“இறைவன் சிவபிரானை தீபமங்கள ஜோதியாக வழிபடும் பெருவிழா…கார்த்திகைதீபத் திருவிழா “

கார்த்திகை தீபத்திருநாளாவது தமிழ் மாதமான கார்த்திகைமாத பௌர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நன்னாளில், தமிழர்கள் தமது கோவில்களிலும் வீடுகளிலும் நூற்றுக்கணக்கான தீபங்களை அடுக்கடுக்காக ஏற்றி, இறைவன் சிவபிரானை தீபமங்கள ஜோதியாக வழிபடும் பெருவிழாவாகும்.

கார்த்திகைத் தீபத்தன்று திருவண்ணாமலைதனில் ஏற்றப்படும் தீபமானது சைவ இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான விழாவாகும். எல்லாம்வல்ல பரம்பொருளான அண்ணல் சிவபிரான், அன்று ஜோதி வடிவில் காட்சியளிக்கிறான். அயனாலும் திருமாலாலும் அடிமுடி காணவொண்ணாத அவ்விறைவனைப் போற்றும்வண்ணம் பக்தர்கள் மலைமீது மங்களஜோதியை ஏற்றி வழிபடுகின்றனர்.

தொல்காப்பியர்

கார்த்திகைதீபத் திருவிழா மிகப்பழமையான திருவிழாவாகும். கார்த்திகைத் திங்களில் கார்த்திகை நட்சத்திரத்தன்று பௌர்ணமி தினத்தில் ஏற்றப்படும் தீபத்திருவிளக்கைப்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. சங்கம் மருவிய கால இலக்கியமான கார்நாற்பதில் காணும்

நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட

     தலைநாள்  விளக்கின் தகையுடையவாகி

     புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி

     தூதொடு வந்த மழை

எனும் இந்தப் பாடல் கார்த்திகைத் திருநாளில் ஏற்றப்படும் தீபத்தினைக் குறிக்கின்றது.

‘கார்கால விழாக்களில் ஒன்றான கார்த்திகைதீபத் திருநாளில் மக்கள் ஏற்றி வைத்துள்ள முந்தைய நாளின் விளக்குகளைப்போன்று தோன்றி, மலர்கள் அழகாகப் பூத்துள்ளன. தலைவனின் வருகையை அறிவிக்கும் தூதனாக மழை வந்துள்ளது,’ என்பது பொருள்.

இதேபோன்று களவழிநாற்பதிலும் போர்க்களக் காட்சிகளை வர்ணிக்கும்போது, ‘போரிடும் வீரர்களின் உடலிலிருந்து பெருகும் குருதியானது கார்த்திகைத் திருவிழாவில் கூட்டம்கூட்டமாக ஏற்றப்பட்ட விளக்குகளைப்போலக் காட்சியளிக்கின்றது,’ என்கிறார் புலவர்.

கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்குப் போன்றனவே.’

(சாறு- திருவிழா; கழி- கூட்டம்)

இத்தகையதொரு பழமையான திருவிழாவைக் கொண்டாடும் போதில், இதைப்பற்றி  மிகவும் நயம்பட தமிழ்ச்சுவை நிரம்ப எழுதப்பட்டதொரு நூலினை நாம் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டும். சோணாசலம், சோணகிரி எனும் பழம்பெருநகரமாகிய திருவண்ணாமலையில் உறையும் இறைவனின் புகழாக சோணாசல முதலியார் (பாரதியார்) எனும் பெரும்புலமை வாய்ந்த பக்தர்கார்த்திகைத் தீபவெண்பாஎனும் நூறுபாடல்கள்கொண்ட நூலினை இயற்றியுள்ளார். இப்பாடல்கள் அனைத்திலும் ஈசனின் திருவிளையாடல் பற்றிய தொன்மங்களையும், அவன் மகிமைகளையும்பற்றிக் கூறி, அவனையே திருக்கார்த்திகைத் தீபம் என இனிதாக வர்ணனைசெய்துள்ளார்.

‘திருவண்ணாமலை அன்பர் தபோதனரை வாவென்று அழைக்கும் மலை’ எனப்படும். அருணாசலத்தின் பெருமை பக்தர்களையும் புலவர்களையும் மிகவும் கவர்ந்துள்ளது எனலாம்.  இதனால்தானோ என்னவோ இம்மலையில் தங்கியிருந்தவர்கள் நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றினர்.  இதனாலேயே குரு நமச்சிவாய சுவாமிகள்,

நண்பாக் குகையில் நமச்சிவா யன்கருத்தில்

வெண்பாப் பயிராய் விளையுமலை,’

எனக்கூறினார்.

karthikaideepam1

திருவண்ணாமலையில் வெண்பாவே பயிராக விளைகிறது என்றார். இம்மலையில் தங்கி வாழ்ந்தவர்களுள் ஒருவரே சோணாசல பாரதியார்.

கார்த்திகைதீப ஒளியைக் கற்பனை நயம்படக் கூறுவது மிகவும் ரசிக்கத்தக்கதாகும். பொருளும், நயமும், கருத்தாழமும் செறிந்த பாடல்கள் இவை. கார்த்திகைதீபக் காட்சியை பல்வேறு விதங்களில் பகிர்கின்றது கார்த்திகைத்தீபவெண்பா. உதாரணமாக ஒரு வெண்பா,

கற்றலுடன் கேட்டுணர்ந்து காதலுடன் சிந்தித்தோர்க்(கு)

உற்றதுணையாய் உறுதீபம்சொற்றகதிக்(கு)

ஏணிநிகர் சோணகிரி ஏர்முடிமேல் அஞ்சலெனும்

பணிநிகர் கார்த்திகைத் தீபம். (43)

என்கின்றது.

கற்று, கேட்டு, இறைவன் பெருமைகளை உணர்ந்து அன்புடன் வழிபடுவோருக்கு, அவனே அத்தீபம்போல உறுதுணையாய் நிற்கின்றான். சோணகிரியின் அழகிய உச்சியில் அஞ்சேல் என அபயமளித்தபடி கார்த்திகைத் தீபமாக விளங்குகிறான் ஈசன். அண்ணாமலையே ஈசன் – அவனே கார்த்திகைத் திருத்தீபம்.  எத்தனை உண்மை பொதிந்த சொற்கள்!

சோணாசல பாரதியார் காலம் 1858- 1925 ஆகும்.

