Laughter The Best Medicine … Husband is Like A Split AC !!!!

Toooo goooood….!!

Laugh it off…. Fight is Off !!!!!
Poems written by
WIFE and HUSBAND.

WIFE:
I wrote your name on sand it got washed.
I wrote your name in air, it was blown away.
Then I wrote your name on my heart & I got Heart Attack.

HUSBAND:
God saw me hungry, he created pizza.
He saw me thirsty, he created Pepsi.
He saw me in the dark, he created light.
He saw me without problems, he created YOU.

WIFE:
Twinkle twinkle little star
You should know what you are
And once you know what you are
Mental hospital is not so far

HUSBAND:
The rain makes all things beautiful.
The grass and flowers too.
If rain makes all things beautiful
Why doesn’t it rain on you?

WIFE:
Roses are red; Violets are blue
Monkeys like u should be kept in a zoo.
Don’t feel so angry you will find me there too
Not in cage but outside, laughing at you
AND THE SAGA CONTINUES……..
Position of a Husband Is just like a Split AC
No matter however Loud he is in the Outdoor
He is designed to remain Silent indoor…
……………………………………………………………
“Husband is one who is the head of the family,

but his wife is the neck, and whichever way she turns, he goes.”
………………………………………………………………
A man in Hell asked Devil:
Can I make a call to my Wife?
After making call he asked how much to pay.
Devil : Nothing, Hell to hell is Free.
……………………………………………………….
Husband: Do you know the meaning of WIFE?

It means, Without Information, Fighting Everytime!
Wife: No darling, it means – With Idiot For Ever
…………………………………………………………………
Wife: I wish I was a newspaper,
So I’d be in your hands all day.

Husband: I too wish that you were a newspaper,
So I could have a new one every day.
………………………………………………………..
Doctor: Your husband needs rest and peace. Here are some sleeping Pills.

Wife: When must I give them to him?
Doctor: They are for you
………………………………………………………….
Wife: I had to marry you to find out how stupid you are..

Husband: You should have known it the minute I asked you to marry me.
…………………………………………………………..
Wife: What will you give me if I climb the great Mount Everest ?

Husband: A lovely Push…!

and the life goes on……..

 

source::::input from a friend of mine

natarajan

“மணலில் போட்ட அட்சதை ….அதன் தாத்பர்யம் என்ன !!! “

வெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவா மணலில் போட்ட அட்சதையை, அவரது ஆணைப்படி சேலம் வக்கீல் ராமசாமி ஐயரும்,அவரது மனைவியும் கண்களில் ஒற்றிக் கொண்டு தங்களது மேல்வேஷ்டி மற்றும் புடவைத் தலைப்பில் சர்வ ஜாக்கிரதையாக முடிந்து வைத்துக் கொண்டனர்.

எல்லோருக்கும் அவரவர் மேல்வஸ்திரத்திலோ,புடவைத் தலைப்பிலோ விழுமாறு அட்சதையைப் போட்ட மகா பெரியவா, தனக்கு மட்டும் மேல்வஸ்திரத்தில் போடாமல் ஏன் தரையில் போட்டார் என்று மருகிப் போனார் ராமசாமி ஐயர். எவ்வளவு முயன்றும்,யோசித்தும் இதற்கான விடை அவருக்குக் கிடைக்கவில்லை. மகான்களின் இயல்பை மனிதர்கள் அறிய முடியுமா?

சேலம் திரும்புவதற்கு ராமசாமி ஐயருக்கு மகா பெரியவா உத்தரவு கொடுத்த பிறகு,வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து மனைவியுடன் வண்டியில் புறப்பட்டார்.சுகமான காற்று உடலை வருடிக் கொண்டிருந்தாலும், ராமசாமி ஐயரின் மனம், மணலில் போட்ட அட்சதையிலேயே இருந்தது. ஆனால், சேலத்துக்கு வந்ததும் இந்த நிகழ்வு அன்றே அவரது நினைவில் இருந்து விடுபட்டது.

