” இந்த தங்க கிண்ணம் தேசிய பாதுகாப்பு நிதிக்கு…”

அந்த அம்மாள் காஞ்சிமாமுனிவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். தாம் கண்ட ஆச்சர்யமான கனவு ஒன்றை ஸ்வாமிகளிடம் விவரித்தார். “நான் ஒரு தங்கக் கிண்ணத்தில் கற்கண்டும் திராட்சைப் பழமும் சமர்ப்பித்துத் தங்களிடம் ஆசியைப் பெறுவதுபோல் கனவு கண்டேன்” என்றார் அந்தப் பெண்மணி.

“அப்படியா, அதுமாதிரி செய்ய உனக்கு விருப்பம் இருந்தா அப்படியே செய்” என்றார் ஸ்வாமிகள்.

“இந்த ஏழையிடம் அதற்கான மனம் இருக்கிறதே தவிர பணம் இல்லையே!” என்று ஏக்கத்துடன் கூறினார் அந்தப் பெண்மணி.

“சௌகரியப்படும்போது செய்யலாம்” என்றார்கள்.

சிறிது காலம் சென்றது. அந்த அம்மாளின் பெரிய தகப்பனார் தம் சொத்தில் ஒரு பங்கை அந்தப் பெண்மணி பேருக்கு எழுதி வைத்து இறந்து போனார். அதன் பிறகு அந்த அம்மாள் சுமார் ரூபாய் நான்காயிரம் எடுத்துக் கொண்டு ஸ்வாமிகளிடம் வந்தார். ஒரு தட்டில் பணத்தைச் சமர்ப்பித்தார்.

“எதுக்கு இந்தப் பணத்தை என்னிடம் கொடுக்கிறாய்!” என்று கேட்டார்கள். அதற்கு அந்த அம்மாள் தாம் முன்பு கூறியபடி தங்கக் கிண்ணத்தில் கற்கண்டும், திராட்சையும் சேர்த்துக் கொடுப்பதற்குப் பதில் பணமாகவே சமர்ப்பித்து விடலாம் என்று எண்ணியதாகக் கூறினார்.

“உன் சொப்பனத்தில் நீ எப்படிச் செய்கிறதாகக் கண்டாயோ அதுமாதிரி விருப்பமானால் செய்யலாம். அதுக்குப் பதில் பணமாகக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை” என்றார் ஆசார்ய ஸ்வாமிகள்.

அந்தப் பெண்மணி பணத்தைத் திரும்ப எடுத்துக் கொண்டு சென்றார். தங்கத்தினால் சிறிய கிண்ணம் ஒன்றைச் செய்வித்து, அதில் நிறைய கற்கண்டும், திராட்சைப் பழமும் வைத்து மறுபடியும் ஸ்வாமிகளிடம் கொணர்ந்தார். அந்தச் சமயம் அவர்கள் காட்டுப்பள்ளியில் எழுந்தருளி இருந்தார்கள். தங்கக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்ட ஸ்வாமிகள் அந்தப் பெண்மணிக்கு ஆசி வழங்கினார்கள். அந்த அம்மாள் தன் கனவு நிறைவேறியதனால் மிக்க மனநிறைவோடு விடை பெற்றுக் கொண்டார்.

பிறகு ஸ்வாமிகள் மடத்து அதிகாரியிடம், “இதைக் கணக்கில் சேர்த்துக் கொள்வதில் ஆக்ஷேபம் ஏதும் உண்டா?” என்று கேட்டார்கள். அதிகாரி சற்றுத் தயங்கினார். தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் அமலில் இருந்த சமயம் அது. அவருடைய தயக்கத்தைப் புரிந்து கொண்டார்கள் ஸ்வாமிகள். “இதை இப்படியே மடத்துக் கணக்கில் சேர்த்துவிட்டால் நான் ஒரு பொய்க்கு உடந்தையாக இருந்ததாக முடியும். நான் உங்களுக்கெல்லாம் வழி காட்டுகிற பீடத்தில் இருந்து கொண்டு ஒரு பொய் சொன்னால், அப்புறம் நீங்களெல்லாம் அதுபோல் ஒன்பது மடங்கு பொய்யைக் கூசாமல் சொல்லலாம் அல்லவா? எனவே எது நியாயமோ அதையே செய்ய வேண்டும்” என்று திருவாய் மலர்ந்தருளினார்கள்.

