“இனிமையான ‘ழ ‘ இருக்கும் இடம் ‘தமிழ் ‘ “…!!!

தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் [பெரியவா] அறிவு
முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது.
ஒரு முறை கி.வா.ஜ விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று
கேட்டார். மேலும்”சம்ஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட
மொழி என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்
வந்தது சொல்லுங்கள்!” என்கிறார். கி.வா.ஜ. அடக்கமாக,
“பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார்.

“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது.
இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை
அவற்றைக் குறிப்பதாகவே இருக்கும்.

மழலை,குழல்,அழகு,குழந்தை, சுழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’
வருகிற எல்லாமே நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான
“ழ’வைத் தம்மிடத்தில் உடையது ‘தமிழ்'[தமி+ழ்] என்று
சொல்லலாமா?” என்கிறார். உடனே கி.வா.ஜ., “இதைவிடப்
பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா
மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!” என்றாராம்.

சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும்
“யாமா மாநீ யாமா மா” என்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும்
கடினம்.அவற்றுள் இன்றைப் பெரியவா எடுத்து, மிகவும்
கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்து மிக எளிமைப்படுத்திப்
பொருள் சொன்னார்.பெரிய வித்வான்களே பிரமித்துப் போனார்கள்.

“அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடிய பாடல்களில் ஒன்று,
முக்கால்,அரை,கால்,இருமா,மாகாணி,ஒருமா,கீழரை என்று
குறந்துகொண்டே வர்ம். அளவுகளை வைத்து எழுதுகிறார்
தெரியுமா?” என்று கேட்டு,

முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்

அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்

விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்

கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது…..

என்ற பாட்டைபெரியவா எடுத்துக் காட்டுகிறார். அதன் பொருளையும்
தனக்கே உரிய முறையில்,

“முக்கால்-னா மூன்று கால்கள். வயதான பின் இரண்டு காலில்
நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றவது காலாகப்
பயன்படுத்துகிறோமே..அந்த நிலை வருவதற்குள்,
‘முன்னரையில் வீழாமுன்’..நரை வருவதற்கு முன்னாலே,
‘விக்கலும் இருமலும்’ வருவதற்கு முன்..யமனுடைய
காலடி நம்மை அணுகவதற்கு முன்…ஊருக்கு வெளியிலுள்ள
‘மாகாணி’ என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்..காஞ்சியில்
ஒரு மாமரத்தின் கீழ் உள்ள ஏகாம்பரேசுவரரை
இன்றைக்கே துதிப்பாய்!”

என்று மிக அழகாக விளக்குகிறார். மேலும்,
“என்ன அழகு பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற
எண்ணுக்குக் கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு
அளவுகளையும் கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச்
சொல்லி மகிழ்ந்தார்.எதையுமே இப்படி விளக்கமாகப்
பொழிந்து தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்.

source:::: periva.proboards.com

natarajan
Read more: http://www.periva.proboards.com/thread/389/periyavas-expertise-tamil-literature#ixzz2ljOGNEwU

படித்து ரசித்தது …வத்த குழம்பும் , கீரை மசியலும் !!!

 ஸாதம் – வத்தல் குழம்பும்கீரை மசியலும்!

​ நம்ம உடம்புல பஞ்ச கோசங்கள்ள “அன்னமய கோசம்”ன்னு ஒண்ணு இருக்கு. என்ன கவனிக்கணும்ன்னா,நம்ம பெரியவாள்ளாம் அன்னமய கோசம்ன்னுதான் சொல்லியிருக்காளே  தவிர, கோதுமைமய கோசம்,ராகிமய கோசம்ன்னு சொல்லலை. ஏன்னா…அன்னம்தான்

 ஜீவாதாரம். மஹாகவி காளிதாஸ் கதைல கூட, ப்ரக்ஞை இல்லாம விழுந்து கெடக்கறவாளுக்கு இந்தக் காலத்ல ட்ரிப்ஸ் ஏத்தற மாதிரி, அப்போ ஸாதத்ல கொஞ்சம்  ஜலத்தை விட்டு அதை அப்பிடியே அவா வயத்துல தடவினா, கொஞ்சம் சக்தி வரும்ன்னு படிச்ச ஞாபகம்.  “ராத்ரிக்கு சாதத்தை யார் சாப்பிடுவா?ரொம்ப ஹெவியா போய்டும்.
இப்போல்லாம் ராத்ரி லைட்டா ரெண்டே ரெண்டு சப்பாத்திதான் சாப்பிடறோம். ஒரு தால் பண்ணினா ஆச்சு! இல்லாட்ட வேகவெச்ச காய்கறி ஒரு கப், கொஞ்சம் sprouts ” ன்னு அலட்டறது ரொம்ப ஜாஸ்தியா போய்டுத்து. வெள்ளைக்காரன், வடக்கத்திக்காரன் இவாளைப் பாத்து ஈயடிச்சான் காப்பி அடிக்கறதில் நமக்குத்தான் gold medal கெடைக்கும்.அதுலயும் நம்ம பக்கத்து சாப்பாட்டை ஏதோ “வேஸ்ட்” மாதிரியும், “மட்டமான சாப்பாடு” மாதிரியும் போஸ் பண்ணிண்டு திரியறவாளும் உண்டு.

ராத்ரி ரொம்ப சிம்பிளா ரெண்டு உருண்டை [சாப்பிட ஆரம்பிச்சதும் இருவது உருண்டையாவும் ஆகும்] தயிர் or மோர் சாதம். தொட்டுக்க கார்த்தால மிச்சம் இருக்கற ஸாம்பார், ரசத்து வண்டல்,வத்தல் குழம்பு. அதுவும் யாராவது பிசைஞ்சு கையில் போடப் போட, நடுவுல குழிச்சிண்டு குழம்பை ஊத்திண்டு சாப்பிடறஅம்ருதத்துக்கு நிகரா, சப்பாத்தி,குப்பாத்தியெல்லாம் துண்டைக் காணோம்,துணியைக்
காணோம்ன்னு ஓடிப்போயிடும். ஸாதம் சீக்கிரமா ஜீரணம் ஆகும்.சப்பாத்தி ஜீரணம் ஆகறதுக்கு லேட் ஆகும். northல கூட, வெயில் காலத்ல ராத்ரிக்கு ஸாதம் சாப்பிடுவா. காரணம்? ஈஸியா digest ஆகும்.

வத்தல் குழம்புன்னு படிச்சதும், அழகா அம்சமா ஒரு கச்சட்டில தாமரை இலைத் தண்ணி மாதிரி நல்லெண்ணெய் அங்கங்க ஓவல் ஷேப்புல மொதக்கும் . ஒண்ணு ரெண்டு கறிவேப்பிலை,மிளகா வத்தல்,மணத்தக்காளி வத்தல்,கடுகு அதோட குழம்புப் பொடியோட
ஒரு ரெட் கலர்தான் எல்லாருக்கும் மனசுல காக்ஷி குடுக்கும். குடுக்கறதா?
கசப்புச் சுண்டைக்கான்னு ஒண்ணு இருக்கு. அதை வாங்கி அலம்பி, கொதிக்கவெச்சு ஆறின ஜலத்துல கல்லுப்பு போட்டு ஒரு ஜாடியில ஊறப் போடுவா. இந்த வத்தகுழம்புக்கு இந்த ஊறவெச்ச சுண்டக்காயை தாளிச்சுக் கொட்டினா,அந்த flavourரே தனி!
[காதுக்கும்,கடவாய்க்கும் நடுவுல சின்னதா ஒரு வலி இருக்கா? அப்போ சரிதான். உங்க taste buds நன்னா வேலை  செய்யறது; நீங்க ஹெல்தியா இருக்கேள்; நல்ல பசி
இருக்குன்னு அர்த்தம். Good. Keep it up!]

கொஞ்சம் வென்னீரைக் கொதிக்க வெச்சு அதுல ஒரு உருண்டை புளியைத் தூக்கிப் போட்டு “ஒரு பக்கமா அக்கடான்னு இரு”ன்னுட்டு வெக்கணும். ஆறினதும் கரைச்சுக்கணும்.
நன்னாப் பழகின கச்சட்டியா இருந்தாலும் அதுலேயே எண்ணை விட்டு தாளிக்கற ரிஸ்க் வேணாம். இலுப்பச்சட்டின்னா அதுல நன்னா மனஸார நல்லெண்ணெய் விட்டு [ஒரு மாசத்துக்கு நம்ம உடம்புக்குத் தேவையான மொத்த எண்ணையையும் ஒரு வத்தக் குழம்புலேயே விட்டு சாப்பிட்டா என்ன ஆறது?..]இப்பிடி யாராவது கேட்டால், அவாளை அலக்ஷியமாப் பாக்கக் கத்துக்கணும். மிளகா  வத்தல், கடுகு,வெந்தயம் or வெந்தயப்பொடி, மணத்தக்காளி வத்தல்/சுண்டக்கா வத்தல் ஏதாவது ஒரு வத்தல், கட்டிப் பெருங்காயம் [இதை மட்டும் கண்ணைத் திறந்து பாக்காம போடணும்.வத்தக்குழம்புக்கு பெருங்காயம் மாமா முறை!] கறிவேப்பிலை, கடைசியா வத்தக்குழம்புப் பொடி[உரைப்பு ஆகாதுன்னு சிலபேர், பேருக்கு குழம்புப் பொடி போடுவா..அது பச்சை துரோகம்] எதையெதை எப்பிடிப் பண்ணிச் சாப்பிடணுமோ,அதையதை
அப்பிடிப் பண்ணிச் சாப்பிடணும். இப்போ அதுல கரைச்சு வெச்சிருக்கற புளிஜலத்தை விட்டு விளாவி, கல் உப்பை அப்டி கையால எடுத்துப் போடணும். அவ்வளவுதான்.கடைசில கொஞ்சம் கெட்டியா ஆகணும்ன்னா,இருக்கவே இருக்கு அரிசி மாவு!