காரணம் – வழக்கமான அவரது வக்கீல் பணிகள். இயல்பு வேலைகளில் பிஸியானார் ராமசாமி ஐயர். வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து சேலத்துக்கு வந்த இரண்டாம் நாள் மதியம்… அன்று ஏதோ முக்கிய பணிக்காக வீட்டில் இருந்த ராமசாமி ஐயருக்கு, கனமான பதிவுத் தபால் ஒன்று வந்தது. அனுப்பியவர் முகவரியைப் பார்த்தார். அதில், அவரது மாமனாரின் பெயரும் விலாசமும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சாதாரணமாக ஒரு இன்லேண்ட் கடிதம் எழுதி, சம்பிரதாயத்துக்கு விசாரிப்பவர், பதிவுத் தபாலில் என்ன அனுப்பி இருப்பார் என்கிற ஆவலுடன், மனைவியையும் உடன் வைத்துக் கொண்டு பிரித்தார். உள்ளே – ரெஜிஸ்திரார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரம் ஒன்று இருந்தது. ஒரு கணம் குழம்பியவர்,பத்திரத்தில் உள்ள வாசகங்களை முழுக்கப் படித்து விட்டுப் பிரமித்துப் போனார்.

பத்திரத்துடன் இருந்த ஒரு கடிதத்தில், ராமசாமியின் மாமனார் தன் கைப்பட எழுதி இருந்தார்: ‘வக்கீல் தொழிலில் சிறந்து விளங்கினாலும், சொந்தமாக நில புலன் எதுவும் இல்லாமல் இருந்து வரும் உங்களுக்கு – உங்கள் பெயரிலேயே ஏதாவது நிலம் எழுதி வைக்கலாம் என்று திடீரெனத் தோன்றியது. அதன் வெளிப்பாடுதான், இத்துடன் இணைத்திருக்கும் பத்திரம். தங்கள் பெயருக்குப் பதிவு செய்து, சில ஏக்கர் நன்செய் நிலங்களை எழுதி வைத்திருக்கிறேன். இறைவனின் அருளுடனும், தாங்கள் வணங்கும் மகா பெரியவா ஆசியுடனும் இதை நல்லபடியாக வைத்துக் கொண்டு சுபிட்சமாக வாழுங்கள்.’

ராமசாமி ஐயருக்கும் அவரது மனைவிக்கும் ஏக சந்தோஷம்.இருக்காதா பின்னே!எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி ஒரு சொத்து – அதுவும் நல்ல நன்செய் நிலம் – தானாகக் கைக்கு வந்து சேர்ந்தால், மனம் மகிழ்ச்சியில் துள்ளாதா? பரவசப்பட்டுப் போனார்கள் இருவரும். மாமனாரிடம் இருந்து தானமாக வந்த நில புலன்களில் ஏற்கெனவே பயிர்கள் நன்றாக விளைந்து கொண்டிருந்தன. மகசூலும் நன்றாக இருந்தது. அதனால், இதைப் பராமரிப்பதில் பெரிதாக ஒன்றும் சிரமம் இல்லை ராமசாமி ஐயருக்கு.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் போய் நல்ல முறையில் பார்த்து வந்து கொண்டிருந்தார். இதற்கிடையில் வெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவா,அட்சதையை ஏன் தரையில் போட்டார் என்கிற சம்பவத்தை ஏறக்குறைய மறந்தே போயிருந்தார் ராமசாமி ஐயர். ஆனால், அப்படி அட்சதை போட்டு ஆசி புரிந்த மகா பெரியவா இதை மறப்பாரா?

நில புலன்கள் சேர்ந்தால் நிலச் சுவான்தார்தானே! இப்படி ஒரு நிலச் சுவான்தார் ஆன பிறகு, ‘இந்த நல்ல செய்தியை மகா பெரியவாளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.’ என்று எண்ணினார் ராமசாமி ஐயர்.ஒரு நாள் காஞ்சிக்குப் போய் அவரைத் தரிசிக்க ஆர்வம் கொண்டார்.அந்த நாளும் கூடிய விரைவிலேயே வாய்த்தது. தனது நிலத்தில் இருந்து முதன் முதலாக அறுவடை ஆன நெல்லில் இருந்து,அரிசி அரைத்துக் கொண்டு,அந்த அரிசி மூட்டைகளுடன் காஞ்சிபுரம் மடத்துக்கு வந்தார் ராமசாமி ஐயர்.

