“அன்னதான சிவன் …”

தேப்பெருமாநல்லூர் சிவன் என்றால் சட்டென்று யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அன்னதான சிவன் என்றால் எல்லோருக்கும் தெரியும். அன்னதானம் செய்வதில் என்றைக்குமே சளைக்காதவர்.

அவருக்குக் காஞ்சி மஹானிடம் அளவுகடந்த பக்தியுண்டு. அந்த பக்தியின் காரணமாக மஹானுக்கு ஒரு நீண்ட கடிதத்தை எழுதினார். மஹான் பல தினங்கள் உபவாசம் இருந்த காலம் அது.

இதனால் தனது உள்ளத்தில் ஏற்பட்ட வேதனையை மஹானுக்குத் தெரிவித்து இதில் பல விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

”மஹான் தொடர்ந்து உபவாசம் இருந்தால் அவரது உடல்நிலை கெட்டுவிடும். அவர் ஆரோக்கியமாக இருந்தால் தான் பக்தர்கள் நீண்ட காலம் அவரது அருளைப் பெற முடியும். ஆதலால் சிறிதளவேனும் அன்ன பிட்க்ஷை ஏற்க வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றால் சீதோஷ்ண ஸ்திதிக்கு ஏற்றவாறு வெந்நீரில் குளிக்கவேண்டும். சமுத்திர ஸ்நானம் செய்யப்போகும்போது துணையோடு போகவேண்டும். நதிகளில் ஆழம் பார்த்துத்தான் இறங்கவேண்டும். பூஜையை முடித்தபின் சற்றுநேரம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு வெகுதூரம் கண்விழித்துப் படிக்கக்கூடாது. தாங்கள் எப்போதும் நலமாக இருக்கவேண்டும் என்கிற காரணத்திற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன்” என்று முடித்திருந்தார்.

மஹான் அக்கடிதத்தை ஒருமுறை அல்ல; இருமுறை படிக்கச் சொல்லி புன்முறுவலோடு அதைக்கேட்டார்கள். மடத்தில் உள்ள அனைவருக்கும் சிவன் மீது அளவு கடந்த மரியாதை. மஹான் அவசியம் இதற்கு பதில் எழுதுவார் என்று நினைத்தார்கள்.

ஆனால் அதற்கு பதிலாக மஹான், ஒரு நபர் மூலம் செய்தியாகத் தன் எண்ணத்தைச் சொல்லி அனுப்பினார்.

“கடிதத்தில் எழுதியுள்ளபடி எல்லாம் நடைபெறும்” என்கிற செய்தி சிவனிடம் சொல்லப்பட்ட பிறகுதான் அவர் மனம் சமாதானம் அடைந்தது.

மஹானிடம் இப்படி வேண்டுகோள் விடுக்க, அப்போது சிவன் ஒருவருக்குத்தான் மனோபலம் இருந்தது. இதே வேண்டுகோளை சிவன், மஹானை நேரில் பார்க்க வரும்போதும் கோரிக்கையாக வைப்பார். மஹான் அவர்பால் பரிவு கொண்டு அவரைப் பாராட்டி மகிழ்வார்.

சிவனுக்கு முதிர்ந்த நிலை வந்தபோது அவரைக் கவனித்துக் கொள்ள மஹான் மடத்து சிப்பந்திகளை அனுப்பி இருந்தார். தனது கடைசி காலத்தில் தனது சொந்த ஊருக்குச் சென்ற சிவன் அங்கேயே இறைவனடி சேர்ந்தார்.

