“பாவ மூட்டையை எப்படி எறக்கப் போறே ? ….”

பல வருடங்களுக்கு முன்பு நடந்தது இந்த நிகழ்ச்சி.

அன்று மஹானின் தரிசனம் எல்லோருக்கும் கிடைத்துக் கொண்டிருந்தது. மெளன அஞ்சலிக்குப் பிறகு பிரசாதத்தைப் பெற்று போனவர்களும் தங்களின் குறைகளை ஓரிரு வார்த்தைகளால் சொல்லி ஆறுதல் பெற்றவர்களும் இருந்தார்கள்.

தொடரின் நடுவே ஒருவர் வந்து நின்றார். அவரை மஹான் ஏறிட்டுப் பார்த்தார். பிறகு மெதுவான குரலில்,
“உன் பிள்ளைகளுக்கும் குடும்பத்தாருக்கும் ந்ல்லது செய்யறதாக நினைச்சுண்டு மேலே மேலே பாவ மூட்டையை அவா பேர்லே ஏத்திண்டு இருக்கே” என்றார்.

எதிரில் இருந்தவர் திடுக்கிட்டார். மனதறிந்து தாம் எந்தப் பாவமும் செய்யவில்லையே என்கிற எண்ணம் அவருக்கு….மஹானை ஏறிட்டுப் பார்த்தார்.

“பிராமணனா பிறந்தவர்கள் அன்னத்தை விலைக்கு விற்கப் படாதுன்னு சாஸ்திரத்திலே சொல்லியிருக்கே, அதை நீ படிச்சதில்லையா?”

அந்தப் பக்தர் ஓட்டல் நடத்துபவர். பிழைப்பிற்காக இதை பல வருடங்களாக நடத்தி வந்திருக்கிறார். பக்தர் அதற்கும் பதில் சொல்லவில்லை.

“சரி, அது உன் பிழைப்புக்காகன்னு வெச்சிண்டா கூட, அதுக்கு மேலேயும் வேறொரு பெரிய பாவத்தையும் பண்ணிண்டு இருக்கே…”

பக்தருக்கு உண்மையில் அது என்னவென்றே தெரியவில்லை. மஹானே தொடர்ந்தார்: “சேத்து வச்சிருக்க பணம் போதாதுன்னு, அதை வட்டிக்கு விட்டு அநியாயமா பணத்தை வசூல் செய்யறே. இது நீ அடுத்த தலைமுறைக்கு சேத்து வைக்கிற பாவம்” என்றார்.

தான் பணத்தை வட்டிக்கு விடுவது மஹானுக்கு எப்படித் தெரியும் என்கிற பிரமிப்பு நீங்கும் முன்னர் மஹான் சொன்னார்:

“நீ கேட்கிற அநியாய வட்டியைத் திருப்பிக் கொடுக்கும் போது வயிறெரிந்து உன்னையும் உன் குடும்பத்தாரையும் சபிக்க மாட்டார்களா?” அப்படி பல சம்பவங்கள் நடந்தது பக்தருக்குத் தெரியும்.

”இந்தப் பாவமூட்டை உன் சந்ததியின் தலைமேல் ஏறி உட்கார்ந்து கொள்ளுமே. அதை எப்படி இறக்கப்போறே? இதுவரைக்கும் நீ சேத்து வச்ச பணம் போறாதா? எதுக்கு மேலே மேலே ஆசைப்பட்டு உன் சந்ததிக்கு பாவமூட்டையை சேர்த்து வைக்கறே?” மஹான் இப்படிக் கேட்டதுதான் தாமதம். அந்த பக்தர் நெடுஞ்சாண்கிடையாக மஹானின் காலில் விழுந்தார்; கதறித் துடித்தார்.

“இனி நான் என்ன செய்யணும் சொல்லுங்கோ மஹாபிரபு!”

எழுந்தவரை ஆசீர்வதித்த பின்னர்,

“நீ இதுவரை சேர்த்த பணம் உன் தலைமுறைக்கும் போதும். முதல்லே நீ நடத்தற ஓட்டலை மூடி.. அன்னமுன்னு கேட்டு வர்றவாளுக்கு உன் ஆத்திலே சாப்பாடு போடு. வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கறதையும் நிறுத்திடு”.

“அப்படியே ஆகட்டும்” என்று கை கூப்பினார் பக்தர்.

“இன்னும் ஒரு விஷயம் பாக்கி இருக்கே!”

“மஹா பெரியவா சொன்னா கேட்டுக்கிறேன்”.

“இதுவரை நீ வாங்கின வட்டியை எல்லாம் கணக்குப் போடு. எவ்வளவு பணம் சேந்திருக்குன்னு பார். அதை மொத்தம் எடுத்துண்டு போய் திருப்பதி ஏழுமலையான் உண்டியிலே போட்டுட்டு அவரை சேவிச்சு வா”.

பக்தர் விடை பெற்றுக் கொண்டார்.

மஹாபெரியவா பக்தர்கள் பாவ மூட்டையை சுமக்கக் கூடாதென்பதில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பது இதிலிருந்து தெரிகிறது அல்லவா?

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/6647/mahaperiyavaas-concern-extract-book-venkatasamy#ixzz2v6KQPHNB

“இதைப் படி முதலில் …. “

தந்தது உன் தன்னை

தன் மனம், மார்க்கம் அனைத்துமே ஸ்ரீமஹா பெரியவாளே என்னும் ஆனந்தக் களிப்போடு தன் பிறவிப்பேற்றை அனுபவித்த ‘பிரதோஷம் மாமா’வின் அதி தீவிர பக்தி, அவரை ’64-ஆம் நாயன்மார்’ என்று மஹா பெரியவாளே அங்கீகரித்தருளும்படி செய்தது.

இவரின் பக்திநெறி ஒவ்வொன்றையும் மஹா பெரியவாளே வகுத்துக் கொடுத்ததாக பல அபூர்வ சம்பவங்கள் சாட்சியாக விளங்குகின்றன.

நடு இரவில் தன் இல்லத்திலிருந்து புறப்பட்டு வழி நெடுக ஈஸ்வர நாமாக்களை விடாது பாடிக்கொண்டு சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்திலிருந்த ஸ்ரீமடத்திற்கு பாதயாத்திரை செய்து தரிசிப்பதை ‘பிரதோஷம் மாமா’ தனது ஆனந்த அனுபவமாகவே கொண்டிருந்தார்.

பிரதோஷம் மாமா நடுநிசியில் பயணம் செய்யும்போது சில பக்தர்களும் அவருடன் வருவது வழக்கம். அதுபோல அன்றொரு நாள் இரவு தரிசன யாத்திரையில் திருவரத ஓதுவாரும் கலந்து கொண்டார். இதனால் வழியெங்கும் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கத் தொடங்கியது. ஓதுவார் உரக்கப் பாட உடன் சென்றவர்களும் இதே போல் குரலெடுத்துப் பாடினார்கள்.

