ரமணர் வாழ்வில்…. சுவையான நிகழ்ச்சிகள்…Part 6

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.

–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

திருவண்ணாமலை கிரிவலத்தை பகவான் எப்போதும் ஊக்குவித்தார். உடல் நலம் குன்றியவர்கள்,முதியவர்கள் கூடகிரிவலம் செல்வதை ரமணர் தடுத்ததில்லை. ‘‘அமைதியாக இறைவனை நினைத்துக் கொண்டு நடந்து செல்லுங்கள்’’என்றே அவர் கூறுவார். அனைவரும் திருவண்ணாமலையைச் சுற்றி வந்து இறைவனின் ஆசியைப் பெற வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். பகவானும் பல முறை கிரிவலம் சென்றுள்ளார். அண்ணாமலையைச் சுற்றி வருவது பற்றி ஒரு உண்மைக் கதையையும் பகவான் பக்தர்களிடம் சொல்வார்.கதையின் க்ளைமாக்ஸ் பகுதியை மட்டும் அவர் சொன்னதேயில்லை.அந்த க்ளைமாக்ஸை பகவானின் அனுக்ரஹத்துடன் நான் உங்களுக்கு இங்கே சொல்லப் போகிறேன்.

திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பைப் பற்றி பகவான் சொல்லும் உண்மைக் கதை இதுதான்.

கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கிப் போன ஒரு பெரியவர், கவட்டுக் கட்டைகளின் உதவியுடன், நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.அவர் அதுபோல் அடிக்கடி மலை வலம் வருவது உண்டு. ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி, மிகுந்த சோர்வுடனும் கலக்கத்துடனும் அந்த மாற்றுத் திறனாளி மலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.

அதற்குக் காரணம் இருந்தது.பல முறை கிரிவலம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.
ஏன்?

கால்கள் தொய்வுற்ற தான் தன் குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றிற்று. குடும்பத்தினருக்குத் தன்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.அவர்களுக்குச் சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்குப் புலனாகவே, பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை விட்டு விலகி, யாரிடமும் சொல்லாமல் கண் காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்றுவிடலாம் என்று அந்தப் பெரியவர் முடிவெடுத்தார்.அதனால் கடைசி முறையாக திருவண்ணா-மலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார்.

விந்தி,விந்தி சூம்பிய கால்களுடன் பெரியவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தபோது,பாதி வழியில் ஒரு வாலிபன் எதிர்ப்பட்டான்.

பெரியவரை நெருங்கிய வாலிபன், “ஓய், கால் சரியில்லாத நீ கவட்டைக்கட்டையுடன் கிரிவலம் வரவேண்டும் என்று யார் அழுதார்கள்? இப்படி நடந்தால் எல்லாம் நீ மலையைச் சுற்றி வர முடியாது. இதெல்லாம் உனக்குச் சரிப்படாது’’ என்று கூறிக் கொண்டே, எதிர்பாராத ஒரு செயலைச் செய்தான்.

ஆமாம்.அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கெனப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு,அவன் பாட்டுக்குச் சென்றுவிட்டான்.

அந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில்லை. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வந்தான், திட்டினான், கவட்டைக் கட்டையைப் பிடுங்கினான், தூர எறிந்தான். இப்படியா ஒருத்தன் மனிதாபிமானமே இல்லாமல் இருப்பான்? ஆவேசத்துடன் அவனைத் திட்ட ஆரம்பித்த அந்தப் பெரியவர், ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும் மனமும் சிலிர்த்து, அப்படியே நின்றார்.

ஆமாம்.கால் ஊனம் காணாமல் போய்,கவட்டுக் கட்டைகளின் உதவியின்றி ஜம்மென்று நேராய் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அந்த இளைஞன் சென்ற திசை நோக்கி அவர் தொழுதார். அவர் கண்களிலிருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது.

அதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்தப் பெரியவர் எங்குமே செல்லவில்லை.

இந்த உண்மைச் சம்பவத்தை பக்தர்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறார் பகவான். இதோ இந்த விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது நடந்த சம்பவம் இது. அந்தப் பெரியவர் அதற்குப் பிறகு பல்லாண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்ததைப் பலரும் அறிவார்கள். அருணாசல மலையைச் சுற்றி வருவதால் அத்தனை பலன் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார்.

ஆனால் இந்த உண்மைக் கதையில் பகவான் சொல்லாத ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். பகவான் கடைசி வரை அதன் க்ளைமாக்ஸைத் தன் வாயால் சொல்லவே இல்லை.

ஆமாம். அது என்ன தெரியுமா?

விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது அவரது வயது என்ன? 20. கால் சுவாதீனமில்லாத பெரியவரின் ஊன்றுகோலைப் பிடுங்கி எறிந்து குறும்பு செய்தது யார்? ஓர் இளைஞன்.

ஆமாம். நம் பகவான் ரமண மகரிஷிதான் அந்த இளைஞன்!

எழுதும்போதே மெய் சிலிர்க்கிறது.கால்கள் கொடுத்தவர் பகவான்தான். அவர் செய்யாத அற்புதங்கள் இல்லை.ஆனால் அவர் அதையெல்லாம் சொல்லிக் கொண்டதும் இல்லை.தட்சிணாமூர்த்தியின் அம்சமாயிற்றே. கடவுள் எல்லாம் நன்மைகள் செய்துவிட்டு, தான்தான் செய்தோம் என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா என்ன?நம் குரு தேவரும் அப்படித்தான்.

அப்போது என்று இல்லை.இப்போதும் நீங்கள் ரமணாச்ரமம் சென்று பகவானின் சன்னதி முன்னால் நின்று பாருங்கள்.உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் உடனே தருவார் பகவான். இந்த அனுபவத்தை உணர்ந்தவர்கள் ஆயிரம், ஆயிரம்!

கிரிவலம் சென்றால் இத்தனை நன்மை இருக்கிறதே, அப்படி என்னதான் இருக்கிறது அந்தத் திருவண்ணாமலையில்?

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!! 

 

SOURCE::::: http://www.balanuman.wordpress.com

Natarajan

ரமணர் வாழ்வில்…. சுவையான நிகழ்ச்சிகள்…Part 5

முழு தியான நிலை என்பது கிணற்றில் கயிற்றால் கட்டித் தொங்கும் குடம் (தோண்டி) போன்றது. குடத்தில் உள்ள தண்ணீர் (மனம்),கிணற்றில் குடம் அமிழும்போது கிணற்று நீருடன் (ஆன்மா)ஒன்று கலந்து விடுகிறது. ஆனாலும் குடத்தில் நிரம்பிய நீரோ, கயிற்றின் (அகந்தையின்) மற்றொரு நுனியால் வெளியே இழுக்கப்பட்டுவிடும்.

–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்தபோது கண் பார்வை இல்லாத ஒரு பாட்டி,தினமும் தட்டுத் தடுமாறி யார் உதவியுடனாவது மலை ஏறி வந்து, பகவானுக்கு ஏதாவது அன்புடன் தருவாள்.

அன்றைய தினம், பாட்டி பகவானுக்கு மிகவும் பிடித்த அரிசிப் பொரியைக் கொண்டு வந்தாள்.ரமண மகரிஷியும் அதை அன்புடன் பெற்றுக் கொண்டு, “பாட்டி, உனக்கோ முடியவில்லை. கண் பார்வையும் இல்லை. எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு மலையேறி வருகிறாய்?’’என்று வினவினார்.

அந்தப் பாட்டி, “பகவானே, உங்களை தரிசனம் செய்யத்தான் வருகிறேன்’’ என்றாள்.

