தில்லி உத்தரசுவாமி மலை கோயில் உருவான பின்னணி …

தில்லி உத்தர சுவாமிமலை

இந்தியா சுதந்தரம் அடையும் தருணத்துக்கு முந்தைய டெல்லி. டெல்லியில் குடிபுகுந்திருந்த தமிழர்கள்,ரமணமகரிஷி அளித்திருந்த சுவாமிநாத சுவாமியின் ஒரு சிறு மரச்சிலையை வைத்து பூஜித்து வந்தார்கள்.1944-ஆம் ஆண்டு முதல் கந்த ஷஷ்டி விழாவைப் பெரிய அளவில் சிறப்பாகவும் நட்த்தினார்கள்.இருப்பினும் தென்னிந்தியக் கலையுடன் கூடிய முருகன் கோயில் ஒன்றில்லையே என்ற ஏக்கம் மட்டும் அவர்களுக்குப் பெரிய மனக்குறையாகவே இருந்தது.

எல்லாவற்றுக்கும் ஒரு தருணம் வரவேண்டும் அல்லவா! பிற்காலத்தில் ஒரு குட்டித்தமிழ் நாடாக விளங்கிய ராமகிருஷ்ணாபுரம் அச்சமயம் பெருங்காடாக விளங்கியது. அதன் நடுவே ஒரு சிறு குன்றும் காணப்பட்டது. குன்று தோறாடும் குமரனுக்கு இது ஏற்ற இடமாக இருக்குமே என்று பக்தர்கள் எண்ணினர்.

கனவில் வந்த கந்தன்
1961-ஆம் வருடம். டெல்லி சரோஜினி நகரிலிருந்த விநாயகர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.அந்த கும்பாபிஷேக தினத்தன்று பக்தர் ஒருவருக்குக் கனவு ஒன்று வந்தது. அந்தக் கனவில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர்,கனவு காணும் நபரின் கையைப் பிடித்துக் கொண்டு அவரை அவரின் இருப்பிடத்துக்குக் கொண்டு விடுமாறு கேட்டுக் கொள்கிறார். இவரும் அழைத்துச் செல்கிறார். ஒரு கட்டத்தில் இதுதான் தன் இருப்பிடம் என்று சற்றுத் தொலைவில் தெரியும் குன்றைக் காட்டி நன்றி கூறிவிட்டு, விறுவிறுவென நடந்து மாயமாய் மறைந்து விடுகிறார். அந்த பக்தர் கனவில் கண்ட இடம்,பக்தர்கள் இங்கு குமரனுக்குக் கோயில் கட்டலாமே என்று தீர்மானித்த குன்று இருக்கும் இடம்!

இதன்பின் டெல்லியில் தனி முருகன் கோயில் கட்டுவதற்கான விண்ணப்பத்தை காஞ்சி மகா பெரியவர் முன் வைத்தனர். அவரும் தன் பரிபூரண ஆசிகளை அருளினார். அடுத்து, அரசாங்கத்தின் அனுமதியைப் பெறவேண்டும். எனவே, அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டனர் பக்தர்கள்.இதற்கு முன் சூரஜ்மல் எனும் அரசன் இந்தக் குன்றின்மீது ஓய்வு விடுதி அமைக்க எண்ணியபோது அவன் தந்தையின் கனவில் முன்பொரு சமயம் அந்த இடத்தில் சிவன் கோயில் ஒன்று இருந்ததாகத் தெரிந்ததால், மகனை ஓய்வு விடுதி கட்டாமல் தடுத்து விட்டார் என்றொரு செய்திக் குறிப்பு அந்தக் குன்று இருக்கும் இடத்தைப் பற்றி இருந்தது. இதனால் அரசாங்கத்தின் ஒப்புதலை வாங்குவது எளிதாக இருந்தது. இந்நிகழ்வு பற்றி திருப்பனந்தாள் மடத்தலைவர் முத்துக்குமாரசுவாமி தம்பிரான், “ஆளுபவர்கள் யாராக இருந்தாலும்,தன்னுடைய இடத்தை மாற்ற முடியாதபடியாகவே முருகப்பெருமான் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தான் என்றில்லாமல் வேறென்னவென்று குறிப்பிடமுடியும்?” என்று குறிப்பிட்டார்.

காஞ்சி மாமுனிவரின் அருளாசி
1961-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் பக்தர்கள் ஒன்று சேர்ந்து ஸ்ரீ சுவாமிநாத சுவாமி சமாஜம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து கோயில் கட்டும் நிலத்தை அரசாங்க அனுமதியுடன் விலைக்கு வாங்கினார்கள். கோயில் கட்டுமானப் பணி தொடங்கியபோது, வாலாஜாபாத் அருகிலிருந்த பட்டுமலைக் குப்பத்திலிருந்து கல் எடுக்கப்பட்டு வந்து மகாபலிபுரத்தில் விக்கிரகங்கள் வடிக்கப்பட்டன. இச்சமயம் “உத்தர சுவாமிநாதனின் மூலவிக்கிரகத்துக்கான கல்லை, சுமார் அறுபதாண்டுகளுக்கு முன்பு செந்திலாண்டவன் சிலை வடிப்பதற்காக, தாமிரவருணி நதிப் படுகையிலிருந்து குறுக்குத்துறை எனுமிடத்தில் எடுக்கப்பட்ட கல்லின் எஞ்சிய பாகம் புதையுண்டு உள்ளது. அதனை எடுத்துப் பயன்படுத்துங்கள்.” என மகா பெரியவா ஆசியருளினார். அன்பர்களும் மகிழ்ச்சியுற்றார்கள்.

