையல் பயிற்சியோ, புத்தக பைண்டிங் பயிற்சியோ சொல்லிக்கொடுத்துவிடுகிறார்கள். “கைத்தொழில் ஒன்று கையில் இருக்க வேண்டும் அல்லவா?” என்கிறார்.

சரி, அரசுப் பள்ளிகளில் ஒரு தலைமையாசிரியர் நினைத்தால் மட்டும் மாற்றம் சாத்தியம் இல்லையே; ஏனைய ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் முக்கியமாயிற்றே; எப்படி அரவணைக்கிறார் ஜோதிமணி? “காந்தி காட்டிய வழி” என்கிறார்.

“பள்ளிக்கூடத்தில் கழிப்பறையே இல்லாத காலம் ஒண்ணு இருந்துச்சு. கழிப்பறை கட்டிய பின் அது சுத்தமாக இல்லை. நம்ம பிள்ளைங்க அசிங்கம் பண்ணிட்டா வீட்டை விட்டுடுவோமா? முதலில் நானே துடைப்பத்தை எடுத்துக்கிட்டு இறங்கினேன். பின்னாடியே ஆசிரியர்களும் மாணவர்களும் இறங்கினாங்க. அர்ப்பணிப்போட நேர்மையாகவும் நேர்மறையாகவும் அணுகுனா, உடனிருக்குற ஆசிரியர்களா இருந்தாலும் சரி; அதிகாரிகளா இருந்தாலும் சரி… நிச்சயம் கைகோத்து நிப்பாங்க. ‘சத்திய சோதனை’ சொல்லிக்கொடுத்த வழி இது.”

ஜோதிமணியைப் போலவே, அவர் மனைவி சாவித்ரியும் ஆசிரியர். பக்கத்திலுள்ள ரத்தினக்கோட்டையில் மாற்றங்களுக்கான செங்கற்களை அவர் அடுக்கிறார். குழந்தைகள் வெவ்வேறு அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள்.

“அரசுப் பள்ளிக்கூடங்கள் தலைநிமிரணும்னா ஆசிரியர்கள் முதலில் அதைக் கௌரவமாப் பார்க்கணும்; தான் கௌரவமா நடந்துக்கணும்…”

தன் வார்த்தைகளில் நிற்கிறார் ஜோதிமணி!

சமஸ் – தொடர்புக்கு: writersamas@gmail.com

 source:::::The Hindu….Tamil
  natarajan

இயற்கையுடன் இணைந்த இனிய வாழ்க்கை !!!

இயற்கையோடு இணைந்து வாழும் முத்துசாமி - சுப்புலட்சுமி தம்பதி

இயற்கையோடு இணைந்து வாழும் முத்துசாமி – சுப்புலட்சுமி தம்பதி

“காலை இஞ்சி.. கடும்பகல் சுக்கு.. மாலை கடுக்காய்.. மண்டலம் உண்டோர் கோல் இன்றி நடப்பாரே – இதுதானே பண்டைத் தமிழரின் வாழ்வியல் உணவு முறை” என முண்டாசை சரிசெய்தபடி மீசையை முறுக்குகிறார் முத்துச்சாமி. 75 வயதானாலும் 25 வயது இளைஞனிடம் இல்லாத சுறுசுறுப்பை இவரிடம் பார்க்கலாம்.

திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் உள்ள முத்துச்சாமியின் வீடு இந்தத் தலைமுறை நிச்சயம் காணவேண்டிய ஒரு அருங்காட்சியகம். சாணம் மெழுகிய திண்ணைகள், கயிற்றுக்கட்டில், பனை ஓலை விசிறி, சீமை ஓட்டு மேல்கூரை, பொன்னாங்கண்ணி, வில்வம், கத்தாழை, தூதுவளை, புதினாவுடன் கூடிய மூலிகைத் தோட்டம், தினசரி சாப்பாட்டுக்காக மாடியில் காய்கறித் தோட்டம், அதன் பக்கத்தில் அறிவை மேம்படுத்தும் பெரிய நூலகம்.. என்று இயற்கையோடு இயைந்து, இணைந்து வாழ்கிறார் முத்துச்சாமி. அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அவரது வாழ்க்கை முறையைப் பார்த்து வாயைப் பிளக்கிறார்கள்.

“எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்பதுதான் நான் வாழும் இந்த வாழ்க்கையின் உண்மை தத்துவம். தமிழகத்தின் தேசிய மரம் பனை. ஆனால், கொஞ்சம்கூட யோசிக்காம அதை அழிச்சிட்டு வர்றாங்க. செங்கல் சூளைக்காக பனை மரத்தை தூரோடு வெட்டி எடுத்துட்டே இருக்காங்க. பனைப்பால், பனை நுங்கு, பனை ஓலை, கருப்பட்டி என வாழைக் கன்றுபோல பனையின் அனைத்து பாகங்களும் பயன்படும். பனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஒரு குறளுக்கு 100 மரம் வீதம் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பனை மரங்களை திருப்பூர், காங்கயம், சென்னிமலை, கைத்தமலை, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிமலை, நரசிபுரம், பவானி உள்ளிட்ட பகுதிகளில் நட்டுவைத்தோம். ஆனாலும், பனை மரங்களை அழிப்பது நின்றபாடில்லை” – இயற்கையின் மீது தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்திய முத்துச்சாமி, தன்னைப் பற்றியும் பேசினார்.

“வருஷா வருஷம் முதியோர் தடகளப் போட்டியில் எனக்குதான் முதலிடம். அந்தளவுக்கு என் மனசையும் உடம்பையும் இயற்கை உணவு காப்பாத்தி வைச்சுருக்கு. இதுவரை எந்த நோயும் அண்டியதில்லை. காலையில் வரகரிசி உப்புமா, கொஞ்சம் கீரை, அரை வேக்காட்டில் காய்கறிகள், மூலிகை தோசை, ராகி, கேப்பை, கம்பு, கூழ்னு எனக்குப் பிடிச்சத எடுத்துக்குவேன். சிறுதானியங்கள் என் உணவுல பிரதான அங்கம். தமிழரின் வாழ்க்கை முறையே அப்படி இருந்ததுதானே. இன்றைக்கு இருப்பதுபோல பளபளக்கும் பகட்டு டப்பாக்களுக்குள் நம் முன்னோர்கள் முடங்கிப் போகவில்லையே?

வீட்டில் சமையலுக்குகூட, கடைகளில் அரைத்து விற்கப்படும் எந்தவொரு பொருளையும் நாங்க பயன்படுத்துறதில்லை. மூணு வேளையும் முழு கட்டு கட்டுற வேலையும் எனக்குப் பிடிக்காது. காலை மற்றும் பொழுதுசாயும் நேரம் என தினமும் ரெண்டு வேளைதான் சாப்பாடு. மத்த நேரங்களில் சுக்கு கசாயம் போதும். வெளியூர் போனா ஓட்டலைத் தேடிப் போறதில்லை. அதுக்குப் பதிலா, கொஞ்சூண்டு அவல் எடுத்துட்டுப் போயிருவேன். ஒருவேளை பசியாற மூணு கைப்பிடி அவல் போதும். நான் மட்டுமல்ல.. சுப்புலட்சுமியும் அப்படித்தான்” என்று தன் மனைவியை அறிமுகப்படுத்துகிறார்.