முதற்பாடல் அயனும் திருமாலும் இறைவனது அடிமுடியைத் தேடிய நிகழ்வை அழகுறச் சித்தரித்து, நூலின் முதற்பாடலாக அமைந்துள்ளது.

கங்கையணிதீபம் கற்பூர தீபமலை

மங்கையொருபங்கில் வளர்தீபம்பங்கயன்மால்

விண்பாரு நேடும்வண மேவியவண்ணாமலையிற்

பண்பாருங் கார்த்திகைத்தீ பம். (1)

கங்கையணிந்தவனும் மலைமங்கையின் பங்கில் வளர்வதுமான தீபம்; ஈண்டு தீபம் எனும் சொல் இறைவன் எனும் சொல்லாக ஆளப்பட்டுள்ளது. நூல் முழுமையுமே இவ்வண்ணமே சொல்லாட்சியைக் காண்கிறோம்.

அரியும், அயனும் அய்யன் அடிமுடி தேடல்

இன்னொருபாடலில் மதுரை வீதியில் இறைவன் வளையல் வியாபாரியாகச் சென்ற கதை கூறப்படுகின்றது.

பந்துமுலைப் பாவையர்க்காம் பாங்காரும்கூடலிலே

வந்து வளையல் விற்ற மாதீபம்கொது

மலர் மலியும் சோணமலைத் தீபம் போற்றிப்

பலர் மலியும் கார்த்திகைத் தீபம். (4)

கற்பிற்சிறந்த மனையாளொடு வாழ்ந்த நீலகண்டரிடம், கொடுத்துவைத்த திருவோட்டைக் கவர்ந்து ,அவரை ஆட்கொண்ட கதை வேறொரு பாடலில் கூறப்படுகிறது. இங்கு அண்ணாமலையின் இயற்கைவளமும் அழகுற விளக்கப்படுகின்றது: ஆடுகின்ற மயில்களின் ஆட்டத்திற்கொப்ப வண்டினம் இசை பாடும்;  அத்தகு அருணைமலையின்மீது ஒளிரும் கார்த்திகைதீபம் என்று ஈசனை ஏத்துகிறார்.

நீடுகற்பி னாளுடன்வாழ் நீலகண்டர் தம்மிடம்வந்

தோடுகவர்ந்த தாண்ட வொருதீபமாடுமயிற்

கொக்கவிசைவண்டினம்பாடோங் கருணைவெற்பின்மிசைப்

பகீகமிகுங் கார்த்திகைத்தீ பம். (7)

இறைவனை உண்டென்று கூறும் நல்மனத்தோருக்கு உள்ளதாகவும், இல்லை எனும் கள்ளமனத்தோர்க்கு இல்லையென்பதாகவும் ஆகிவிளங்கும் தீபவடிவானவன். சடைமுடிகொண்டு அருணாசலத்தில் திகழும் கார்த்திகைத்தீபம்.

சிவன் மதுரையில் வளையல் விற்ற திருவிளையாடல்

உள்ளதென்னு நல்லோர்கட் குள்ளதா வில்லதெனுங்

கள்ளமனத் தோர்க்கின்பதாக் காண்தீபம்வெள்ளமதி

மேவுசடைத் தீபம் வியன்கொளரு ணாசலத்திற்

பாவுபுகழ்க் கார்த்திகைத்தீ பம். (13)

இப்பாடல்களில் இடையிடையே தொன்மங்கள் (அயனும் மாலும் அடிமுடி தேடியது, நீலகண்ட நாயனாருக்கு அருளியது, வளையல் விற்றது) பின் இறைவனின் கருணை, அவன் அடியார்களுக்கருளும் முறைமை இவற்றினையும் கூறி, நமது இருவினைகளும் ஒழிய அவனை ஏத்துவதால் விளையும் இன்பம், ஆனந்தம் ஆகிய இவற்றை, அருணையின் இயற்கைவளத்தினோடும் கலந்து விரவி, அழகான கதம்ப மலர்மாலையாக இவ்வெண்பா நூல் அழகுற விளங்குவது மிகுந்த வியப்பினை உண்டுபண்ணுகின்றது.

‘அவனைப் போற்றுவோர்க்கருளும் புண்ணிய தீபம்;  நாம்செய்த வினைகளுக்கு மாற்றுமருந்தான மணித்தீபம்;  வேதங்கள் போற்றுவதும் எண்ணுதற்கரியதுமான சோணமலையில் உயர்ந்து ஓங்கிவளர்ந்து காணும் தீபம்;  புகழ்வதற்கும் சொற்களற்ற அரியதான கார்த்திகைத் தீபம்,’ என்கிறார்.

போற்றுமடி யார்க்கருளும் புண்ணியதீ பம்வினையை

மாற்றுமருந் தாகு மணித்தீபஞ்சாற்றுமறை

யுன்னரிய சோணமலை யோங்கிவள ருந்தீபம்

பன்னரிய கார்த்திகைத்தீ பம்.  (15)

திருநீலகண்ட நாயனாருக்கு மீண்டும் இளமையளித்தல்

இடையே ஒரு திருவிளையாடல் கதை:

பாணபத்திரர்

மதுரையின் ஆஸ்தான பாடகனான பாணபத்திரனுக்குச் சத்துருவாக வந்த ஏமநாதன் எனும் வடக்கத்திப் பாடகனை, அவன் நாணமுற்று ஓடுமாறு தான் பாடியருளிய தீபம்;  அயனும் அரியும் காணாத அண்ணாமலையில் மாந்தர் செய்தவத்தின் பயனாய் விளங்கும் கார்த்திகைதீபம்.

பாணனுக்கோர் சத்துருவாம்பாடகனைக் கூடலிலே

நாணமுற்றோ டப்பாடு நற்றீபம்பேணி

அயனுமரி யும்காணா அண்ணாமலையிற்

பயனுருவாங் கார்த்திகைத்தீ பம். (23)

நமது அறியாமைதனைப் போக்கியருளும் தீபம்; போக்கியது மட்டுமின்றி, ஆனந்தமயமாகிய மெய்ஞானத்தினை நமக்குக் காட்டியபடி மிளிர்கின்ற தீபம்: சோணகிரி சித்தர்கள் நிறைந்த மலை. அச்சித்தர் பெருமக்கள் மகிழும் வண்ணம்  ஒளிரும் சோணகிரித் தீபம்; பணிந்து வணங்கும் பக்தர்கள் மகிழும் கார்த்திகைத் தீபம்,” என்கிறார்.