”நீதான் என்னைப் பார்க்க முடியாதே? கீழேயிருந்தே என்னை நினைத்துக் கொள்ளக் கூடாதா?’’ என்றார் பகவான்.

”பகவானே, என்னால் உங்களைப் பார்க்க முடியாதுதான். ஆனால் உங்கள் அருட்பார்வை என் மீது விழுமே.அந்த பாக்கியத்துக்காகத்தான் நான் தினமும் வருகிறேன்’’ என்றாள் பாட்டி.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!! 

 

SOURCE:::: http://www.balhanuman.wordpress.com

Natarajan

ரமணர் வாழ்வில் …. சுவையான நிகழ்ச்சிகள்…Part 4

சிலந்திப் பூச்சி,எப்படி தன் வாயிலிருந்து வெளியில் நூலை நூற்று, மறுபடியும் தன்னுள் இழுத்துக் கொள்கிறதோ அப்படியே மனமும் தன்னிடத்திலிருந்து உலகத்தைத் தோற்றுவித்து, மறுபடியும் தன்னிடமே ஒடுக்கிக் கொள்கிறது.
–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
திருவண்ணாமலையின் தென்கிழக்குச் சரிவில் அமைந்திருக்கும் விரூபாட்ஷி குகையில் பகவான் பல வருடங்கள் இருந்தார்.அப்போது குகைக்கு வெளியே, மலைச் சரிவு அருகில் ஒரு பாறை இருந்தது. அதன் மேல் பகவான் தினமும் அரை மணி நேரம் அமர்ந்திருப்பார்.அங்கே உட்கார்ந்துதான் தினமும் பல் துலக்குவார்.
கடும் பனியாக இருந்தாலும் சரி, கொட்டும் மழையாக இருந்தாலும் சரி, பகவான் அந்தப் பாறையில் அமர்வதை தவறவிட்டதே இல்லை..
பக்தர்களுக்கு இது வியப்பாக இருந்தது. “பகவானே, மழை, பனியில் கூட ஏன் பாறையில் போய் அமர்கிறீர்கள்.உடம்பு சுகம் இல்லாமல் போய்விடாதா? குகைக்குள் இருந்தபடியே பல் தேய்த்தால் என்ன?’’ என்று துணிந்து ஒருவர் கேட்டுவிட்டார்.
பகவான் கேள்வி கேட்டவரைப் பார்த்துப் புன்னகைத்தார்.”கீழே மலையடிவாரத்தில் சௌபாக்கியத்தம்மாள் என்று வயதான பெண்மணி ஒருத்தி குடியிருக்கிறாள். அவள் தினமும் இங்கே வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போய்தான் உணவருந்துவாள்.ஒரு நாள் அவள் வரவில்லை. ஏன் வரவில்லை என்று மறுநாள் கேட்டேன். “வயசாச்சு சாமி. மலையேறி வர முடியல. உடம்பு முடியல. ஆனா உங்களைத் தரிசனம் செய்யாம எப்படி இருக்கறதுன்னு தவிச்சபடியே மலை மேலே பார்த்தேன். அந்தக் காலை நேரத்துலதான் நீங்க வெளியில இருக்கற பாறை மேல உட்கார்ந்து இருந்தீங்க. கீழே இருந்தபடியே உங்களைவிழுந்து கும்பிட்டேன் சாமி’’ன்னு கண் கலங்கினா.
பாவம், வயசான காலத்துல அவளால எப்படி மலையேறி வரமுடியும்? அதனாலதான் அவளுக்காக தினமும் காலையில் இந்தப் பாறையில் உட்கார்ந்துக்கறேன். மழை, பனி எதுவா இருந்தாலும் அந்த வயசான அம்மா ஏமாந்துடக் கூடாதே? பாவம், அவ அண்ணாந்து பாத்துக்கிட்டிருப்பாளே. அதான்’’ என்றார் பகவான்.
நீங்களே சொல்லுங்கள். யாரோ ஒரு ஏழை பக்தைக்காக பல வருடங்கள் தினமும் அரை மணி நேரம் ஓர் பாறையில் அமர்ந்திருந்த ஓர் அளவற்ற கருணை கொண்டவரை, ரமணரைத் தவிர உலகம் எங்காவது கண்டிருக்கிறதா?
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!
Natarajan

Message For the Day…” What is the True Devotion to God … ” ?