எப்போதும் ஓங்கி ஒலிக்கும் ’அருணாசல சிவ’ அப்போது தடைபட்டது போல் பிரதோஷம் மாமா உணர்ந்தார். ரமண மஹரிஷியின் மீது இவருக்கு இருந்த அபரிமித பக்தியினால், திருவாசகத்திற்குப் பதிலாக ‘அருணாசல சிவ’ என்று சொல்லலாமே என்று உடன் வந்தவர்களிடம் சொல்லிப் பார்த்தார். நமச்சிவாயமும், அருணாசல சிவமும் வேறல்ல என்று ஏன் இவருக்குப் புரியவில்லை? இதனால் மடத்தில் வீற்றிருந்த சர்வேஸ்வரருக்கு இவருக்கு பதில் சொல்லவேண்டும் என்ற தீர்மானம் ஏற்பட்டு விட்டது. தரிசன யாத்திரை முடிந்து, அவருடன் வந்தவர்கள் மஹா பெரியவாளை தரிசித்து மகிழ்ந்தார்கள். ஓதுவார் ஸ்ரீமடத்திலிருந்து புறப்பட்டு போய்விட்டார்.
அப்போது மஹான் தமது திருவிளையாடல் நாடகத்தை ஆரம்பித்தார்.

“ஓதுவார் எங்கே?” என்று மஹான் கேட்டார். அவர் புறப்பட்டுப் போய்விட்டார் என்று மஹானுக்குத் தெரியாதா என்ன? பிரதோஷ மாமாவுக்கு விளங்கவில்லை – ஏன் மஹான் ஓதுவாரை அழைக்கிறார் என்று…

மஹான் பிரதோஷ மாமாவை அழைத்துக் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அது தன் கைக்கு வந்தவுடன் மெய் சிலிர்த்ததை உணர்ந்தார் பிரதோஷ மாமா. அருணாசலமா, நமச்சிவாயமா என்ற இவரது மன சஞ்சலத்தை அனைத்தும் நானே என்று சொல்லாமல் சொல்லித் தீர்த்து வைத்து விட்டது போலிருந்தது.

அவரது சிந்தனை வேறு பக்கம் திரும்பக் கூடாது என்று நினைத்த மஹான், “இந்தப் புத்தகம் எந்த வருடம் வெளியானதுன்னு ஓதுவாரைக் கேட்டுத் தெரிஞ்சுண்டு வா” என்றார்.

இது போன்ற வேலையை மஹான் தன்னிடம் சொன்னதே இல்லையே, இந்த விஷயம் இவருக்குத் தெரியாதா? இந்த வேலைக்கு மடத்து ஊழியர் போதாதா? இதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று நினைத்த பிரதோஷம் மாமா இதற்காக சென்னைக்குச் செல்ல வேண்டிய நிலை. காஞ்சியை விட்டு எப்போதும் அகலாதவருக்கு இப்படி ஒரு சோதனையா?

மஹானின் மனதை யார் அறிவார்? சென்னை சென்று ஓதுவாரை பார்த்துத் தகவல் அறியச் சென்றவருக்கு அங்கே ஓதுவாரைத் தேடவும் ஒரு துணை தேவைப்பட்டது.
இதற்காக மஹானிடம் பரமபக்தி கொண்டிருந்த ஒரு வைணவ அன்பரைத் தொடர்பு கொண்டு ஒத்தாசை செய்ய அழைக்கலாம் என்று நினைத்தார். போன் வசதி இல்லாத காலம் அது. இதனால் பணி ஓய்வு பெற்றபின், பிரதோஷ மாமா தனது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம்.

அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் இவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஒரு அன்பர் இவரை வரவேற்று மூச்சு விடாமல் பேசத் தொடங்கினார்.
“ரொம்ப ஆச்சர்யம். நீங்க எப்படி இங்கே வந்தீங்க? உங்களுக்கு நாங்களே கடிதம் எழுதி வரவழைக்கலாமுன்னு நினைச்சோம்… ஏன்னா, உங்களுக்கு அரியர்ஸ் பணம் ஆயிரத்துக்கு மேலே வந்திருக்கு… ஆபீஸிலே இன்னிக்கு நீங்க வரலேன்னா பணத்தைத் திருப்பி அனுப்பச் சொல்லி உத்தரவு. என்ன செய்யறதுன்னே தெரியாம தவிச்சுண்டு இருந்தேன்…. பின்னாலே பணத்தை வாங்கறது மிகவும் சிரமமா இருக்கும்”.

பிரதோஷம் மாமா உண்மையில் திணறித்தான் போனார். அந்தக் கால கட்டத்தில் இந்தப் பணம் எவ்வளவு பெரியது? இதைத் தன்னிடம் சேர்க்க திருவாசக புத்தகத்தின் மூலம் மஹான் திருவிளையாடல் நடத்தியிருக்கிறார் என்றே தோன்றியது.

பிரதோஷம் மாமா, புத்தகம் எப்போது வெளியிடப்பட்டது என்பதைப் பலரிடம் விசாரித்துக் கொண்டு காஞ்சி வந்து, மஹானிடம் விவரங்களைச் சொன்னார். அதை மஹான் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. தன்னை எதற்காக சென்னைக்கு அனுப்பினார் என்று மஹானுக்குத் தெரியாதா என்ன?

திருவாசகம் புத்தகத்தை அவரிடம் கொடுத்து “இதைப் படி” என்றார் மஹான்.

முதலில் எதைப் படிப்பது என்று இவர் தடுமாற “முதல்லேயிருந்து சில பக்கங்களையாவது படி” என்றார்.

அவர் புத்தகத்தைப் பிரித்தபோதே பிரமிப்பு….

“நமச்சிவாய வாழ்க” என்று தொடங்கும் சிவபுராணம் தான் முதலில் தென்பட்டது.

இப்படி பிரதோஷ மாமாவை நாயன்மாராக அங்கீகரித்தருளி “தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை” என்று பக்தருக்குள்ளே ஐக்கியமாகி ஒவ்வொரு பக்தி நெறிக்கும் வழிகாட்டுபவராக ஸ்ரீமஹா பெரியவா பிரதோஷம் மாமாவுக்கு அருள் புரிந்தார்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

Read more: http://periva.proboards.com/thread/6543/pradosham-maamaa-venkatasaamys-book#ixzz2uPz4MF6U

natarajan

” இவர் சிவப் பழம் …இவருக்கு நெறைய பழம் கொடு …”

 

ஒரு வைதிகர், எளிய வாழ்க்கை, போதுமென்ற
மனமே பொன் செய்யும் மருந்து.

கோயில் திருப்பணிகளில் மிகவும் ஆர்வம்.
தன் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில்,
மாரியம்மன் கோயில்,சிவன் கோயில்
எல்லாவற்றுக்கும் அரும்பாடுபட்டுத்
திருப்பணிகள் செய்தார்.

பெரிய தொகை நன்கொடை கொடுப்பவர்கள் கூட
அவரிடமிருந்து ரசீது எதிர்பார்க்கமாட்டார்கள்.
அவ்வளவு சுத்தம். அவருடைய சேவையை அண்டை
கிராமத்தார்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஒரு வயற்காட்டில் ஒரு பெரிய சிவலிங்கம்
தன்னந்தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில்
நடுங்கிக் கொண்டிருந்தார். இந்த வைதிகர்
முயற்சியால் இப்போது அவர் (சிவலிங்கம்)
மழை-காற்றுக்கு அஞ்சாமல்,கருவறையில்
கோயில் கொண்டுள்ளார்.

இப்படி எத்தனையோ கோயில்கள்.

ஆனால்,வைதிகர் எந்தக் கும்பாபிஷேகத்திலும்
தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை.
கூட்டத்தில் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டு நிற்பார்!

தம்பட்டமே இல்லாத இவரைப் பற்றிப்
பெரியவாளுக்கு தெரிந்திருந்தது.