அஞ்ஞானம் போக்கி யருடீபமானந்த

மெய்ஞ்ஞானங் காட்டி மிளிர்தீபம்எஞ்ஞான்றுஞ்

சித்தர்மகிழ் சோணக்கிரித்தீபம் பணிந்தேத்தும்

பத்தர்மகிழ் கார்த்திகைத்தீ பம். (27)

‘அடியார்களின் பிறவிப்பிணியைத்தீர்க்கும் தீபம்; செய்த கொடிய கர்மவினைகளைப் போக்கியருளும் தீபம்; மன்மதனை அங்கமிலாத அனங்கனாக்கிய ஈசனெனும் தீபம்; அண்ணாமலைத் தீபம்; குறையொன்றுமில்லாத திருக்கார்த்திகைத்தீபம்.’

சென்மப் பிணிதீர்க்குந் தீபமடி யார்செய்கொடுங்

கன்மவினை போக்குங் கனதீபமன்பதனை

அங்கமிலா தாக்கியரு ளண்ணா மலைத்தீபம்

பங்கமிலாக் கார்த்திகைத்தீ பம். (31)

இரு குழந்தைக் கடவுள்களைத் தந்தருளிய தீபம்; கந்தன் ஒருவன்; இன்னொருவன் காரானை மாமுகத்து தந்தம்கொண்ட வேழமுகத்து கணபதி.  எம்மை என்றென்றும் கண்களால் நோக்கி அருள்புரியும் சோணமலைத் தீபம்;  தொழும் அன்பர்களுக்கு நல்வாழ்வுதரும் கார்த்திகைத் தீபம்.

கந்தனையு ஞானமதக் காரானை மாமுகத்தோர்

தந்தனையுஞ் சேயாத் தருதீபமெந்தமைக்க

ணோக்கியருள் சோணமலை நோன்றீப மன்பருக்குப்

பாக்கிமாங் கார்த்திகைத்தீ பம். (39)

இசைப்பண்ணுடன் தேவாரம் பாடியருளிய மூவரான சுந்தரர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோருக்கு இமவான்மகளான பார்வதியுடன் தோன்றித் தரிசனம்தரும் தீபம்.  விண்ணளாவப் பொருந்த ஆகாயத்திற்கும் பூமிக்குமாக நிற்கும் அண்ணாமலையைப்போல் ஓங்கிவிளங்கும் கருணைகொண்ட கார்த்திகைத் தீபம்.

பண்ணுடனே தேவாரம் பாடுமு வர்க்கிமவான்

பெண்ணுடனே தோன்றும் பெருந்தீபம்விண்ணுடனே

சேரமலை வான்புவிக்காச் செல்வதுபோ லோங்கருணைப்

பாரமலைக் கார்த்திகைத்தீ பம். (43)

அகந்தைகொண்ட தாருகாவனத்து முனிவர்கள் தன்மீது ஏவிய வேங்கைதன்னைக் கூரான தனது நகத்தினாலுரித்துத் தோலினை அணிந்துகொண்ட தெய்வம். ஓங்கி உயர்ந்த மேருமலை, மேலும் எட்டுத்திக்குகளிலும் உயர்ந்த மற்றமலைகளினும் உயர்ந்து, அருணையில் பாங்குடன் ஒளிரும் கார்த்திகைத் தீபம்.

தாருவன மாதவர்க டாம்விடுத்த வேங்கைதனை

கூருகிரினா லுரித்துக் கொள்தீபமேருமுக

லோங்குமலை யெட்டினுமிக் கோங்குமருணாசலத்திற்

பாங்குமலி கார்த்திகைத் தீபம். (52)

இடையிடையே  திருவிளையாடல் புராணத்தினின்றும் கதைகளை இணைத்துப் பாடியுள்ளார் சோணாசல பாரதியார்.

நன்மைகளைச் செய்துவந்தவளான பொன்னனையாள் எனும் பெண் குடியிருந்த திருப்பூவணம் எனும் ஊரில் ரசவாத வித்தையைச் செய்த தீபம்;  வழிப்போக்கர்கள் எவ்வாறு தம் வண்டிமாடுகளை இச்சோணகிரியில் இளைப்பாற்றிக்கொண்டனர் எனப் பாங்குற விவரிக்கிறார்.  சோணமலையில் அழகிய சுனைகள் – அவற்றில் வண்டிமாடுகளையும் கன்றுகளையும் நீரருந்தி இளைப்பாறச்செய்து போகும்படி அருளும் கார்த்திகைத்தீபம்.

நன்றுபுரி பொன்னனையா னண்*ணுதிருப் பூவணத்திற்

சென்றுரச வாதமது செய்தீபங்கன்றுகளுக்

கம்பிடிகை யாலருத்தி யாடுசுனைச் சோணமலைப்

பம்பிவளர் கார்த்திகைத் தீபம். (53)

ஞானசம்பந்தப் பெருமானுக்கு முத்துச் சிவிகையும் சின்னமும் அளித்த தீபம்.

செந்நெல் விளையும் கழனிகள் சூழ்ந்த அருணாசலமலைமீது ஒளிரும் பழநிமலைக் கார்த்திகைத்தீபம். இங்கு பழனிமலை முருகன் அண்ணலின் மைந்தனானதால் அவனையும் குறிப்பிட்டாரோ?

பன்னருஞ்சம் பந்தருக்குப் பத்தருநற் பல்லக்குஞ்

சின்னமுமுத் தாலளித்த சீர்த்தீபஞ்செந்நெற்

கழனிபுடை சூழருணைக் காமர்மலை மீது

பழநிமலைக் கார்த்திகைத்தீ பம். (63)

கல்லால மரத்தடியில் சின்முத்திரைகாட்டி, நான்கு முனிவர்களுக்கும் மௌனத்தால் பொருளுணர்த்தும் தீபம்.  கொல்லாவிரதத்தினைக் கைக்கொண்டு தென்னருணாசலத்தில் உறையும் தொண்டர்கள் உள்ளத்தில் ஆனந்த நடனமிடும்  கார்த்திகைத்தீபம்.