In ancient times, sages who performed severe penance to realise the Ultimate Reality, experienced Him and declared that the Supreme Lord is beyond Tamas. This means, to experience the Lord we must get rid of our Tamo-guna (the darkness of ignorance). The Lord is beyond the veil of Tamas. When the veil is removed, the Lord can be seen. If one is filled with Tamo-guna from head to foot, how can they experience God? You have a mountain of desires in your heart; you offer a petty coconut to the Lord! Is this love? Is this devotion? No! It is not the way to pray to the Lord. To seek a favour is not prayer at all. On the contrary, the person filled with selfless love will accomplish anything in life, and is ever ready to make any sacrifice. You are God. Get rid of your body consciousness, and you will realise your Divinity. Develop the qualities of love and sacrifice.

Sathya Sai Baba

“மார்கழி திருவாதிரை விழா கொண்டாடுகிறோமே… எதற்காக தெரியுமா?”

ஜன., 5 – மார்கழி திருவாதிரை! 

மார்கழி மாதம் திருவாதிரை விழா கொண்டாடுகிறோமே… எதற்காக தெரியுமா?
சோழ நாட்டின் தலைநகர் காவிரிப்பூம் பட்டினத்தில், சாதுவன் என்ற வியாபாரி இருந்தான். பெரிய பணக்காரன்; அவனது மனைவி ஆதிரை. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்திய சாதுவன், ஒரு நாடகத்திற்குச் சென்றான். அதில் நடித்த நடிகையின் அழகில் மயங்கி, அவள் மேல் காதல் கொண்டு, அவளது வீட்டிலேயே தங்கி விட்டான்.
அந்த நடிகை, சாதுவனின் பணத்தைப் பறித்த பிறகு, அவனை விட்டு சென்றுவிட்டாள். மனைவிக்கு இழைத்த துரோகத்தால் தான், தனக்கு இந்தக் கதி ஏற்பட்டது என்று எண்ணிய சாதுவன், வீட்டிற்குப் போகவில்லை. இழந்த பொருளை சம்பாதிக்க திட்டமிட்டான். அப்போது, வங்கதேசத்திலிருந்து வியாபாரிகள் காவிரிப்பூம் பட்டினம் வந்தனர். அவர் களுடன், வியாபார நுணுக்கங்கள் குறித்து சாதுவன் பேசவே, அவனை அவர்களுக்குப் பிடித்து விட்டது. சாதுவனை தங்களுடன் பாய்மரக்கப்பலில் அழைத்துச் சென்றனர்.
கப்பல் சென்று கொண்டிருந்த போது, பயங்கரப் புயல் அடித்து கப்பல் கவிழ்ந்தது. உடன் வந்தோரில் பலர், கடலில் மூழ்கி இறந்தனர். உடைந்த கப்பலின் பலகை ஒன்றின் மீதேறி படுத்துக் கொண்ட சாதுவன், ‘தான் இறந்து போனால் மனைவியிடம் தனக்கு உண்டான கெட்ட பெயர் அப்படியே நிலைத்து நின்று விடுமே…’ என நினைத்து, வருந்தினான்.