பெரியவா குறிப்பிட்ட அந்த குறுக்குத்துறை அகலத்திலும் நீளத்திலும் ஒரு மைலுக்கும் மேலாகப் பரந்து கிடந்தது. இந்த அறுபதாண்டு காலத்தில் அந்த இடத்தின் பல பகுதிகள் மணல்மேடுகளாக மாறியிருந்தன.அவ்வளவு பெரிய இடத்தையும் தோண்டிப் பார்த்து குறிப்பிட்ட கல்லைக் கண்டுபிடிப்பது என்பது சாதாரண விஷயமல்லவே! நெல்லையப்பர் கோயில் சிவாச்சாரியார்,”ஒரு வேளை தெற்கு ரத வீதியிலிருக்கும் 85 வயது முதியவரான சுந்தர தீக்ஷிதர் இந்தக் காரியத்துக்கு உதவலாம். அவர், செந்திலாண்டவன் சிலைக்காகக் கல் எடுத்த காலத்தில், அத்தலத்தில் தொண்டு புரிந்தவர்” என்று வழி காட்டினார்.

சுந்தர தீக்ஷிதரைச் சந்தித்து விவரம் கூற, “பாதி வேலையை முடித்திருந்தேன். எஞ்சிய வேலையை முடிப்பதற்காகத்தானோ என்னவோ, என்னை இறைவன் இன்னும் உயிரோடு வைத்திருக்கிறான்” என்று கூறி நெகிழ்ந்தவர், சரியான இடத்தையும் காட்டிக் கொடுத்தார். முப்பது தொழிலாளிகள் நாள் முழுதும் மணலைத் தோண்டியபின், 10 அடி ஆழத்தில் மகா பெரியவா குறிப்பிட்ட முக்கோண வடிவக் கல் கிடைத்தது. ஜூன் 2, 1965-ஆம் ஆண்டு, குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் நதிப்படுகையிலிருந்து கல் எடுத்து, மகாபலிபுரத்துக்கு அனுப்பினர். பரமாச்சார்யரின் உருவில் வந்து அனுக்கிரகித்த கந்தனின் கருணையே கருணை!

கல் கிடைத்து விட்டது. விக்கிரகம் தயாராகிவிட்டதா என்றால், அங்கும் உடனே தயாராகவில்லை.ஆண் விக்கிரகம் வடிப்பதற்கான சரியான ஒலி கல்லில் இருந்து கேட்காததால், பணியில் ஈடுபட்டிருந்த கணபதி ஸ்தபதி செய்வதறியாது திகைத்தார். எனவே மகா பெரியவாளைச் சந்திக்கச் சென்றார். பக்தர்கள் வரிசையில் மகா பெரியவாளைச் சந்திக்க நின்றபோது பெரியவரே அவரை அழைத்து, சிலையைச் செதுக்க ஆரம்பி! போகப் போகத் தானே சரியாகி விடும்’ என்றார். அவர் கூறியவாறே நடந்தது. மூலவர் சிலை உருவானதும், அச்சிலையை மகா பெரியவாளின் பார்வைக்கு அனுப்பினார்கள்.

இறைவனின் சோதனை
நொடியில் சிலையை ஆராய்ந்த பெரியவர், தக்ஷிண சுவாமிநாதனிடமிருந்து சற்று வேறுபடுத்திக் காட்டத்தானோ, இவரது கழுத்தில் ருத்ராக்ஷ மாலையும் கல்லிலேயே செதுக்கிவிட்டாய்? என்று கேட்க, கணபதி ஸ்தபதி ஆச்சரியத்தில் பிரமித்து நின்றார்.தெற்கிலுள்ள சுவாமிநாதனுக்குத் தனியாக வெள்ளி மாலயில் கோர்த்த ருத்ராக்ஷத்தை அணிவிப்பதுதான் வழக்கம். இந்த நுணுக்கத்தை உன்னிப்பாகக் கவனித்துத் தான் பெரியவா அப்படிக் கேட்டார். பெரியவாளின் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது. இதன் பின் விக்கிரகத்தை ஒரு இரவும் பகலும் தன் அருகிலேயே வைத்து, தடவிப் பார்த்து மகிழ்ந்தார். சிலைக்கு, தன் கையாலேயே விபூதி அபிஷேகமும் செய்து மகிழ்ந்தார்.கும்பாபிஷேகத்தின்போது கூடியிருந்த பக்தர்களிடம் கணபதி ஸ்தபதி மேற்படி விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மூல விக்கிரகம் தயாரானதோடு இறைவனின் சோதனை நின்று விடவில்லை கோயிலுக்கான மற்ற விக்கிரகங்களும் உருவாகிவிட்ட நிலையில், கோயில் கட்டும் அடிக்கல் நாட்டு விழாவை 8. 9. 1965 அன்று காலை 6.30 மணி முதல் 8.30 மணிக்குள் நல்ல நேரம் என்று குறித்திருந்தார் மஹா பெரியவா.நாள் குறிப்பிட்டாகிவிட்டது. ஆனால் அதற்கு முந்தைய இரவில் வந்த வானொலி அறிவிப்பு அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.பாகிஸ்தான் விமானப்படை இந்தியா மீது போர் தொடுக்க ஆயத்தமாகியுள்ளது என்பதுதான் அந்தச் செய்தி. எனவே பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, விழாவில் பங்கேற்பதற்கில்லை என விடியற்காலை 3 மணிக்குத் தெரிவித்து விட்டார். ஆனால் காலை 4.30-க்கு தில்லியிலுள்ள ஷாதரா எனுமிடத்தில் தென்பட்ட பாகிஸ்தானிய விமானத்தை இந்திய விமானப்படை வெற்றிகரமாக வீழ்த்திவிட்டது என்று வெளியான வானொலிச் செய்தியைத் தொடர்ந்து ஒலித்த சங்கு, அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக உறுதிப்படுத்தியது. எனவே ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த முகூர்த்த நேரத்துக்குள் தமிழக முதலமைச்சர் எம். பக்தவத்சலம், அருட்கவி சாதுராம் சுவாமிகள் இருவராலும் அடிக்கல் நாட்டுவிழா வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