“எந்தச் சூழலிலும் இயற்கைக்கு முரணா வாழக்கூடாதுன்னு இவரு அடிக்கடி சொல்வாரு. செல்போன் அதிகரிச்சதால சிட்டுக்குருவிகள் அழிஞ்சுட்டு இருக்கு, அதனால செல்போனை நாங்க கையால தொடுறதே இல்லை. பெட்ரோலுக்குத்தானே இந்த உலகத்துல பெரும் யுத்தம் நடக்குது. பெட்ரோல் வண்டிகளோட கரும் புகை நம்மைச் சுற்றி நச்சுக்களை பரப்பி இயற்கையை அழிச்சுக்கிட்டே இருக்கு. அதனால, பெட்ரோல் பயன்படுத்தவே கூடாதுன்னு வைராக்கியம் வச்சுக்கிட்டு, இப்ப வரைக்கும் சைக்கிள்தான் ஓட்டுறாரு.

அளவுக்கு அதிகமாக தண்ணீரை வீணடிக்கிறதும் நாம பூமிக்கு செய்யுற துரோகம்னு சொல்வாரு. வீட்டுல மின்சார வசதிகூட ரொம்ப நாளா இல்லை. இப்பத்தான் சோலார் பேனல் மூலமா ஒரே ஒரு லைட்டுக்கும், காத்தாடிக்கும் தேவையான அளவுக்கு இயற்கை மின்சாரம் உபயோகிக்கிறோம். இவரு வெளியூர்களுக்கு போனாக்கூட கீழாநெல்லி, துளசி மாதிரியான கன்றுகளைத்தான் வாங்கிட்டு வருவாரு. நாங்க, முடிஞ்ச வரைக்கும் இயற்கையை சீரழிக்காம வாழ்ந்துட்டு இருக்கோம். அதனால, எங்க வாழ்க்கையும் ரொம்ப ஆரோக்கியமாக இருக்கு. ஆனா, தங்களையும் அறியாமல் இயற்கையை அழிச்சிட்டு இருக்கிற சனங்க, ‘எப்படி உங்களால இந்தக் காலத்துலயும் இப்படி எல்லாம் வாழமுடியுது. இந்தக் காலத்துக்கு இதெல்லாம் சரிப்பட்டு வருமா?’ன்னு கேள்வி கேக்குறப்ப சிரிக்கிறதா வேதனைப்படுறதான்னு தெரியல” கணவர் கருத்திலிருந்து கடுகளவும் மாறாமல் பேசினார் சுப்புலட்சுமி.

‘அரசு விழாக்களில் புலால் உணவு பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும்’ என முத்துச்சாமி எழுதிய கோரிக்கை மனுவை ஏற்றுத்தான், ‘இனி, அரசு விழாக்களில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படும்’என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்ததாம். பெருமையுடன் சொல்கிறார் முத்துச்சாமி.

இயற்கையோடு இணைந்த இவர்களது வாழ்க்கைமுறை பற்றி கேள்விப்பட்டு, இந்தக் காலத்து இளைஞர்கள் பலரும் இவர்களது வீட்டுக்கு வந்து விசாரித்துவிட்டுப் போகிறார்களாம். இவர்களில் பலர், ‘நாங்களும் உங்களைப் போல இயற்கைக்கு மாறிட்டோம் ஐயா’ என்று சொல்ல ஆரம்பித்திருப்பது முத்துச்சாமியின் இயற்கை வாழ்வியல் முறைக்கு கிடைத்த இன்னொரு வெற்றி!

 source:::::The Hindu …Tamil
நடராஜன்

” கருந்துளசி பூஜை செய் ” !!!

மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள் – ஆறாம் பாகத்திலிருந்து ஸ்ரீமதி ஜெயலெஷ்மி அம்மாளின் அனுபவங்கள்….

ஸ்ரீகுரு பாதுகா சரணம்

மஹாபெரியவாளிடம் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் உள்ள பக்தியை எழுத்துக்களால் எழுதிக் காட்ட முடியாது. நாங்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள். என்றாலும், பெரியவாளிடம் உரிமை கொண்டாடும் பக்தி இருக்கிறது.

நான் வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் ஏராளமான கஷ்டங்கள். திக்குத் திசை தெரியாமல் அல்லாடினேன். அந்தச் சமயத்தில் ஒரு தீட்சிதர், புராணப் பிரவசனம் செய்வதற்காக செங்கற்பட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் சென்று என் குடும்ப நிலையை எடுத்துச் சொல்லி பரிஹாரம் கேட்டேன்.

ஒரு வெள்ளிக் குத்துவிளக்கில் லட்சுமி-சரஸ்வதி-பார்வதி ஆகிய மூன்று அம்பிகைகளை ஆவாஹனம் செய்து, பூஜை செய்து வரும்படி அவர் ஆலோசனை கூறினார். அப்படியே செய்து வந்தேன்.

ஒருநாள், ஒரு பரதேசி என் வீட்டுக்கு வந்து பிச்சை கேட்டான். ஏதோ சில்லரைக் காசு கொடுத்தேன். அவன் என்னை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு, குறி சொல்பவன் போல், “குத்துவிளக்குப் பூஜையெல்லாம் உபயோகப்படாது… காலின் கீழே இருக்கிற மூலிகை உன் கண்ணுக்குத் தெரியவில்லையே…” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

தெருவில் வேறு எந்த வீட்டிலும் சென்று யாசிக்காமல் தெருவைக் கடந்து போய்விட்டான்.

இது என்ன தெய்வ வாக்கா? இல்லை, வெறும் பிதற்றலா? அல்லது, இத்தனை நாட்களாகச் செய்த விளக்கு பூஜையின் பலனா?
மனம் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது.

‘காஞ்சிப் பெரியவாளை சேவித்துக் கேட்கலாமே’ என்று ஒரு யோசனை பளீரிட்டது. பெரியவாளை தரிசித்து, சேவித்து, என் கஷ்டங்களை திருச்செவி சாற்றினேன்.

‘கருந்துளசிச் செடி பூஜை செய்’ என்று அனுக்ரஹம் ஆயிற்று.

என் மனத்துக்குள் ஒரு சங்கல்பம். அந்தப் பரதேசி சொன்னபோது நான் தயங்கியதற்கும் காரணம் இருந்தது. துளசி மாடத்தில் துளசியை வைத்து நான் பூஜை செய்தால், அந்தச் செடி சில நாள்களிலேயே பட்டுப் போய்விடும். பெரியவாளிடம் என் சங்கடத்தை விண்ணப்பித்தேன்.

நான் கூறி முடித்தபிறகும், “நீ, கருந்துளசி பூஜையே செய்” என்றார்கள்.

கருந்துளசிச் செடி நட்டு, பூஜை செய்யத் தொடங்கினேன்.

ஆச்சரியம்! செடி கப்பும் கிளையுமாக, சிறு ஆலமரம் போல் செழித்து வளரத் தொடங்கியது.

துளசிச்செடி வளர வளர என் துன்பங்கள் குறைந்து கொண்டே வந்தன.

இன்றைக்கும் எங்கள் வீட்டில் கருந்துளசி நிறைய வளர்கிறது.