குழம்புக்கு சரியான combination கீரை மசியல், சுட்ட அப்பளாம், மாவடு, டாங்கர் பச்சடி. கீரையைப் பண்ணும்போது ரொம்ப ரொம்ப முக்கியம்…அதோட பச்சைக் கலர் மாறாம பண்ணணும். சில வீடுகள்ள அது கீரை மசியல்ன்னு சத்தியம் பண்ணினாக் கூட நம்ப முடியாது. காய்ஞ்சு போன மருதாணி கலர்ல இருக்கும்.
முளைக்கீரை,அரைக்கீரை,டெல்லி பாலக் [பசலைக்கீரையை பாலக்..ன்னு சொல்லித் தலைலகட்டுவான்]சிறுகீரை இதெல்லாம் மசியலுக்கு ரொம்ப நன்னா இருக்கும். கீரையை நன்னா
மண்ணு போக நெறைய வாட்டி அலம்பிட்டு, பொடியா நறுக்கி, மண் சட்டில போட்டு, நெறைய ஜீரகம்,பச்சை மிளகா, பெருங்காயம் போட்டு,கொஞ்சமா ஜலத்தை விட்டு, மூடாம அப்பப்போ கிளறி, தண்டை நசுக்கி வெந்துடுத்தான்னு பாத்துட்டு, கல் உப்பைப் போட்டு, மத்தால மசிக்கலாம் இல்லாட்டா, மிக்ஸில ஒரு திருப்பு திருப்பினா, அப்டி
டார்க் பச்சைக் கலர்ல மசியல் ரெடி. தேங்காய் எண்ணையில கடுகு, உளுந்து,மிளகா வத்தல் தாளிச்சு இந்த பச்சைமலை மேல “சர்”..ன்னு கொட்டணும். இன்னும் கொஞ்சம் நகாசு வேலை பண்ணனும்ன்னா,[இது அவாவா வீட்டுல, சமைக்கறவா மூடை யாரும் கெடுக்காம
பாத்துண்டா..நகாசு வேலை பண்ணலாம்]  தாளிச்சதும், இன்னும் கொஞ்சம் தேங்கா எண்ணெய் விட்டு,இந்த “கருவடாம் கருவடாம்”ன்னு ஒரு “antique” வஸ்து இருக்கு. அதை அப்டியே ரெண்டு மூணு கைப்பிடி அள்ளிப் போட்டு [வறுத்ததை வெறுமனே தின்னது
போக கீரைக்குப் போடறதுக்கு கொஞ்சம் இருக்கணும் இல்லியா?] exact ஆ golden brown
கலர்ல வறுத்து கீரை மேல கூரை மாதிரிப் போடணும். உடனேயே சாப்பிடறதா இல்லைன்னா, தனியா வெச்சுண்டு, சாப்பிடறச்சே மிக்ஸ் பண்ணிக்கலாம். அப்போதான் மசியலோட “கறுக்முறுக்”ன்னு கருவடாமும்,”கடுக்கடுக்”ன்னு வறுபட்ட உளுந்தும் வாய்ல ஆனந்த
நர்த்தனமே ஆடும்.ஆஹாஹா!

“டாங்கர்”பச்சடிங்கறது இப்போல்லாம் நெறையப் பேருக்குத் தெரியுமான்னே சந்தேஹம்!
ரொம்ப சிம்பிள்! உளுந்தை லேஸா எண்ணை இல்லாம வெறுமன வறுத்து, மிக்ஸில பொடிச்சுவெச்சுக்கணும். அந்தப் பொடிலேர்ந்து ரெண்டு,மூணு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ப்ளர் கெட்டியாக் கடைஞ்ச தயிர்ல நன்னா மிக்ஸ் பண்ணி, உப்பு,பச்சை மிளகா,
பெருங்காயம்,கறிவேப்பிலை,கொத்தமல்லி போட்டு, கடுகு மட்டும் தாளிக்கணும். வறுக்காத உளுத்தமாவுன்னா,ஜீரகம் பச்சையா சேத்துக்கோங்கோ.[முறுக்குமாவை சாப்பிடற மாதிரி இருக்கும்].

இப்போ பாதியா கட் பண்ணின வாழை இலைல, ஒரு மூலைல டாங்கர் பச்சடி. லைட்டா மங்கினவெள்ளைக் கலர் தயிர்ல,பச்சை,ப்ரௌன்,பிளாக் கலர்கள் ஒரு கலக்கலா இருக்கும்.
கொஞ்சம் தள்ளி டார்க் க்ரீன் கலர் கீரை மசியல், அப்புறம் இந்த ஓரமா மொத்தையா வீங்கின மண்டை மாதிரி இல்லாம, 112 வயசு சைனாக்கார பாட்டியோட முகத்துல எத்தனை கோடுகள் இருக்குமோ,[now you can visualise] அது  மாதிரி கன்னப்பின்னான்னு
கோடுகளாப் போட்ட மாதிரி நன்னா சுருங்கின நம்ம பக்கம் போடற மாவடு, ஒரேயடியாக் கருகாம அம்சமாச் சுட்ட, அப்பளாம்! இதோ….கொதிக்கக்கொதிக்க ஸாதம் இலைல போட்டாச்சு! வத்தக்குழம்புக்கு நல்லெண்ணெய்தான்! ரெண்டு ஸ்பூன் எதேஷ்டம்!
இப்போ சாதத்தை நன்னா மசியப் பிசைஞ்சுண்டு, கொஞ்சங்கொஞ்சமா குழம்பை விட்டுப் பிசையணும். ஏன்னா…..வத்தக்குழம்பு ஸாதம், ஸாம்பார்,ரஸம் மாதிரி ரொம்ப தளர இருக்கக்கூடாது. சிலபேர் ரஸம் சாதத்தையே கெட்டியா, கொஞ்சூண்டு ரசத்தை  விட்டுண்டு, ஏதோ மாரடைச்சான் உருண்டையாட்டம் சாப்பிடுவா.

இப்போ turn போட்டுண்டு பச்சடி,கீரை,அப்பளாம்,மாவடு எல்லாத்தையும் தொட்டுண்டு  மணக்க மணக்க வத்தக்குழம்புஞ்சாதத்தை ஒரு வெட்டு வெட்டுங்கோ!! வத்தக்குழம்பு சாதத்தோட ஒரு special advantageஎன்னன்னா….சில சமயம் லீவு நாள்ள, காலைல குளிக்க முடியாம ஏதோ ஒழிச்சல் வேலை,சோம்பேறித்தனம்ன்னு இருந்தா, முந்தினநாள்
பண்ணின வத்தக்குழம்பு இருந்தா [ரொம்ப நன்னா இருக்கும்] ஒரு பாத்திரத்ல சாதத்தைப் போட்டு, அது தலைல நல்லெண்ணெய் விட்டு,பழேத்துக் குழம்பை விட்டு மொத்தமா உருட்டிப் பிசைஞ்சு, நம்ம உள்ளங்கை ஸைசுக்கு ஒரு உருண்டையா [திருப்பதி
லட்டு சைஸ்] உருட்டி எடுத்துண்டுபோய், பின்னால தோய்க்கறகல் மேலேயோ[இப்போ washing machine],தோட்டத்துலேயோ, பால்கனிலேயோ உக்காந்து சாப்பிட்டா….புல்லரிக்கும்!! அனுபவியுங்கோ!

source::::input from a friend of mine….

natarajan

தீபாவளி பயணம் ….”அண்ணாச்சி நம்ம ஊரா ” ?!!!

பிறக்க ஒரு ஊர்; பிழைக்க ஒரு ஊர். இதுதான் நம் மக்களின் தலைவிதி’னு சிவாஜி பேசி நான் கேட்டப்ப, எனக்கு ரொம்ப சின்ன வயசு. அப்போ, ‘இதுல என்ன இருக்கு’னு தான் தோணுச்சு. ஆனா எங்க ஊரை விட்டுட்டு, சென்னைல வந்து வேலை பாக்குறப்போ தான், அது எவ்வளவு கஷ்டமான விஷயம்னு புரியுது.