சிவனும் அவனே, சிவகுமரனும் அவனே!
அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்குச் சில நிமிடங்கள் முன்பு, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அனுப்பியிருந்த செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம். ’ஸ்வாமிநாத தேவசேனாபதியான முருகப்பெருமான், முப்படைக்கும் தலைமை ஏற்று, பாகிஸ்தானுடனான போர் துவங்கியதுமே அதை முடித்து விட்டார் அடிக்கல் நாட்டு விழாவின் வெற்றிக்கான எனது ஆசிகள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

கந்தனை வணங்கும் கதிரவன்
மூலவர் விக்கிரகம் வைக்கப்படும் பீடத்தினுள் ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 25 பொருட்களுடன் யந்த்ரம் ஒன்றும் வைப்பது வழக்கம். ‘சுப்ரமண்ய சர்வ வசீகரண யந்த்ரம்’ உத்தர சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் வைக்கப்பட்டது. இந்த யந்த்ர விஷயத்திலும் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு உண்டு. பரமாச்சார்யாளின் ஆக்ஞைப்படி தருமபுரம் ஆகம பாடசாலையின் தலைவரான சிவஸ்ரீ சுவாமிநாத சிவாச்சார்யார் வெள்ளித்தகட்டில் யந்த்ரத்தை அமைத்து வைத்திருந்தார். இதற்கு முன்பாக கணபதி ஸ்தபதியும் காகிதத்தில் யந்த்ரத்தின் அமைப்பை வரைந்து மகா பெரியவாளிடம் ஆசி வாங்கியிருந்தார். இரண்டில் எதை வைப்பது என்ற குழப்பம்! கூர்மையாக ஆராய்ந்து பார்த்தபோது –ஒன்று சிவத்தொடர்புடையதாகவும் மற்றொன்று கந்தப்பெருமானின் ஷண்முக யந்த்ரமாகவும் இருந்தது. பின்னர் இரவோடிரவாக வெள்ளித்தகட்டின் பின்புறம் இந்த ஷண்முக யந்திரத்தையும் பொறித்து இரண்டுமே பீடத்தினுள் வைக்கப்பட்டன. இவ்வாறாக சிவனும், சிவகுமாரனுமாக, ஒரு வடிவாகி சிவ்ஸ்கந்தமூர்த்தியாக டெல்லியில் அருள்பாலிக்கிறார்கள்.

இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்வும் உண்டு.வருடத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் சூரியனின் கிரணங்கள் மூலவர்மீது விழும் வண்ணமாக ஆலய விமானத்தில் இடைவெளி விட்டுக் கட்டுவார்கள். அக்காலங்களில் சூரிய பூஜை நடத்துவார்கள். இதற்கென டெல்லி வானிலை ஆராய்ச்சி மையத்தை அணுகியபோது, இதற்கு ஒரு வருடம் தொடர்ந்து கவனிக்க வேண்டியிருக்குமே எனக் கூறிவிட்டனர். கும்பாபிஷேகத்துக்கான நாள் நெருங்கிவிட்டிருந்ததால், இடைவெளி வைக்காமலே விமானமும் கட்டி முடிக்கப்பட்டது. 7. 6. 1973 அன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தேறியது.

கும்பாபிஷேகத்தை அடுத்துவந்த மார்ச் மாதத்தில் ஒருநாள், வழக்கத்துக்கு மாறாக சற்று முன்னதாகவே கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்த குருக்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சூரியனின் காலை கிரணங்கள் முருகனின் இடப்பாகத்தில் பட்டு ஜொலித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். மேலும் சில நாட்கள் தொடர்ந்து கவனிக்க, மார்ச் 20 முதல் 24 வரை முருகனது திருவுருவத்தின் மீது முழுவதுமாகக் காலைக் கிரணங்கள் பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார். அன்றுமுதல் வருடந்தோறும் இந்நாட்களில் சூரிய பூஜை வெகு சிறப்பாக நடக்கிறது. இந்நிகழ்விலும் மகா பெரியவாளின் தீர்க்க தரிசனம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அறியும்போது ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை.

மூலவர் கிழக்குத் திசையை நோக்கி இருப்பதால், அத்திசையில் வைக்கப்படும் வாசல் கதவுகளை சிற்பிகள் குறிப்பிட்ட இடத்திலிருந்து மேலும் சில அடிகள் தள்ளி வைக்குமாறு மகா பெரியவா கூறி இருக்கிறார்.அவ்வாறே அமைத்தார்கள்.பெரியவா குறிப்பிட்ட அதே வாசல் வழியாகத்தான் சூரியக்கிரணங்கள் குறிப்பிட்ட நாட்களில் முருகன் மீது படுகின்றன. தமிழகத்தில் காவிரிக்கருகில் குடிகொண்டிருக்கும் சுவாமிநாதன், தில்லியில் தன் மாமன் விளையாடிய யமுனை நதியை நோக்கியவண்ணம் குன்றின் மீது நின்று புரியும் அதிசயத்துக்கு அளவே இல்லை.

தொடர்ந்த வருடங்களில் மீனாக்ஷி, சுந்தரேசர், விநாயகர், நவக்கிரகங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைத்ததுடன், சிற்ப கலா மண்டபம், ஆதிசங்கரர் பிரார்த்தனைக் கூடம் போன்ற பலவும் அமைத்தார்கள் குன்றின் மேலுள்ள விஷ்ணு துர்கை சந்நிதியில் செவ்வாய்-வெள்ளி தினங்களில் நடக்கும் ராகு கால பூஜையில், வட இந்தியர்களும் திரளாக வந்து கலந்துகொள்கிறார்கள். அமிர்தசரஸ் போன்ற தொலைதூர நகரங்களிலிருந்து சீக்கியர்களும் வந்து வழிபாடு நடத்திப் பயன்பெறுகிறார்கள்.

2001-ஆம் ஆண்டு முதல், சிறப்பு தினங்களில் சுவாமியை மலை மேல் ஊர்வலமாகத் தூக்கிச் செல்வது முதல் பிரசாத விநியோகம் வரை எல்லாக் காரியங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர் ஒரு சீக்கியர் என்று அறியும்போது வியப்பின் எல்லைக்கே செல்கிறோம்.