கருந்துளசிச் செடி பூஜை செய்தால் கஷ்டங்கள் விலகும் என்று சொல்லி, நானும் மற்றவர்களைத் தூண்டிவிடுகிறேன்.
பெரியவாள் காட்டிய வழியாதலால் எல்லோரும் நல்ல பலன்களையே பெற்று வருகிறார்கள்.

ஒரு சமயம் ஒரு பெரிய இலையில் நிறைய தும்பைப்பூ எடுத்துக்கொண்டு வந்து பெரியவாளிடம் சமர்ப்பித்தார் ஓர் அடியார். தும்பைப்பூவைப் பார்த்ததும் பெரியவாள் ரொம்பவும் சந்தோஷப்பட்டார்.

அங்கிருந்த பக்தர்களைப் பார்த்து, தும்பைப்பூ வைத்திருந்த இலையைக் காட்டி, “இது என்ன இலை தெரியுமா?” என்று கேட்டார்கள்.
பலரும் வெவ்வேறு விதமாகச் சொன்னார்கள்.

“இதன் பேர் – பேத்தி இலை. இதில்தான் சந்நியாசிகள் பிக்ஷை செய்யணும். இது தங்கத்துக்கு சமானம். தினமும் இந்த இலை கிடைக்கலேன்னா, துவாதசியன்னிக்குப் பாரணையை இந்த இலையில் வைத்து பிக்ஷை செய்யணும். அவ்வளவு ஒசத்தி! அபூர்வம்! எனக்குக் கூட ஒரு பாட்டி தங்கத் தட்டு பண்ணிக் கொடுத்தாள். ஆனா, நான் அதில் ஒரு தடவைகூட பிக்ஷை பண்ணியதே இல்லை… இப்போ அது ஸ்டோர் ரூம்லே இருக்கு.”

இதைக் கேட்டுக் கொண்டிருந்த நான் ‘பேத்தி’ இலைக்காக பைத்தியமாக அலையத் தொடங்கினேன். கடைசியில் அதைக் கண்டுபிடித்து, மந்தார இலையை ஈர்க்குச்சியினால் தைத்து போஜனத்திற்காக உபயோகப் படுத்துவதைப் போல, சில இலைகளைத் தைத்துக் கொண்டு காஞ்சிபுரம் போனேன்.

பெரியவாளிடம், தொண்டர் பாலு என்பவர், பேத்தி இலையைப் பற்றித் தெரிவித்து, “செங்கல்பட்டு ஜெயலக்ஷ்மி; வைஷ்ணவா கொண்டு வந்திருக்கா” என்றார்.

உடனே பெரியவா, “இவாளை ஸ்ரீவைஷ்ணவான்னு கூப்பிடணும்” என்றார்கள். எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்தை எவ்வாறு சொல்வேன்!

அன்றுமுதல் ஸ்ரீமடம் சிப்பந்திகள் என்னை ‘ஸ்ரீவைஷ்ணவா’ என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

வாழ்க்கையில் இதைவிட வேறு என்ன பட்டம் வேண்டும் எனக்கு?

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::::: http://www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/5500/sengalpat-smt-jeyalakshmi-ammals-experience#ixzz2iP6NY7D9

படித்ததில் பிடித்தது …”.உன் இரண்டு சொட்டு கண்ணீர் எனக்கு போதும்” !!!

ஸ்ரீ குருவாயூரப்பனின் மகிமைகளை எடுத்துரைக்கும் ‘ஸ்ரீமத் நாராயணீயம்’ பாடிய நாராயண
பட்டதிரியை நாம் அறிவோம். நாராயண பட்டதிரியுடன் ஸ்ரீ குருவாயூரப்பன் நிகழ்த்திய
உரையாடல் மிகவும் சுவையானது, ரசிக்கத்தக்கது.
தம் முன் தோன்றிய ஸ்ரீகுருவாயூரப்பனிடம், பகவானே… நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனம்
என்ன?” என்று பட்டதிரி கேட்கிறார்.
நெய்ப் பாயசம்” – இது குருவாயூரப்பன்.
ஒருவேளை நெய்ப் பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால், நான் என்ன செய்வது?”
‘‘அவலும் வெல்லமும் போதுமே!”
‘‘சரி பகவானே… அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்க எனக்கு வசதி இல்லை என்றால்?”
‘‘வெண்ணெய், வாழைப்பழம், பால், தயிர் – இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடு. ஏற்றுக்
கொள்கிறேன்.”
‘‘மன்னிக்க வேண்டும் பகவானே… தற்போது தாங்கள் சொன்ன நான்கும் என்னிடம் இல்லை என்றால்?”
‘‘துளசி இலைகள் அல்லது ஒரு உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தரும்!”
‘‘அதுவும் என்னிடம் இல்லை என்றால்?” – பட்டதிரியின் குரல் தழைந்து போகிறது.
‘‘எனக்கு நைவேத்தியம் செய்து வைக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ
அழுவாய் அல்லவா… அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப்
போதும்” என்று பகவான் சொன்னதும், ‘ஓ’வென்று கதறி அழுதே விட்டார் பட்டதிரி.
தெய்வங்கள், தன் பக்தர்களிடம் எதையும் எதிர் பார்ப்பதில்லை

source:::::input from a friend of mine …

natarajan

“வில்லேஜ் விஞ்ஞானி ” சுப்ரமணியம் !!!

தான் உருவாக்கிய நவீன காற்றாலை மின் உற்பத்தி எந்திரத்தின் முன்னால் சுப்பிரமணியம்

தான் உருவாக்கிய நவீன காற்றாலை மின் உற்பத்தி எந்திரத்தின் முன்னால் சுப்பிரமணியம்

“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு.. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு..’ என்ற கண்ணதாசனின் காப்பிய வரிகளுக்கு கச்சிதமான உதாரணம் சுப்பிரமணியம்!

சுப்பிரமணியத்தின் சொந்த ஊர், ஈரோடு மாவட்டம் சென்னிமலை. குடும்பச் சூழலால் பத்தாம் வகுப்புக்கு மேல் தாண்ட முடியாத சுப்பிரமணியம் இப்போது, தனியார் கல்லூரியின் தற்காலிக ஊழியர். ஆனால், இவரது சாதனைப் பட்டியல், பெரிய சைன்டிஸ்ட் ரேஞ்சுக்கு நீள்கிறது.

மெட்ரிக் முறையில் இயங்கும் கடிகாரம், செலவைக் குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புதிய பெட்ரோல் இயந்திரம், தினசரி, மாத காலண்டர்களைப் போல வார காலண்டர், சாண எரிவாயு உற்பத்தியில் புதிய தொழில்நுட்பம், தமிழ் எழுத்து சீர்திருத்தத்துக்கான முயற்சி… என பல கண்டுபிடிப்புகளால் மிரட்டுகிறார் மனிதர்!

இதுமட்டுமா, சிலந்தி வலை சிக்கலில் எனது நாடு, டீசல், இந்தியா – உலக நாடுகள் பல்வகை ஒப்பீடு உள்ளிட்ட நூல்களையும் சுப்பிரமணியம் எழுதியுள்ளார். இதில், ‘சிலந்திவலை சிக்கலில் எனது நாடு’ என்ற நூலை, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் வைக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளது சிறப்பிலும் சிறப்பு.