சரி. அப்படியானால் ஸ்வாமிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை ஊகிக்க முடியாமல் அதிகாரி திகைத்தார். “இந்தக் கிண்ணத்தைச் சென்னைக்குக் கொண்டு போய் தேசிய பாதுகாப்பு நிதிக்கு என்று முதல் மந்திரியிடம் சேர்த்து விடுங்கள்” என்று கூறி உடனே அதை அனுப்பி விட்டார்கள்.

அப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயம் – (1965). சென்னை சென்றிருந்தவர்கள் அப்பொழுதிருந்த முதல்வர் மூலமாக அந்த தங்கக் கிண்ணத்தை யுத்தத்தின் முன்னணியில் நின்ற நம் வீரர்களுக்கு அனுப்பி வைத்தார். அதிலிருந்த பிரசாதம் போர்முனையில் நின்ற நம் பாரத வீரர்களுக்கு விநியோகிக்கப் பெற்றது.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

* செல்வத்தில் சிறந்த செல்வம் நல்லறிவே. அதனால் அம்பிகையின் திருவடியில் சரணடைந்து நல்லறிவைத் தரும்படி வேண்டுங்கள்.


* இதயத்தில் கடவுள் குடியிருக்கிறார். அதில் கீழான சிந்தனையை அனுமதித்து குப்பைத் தொட்டியாக வைத்திருப்பது கூடாது.

Message For the Day…” Appreciate the Legitimate Role of the Mind as The Master of Senses..”

In the Ramayana story, Queen Kaikeyi yields to the selfish wiles of her maid and as a consequence, her lord King Dasaratha lost his life. Rama who she regarded as her very life-breath was exiled into the forest, and Bharatha her son, disowned her for the very same act! She drew on herself the condemnation from all the people in the Kingdom of Ayodhya. The story is an allegory. Dasaratha is the human body with the five senses of perception and the five senses of action – the ten chariots or Dasha-ratha. He wedded the Queen, the Mind, and the mind yielded to the servant and caused the downfall. This clearly teaches us the legitimate role of the mind as the master of one’s senses. If the master serves the servants, then, he or she loses their self-respect and falls in the esteem of all.

Sathya Sai Baba

ஓவியமா இல்லை காவியமா … !!!

 

 

 

 

 

 

 

 

 

 

கோவை நண்பர் விஜயகுமார் ஒரு அழகான ஓவியத்தை தனது முகநூலில் பதிவிட்டு இருந்தா

பார்த்த உடனேயே இது ஒரு புகைப்படமோ என நினைக்கத்தோன்றும் வகையில் தத்ரூபமாக அந்த ஓவியம் அமைந்திருந்தது.

ஓவியம் வரைந்தவர் யார் என்பது தெரிந்தால் அவரை படத்துடன் கவுரப்படுத்தாலாமே என விசாரித்தேன்

கள்ளம் கபடமில்லாத ஒரு அழகான கிராமத்து பெண்ணை கொண்டுவந்து நிறுத்தியது அந்த ஓவியத்தில் ஏற்பட்ட ஈர்ப்பு, அதன் மேலான லயிப்பு காரணமாக படத்தை பகிர்ந்து கொண்டேன்; (ஷேர்) அதைத்தாண்டி வேறு எதுவும் தெரியவில்லை என்றார் நண்பர்.

வாசகர்கள் கண்டு பிடித்த ஓவியர்:

இன்னும் கொஞ்சம் தேடலை ஆழப்படுத்தியபோது ஓவியர் பற்றிய விவரங்கள் கிடைத்தது.(விவரங்கள் கொடுத்து உதவிய வாசகர்களுக்கு மிகவும் நன்றி.)