மானேஜர் கால்ல கைல விழுந்து, ஒரு மாசத்துக்கு முன்னாடி இருந்து ஐஸ் வெச்சு, ஊரைப்பத்தி பதிவெல்லாம் போட்டு, அதை அப்படியே அகஸ்மாத்தா அவருக்கு அனுப்பி, படிக்க வைச்சு, தீபாவளிக்கு ‘லீவ்’ வாங்குறத பத்தி மட்டுமே தனியா ஒரு மெகா சீரியல் எடுக்கலாம்.இப்படி லீவ் எல்லாம் வாங்கிட்டு, எத்தனை ‘பேன்’ வைச்சாலும் காத்தே வராத, மூலையில இருக்குற கோயம்பேடு ‘முன்பதிவு’ மையத்துல, எப்படியோ டிக்கெட் ‘புக்’ பண்ணிட்டேன்.தீபாவளிக்கு முந்தின நாள், அரக்கப் பரக்க தி.நகர்ல சுத்தி, சொந்தக்காரன் பங்காளிக்கெல்லாம் துணி எடுத்து; அடையார் ஆனந்தபவன்ல சண்டை போட்டு ஒரு கிலோ காரம், ஒரு கிலோ இனிப்பு வாங்கிட்டு; எட்டு மணி பஸ்சுக்கு ஏழரை மணிக்கே பெருங்களத்தூர்ல வந்து நின்னாச்சு.நம்ம ஆட்களுக்குன்னு இது அமையுதா, இல்லை……
”அண்ணாச்சி! நம்ம ஊரா?”
“நீங்க எந்த ஊரு?”
“மேலச்செவலு. நீங்க?”
“நமக்கு பாளையங்கோட்டை.”
“சரி அண்ணாச்சி, ஊருக்கு இனிப்பு ஒண்ணும் வாங்கல கேட்டியளா. ஒரு நிமிசம் நம்ம பொட்டிய பாத்துக்கிட்டீங்கன்னா, ஓடிப்போயிட்டு ஓடியாந்துருவேன்”
சொந்த ஊர்ல இருக்கும்போது ஒருத்தன ஒருத்தன் கண்கொண்டு பாக்கோமோ இல்லையோ, இந்த மாதிரி சமயத்துல பாசம் பொங்கிரும் நமக்கும்.
”அதுக்கென்னா… போயிட்டு வாங்க”னு, அனுப்பி வைச்சேன். போனவன் ரொம்ப நேரமா வரவேயில்ல. அவன் பொட்டியெல்லாம் பாத்தா, சென்னைய காலி பண்ணிட்டு போற மாதிரி இருந்தது.
ஒருவேளை பஸ் வந்துட்டா என்ன பண்ணுற துங்கற யோசனைல இருக்கும்போதே, ஓடியாறென்னு சொன்னவன், கால்ல எட்டு போட்டுக்கிட்டு வுந்தான்.
“இனிப்பு எங்கவே?”
“அந்த கடைக்கு முன்னால நம்ம கடை இருந்ததுல்லா”னு கேவலமா சிரிச்சான்.
பயங்கர குடி. என்ன கருமத்த குடிச்சுத் தொலைச்சானோ தெரியலை, ஆனா அது, என் கொடல தான் பொரட்டி எடுத்துச்சு.
“இந்தாரும் உம்ம பொட்டி. இனிமே எங்கேயும் போவாதேயும். என்னால பாக்க முடியாது”
“அண்ணாச்சி சாப்பிடுவியளா?” கைப் பெருவிரலை வாய்க்கு காமிச்சு கேட்டான்.
“இல்லை அண்ணாச்சி”
“ஐயோ உங்களுக்கும் சேத்துல்லா வாங்கிட்டேன். தீவாளிக்கு கூட இருக்குறவங்களுக்கு இது கூட செய்யலைனா எப்படி?”
“அய்யோ. எனக்கு பழக்கமில்லை. உங்க அன்புக்கு…நன்றி.” இவங்கிட்ட இருந்து எப்படி தப்பிக்க?
மணி எட்டாச்சு, எட்டரையாச்சு. வண்டி வந்தபாடில்ல.
‘சரி, தீவாளி நேரம், சென்னைக்குள்ள கூட்டமா இருக்கும் அதான் லேட்டாகுது’னு நின்னுகிட்டிருந்த எனக்கு, ரொம்ப கோவமாயிருச்சு.
மணி 10! ஆனா பஸ் வர்றதுக்கு எந்த அறியையும் காணோம், குறியையும் காணோம்.
ஒன்பது மணி பஸ்சுக்கு போறவங்க, பத்து மணி பஸ்சுக்கு வந்தவுங்கனு நிக்க எடமில்லை. நிக்க எடமில்லாதவன் எல்லாம் ‘டாஸ்மாக்’ல போய் உட்காந்துட்டானுவ.
நானாவது ‘நான் – ஏசி’ பஸ். ‘ஏசி’ பஸ்ல போறவன் எல்லாம் செத்தான். காலைல மப்புலதான் போய் எறங்கணும்.
அரசு பஸ் தான் லேட்டுனு பாத்தா, ஆம்னி பஸ்சுக்கும் இதே நிலைமைதான்.சில ஆம்னி பஸ்ல எல்லாம் டிக்கெட் குடுக்கும்போது, டிரைவர் ‘போன் நம்பரோ’, கண்டக்டர் ‘நம்பரோ’ சேத்தே குடுக்கறாவ. அது மட்டுமில்லாம நம்ம ‘பாயிண்டுக்கு’ வண்டி வாறதுக்கு முன்னால ஒரு ‘மெசேஜ்’ கூட வரும்.ஆனா, அரசு பஸ் எங்க நிக்குதுன்னு யாருக்குமே தெரியாது. நம்ம மேலச்செவல்காரரு, எனக்குனு வாங்கினதையும் குடிச்சிட்டு, பயங்கர கொசுக்கடிலயும் சிரிச்சுட்டே நின்னாப்புல.மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, நாஞ்சில் நாடுன்னு நம்ம பக்க தமிழெல்லாம் எதிரொலிக்கிறப்பத் தான், “எல்லா தீவாளி வண்டியும் பை-பாஸ்லயே நிறுத்திட்டானாம்யா. கோயம்பேட்டுல இருக்குறவனுக்கே வண்டி வல்லயாம்”னு, ஒருத்தன் சொன்னான்.
நாசமா போச்சு. பெருங்களத்தூர் பஸ் ஸ்டாப் கட்டணக் கழிப்பிடத்துல தான் தீவாளிக் குளியலைப் போடணும்னு தலையில எழுதி இருந்தா என்ன பண்ண முடியும்?
அடப்போங்க… குளியல் என்ன, கூடி நின்ன கூட்டத்தால, ஒண்ணுக்குக் கூட இருக்க முடியாத நெலம! ‘டாஸ்மாக்குல’ பத்து மணிக்கு முன்னாடி போய், ரெண்டு பீர் குடிச்சவன் எல்லாம் என்ன பண்ணனும்னு தெரியாம தவிச்சுட்டானுவ. கண்ணுல மரண பீதி.கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் கூட இல்ல. பொம்பளையாள் இருக்குற எடத்துல முக்கால்வாசி பயலுவ குடிச்சிருந்தானுவோ, எதுனா எக்குத் தப்பு நடந்தா பாக்கக் கூட யாருமில்ல. ஒரு வேளை தப்பைத் தட்டிக் கேக்க நம்ம இங்க இருக்கோம்னு அவிங்களுக்கு தெரிஞ்சிருக்கோ என்னமோ!
ஒருவழியா, 12 மணி வாக்குல பஸ் வந்து, நின்னப்போ மேலச்சேவல் நல்ல தூக்கம். ‘சரி ஊர்க்காரனாச்சே’னு ஏத்தி விட்டா, ‘கண்டக்டர்’கிட்ட அப்பத்தான் டிக்கெட் வாங்க துட்டை நீட்டுறான்! கண்டக்டரு, என்னல்லாம் வைய்ய முடியுமோ வைஞ்சிட்டு, டிரைவருக்கு பின்னாடி இருந்த ஒரு எடத்துல உட்கார வெச்சுட்டார்.