“படிப்பு கம்மினாலும், புதுசா எந்தத் தகவல் கிடைச்சாலும் மறக்காம நோட்டுல குறிச்சு வைச்சிக்குவேன். அதைத் தொகுத்துத்தான் நூல்களா எழுதிருக்கேன். எட்டு மாசத்துக்கு முந்தித்தான் இப்ப நான் இருக்கிற வேலையில சேர்ந்தேன். அதுக்கு முந்தி கம்ப்யூட்டரை தொட்டுக்கூட பார்த்ததில்லை” என்று தன்னை வெளிச்சம் போட்டுக் கொள்ளும் சுப்பிரமணியம், கடந்த, 2000-ம் ஆண்டில், தமிழக அரசின், புதிய கண்டு பிடிப்புக்கான அறிவியல் ஆய்வாளர் விருது பெற்றவர்.

இந்த, ‘வில்லேஜ் விஞ்ஞானி’யின் தற்போதைய கண்டுபிடிப்பு நவீன காற்றாலை

மின் உற்பத்தி இயந்திரம். அதுகுறித்து பேசியவர், ’’நம்ம மாநிலத்தில இருக்கிற காற்றாலைகள், வருஷத்துக்கு, 4 மாசம்தான் வேலை செஞ்சு, கரன்ட் உற்பத்தி பண்ணுது. அதுவும், வேகமா காத்து அடிக்கிற தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கம்பம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் மாதிரியான ஊர்கள்ளதான் இந்த காற்றலைகளையும் அமைக்க முடியுது. இதுக்கான செலவும் அதிகம்.

ஆனா, நான் கண்டுபிடிச்சிருக்கிற மெஷின் லேசா காத்தடிச்சாலும் ஓடி கரன்ட் உற்பத்தியாகும். காத்து உராய்வு மூலமா, பெரிய ரெக்கைகள் சுத்தி, அது வழியா கரன்ட் உற்பத்தி பண்ணுறாங்க. இதுக்கு பதிலா, காத்து நேரடியா ரெக்கைகளை தள்ளினால், முழு சக்தி கிடைக்கும்; மின்சார உற்பத்தியும் அதிகரிக்கும்னு நினைச்சேன். அதைத்தான் இப்ப செஞ்சிருக்கேன்.

இப்ப இருக்கிற செங்குத்தான பெரிய ரெக்கைகளைக் கொண்ட காற்றாலைகள் மணிக்கு, 12 கி.மீ. வேகத்தில் காத்து வீசினாத்தான், மின்சார உற்பத்தி செய்யும். வருஷத்துல நாலு மாசம்தான், இந்த வேகத்தில் காத்து வீசும்ங்கிறதால, அப்ப மட்டுமே, மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனா, நான் வடிவமைச்சிருக்கிற காற்றாலையில மணிக்கு, 6 கி.மீ., வேகத்தில் காற்று வீசினாலே மின் உற்பத்தி செய்யமுடியும். அப்படிப் பார்த்தா வருஷத்துல 8 மாசம் மின் உற்பத்தி செய்ய முடியும்.

தற்போதுள்ள காற்றாலை இயந்திரங்களை, 300 மீட்டர் இடைவெளியில் தான் நிறுவமுடியும். என்னுடைய இயந்திரத்தை அருகருகே அமைக்க முடியும். காற்று எந்த திசையில் இருந்து வீசினாலும் மின் உற்பத்தி செய்யமுடியும். முதலில் சின்னதாக ஒரு மாடல் செய்து பார்த்தேன். அதில் வெற்றி கிடைத்ததால், அடுத்ததாய், நான்கு இறக்கைகளுடன் சற்று பெரிய அளவில் வடிவமைத்துள்ளேன். இதனை, 20 இறக்கைகள் வரை அதிகரித்தால், அதற்கு ஏற்ப மின் உற்பத்தியும் அதிகரிக்கும்’’ என்றார்.

கோவை, ‘கொடிசியா’வில், புதிய கண்டுபிடிப்புகளுக்காக நடந்த கண்காட்சியில் இவரது கண்டுபிடிப்புக்கு ஏக வரவேற்பாம். பெருமையோடு இதை நம்மிடம் சொன்ன சுப்பிரமணியம், “இரண்டு இறக்கை கொண்ட காற்றாலை இயந்திரத்தை செய்ய, 60 ஆயிரம் ரூபாய் செலவானது. எனவே, எனது இயந்திரத்தை தனித்தனியாக அமைப்பது நடைமுறை சாத்தியமில்லை. அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது, செலவு குறையும்.

ராணுவத்தில் பணியாற்றும் முருகசாமி, எனது கண்டுபிடிப்பை ஊக்குவிக்க 35 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்து இந்த இயந்திரத்தை உருவாக்க உதவினார். எட்டு மாதங்கள் பாடுபட்டு இந்த இந்திரத்தை செய்து முடித்திருக்கிறேன். எனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பம் செய்திருக்கின்றேன். அரசு எனக்கு நிதி ஆதாரம்

வழங்கினால் தொழிற்சாலை தொடங்கி இந்த காற்றாலை இயந்திரங்களை அதிக எண்ணிக்கையில் தயாரித்துக் கொடுக்கத் தயாராய் இருக்கிறேன்’’ என்று சொன்னார்.

இவரது நவீன இயந்திரத்தைக் கொண்டு மணிக்கு, 6 கி.மீ. வேகத்தில் காற்று அடிக்குமானால் ஒரு நாளில் 4 யூனிட் வரை மின் உற்பத்தி செய்ய முடியுமாம். இறக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால், மின் உற்பத்தியின் அளவை அதிகரிக்க முடியும். சாதாரணமாக வீட்டின் மாடியில் இதனை பொருத்திவிட்டால், எட்டு மாதத்துக்கு மின்சாரம் தடையின்றி பெறமுடியும்.

ஆயிரக்கணக்கில் கோடிகளை கொட்டி அணு உலைகளை அமைத்து மின்சாரம் தேடும் ஆட்சியாளர்கள் தனது எளிய கண்டுபிடிப்பை அங்கீகரிக்கத் தயங்குவதாக ஆதங்கப்படுகிறார் சுப்பிரமணியம், ‘’அதற்காக நான் சோர்ந்துட மாட்டேன் சார்.. எடிசனையே அவர் ஆயுசு இருக்கும் வரைக்கும் இந்த உலகம் கண்டுக்கல. அதேமாதிரி, என்னையும் ஒருநாள் இந்த உலகம் கண்டுக்கும். அதுவரைக்கும் நாட்டுக்கு

தேவையான நல்ல விஷயங்கள் எதையாவது கண்டுபிடிச்சுக்கிட்டே இருப்பேன் சார்’’ நம்பிக்கை துளிர்க்கச் சொன்னார் சுப்பிரமணியம்.

Topics:

தொழில்நுட்பம்|புதுமை| source::: The Hindu …Tamil

natarajan

மாற்றத்தின் வித்தகர் … ” மரம் தங்கசாமி ” !!!

தமிழ்நாட்டில் இயற்கை ஆர்வலர் மத்தியில் பிரபலமான ஒரு பெயர் சேந்தங்குடி தங்கசாமி. ‘மரம் தங்கசாமி’என்று சொன்னால், பெயர் எளிதில் விளங்கும்.