எஸ்.இளையராஜா என்ற அந்த இளம் ஓவியர் சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனை சேர்ந்தவர். ஆயில் பெயின்ட், வாட்டர் கலர், மற்றும் அக்ரிலிக்கில் ஓவியம் வரைவதில் இவர் சிறந்தவர். ஓவியம் வரைவதற்கு அவர் என்ன பாணியை கடைபிடிக்கிறார் என்பதைவிட ஓவியங்களில் உள்ள பெண்களிடம் காட்டிய கண்ணியம், அழகு ஆகியவைதான் கவித்துவம் பெறுகின்றன. மிகப்பெரிய புகழை இந்த ஓவியர் நிச்சயம் அடைவார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை, அதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது தொடர்பு எண்: 9841170866.
ஓவியங்களில் கிராமத்து மண் மணம் மணக்கிறது, வெள்ளந்தியான பெண்களின் இயல்பான அழகுடன் காணப்படுகின்றனர். குடிசை வீடுகளும் வீடுகளுக்குள் காணப்படும் விறகு அடுப்பும், அதன் மீது விழும் வெளிச்ச கோடுகளும் அழகோ அழகு.அழுத்தந்திருத்தமான வண்ணங்களுடன் அமைந்துள்ள இந்த ஓவியங்களை இன்றெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கலாம்.

இயற்கையோடு இணைந்த பொற்காலம்:

பாஸ் பண்ணுவதற்கு மட்டும் கொஞ்சமாய் படித்து, நிறைய விளையாடி, தண்ணீர் சேருமோ சேராதோ என்ற சந்தேகம் இல்லாமல் கிடைத்த தண்ணீரை தாகம் தீரகுடித்து, கலோரி பார்க்காமல் சாப்பிட்டு,அது செரிக்க செரிக்க சிரிக்க சிரிக்க பேசி, படுத்தவுடன் தூங்கி, சைக்கிளோடு உறவாடி, பாண்டி, கபடி என விளையாடி இனிமையாக இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பொற்காலத்திற்கே இந்த ஓவியங்கள் இழுத்துச்செல்வது மட்டும் நிஜம் ….

Source:::: எல்.முருகராஜ்  in DINAMALAR…TAMIL DAILY

Natarajan

Great Moments…. Memorable Ones…

sweet moments in photos

 

sweet moments in photos

sweet moments in photos

 

 

sweet moments in photos

 

sweet moments in photos

 

sweet moments in photos

 

sweet moments in photos

 

sweet moments in photos

 

The human experience is an incredibly complex one, full of an endless series of moments, emotions, thoughts and connections. In all of these, there is good and bad, sweet and sour, ups and downs. We all know the downs, but what are some of the best moments about being alive? Well,  above  are some

Source::::ba-ba mail site

Natarajan

Image of the Day…” Sky on Fire … “!!!

 

Sunset on Australia’s Sunshine Coast  26 June 2014…

View larger. | Photo credit: Damian McCudden / Landscape Photographer?

Damian McCudden took this shot in Queensland, Australia. Damian wrote:

The sky was on fire tonight on the Sunshine Coast. I shot this pic at Mooloolaba Beach, Australia tonight close to 5.30. Took ages to get going but in the end it was stunning.

See more photos by Damian McCudden / Landscape Photographer here.

Source::::earth sky news site

Natarajan

Joke of The day…” One Fine Day, in the Middle of the Night …” !!!

Ladies and gentlemen, hobos and tramps,

Bug-eyed mosquitoes and bowlegged ants!

I’m about to tell you a story I’ve never heard before,

So pull up a chair and sit on the floor.

Admission is free, so pay at the door.

One fine day, in the middle of the night,

two, dead boys got up to fight.

Back to back, they faced each other,

drew their swords and shot each other.

A deaf policeman heard the noise,

and saved the lives of the two dead boys.

If you don’t believe my lies are true,

ask the blind man, he saw it too!

Source:::: joke a day .com

Natarajan

Message For the Day…” Do Appreciate the Value of Air You Breathe…”

Co-operation among individuals grouped as a society guarantees security and stability. It is called, Shri Rama Raksha (protection), the mark of Divine Grace. The surest sign of awareness of one’s Divine Nature is the recognition of the bond of kinship with other beings. This bond has now snapped, and as a result, life has been rendered meaningless. The evil spirits of greed and pride, of envy and hatred, are executing their demonic dance in the hearts of man. People are not able to appreciate the value of the air they breathe, of the Sun’s rays that illumine the world, the drops of rain that sustain life, and the subtle power that underlies every object in Nature. They have become low-minded people, dedicating their lives to meaningless pursuits. What needs to be done today is to foster people who are determined to stand and even suffer to realise the holy goals of peace and prosperity for the entire world.