மூலவரைத் தரிசிக்க படியேறிச் செல்லும் வழியில் நாகர் சந்நிதி அமைந்துள்ளது.கோயில் கட்டுவதற்கு முன்பாக ஒரு நாள் குன்றின்மேல்தோன்றி பக்தர்கள் காண விளையாடிவிட்டு, குன்றினுள் சென்று மறைந்துவிட்ட நாகத்தின் நினைவாக இந்த நாகராஜா சந்நிதி அமைக்கப்பட்டதாம். குன்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் சிறியதாக இருந்த அரசமரம், கிளைபரப்பி இன்றளவும் கம்பீரமாக நிற்பதை இடும்பன் சந்நிதிக்கருகில் காணலாம்.

மூலவரின் சாந்நித்யம் கோயிலில் நிறைந்துள்ளது என்பதற்குச் சான்றாக, கோயில் வளாகத்தில் இரு மயில்களும் ஒரு சேவலும் உல்லாசமாக உலவுவதைக் காணலாம். விநாயகர் சந்நிதிக்குப் பின்புறம் ஒன்பதரை அடி உயரத்தில் அமைந்துள்ள மீனாக்ஷி-சுந்தரேசர், வள்ளி-முருகன் ஆகியோரின் திருமணக் கோலங்கள் மிக அழகிய சிற்பங்களாக வடிக்கப்பட்டு பக்தர்களைக் கவர்கிறது.

உத்தர சுவாமிமலையில் நடக்கும் மிகப் பெரிய விழா – கந்த சஷ்டி விழாவாகும். தில்லி வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி நடத்தும் இப்பெரிய விழா தவிர தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மகா சிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை போன்ற விழாக்களும் வெகு சிறப்பாக நடக்கின்றன.கார்த்திகை மாதத்தில் நுழைவாயிலில் இருந்து மலை உச்சிவரை ஏற்றப்படும் தீபங்களின் அழகைக் காணும்போது, ‘ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே’ என்று நாமும் நிச்சயம் பாடுவோம். திருப்புகழ்ச் சக்கரவர்த்தி குருஜி ஏ.எஸ். ராகவன் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட திருப்புகழ்த் திருப்படித் திருவிழாவும், அருணகிரிநாதர் நினைவு விழாவும் முறையே வருட முதல் ஞாயிறன்றும், அக்டோபர் இரண்டாம் தேதியும் தொடர்ந்து சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

குன்று கண்டுபிடிக்கப்பட்ட காலந்தொட்டு இன்றுவரை உத்தர சுவாமிநாதனின் சேவையிலேயே காலம் கழித்து வரும் மிக மூத்த அன்பர் எஸ். பட்டாபிராமன் (தொண்ணூறை நெருங்கிவிட்டவர்) அவர்களுடன் பேசும்போது நாமும் அந்தக் காலத்துக்கே சென்றுவிடுகிறோம். கோயில் அமைப்பு, நிர்வாக விஷயங்களுக்காக காஞ்சி பரமாச்சார்யாருடன் பழகிய நாட்களை மிகுந்த நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார். ‘பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட ஒருநேரத்தில் பெரியவாளைத் தஞ்சமடைந்தோம். பணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, ‘ஆறு வற்றிக் கிடக்கிறது.விரைவில் ஒரு பிரவாகம் வரப்போகிறது. அப்போது யாராலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது.’ என்று ஆசி அருளினார்.

‘மலாய் மந்திர்’
அவரின் அருள்வாக்கு அப்படியே பலித்துவிட்டது. அன்று முதல் இன்று வரை கோயிலில் பணப் பற்றாக்குறை ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்று கூறி உணர்ச்சிவசப் படுகிறார்.
தில்லி தமிழர்கள் தமிழ்-இந்தி இரு மொழிகளையும் இணைத்து ‘மலை மந்திர்’ என்று கூறுவதைக் கேட்ட தமிழர் அல்லாதவர்கள் இதை ‘மலாய்-மந்திர்’ என்று உச்சரிக்க ஆரம்பித்து, அதுவே நிலைத்துவிட்டது பாலேடு என்பதன் இந்தி வார்த்தைதான் ‘மலாய்’..பாலேடு போன்ற சிறப்பும் சுவையும் மென்மையும் உடையவன்தானே நம் சுவாமிநாதன்! அந்தப் பெயர் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே!

சித்ரா மூர்த்தி, சென்னை

திரிசக்தி பொங்கல் மலரில் திருமதி சித்ரா மூர்த்தி அவர்கள் எழுதிய ‘தில்லி உத்தர சுவாமிமலை’ என்ற அருமையான கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மாலதி ஜெயராமன்.

இந்தக் கட்டுரையை எழுதிய திருமதி சித்ரா மூர்த்தி சிறந்த எழுத்தாளரோடு சிறந்த சொற்பொழிவாளருமாவார். அவர் பல பத்திரிகைகளில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

நன்றி: திரிசக்தி, பொங்கல் மலர்

source:::: muruganbhakthi.org

natarajan

வாருங்கள் வாழ்த்துவோம் …நம் நாட்டு இளம் தொழில் அதிபர்களை !!!