குறுங்காடு தங்கசாமி 

ஒரு சாதாரண விவசாயியான தங்கசாமி ஏராளமான மரங்களை வளர்த்துப் பணக்காரர் ஆன கதை எல்லோராலும் எழுதப்பட்டது. அது சுயமுன்னேற்றக் கதை. தங்கசாமியிடம் நம் சமூகம் கவனிக்காமல் விட்ட இன்னொரு கதை உண்டு – எதிர்கால இந்திய விவசாயத்தின் மறுமலர்ச்சிக்கான விதை அது – குறுங்காடு வளர்ப்பு!

பத்து ஏக்கர் நிலம். அதில் ஒரு வீடு. வீட்டையொட்டி சின்னதாய்க் காய்கறித் தோட்டம். சுற்றிலும் குறுங்காடு. ஆமாம், சின்னக் காடுதான் அது. புன்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, அழிஞ்சி, நாட்டு வாதுமை, புங்கன், பெருங்காலி, தங்கபட்டி, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, செண்பகம், கறிவேப்பிலை, வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியம், வாகை, கொண்டைவாகை, இயல்வாகை, வாதநாராயணம், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி, நாவல், நெல்லி, பலா, வில்வம், மா, இலுப்பை, கொடுக்காப்புளி, சப்போட்டா, இலந்தை, சீதா, மாதுளம், அரநெல்லி, கரம்போலா, கொய்யா, கம்பளி, அகத்தி, அத்தி, அழிஞ்சி, பூமருது, அசோகா, மயில் கொன்றை, திருவாட்சி, மந்தாரை, கொக்கு மந்தாரை, மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, நெருப்புக் கொன்றை, தேக்கு, சந்தனம், ஆலம், அரசம்… நூற்றுக் கணக்கான மரங்கள் அல்ல; வகைகள். ஏழாயிரத்துச் சொச்ச மரங்கள். கூடவே, சிறிதும் பெரிதுமான பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள்… இதுதான் தங்கசாமியின் குறுங்காடு.

ஒருகாலத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தின் வெம்மைக்கும் வறட்சிக்கும் சரியான உதாரணம் தங்கசாமியின் ஊரான சேந்தங்குடி. இன்றைக்கு அந்தப் பிரதேசத்துக்குள் நுழையும்போதே காற்றில் குளுமையை உணர முடிகிறது. எங்கும் பசுமை வியாபித்திருக்கிறது. 46 ஆண்டுகளில் தங்கசாமி உருவாக்கிய மாற்றம் இது.

“பாரம்பரியமான வெவசாயக் குடும்பம். எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு முடிச்சதும் வெவசாயத் துறையிலேயே வேலை கிடைச்சுது. வீட்டுல சொன்னாக, ‘யப்பா… வீட்டுக்கு நீ ஒரே புள்ள. நீ பாட்டுக்கு வேலைக்குப் போயிட்டீன்னா, குல வெவசாயம் செத்துப்போகும்’னு. சரிதான்னுட்டு, பயிற்சியை மட்டும் முடிச்சுப்புட்டு வயக்காட்டுக்கே வந்துட்டேன். படிச்ச ஆளு, அதுவும் அப்ப வெவசாயப் பயிற்சி வேற எடுத்துக்கிட்ட துடிப்பு, ஊரு முழுக்கப் பச்சைப் புரட்சியைப் பேசுறான்… சும்மா பழைய வழியிலேயே போவ முடியுமா? நவீன வெவசாயம்… நவீன வெவசாயம்னு கூவிக்கிட்டு உரம், பூச்சிக்கொல்லில தொடங்கி பட்டுப்பூச்சி, தேனீ வளர்ப்பு வரைக்கும் போய்ட்டேன். கொஞ்ச நாள்தான். எல்லாம் காலி. 30 ஆயிரம் கடன். 1960-ல 30 ஆயிரம் எவ்வளவு பெரிய தொகை? ஒரு குடியானவன் சேத்து அடைக்குற காசா அது? மனசு விட்டுப்போச்சு. தற்கொலைதான் கடைசி வழின்னு தோணுச்சு. ஒடிஞ்சு உட்கார்ந்துட்டேன்.

அப்போதான் ரேடியோல ஒரு குரல். சீனிவாசன் ஐயா பேசுறார். ‘மரப் பயிறும் பணப் பயிரே…’, ‘தோப்பில்லா குடும்பத்துக்குக் காப்பில்லை’னு. அப்படியே கடவுளே வந்து சொன்ன மாதிரி இருந்துச்சு. அன்னைக்கு மரத்தைக் கட்டிக்கிட்டேன். வெவசாயம் பண்றதுக்குத்தானே தண்ணியோட்டம் உள்ள பூமியா இருக்கணும்? மரம், பூமிக்கேத்த மாதிரி நடலாம். அங்கேயும் இங்கேயுமா இருந்த வயவாய்க்கால் எல்லாத்தையும் பங்காளிங்ககிட்டே கொடுத்துட்டு, கடனை அடைச்சேன்; ஒரே இடத்துல பத்து ஏக்கராவா சேர்த்து வாங்குனேன். மரக்கன்னா நட்டேன். கொஞ்ச வருஷம். நட்டேன். வெட்டுனேன். நட்டேன். வெட்டுனேன். தேவையான காசு வந்துடுச்சு. ஒரு நா விடியக்காலையில முழிச்சுப்பார்க்குறேன். அது நா வரைக்கும் நான் மரமா பார்த்தது எல்லாம் திரண்டு காடா நிக்குது. சத்தியமா அன்னைக்கு வரைக்கும் மரத்தைக் காசாத்தான் பார்த்தான் இந்தத் தங்கசாமி; ஆனா, காடு காசு இல்லை; அது சாமி. பொறி தட்டிடுச்சு. ‘தங்கசாமி இனி உனக்கு வேலை இதுதான்டா’ன்னு.

அன்னைக்கு ஆரம்பிச்சு இன்னைக்கு வரைக்கும் காடுதான் என் மூச்சுலேயும் பேச்சுலேயும் கலந்துகெடக்கு. யாரு என் வீட்டுக்கு வந்தாலும் சரி; யாரு வீட்டுக்கு நான் போனாலும் சரி… மரக்கன்னு ஒண்ணைப் புடிச்சு நட்டுடறது. வீட்டுல எந்த விசேஷ நாள்னாலும் மரக்கன்னை நட்டுப்புடுறது. இன்னைக்கு என் கை பட்ட மரக்கன்னு உலகம் முழுக்க முளைச்சுக் கெடக்கு. நம்புவீங்களா, கோடி வெதை, கன்னுங்களைத் தன் கையால கொடுத்திருக்கான் தங்கசாமி. என் மவன் கல்யாணத்து அன்னைக்கு மட்டும் ஊருல 10 ஆயிரம் கன்னுகளைக் கொடுத்தேன். அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இஸ்ரேல்னு எங்கெங்கோ இருந்து வர்ற புள்ளைங்க இந்த வெவசாயிகிட்டே இருந்து பாடம் கத்துக்கிட்டுப்போவுதுங்க.