Sathya Sai Baba

“என் பெயர் நிகரன் …”

‘என் பெயர் நிகரன். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். தமிழ் வழியில் கல்வி பயில்கிறேன்’ – இப்படி ஒரு சிறுவன் என்னிடம் அறிமுகப்படுத்தியபோது என் காதுகளில் தேன் பாய்வதை உணர்ந்தேன்.

வீட்டிற்கு வரும் விருந்தினர், உறவினரிடம் ‘பாப்பா அங்கிளுக்கு ஒரு ரைம்ஸ் சொல்லு’, ‘சே ஹலோ டூ ஆன்ட்டி’ என்றெல்லாம் வித்தை காட்டுவது போல் குழந்தைகளின் ஆங்கிலப் புலமையை பறைசாற்றிக் பெருமைகொள்ளும் இந்த காலகட்டத்தில், எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தை அழகாக தமிழ் பேச வேண்டும் என விரும்புகின்றனர், ஊக்குவிக்கின்றனர்?

இதை அறிந்துகொள்ள எத்தனித்தபோதுதான் நிகரனின் அறிமுகம் கிடைத்தது. அழகாக தமிழ் பேசும் நிகரனைப் பார்த்து அக்கம்பக்கத்தில் உள்ள அவனது நண்பர்களும் தமிழ் உச்சரிப்பைக் கற்றுக் கொள்கின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. நிகரன் வீட்டில் அனைவருமே அநாவசியமாக ஆங்கிலக் கலப்பு இல்லாமல் இனிமையாக தமிழ் பேசுகின்றனர்.

நிகரனின் தாய் காந்திமதியுடன் பேச்சு விரிவடைந்தது. பொதுவாக குழந்தைகள் நுனி நாக்கு ஆங்கிலம் பேச வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள் மத்தியில் சற்று வேறுபட்டு நிற்கிறார்கள் நிகரனின் பெற்றோர். குறிப்பாக நிகரனின் தாய் காந்திமதி.

“ஆங்கிலத்தில் பேசுவது சமூக அந்தஸ்தாக கருதப்படுகிறது. ஆங்கிலப் புலமை உள்ள நபர் மிகப் பெரிய அறிவாளி என்ற தோற்றமும் நிலவுகிறது. சமுதாயத்தோடு ஒன்றரக்கலந்துவிட்ட இந்த கருத்தோடு இயைந்து வாழ சமூகமும் பழகிவிட்டது.

ஆங்கிலம் தெரியாமல் போய்விட்டால் எதிர்காலத்தில் குழந்தை தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாகவே ஆங்கில வழிக்கல்வி, வீட்டிலும் ஆங்கிலம் பற்றாகுறைக்கு ஸ்போகன் இங்கிலிஷ் வகுப்பு என குழந்தைகள் ஆங்கிலம் பயில்வதில் அதீத கவனம் செலுத்தப்படுகிறது.

என் குழந்தையை தமிழ் வழிக்கல்வி பயிற்றுவிக்கும் பள்ளியில் சேர்க்கப்போகிறேன் என்றபோது குடும்பத்திற்குள்ளேயே அவ்வளவு எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. அவற்றை மீறியும் நானும் என் கணவரும் எங்கள் விருப்பம் போல் குழந்தையை தமிழ் வழிப் பள்ளியில் சேர்த்தோம்” என்றார்.

தமிழ்வழிக் கல்விக்கான அவசியத்தை விவரித்தபோது, “தாய்மொழி வழி கற்றலே உண்மையான கற்றல். அவ்வாறு கற்பதன் மூலமே துரிதமான புரிதல் ஏற்படுகிறது. சுயசிந்தனை, கற்பனைத் திறன் கூடுதலாக வளர்கிறது. ஆங்கில மொழிக்கற்றலில் எவ்வளவு உருப்போட்டாலும் புரிதல் என்பது முழுமையானதாக இருக்காது. மனித மூளையானது, தாய்மொழியிலேயே சிந்திக்கும். அப்படி இருக்கும்போது ஆங்கில மொழியில் கல்வி கற்கும்போது, ஒவ்வொரு முறையும் தமிழில் மொழிபெயர்த்து அதன்பின்னரே புரிதல் ஏற்படுகிறது. இதனால் சிந்தனைத் திறனுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது.