அந்த மூட்டைகளுள் ஒன்றில் இருந்து சில அரிசி மணிகளை எடுத்து, தன் மேல்துண்டில் முடிந்து வைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் மகா பெரியவா முன்னால் போய் நின்றார். உடன், அவரது மனைவியும் இருந்தார். “வாப்பா ராமசாமி… சேலத்துலேர்ந்து வர்றியா? இல்லே உன் வயல்லேர்ந்து நேரா இங்கே வர்றியா?” – மகா பெரியவா கேட்டதும், ராமசாமி ஐயர் வாயடைத்துப் போனார். ஏதும் பேசவில்லை.

மகா பெரியவாளே தொடர்ந்தார்:“இப்பல்லாம் உன் நிலத்துல விளைஞ்ச அரிசியைத்தான் சமைச்சு சாப்பிடுறாயாமே?” மகா பெரியவா திருவாய் மலர்ந்தருளிய மறுகணம் விதிர்விதிர்த்துப் போனார் ராமசாமி ஐயர்.

சட்டென்று நிதானத்துக்கு வந்து,“ஆமா பெரியவா.வெங்கடாத்திரி அகரத்துக்கு வந்து பெரியவாளைத் தரிசனம் பண்ணிட்டு ஊருக்குப் போன உடனே,என் மாமனார்கிட்டேர்ந்து பத்திரம் வந்தது. நிலமே இல்லாமல் இருந்த எனக்கு, அவராவே சில ஏக்கர்களை எழுதி சாசனம் பண்ணி, தபால்ல அனுச்சிருந்தார். அதான் பெரியவாளைப் பாத்துச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.முதல் விளைச்சல்ல வந்த சில அரிசி மூட்டைங்களையும் மடத்துக்குக் காணிக்கையா கொண்டு வந்திருக்கேன்.”

“எல்லாம் சரிதான். அன்னிக்கு உன் மேல்வஸ்திரத்துல போட வேண்டிய அட்சதையை நிலத்துல போட்டபோது குனிஞ்சு எடுக்கறப்ப, அவ்வளவு வருத்தப்பட்டியே ராமசாமி… இன்னிக்கு அதே மாதிரிதானே, இந்த அரிசியைக் கொண்டு வர்றதுக்கும் குனிஞ்சு நிமிர்ந்திருக்கே! உன் சொந்த நிலத்துல குனிஞ்சு, கதிர் அறுத்த நெல்லை அரிசி ஆக்கி, உன் மேல்வஸ்திரத்துல முடிஞ்சு வெச்சுண்டு இப்ப என்னைப் பாக்க வந்திருக்கே?! இல்லியா?” என்று சொல்லி விட்டு, இடி இடியென பெரியவா சிரித்தபோது, ராமசாமியின் கண்களில் இருந்து பொலபொலவென்று நீர் சுரந்தது.

மகா பெரியவாளின் ஞான திருஷ்டியை உணர்ந்து மெய் சிலிர்த்தார். பெரியவாளின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு அவரது மனைவிக்குப் பேச்சே எழவில்லை.

மேல்வஸ்திரத்தை எடுத்துப் பிரித்து, அதில் முடிந்து வைத்திருந்த அரிசியைக் கையில் திரட்டி, மகா பெரியவாளின் முன்னால் இருந்த ஒரு பித்தளைத் தட்டில் சமர்ப்பித்தார் ராமசாமி. பிறகு, அவரது திருப்பாதங்களுக்குப் பெரிய நமஸ்காரம் செய்தார்.