‘நல்ல வேளை, இவன் எனக்குப் பக்கத்துல இருக்குற சீட்டுக்கு வரலை’னு சந்தோஷமா போய் பார்த்தா, எனக்குப் பக்கத்துல அவனையும்விட மொரட்டுக் குடிகாரன் ஒருத்தன்! தலையெழுத்து.’12 மணிக்கு வந்தாலும், நாலு மணிக்குள்ள ஊரு போய்ச் சேர்ந்துருவேன்’ங்கற வெறியில நம்ம டிரைவர் ஓட்டினாரு பாருங்க…பஸ்ல குடிச்சிருந்த அத்தனை பேரும், ரெண்டு வாரத்துக்கு முன்னாடி சாப்பிட்டது வரைக்கும் வாந்தி எடுத்துட்டாங்க.அதுலயும் நம்ம முன்சீட்காரர், டிரைவர் முதுகுலயே வாந்தி எடுத்து, அதனால வண்டி ஒரு அஞ்சு நிமிஷம் நின்னு கெளம்பிச்சு.இதெல்லாம் தாண்டி, காலைல 11 மணிக்கு வீட்டுக்கு வந்தப்போ, சொந்தக்காரன், பங்காளினு எல்லா பயலும் படத்துக்கு போயிட்டானுவோ. ச்ேச… இவ்வளவு கஷ்டப்பட்டு வந்து, என்னத்தக் கண்டோம்?காலைல எண்ணெய் தேச்சுக் குளிக்க, பட்டாசு வெடிக்க எல்லாம் பாக்கியமே இல்லாம, பட்டணத்து வாழ்க்கைக்கு திரும்புறதுக்கு, தீவாளி முடிஞ்ச அடுத்த நாளே பஸ்சுக்கு வந்து நின்னேன்.
“பாஸ்! சென்னைல எங்க?”
“அம்பத்தூர்.”
“ஒரு அஞ்சு நிமிசம் நம்ம பைய பாத்துகிடுதியளா? இந்தா வந்திருதேன்…”
“நான் ஊருக்கே போகலைடா!!”

source::: Dinamalar…Tamil Daily

natarajan

கந்த சஷ்டி தோன்றிய கதை !!!

Temple images

படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். (தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். தட்சனின் மகள் பார்வதி. பார்வதியின் மகன் முருகன். இதன் படி பார்த்தால் முருகனுக்கு சூரபத்மன் தாத்தா உறவு வருகிறது என்ற கருத்தும் உள்ளது.)

அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.

காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர்.
இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன்  சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.

அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின! அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க… அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார்.  முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில்  சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.

தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.

முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர்.  சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தி யான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.

கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்.

source:::::dinamalar..tamil daily

natarajan

படித்து ரசித்தது ….வாரியார் சுவாமிகளின் அருளுரைகள் !!!

திருமுருக கிருபானந்த வாரியாரின் “குமுதம் வினா விடை” தொகுப்பில் இருந்து ரசித்தவை)

தெய்வங்கள் மக்களை காப்பாற்றும் என்று கூறுகிறார்கள். ஆனால் தெய்வங்களின் சிலைகளைத் திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். அவ்வாறு தங்களையே காத்துக் கொள்ள முடியாத தெய்வங்கள் மக்களை எப்படி காப்பாற்றும் ?

சிலைகளே கடவுள் அல்ல. மூர்த்தி வேறு. மூர்த்திமான் வேறு. மூர்த்தி என்பது சிலை. மூர்த்திமான் அந்தச் சிலையில் நாம் ஆவாகனம் செய்கின்ற தெய்வம்..மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு. பல்பில் ஷாக் அடிப்பதில்லை. ஆகவே பல்புகளை திருடும் போது ஏன் ஷாக் அடிப்பதில்லை என்று கேட்பதை போலிருக்கிறது இந்த வினா. சிலைகளைத் திருடுகின்றபோது, ஆண்டவன் ஏன் அவனுக்கு தண்டனை கொடுக்கவில்லை என்ற வினா எழக்கூடும்.

கடவுள் கருணைக்கடல். தாய், திருடுகின்ற மகனிடத்தும் அன்பு பாராட்டுவது போல், கடவுள் கள்ளனுக்கும் கருணை காட்டுவார். “நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடு” என்கின்றார் இராமலிங்க வள்ளலார்.

Photo: (திருமுருக கிருபானந்த வாரியாரின் "குமுதம் வினா விடை" தொகுப்பில் இருந்து ரசித்தவை)தெய்வங்கள் மக்களை காப்பாற்றும் என்று கூறுகிறார்கள். ஆனால் தெய்வங்களின் சிலைகளைத் திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். அவ்வாறு தங்களையே காத்துக் கொள்ள முடியாத தெய்வங்கள் மக்களை எப்படி காப்பாற்றும் ?சிலைகளே கடவுள் அல்ல. மூர்த்தி வேறு. மூர்த்திமான் வேறு. மூர்த்தி என்பது சிலை. மூர்த்திமான் அந்தச் சிலையில் நாம் ஆவாகனம் செய்கின்ற தெய்வம்..மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு. பல்பில் ஷாக் அடிப்பதில்லை. ஆகவே பல்புகளை திருடும் போது ஏன் ஷாக் அடிப்பதில்லை என்று கேட்பதை போலிருக்கிறது இந்த வினா. சிலைகளைத் திருடுகின்றபோது, ஆண்டவன் ஏன் அவனுக்கு தண்டனை கொடுக்கவில்லை என்ற வினா எழக்கூடும். கடவுள் கருணைக்கடல். தாய், திருடுகின்ற மகனிடத்தும் அன்பு பாராட்டுவது போல், கடவுள் கள்ளனுக்கும் கருணை காட்டுவார். "நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடு" என்கின்றார் இராமலிங்க வள்ளலார்.
‘கொன்றார் பாவம் தின்றாரோடு’ என்று கசாப்பு கடைக்காரர் சொல்லுகின்றார். ‘தின்றார் பாவம் கொன்றாரோடு’ என்று புலால் உண்பவர் கூறுகின்றார். இதில் எது சரி? இதன் மூலம் இரு சாரார்களுமே பாவத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்களா?

‘கொன்றால் பாவம் தின்றால் தீரும்’ என்ற பழமொழிக்கு மற்றவர்கள் சொல்கின்ற பொருள் பிழையானது. கொல்லுகின்றவன், விலை கொடுத்து வாங்கித் தின்பவனுக்காகவே செய்கின்றான். ஆகவே அப்பாவம் முழுதும் அவனையே சேராது.

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல்
– திருவள்ளுவர் (அதிகாரம்: புலால் மறுத்தல்).

ஆகவே, உயிர்களைக் கொன்ற பாவம், தின்பதனால் போகும் என்பது ஒரு சிறிதும் பொருந்தாது. ஒரு சிலர், ‘நான் கொல்வதில்லை, கடையில் இருந்து வாங்கித் தின்கின்றேன்” என்பார்கள்’ இதுவும் பிழையான கருத்தாகும். வாங்குவார் பொருட்டே விற்பவன் கொல்கின்றான். திருவள்ளுவர் ‘கொல்லாமை’ என்று ஒரு அதிகாரமும் ‘புலால் மறுத்தல்’ என்று ஒரு அதிகாரமும் தனித்தனியே கூறியிருக்கின்றார்.

கொல்லாமல் கொன்றதை தின்னாமல் சூத்திரம் கோள்களவு
கல்லாமல் கைதவரோடு இனங்காமல் கனவிலும் பொய்
சொல்லாமல் …………………தோகையர் மாயையிலே
செல்லாமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே
— பட்டினத்தார்.

இவ்வாறு எத்தனை பிரகாரங்களாகப் பார்த்தாலும் ஊன் உண்பது பெரிய பாவமாகும்.

கங்கையில் படிந்திட்டாலும் கடவுளைப் பூசித்தாலும்
சங்கையில்லாத ஞான சாத்திரம் உணர்ந்திட்டாலும்
மங்கு போல் கோடி தானம் வள்ளலாய் வழங்கிட்டாலும்
பொங்குறு புலால் புசிப்போன் போய் நரகு அடைவன் அன்றே!!!
–இராமலிங்க வள்ளலாளர்

இனி, கொன்றால் பாவம் தின்றால் போகும் என்பதற்கு சரியான உரை கீழ்வருமாறு.

புலால் உண்டவர்களை இறந்த பின் இருள் உலகத்தில் (நரகத்தில்) நிறுத்தி அவர்கள் உடல் தசையை அறுத்து அறுத்து அவர்கள் வாயில் வைத்து ஊட்டுவார்கள். அதை உண்டால் தான் அவர்கள் கொன்ற பாவம் போகும். இந்தக் கருத்தை அருணகிரிநாதர், ‘புவனத்தொரு’ என்று தொடங்குகின்ற திருசிராப்பள்ளி திருப்புகழில், ‘இறைச்சி அறுத்து அயில்வித்து’ என்று குறிப்பிட்டு இருக்கின்றார். எனவே, கொன்ற பாவமும் தின்ற பாவமும் தன் உடம்பைத் தானே தின்றால் தான் போகும்.

(திருமுருக கிருபானந்த வாரியாரின் “அது போல” தொகுப்பில் இருந்து)
மாடி மேல் ஏறுவதற்கு ஒரு கருவி ஏணி. மாடி மீது ஏறுவதற்கு என அமைந்த ஏணி மீதே பல மணி நேரம் நின்று கொண்டு இருக்க ஒருவன் விரும்புவானா ?. விரும்ப மாட்டான்.

—அது போல—

பிறவாமயைப் பெற நமக்கு அளிக்கப்பட்ட ஏணி போன்ற இவ்வுடம்பிலேயே (பிறந்தும் இறந்தும்) நின்று கொண்டிருப்பது அறிவுடமை ஆகாது. மதி நலமுடையோர் விரைவாக ஏணி மீது ஏறி மாடிக்கு செல்வது போல், இந்த உடம்பைக் கொண்டு பிறவாமயைப் பெற முயல்வார்கள்

இது கதையல்ல நிஜம்.கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார்.இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலுடன், “சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.?

கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள்.

வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?”

அவர்கள் இருவரும் “இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.

வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.

ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச இவங்களுக்கேத் தூக்கம் வரவில்லை… உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு நேரம் ஏது?” என்றார்.

source:::: Thirumuruga Kripanandavariar  Swamigal page in facebook
NATARAJAN
Today 7 th Nov.. is His 20th ARADHANA DAY…

“வேர் என நீ இருந்தாய் …வீழ்ந்து விடாது இருந்தேன் நான் ” …

நடக்க முடியாத கணவனை சக்கரம் பொருத்திய பலகையில் அமரவைத்து இழுத்துச் செல்லும் பழனியம்மாள். (கோப்புப்படம்)

நடக்க முடியாத கணவனை சக்கரம் பொருத்திய பலகையில் அமரவைத்து இழுத்துச் செல்லும் பழனியம்மாள். (கோப்புப்படம்)

நான்கு மணி நேரத்தில் காதல், நான்கு நாட்கள் டேட்டிங், நாற்பது நாட்களுக்குள் திருமணம், 4 மாதங்களுக்குள் விவாகரத்து என ‘நவீன’ காதல், பல பரிமாணங்கள் அடைந்திருப்பதை பல சம்பவங்கள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றன. ஆனால், காதல் திருமணம் செய்த கணவன் போலியோவால் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாத நிலையில், 40 ஆண்டுகளாக சக்கரம் பொருத்திய பலகையில் அமர வைத்து, ஊர்சுற்றி பிச்சையெடுத்து அவரைக் காப்பாற்றிய ஈரோட்டைச் சேர்ந்த அதிசயப் பிறவி பழனியம்மாள் தற்போது பரிதவித்துப் போய் இருக்கிறார்.

இதுநாள்வரை தனக்கு துணையாக இருந்த ஆசைக்கணவனின் திடீர் மறைவுதான் பரிதவிப்புக்குக் காரணம். ஒரு பெண்ணின் வைராக்கியம் என்னவெல்லாம் சாதிக்கும் என்பதற்கு மவுசி என்று அழைக்கப்படும் பழனியம்மாளின் வாழ்க்கை ஒரு உதாரணம்.

கண்டதும் காதல்…

ஈரோட்டை அடுத்த எல்லப்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் போலியோவால் பாதிக்கப்பட்டு, சிறு வயது முதல் நடக்க முடியாத நிலையில் இருந்தார். இவர் மீது, அதே பகுதியைச் சேர்ந்த பழனியம்மாளுக்கு இரக்கத்தினால் உருவானது காதல். ஆனால், இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, எதிர்ப்பை மீறி காதல் மணம் புரிந்தனர் இந்த தம்பதி. கால்கள் ஊனமுற்றதால் எந்த வேலைக்கும் செல்ல முடியாத கணவன், அவரைத் தனியே விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்ல முடியாத நிலை. இந்த காரணங்களால், கணவன் அமரும் வகையில், சக்கரம் பொருத்திய பலகையை தயார் செய்து, அதில் அவரை அமர வைத்து, பிச்சைப்பாத்திரம் ஏந்தினார் பழனியம்மாள்.

தத்தெடுப்பு

தங்களுக்கு குழந்தை யில்லை என்ற குறை யைப் போக்க, இரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்து, அவர்களை யும் வளர்த்து ஆளாக்கியது பழனியம்மா ளின் மனோதிடம். குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்குத் திருமணம் செய்துவைப்பது வரை, குறையேது மில்லாமல் நடத்தி வைத்தனர் இந்த பாசக்கார தம்பதி.

தாங்கள் வளர்த்த குழந்தைகள், குடும்பத்தோடு வெவ்வேறு பகுதிகளில் குடியேறினாலும், அவர்களோடு ஒண்டிப்பிழைக்க இவர்களின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. இதனால், சக்கர வண்டியில் கணவனை இழுத்தபடியே, பழனியம்மாளின் பயணம் தொடர்ந்து வந்தது. இந்த பாசத் தம்பதியைப் பார்க்கும் ஒவ்வொருவரும் வியப்பும், ஏக்கமும் அடைவது வாடிக்கை. யார் கண்பட்டதோ, கடந்த வாரம் ஆறுமுகம் உடல்நலக்குறைவால் இறந்து போனார். அவர் பாசமாக வளர்த்த குழந்தைகள், தகவல் கேட்டு பதறியடித்தபடி வந்து, தங்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகளை நடத்தினர்.

‘ஆலம் விழுதுகள் போல், உறவு கள் ஆயிரம் இருந்துமென்ன… வேரென நீ இருந்தாய்… நான் வீழ்ந்து விடாதிருந்தேன்’ என்ற பாடல் வரிகளைப் போல், இதுநாள்வரைத் தனக்கு சுகமான சுமையாய் இருந்த கணவன், தன்னை விட்டுப்பிரிந்த சோகத்தில் தவித்துப் போய் இருக்கிறார் பழனியம்மாள்.

முதியோர் உதவித் தொகை வேண்டி…

இருந்தும், யாரின் துணையுமின்றி தன் சொந்தக்காலில் நின்றிட வேண்டுமென்பதற்காக, முதியோர் உதவித்தொகை வேண்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்திருக்கிறார் அவர். பாசம், பதிபக்தி, வைராக்கியம், மனோதிடம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, மனிதநேயம் என என்னென்ன நல்ல குணங்கள் இருக்க வேண்டுமோ, அவையனைத்தையும் தன் வாழ்நாளில் கடைபிடித்த பழனியம்மாளுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல. அனைவரின் கடமையும்கூட.

source:::::  Story by Govindarajan in The Hindu….Tamil
natarajan

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழதினால் என்ன !!!

 

 

சென்னையில் பெரும் ஆங்கிலப் புத்தகக் கடையொன்றில் ஓர் அறிவிப்பைப் பார்த்தேன். அன்று வந்துசேர்ந்த ஆங்கில நூல் ஒன்று 2,000 பிரதிகள் விற்றிருக்கிறது என்று சொன்னது அது. பரபரப்பாக விற்கும் ஒரு தமிழ் நூல் வருடம் 2,000 பிரதிகள்தான் விற்கும். அதில் 1,500 பிரதிகள் நூலகத்துக்கு வாங்கப்படுபவை. தமிழகம் முழுக்க 500 பிரதிகள் வாசகர்களிடம் விற்கப்பட்டால் அது ஒரு சாதனை!

நம் இளைய தலைமுறை ஏராளமாக வாசிக்கிறது. ஆனால், தாய்மொழிகளில் வாசிப்பதில்லை. காரணம், இந்தியாவெங்கும் ஆங்கிலக் கல்வி பரவலாகிவருகிறது. உலகமயச் சூழலில் ஆங்கிலமே வேலை வாய்ப்புக் கல்விக்குரிய மொழி என நிறுவப்பட்டுவிட்டது. அது தெளிவான உண்மையும்கூட. ஆகவே, எதிர்காலத்திலும் ஆங்கிலமே இங்கே கல்வியின் மொழியாக இருக்கும். அதைத் தடுக்கவே முடியாது. வரலாற்றின் போக்கு அது. அதற்கு எதிராகப் பிடிவாதமாக நிலைகொள்வது அடிப்படைவாதம் மட்டுமே.

ஆங்கிலக் கல்வியால் தாய்மொழிக் கல்வி கைவிடப்படுவதைக் கண்டு, இந்திய மாநில அரசுகள் தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்குகின்றன. விளைவாக, குழந்தைகள் இரண்டாவது மொழியாகத் தாய்மொழியை எடுத்து, பள்ளி இறுதிவரை அதைப் படிக்கின்றனர். ஆனால், அது இரண்டாவது மொழியாக இருப்பதாலேயே அதில் அவர்களுக்குக் கவனம் நீடிப்பதில்லை.

பிரெஞ்சு அல்லது சம்ஸ்கிருதத்தை இரண்டாம் மொழியாக எடுத்துப் பயிலும் குழந்தைகள், எப்படி அம்மொழிகளைக் கற்கின்றனவோ அப்படித்தான் இன்று நம் குழந்தைகளும் தாய்மொழியைக் கற்கின்றன. அதாவது, தேர்வுகளில் எளிதாக வெல்வதற்கு மட்டுமே தட்டுத்தடுமாறி வாசிக்கவும் ஓரளவு எழுதவும் கற்கின்றனர். இந்த உண்மையை நாம் மழுப்ப வேண்டியதில்லை.

அவர்கள் சந்திக்கும் சிக்கல் என்ன? இளமையில் இரண்டு மொழிகளின் எழுத்து வடிவங்களைக் கற்றுக்கொள்வதில் இருக்கும் சிரமம்தான் என்று சொல்லலாம். இன்று ஏதேனும் ஒரு துறையில் தகுதியுடையவராக ஆக வேண்டுமென்றால், மிக விரிவான பல்லாண்டு காலக் கல்வி தேவைப்படுகிறது. ஆகவே, கல்விக்கு உதவாமல் வெறுமே மொழியறிவுக்காக மட்டுமே கற்கப்படும் இரண்டாம் மொழியை விட்டுவிடுகிறார்கள்.