தாய்மொழிக் கல்வியால், சிறு வயதிலேயே புத்தகங்கள், செய்தித்தாள்கள் வாசிக்கும் பழக்கமும் உருவாகிறது. தன் மரபு சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த நூல்களை அதிகம் வாசிக்கும் போது பக்கவாட்டுச் சிந்தனை உதயமாகிறது. ஆனால், ஆங்கிலத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஆங்கிலத்தின் அவசியத்தை உணர்ந்திருக்கிறோம். நிகரனும், ஆங்கிலத்தையும் ஒரு புதிய மொழி என்றளவில் ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறான்” என தன் கருத்துகளை முன்வைத்தார்.

நிகரன் ஒரு முன்மாதிரி என்பதில் ஐயமில்லை. நிகரனும் தமிழும் அந்த வீட்டில் அழகாக விளையாடிக் கொண்டிருக்க, இன்னொருவரையும் சந்திக்க நேர்ந்தது. இல்லத்தரசி சவிதா, தன் மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தார். குழந்தை வாயில் வார்த்தைகள் அரும்பும் போதே மம்மி, டாடி, அங்கிள், ஆன்ட்டி என சிறு சிறு வார்த்தைகளை வலுக்கட்டாயமாக திணிக்காமல் பிள்ளைத் தமிழை வளர்த்துக் கொண்டிருக்கிறார் சவிதா.

“குழந்தையின் மூன்று வயது வரை முழு நேரமும் அதனுடன் செலவிட்டு அரவணைத்துச் செல்வது அவசியம். அதனாலேயே என் ஊடகப் பணியை தற்காலிகமாக ஒதுக்கிவிட்டு ஆற்றல் அறிவனுடன் வீட்டில் இருக்கிறேன். என் நேரமும், பொழுதும் செம்மையாக செலவாகிறது. ஆற்றலுடன் நாங்கள் எப்போதும் தமிழில் தான் பேசுகிறோம்.

ஆங்கிலம் பயில்வதோ, பேசுவதோ தவறில்லை. ஆங்கிலமும் அத்தியாவசியம் தான். ஆனால் அது எங்கு தேவையோ, எவ்வளவு தேவையோ அவ்வளவே பயன்படுத்தினால் போதுமானது. வீட்டில் குழந்தைகளுடன் தமிழில் உரையாடுவதே உறவுகளுக்கு இடையே இனக்கத்தை வலுப்படுத்தும். குழந்தையின் உணர்வுகள் அப்படியே பிரதிபலிக்கப்படும். குழந்தை அழுத்தமாக, அழகாக, தமிழ் பேசும் போது கேட்டுப் பாருங்கள் அப்போது தமிழுக்கும் அமுதென்று பேர் என பாவேந்தர் சொன்னது புரியும்.

ஆற்றல், வளர்ந்து வரும்போது அவனை தமிழ்வழிக் கல்வியில் சேர்க்கவே திட்டமிட்டுள்ளோம். கண்களால் நேரடியாக ஒரு பொருளைக் காண்பதற்கும், கண்ணாடி வழியாக காண்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறதோ அதைத் தான் தமிழ்வழிக் கற்றலுக்கும் ஆங்கிலவழிக் கற்றலுக்கும் உள்ள வேறுபாடாக உணர்கிறேன்.

தமிழ் வழியில் கற்கும் போது எளிதில் புரிதல் ஏற்படும். மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. எத்தனை காலம் ஆனாலும் படித்தது பசும்மரத்து ஆணி போல் பதிந்திருக்கும். கசடற கற்று அதன்படி நிற்க தாய்மொழியே சிறந்தது” என்றார் சவிதா.

நிகரன், ஆற்றல் நம் கண் முன் இரு சாட்சிகள். இவர்கள் போன்று இன்னும் பல இங்கும், அயல்நாடுகளிலும் இருக்கின்றனர்.

பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பொதுஇடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது ஏன் தமிழ்ப்பேச ஊக்குவிப்பதில்லை என பேராசிரியர் ராஜராஜனிடம் ஒரு கேள்வியை முன்வைத்தபோது, “அது ஆங்கிலம் நம் சமூகத்தில் பெற்றிருக்கும் மதிப்பின் விளைவு” என்றார்.