“ஆமா பெரியவா… அன்னிக்கு நீங்க பண்ண அனுக்ரஹத்தாலதான் எனக்கு இன்னிக்கு இப்படி ஒரு சொத்து கிடைச்சிருக்கு. கூடிய சீக்கிரமே நிலம் உனக்குக் கிடைக்கப் போறதுங்கறதை சொல்லாம சொன்னேள்! அட்சதையை நிலத்துல போட்டேள். இந்த மூளைக்கு அப்ப இது எட்டலை. உங்களோட கருணைக்கும், தீட்சண்யத்துக்கும் அளவேது பெரியவா” என்று சொல்லி, முகத்தை மூடிக் கொண்டு தேம்பலானார்.

இதை அடுத்து, அந்தப் பரப்பிரம்மம், தியானத்தில் மூழ்கியது.‘சொந்தமாக நில புலன் உனக்குக் கிடைக்கும்’ என்பதை தீர்க்க தரிசனமாக ராமசாமி ஐயருக்கு உணர்த்த விரும்பிய மகா பெரியவா, வஸ்திரத்தில் போட வேண்டிய அட்சதையைத் தரையில் போட்டதன் தாத்பர்யம் அவரைத் தவிர வேறு யாரால்தான் புரிந்து கொள்ள முடியும்?

source::::www.periva.proboards.com
natarajan
Read more: http://periva.proboards.com/thread/4708/#ixzz2aCygEvnK

Message For The Day….It is The Inner Charm and Harmony That Really Matters !!!

Have faith in the Lord or the Divine Spark within you, it will vitalize you. Some people bargain with God, they promise to give Him costly articles or their own hair if a certain illness is cured or a certain calamity is averted. Lord Venkateshwara or any other form of the Lord does not need your hair. Shaving off your hair indicates that you have lost the delusion that physical beauty alone counts. You take the effort to make yourself wilfully ugly and demonstrate that it is inner charm and harmony that really matters. The hero is he who does not beg or cringe or flatter or fawn. He knows that the Lord knows best. If it is His will, He will grant food and raiment; if not, let His will prevail. That is the path of absolute surrender.

  Sathya Sai Baba

English is a Strange Language !!!!

English is the easiest language to learn, mostly because it doesn’t make use of male/female for everything, like other languages  do. But even being easy to learn, it doesn’t mean that it’s easy to master, or that it doesn’t have some pretty weird attributes that have made their way into the language with time.

 

 

 

Double Use Words:

1) The bandage was wound around the wound.
2) The farm was used to produce produce.
3) The dump was so full that it had to refuse more refuse.
4) We must polish the Polish furniture.
5) He could lead if he would get the lead out.
6) The soldier decided to desert his dessert in the desert.
7) Since there is no time like the present, he thought it was time topresent the present.
8) A bass was painted on the head of the bass drum.
9) When shot at, the dove dove into the bushes.
10) I did not object to the object.
11) The insurance was invalid for the invalid.
12) There was a row among the oarsmen about how to row.
13) They were too close to the door to close it.
14) The buck does funny things when the does are present.
15) A seamstress and a sewer fell down into a sewer line.
16) To help with planting, the farmer taught his sow to sow.
17) The wind was too strong to wind the sail.
18) Upon seeing the tear in the painting I shed a tear..
19) I had to subject the subject to a series of tests.
20) How can I intimate this to my most intimate friend?
Let’s face it – English is a crazy language. There is no egg in eggplant, nor ham in hamburger; neither apple nor pine in pineapple. English muffins weren’t invented in England or French fries in France . Sweetmeats are candies while sweetbreads, which aren’t sweet, are meat. We take English for granted. But if we explore its paradoxes, we find that quicksand can work slowly, boxing rings are square and a guinea pig is neither from Guinea nor is it a pig..

source::::babamail.com

natarajan

” இது தேவராஜ ரகசியம் ” !!!

பெரியவா தேனம்பாக்கத்தில் தங்கியிருந்த சமயம். ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் சீமா பட்டாசாரியாரை அழைத்து வரும்படி சொன்னார். அவரும் வந்து வந்தனம் செய்தார்.