மொழிக்கும் எழுத்துருவுக்குமான உறவு என்பது ஒரு மனப்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். க என்ற எழுத்தைப் பார்த்ததும் அந்த ஒலி நினைவுக்கு வருவதற்கு நாம் இளமையிலேயே குழந்தைகளைப் பழக்குகிறோம். நமக்கு அது இயல்பான ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், குழந்தைகள் மிகக் கடினமான ஈராண்டுப் பயிற்சி வழியாகவே அந்தப் பயிற்சியை அடைகின்றன.

எழுதுவது என்பது இன்னும் சிக்கலானது. சமூகவியல் ஆய்வாளரான மிஷேல் ஃபூக்கோ “எழுத்து என்பது கைகளுக்கு அளிக்கப்படும் கழைக்கூத்தாட்டப் பயிற்சி” என்கிறார். நம் குழந்தைகளுக்கு அதைக் கட்டாயமாக ஆக்கியிருப்பதால் அவர்கள் இளமையில் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் வாழ்க்கையில் அது மிகக் கடினமான ஓர் உழைப்பு. மிருகங்களையும் பறவைகளையும் வித்தைக்காகப் பழக்குவதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு உண்மையில் இல்லை.

இந்நிலையில், இந்தியக் குழந்தை இளமையில் ஒரே சமயம் இரண்டு எழுத்துருக்கள் முன்னால் நிறுத்தப்படுகிறது. இரண்டு மடங்கு உழைப்பு அதற்குக் கட்டாயமாக்கப்படுகிறது. க என்றாலும் ka என்றாலும் ஒரே உச்சரிப்புதான் என அது உணர்ந்து தெளிய நேரமாகிறது. மேலும், எழுத்துகளைக் கற்றுக்கொண்டால் மட்டும் போதாது. இது கல்வி அல்ல, பயிற்சி. தொடர்ந்து நிகழும் பயிற்சியே நம்மிடம் நீடிக்கும். நம் குழந்தைகள் ஆங்கிலத்திலேயே எழுதுகின்றன, வாசிக்கின்றன. ஆகவே, இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொண்ட தமிழ் அவர்கள் கைகளுக்கும் கருத்துக்கும் பழக்கமற்றதாக ஆகிவிடுகிறது.

இந்தச் சிக்கலைத் தாண்டுவதற்கான வழிமுறைகளைத்தான் நாம் யோசிக்க வேண்டும். இன்று நானறிந்து தமிழகத்தில் இணையம், ஃபேஸ்புக் போன்றவற்றுக்காகக் கணினியில் தட்டச்சு செய்பவர்கள் அனைவருமே ஆங்கில எழுத்துகளிலேயே தட்டச்சு செய்துகொண்டிருக்கிறார்கள்: அம்மா இங்கே வா வா என்றால், “ammaa ingkee vaa vaa” என்று. ஒரு வாரத்தில் அவர்கள் ஆங்கில எழுத்துகளில் தமிழை எழுதும் பயிற்சியை அடைந்துவிடுகிறார்கள்.

நான் பதின்மூன்றாண்டு காலமாக ஆங்கில எழுத்துகளிலேயே தமிழைத் தட்டச்சுசெய்கிறேன். பேசும் வேகத்தில் எழுத முடியும் என்னால். கண்ணெதிரே தமிழ் தெரிகிறது, என் கைகளில் ஆங்கில எழுத்துருக்கள் ஓடுகின்றன. எந்தச் சிரமமும் இல்லை. ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்ட தமிழை நான் சரளமாக வாசிக்கவும் செய்வேன். ஏன் தமிழை இவ்வாறு ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதக் கூடாது?

பள்ளிகளில் இதைக் கற்பித்தால், குழந்தைகளுக்கு ஒரே ஒரு எழுத்துருவைக் கற்பித்தால் போதும். அவர்கள் தமிழை இன்னும் வேகமாக, இன்னும் சகஜமாக வாசிக்க அது உதவும் அல்லவா? நாம் தமிழைப் பேசிக்கொண்டிருக்கும்வரை தமிழ் நம்முடன் இருக்கும். அதை அனைவரும் சரளமாக வாசிப்பதற்கான வழியை மட்டுமே யோசிக்கிறேன். உடனடியாகக் கேள்விப் படும்போது சற்று அபத்தமான, அதீதமான எண்ணமாக இது தோன்றக்கூடும். ஆனால், எல்லா மாற்றங்களும் முதலில் அப்படித்தான் தோன்றும். அவற்றுக்கு மரபு அளிக்கும் கடுமையான எதிர்ப்பும் முக்கியமானது. அந்த எதிர்ப்பையும் கருத்தில்கொண்டு வெற்றி பெற்று நிகழக்கூடிய மாற்றமே ஆக்க பூர்வமாக இருக்கும். ஆகவே, நாம் இதை விவாதிக்க வேண்டுமென நினைக்கிறேன்.

உடனடியாகச் செய்யக்கூடியதல்ல இது. ஆரம்பப் பள்ளி முதலே ஆங்கில எழுத்துகளில் தமிழைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் அதிகபட்சம் ஒரு வருடத்தில் இதைக் கற்றுக் கொள்ளும். அதற்கேற்ப தொடர்ச்சியாகத் தமிழின் நூல்களை எல்லாம் அந்த எழுத்துருவுக்கு மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இரண்டு எழுத்துருக்களுமே ஒருதலைமுறைக் காலம் புழக்கத்தில் இருக்கலாம். மேலும், இன்றைய தொழில் நுட்பத்தில் எந்த ஓர் எழுத்தையும் ஓர் எழுத்துருவிலிருந்து இன்னொன்றுக்கு எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.

மலாய் போன்ற பல மொழிகள் இன்று ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதப்படு கின்றன. அந்த மக்கள் ஆங்கிலம் கற்பது எளிதாகிறது. மலாய் மொழி வாழவும் செய்கிறது. அதன் எழுத்துருக்களைத் தனியாக எவரும் பயில வேண்டியதில்லை. கொஞ்சம் பேசத் தெரிந்தவர்கள் அதை வாசித்துவிடலாம். ஆங்கில எழுத்துருக்கள் மலாய் மொழியை வளப்படுத்தவே செய்கின்றன. இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் ஆங்கில எழுத்துருக்களில் எழுதப்பட்டால் பெரும்பாலான மொழிகளை மிகச் சில நாட்களிலேயே வாசித்துப் புரிந்துகொள்ள முடியும். தென்னக மொழிகளைப் பிரிப்பது அவற்றின் வேறுபட்ட எழுத்துருக்கள்தான். மற்றபடி அவை 70% ஒன்றே.

எழுத்துருக்கள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்ல. தமிழ் ஆரம்ப காலத்தில் பிராமி எழுத்துருவில்தான் எழுதப்பட்டன. அந்த எழுத்துகளில் இருந்து வட்டெழுத்து உருவாகிவந்தது. அந்த எழுத்துரு கைவிடப்பட்டு, இன்றைய எழுத்துரு வந்திருக்கிறது. அச்சு வடிவுக்கு வந்த பின் இந்த எழுத்துருவில் ஏராளமான மாறுதல்கள் வந்துள்ளன. பயிற்சி பெற்ற ஒருவரே நூறாண்டுகளுக்கு முந்தைய சுவடிகளை வாசிக்க முடியும். வருங்காலத்துக்காக நம் எழுத்துருக்களை மாற்றிக்கொண்டால் அதில் பிழையில்லை என்றே படுகிறது. அது காதில் தமிழ் கேட்கும் சூழல்கொண்ட, தமிழைப் புரிந்துகொள்ளக்கூடிய எவரும் தமிழில் வாசிக்கும் சூழலை உருவாக்கும். தமிழ் வருங்காலத்திலும் வாசிக்கப்படும். இல்லை யேல், தமிழ் ஒருவகைப் பேச்சு வழக்காக மட்டுமே நீடிக்கும். அதில் இலக்கியமும் அறிவுத் துறைகளும் நிகழாமல் போகும். சம்ஸ்கிருதம்போலப் பாதுகாக்கப்படும் தொல்பொருளாகவோ பல்வேறு பழங்குடி மொழிவழக்குகள்போல நடைமுறை உரை யாடலுக்கான ஒன்றாகவோ மட்டுமே தமிழ் நீடிக்கும்.

– ஜெயமோகன், எழுத்தாளர், தொடர்புக்கு: jeyamohan.novelist@gmail.com

source::::The Hindu….Tamil

natarajan

Every Stone Has a Story To Tell Here …..

The carving show Hanuman in front, since he was the only monkey that spoke in favour of Vibheeshana. Photo: Aravind Venkatraman

The carving show Hanuman in front, since he was the only monkey that spoke in favour of Vibheeshana. Photo: Aravind Venkatraman

The horse structure is composed of several women and the entire image is just about 50 cm. Photo: Aravind Venkatraman

The horse structure is composed of several women and the entire image is just about 50 cm. Photo: Aravind Venkatraman

The elephant structure is composed of several women and the entire image is just about 50 cm. Photo: Aravind Venkatraman

The elephant structure is composed of several women and the entire image is just about 50 cm. Photo: Aravind Venkatraman

 

Story By Pradeep Chakravarthy  in The Hindu ….