கல்லா லடியிற் கரங்காட்டி நல்வருங்குஞ்

சொல்லா லுணர்த்துஞ் சுபதீபங்கொல்லா

விரதமொடு தென்னருணை மேவினருள் ளத்திற்

பரதமிடுங் கார்த்திகைத்தீ பம். (85)

அடுத்த பாடல் அத்தனின் அழகு வர்ணனையுடன் அவனாகவே நிற்கும் அருணாசலமலையையும் ஏற்றுகின்றது. பாம்புகளை ஆபரணங்களாக அணிந்த தீபம்;  பத்திநெறிகொண்டு வாழ்வோர்கள்  ஏத்தி வழிபடும் தீபம்; தனித்துவிளங்கும் தீபம். அல்லிமலர்கள் பொலியும் நீர்நிலைகளைக் கொண்டுள்ள அருணையில் வாழ்கின்ற கற்பகத்தருவாகிய கார்த்திகைத்தீபம்

பாம்பணியுந் தீபம் பத்திநெ றிசேரடியார்

தாம்பணியுந் தீபந் தனித்தீபமாம்பல்

விகசிக்கும் வாவி மிளிரருணை வாழ்கற்

பகமொக்குங் கார்த்திகைத்தீ பம். (91)

தனது பாதமெனும் தாமரைகளை நாளும் தொழும் அடியவர்க்கு ஆதாரமாக விளங்கி அருளுகின்றதீபம்.  மலர்கள் நிறைந்து விளங்கும் தேன்மிகுந்த சோலைகள் கொண்ட அருணைமலையின் கண்ணும் என் உள்ளத்திலும் வாழும் கார்த்திகைத்தீபம்.

பாதார விந்தம் பரவுந் தொழும்பருக்கோ

ராதார மாகி யருடீபம்போதாருங்

கொங்கிலங்குஞ் சோலை குலவருணை வெற்பினுமென்

பங்கினும்வாழ் கார்த்திகைத்தீ பம். (94)

நல்ல சிந்தனைகளைத் தரும் தீபம்;  நன்மக்களையும் (புத்திர சம்பத்து) மேலும் சித்திகளையும் தரும் தீபம்; சிவதீபம்; அன்னை சக்தியாம் உண்ணாமுலைக்கு உயிராகி, சோணமலையில் ஓங்கி வளரும் ஞானப்பயிராக நிற்கும் கார்த்திகைத்தீபம்.

புத்திதருந் தீபநல்ல புத்திரசம் பத்துமுதல்

சித்திதருந் தீபஞ்சிவதீபஞ்சத்திக்

குயிராகுஞ் சோணமலை யோங்கிவளர் ஞானப்

பயிராகுங் கார்த்திகைத்தீ பம். (100)

இந்தக் கடைசி வெண்பாவில்தான் சிவதீபம் எனும் சொல்லைக் காண்கிறோம். மற்றபடி சிவபிரானே அத்தீபம்; தெய்வம் எனக்கொண்டே இந்நூல் முழுமையும் பாடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வெண்பாவிலும் தீபம் எனும் சொல் இரண்டு, மூன்று, நான்கு அல்லது ஐந்து முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் உள்ளுறைப் பொருள் தீபங்களுக்கு இடப்படும் திரிகளின் முகங்களோ என எண்ண இடமுள்ளது.  தெரிந்த புலவர் பெருமக்கள் யாரேனும் விளக்கியருளலாம்.

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்

விளக்கின் முன்னே வேதனை மாறும்

விளக்கினை விளக்கும் விளக்குடையார்கள்

விளக்கிடின் விளங்கும் விளக்கவர் தாமே. (திருமந்திரம்)

தீபத்தின்முன் அதன் ஒளியில் நமது கவலைகள் மாறும்; பாவங்கள் அழியும். மனம் ஈசனிடம் ஒருமைப்படும். இத்தகைய விளக்கத்தினை அருளிய பெரியார்கள் நமக்கு வழிகாட்டும் விளக்கினைப் போன்றவர்களே!

தென்னாடுடைய சிவனே போற்றி;  என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.

திருச்சிற்றம்பலம்.

Source………

    http://www.tamilhindu.com/
Natarajan

 

 

Beautiful Statue of Swami…. A Blessed Experience …

November 20, 2015 :A sculptor by name Mr. Chinna from Rampachodavaram of Andhra Pradesh came to Puttaparthi with this beauitiful statue of Swami. He is a Shirdi baba devotee and had never been to Puttaparthi nor seen Swami physically. While he was making a statue of Shirdi, Swami came in his dream and said, ” It is the same Sai that you are worshipping. Do My statue too”. The very next day he took up this stupendous task of making the statue and in 3 months the beautiful statue was ready.


His intention was to give the statue of Swami to the Sri Sathya Sai Central Trust and leave it in the ashram’s hands to decide as what to do with the statue there after. By the time he reached Puttaparthi with the statue, it was 10.30 PM.
As it was too late to go any where, the only option that seemed possible for him was Prof. Anil Kumar’s house. He then went up to Prof. Anil Kumar and requested him if he can “keep” the statue for a night before he offers it to the ashram. The statue was too good and beautiful for Prof.Anil Kumar and Mrs.Vijaya Lakshmi Anil Kumar to think twice and there were so happy to provide the shelter. The next morning saw a sea of people thronging to see this statue in Prof.Anil Kumar’s home in Samadhi Road.
credit……saidevotees_worldnet <saidevotees_worldnet@yahoo.co.in>
Natarajan

” இடையூறுகளற்ற வாழ்க்கையை எதிர்பார்ப்பது அழகல்ல; அதற்கு பழகுவதே புத்திசாலித்தனம்…”