‘எப்படி?’ என்றெல்லாம் கேட்கக்கூடாது.
அது சிவரகசியம்!

அந்த வைதிகர் அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருபவர் அல்லர்.
அவருக்கு ஓய்வு கிடைத்தால்தானே வெளியே போவதற்கு!

அவர் வழி அப்பர் வழி, ஆமாம். Upper வழி.

உழவாரப் பணி, கோபுரங்களில் வேலை,நாலைந்து
பையன்களை உடன் வைத்துக்கொண்டு
சந்தடி இல்லாமல் சிவத்தொண்டு செய்வார்.

ஒருதடவை பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்.
பெரியவாளை வந்தனம் செய்துவிட்டு ஓரமாக
நின்றார். வழக்கமான ஊர்-பேர் விசாரணைகூடச்
செய்யவில்லை பெரியவாள்.

அந்தச் சமயத்தில் பரம பக்தர்களான பணக்காரத்
தம்பதிகள் வந்து வந்தனம் செய்துவிட்டு எழுந்தார்கள்.

பெரியவாள், தொண்டருக்கு என்ன குறிப்பு
கொடுத்தாரோ, தெரியாது.விலையுயர்ந்த
ஒரு சால்வையைக் கொண்டுவந்து தட்டில்
வைத்தார் ஓர் அணுக்கத் தொண்டர்.பெரியவாள்,
அந்தப் பணக்காரப் பக்தரை அழைத்து, அந்தச்
சால்வையை, வைதிக பக்தருக்குப் போர்த்தச்
சொன்னார்கள்.

எல்லோருக்குமே வியப்பாக இருந்தது.

இந்த வைதிகர் என்ன, அவ்வளவு பெரிய
பண்டிதரா? யாகம் செய்தவரா..?

பெரியவா பணக்காரரிடம் சொன்னார்கள்.

“இவரைப் பார்த்திருக்கிறாயோ?”

“இல்லை”

“இவர் அட்ரஸ் தெரியுமோ?”

“தெரியாது”

“எனக்குத் தெரியும்! சொல்லட்டுமா?”
(என்ன குறும்பு!)

“சாஸ்திரிகள் கேர் ஆஃப் சிவன் கோயில்!
இவர் பெரிய Builder.என்ன? பல சிவன்களுக்கு
வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்…!”

பக்தர்கள் கூட்டம் நெகிழ்ந்து உருகியது.
ஒரு பத்திரிகையில்கூட இவர் புகைப்படத்தைப்
பார்த்ததில்லையே…

“இவர் சிவப்பழம்…பிரசாதத்தோட நெறய்ய
பழங்கள் கொடு…”

அறிமுகமே இல்லாத இவர், தூய சிவப்பணியாளர்
என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?.

அது எந்தவகை ஸித்தி?
ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு
தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா, என்ன?

 

            
source::::input from a friend of mine
natarajanIvarukku

 

“ஒங்களோட மேல் துண்டை கீழே போடுங்கோடா …”

கர்நாடகா மகாராஷ்டிரா எல்லைப் பகுதியில் பெரியவா யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். ராமதுர்க என்ற கிராமத்தில் உள்ள ஒரு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எல்லோரும் ஆனந்தமாக நதியில் ஸ்நானம் பண்ணினார்கள். பெரியவா கரையில் அமர்ந்து ஜபம், அனுஷ்டானங்களை பண்ண தொடங்கினார்.

எல்லாம் முடிந்ததும் அருகில் இருந்த ரெண்டு சிஷ்யர்களை கூப்பிட்டு, ” ரெண்டு பேரும் ஒங்களோட மேல் துண்டை கீழ போடுங்கோடா !” என்றார். யாருக்கும் ஏன்? என்று புரியவில்லை. மிக மிக புதுமையான உத்தரவு! போட்டார்கள். பெரியவா சுற்றி அங்கே இங்கே பார்த்தார்……….மக்கள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் ஒரே ஒரு குட்டிப்பையன் நின்று கொண்டு பெரியவாளை பார்த்துக் கொண்டிருந்தான்.

“இந்தாடா……….கொழந்தே! இங்க வா” சைகை பண்ணி அழைத்தார். வந்தான். நதி மேற்கிலிருந்து கிழக்காக இரு கரைகளையும் ஒட்டி அசாத்தியமாக சுழித்து சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. பெரியவா அந்த குட்டிப்பையனிடம் கன்னடத்தில் ” இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே…….அந்த யங்குஸ்தர்கடே கொடப்பா! ” [இந்த ரெண்டு வஸ்த்ரங்களையும் அதோ ஆத்தோரம் தெரியற பொண்ணுகிட்ட குடு] என்று சொன்னார்.> > அந்த பையனும் எதிர் கரைக்கு நீந்தி போய், நீருக்குள் மூழ்கி, தலையை மட்டும் வெளியில் வைத்துக் கொண்டிருந்த அந்த பெண்ணிடம் ரெண்டு வஸ்த்ரங்களையும் குடுத்தான். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அந்த பெண் அதே நிலையில் அமர்ந்திருந்திருக்கிறாள். பாவம்!

ஆற்றின் சுழிக்கும் வேகத்தில், அவளுடைய வஸ்த்ரங்கள் போயே போய்விட்டன ! எப்படி வெளியே வருவாள் ? வீட்டுக்கு எப்படிப் போவாள்? படிப்பறிவு சற்றும் இல்லையானாலும், பண்பாடு போகவில்லையே அந்த கிராமத்துப் பெண்களுக்கு!

“இந்த சனங்கல்லாம் எப்பத்தான் இந்த எடத்தை விட்டு எழுந்து போவாங்களோ!” என்று மடத்தினரைப் பார்த்து அவள் நொந்து போயிருக்கக்கூடும். யாத்ரையில் வந்தவர்கள் பார்வை நூறடிக்கப்பால் போகவில்லை. அவசியமும் ஏற்படவில்லை. அவளுடைய இக்கட்டான சூழ்நிலை பெரியவாளுக்கு தெரியாமல் யாருக்கு தெரியும்? அந்தர்யாமியில்லையா? த்ரௌபதி “கோவிந்தா” என்று அலறியதும், எங்கோ த்வாரகையில் இருந்தாலும், அவளுடைய அந்தர்யாமியாகவும் இருப்பவன் அவன்தானே! ஓடி வந்து அவள் மானத்தை காப்பாத்தவில்லையா? இந்த பெண் மனஸில் போட்ட ஓலம் கேட்டு, தானே முன்வந்து, அவள் மானத்தை காத்தார். அவள் மேல் துண்டுகளை சுற்றிக் கொண்டு, வெளிய வந்து அங்கிருந்தபடியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு, வீட்டை நோக்கி போனாள்.

source::::www.periva.proboards.com

natarajan

” சந்தர்ப்பங்களை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும் …”

சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. ஒரு பிரபல வாரப்பத்திரிகை ஆசிரியர் மஹானிடம் தனிமையில் பேசி தமக்கு ஏற்பட்டுள்ள சில சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள நினைத்தார், சந்தித்தார்.”நீ இப்போது என்னிடம் பேசலாம்” என்றார் மஹான் தமிழில்.

“சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளவே நான் தங்களை சந்திக்க விரும்பினேன்” என்றார் ஆசிரியர் சுத்தமான தமிழில்.