ஸ்ரவண் குமார், சஞ்சய் குமரன் - படம்: வி.சாரதா

ஸ்ரவண் குமார், சஞ்சய் குமரன் –

சென்னையைச் சேர்ந்த இரு சகோதர்கள், நாட்டின் இளம் தொழிலதிபர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஷ்ரவண் குமரன், சஞ்சய் குமரன் ஆகிய இருவரும் ஒன்பதாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பில் படிக்கிறார்கள். இந்நிலையில் “கோ டைமன்ஷன்ஸ்” என்னும் மென்பொருள் நிறுவனத்தினைத் தொடங்கி நடத்திவரும் இவர்கள், செல்போனில் கல்வி, விளையாட்டு மற்றும் வாழ்க்கை முறையை எளிதாக்க உதவும் “ஆப்ஸ்” என்னும் செயலிகளை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம், இந்தியாவின் மிக இளம் வயது தொழில் அதிபர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த இந்த சகோதரர்கள் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் தளங்களில் செயல்படக்கூடிய “கேச் மீ காப்”, “எமெர்ஜென்சி பூத்” உள்ளிட்ட ஏழு செயலிகளை இரண்டு வருடத்திற்குள் உருவாக்கியுள்ளனர்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கோ டைமன்ஷன்ஸின் தலைவரான ஷ்ரவண், “ஒவ்வொரு செயலியை உருவாகியதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு நாள் மழை பெய்துக் கொண்டிருந்தது. எங்களால் வெளியில் சென்று திருடன் போலீஸ் விளையாட முடியவில்லை. இதுவே செயலியாக கைப்பேசியில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் விளையாடலாமே என்று தோன்றியது. அப்போதுதான் ’கேச் மீ காப்’செயலியை உருவாகினோம்.” என்று புன்னகைக்கிறார். தங்கள் பள்ளிக்கு வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இதை ரசித்து விளையாடியதை இவர்கள் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர்.

ஆபத்தில் உதவும் செயலி

“எமெர்ஜென்சி பூத்” என்ற செயலியை ஆபத்து காலத்தில் ஒரு முறை அழுத்தினால் காவல்துறை, அவசர ஊர்தி அல்லது தீயணைப்பு படை தானாகவே அழைக்கப்படும். இதில் உங்கள் குடும்பத்தினர், பக்கத்து வீட்டார் எண்ணை சேர்த்துக் கொண்டால் அவர்களுக்கும் ஒரே கிளிக்கில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த செயலி உருவான சந்தர்ப்பத்தை விளக்கும் ஏழாம் வகுப்பு படிக்கும் சஞ்சய்,”ஒரு நாள் பக்கத்து வீட்டு பாட்டி வெளிநாட்டில் இருக்கும் தங்கள் உறவினர்களை அவசரமாக அழைக்க முயன்ற போது, கைப்பேசியில் எண்களை தேடுவதே அவர்களுக்கு கடினமாக இருந்தது. அப்போது கிடைத்த யோசனையை வைத்துதான் இந்த செயலியை உருவாக்கினோம்” என்கிறார்.

இந்த சகோதரர்களின் தாயும் முன்னாள் பத்திரிகையாளருமான ஜோதி லட்சுமி, ” குழந்தைகளின் கல்விக்காக ஏதாவது செய்யுங்கள் என்று நான் கூறினேன். இதை முக்கியமாக எடுத்து கொண்டு “ஆல்ஃபபட் போர்ட்” என்ற எழுத்துகளை அறிமுகப்படுத்தும் ஆப்பை உருவாக்கினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பெருமையுடன் கூறுகிறார்.

ஆப்பிள் நிறுவனத்தை விட பெரிய மென்பொருள் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்த சகோதரர்களின் கனவாக உள்ளது.

source:::The Hindu ….Tamil

natarajan

A Simple Memorial To The Legendary Thespian ….Sivaji Ganesan …

October 1 this year marks the 85 birthday of acting legend Sivaji Ganesan. There are at least three memorials to him in the city, of which my personal favourite stands inside AVM Studios. I was able to see it a couple of years ago, thanks to a heritage tour organised by actor Mohan V. Raman.

A simple block of elegantly-fashioned black granite, it stands on the spot where Sivaji first faced the camera for his debut film – Parasakthi. The granite slab has a brass medallion on top that bears a close-up of Sivaji uttering his famous opening word – “Success!”. Below it is a rectangular plaque that gives details of the memorial’s inauguration by Kamal Hassan in the presence of Sivaji’s sons Ramkumar and Prabhu, on October 17, 2002, the 50 anniversary of Parasakthi’s release.

The memorial to Sivaji Ganesan, inside AVM studios, was inaugurated on the 50th anniversary of Parasakthi’s release

The memorial to Sivaji Ganesan, inside AVM studios, was inaugurated on the 50th anniversary of Parasakthi’s release

At the base are two plaques shaped like pages from an open book. These bear the names of all the other people involved in the making of the film – directors, writers, lyricists, music director, singers and technicians.

This last was the idea of Mohan Raman, while the monument itself owes its existence to M. Saravanan and M. Balasubramanian, sons of A.V. Meyyappan, founder of AVM Studios.

I don’t remember now but I am fairly sure that the name of P.A. Perumal, owner of National Pictures, who produced the film, is included in the memorial. What I am not sure of is whether the name of Rajeswari Meyyappan, wife of the studio owner is included.

Legend has it that sometime after work on the film began Meyyappan and the directing duo of Krishnan-Panju began wondering if the gangly youth with prominent eyes and powerful voice really had it in him to carry the film on his shoulders. Perumal and Mrs. Meyyappan were however convinced that he was the right choice and ultimately prevailed over everyone else. The film, when released, ran into immediate controversy, the fiery dialogues of M. Karunanidhi that questioned the hypocrisies of religion and the priestly class being the principal reasons. It was however a runaway success and there was no looking back for Sivaji.

Interestingly, at the time of its inauguration, the monument was located 15 to 20 feet away from where it stands now.

Old studio hands felt that it was somewhat removed from the spot where Sivaji delivered his first shot but nothing could be done about it. Some years later, a road had to be laid in the studio and the memorial had to be shifted a few feet, bringing it to its original intended location!

This is perhaps the most aesthetic memorial in a city which otherwise puts up rather drab statues devoid of any artistic merit. It is also perhaps the only monument commemorating an actor’s debut. Sivaji has two other memorials – a full wall in the Shanthi Theatre complex that lists all the films he acted in with a host of other details, and a statue on the Marina.

source ::::V .Sriram in The Hindu

natarajan

நாகேஷ் எனும் மக்கள் கலைஞன் !!!