ஆதிரையோ, சிவ பக்தியும், கணவன் மேல் நீங்காத அன்பும் கொண்டவள். ‘கணவன் எங்கே இருந்தாலும் நல்லபடியாக இருக்க வேண்டும்…’ என்று, தினமும் வேண்டிக் கொள்வாள். இது நம் நாட்டுப் பெண்களின் பண்பாடு. அவளது பிரார்த்தனையின் பயனாக, சாதுவன் படுத்திருந்த பலகை பாதுகாப்பாக கரை ஒதுங்கியது.
ஒருநாள், சாதுவன் வெளிநாடு சென்ற விஷயமும், கப்பல் கடலில் மூழ்கிய செய்தியும் ஆதிரையை எட்டியது. கணவன் இறந்து விட்டான் என முடிவு செய்த ஆதிரை, அழுது புலம்பி, தீ மூட்டி உயிர் துறக்க முடிவெடுத்தாள். ‘இறைவா… அடுத்த பிறவியிலும் அவரே என் கணவராக வர வேண்டும்…’ என்று வேண்டியபடி தீயில் குதித்தாள்.
ஆனால், கற்புக்கரசியான அவளைத் தீ சுடவில்லை; ‘ஐயோ… நெருப்பு கூட தீண்ட முடியாத பாவியாகி போனேனே…’ என கதறி அழுதாள். அப்போது வானில், ‘அம்மா ஆதிரையே… கவலை வேண்டாம்; உன் கணவர் மீண்டும் வருவார்…’ என்று அசரீரி கேட்டது.
இதனிடையே கரையில் ஒதுங்கிய சாதுவனை, காவலர் கள் அந்நாட்டு அரசரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் தன் கதையை எடுத்துச் சொன்னான் சாதுவன். அவனை உபசரித்து, மது கொடுத்தார் அரசர். அதை ஏற்காமல், மது அருந்துதலின் தீமைகளை எடுத்துச் சொன்னான் சாதுவன்.
ஆனால், அரசரோ, ‘நாம் மகிழ்ச்சியுடன் இருக்கத்தானே கடவுள் மதுவைப் படைத் திருக்கிறார்; அப்படி இருந்தும் ஏன் சாப்பிட மறுக்கிறாய்?’ என்று கேட்டார்.
‘அரசே… மதுவின் மயக்கத் தால் தான், கட்டிய மனைவியை விட்டு, நடன மாதுவிடம் சிக்கி, பொன், பொருளை இழந்ததுடன் மானத்தையும் இழந்தேன். மது குடிப்பதால், மனம் தடுமாறும்; புத்தி சிந்திக்கும் திறனை இழக்கும். சண்டை உருவாகி, சில சமயம் அது கொலையிலும் முடியும். இம்மது மயக்கமே, மனைவியைத் தவிர பிற பெண்களுடனும் உறவு கொள்ள தூண்டும். இதன் விளைவாக பொருளை இழப்பதுடன், நம்முடைய குலக் கவுரவுமும், மானமும் போகும். இதை என் அனுபவம் எனக்கு உணர்த்தியது…’ என்று மதுவின் தீமையை எடுத்துக் கூறினான். இதைக்கேட்ட மன்னரும் மனம் திருந்தி, மது பழக்கத்தை கைவிட்டார்.
அவரது உதவியுடன் நாடு திரும்பிய சாதுவன், மனைவியிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழ்ந்தான். அந்தக் கற்புக்கரசியான ஆதிரையே திருவாதிரை நட்சத்திரமாக வானமண்டலத்தில் மிளிர்கிறாள். சிவபெருமான் அதை, தன் நட்சத்திரமாக ஏற்றதுடன், அந்நாளில் மகிழ்வுடன் நடனமாடி, ‘நடராஜர்’ எனும் திருநாமமும் பெற்றார்.
ஆண்களே… மதுவும், பிற பெண்களுடனான உறவும் வேண்டாம். அது, உங்கள் பொருளையும், மானத்தையும் அழிக்கும். பெண்களே… தவறு செய்யும் கணவரைப் பொறுமையுடன் திருத்துங்கள்; வாழ்க்கை இனிக்கும்.