“உன் தாய்மொழி என்ன?” முகத்தில் லேசாகப் புன்னகை தவழ மஹான் கேட்கிறார்; பின் அவரே தொடருகிறார். “உன் தாய் மொழி நிச்சயம் தமிழ்மொழியாக இருக்காது என்று எனக்குத் தெரியும்” என்கிறார். இதற்குக் காரணம் ஆசிரியர் சிரமப்பட்டுப் பேசிய தமிழ்தான்.

“தெலுங்கு” என்கிறார் ஆசிரியர்.

“நீ பிறந்த ஊர் எது?” என்று சுந்தரமான தெலுங்கில் கேட்டுவிட்டு, ஆசிரியரின் இளமைக்காலம், பெற்றோர், வாழ்க்கை, கல்வி, திருமணம், உத்தியோகம் – வேறு பல விஷயங்களில் இருந்த ஈடுபாடு போன்றவை பற்றி தெலுங்கிலேயே பேசி, ஆசிரியரையும் பேசவைத்தார்.

ஆசிரியர் இவற்றிற்கெல்லாம் பதில் சொன்னதால் அவர்களுக்கிடையே இருந்த இறுக்கம் சுத்தமாக மறைந்து போனது.

இந்த நேரத்தில் அங்கே வந்த ஒரு பக்தர் கன்னடத்தில் உரத்துப் பேசி ஆரம்பிக்கிறார். ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சுத்தமான கன்னடத்தில் பதில் சொல்கிறார்.

ஆசிரியருக்கு இதனால் ஏற்பட்ட வியப்பு மறைவதற்குள் இன்னொரு பக்தர் அங்கே வந்து மஹானை தனது தாய்மொழியான மலையாளத்தில் போற்றிப் புகழ்கிறார். இதனால் அவரது பேச்சுக்கு மஹான் ஒரு சிறு பிரசங்கமே செய்ய வேண்டியிருக்கிறது. அப்போது அவர் பேசிய மொழி மலையாளம்.

வருபவர்கள் எந்த மொழியில் பேசினாலும் அதே மொழியில் பதில் சொல்லும் மஹான் எந்தப் பள்ளியில் இந்த மொழிகளை படித்திருப்பார் என்று பத்திரிகை ஆசிரியர் வியந்து கொண்டிருக்கும்போதே, ஒரு பெரிய குழு அங்கே வருகிறது. அவர்கள் யாத்ரீகர்கள். அவர்களை அழைத்து வந்தவர் உள்ளூர் சம்ஸ்கிருத பண்டிதர். அவர் மஹானின் பேரில் சம்ஸ்கிருத பாஷையில் அழகான ஒரு கவிதையை வாசித்தார். மலையருவியின் நீர் வீழ்ச்சியைப் போன்ற சம்ஸ்கிருத பாஷையில் சொன்ன பாராட்டுரையைக் கேட்டு மகிழ்ந்த மஹானும், அவர்களுக்குப் பிடித்தமான சம்ஸ்கிருத பாஷையிலேயே பேசி அவர்களை ஆசீர்வதித்து பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

அடுத்ததாக, அரசாங்கத்தின் கடிதங்களுக்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்லி, எழுத வைத்து அதை சிப்பந்தியிடம் அப்போது அனுப்பி வைத்தார்.

ஆக, இந்தியாவின் புழக்கத்தில் உள்ள அவ்வளவு மொழிகளையும் மஹான் அறிந்து வைத்திருக்கிறார்.

ஆசிரியரும் இவரும் தொடர்ந்து பேச ஆரம்பிக்கும்போது இன்னொரு இடையூறு-வடநாட்டு யாத்ரீகர்கள் பலர், தங்களது உள்ளக்கிடக்கையை ஹிந்தியில் சொல்ல மஹான், அவர்களது சொந்த மொழியிலேயே ஹிந்தியிலேயே அவர்களுடன் பேசுகிறார். அவர்கள் போகும்போது அவர்கள் முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சி ஆசிரியரைப் புல்லரிக்க வைக்கிறது.

அவர்கள் போனவுடன் மஹான் மெளனியாகிவிட்டார். பேச ஆரம்பிக்கலாம் என்று நினைத்த ஆசிரியருக்கோ இது அதிர்ச்சியைத் தந்தது. அப்போது திடீரென மஹான் சொல்கிறார்:

“இப்போது இந்துமத தர்மத்தில் பல குறைகள் இருக்கின்றன. அவைகளை அடுக்கிச் சொல்லிவிடலாம். ஆனால் அதன் நன்மைகளை ஆராய்ந்தால், வானத்து நட்சத்திரங்களைப் போல் அவை கணக்கிலடங்கா” என்றார்.

தொடர்ந்து மேலும் ஒரு இடையூறு –

ஆசிரியர் சொல்கிறார்:

“இன்று எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று நினைக்கிறேன்”

மஹான் புன்னகை புரிந்தவாறு சொல்கிறார்:

“சந்தர்ப்பங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் நாளை மறுதினம் மதுரை செல்கிறோம். நீ அங்கே வரலாம். உனக்குத் தங்க வசதி செய்து கொடுக்கச் சொல்கிறேன்”.

“அவசியம் அங்கே வருகிறேன் ஸ்வாமிகளே” என்று ஆசிரியர் உத்தரவு பெற்றுக் கொள்கிறார். இந்த சம்பவத்தை சொல்வதற்குக் காரணம், ரட்சகரான மஹா பெரியவருக்கு எல்லா மொழிகளிலும் புலமையும் இருந்தது என்பதைச் சுட்டிக் காட்டத்தான். அந்த பத்திரிகை ஆசிரியரின் பெயர் ஏ.எஸ்.ராமன். அவர் அப்போது “இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இண்டியா” என்னும் பிரபல ஆங்கில வார இதழின் ஆசிரியர்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::www.periva.proboards.com
natarajan

Read more: http://www.periva.proboards.com/thread/6486/multilinguist-mahaperiyavaa-book-venkatasaam#ixzz2tAhXvmEu

” இங்கே வேலை செயரானே ஒரு பையன் குண்டுன்னு …”

‘அதுவொரு தீபாவளி சமயம்! எல்லோரும் புடவை, வேஷ்டி எல்லாம் கொண்டு வந்து தேனம்பாக்கத்தில் அவரிடம் கொடுப்பார்கள். அங்கே கிணற்றுக்குப் பக்கத்தில் ஒரு தொட்டி உண்டு. அதில் ஜவுளி வகையறா எல்லாவற்றையும் போட்டு மூடி வைத்துவிடுவோம்…”

– மீண்டும் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தில் துவங்கியது பாலுவின் உரையாடல்.

”குண்டு-ன்னு ஒரு பையன்… 18, 19 வயசு இருக்கும். இங்கே எடுபிடி வேலைகள் பார்த்துக்கொண்டிருந்தான் பெரியவாளுக்கு அவன் மேல ரொம்பப் பிரியம். ஒரு நாள் காலம்பர எங்களையெல்லாம் கூப்பிட்டுத் தொட்டியைக் காட்டினார். தொட்டி காலியாக இருந்தது; உள்ளே ஜவுளி எதுவும் இல்லை. எப்படி அத்தனையும் மாயமா மறைஞ்சு போச்சுன்னு எங்களுக்குத் தெரியலை. மகா பெரியவா எங்களைக் கூப்பிட்டு, நிறைய பட்சணம்லாம் வாங்கிட்டு வரச் சொன்னார். தீபாவளி அன்னிக்கு எண்ணெய் ஸ்நானம் பண்ண எண்ணெய் வேணுமே… அதையும் வாங்கிட்டு வரச் சொன்னார். எங்களுக்கு ஒண்ணுமே புரியலை. பட்சணம், நல்லெண்ணெய் வந்து சேர்ந்தது. பட்டாசு வேணும்னு சொன்னார் பெரியவா. அதுவும் வந்தாச்சு!

எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டு, ‘இங்கே வேலை செய்றானே ஒரு பையன் குண்டுன்னு… அவனுக்கு வெறுமனே வேட்டியும் புடவையும் இருந்தா போறுமா, தீபாவளி கொண்டாட?! அதை மட்டும் வெச்சுண்டு, பாவம் அவன் என்ன செய்வான்? நல்லெண்ணெய், பட்சணம், பட்டாசு எல்லாம் கொண்டு போய்க் கொடுத்துட்டு வாங்கோ… சட்டுனு போங்கோ!’ என்றார் பெரியவா. அப்புறம்தான் எங்களுக்கு, புடவை- வேஷ்டிகளை எல்லாம் எடுத்துண்டு போனது குண்டுதான்னு தெரிஞ்சுது. ஆனா, பெரியவாளுக்குத் துளிக்கூட அவன் மேல கோபம் வரலை!” என்ற பாலு, சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்…

”பெரியவாளுக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை… முக்குறுணிக் கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணனும்னு…” என்றவர், அது பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

”மதுரை, திருச்சி, ராமேஸ்வரம்னு சில தலங்களில் முக்குறுணிப் பிள்ளையார் உண்டு. முக்குறுணின்னா… ஆறு படி அளவு. பெரியவா அரிசி அரைச்சுட்டு வரச் சொன்னார். பிரம்மசாரி ராமகிருஷ்ணன்கிட்ட ஐம்பது தேங்காயை உடைச்சு துருவிக் கொண்டுவரும்படி சொன்னார். பூரணம் பண்ணி ஒரே கொழுக் கட்டையா செய்யணும். பெரியவா ஆலோசனைப்படி எட்டு முழ வேட்டியில் கட்டி, வரதராஜ பெருமாள் கோயில்ல இருந்து பெரிய அண்டா கொண்டு வந்தோம். அன்னிக்கு காலைலேர்ந்து சாயங்கால வரைக்கும் கொழுக்கட்டை வெந்தது.

சரி… பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணணுமே. கொழுக்கட்டையை பெரியவா முன்னாடி வைத்ததும்… ‘தேனம்பாக்கத்துல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. அங்க வாசல்படியில் வெச்சுட்டு வந்துடுங்கோ’ன்னார் பெரியவா. பக்தர்களும் அப்படியே செஞ்சாங்க. அங்க என்னடான்னா… கோயில் வாசல்ல பெரிய மூட்டை கணக்கா இருந்த அண்டாவைப் பார்த்ததும், ஊர் ஜனங்க என்னவோ ஏதோன்னு பதறிட்டாங்க. அப்புறமா, அது பிள்ளையாருக்கான நைவேத்தியம்னு தெரிஞ்சதும், கட்டைப் பிரிச்சிருக்காங்க. உள்ளே பிரமாண்ட கொழுக்கட்டை!

எல்லாருமா பிரிச்சு சாப்பிட்டதுக்குப் பிறகு, ‘சாமி, கொழுக்கட்டை நல்லா இருந்தது’ன்னு பெரியவாளை நமஸ்காரம் பண்ணினாங்க. பெரியவாளுக்கோ, பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணணும்கற ஆசை நிறைவேறியதோட, ஜனங்களுக்கு அந்தக் கொழுக்கட்டையைத் தின்னக் கொடுத்த திருப்தி!” என்ற பாலு, அடுத்து ஒரு கிரகணத்தன்று நடந்த சம்பவத்தை விவரித்தார்.

”அந்த முறை பெரியவாளோட அனுஷ நட்சத்திரத்துலேயே கிரகணம் பிடிச்சது. கிரகணம் விட்டு ஸ்நானம் எல்லாம் முடிஞ்சதும், தானம் செய்ய உட்கார்ந்தார் பெரியவா. நிறைவா பசு மாடு கொடுக்கணும். திருவட்டீசுவரன்பேட்டை வெங்கட்ராமன், பசு மாட்டுக்குப் பதிலா மட்டைத் தேங்காயை எடுத்து வைத்தார்.

அதாவது, பசு தானம் செய்ய முடியலைன்னா அதுக்கு ப்ரீத்தியாக மட்டைத் தேங்காய் கொடுப்பார்கள். ஆனா, மகா பெரியவா கோவிச்சுக்கிட்டார். ‘என்னை ஏமாத்தப் பார்க்கறியா? மாட்டைக் கொண்டு வான்னா, நல்லதா ஒரு மாட்டைத்தான் கொண்டு வரணும்’னுட்டார். அப்புறம், எப்படியோ நல்லதொரு கறவை மாடாகக் கொண்டு வந்து நிறுத்தினாங்க. அதைத் தானம் கொடுத்த பிறகுதான் பெரியவாளுக்குத் திருப்தி! அதேபோன்று பூதானத்துக்கு ப்ரீத்தியா சந்தனக் கட்டை கொடுக்கலாம். ஆனால், அப்போதும் பெரியவா, கூடலூர் கல்யாண சுந்தரமய்யர் கொடுத்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை வேறு ஒருவருக்கு அப்படியே தானமாகக் கொடுத்துவிட்டார்!

விளாப்பாக்கம் என்ற ஊரில் குமரேசன்னு ஒரு பக்தர். அவர் குடும்பத்துல யாரோ பில்லி-சூன்யம் வெச்சுட்டாங்க. குளிச்சு உலர்த்தும் ஈரத்துணியும் தீப்பிடிக்குமாம். அவர் பெண்ணுக்குக் கண்ணைத் திறக்கவே முடியாது. ஜோசியம்லாம் பார்த்தும் பலனில்லை. அவர், தன் பெண்ணை பெரியவாகிட்ட அழைச்சுட்டு வந்தார். ‘யாரோ என் பெண்ணோட கண்ணைக் கட்டிட்டா! பெரியவாதான் அனுக்கிரகம் பண்ணணும்’னு கதறினார். பெரியவா, அந்தப் பெண்ணோட கண்ணையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். அப்புறம், அவளை துர்கை சந்நிதிக்கு அழைச்சுட்டுப் போகச் சொன்னார். அம்பாளுக்கு முன்னாடி நிறுத்தி, கண்ணைத் திறக்கும்படி சொன்னார். என்ன ஆச்சரியம்..! அவளால் கண்ணைத் திறக்க முடிஞ்சுது. கண்ணைத் திறந்ததும், எதிரே துர்கை தரிசனம்… சிலிர்த்துப் போயிட்டா. அவளுக்குப் பார்வை சரியானதோடு, அன்னியிலேர்ந்து வீட்டில் துணிமணிகள் தீப்பற்றி எரிவதும் நின்னு போச்சு!”

– பாலு சொல்லி முடிக்க, அந்தக் கருணைக் கடாட்சங்களை எண்ணி, நம்மையும் அறியாமல் காஞ்சி தெய்வத்தை தொழுது பணிகிறது நம் உள்ளம்….

source::::www.periva.proboards.com

natarajan..