The Nambi Rayar Perumal temple, in Tirukkurungudi, offers a visual treat.

A place that can delight passionate supporters of art and sculptures is tucked away deep in southern Tamil Nadu not very far off from Kerala, 47 km from Palayankottai (Sri Vallabha Chaturvedimangalam in the old days). This massive 18-acre temple for Nambi Rayar Perumal, in Tirukurungudi, has held its secrets well. Even the senior scholars, relentless in their fieldwork and reach have forgotten to write a monograph. The Chitra gopuram and the main gopuram have more than 3,500 sq.ft of wooden and stone sculptures yet to be catalogued. The inscriptions are yet to be comprehensively recorded. The Chitra gopuram has outstanding stone and wooden sculptures.

To the right of the threshold one can see a series of sculptures such as a scene of traders from Arabia, with their ship, camels and other wares. The Pandya kingdom rested heavily on trade. It was therefore close to both its neighbours Kerala and Sri Lanka. Horses, spices, precious gems and metals were the key products. The area around the Tamirabarani and its tributaries formed the heart of the Pandya Kingdom. Although the capital was Madurai, food for the kingdom came from here – technically the Tamirabarani is not a perennial river but the Western Ghats ensured ample rain and therefore ample harvests. So, the most massive and prosperous temples of the kingdom were on the river banks rather than in far away Madurai.

Unique designs

The Chitra gopuram has several unique sculptures. Most are of scenes from the epics, the Bhagavatam being the most popular depiction. Others are from local legends and surprisingly for a Vishnu temple, many are of Saivite themes. The village has had a long history of accord between these two sub-sects of Hinduism. The sculptures reveal an extraordinarily imaginative sculptor who used space and lines to signify scale and movement. Much like the Chola frescoes in the Brihadeeswara temple, some sculptures tell a story and give definite clues to how the frame frozen in time will end, others are tantalisingly left to the viewers’ imagination.

In the various levels of the Chitra gopuram there are more than 3,000 sq ft of carved wood. Amongst them is this unique small bass relief of two men hunting a boar with a spear. Who will win? The answer is a mystery. In one image, just a foot across, the sculptor has left a riddle that can stimulate the viewers’ curiosity and interpret the image at multiple levels.

The pillars in the mandapam in front of the chitra gopuram have large images of Arjuna and others, a very common Nayaka theme. Behind these are pillars with nagabandhas – where the pillar is composed of square and octagonal blocks.

The four corners at the junction have stylised cobra heads. In one of them, the cobra is substituted with a hunched up monkey. The sculptor has conformed to the process but has not let it limit his creativity! Indeed, monkeys peer at you in this temple from all places – perhaps a reminder that our mind should not wander like a monkey’s but be focused on the divine when in the temple.

Bhima unable to lift the tail of Hanuman is a well-known story in the Mahabharata. Images, however, are rare if not non-existent. The chitra gopuram has one where the sculptor has deliberately worked on the sizes to underscore Hanuman’s frailness and Bhima’s strength. What’s more, are clouds behind Bhima, reminding us that despite him taking his tallest form to reach the skies, he was still unable to lift the tail of Hanuman.’

Famous themes

Composing forms out of other forms is a favourite theme for expert sculptors. Such sculptures are rare since it involved both imagination and flawless execution. This temple has several of them, and what is remarkable in these are the sizes, both the horse and elephant are composed of several ladies and the entire image is just one and a half feet! This is even more remarkable when we are reminded that the stone used is granite – one of the hardest stones!

Vibheeshana seeking refuge before Rama leaves for Lanka is a masterful part of the epic when Valmiki teaches us the various forms of persuasion.

Vibheeshana says, “Few volunteer to give honest and frank feedback and very few listen to it,” – relevant to our times!

The sculptor has significantly shown Hanuman in front, since he was the only monkey who spoke in favour of Vibheeshana.

The sculptor has also used a monkey to our left to frame the image and worked the stone to create waves in the front.

The temple has several other rare images, those of Garuda holding the tortoise and elephant in the hand and a tree with the sages meditating upside down, a man playing marbles and Sanishwara.

It’s a shame that the Nambi temple at Tirukurungudi is a shrine that Tamil Nadu has forgotten – by both scholars and amateurs interested in sculptural art.

On the Shukla Paksha Ekadasi of Karthigai (November 24) the temple witnesses a dance drama done nowhere else, that may be a good excuse for a trip that will please children and adults alike, provided they spend a little time looking at the temple walls.

Keywords: The Nambi Rayar Perumal templeTirukkurungudistone templeChitra Gopurammythology sculptures

source:::::THE HINDU …History &Culture setion… Dec 13 2012.

natarajan

மாற்றத்தின் வித்தகர் …ஆசிரியர் ஜோதிமணி !!!

சின்ன வயதில் எல்லோருக்குமே நாம் என்னவாக வேண்டும் என்று ஒரு கனவு இருக்கும். நிச்சயமாக யாரும் ஊழல் செய்ய வேண்டும் என்றோ, செயல்படாமல் நாற்காலியைத் தேய்க்க வேண்டும் என்றோ கனவு காண்பதில்லை. எதையோ சாதிக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் கனவு காண்கிறோம். அந்தக் கனவை எவ்வளவு நாளுக்கு உயிரோடு வைத்திருக்கிறோம்? அந்தக் கனவுக்காக நாம் எவ்வளவு அர்ப்பணிப்பைக் கொடுக்கிறோம்? எந்தக் காலகட்டத்தில் அந்தக் கனவைப் பலிகொடுக்கிறோம்?

அறந்தாங்கி பக்கத்திலுள்ள சின்னக் கிராமமான அழியாநிலையைச் சேர்ந்த ஜோதிமணிக்கு வாத்தியார் கனவை ஊட்டிவிட்டது அவருடைய படிக்காத அம்மா காந்திமதி. ஆறாம் வகுப்பில் அவருக்கு ஆசிரியராக இருந்த வில்லியம் ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். தன்னுடைய கனவுத் தீயை அணையாமல் அடைகாத்து வளர்த்த ஜோதிமணி 19-வது வயதிலேயே அரசுப் பள்ளி ஆசிரியரானார். ஒரு கிராமத்து அரசுப் பள்ளி ஆசிரியராக உலகளந்தான்வயல், குறுந்திறக்கோட்டை, கூத்தாடிவயல், பெருங்காடு என்று அறந்தாங்கியைச் சுற்றியுள்ள கிராமங்களில் சின்னச் சின்ன மாற்றங்களாக முன்னெடுத்தவர் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆனார்.

இந்த ஒன்பது ஆண்டுகளில், ஓர் அரசுப் பள்ளிக்கான மிகச் சிறந்த முன்னுதாரணமாக மாங்குடிப் பள்ளியை மாற்றியிருக்கிறார் ஜோதிமணி. பசுமையான தோட்டங்கள் நிறைந்த பள்ளி வளாகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் தொடங்கி தொலைக்காட்சிப் பெட்டி வரையில் சகல வசதிகளையும் உள்ளடக்கிய வகுப்பறைகள், விரிவான நூலகம், சுத்தமான கழிப்பறைகள், படிப்போடு கூடவே ஒவ்வொரு மாணவருக்கும் கைத்தொழில் பயிற்சி, எல்லா மாணவர்களுக்கும் மின்னஞ்சல் முகவரிகள் என்று மாங்குடிப் பள்ளியை இன்றைக்குப் புதிதாகப் பார்க்கும் எவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துபோவார்கள். மாங்குடியின் வரலாறு தெரிந்தவர்களுக்கோ இது ஆச்சர்யம் அல்ல; அதிசயம்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் ஏழ்மையான குக்கிராமங்களில் ஒன்று மாங்குடி. ஆகப் பெரும்பான்மையினர் கூலித் தொழிலாளிகள். ஊரில் எந்த வசதியும் கிடையாது. ஏழு கி.மீ. தொலைவில் உள்ள நகரமான அறந்தாங்கிக்குத்தான் சகலத்துக்கும் செல்ல வேண்டும். ஊருக்கு பேருந்து போக்குவரத்துகூடக் கிடையாது. சுதந்திரத்தாலும் மக்களாட்சியாலும் மாங்குடி மக்கள் பெற்ற ஒரே பயன் அந்தப் பள்ளிக்கூடம். அதுவும் அரசுப் பள்ளிகளுக்கே உரிய சகல அழுக்கு அடையாளங்களோடுதான் இருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் ஜோதிமணி அங்கு வந்தார். கொஞ்சம்கொஞ்சமாக மாற்றினார் எல்லாவற்றையும். எப்படி?