SOURCE::::
தி.செல்லப்பா in http://www.dinamalar.com

Natarajan

Jan 4 2015

மார்கழியின் மஹிமை …மஹாபெரியவா சொன்னது …

மார்கழி மாதத்தின் சிறப்புகள் பற்றி காஞ்சி மகாபெரியவர் சொல்வதைக் கேட்போமா!

மிருகசீரிடம் என்ற ஒரு நட்சத்திரம் இருக்கிறது. அதற்கு அடுத்த நட்சத்திரம் ஆருத்ரா எனப்படும் திருவாதிரை. “ஆருத்ரா’ என்றால் “நனைந்து’ என்று பொருள். மிருகசீரிஷத்திற்கும், திருவாதிரைக்கும் இடையில் பவுர்ணமி சந்திரன் இம்மாதத்தில் வருகிறார். ஆதலால் தான், இந்த மாதத்தை சமஸ்கிருதத்தில் “மார்க்கசீர்ஷம்’ என்று அழைக்கிறார்கள். மார்க்கசீர்ஷி என்றும் சொல்வர்.

இம்மாதத்தில் திருவாதிரை அன்று பவுர்ணமி சந்திரன் சேரும் போது, பனியுடன் கூடிய மதியின் கிரணங்களால் பூமி குளிர்கிறது. இம்மாதத்தில் தான் மேகங்கள் கருவுறுகின்றன. கோடைகாலத்தில் காய்ந்த உலகம், மார்கழியில் தாபத்தை எல்லாம் போக்கிக் கொள்கிறது.

இந்த மாதத்தில் சிவபெருமான், அம்பாள், திருமால் என்ற மூன்று ஜோதிகளாய் பிரிந்த பரம்பொருளை வழிபட வேண்டும். அதிகாலையில் இவர்களுக்கு பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் மனசுத்தம் ஏற்படும்.

கேரளாவில், இளம்பெண்கள் தினமும் காலை 3 மணிக்குள் எழுந்து, கையில் குருத்துகளை ஏந்தி கூட்டம் கூட்டமாக குளிரில் நடுங்கியபடியே, ஆறு குளங்களை அடைந்து நீராடி, கண்ணனின் திருஅவதாரப் பாடல்களை உயர்ந்த குரலில் பாடுவார்கள்.

இந்த மாதத்திற்கு “ஆக்ரஹாயணீயம்’ என்று நிகண்டு ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது.

அப்படி பார்த்தால், இதுவே வருடத்தின் முதல்மாதம் என்று ஆகிறது.

“ஹாயணீயம்’ என்றால் “வருடம்’. அக்ரம் என்றால் என்றால் “முதல்’ என்று பொருள். ஆங்கிலப் புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரியும், இந்த மார்கழியிலேயே பிறக்கிறது.
தேவர்களுக்கு ஆறுமாதம் பகல், ஆறுமாதம் இரவு. பகல்பொழுதின் முதல் மாதமே மார்கழி. அதுவே அவர்களுக்கு விடியற்காலை. தை மாதம் அவர்களுக்கு சூரிய உதயம். இதனால் தான் நம்முடைய மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும், தேவர்களுக்குரிய மார்கழி மாதமும் மிகுந்த சிறப்பு பெறுகிறது.

இதன் அடிப்படையிலேயே, “”மாஸானாம் மார்க சீர்ஷோஸ்மி’ என்று பகவான் கண்ணனும் கீதையில் கூறுகிறான். அதாவது மாதங்களில் நான் மார்கழி என்றும், அதுவே சிறந்த மாதம் என்றும் பொருள்படுகிறது. இதனால் தான் தோழியருடன் ஆண்டாள் திருப்பாவை பாடி, இந்த மாதத்தில் நோன்பிருந்தாள். மாணிக்கவாசகரின் திருவெம்பாவை இந்த மாதத்தில் பாடப்படுகிறது.