Read more: http://www.periva.proboards.com/thread/625/thenambakkam-incidents#ixzz2t0Olcy9I

Is the Appointment of Satya Nadella as CEO of Microsoft , A Feather in India”s Cap ?

Is the appointment of Satya Nadella a feather in India’s cap or a slap in the face for the Indian system? While Indian newspapers were over the moon about Nadella’s elevation, with some justification, there is another side to the story we need to consider: why is it that India’s tech and other geniuses flower only in the US or Silicon Valley?

Satya-Nadella_microsoft_7

 

Satya Nadella Why is it that every India-origin person to win a Nobel after independence in the sciences is not an Indian citizen any more? Hargobind Khurana won the prize for medicine in 1968, Subrahmanyan Chandrasekhar for physics in 1983 and Venkatraman Ramakrishnan for chemistry in 2009. All of them flowered only because they left India, and not because they were Indians per se. They left India behind. In fact, Ramakrishnan was downright rude when Indians called to congratulate him in 2009. He said: “We are all human beings, and our nationality is simply an accident of birth.” He also complained about “all sorts of people” writing to him and “clogging up my email box. It takes me an hour or two to just remove their mails.” While his immediate reaction may seem churlish to us, underlying it all is the real issue: our “Indian” successes abroad have little to do with the fact that they are Indian. They succeed because they abandoned India. We need to ask ourselves: why does our system kill future heroes, while the US helps raise even ordinary Indians to iconic levels? It would not be out of place to mention that it is well-nigh impossible for 99 percent of Indian aspirants to get admissions even to an IIT or IIM, but it is far simpler to get into an Ivy League institution. If you don’t get into an IIM, you try Harvard. The short point: our system is designed to keep people out, not get them in. The true value of an IIT or IIM is not the intellectual capital they produce, but their filtering expertise – which keeps all but the superlisters out of these institutions. When the people entering the institution are the best among the best, they will shine no matter what the quality of faculty or the curriculum. Perhaps this comes from our caste system, where castes try and keep others out, but we are stuck with this system of exclusion. Our system encourages talkers rather than doers.We think this makes us “argumentative” and democratic, but what this actually makes us is obstructionist rather than problem solvers. Our politics is about name-calling and running others down, not about doing something yourself. A Narasimha Rao and a Vajpayee who achieved something are voted out; a UPA-1 which did little beyond distributing taxpayers’ resources is voted in. This is one reason why we celebrate the rare achievers so highly: TN Seshan, who armed the Election Commission with real teeth, Vinod Rai, who made CAG a household name, and E Sreedharan, the former boss of the Delhi Metro. And yet, we find the political class carping about them and calling them dictators. This is also the reason why we prefer autocratic rulers rather than democratic ones: we know we talk more than we act. To get things done, we prefer an autocrat to rule over us rather than exercise self-discipline as democrats. All our successful political parties are one-person shows. The latest heading in that direction is BJP – which was all talk and no achievement for 10 years in opposition till Narendra Modi came along and was lauded for being a doer. If leaders emerge from our system, it’s due to a historical accident. As Ramchandra Guha points out in his book Patriots and Partisans, if Lal Bahadur Shastri had lived five more years, Indira Gandhi would not have been PM and Sonia Gandhi would still be a housewife. We are risk-avoiders rather than risk takers. This is why we prescribe endless paperwork and bureaucracy for simple things like opening a bank account or buying a mobile phone connection. A terrorist would have used an untraceable mobile number – after which every Indian buying a mobile will be put through hoops to prove he is a bonafide consumer. This does not catch any terrorist, but the idea is for officials to avoid the risk that fingers will be pointed at you saying you did nothing to prevent terrorism. So orders will be issued to tighten the system and make things worse for everybody. A scam will happen somewhere. Suddenly files stop moving in every ministry. Forest clearances will take ages – or never happen. The risk of being seen as doing something wrong is great. And so the buck is passed to someone else in the system. Sonia and Rahul want to be seen as do-gooders. So the dirty work of reform will be handed over to Manmohan Singh – who is another risk-avoider. He will do nothing and allow the A Rajas to loot the exchequer rather than do his job. Doing nothing is safer than asking tough questions of his babus or ministers. The BJP and other opposition leaders know that populist laws like the Food Security and Land Acquisition laws will damage the fiscal balance. But they too avoid risks by keeping quiet when wrong laws are passed. As a people, we are risk-avoiders as well. We know the IITs and IIMs are the way to big jobs. So when our kids want to become artists or cricketers, we tell them to forget it and study for IIT-JEE or CAT, never mind your own passion. Our engineers stop being engineers and start coding; they then opt for doing an MBA and become lousy man managers. Meanwhile, our engineering companies are starved of engineers. We are simply unable to tolerate success. If Modi talks about a Gujarat model, everybody has to bring it down. If Rahul claims his government’s biggest achievement is the RTI, everyone will belittle it. If Chidambaram claims high growth as UPA’s success, the Left will say this growth is not helping the poor. If we say poverty has reduced, others will say it hasn’t. If it has, our definition of poverty must be wrong. We celebrate mediocrity, rather than excellence. Our system kills initiative rather than engender it. We want pliable yes-men and non-achievers around us, not non-conformists and people with ideas of their own. Our successes are more the result of accident than real effort. The 1991 external bankruptcy forced us to reform and liberalise. Manmohan Singh’s reformism ended with that accident. Another accident made him PM in 2004, but he did little to use this chance to reform further. We are paying the price for his risk-aversion. A Satya Nadella, who is from Manipal , would never have made it big in India since he is not from the IITs. But even IITians don’t flower much in an Indian corporate or academic environment; they leave India and prefer working with foreign firms. If Satya Nadella had remained in India, he would probably be working as a coder in Infosys or TCS. Earning a high salary no doubt, but an unlikely candidate for CEO.

source::::www.firstpost.com

natarajan
Read more at: http://www.firstpost.com/india/nadella-as-microsoft-ceo-a-slap-in-the-face-for-indian-system-1374951.html?utm_source=ref_article

” இட்லி என்று பெயர் எப்படி வந்தது … ?” !!!

வாழ்க்கைக்கும் சாப்பாட்டுக்கும் சம்பந்தம்

மஹான் சாப்பிடுவது என்னவோ அவல்பொரிதான். எப்போதாவது கீரையை தமது மதிய உணவில் சேர்த்துக் கொள்வார் என்று மடத்து ஊழியர்கள் சொன்னது உண்டு. இருந்தாலும் சமையல் பக்குவத்தைப் பற்றி அவர் சொல்வதைக் கேட்டு பிரபல சமையல்காரர்களே மூக்கில் விரல் வைத்திருக்கிறார்கள்.

அவ்வப்போது மடத்திற்கு அரிசி, பருப்பு, உளுந்து என்று பக்தர்கள் மூட்டை மூட்டையாகக் கொண்டுவந்து கொடுப்பார்கள். ஒரு தடவை பக்தர் ஒருவர் தன் தோட்டத்தில் பயிரான கருணைக்கிழங்கை மூட்டையாகக் கொண்டு வந்து கொடுத்தார். மடத்தில் சிப்பந்திகள் மிகவும் திருப்தியாக அதை மசியல் செய்து எல்லோருக்கும் பரிமாறினார்கள். சாப்பிட்டவர்கள், முதலில் அதை எடுத்து வாயில் போட்ட பிறகு அதைத் தொடவே இல்லை. இலையில் மூலையில் அதை ஒதுக்கி வைத்து விட்டனர். ஏனெனில் கிழங்கு மசியல் நாக்கில் பட்டவுடன் அரிப்பு ஏற்பட்டு விட்டது. அதனால்தான் ஒதுக்கிவிட்டார்கள்.