“இன்னிக்கு என்ன திதி?”

பட்டர் மெதுவாக “ஏகாதசி” என்றார்.

“உபவாசம் நமக்கு மட்டும் தானா? இல்லே, வரதனுக்கும் தானா?”

பட்டர் திகைத்துப் போய் நின்றார்.

“பெருமாளுக்கு இன்னிக்கு நைவ்வேத்யம் ஏன் செய்யல்லே?”

அதிர்ச்சியடைந்த பட்டர் நாக்குழற “தெரியல்லே.. விசாரிச்சிண்டு வரேன்” என்று கலவரத்துடன் கோயிலுக்குச் சென்றார்.

விசாரணையில் உள்கட்டில் ஏதோ தவறு நடந்துள்ளது என்ற உண்மை தெரிய வந்தது. அதை சரி செய்து, தக்க பிராயச்சித்தம் செய்து, பெருமாளுக்கு திருவமுது படைத்து, பிராசதத்தை பெரியவாளுக்கு திருவமுது படைத்து, ப்ரஸாதத்தை கொண்டுவந்து சமர்ப்பித்தார் பட்டர்.

வரதராஜ பெருமாளுக்கு நைவ்வேத்தியம் நடக்கவில்லை என்பது பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? தெரிந்திருந்தாலும், அதைப்பற்றி அவர்கள் கவலைப் படுவானேன்?

தேவரகசியம் என்கிறார்களே? அது இதுதானோ? இல்லை, இது தேவராஜ ரகசியம்..! (வரதராஜருக்கு, தேவராஜன் என்ற திருநாமம் உண்டு.)

source::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/4736/#ixzz2a7FxzaDh

Message For The Day…Listen to Your Conscience For Walking On The Right Path !!!

Illusion (maya) envelops the good with the blemish of the bad. It makes evil glitter with the shine of the good. Discriminate to the best of your capacity and develop your capacity to discriminate. Struggle to win, that is the best that you can do. Your conscience knows well the source of joy and happiness. It will prod you towards the right path. You must take it as your guide and not disobey it, every time it contradicts your whim or fancy. There is no need for you to retire into a forest or a cave to know your inner Truth and to conquer your lower nature. As a matter of fact, you have no choice to exercise your vices there, so the victory achieved there may not be genuine or lasting. Be in the world, yet away from its tentacles. This is the victory for which you deserve congratulations.

Sathya Sai Baba

Compensation Cheque For Rs Two !!!..Farmers “Stunned” !!!

The Haryana government has left farmers of Beri tehsil (Jhajjar district) high and dry by giving them cheques with single figures of Rs 2 – Rs 3.

Some ‘lucky’ farmers, however, got compensation in two figures of  Rs 30 – Rs 31. Interestingly, the cheques are of a private bank (Axis bank) which has a branch in Jhajjar.

This compensation dates back to 2011 when the standing crops in Beri tehsil were damaged due to water logging.

Derisory sums: The Haryana government sent the cheques to Jhajjar farmers as compensationDerisory sums: The Haryana government sent the cheques to Jhajjar farmers as compensation

“We were stunned. We first thought that there had been a mistake but when we checked with the tehsildar he confirmed that the amounts on the cheques were correct. The banks are situated in Jhajjar and the bus fare to get there is Rs 14,” said Satya Narayan, son of Hari Singh who received a cheque of Rs 2 .

This issue is being hotly debated in Haryana and has given a chance to the opposition to criticise the state government.

“Haryana  government has ridiculed the poor farmers by issuing these cheques. This is a cruel joke on farmers who lost their valuable crops,” said one MLA.

SOURCE::::mailonline India

natarajan

வறுமை கோடு …வெறும் வெறுமை கோடு !!!…

மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகள் நூற்றுக்கு பதினோரு பேர் மட்டும்தான்; கிராமத்தில் ஏழைகள் விகிதம் நூற்றுக்கு 15 பேர் என்றால், நகரத்தில் 7 பேர்தான் ஏழைகள்!