மீன் விற்கும் ஒரு பெண்ணு, பூ விற்கும் ஒரு பெண்ணும், நல்ல தோழிகள். ஒருநாள் இரவு, பூ விற்கும் பெண்ணின் வீட்டில், மீன் விற்கும் பெண் தங்க நேர்ந்தது. ‘இரவு நன்கு தூங்கினாயா?’ எனப் பூ விற்கும் பெண், மறுநாள் காலையில் கேட்க, ‘அதை ஏன் கேக்குற போ… நேத்துப் பூரா எனக்குத் தூக்கமே வரலை…’ என, சொன்னாள் மீனம்மா.
‘அப்படியா… ஏண்டி?’
‘உன் வீட்டில இருந்த பூவோட வாசம், என்னை என்னென்னமோ செய்துடுச்சு. நெடி தாங்கலை; அதனால, தூக்கம் வரலை…’ என்றாளாம் மீனம்மா.
மனிதர்கள் பலரும், இப்படித் தான் இருக்கின்றனர். வழக்கத்திற்கு மாறான எது ஒன்றை பற்றியும், மலைத்துப் பேசுகின்றனர்; மறுக்கின்றனர். செயலில் இறங்கும் முன்பே, குரலிலேயே களைப்பு காட்டுகின்றனர்.
‘என் கூட வேலை பார்க்கிறவரோட மகன் கல்யாணம்; வா… போயிட்டு வரலாம்…’ என கணவர் அழைக்கிற போது, பெரும்பாலான மனைவியர் சொல்கிற பதில்… ‘எனக்கு அங்கே யாரையுமே தெரியாது; நான் தனியா உட்கார்ந்திருக்கணும். உங்களுக்கு, உங்களோட வேலை செய்யுறவங்களைக் கண்டா, தலை கால் புரியாது. என்னை, ‘அம்போ’ன்னு விட்டுடுவீங்க. நான் வரலை; நீங்க போயிட்டு வந்தாப் போதும்; ஆளை விடுங்க…’
இந்த வசனங்களில், சில மாறுதல் இருக்கலாமே தவிர, பதில் என்னமோ மறுப்பு தான்; பதில் என்னவோ அலுப்பு தான்.
முதன் முதலில் பள்ளியில் சேர்த்த போது, நாம் அழ அழக் கொண்டு போய், இரக்கமில்லாமல் பள்ளியில் விட்டனர். அங்கு யாரைத் தெரிந்தது… பின், பெற்றோரை விடவும், தோழர்கள், தோழிகள் நமக்குப் பெரிதாகி விடவில்லையா?

வங்கி, தபால் நிலையம்…
‘நான் இதுவரை அங்கேயெல்லாம் போனதில்லை; எனக்கு எதுவும் தெரியாது!’ ‘
எங்கே போனாலும், சிவப்புக் கம்பள வரவேற்பும், ராஜமரியாதையும் எதிர்பார்க்கிற குணம், என்ன குணம்!
பள்ளி மற்றும் கல்லூரிக்கு அப்பாற்பட்டு இருக்கிற வெளி உலகமும், ஒரு திறந்தவெளிப் பல்கலைக் கழகம் தான்; அது, எத்தனையோ பாடங்களை பயிற்றுவிக்கிறது. அறிமுகமாகிற நபர்கள், நூற்றுக்கணக்கான டியூஷன் வகுப்புகளை, காசு வாங்கிக் கொள்ளாமல், நமக்கு நடத்துகின்றனர்.
வாழ்வின் உண்மையான சுவையை, நன்கு உணர வேண்டுமானால், முதலில், மனச்சிறகுகளை விரிக்க வேண்டும்.
‘எந்தக் கஷ்டத்தையும் சந்திக்கக் கூடாது; ஒரு கஷ்டமும் கூடாது. மேனா மினுக்கிகளாகவே வாழ்ந்து விட்டுப் போய் விடுகிறேன்…’ என்று எதிர்பார்க்கும் வாழ்க்கை, தேங்கிப் போன குட்டைக்குச் சமம்.
அருவியாய் மாறி, ஆறாய் ஓடி, கடலாய் பரந்து, வாழ்வின் மறுபக்கங்கள் இன்னின்ன என்பதை, உணரத் தலைப்பட முன்வர வேண்டும்.
‘என் மகளை, கண்ணுக்குள்ளே வச்சு வளர்த்துட்டேன்; நீங்களும் இவளை மகளைப் போலப் பார்த்துக்கணும்…’ என்று, கன்னிகாதானத்தன்று, கைத்தலம் பற்றக் கொடுக்கிற தாய் – தந்தையை, நல்ல பெற்றோராக நான் கருதவில்லை.
‘எல்லாத்தையும் நல்லாவே கத்துக் கொடுத்திருக்கோம்; நாங்க விட்டதை நீங்க சொல்லிக் கொடுங்க…’ என்றல்லவா ஒப்படைக்க வேண்டும்?
தாய் வீட்டில் சங்கிலியிட்டு வளர்த்தால் தான், புகுந்த வீடு, பூமாலைத் தோரணமாகப்படும்.

ஒரு சொல் கூடத் தாங்காத பெண்ணாக ஒருத்தியை வளர்த்தால், அது ஒரு மாத, ஒரு ஆண்டு கதையாக ஆகிவிடும்.
இடைஞ்சல்களே இல்லாத தொழில், திட்டாத அதிகாரி, தண்டிக்காத முதலாளி, கொடுத்தாலொழிய வாடகை கேட்காத வீட்டுக்காரர், தவறைச் சுட்டிக் காட்டாத நண்பன் என்றெல்லாம் எதிர்பார்த்து, அப்படி அமையாத போது, இவர்கள் நொந்து கொள்கின்றனர்.
எந்த ஒரு மனிதனது வாழ்க்கையும், மலர் பாதையால் அமைக்கப்பட முடியாது. இடையூறுகளற்ற வாழ்க்கையை எதிர்பார்ப்பது அழகல்ல; அதற்கு பழகுவதே புத்திசாலித்தனம்!
ஆற்றுப் படுகைகளில் கிடக்கும் அழகான கூழாங்கற்களை ரசிக்கிறோம். ஆனால், அது மோசமான உருவத்தோடு தான், தன் பயணத்தை, மலையிலிருந்து துவங்கியது என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்!
‘எனக்கு எந்தக் கஷ்டமும் தராதே… எல்லாம் நல்லபடி நடக்கணும்!’ எனக் கடவுளிடம் வேண்டும் பக்தன், தவறு செய்கிறான்.
‘எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை எதிர் கொள்ளும் மனத்திடத்தை, பலத்தை எனக்குத் தா…’ என வேண்டுபவனே நடைமுறையாளன்.
நூலாம் படையை, சங்கிலியாக எண்ணுவதைக் கைவிட வேண்டும். சங்கிலியை, நூலாம்படையாக ஆக்குவது நம் சாதுரிய அணுகுமுறையில் இருக்கிறது

Credit  ….Input from my friend …. Source ….Lena Tamilvanan in http://www.dinamalar.com

Natarajan

” In Varanasi, 3 Oar-Boys Surprised Me with Their Work for a Clean Ganga….” Says this Visitor

R Srinivasan was in Varanasi for some work. A regular visitor of the ghats, he was surprised to see one of the ghats kept very clean, which stood out in comparison to the others. What’s more, it was kept this way by 3 young oar-boys and their father! This is what he found out on further investigation.