இந்த ’மசியல் பகிஷ்காரம்’ மஹானின் காதுக்குப் போகாமல் இருக்குமா?

சமையல் செய்தவர்கள் மஹானின் முன்னால் கையைக் கட்டிக் கொண்டு விசாரணையை எதிர்பார்க்கும் குற்றவாளிகளைப் போல் நின்றுகொண்டு இருந்தார்கள்.

அவர்கள் எல்லோரும் பயந்தபடி ஏதும் நடக்கவில்லை. அமைதியான குரலில் மஹான் கேட்டார்:

“எப்படிச் சமையல் செய்தாய்?”

“கழுநீரில் நன்றாக அலசியபிறகு புளிவிட்டுக் கொதிக்க வைத்தேன்… இந்தக் கிழங்கு அதற்கெல்லாம் மசியவில்லை… அதனுடைய குணம் மாறவில்லை..” என்று பிரதம சமையல்காரர் குறைப்பட்டுக் கொண்டார்.

பெரியவா சிரித்தபடியே சொன்னார்:

“கருணைக்கிழங்கை வெந்நீரில் வேகவைக்கும்போது அதோடு வாழைத்தண்டை சிறிதாக நறுக்கிப் போட வேண்டும். இரண்டும் நன்றாக வேகும்போது, கருணையின் குணம் மாறிவிடும்” என்றார்.

மறுநாள் இந்த முறைப்படி சமைத்தபோது எல்லோரும் விரும்பி, கேட்டுச் சாப்பிட்டார்கள்.

சமையல் விஷயத்தில் மஹானின் இன்னொரு அனுபவம்.

பண்டிதர் ஒருவர் மஹானிடம் பேச வந்தார். அவரிடம் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்து விட்டு, மஹான் ’‘இட்லி’ என்று ஏன் பெயர் வந்தது?’ என்று கேட்டார்.

ஏதோ புதிய விளக்கம் தருவதாக நினைத்த அந்தப் பண்டிதர் சொன்னார்:

“இலையில் இட்லியைப் போட்டவுடன் அது காலியாகி விடுகிறது. இட்டு+இல்லை=இட்டிலை-இட்லி” என்றார்.

மஹான் சிரித்துக்கொண்டே அவரிடம் கேட்டார்:

“இலையில் இட்லி விழுந்ததும் எல்லோரும் அதை இல்லையின்னு ஆக்கிடும் சாத்தியம் நம்பும்படியாக இல்லையே. என்னை மாதிரி எத்தனையோ பேர் அதை இலையிலேயே வச்சிண்டு உட்கார்ந்து இருக்காளே, அதனால் நீங்கள் சொல்ற விளக்கம் சரியில்லை.”

”பெரியவா சொன்னா கேட்டுக்கிறேன்….”

“ஏதாவது நாம் சமைக்கிறோமுன்னா, அதுக்குக் கொஞ்சம் சிரமம் எடுத்துக்கணும் இல்லையா?”

“அடுப்புப் பக்கத்துலேயே நிக்கணும். கருகிப் போகாமப் பாத்துக்கணும். இல்லேன்னா பக்குவம் கெட்டுப் போகும் இல்லையா? இட்லியை எடுத்துக்கோங்கோ. அதை ஊத்தி வச்சுட்டு பத்து நிமிஷம் அதை மறந்து அந்தண்டை போய் வேறு வேலையைக் கவனிக்கலாம். தானாக வெந்து, பக்குவமாக இருக்கும். ஒன்றை வைத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் வருவதை இடுதல் என்கிறார்கள். ‘இடுகாடு, இடுமருந்து’ என்பது போல் இட்லி என்று பெயர் வந்திருக்கலாம்” என்று முடித்தார் எல்லாம் தெரிந்த ஞானியான மஹான்.

மிகப்பெரிய விஷயங்கள் மட்டுமல்லாமல் சிறு சிறு விஷயங்களுக்கும் அவர் அளிக்கும் விளக்கங்கள் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டன. சமையல் விஷயமாக அவர் சொன்ன கருத்துக்கள் காஞ்சிமடத்தில் இன்றும் உலா வருகின்றன.

ஒருநாள் மடத்து சமையல்காரர் ஒருவர், மடத்திற்கு சமையல் செய்ய பெருங்காயம் அதிகமாகத் தேவை என்று விண்ணப்பம் கொடுக்க, “சாம்பார், ரசம் வைக்கும்போது தனித்தனியாக பெருங்காயத்தை போடக்கூடாது. நீ பருப்பை சாம்பாருக்காக வேக வைக்கும்போது அதில் பெருங்காயத்தைப் போட்டுடு. அதே பருப்பு தானே சாம்பார், ரசம் வைக்க உதவுகிறது. அதில் பெருங்காய வாசனை இல்லாமலா போகும்? இப்படி செய்து பார். அதிகப் பெருங்காயம் தேவைப்படாது…” என்று மஹான் விளக்கமாகச் சொன்னார். இத்தனை நாள் சமையல் செய்யும் தனக்கு இந்த உத்தி தெரியவில்லையே என்று புலம்பினார் சமையல்காரர்.

இன்னொரு சம்பவம் – ‘ரசமான விவாதம்’ :

அதாவது குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்?

“இரண்டிலுமே பருப்பு, புளி, உப்பு, சாம்பார்பொடி பெருங்காயம் தானே இருக்கு?”

அங்கிருந்த பக்தர்கள் “சாம்பாரை முதலிலும் ரசத்தை பின்னாலும் சாப்பிடுகிறோம், அதுதான் வித்தியாசம்” என்றார்கள்.

மஹான் பெரிதாகச் சிரித்தார்.

“குழம்பில் காய்கறி உண்டு. ரசத்தில் இல்லை. இதுதான் வித்தியாசம்” என்றார்.

இந்தக் குழம்பையும் ரசத்தையும் வைத்து அன்று ஒரு சிறிய பிரசங்கத்தையே எல்லோருக்கும் விளக்கமாகச் சொன்னாராம்.
அவர் சொன்னதன் கருத்து என்ன?

“தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்று விட்டதால், நாம் குழம்பிப் போகிறோம். அதாவது சாம்பார் போல்… ஆனால் இது இல்லையென்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல. இவைகளை மறக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் தினமும் குழம்பு ரசம் வைக்கிறோம். நீங்கள் விருந்துக்குச் சென்றால் குழம்பு, ரசம், பாயசம், மோர் என்று வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா? இந்த உணவுக்கலாசாரம் வேறு எங்கேயும் இல்லை. மனிதன் பிறக்கும் போதே அவன் மனதில் ‘தான்’ என்னும் அகங்காரம் இடம் பிடித்து வருகிறது. அவன் பலவிதமான குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது. இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் ‘குழம்பு’ எடுத்துக் காட்டுகிறது. அது தெளிந்துவிட்டால் ரசம் போல் ஆகிவிடுகிறது. இவற்றை தொடர்வது இனிமை, ஆனந்தம் அவைதான் பாயசம் – மோர் – பட்சணம் – இதைப் போல் மனிதனின் வாழ்க்கைக்கும் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு.