‘ஆங்கிலத்தின் மதிப்பை’ விவரித்த அவர், “காலனி ஆதிக்கத்தில் இருந்த நம் நாட்டில் அந்த ஆதிக்கம் முற்று பெற்றாலும் கூட அது விட்டுச்சென்ற மொழியின் ஆதிக்கம் இன்னும் சற்று கூட அகலவில்லை. உயர்கல்வியில் ஆங்கிலத்திற்கு இருக்கும் முக்கியத்துவம், அதற்குள்ள பொருளாதார மதிப்பு, உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என பல்வேறு கூறுகள் ஆங்கிலத்திற்கு தனி மதிப்பளித்துள்ளன. ஒரு மொழி ஆர்வலராக, ஆய்வாளராக ஆங்கில் மொழிக்கென நம் சமூகத்தில் ஒரு தனி மதிப்பு இருப்பதை உணர்கிறேன்.

பன்மொழிப்பேசக் கூடிய, பலவகை கலாச்சாரங்கள் ஒருங்கிணைந்துள்ள நம் இந்திய திருநாட்டில், ஆங்கிலம் வெறும் பயன்பாட்டு மொழியில் இருந்து ஒரு தேவையாகிவிட்டது.

இதன் காரணமாகவே தொடர்பு மொழி என்ற ஒரு நிலை வரும்போது ஆங்கிலத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆங்கிலம் பெற்றிருக்கும் மதிப்பு மாயை அல்ல, அது உண்மையானதே.

அதுவே பெற்றோர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே ஆங்கிலத்தில் குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் கவனத்துடன் இருக்கின்றனர். ஆங்கிலத்தின் பயன்பாடும், மதிப்பும் அதிகரித்துக் கொண்டிருப்பதால் தமிழ் மொழி வளர்ச்சி நடக்காமல் இல்லை. தமிழ் மொழி வளர்ச்சி அந்த அளவுக்கு வெளிப்படையாக தெரியவில்லை. அந்த வெற்றிடத்தை இப்போது ஊடகங்கள் நிரப்பி வருகின்றன. தமிழ் வளர்ச்சி குறித்த செய்திகளை அவ்வப்போது உலகிற்கு வெளிச்சம் காட்டி வருகின்றன.

இவை ஒருபுறம் இருக்க, ஆங்கிலம் பெற்றிருக்கும் மதிப்பை மீறி தமிழ் மொழியானது பேச்சில் இருந்து கற்றல் வரை எங்கும் வேரூன்றி நிலைநிறுத்தப்பட்ட உருமொழியாகும். ஆனால் இவை ஒரு நாள் இரவில் ஏற்பட்டுவிடாது, அதற்கு காலங்கள் சில ஆகும்.

அத்தகைய சமூக மாற்றத்திற்கு மக்களின் மொழிப்பற்றும் அதிகரிக்க வேண்டும். தாய்மொழி வழி கற்றல் குறித்த விழிப்புணர்வும் பரவலாக ஏற்பட வேண்டும். ஜப்பான், ஜெர்மனி, கொரியா போன்ற நாடுகளில் தாய்மொழி வழிக்கல்வியால் ஏற்பட்டுள்ள நன்மை அப்போதுதான் உணரப்படும். தாய்மொழிக் கல்வியே சமூக வளர்ச்சிக்கும், தனிமனித வளர்ச்சிக்கும் வித்திடும்.

இப்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக மட்டும் தமிழ்வழிக் கல்வி பயிலும் குழந்தைகள் இருக்கும் நிலை மாற அண்மையில் ஐ.ஏ.எஸ். தேர்வில் முழுக்க முழுக்க தமிழில் படித்து வெற்றி பெற்ற ஜெயசீலன் போன்றோர் தூண்டுகோலாக இருப்பர். ஒன்று, நூறாகும், நூறு ஆயிரமாகும். எல்லாம் மாறும் எதிர்காலத்தில்” என்றார் ராஜராஜன்.

பாரதி ஆனந்த், தொடர்புக்கு ap.bharathi@yahoo.com

Keywords: தமிழ் வழிக் கல்வி, தாய்மொழி, தமிழ் மொழி
Topics: சமூகம்| பதிவுகள்| பார்வைகள்|

Source:::: The Hindu….Tamil

Natarajan