I landed in Varanasi last evening to conduct a workshop for all the call-getters from Indian Institutes of Management. These successful aspirants were arriving from eastern Uttar Pradesh.

Varanasi is the cradle of one of the most ancient civilizations in the world, with habitation of this city recorded as far back as 6,000 years ago. It is a fascinating city on the banks of river Ganges and is one of the most sacred destinations for the Hindus, and also for many from the world who throng to see the magical place. It is in the itinerary of many tourists visiting India and some continue to stay here for years.

I have always enjoyed walking by the ghats and galis of Varanasi. Every visit has been a journey of discovery – of the city and of oneself. As usual, I reached the Dashashwamedh Ghat in the darkness of early morning, after walking for about three kilometres. It was drizzling a little.

The ghats were buzzing with activity but less than expected, because of the muggy weather and the winter chill.

The early morning Aarti for Mother Ganges - a river considered to be very pious

The early morning Aarti for Mother Ganges – a river considered to be very pious

I got busy clicking away the magical morning at the ghat – the dips, the aarti, the boats, the colours of dawn. There are 80 ghats and Dashashwamedh is somewhere in between. I proceeded towards the ASSI ghat. Each of the ghats has been built by one kingdom or other from across the country, over the centuries, to shelter the citizens of their provinces when they come to this pious city.

Since the city got settled centuries ago, modern amenities are difficult to come by. The upkeep of Varanasi is far from satisfactory and to the utter shock of most visitors, garbage is found littered in every corner of the street. I keep wondering why. At many locations on the ghats, men relieve themselves, which not only stinks, but also pollutes the already polluted Ganges.

This morning, when I reached the Rana Pratap/Mahal Ghat, I was surprised to see three pisspots neatly lined against the wall in a corner with a note, “kindly do not pollute mother Ganges, use the toilet to relieve yourselves.”

Around the toilet, along the ghat, many flowering plants were blossoming. They were all neatly lined up.

Deepak and Amit proudly posing at their outpost, Rana Pratap Ghat, Varanasi. You can see the toilet corner!

Deepak and Amit proudly posing at their outpost, Rana Pratap Ghat, Varanasi. You can see the toilet corner!

This effort is indeed admirable, especially because it has been envisioned and created by three young Oar-boys who ferry the visitors on the Ganges in their small wooden row-boats. Deepak (13) and Amit (11) along with their elder brother Ravi (19) helped their father in making this happen. Deepak and Amit who solicit customers for the boat rides were filled with pride when they shared about their endeavour. I took their photographs, promising that I will write a story about their conscious effort to keep the ghats clean and tidy. The ghat is stink-free and is a pleasure to walk by.

If only we are conscious of our surroundings, and do our little bit, I am sure we can make a huge difference! Let us strive to make things happen!

– R Srinivasan  in http://www.the betterindia.com

Natarajan

 

” Like Parent, Like Child… ” !!!

If you think your kid is a lot like you, then you’re probably right. You’d be surprised to discover that it’s pretty much the same in the animal kingdom…

Big Small

ALPACA you some lunch…

Big Small

KOALAfied parent.

Big Small

The HAREitage is clear..

 

Big Small

This might end in a CATastrophy…

 

Big Small

A whole new meaning to riding BEARback…

 

Big Small

“You’ve GOAT to be kidding me!”

 

Big Small

Me & my dad ROLL together.

Big Small

Small copyCAT…

Big Small

There will be a pun here… Eventually…

Big Small

Hug me, mom! I just had a nightMARE…

Big Small

Let’s go home, I’ll give you a nice WOMBATh…

Big Small

First – the shades! Then – the MEOWtain!

 

Big Small

Just LION around…

Big Small

WHO are you looking at?!

Big Small

Daaaaaaad! Let’s go get some GATORade!`

Big Small

Did he just say he’s making WOOFles?

Big Small

No PANDAmonium here…

Big Small

PURRway to heaven…

Big Small

See? Grass is not so BAAAHd…

Big Small

Don’t worry, they won’t be looking down at you for long…

Big Small

Taking a CATnip…

Big Small

I don’t know what’s going on, I’m just a KID…

Big Small

Even if he says he is Bambi, you MOOSEn’t say no!

Big Small

Dad, you’re the COOLest…

Big Small

Dad, the other kids said I’m fat! -Don’t worry son, they’re HIPPOcrites…

Big Small

Like me, my son has a good APEtite…

Big Small

My baby is OTTERLY cute!

Big Small

Mommy! RHINO you love me!

Big Small

I Love MEOW!

Big Small

 

Are you staying on my back on PORPOISE?!

Source…..www.ba-bamail.com

Natarajan

 

Message for the Day… ” I am in You and You are in ME …”

Be pure, alert and humble. I am in you; you are in Me. You hoist the Prasanthi flag in Prasanthi Nilayam. Remember, the flag is a sign that is significant for each and every one of you. It is a reminder of your duty to yourself, and so when you hoist it you must unfurl it in your own hearts. It reminds you to overcome the urge of low desires, of anger and hate when your desires are thwarted; it exhorts you to expand your heart so that you embrace all humanity, all life and all creation in its compass; it directs you to quieten your impulses and calmly meditate on your own inner reality. It assures you that, when you do so, the lotus of your heart will bloom, and from its center will arise the flame of divine vision, which guaranteesPrasanthi (infinite peace) to every one of you.

Sathya Sai Baba

 

“What Is It Like to Be Raised by Indian Parents, You Ask?…. ” Let Me Tell You…

What is it like to be raised by an Indian mother and father, you ask? Well, it’s simple. Your food will be taken care of even if you’re a thousand miles away, and your dad will do his bit, no matter how many times you tell him not to. 

My own experience will tell you how!

About a year ago, I was selected for a government sponsored student-exchange program, for which I was supposed to go to Japan for about two weeks. As this was my first trip abroad, my mother started preparations almost a week before I had to leave.

A day before departure, I was packing my bags and Mom was helping me out.