ஆனா, இந்தக் கதை எல்லாம் இப்போதான். ஆரம்பத்துல சுத்தி நின்ன அத்தனை பேரும் என்ன சொன்னான் தெரியுமா? தங்கசாமி ஒரு லூஸுப் பையன்னான். அப்புறம், தங்கசாமி மாதிரி நம்மளும் மரம் நட்டுக் காசு பார்க்கலாம்னு எல்லாரும் மரம் நட்டான். இங்கே நான் சுட்டிக்காட்டணும்னு நெனைக்குற விஷயம் ஒண்ணு உண்டு. மரம் வளர்க்குறதுக்கும் குறுங்காடு வளர்க்குறதுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. மரம் வளர்க்குறது நீங்க ஒரு வீடு கட்டுற மாதிரி; குறுங்காடு வளர்க்குறது ஒரு அரண்மனையையே கட்டி எல்லாருக்கும் இடம் கொடுக்குற மாதிரி. ஒரு ஆச்சரியம் என்னன்னா, வீடு கட்டுறதைவிட அரண்மனை கட்டுறதுதான் எளிமையான விஷயம்கிறதுதான். மரம் வளர்க்குறது ஒரே மாதிரி மரங்களா பத்திவிடறது. குறுங்காடு வளர்க்குறது எல்லா வகை மரங்களுக்கும் இடம் கொடுக்குறது.

மரங்கள்ல பூமிக்குச் சத்து கொடுக்குற மரங்களும் உண்டு; பூமிகிட்டே இருந்து சத்தை எடுத்துக்குற மரங்களும் உண்டு. குறுங்காடுங்கிறது இந்த ரெண்டு வகை மரங்களையும் உள்ளடக்கினது. மனுஷங்களுக்கான பூ மரங்கள் – பழ மரங்கள் மட்டும் இல்லை; பறவைங்க விரும்பி வர்ற மரங்களும் இங்கே இருக்கும். காரண காரியங்கள் இல்லாம வளர்க்குற மரங்களுக்கு இடையிலேயே செஞ்சந்தனம், தேக்கு, ரோஸ்வுட், வாழை, தென்னைனு காசு பார்க்க என்னென்ன மரங்கள் வேணுமோ அதுகளையும் நாம வளர்த்துக்கலாம்.

ஒரு முத்தின செஞ்சந்தன மரம் விலை இரண்டரை லட்சம். இங்கே பல நூறு செஞ்சந்தன மரம் நிக்குது. நான் எவ்வளவோ பெரிய கோடீஸ்வரன்? பாம்பு, பல்லியில ஆரம்பிச்சு எந்தெந்த மூலையில இருந்தோ இங்கே வர்ற பேர் தெரியாத பறவைகள் வரைக்கும் இந்தக் காட்டுல ஆயிரமாயிரம் உயிரினங்கள் வாழுது. எனக்கு எவ்வளவு சொந்தஞ்சோளி?

நம்ம வெவசாயிகளுக்கு நான் சொல்றது சின்ன யோசனைதான். உங்க நெலம் எவ்வளவு இருக்கோ, அதை மூணாப் பிரியுங்க. ரெண்டு பங்குல மாத்தி மாத்தி விவசாயம் பண்ணி நாசமாப் போங்க – அது உங்க உரிமை, கடமை. மிச்ச ஒரு பங்குல மட்டுமாவது கண்டிப்பா மரங்களை நடுங்க. உங்க சந்ததி பொழைச்சுக்கும். விவசாயிங்க மட்டும் இல்லை; அரசாங்கமும் இதை யோசிக்கணும். பெருகுற மக்கள்தொகையால கெடுற சுற்றுச்சூழலையும் உணவுத் தேவையையும் சமாளிக்கணும்னா, தரிசாக் கெடக்குற நெலத்திலெல்லாம் பல வகை மரங்களை நடணும்” – தீர்க்கமான குரலில் பேசுகிறார் தங்கசாமி.

பக்தர்கள் மலைக்கு மாலை போடுவதுபோல, தங்கசாமியும் மாலை போடுவது உண்டு. இது 18-வது வருடம். ஆண்டுதோறும் மாலை போட்டு, 48 நாட்கள் விரதம் இருந்து, குடுமியான்மலை, ஆடுதுறை என்று வேளாண் மையங்களுக்குச் சென்று விரதம் முடிக்கிறார். போகும் வழிநெடுக குறுங்காடு பிரச்சாரம். “இந்த நாடு விவசாயிகளின் நாடு; இந்த நாட்டின் மறுமலர்ச்சி கிராமங்களில் இருந்துதான் தொடங்கும்” என்கிற காந்தியின் வார்த்தைகள்தான் தங்கசாமியின் இயக்கத்துக்கான ஆதார சுருதி. தன்னுடைய பயணத்தில் தங்கசாமி தவறாமல் வலியுறுத்தும் காந்தியின் வார்த்தைகள் இன்னும் சிலவும் உண்டு: “எல்லாருடைய ஆசையையும் நிறைவேற்றும் வல்லமை இந்த பூமிக்கு உண்டு; ஆனால், எல்லாருடைய பேராசையையும் நிறைவேற்றும் திராணி அதற்குக் கிடையாது!”

சமஸ் – தொடர்புக்கு: writersamas@gmail.com

Topics:

சுற்றுச்சூழல்|மரங்கள்|

source :::::The Hindu… Tamil

natarajan

Chennai …Thro ‘ the Lens This Week !!!

BIRDS OF A FEATHER: Flights of parakeets swoop down on a house on Bharathi Salai everyday and C. Sekar, owner of the house, leaves grains on the terrace for these rose ringed parakeets to feed on.

 

LIFE STRINGS: A fisherman in Marina strings his net together for the next catch.

 

 

CHENNAI IN CAKE: As part of Joy of Giving Week celebrations, French Loaf made a 1,000 kg eggless chocolate fantasy photo cake with 300 pictures and sketches of Chennai.

 

YOUNGSTERS OF THE NATION: Nearly 400 children dressed like Mahatma Gandhi on the Marina Beach. This was on the occasion of Gandhi Jayanti.

 

A NEW LEASE: Nayani, a female Olive Ridley turtle rescued by the Tree Foundation in February was released into the sea.

 

METER MATTERS: Even though the meter has shaken things up, only some commuters got to see a ticking meter.

 

source ::::The Hindu

natarajan

“Navratri “….A Festival With Many Faces !!!

The dancer bommai is a prominent part of golu decorations in Southern India

Navratri is celebrated for nine nights and ten days during which the nine forms of Shakti or Devi are worshipped. The tenth day, which is considered the most auspicious, is celebrated as Vijayadasami or Dussehra.

From worshipping golu dolls and sharing Navratri goodies to feeding nine young girls and putting a smile on their faces, each of the nine days of the colourful festival has something new to offer. Find out how Navratri is celebrated in different parts of Southern India.

In the south, especially in Tamil Nadu, the Navratri Golu is an important part of the celebrations.

The pride and joy that is felt by displaying your colourful dolls, some of which have been in the family for generations, is simply incomparable.

“I have a beautiful 80-year-old Subramanya Swamy doll in my collection,” says a proud Revathi from Gandhi Nagar, Adayar, who is already in the midst of a very tight schedule.