 

நாகேஷ் எனும் மக்கள் கலைஞனின் பிறந்தநாள் இன்று. குண்டுராவ் என்றுஅழைக்கப்பட்ட இவர், கம்பராமாயண நாடகம் பார்த்து நடிக்கும் ஆர்வம் ெற்று சென்னை வந்தார்.

கவிஞர் வாலியுடன் தங்கிக்கொண்டு, ரயில்வேயில் வேலை பார்த்து வந்த காலத்தில் ஒரு நாடகத்தில் வயிற்று வலிக்காரனாக இவர் நடித்த நடிப்பை பார்த்து பிரமித்தார் எம்.ஜி.ஆர். ஒரு கோப்பையை பரிசாக தந்தார். ஆனால், அதையாரும் பாராட்டவில்லை. நாகேஷை போலீஸ் கூப்பிட்டு, கோப்பையை திருடி வந்தாயா என்று விசாரிப்பது தான் நடந்தது.

அப்பொழுதில் இருந்து விருதுகளை வைக்க என்று வீட்டில் எந்த இடமும் தனியாக வைத்தது இல்லை அவர். ரெஜினா எனும் கிறிஸ்துவ பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வாகினி ஸ்டுடியோ ஓனரை, யாரென்று தெரியாமல் கிண்டலடித்த பொழுது இவரின் நடிப்பை பார்த்து பிரமித்து போய் அவர் கொடுத்த ஆயிரம் ரூபாயில் தான் தனது திருமணத்தை நடத்திக்கொண்டார் நாகேஷ்.

தொழுப்பேடு ரயில்வே கிராசிங் மூடி இருந்ததால் ஜெயகாந்தனும் இவரும் காரில் காத்திருக்க நேர்ந்தது . என்ன பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் பொழுதே ஜே.கே “பிச்சை எடுக்கலாமா ?” என்று கேட்டிருக்கிறார். இருவரும் சட்டை,பேன்ட் ஆகியவற்றை கழட்டிவிட்டு அண்டர் டிராயர் உடன் அமர்ந்து பிச்சை எடுத்திருக்கிறார்கள். நாகேஷ் தட்டில் குறைவாகவே பணம் சேர்ந்திருக்கிறது

‘சர்வர் சுந்தரம்’, ‘எதிர்நீச்சல்’, ‘நீர்க்குமிழி’, ‘அனுபவி ராஜா அனுபவி’ என்று தொடர்ந்து ஜெயித்த நடிகர் நாகேஷ், தில்லானா மோகனாம்பாள் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லப்பட்ட ‘வைத்தி’ கதாபாத்திரத்தில் தோன்றி பின்னி எடுத்தார். மைலாப்பூர் குளத்தில் அமர்ந்து கொண்டு “தண்ணியெல்லாம் வத்திப்போச்சே” என்று புலம்பிக்கொண்டு இருந்த கிருஷ்ணஸ்வாமி எனும் நபரின் தாக்கத்தை

அப்படியே திரையில் கொண்டு வந்து நாகேஷ் காட்டிய விஸ்வரூபம் தான் தருமி கதாபாத்திரம். சிவாஜி அதைப் பார்த்து ரசித்து, கட்டே இல்லாமல் அது ஸ்க்ரீனில் வருமாறு பார்த்துக்கொண்டார். ‘மகளிர் மட்டும்’ படத்தில் நாகேஷ் அவர்களின் நடிப்பைப்பற்றி கமல் இப்படி சொன்னார் “உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் நடித்து ’இருக்கவில்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் நாகேஷ் பிணமாக நடித்திருக்கிறார்” என்றார்.

நாகேஷ் நடிப்பைப் பார்த்து பிரமித்த வடநாட்டு நடிகர்கள் ஏராளம். இவரது ‘அனுபவி ராஜா அனுபவி’ படத்து கதாபாத்திரத்தை ஹிந்தியில் எடுத்து நடித்த மக்மூத் இவர் காலில் விழுந்து மரியாதை செய்தார். நாகேஷ் அவர்கள் வெறும் மவுனமான உடல்மொழியின் மூலம் காமெடி செய்யலாம் என்று சாப்ளின்,பஸ்டர் கீட்டன் ஆகியோரை பார்த்து நம்பினார். பின்னர் சத்தம் போட்டு திரையை அதிரவைத்தார்.

மதுப்பழக்கம்,ஒரு கொலை வழக்கில் உருண்ட பெயர் இவற்றைத்தாண்டி மீண்டும் திரையில் மின்னினார் நாகேஷ். அவரது நடன பாணி தனித்துவமானது. ஒரு முறை சரியாக ஆடத்தெரியவில்லை என்றொரு இயக்குனர் இவரை கடிந்து கொள்ள, கதவை மூடிக்கொண்டு பயிற்சி செய்துவிட்டு வந்தார். நடனத்தில் கலக்கி எடுத்தார். அப்படித்தான் அவரது பாணி உருவானது. தமிழகத்தின் ஜெர்ரி லூயிஸ் ஆனார் நாகேஷ்.

‘பூவா தலையா?’ படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்குவார். அப்போது இல்லாத வசனமான ‘இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு’ என்று டயலாக் பேசி அதிரவைத்தார். ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஆக் ஷன் என்று பாலச்சந்தர் சொன்னதும் நிழலை பார்த்து சியர்ஸ் சொன்னார் மனிதர் !

“உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே… எப்படி ?” என்று கேட்ட பொழுது ,”மாவு நல்லா அரைபடணும் அப்படின்னு அம்மிக்கல்லை ஆறு மாசத்துக்கு ஒருமுறை கொத்து வைப்பாங்க. அப்படி என் முகத்தில் சின்ன வயசில் ஆண்டவன் வைத்த அம்மை தழும்பால் தான் நான் நல்லா பொளிஞ்சு இருக்கேன் !” என்றார். அது தான் நாகேஷ் !