“Son, take some cookies and dry fruits with you. You can take some brown bread as well. It will be useful in case of an emergency,” she said.

“Oh! Mom, I will be staying in 5-star hotels there. I don’t need all this. Don’t worry,” I laughed.

She ended the conversation with -“Okay son, your wish!”

My accommodation had been arranged in Hotel Prince, Tokyo. I arrived at the airport at 1:00 am, and slept off as soon as I reached the room. We had instructions to get up at seven in the morning as the breakfast card of the hotel was valid till 8:30 am only. I got a wake-up call from the reception at 6:45 am, but I decided to sleep for five more minutes. But I knew I had missed breakfast when I finally got up at 9:00 am. I was famished. Going out of the room, I found two of my friends who had also missed breakfast.

Lunch was scheduled at 1:30 pm and there was no way we could have waited till then. We had not eaten properly since we boarded the flight. (The in-flight food wasn’t enough, obviously). We were entitled to free food from the hotel only during the allotted time slots. If we wished to buy or order anything else, we would have to pay. Those who have been to Japan would know how everything is insanely priced there. Even a burger would cost you around 1,200 Yen. Nevertheless, we decided to order something.

Just when I entered my room to get some money, Mom called.

Mom: “Hey. How are you doing?”

Me (weak voice): “All good, Mom.”

Mom: “Why do you sound so weak? Did you eat something since morning?”

Me (cursing myself): “Yes mom. I had breakfast an hour ago. Don’t worry.”

Mom: “Hmm! Are you in your room right now? Check your blue handbag’s back pocket and call me later.”

Me (surprised): “What is it?”

Mom (stern voice): “Do what I said. Right now!”

I immediately checked the bag and found some cookies, dry fruit packets and an instant noodles packet there. I felt like crying for an instant. I called up my friends and all three of us had a hearty breakfast. They couldn’t stop thanking me and my mom.

I called her up later.

 Mom: “Did you eat?”

Me: “Yes mom. But how did you know?” I asked.

Mom: “Be quiet and don’t miss your lunch now,” she said. I was overwhelmed.

That tells you enough about an Indian mom, I think. Now, let’s talk about being raised by an Indian father.

It was the day of a very important exam for me. Mom informed that my dad had got ready two hours earlier to drop me to the exam centre.

“Have you taken all the important stuff? Admit card, writing material and all that?” he asked, adding “Check again.”

Yes dad. I’ve checked 3 times already dad. No need to check again,” I said.

I went to have breakfast. On coming back to take my bag, I found an extra set of writing material (pen, pencil etc.) and a copy of the admit card kept on the sofa.

*In the car*

Dad: “Did you take the stuff I kept on the sofa?”

Me: “Yes dad.”

Dad (convinced smile): “Good!”

No matter how much I tell him, he will never be convinced until he has done his bit.

– Gaurang Athalye  

Source….www.the betterindia.com

Natarajan

சாய்பாபா 90வது அவதார நாள் சிறப்பு…..23 Nov 2015

சாய்பாபா அவதரித்தது 1926 கார்த்திகை மாதம் சோமவாரத்தில் ஆகும். தற்போது, 90வது அவதார நாளும் அதே போல கார்த்திகை சோமவாரத்தில் வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வகையில், இது மிக சிறப்பான அவதார நாளாக அமைகிறது.

தர்மத்தை நிலைநாட்ட :

யுகந்தோறும் அவதரிக்கிறேன் என்பது கிருஷ்ணரின் வாக்கு. அப்படிப்பட்ட அவதார புருஷராக பகவான் சத்ய சாய்பாபா விளங்குகிறார். 1926, நவ. 23ல் பிறந்த அவருக்கு, நாளை 90வது அவதாரநாள் கொண்டாடப்படுகிறது.

புட்டபர்த்தி என்றால், “சாய்பாபா’ என்ற திருநாமம் தான் நினைவில் வரும். இவ்வூர் அந்தக் காலத்தில் கொல்லப்பள்ளி என்று அழைக்கப்பட்டது. பசுக்கூட்டம் நிறைந்த ஊர் என்பது இதன் பொருள். அங்கு ராஜு வம்சத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் இருந்து வந்தது. அந்த வம்சத்தில் மகான் ரத்னாகரம் வெங்க அவதூதர் என்பவர் இருந்தார். அவரது வழியில் வந்தவர் கொண்டமராஜு. மக்களுக்கு ராமபிரானின் பெருமைகளை எடுத்துச் சொல்வதில் அலாதி பிரியம் கொண்டவர். அவருக்கு இரு மகன்கள் இருந்தனர். இருவருக்கும் தன் முன்னோரான வெங்கஅவதூதர் நினைவாக அவருடைய பெயரையே இட்டார். மூத்தவர் பெத்த வெங்கம ராஜு. இளையவர் சின்ன வெங்கம ராஜு. இருவரும் தந்தையைப் போலவே பக்தியில் ஈடுபாடு கொண்டவர்கள்.

இவர்களுக்கு கர்நூல் மாவட்டம் “கோலி மிகண்ட்லா’ கிராமத்தில் சுப்பராஜு என்ற உறவினர் இருந்தார். சிவபக்தி மிக்கவர். அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. அந்த சமயத்தில் கிராமத்தில் கொள்ளையர்களின் அட்டகாசம் இருந்தது.

சுப்பராஜுவின் நிலையறிந்த உறவினர் கொண்டமராஜு,””நீங்கள் ஏன் கோலிமிகண்ட்லாவில் இருந்து கொண்டு சிரமப்பட வேண்டும்? சித்ராவதி ஆற்றோரம் இருக்கும் கர்நாடக நாகப்பள்ளியில் புதுவீடு கட்டி குடியேறிவிடுங்கள். வேண்டிய உதவிகளைச் செய்கிறேன். மேலும் உங்கள் மகளான ஈஸ்வரம்மா தான் என் வீட்டு மருமகள்!” என்று வாக்களித்தார். இதன்படி பெத்த வெங்கமராஜுவுக்கு ஈஸ்வரம்மாவை திருமணம் செய்து வைத்தார்.இவர்களுக்கு சேஷமராஜு, வெங்கம்மா, பர்வதம்மா என்னும் குழந்தைகள் பிறந்தனர். பின் தொடர்ந்து நான்கு குறை மாதப் பிரசவங்கள் நிகழ்ந்தன. தன் மருமகள் தீர்க்காயுள் உள்ள நல்ல குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் பிரார்த்தித்தனர்.