During Kanya Pooja, nine young girls are served food and goodies

 

During Ayudha Pooja, automobiles are machines are worshipped

Throughout Southern India, the ninth day of the Navratri festival is celebrated as Saraswati puja or Ayudha (weapon/machine) puja.

On this day, all tools and machines, including vehicles and all implements that help us earn our livelihood are worshipped.

Rajpal, proprietor of a popular hardware shop in Perambur, who celebrates this festival every year says, “While most festivals are celebrated at home, Ayudha Puja is celebrated at the place of work. We dust, clean, wash, and sometimes even paint all the tools used in the shop, and apply sandalwood paste and vermilion on them. Even our delivery vans and lorries are washed and decorated, and poojas are performed for them. We then distribute sweets to all our workers to thank them for their service and sometimes also burst a few crackers.”

 

 

The ritual of ‘Vidyarambham’ or introducing the children to the world of knowledge is another common practice followed on Vijayadasami day.

A Anuradha of Velachery who is a trained Montessori teacher claims that most parents prefer to enroll their children in school during this occasion.

“We usually have a lot of registrations on this day. Children are mostly accompanied by their grandparents and are taught to write their first alphabet by holding their fingers and writing the letters in a plate filled with rice. It is believed that starting anything new, be it education or a business venture on Vijayadasami day ensures success and prosperity. At home, on Saraswathi Puja day, we keep the books, pens, pencils, etc in the prayer room and worship them.”

Parvathy Panicker from Shoranur, Kerala also identifies with this custom of Vidyarambham.

 

source:::::rediff.com

natarajan

மாற்றத்தின் வித்தகர் …கும்பகோணம் குருசாமி பாலசுப்ரமணியன் !!!

உலகில் நீ விரும்பும் மாற்றமாக நீயே மாறிவிடு! – காந்தியின் வாழ்க்கைச் செய்திகளிலேயே மகத்தானது இதுதான். உண்மையில் இந்த உலகின் உயிரியக்கத்துக்கும் மகத்தான மாற்றங்களுக்கும், தான் விரும்பும் மாற்றமாகவே மாறியவர்கள்தான் ஆதார சுருதியாக நிற்கிறார்கள். அவர்களில் பலர், சின்ன விஷயங்களிலிருந்து மாற்றங்களை முன்னெடுக்கத் தொடங்கியவர்கள். மிக யதார்த்தமாகத் தன் வாழ்வின், தொழிலின் ஒரு பகுதியாக மாற்றங்களைக் கையாள்பவர்கள். பிரமாண்டங்களை வெறுப்பவர்கள். விளம்பர வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியிருப்பவர்கள். தான் ஏதும் விசேஷமாகச் செய்யவில்லை என்ற உணர்வோடு, வெகுளியாகச் சிரிப்பவர்கள். நமக்குப் பக்கத்திலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அன்றாடம் நாம் மிகச் சாதாரணமாகப் பார்த்துக்கொண்டே கடக்கும் அசாதாரணர்கள். ஆச்சர்யமாக, ஏதோ ஒரு வகையில் காந்தி சொல்லும் இயல்போடும் இயற்கையோடும் எளிமையோடும் தங்களைப் பொருத்திக்கொண்டவர்கள். அவர்களுடைய அணிவகுப்பே இந்த ‘மாற்றத்தின் வித்தகர்கள்’. நாம் ஏற்கெனவே பார்த்த முகங்கள்… பார்க்காத பரிமாணங்களில்…

கும்பகோணம் குருசாமி பாலசுப்பிரமணியன். 10 ஆண்டுகளுக்கு முன் இவரைப் பற்றி முதல்முறையாகக் கேள்விப்பட்ட முதல் செய்தியே இன்றைக்கும் அசரடிக்கவைக்கக் கூடியது.

கு. பாலசுப்பிரமணியன்

“ஒரு மளிகைக் கடைக்காரர் பள்ளிக்கூடம் நடத்துறார். படிக்கிறவங்களுக்கும் காசு கிடையாது; படிப்பு சொல்லிக்கொடுக்கு றவங்களுக்கும் காசு கிடையாது. பல வருஷமா நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துல படிச்ச பல புள்ளைங்க பெரிய பெரிய வேலைகளுக்குப் போய்ட்டாங்க. இப்போ அந்தப் புள்ளைங்க எல்லாம் சேர்ந்து வாடகைக் கட்டடத்துல நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமா ஒரு கட்டடம் கட்டியிருக்காங்க. ஆனா, அந்த ஏழை மளிகைக் கடைக்காரர் இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கார்.”

அந்த மளிகைக் கடைக்காரர் பாலசுப்பிர மணியன். அவரை அறிந்தவர்களுக்கு பாலுஜி. பள்ளிக்கூடத்தின் பெயர் ‘காந்தியடிகள் நற்பணிக் கழகம்’. 300-க்கும் மேற்பட்டவர்கள் படிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புற ஏழைச் சிறார்கள். விசேஷம் என்னவென்றால், இவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்குச் சென்றுகொண்டே படிப்பவர்கள். ஆகையால், எல்லாப் பள்ளிக்கூடங்களும் இயங்கும் நேரத்தில் இந்தப் பள்ளி இயங்காது. காலை 6 மணி முதல் 8 மணி வரை. மாலை 6 மணி முதல் 9 மணி வரை. இந்த இரு நேரங்களில் சௌகரியமான நேரத்தில் மாணவ -மாணவியர் வருகிறார்கள். பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்களும் இப்படித்தான். வேலைக்குச் சென்றுகொண்டே கல்விச் சேவை தருபவர்கள். 38 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கல்வி அளித்து அனுப்பியிருக்கிறார் பாலுஜி.

“அப்போ நான் எட்டாவது படிச்சுக்கிட்டுருந்தேன். வகுப்புல நான்தான் படிப்பில் முதல் மாணவன். அப்பா போய்ட்டார். வீட்டுக்கு நான்தான் மூத்த பையன். ரெண்டு தம்பிங்க. ஒரு தங்கச்சி எனக்குக் கீழே இருந்தாங்க. படிப்பைவிட்டுட்டு மளிகைக் கடை வேலைக்குப் போனேன். வேலைக்குப் போய்ட்டேனே தவிர, படிப்பு ஆசை விடலை. பிரைவேட்டாவே 10-வது, 12-வது எழுதினேன், பி.ஏ. பண்ணினேன், எம்.ஏ. முடிச்சேன். இந்தியும் படிச்சேன்.

இந்தப் பகுதி நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதி. ஏழ்மை காரணமா நிறைய குழந்தைங்க படிக்க முடியாத சூழல். கடைக்கு வரும்போது அவங்களைப் பார்க்க அத்தனை சங்கடமா இருக்கும். ஏதாவது செய்யணுமேனு தோணும். கொஞ்ச நாள் கழிச்சு நானே சின்னதா கடை ஆரம்பிச்சதுக்கு அப்புறம் சாயுங்கால நேரத்தை இவங்களுக்கு ஒதுக்குவோம்னு முடிவெடுத்தேன். என்னை மாதிரியே நல்லெண்ணம் உள்ள – படிச்சுக்கிட்டு இருக்குற சில பசங்களைச் சேர்த்துக்கிட்டு ‘காந்தியடிகள் நற்பணிக் கழக’த்தைத் தொடங்கினேன். யாருக்கும் யாரும் காசு தர வேண்டாம். அன்னைக்கு எல்லாம் இருந்த பெரிய செலவு கட்டடத்துக்கு வாடகை தர்றதுதான். மாசம் அம்பது ரூபா. ஒருகட்டத்துல இங்கே படிச்சு வெளியே வேலைக்குப் போன பிள்ளைங்களே இங்கே சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சாங்க. கழகத்துக்குச் சொந்தக் கட்டடம் கட்டினாங்க. இன்னைக்கு ஆலமரம் மாதிரி ஆயிடுச்சு கழகம். விழுதுகள் தாங்குது” என்கிற பாலுஜி, இரு ஆசிரியர்களை அறிமுகப்படுத்தினார்.