டெண்டுல்கர் கணிப்புமுறையில், 2004-05-ஆம் ஆண்டில் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்த ஏழைகள் எண்ணிக்கை 40 கோடி. 2011-12-ஆம் நிதியாண்டில் ஏழைகள் எண்ணிக்கை 27 கோடியாகக் குறைந்துவிட்டது; அதாவது 13 கோடி பேர் வறுமைக் கோட்டை தாண்டிக் குதித்துவிட்டார்கள்!

இந்தக் கணிப்புமுறையில், ஐந்து நபர்கள் உள்ள ஒரு குடும்பம், நகர்ப்புறத்தில் தலா ரூ.1,000 சம்பாதிக்கும் என்று வைத்துக் கொண்டால், (மாதம் ரூ.5,000) அவர்கள் வறுமைக் கோட்டைத் தாண்டிக் குதிக்கும் வல்லமை பெற்றுவிட்டார்கள் என்று பொருள். கிராமப்புறங்களில் தலா ரூ.816 சம்பாதிக்கும் குடும்பம் (மாதம் ரூ.4,080), ஏழைக் குடும்பம் என்ற நிலையிலிருந்து விடுபட்டுவிடுகிறது.

இந்தக் கணக்கீடு தனிநபர் நுகர்வுத் திறன் அடிப்படையிலானவை. இந்த நுகர்வுப் பொருள் என்பது பெரும்பாலும் அடிப்படை உணவுப் பொருளாகப் பட்டியலிடப்பட்டு, அவற்றை வாங்கும் சக்தி உள்ளவர்களை ஏழையர் பட்டியலில் இருந்து நீக்கி – அல்லது மேலுக்கு உயர்த்தி – விடுவதுதான் இந்த கணக்கீடுகளின் வேலையாக இருக்கிறது.

டெண்டுல்கர் கணிப்புமுறை சரியல்ல என்று பல தரப்பிலும் கருத்து கூறப்பட்டு, ரங்கராஜன் தலைமையிலான ஒரு குழுவை திட்டக் கமிஷன் நியமித்துள்ள நிலையில், அந்தக் கமிஷன் 2014-ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் (ஒருவேளை மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு) தனது கணிப்புமுறை ஆலோசனைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், இவ்வாறு ஓர் அறிக்கையை மத்திய அரசு வெளியிடுவதன் நோக்கம் தங்களது ஆட்சிக் காலத்தில் விலைவாசி உயர்வு, நாணய மதிப்புக் குறைவு, வேலையில்லாத் திண்டாட்ட அதிகரிப்பு, நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளுக்கு நடுவிலும் வறுமை ஒழிக்கப்பட்டிருக்கிறது என்கிற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தத்தான் என்று தோன்றுகிறது.

இந்தியாவில் மூன்றுவேளை உணவு உண்பவன் ஏழை கிடையாது என்பதுதான் அடிப்படை கணிப்புமுறை என்றால், பிச்சைக்காரர்களில் பலரும்கூட வறுமைக்கோட்டைத் தாண்டி அப்பால் விழுந்துவிடுவார்கள். இந்தியாவில் ஏழ்மை என்பதை இன்றைய தேதியில் வெறும் நுகர்வுப்பொருள் தொடர்புடையதாகக் காண்பது சரியல்ல.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி இலவசமாக அளிக்கப்படுகிறது. சென்ற ஆட்சியில் “இலவச’ டி.வி. என்றால், இந்த ஆட்சியில் “விலையில்லா’ மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு எல்லாமும் கொடுக்கப்படுகிறது. “குடிசைகளுக்கு ஒரு விளக்கு’ திட்டத்தில் 99 சதவீத வீடுகள் மின்வெளிச்சம் பெற்றுவிட்டன. டி.வி. ஒடிக்கொண்டே இருக்கிறது. ஆண்டுதோறும் இலவச வேட்டி, சேலையை அரசு வழங்குகிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடிப்படைத் தேவைகளை அரசே வழங்கிவிடுவதால் தமிழ்நாட்டில் ஏழைகளே இல்லை என்று சொன்னால் அது “கேப்பையில் நெய் வடிகிறது!’ கூற்றையொத்த நகைப்புக்குரிய கணிப்பாகத்தான் இருக்கும்.