விரைவிலேயே அவர்களுடைய எண்ணம் நிறைவேறியது. ஒருமுறை, ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் எடுத்துக் கொண்டிருந்த போது, நீலநிற ஒளி பந்து போல திரண்டு வந்து அவரது உடலில் புகுந்தது. தெய்வீக நிகழ்ச்சி இது என்பதை உணர்ந்த ஈஸ்வரம்மா, தன் மாமியாரிடம் மட்டும் இதனை சொன்னார். இதையடுத்து ஈஸ்வரம்மா கர்ப்பவதியானார். கிருஷ்ணர் தேவகிக்கு எட்டாவது குழந்தையாக அவதரித்தது போலவே, சத்யசாய்பாபாவும் ஈஸ்வரம்மாவின் எட்டாவது குழந்தையாக அவதரித்தார். 1926 நவம்பர் 23ல், அட்சயவருஷம் கார்த்திகை மாதம் திருவாதிரை நாளில் சோமவாரமான திங்கட்கிழமை அவரது அவதார நாளாகும்.அவர் செய்த அற்புதங்களும், சமூகத்தொண்டும் கொஞ்ச நஞ்சமல்ல. அவரை இந்த இனிய நாளில் வணங்கி மகிழ்வோம்.

பயணத்தை நிறுத்திய பாபா:

பாபா பக்தரான சோமயாஜுலு ஐதராபாத்திலிருந்து சென்னை செல்ல ஆயத்தமானார். காரில் விமானநிலையம் சென்று கொண்டிருந்த அவருக்கு, “அன்று மகாசிவராத்திரி’ என்று நினைவுக்கு வந்தது. விமான டிக்கெட் ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும், போவதற்குச் சிறிதும் இஷ்டமில்லை. பயணத்தை ரத்து செய்துவிட்டு, சிவபூஜை செய்ய வேண்டும் என்ற ஆவலில் வீட்டிற்குத் திரும்பினார். பயபக்தியுடன் பூஜை அறைக்குள் நுழைந்தார். பிரதானமாக பூஜிக்கும் சிவலிங்கத்திற்கு வில்வார்ச்சனை செய்யத் தொடங்கினார். “ஓம் நமச்சிவாய!’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை அவர் இடைவிடாமல் ஜெபித்தபடியே வில்வத்தால் இறைவனை அர்ச்சித்தார். அன்று இரவு செய்தி கேட்ட சோமயாஜுலுவிற்கு தூக்கி வாரிப்போட்டது. ஐதராபாத்தில் இருந்து கிளம்பிய விமானம் சென்னை போய் சேரவில்லை. வானிலை சரியில்லாததால் விமானம் விபத்தில் சிக்கி விட்டது. பயணிகள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால்,பாபா பக்தரான சோமயாஜுலு, தான் மட்டும் காப்பாற்றப்பட்டதை எண்ணி அதிசயித்தார். நம்பியவரைக் காப்பாற்றி கரைசேர்க்கும் சாய்பாபாவின் அருளை வீட்டாருடன் நன்றியுணர்வோடு பகிர்ந்து கொண்டார்.

சத்யசாய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை:

எத்தனையோ மருத்துவமனைகள் இருந்தாலும், சாய்பாபாவால் புட்டபர்த்தி மற்றும் பெங்களூரு ஒயிட்பீல்டில் நிறுவப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் மிகவும் வித்தியாசமானவை. அதி நவீன வசதி படைத்த இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. மருந்து, உணவு உள்ளிட்ட எல்லாமே இலவசம். “தரமான சிகிச்சை, இலவச சிகிச்சை’ என்பதுவே இந்த மருத்துவமனைகளின் தாரக மந்திரம். இதய அறுவை சிகிச்சைக்கு இந்த மருத்துவமனைகள் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. 1964ம் ஆண்டு சிறிய பொது மருத்துவமனையாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் அனைவருக்கும் சேவை புரியும் வகையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளாக தரம் உயர்ந்தன. 1991 மற்றும் 2001ம் ஆண்டுகளில் பாபா இந்த மருத்துவமனைகளைத் திறந்து வைத்தார். இரண்டு மருத்துவமனைகளும் ஓரு ஆண்டு காலத்திற்குள்ளாகவே கட்டப்பட்டது என்பது மிகப் பெரிய அதிசயம் என்று பக்தர்கள் கூறுகின்றனர். அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்கள் இங்கு உள்ளனர். ஆண், பெண் தொண்டர்களும் எந்த நேரமும் சேவை புரிகின்றனர். எல்லா கவுன்டர்களும் இங்கு இருக்கின்றன. ஆனால், “கேஷ் கவுன்டர்’ மட்டும் இங்கு கிடையாது. நோயாளிகளுக்கு முன்பதிவு செய்த பின், வரிசைக்கிரமப்படி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இங்கிருக்கும் பிரார்த்தனைக் கூடங்கள் “இது மருத்துவமனையா அல்லது கோவிலா?’ என்று பிரமிக்க வைக்கும் அளவுக்கு பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டுள்ளது. ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.நோயாளிகளுக்கு வேண்டிய ஆலோசனைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. இந்த மருத்துவமனைகள் சமுதாயத்திற்கு ஒரு வரப்பிரசாதம் என்று சாய் பக்தர்கள் கூறுகின்றனர்.

Source…….www.dinamalar.com

Natarajan

 

 

 

Message for the Day….” Raise the level of Moral life for brightening daily lives with Goodness and Godliness…”

Sathya Sai Baba

In today’s novel civilization, emergence of discordant notes has silenced the call of the Divine from within. People are eager to make their lives a merry-go-round but it is turning into a painful tangle of troubles. They are not discovering the cause of the contradiction and are wasting their years in empty ephemeral pomp and pretense. Real progress means raising the level of moral life and brightening daily lives with goodness and godliness. Life must be an incessant process of repair and reconstruction, of discarding evil and developing goodness. Paddy grains must discard the husk to become consumable rice. Cotton must be reformed as yarn to become wearable cloth. Even gold nuggets have to undergo the crucible and get rid of alloys. So too, all of you must purify your instincts, impulses, passions, emotions and desires. Only then you can progress in good thoughts, deeds and words. Your intrinsic value is directly proportional to the level of transformation you achieve.