ஒருவர் ராதாகிருஷ்ணன். இன்னொருவர் அகிலா.

“ராதாகிருஷ்ணன் இங்கே உள்ள ஆசிரியர்களிலேயே மூத்தவர். இங்கே படிச்சவர். சுகாதாரத் துறையில தஞ்சாவூர் பக்கத்துல உள்ள வல்லத்துல வேலை செய்றார். தினமும் 100 கி.மீ. பயணம் செஞ்சாலும் இங்கே ஒரு நாள் விடாம வந்துபோதிக்கிறார். அகிலா இங்கே உள்ள ஆசிரியர்களிலேயே சின்ன பொண்ணு. ஒன்பதாம் வகுப்பு படிச்சுக்கிட்டே, இங்கே உள்ள பிள்ளைகளுக்கு இந்தி கத்துக்கொடுக்கிறார். இங்குள்ள 38 ஆசிரியர்களும் இப்படித்தான்” என்கிற பாலுஜி அடுத்தடுத்து சொல்லும் விஷயங்கள் மிக முக்கியமானவை.

“இங்கே வர்ற நிறைய பேர் ஏதோ காசு வாங்காம கல்வி கொடுக்குறதுதான் பெரிய காரியம்னு நெனைக்குறாங்க. அது இல்லை. இங்கே நாங்க எதைக் கல்வியா கொடுக்குறோம்கிறதுதான் முக்கியம்னு நாங்க நெனைக்கிறோம். பணம்தான் உலகம்னு ஓடிக்கிட்டு இருக்குறவங்களுக்கு மத்தியில, பணம் மட்டும் வாழ்க்கை இல்லைனு சொல்லிக்கொடுக்குறோம். அறம்தான் உண்மையான வாழ்க்கையோட ஆதாரம்னு சொல்லிக்கொடுக்குறோம். இங்கே படிச்ச ஒரு மாணவர் சுங்கத் துறையில ஒரு பெரிய பதவிக்கு, நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைச்சுப் போனார். கொஞ்ச நாள்ளேயே அந்த வேலை வேணாம்னு சொல்லி ஒதுங்கிட்டார். காரணம் என்ன தெரியுமா? லஞ்சம் வாங்காம, லஞ்சம் வாங்குறதைத் தடுக்காம அங்கே வேலை பார்க்க முடியாதுங்கிற சூழல். எங்க பிள்ளைங்க ஒருபோதும் தவறான பாதையில போக மாட்டாங்க. பணத்துக்குப் பின்னாடி ஓட மாட்டாங்க. இதைச் சொல்லிக்கொடுக்குறதுதான் முக்கியம்னு நெனைக்குறேன்” என்று சொல்லும் பாலுஜி எங்கிருந்து இந்த அறவுணர்வைப் பெற்றார்? எப்படி அதை அணையாமல் காக்கிறார்?

பாலுஜியின் பதில்: காந்தி. “செம்பியன்மாதவிங்கிற குக்கிராமத்துல உள்ள காந்தியடிகள் நடுநிலைப் பள்ளிதான் எனக்குள் காந்தியை விதைச்சுது. அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்துன தாளாளர் ஆர்.என்.ராமசாமியும் ஆசிரியர் வி.ராமச்சந்திரனும் படிப்பைவிட முக்கியம் அறம்னு சொல்லி எங்களை வளர்த்தாங்க. நல்ல விஷயங்களை அடுத்தவங்களுக்குப் போதிக்கிறதைவிட முக்கியம், நாம பின்பற்றுவதுனு சொல்லிக்கொடுத்தாங்க. அப்போ அவங்க எங்களுக்குச் சுட்டிக்காட்டின வழிகாட்டி காந்தி. தான் உண்மைனு நினைச்ச அறத்துக்காகக் கடைசிவரைக்கும் வாழ்ந்தார் காந்தி. அந்த வைராக்கியம் வந்துடுச்சுன்னா எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அறம் நம்மையும் காப்பாற்றும்!”

சமஸ் – தொடர்புக்கு: writersamas@gmail.com

source:::::: The Hindu…Tamil

natarajan

” அம்மாவின் அன்புக்கரங்கள் ” ….

அம்மாவின் கைகள்.

கண்ணீரை அடக்க முடியவிலலை தெய்வத்தின் மறு பெயர்தான் தாய்.தியாகத்தின் சிகரம் தாய்

சில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.

அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.

அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. “எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட, அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.

அம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால், இதே கை களால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.

அப்பா பொறுப்பற்ற முறையில், குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 32 வயதில் செத்துப் போனார்.அம்மாதான் எங்களை வளர்த்தார். நாங்கள் மூன்று பிள்ளைகள். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பதுபோன்ற வேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.

இரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து உறங்கச்செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில்தான் உறக்கம். அப்போதும் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில் யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.

அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம், நம்பிக்கை கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை.

ஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல், விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவோ இல்லை. அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை. வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ, அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை… வேலை… அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.

சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை. ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன். கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்ற சிறுவர்களைப்போல சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால் திட்டிஇருக்கிறேன். அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை.அம்மா கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்றுதான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும், புதுப் புது ஆடைகள் வாங்கவும் குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், அம்மா அதற்காக எவரையும் கோபித்துக்கொள்ளவே இல்லை.

கல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா. அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு, என்னைத் திருத்திக்கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி, ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி உயர்வுபெற்றேன். அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும், அம்மா ஒருபோதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து, தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.

முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன், ‘எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவே இல்லை. அதன் பிறகு, எனக்குள் இருந்த கடிகாரம் ஓடு… ஓடு… என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணி வரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா?’ என்று கேட்டார்.

அம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்துகொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார். டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நான் கூடவே இருந்தேன்.

‘நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே இல்லை?’ என்று கேட்டேன். அம்மா, ‘அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், அன்று நான் கோபப்பட்டு இருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்’ என்று சொல்லி, தன் கையை என்னுடன் சேர்த்துவைத்துக்கொண்டார்.

அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த் தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒருநாள், எனது கேமராவை எடுத்து வந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால், இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர, வேறு நான் என்ன செய்துவிட முடியும்?” என்றார்.

ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை. உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம். அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.

இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன். சாப்பிட்டு இருக்கி றேன். எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன். அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது.

‘கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துகொள்ளத்தான்’ என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

source::::: input from a friend of mine

natarajan