மோர் தனித்தன்மை வாய்ந்தது. பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது உதவுகிறது. பாலிலிருந்து தயிர், வெண்ணை, நெய் மோர் என்று தொடராகப் பொருட்கள் நமக்குக் கிடைக்கின்றன. மோர்தான் கடைசி நிலை. அதிலிருந்து நீங்கள் எதையுமே எடுக்க முடியாது.

அதனால் தான் பரமாத்மாவைக் கலந்தபின், மேலே தொட ஏதும் இல்லை என்பதை மோர் தெளிவாக்குகிறது. அதாவது மோர் சாதம் முடிந்தால் இலையை விட்டு எழுந்திருக்க வேண்டாமா?” என்று அன்றைய தினம் நீண்ட பிரசங்கமே செய்து விட்டார் மஹான்.

நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டைப் பற்றிய விளக்கத்தை இதுவரை, இதைப்போல் யாரும் சொன்னதே இல்லை. இவர் சகலமும் தெரிந்தவர் என்பதற்கு இதைப் போல் எவ்வளவோ எடுத்துக்காட்டுகள், தெய்வீகத்தைத் தவிர அவருக்கு வேறு ஏதும் தெரியாது என்று நினைப்பவர்கள், மஹானை சரிவர அறியாதவராகத்தான் இருப்பார்கள்.

source:::: http://www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/6446/life-kanchi-swamis-lectures-venkatasaamy#ixzz2sWGfShHA

Albert Einstein…Few Lighter Moments in the Life of This Genius !!!

Great minds do not ponder over small things!

Albert Einstein’s wife often suggested that he dress more professionally, when he headed off to work.

“Why should I?” He would invariably argue.  Everyone knows me there.”

When the time came for Einstein to attend his first major conference, she begged him to dress up a bit.

“Why should I?” said Einstein.  “No one knows me there!

=======================================================

Albert Einstein was often asked to explain the general theory of relativity.

“Put your hand on a hot stove for a minute, and it seems like an hour,” he once declared.

“Sit with a pretty girl for an hour, and it seems like a minute.

That’s relativity!”

=======================================================

One day while working in Princeton University, Albert Einstein forgot his home address when he was going back home. The driver of the cab did not recognize him.

Einstein asked the driver if he knows Einstein’s home. The driver said “who does not know Einstein’s address?  Everyone in Princeton knows. Do you want to meet him?”

Einstein replied, “I am Einstein. I forgot my home address, can you take me there?

“The driver reached him to his home and did not even collect his fare from him.

=============================================

Einstein was once travelling from Princeton on a train when the conductor came down the aisle, punching the tickets of every passenger. When he came to Einstein, Einstein reached in his vest pocket. He couldn’t find his ticket, so he reached in his trouser pockets. It wasn’t there, so he looked in his briefcase but couldn’t find it. Then he looked in the seat beside him. He still couldn’t find it.

The conductor said, ‘Dr. Einstein, I know who you are. We all know who you are. I’m sure you bought a ticket. Don’t worry about it.’

Einstein nodded appreciatively.

The conductor continued down the aisle punching tickets. As he was ready to move to the next car, he turned around and saw the great physicist down on his hands and knees looking under his seat for his ticket. The conductor rushed back and said, ‘Dr. Einstein, Dr. Einstein, don’t worry, I know who you are. No problem. You don’t need a ticket. I’m sure you bought one.’

Einstein looked at him and said, ‘Young man, I too know who I am. What I don’t know is where I’m going. That’s why I am searching my ticket”

 =======================================================

At college Einstein fell madly in love with the only woman in his physics class, a dark and intense Serbian named Mileva Maric.

She served as a sounding board for his scientific ideas and helped to check the math in his papers, but eventually their relationship disintegrated.

Einstein offered her a deal.  He would win the Nobel Prize someday, he said; if she gave him a divorce, he would give her the prize money.

She thought for a week and accepted.

Because his theories were so radical, it was seventeen years after his miraculous outpouring from the Patent office before he was awarded the prize and she collected!

=======================================================

THE COSMIC TRUTH! LIFE IS LIKE RIDING A BICYCLE.  TO KEEP YOUR BALANCE YOU MUST KEEP MOVING! –Albert Einstein, in a letter to his son Eduard, February 5, 1930

source:::::::::::::: input from a friend of mine

natarajanFew

“அதாவது ஹார்ட் ஹோலா இல்லை …அதில் ஹோல் இருக்கு …”

“என் பெண்ணுக்கு இருதயத்தில் ஓட்டை இருக்கிறதாம். டாக்டர்கள் சொல்வதை கேட்டாலே குலை நடுங்குறது” என்று முறையிட்டார் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர்.

“அதாவது, ஹார்ட், ஹோலா இல்லை; அதில் ஹோல் இருக்கு என்கிறே?”

ஆசிரியருக்கு புரியவில்லை. கேள்வி கேட்டு பழக்கம். கேள்வி கேட்கப்பட்டு பழக்கம் இல்லை.

“ஹார்ட், W-H-O-L-E ஆக (முழுமையாக, பூரணமாக) இல்லை; அதில், H-O-L-E இருக்கு என்கிறே?”

ஆசிரியர் பெருமூச்சு விட்டார். (அவரை பெஞ்சு மேல் நிற்க சொல்லவில்லை, பெரியவா!)

“வேறே என்ன வேலை பண்றே?”

ஆசிரியர் விழித்தார். “நான் ஆசிரியத் தொழிலை தவிர வேறு வேலையும் செய்கிறேன்’ என்பது பெரியவாளுக்கு எப்படி தெரியும்? “வேறு வேலை எதுவும் இல்லை” என்று சொல்லிவிட்டால் போகிறது! பெரியவாள் குடைந்து கொண்டா இருக்க போகிறார்கள்?

அந்த தெய்வ சந்தியில் பொய்சொல் வெளியே வர அஞ்சியது போலும்!

“தங்கம், வைரம்… வியாபாரம்…” என்று மென்று விழுங்கினார்.

பெரியவாள் கனிவுடன் சொன்னார்கள்:

“பெரிய பெரிய வியாதியெல்லாம் கூட, தான – தர்மங்கள் செய்தால் போய்விடும் என்று சொல்லியிருக்கு. இங்கே ஏழைகள் வந்து, கல்யாணத்துக்குத் திருமாங்கல்யம் கேட்கிறார்கள். நூற்றெட்டு திருமாங்கல்யம் செய்து வந்து கொடு. கேட்பவர்களுக்கு கொடுக்கலாம்…”

அடுத்த மாதமே நூற்றெட்டு திருமாங்கல்யம் கொண்டு வந்து சமர்பித்தார், ஆசிரியர் பணி செய்யும் தங்க வியாபாரி.

“Good – hearted ன்னு இங்கிலிஷ்லே சொல்லுவா. நீயும் உன் புத்திரியும் good – hearted!” என்றார்கள் பெரியவாள்.

அப்புறம், பெரியவாள் வாக்குக்கு மேலே என்ன மருந்து வேண்டும்?

தேவாமிர்தம் பருகியவனுக்கு பாயசம் எதற்கு?

ஆசிரியரின் பெண் சௌபாக்யவதியாக இருக்கிறாள் – whole hearted ஆக!

source::::www.periva.proboards .com

natarajan

Read more: http://www.periva.proboards.com/thread/943/hole-heart#ixzz2s5N0GAWa