இந்த மாதத்தின் புனித நாட்கள் திருவாதிரையும், மகாவியதிபாதமும் ஆகும். இந்நாட்களில் சிவாலயங்களில் அபிஷேக ஆராதனை நடக்கும். அன்று தீர்த்தக்கரைகளுக்குச் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த அனுஷ்டானத்தால், நமது பித்ருக்களுக்கு (முன்னோர்) விசேஷ திருப்தி ஏற்படுகிறது. மேலும், அகம்பாவ தோஷம் அழிவதுடன், பேராசையால் ஏற்பட்ட தோஷமும் போய்விடுகிறது.

Read more: http://periva.proboards.com/thread/8404/#ixzz3NGs3c36i

SOURCE:::: http://www.periva proboards.com

Natarajan

Message for the Day…” The Primary Wealth of a Man is Divine Love …”

Everyone should treat whatever happens to them as gifts from God. Pleasure and pain should be treated alike as Divine gifts. There is a unique joy in this process. In daily life we tend to treat defeat, loss or grief as calamities. But nothing occurs in the world without a cause. Hunger is the cause for eating. Thirst is the cause for drinking. Difficulties are the cause of sorrow. If you would like to enjoy enduring happiness, you must discover the source of such happiness. That source is love(prema). There is nothing greater than love in this world. Everything has a price. The price to be paid for enduring happiness is Divine Love. The primary wealth for man is Love. Everyone should seek to acquire this wealth. With this wealth anyone can enjoy enduring bliss.

Sathya Sai Baba

Message For the Day…” When Your Heart becomes Home for God…”

A cleansed and pure heart is the most appropriate altar or tabernacle for the Lord. In that fragrant bower, the Lord will establish Himself. When the Lord establishes Himself, at that very moment, another incident too will happen. The group of six vices that had infested the place will quit instantly, without any farewell or fanfare. When these vices quit, the wicked retinue of evil tendencies and vulgar attitudes which live on them will break camp and disappear without leaving even their addresses! Then one will shine in one’s native splendour of Truth and Love (Sathya and Prema). That person will endeavour without hindrance to realize the Self, and finally succeed in merging with the Universal and Eternal. Liberated from the tangle of ignorance or maya, the mind will fade away. The long-hidden secret will be revealed.   

Sathya Sai Baba

Message For the Day…” When Heart turns into clean and illumined one with shine of love and light…”

Listening to expositions by a speaker who has had the thrill of genuine experience is a blessing. The speaker’s face will blossom with joy, their eyes will shed tears of exhilaration at the very contemplation of the Lord’s glory. Listeners will easily catch that inspiration and experience the joy themselves as tears stream down their eyes. When an infant smiles, everyone around the infant also smiles in unison. So too the words of those who are saturated with devotion to God will saturate the hearts of the listeners too. Through that process of listening, a dirt-laden heart will be transformed into a clean and illumined heart which shines with genuine light and love. To the foul odours of sense-pursuits, keenness to listen to the glories of God is a valuable disinfectant, besides being in itself so full of sweet fragrance. Listening will effectively cleanse your heart.

Sathya Sai Baba

Message For the Day….” The Qualities One Must Develop for a Direct Vision of God …”

Embodiments of Divine Love! Adhere sincerely to your faith and traditions. Wherever you may be, do not give room for religious or any kind of differences. When we examine the root cause for differences or conflicts, you will find that the real reason is selfish minds, wearing the garb of religion or any other cause, and inciting conflicts amongst the people. If you desire to secure genuine peace in the world, you must hold morality (neethi) as superior to your community (jaathi). Cherish good feelings as more important than religious beliefs. Mutual regard (mamatha), equal mindedness(samatha) and forbearance (Kshamatha) are the basic qualities necessary for every human being. Only the person with these three qualities can be regarded as a true man. Hence all of you must cultivate these three sacred qualities assiduously. Using these qualities, give up all kinds of differences. Then love will develop in you. When love grows, you will have a direct vision of God.

Sathya Sai Baba