‘நம்மவர்’ படத்துக்காக பெற்ற சிறந்த துணை நடிகர் விருதைத் தவிர எந்த மத்திய அரசின் விருதும் இந்த மகத்தான கலைஞரை தேடிவரவில்லை.

 source::::: The Hindu… Tamil  27 sep 2013
 natarajan

வேண்டாம் டாஸ்மாக் ….தமிழன் வாங்கட்டும் பாஸ்மார்க் !!!

தினமலர் ‘இது உங்கள் இடம்’
வேண்டாம் டாஸ்மாக்; வேண்டும் பாஸ்மார்க்!
ஏ.வி.ராமநாதன், சென்னையிலிருந்து அனுப்பிய, “இ-மெயில்’ கடிதம்: 24-09-2013
தமிழக அரசு, மலிவு விலையில் உணவு, குடிநீர் வழங்குவது போல, “டாஸ்மாக்’ பார்களில், மலிவு விலையில் ஊறுகாய், வறுத்த முந்திரி, தண்ணீர் பாக்கெட் வழங்கி, “குடிமகன்’கள் வயிற்றில், சரக்கை வார்க்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்து, இப்பகுதியில், “குடிமகன்’ ஒருவர், கடிதம் எழுதி இருந்தார்.
அதைக் கண்டு, “நஞ்சுண்பார் கள்ளுண்பவர்’ என, “கள்ளுண்ணாமை’யை ஆணித்தரமாக வலியுறுத்திய, வள்ளுவர் காட்டிய வழியில் இருந்து, தமிழன் இப்படித் தடம் புரண்டு போய்க் கொண்டிருக்கிறானே என, வேதனைப்படுவதா அல்லது இலவசங்களால், மக்களைக் கவர நினைக்கும் அரசுக்கு, இப்படியும் ஒரு கோரிக்கை வைக்கலாம் என, அவர் எண்ணியதை நினைத்து, சிரிப்பதா என, தெரியவில்லை.
எப்படியோ ஒரு உண்மை புரிகிறது. இந்த இலவச, மலிவுக் கலாசாரம், தமிழன் நல்வாழ்வுக்கு உதவாமல், அவனை மேலும், சோம்பேறியாக, பிச்சைக்காரனாக, தன்மானம் இல்லாதவனாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
உச்ச நீதிமன்ற அறிவுரையை பின்பற்றாமல், வாழ்வுத் தரத்தை முன்னேற்றாத, மக்களை மயக்கி ஏமாற்றும், தற்காலிக பயன் தரும், இலவச பொருட்களை அள்ளிவிடும் அரசியல் கலாசாரத்திற்கு அடிமையாகாமல், இனி, இலவசங்களை புறக்கணிப்போம்.

மதுக்கடைகளால், அரசுக்கு வரும் வருமானத்தைப் பற்றி கவலைப்படாமல், பூரண மதுவிலக்கை, பல ஆண்டுகளாக அமல்படுத்தி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால், “ஜம்’மென்று வளர்ந்து வரும் குஜராத் மாநிலத்தை, தமிழகமும், மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.
மலிவு ஊறுகாயோடு, சரக்கடிக்க, முதல்வருக்கு கோரிக்கை விடுக்கும், வீரக் குடிமகன்களும், அவர் தம் குடும்பங்களும், தமிழகமும் மேலும் சீரழிவதைத் தடுக்க, தமிழக முதல்வர் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும்.
வேண்டாம் டாஸ்மாக்; தமிழன் வாங்கட்டும், “பாஸ்மார்க்

 

source::::: A Letter from my Friend A.V.Ramanathan  in Dinamalar  Tamil Daily

Natarajan

படித்ததில் பிடித்தது … ஒரு கல்!!! ஒரு பழம் !!!

ஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச்
சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த
துறவியின் பேச்சுப் பிடிக்காமல்,
ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான்,
அக்கல் துறவியின் தலையில் பட்டுக்
காயத்தை ஏற்படுத்தியது. துறவியின்
துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள்,
எழுந்து ஓடி, அந்த இளைஞனைப்
பிடித்துத் தாக்கத் துவங்கினர்.
அதைக் கண்ட துறவி, அவனை அடிக்க
வேண்டாம், அவனைத் தன்னிடம்
அழைத்து வருமாறும் சைகை செய்தார்.
அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள்,
இளைஞனை மேடைக்கு இழுத்துச்
சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப்
பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி,
அருகில் வைக்கப் பட்டிருந்த
தட்டிலிருந்த மாம்பழம்
ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன்
பயத்துடன் தயங்கினான். “அவனைத்
தண்டிக்காமல் அவனுக்குப் பழம்
தருகிறீர்களே சுவாமி….”
என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள்.
அவர்களை அமைதிப்படுத்திய துறவி,
கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார்:
“ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல்
எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது.
ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம்
செய்தவனுக்கு ஏதேனும்
நன்மை செய்யவேண்டாமா?”
துறவி கூறியதைக் கேட்டவுடன் அவர்
பாதங்களில் தடால்
என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன்.
குறள்: 314
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்”
மு.வ உரை:
இன்னா செய்தவரைத் தண்டித்தல்
அவரே நாணும் படியாக
அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய
தீமையையும் நன்மையையும்
மறந்து விடுதலாகும்.

 

source ::::: input from  a friend of mine

natarajan

தமிழ் வளர்த்த பெரியவர்கள் !!!

