Kavithai
வாரம் ஒரு கவிதை …..” தொலைந்து போன கடிதம் ” !!!
தொலைந்து போன கடிதம்
……………………….
நம் முகவரி தேடி நம்மை நாடி ஒரு கடிதம் வந்து நாம் அதை
பிரிக்கும் நேரம்
பிறந்த குழந்தை ஒன்று நம் கைகளிலே தவழ்வதற்கு சமமான
பெருமித நேரம் ! ஒரு பொன்னான நேரம் !
“நலம் நலம் அறிய ஆவல்”….. கடிதத்தின் இதமான நுழை
வாயில் இதில் நம் கால் பதிக்கும் நேரம் … இளம்
காலை இனிய தென்றல் நம்மை தொட்டு நடனமாடும்
புத்துணர்வு ஒரு ஊற்றாய் சுரக்கும் நம்முள் !
தகவல் தொழில் நுட்ப புரட்சியில் பிறந்த புது முகம் தன்
முழு முகத்தையும் காட்டும் முன்னர் , நம் கடித
பரிமாற்றம் எல்லாம் அடங்கின ஒரு அஞ்சல் அட்டையில் !
கிடைக்கும் இடம் எல்லாம் எழுதி எழுதி கடிதம் அதை
திரும்பத் திரும்ப படிக்க வைக்கும் திறன் சிலருக்கு மட்டுமே
கை வந்த கலை !
கைப்பட எழதிய கடிதம் தொடுவது நம் கைகளை மட்டுமல்ல ..நம்
உள்ளத்தையும் உணர்வுகளையும் சேர்த்துதான் ! இன்றைய
கைபேசியும், காண் ஒளியும் ஒரு அஞ்சல் அட்டைக்கு இணையாகுமா ?
வலையின் அலையில் நாம் தொலைத்து மறந்த கடித பரிமாற்றம்
அதே வலையின் அலையால் மீண்டும் ஒரு நாள் கரை வந்து சேரும் !
காத்திருப்போம் நாம் கரையில் அதுவரை !
” மாற்றம் ஒன்றுதான் நிரந்தரம் ஒருவர் வாழ்வில் ” என்னும்
கூற்றை மறக்காமல் , மறுக்காமல் !!!
K .Natarajan
வாரம் ஒரு கவிதை….” புதியதோர் உலகம் செய்தோம் ” !!!
புதியதோர் உலகம் செய்தோம் !
……………………….
புதியதோர் உலகம்..படைக்க முடியுமா நம்மால் ? வியந்தது நாம் !
நம்மைப் படைத்தவனே வியக்கும் வகையில் புது உலகம் செய்து
காட்டியதும் நாமே !
எல்லாம் கணினி மயம் நம் புதிய உலகத்தில் ..கணினி செய்த
மாயம் , உலகம் இப்போ நம்ம வரவேற்பு அறையில் !
நம்ம வங்கி கணக்கும் கூட இப்போ நம்ம கை பேசியில் !
“தட்டுங்கள் திறக்கப்படும் …கேளுங்கள் கொடுக்கப்படும்”
இதுதான் கணினியின் தாரக மந்திரம் !
விடை இல்லாத கேள்வி என்ற ஒன்று கணினியில் இல்லை
இன்று !
கணினியின் வலையில் சிக்கிய உலகம் சுருங்கியது உண்மை…
சுருங்கியது உலகம் மட்டுமா ? இல்லை நம் உள்ளமும் சேர்ந்தா ?
வருகிறதே நம் மனதில் ஒரு சந்தேகம் … இது ஒரு கேள்வியும் கூட !
இந்த கேள்விக்கு மட்டும் கணினியிடம் இல்லை விடை!
My Kavithai Published in ” Kavithai mani ” column in http://www.dinamani.com on 28 Dec 2015.
Natarajan