மதுபான விற்பனைக் கணக்கின்படி, ஒவ்வொரு தமிழனும் நாள்தோறும் சராசரியாக ஒரு “குவார்ட்டர்’ வாங்குதிறன் பெற்றுள்ளார் என்பதற்காக, தமிழர்கள் அனைவரையும் வறுமைக் கோட்டுக்கு மேலாகத் தூக்கி நிறுத்திவிடமுடியுமா என்ன?

நகரத்தில் ரூ.5,000-க்கு அதிகமாக சம்பாதிக்கும் 5 பேர் கொண்ட குடும்பம் வறுமைக் கோட்டுக்குள் வராது. டெண்டுல்கர் கணிப்புமுறை அதைத்தான் நிறுவுகிறது. அப்படியானால் 5 பேரும் வேலை செய்கிறார்கள் என்று கருதத் தேவையில்லை, இது சராசரிதான் எனப்படுகிறது. இருப்பினும்கூட, ஒரு குடும்பத் தலைவன், தலைவி இருவர் மட்டுமே வேலைசெய்து, நகர்ப்புறத்தில் மாதம் ரூ.15,000 சம்பாதித்தாலும் (நகரப்புறத்தில் ஒரு சித்தாள் கூலி நாளுக்கு ரூ.300) குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலைக்குக் காரணமாக இருப்பது எதுவோ அதுதான் ஏழ்மையாக இருக்க முடியும்.

அரசுப் பள்ளியில் பெரும்பாலும் தரமான கல்வியில்லை என்று தெரிந்திருந்தும் ஒருவேளை மதிய உணவுக்காகக் குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பும் குடும்பங்கள் – நகரம் என்றாலும் கிராமம் என்றாலும் – அனைத்துமே ஏழைக் குடும்பங்கள்தானே?

எந்த நகரத்தில் வீட்டு வாடகை – அது குடிசை என்றாலும்கூட – ரூ.2,000க்குக் குறைவாக இருக்கிறது? நகரத்தின் பாலங்களுக்கு அடியிலும், நடைபாதையிலும் படுத்துறங்குபவர்களை விடுங்கள். மாதம் 3,000 ரூபாய் கொடுத்து நாற்றமடிக்கும் கூவத்தின் கரையில் குடிசைகளிலும், தாற்காலிகக் கட்டடங்களிலும் வசிப்பவர்களை வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களாகக் கருத முடியுமா என்ன?

என்னதான் சேவையுணர்வுடனான சிகிச்சையோ, சுகாதாரமான சூழலோ, தரமான மருந்துகளோ இல்லாமல் போனாலும்கூட வேறு போக்கிடம் இல்லாமல், அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைபெறும் அனைத்துக் குடும்பங்களும் ஏழைகள் அல்லாமல் வேறென்ன?

கழுதையைக் குதிரை என்று அழைப்பதால் அது குதிரையாகிவிடாது. பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடாது. ஏழ்மையை ஒழிக்கத் தெரியவில்லை. ஏழைக்கான இலக்கணத்தை மாற்றி எழுத நினைக்கிறார்கள் மேதாவிகள்.

வறுமைக் கோடென்ன கரும்பலகைச் சாக்பீஸ் கோடா, நினைத்தால் வரையவும், தேவைப்பட்டால் அழிக்கவும் செய்வதற்கு? புள்ளிவிவரங்கள் கிடக்கட்டும். வாக்குகள் விலைபேசப்பட முடியாத நிலைமை ஏற்பட்டால் மட்டுமே, வறுமை ஒழிந்ததாக ஏற்றுக் கொள்ள முடியும்!

 

source :::::DinaMani  Tamil Daily

natarajan