“எனக்குப் படிப்பிச்சது, என்னை வளர்த்தது எல்லாமே அரசுப் பள்ளிக்கூடங்கள்தான். ஒரு மாணவனா நான் படிச்ச பள்ளிக்கூடங்களைப் பார்த்து எவ்வளவோ வேதனைப்பட்டிருக்கேன். அப்பவெல்லாம் எங்கம்மா சொல்வாங்க ‘தம்பி, இன்னைக்கு நீ படிக்கிறப்போ எதெல்லாம் பள்ளிக்கூடத்துல, உனக்குச் சங்கடமா இருக்கோ, அதையெல்லாம் நீ நாளைக்கு வாத்தியாராப் போய் மாத்தணும்பா’ன்னு. அதையே வைராக்கியமா வைச்சுக்கிட்டுதான் படிச்சேன்.

ஆசிரியர் பணிக்கு வேலைக்குச் சேர்ந்தப்போ, அங்கே உள்ள யதார்த்தச் சூழல் புரிஞ்சுது. ஆரம்பத்துல துடிப்புல செஞ்ச எவ்வளவோ காரியங்கள் பகையையும் வசவையும்தான் வாங்கித்தந்துச்சு. எது ஒண்ணையும் நான் அவமானமா நெனைக்கலை. எல்லோர்கூடவும் கைகோத்துக்கிட்டேன். எந்த ஒரு மாற்றத்தையும் உடனேயோ, வெறும் உத்தரவுகளாலேயோ கொண்டுவந்துட முடியாதுங்கிறதைப் புரிஞ்சுக்கிட்டேன். சின்னச்சின்ன விஷயங்கள்தான் நான் கொண்டுவந்த எல்லா மாற்றங்களுக்கும் அடிப்படை.

முதல்முதல்ல பள்ளிக்கூடத்துல நான் செஞ்ச பொதுக்காரியம் என்ன தெரியுமா? பைப் இல்லாம ஒழுகிக்கிட்டு இருந்த குழாய்க்கு பைப் வாங்கி மாட்டினது. நம்மள்ல பலருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும். வீட்டுக்கு எதிர்ல, பாதையில, அலுவலகத்துல எங்கேயாவது ஒரு குழாய் பைப் இல்லாம தண்ணியைக் கொட்டிக்கிட்டு இருக்கிறதைப் பார்த்துக்கிட்டே கடந்திருப்போம். யாரும் கவலை இல்லாம கடக்கிறது இல்லை. அது நம்ம பொறுப்பு இல்லைனு நெனைக்கிறோம். ஒரு விவசாயக் குடும்பத்துல வந்த என்னால இப்படித் தண்ணி தாரைத்தாரையா போறதைச் சகிச்சுக்க முடியலை. பைப்பை வாங்கி மாட்டினேன். வெறும் அஞ்சு ரூபா சமாச்சாரம். எவ்வளவு தண்ணீர் மிச்சம்?

இப்படித்தான் ஒவ்வொரு விஷயமும். மாங்குடிக்கு வந்தப்போ, இங்கே உள்ள குழந்தைங்க அவ்வளவு மோசமான சீருடையில வந்தாங்க. அப்போ வருஷத்துக்கு ஒரு சீருடைதான் அரசாங்கம் தரும். பெற்றோரைக் கூப்பிட்டோம். அவங்க ஏழ்மையைக் காரணமாச் சொன்னாங்க. என்ன வழி? ‘இனி தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ பிள்ளைங்களுக்குப் புது துணி எடுக்கும்போது சீருடையாவே எடுத்துடுங்களேன்’னு கேட்டுக்கிட்டோம். குழந்தைங்க உடுப்பு மாறுனுச்சு. தினமும் குளிப்பாட்டி அனுப்பச் சொன்னோம். தலை வாராமல் வர்றதை மட்டும் மாத்த முடியலை. பள்ளிக்கூடத்துலேயே சீப்பு – கண்ணாடி வாங்கி வெச்சோம். நன்கொடையாளிகளைத் தேடிப்பிடிச்சோம். ஒவ்வொரு பைசாவுக்கும் வரவுசெலவு நேர்மையா பராமரிச்சதால உதவி செஞ்சவங்களே திரும்பத்திரும்பத் தேடிவந்து செஞ்சாங்க. பள்ளியோட அடிப்படைக் கட்டுமான வசதி உயர்ந்துச்சு.

சரி, பள்ளிக்கூடத்தோட அன்றாடச் செயல்பாட்டை உயர்த்துறது எப்படி? குழந்தைங்ககிட்ட கூட்டுமுயற்சியைக் கொண்டுவந்தோம். இங்கே நடக்குற ஒவ்வொரு செயல்பாடுக்கும் ஒரு குழு உண்டு. பள்ளி சுகாதாரக் குழு, தோட்டக் குழு, நூலகக் குழு, கணினிப் பராமரிப்புக் குழு… இப்படி. பள்ளிக்கூடத்துல உள்ள ஒவ்வொரு குழந்தையும் ஏதாவது ஒரு குழுவுல இருப்பாங்க. ஒவ்வொரு வகுப்பறைலேயும் ஒரு தபால் பெட்டி உண்டு. பள்ளிக்கூடத்துக்கு உள்ளே யாருக்கு யார் வேணும்னாலும் தபால் எழுதிப்போடாலாம். அந்தந்த வகுப்புக்குத் தபால்காரரா இருக்குற மாணவர் மற்ற வகுப்புத் தபால்கார மாணவர்கிட்டே கொடுத்து சம்பந்தப்பட்டவங்ககிட்டே சேர்த்துடுவார். இதோ பாருங்க, இன்னைக்கு வந்துருக்குற தபால்” என்று ஒரு அட்டையை நீட்டுகிறார்.

‘ஐயா, எங்கள் வகுப்பில் குழல் விளக்கு வேலை செய்யவில்லை. மழை பெய்யும்போது வெளிச்சம் இல்லாததால் படிக்கக் கஷ்டமாக இருக்கிறது. சரிசெய்ய வேண்டும்’ என்று எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் எழுதிய கடிதம் அது. “பிள்ளைகளிடம் எழுதும் பழக்கத்தை உருவாக்கிவிட்டால் போதும்; எதிர்காலத்தில் எதையும் எழுதிச் சமாளித்துவிடுவார்கள் அவர்கள்” என்கிறார்.

பள்ளிக்கூடத்தில் படித்து முடிக்கும்போது தையல் பயிற்சியோ, புத்தக பைண்டிங் பயிற்சியோ சொல்லிக்கொடுத்துவிடுகிறார்கள். “கைத்தொழில் ஒன்று கையில் இருக்க வேண்டும் அல்லவா?” என்கிறார்.

சரி, அரசுப் பள்ளிகளில் ஒரு தலைமையாசிரியர் நினைத்தால் மட்டும் மாற்றம் சாத்தியம் இல்லையே; ஏனைய ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் முக்கியமாயிற்றே; எப்படி அரவணைக்கிறார் ஜோதிமணி? “காந்தி காட்டிய வழி” என்கிறார்.

“பள்ளிக்கூடத்தில் கழிப்பறையே இல்லாத காலம் ஒண்ணு இருந்துச்சு. கழிப்பறை கட்டிய பின் அது சுத்தமாக இல்லை. நம்ம பிள்ளைங்க அசிங்கம் பண்ணிட்டா வீட்டை விட்டுடுவோமா? முதலில் நானே துடைப்பத்தை எடுத்துக்கிட்டு இறங்கினேன். பின்னாடியே ஆசிரியர்களும் மாணவர்களும் இறங்கினாங்க. அர்ப்பணிப்போட நேர்மையாகவும் நேர்மறையாகவும் அணுகுனா, உடனிருக்குற ஆசிரியர்களா இருந்தாலும் சரி; அதிகாரிகளா இருந்தாலும் சரி… நிச்சயம் கைகோத்து நிப்பாங்க. ‘சத்திய சோதனை’ சொல்லிக்கொடுத்த வழி இது.”

ஜோதிமணியைப் போலவே, அவர் மனைவி சாவித்ரியும் ஆசிரியர். பக்கத்திலுள்ள ரத்தினக்கோட்டையில் மாற்றங்களுக்கான செங்கற்களை அவர் அடுக்கிறார். குழந்தைகள் வெவ்வேறு அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள்.

“அரசுப் பள்ளிக்கூடங்கள் தலைநிமிரணும்னா ஆசிரியர்கள் முதலில் அதைக் கௌரவமாப் பார்க்கணும்; தான் கௌரவமா நடந்துக்கணும்…”

தன் வார்த்தைகளில் நிற்கிறார் ஜோதிமணி!

சமஸ் – தொடர்புக்கு: writersamas@gmail.com

 source:::::The Hindu….Tamil
  natarajan

படித்ததில் பிடித்தது …பணம் மட்டும் செல்வம் இல்லை !!!

மனதைத் தொட்ட வரிகள்!

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.
உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.
உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.
ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

சுயநலம் என்பது சிறு உலகம்.அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான.
வெற்றியின் ரகசியம் -எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.

நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை

நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

பறக்க விரும்புபவனால் படர முடியாது.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது.
ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவ தவறவிடுகிறோம்.

source:::::unknown… input from a friend of mine

natarajan