ரசிகமணி டி.கே.சிதம்பரநாதனின் மகனான தீர்த்தாரப்பன் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். ஆற்ற முடியாத துயரத்தில் அமர்ந்திருந்த டி.கே.சி.க்கு ஒரு கடிதத்தை தந்தார்கள். அதை வாங்கி, கண்களை இடுக்கி மெதுவாக படித்தார். திடீரென்று கண்கள் பிரகாசமாகின. மகனின் மரணத்தை மீறியும் அவரின் குரலில் ஓர் உற்சாகம். “ஆஹா! ஆஹா” என்று அவர் பூரித்துப்போக, ‘என்ன சங்கதி’ என்று அவர் கையில் இருந்த தாளை வாங்கிப்பார்த்தார்கள். கவிமணி அவரின் மகனின் மறைவுக்கு எழுதியிருந்த இரங்கற்பா அது. “இப்படி ஓர் இரங்கற்பா கிடைக்க எத்தனை மகனை வேண்டுமானாலும் இழக்கலாம்!” என்று சொன்னாராம் ரசிகமணி. பெயருக்கு ஏற்ற ஆள்தான் அவர்.

சுசுமு ஓனோ எனும் ஜப்பானிய பேராசிரியர் தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர் பொற்கோவுடன் இணைந்து எண்ணற்ற ஆய்வுகளை தமிழ் மொழி மற்றும் ஜப்பானிய மொழி ஆகியவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமை சார்ந்து செய்தார்கள். அந்த ஆய்வு வெகுகாலம் நகர்ந்தது. அப்போது எண்பது வயதில் இருந்த ஓனோ, “நான் அறுபது வயதிலேயே இறந்திருக்க வேண்டியவன். தமிழ் கொடுத்த ஆற்றல்தான் என்னை இத்தனை தூரம் உயிரோடு வைத்திருந்திக்கிறது. உயிர் தந்த மொழி தமிழ்” என்று கண்ணீர் மல்க அந்த ஆய்வு முடிகிறபோது சொன்னது வரலாறு.

பாண்டித்துரை தேவர் நான்காம் தமிழ்ச் சங்கம் ஆரம்பித்து, கடந்த நூற்றாண்டில் தமிழ் வளர்த்தது வரலாறு. அவரை எல்விஸ் துரை எனும் ஆங்கிலேயர் சந்தித்தார். அவர் திருக்குறள் தவறாக எழுதப்பட்டு இருப்பதாகவும், அதை மாற்றிக் கொண்டுவந்திருப்பதாகவும் சொன்னார். உள்ளுக்குள் எழுந்த அதிர்ச்சியை சற்றும் காட்டிக்கொள்ளாமல், “எத்தனை பிரதிகள் போட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். “ஐநூறு!” என்று ஆர்வம் கொப்பளிக்க விடை வந்து விழுந்தது. அத்தனை பிரதியையும் அப்படியே பணம் கொடுத்து வாங்கிக்கொண்டார் பாண்டித்துரை தேவர். வேலையாளை அழைத்தார். “எல்லாத்தையும் குழி தோண்டி சீமெண்ணெய் ஊத்தி கொளுத்திடு!” என்றார். ஒரு தவறான திருக்குறள் பிரதிகூட தமிழனுக்கு போய் சேர்ந்துவிடக்கூடாது என்று அத்தனை கவனம் இருந்தது அவரிடம்.

Keywords: தமிழ், மொழி, அறிஞர்கள், ரசிகமணி, பாண்டித்துரை தேவர், திருக்குறள்
Topics: சிறுவர்| இலக்கியம்| தகவல்| வரலாறு|

source ::::The Hindu  Tamil

natarajan

A Tribute To My Teacher Bro. Anselm and to all other Teachers on Teachers Day…

 

தவறை   திருத்துவதில்  தந்தையாக … தோல்வியில் துவளாதே  என்று தட்டிக்  கொடுப்பதில்  ஒரு

தோழனாக   ….எங்கள்  வெற்றியை  வாழ்த்துவதில் ஒரு  தாயாக …

அறிவு  போதிப்பதில்  போதிமரமாக …. எங்கள்   வாழ்க்கையின்   வழிகாட்டியாக ..

உங்கள்  உளியால்  எங்களை எல்லாம்   செதுக்கி  வைத்தீர்கள்  ஒரு  சிற்பமாக !!!

ஆசிரியர்  உங்கள்  உதவியால்  உயர்ந்தோம்   நாங்கள் …

வாழ்வை  கற்றோம் …வளம்  பல  பெற்றோம் !!!

உங்களாலே  நாங்கள்  மனிதர்  ஆனோம்

உங்களிடமிருந்து  நாங்கள்  மனித  நேயம்  கற்றோம் …

எங்களை  உயர்த்திய  உங்களை …  எங்கள்

உயிர்  உள்ளவரை  மறவோம் ….

இன்றும் , என்றும்  வணங்குவோம்  உங்களை !!!!!

source :::: input from  a daily on Teachers Day….

Dedicated to my Dear Bro. Anselm and to all the other teachers on this Teachers Day…

natarajan

 

 

 

 

 

 

 

ஒரு கால கணக்கு !!!….ஒரு நாள் ….ஒரு அலசல் !!!

 

2 பரமாணுக்கள்   ……………….. ஒரு அணு

3 அணுக்கள் ………………………..ஒரு  த்ரிஷேனு

3 த்ரிஷேனு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ஒரு  த்ரூடி

100 த்ரூடி ………………………….ஒரு  வேதம்

3 வேதம் ………………………… ஒரு லவம்

3 லவம் ………………………….ஒரு  நிமிடம்,

4 நிமிடம் ……………………..ஒரு க்ஷணம்

5 க்ஷணம் ………………..ஒரு காஷ்டா

15 காஷ் டா ………………ஒரு  லகு

15 லகு …………………… ஒரு  நாழிகை

2 நாழிகை ………….ஒரு முஹுர்த்தம்

30 முஹுர்த்தம் ……..ஒரு  நாள்

60 நாழிகை   ……………ஒரு நாள்

2.5 நாழிகை …………ஒரு மணி

24 நிமிடம் ………………ஒரு நாழிகை

48 நிமிடம் ……….ஒரு  முஹுர்த்தம்

60 நிமிடம் ……….ஒரு மணி

24 மணி …………..ஒரு நாள் !!!!!

நடராஜன்