மஹான் அந்த சமயம் காசி யாத்திரை சென்றிருந்தார். திரும்பிய பிறகுதான் சிவனின் மறைவு குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

”சிவன் ஒரு சன்னியாசி இல்லை என்றாலும் துறவியைப் போல் பற்றற்ற வாழ்க்கையை மேற்கொண்டு இருந்தார். பிறருக்கு சேவை செய்ததுடன் ‘பசி’ என்று வந்தவர்களுக்கு அன்னமளிக்காமல் அனுப்பியதில்லை. மிகவும் புண்ணியம் செய்த அவர் நிச்சயம் மோட்சத்திற்குத்தான் போவார்” என்று சொன்ன மஹான், சிவனின் நற்கதிக்காக கும்பகோணத்திலும் திருபுவனத்திலும் உள்ள கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றுமாறு கட்டளையிட்டார்.

சிவன் மறைந்த பத்தாவது நாளன்று, கும்பகோணத்தில் உள்ள மடத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு அளிக்க மஹான் ஏற்பாடு செய்தார். தனக்கென்று ஏதும் வைத்துக்கொள்ளாத சிவன் இறக்கும் தருவாயில் தன்னிடம் இருந்த சொற்பப் பணத்தை முழுவதும் தர்மத்திற்காக செலவிடும்படி கூறியிருந்தார்.

அதனால் இப்பணத்தைக் கொண்டு ஹரிஜனங்களுக்குப் பயன்படும் வகையில் குளம் ஒன்றை செப்பனிட்டு வழங்கும்படி மஹான் உத்தரவிட்டார்.

அன்னதான சிவன் மீது மஹான் கொண்டிருந்த அன்புக்கு அளவு இல்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. மஹானை ஆதரவோடு பார்த்து அன்புக்கட்டளை இட்ட மாமனிதர் தான் இந்த அன்னதான சிவன்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source:::: http://www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/6429/annadhana-sivan-venkatasaamys-book-mahaperiva#ixzz2sKdo42zp

” பல்லவ கடிகாரம் பார்த்தாயா …? ” !!!

டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி, தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியல் ஆய்வாளர்களுள் ஒருவர். தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், குஜராத், டெல்லி, ராஜஸ்தானம் என இந்தியாவின் பல பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளை நிகழ்த்தியவர். இந்தியத் தொல்பொருள் கள ஆய்வுத் துறை மூலம் இவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கன. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், மகாபலிபுரம் போன்ற இடங்களில் இவர் செய்த ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

அவர் சொல்கிறார்:

சிறு வயதிலிருந்தே அவரை தரிசித்திருக்கிறேன். தொல்லியலாளரான பின்னர் அவரைப் பார்க்கப் போனபோது, “நீ என்ன வேலை பார்க்கிறாய்?” என்று கேட்டார். அப்போது கோவில்கள் திட்டப்பணியில் தொல்லியல் துறையில் செய்யும் பணிபற்றிச் சொன்னேன். “நீ மகாபலிபுரம் போயிருக்கிறாயா? அங்கு என்ன பார்த்தாய்?” என்று கேட்டார். நான் பஞ்சபாண்டவர் ரதம், மகிஷாசுரமர்த்தினி என்றெல்லாம் சொன்னேன்.

“அங்கு பல்லவர்களுடைய கடிகாரம் ஒன்று இருக்கிறதே, அதைப் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார். ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்து, “பல்லவா காலத்தில் ஏது பெரியவா கடிகாரம்?” என்று கேட்டேன். “இருக்கு. இருக்கு. நீ அடுத்தவாட்டி போறப்போ நல்லா பார்த்துட்டு வா!” என்றார்.

மறுமுறை போனபோது, “கடிகாரம் பார்த்தாயா?” என்று கேட்டார். “இல்லை பெரியவா, எனக்குத் தெரியவில்லை” என்றேன். “அர்ஜுனன் தவம் பார்த்தியா?” என்று கேட்டார். “பார்த்தேன்” என்றேன். “அந்த அர்ஜுனன் தபஸ் சிற்பத்திற்குக் கீழே நதி ஒன்று ஓடிக் கொண்டிருக்கும். சின்ன விஷ்ணு கோயில் ஒன்று இருக்கும். பக்கத்தில் ரிஷி ஒருவர் உட்காந்து கொண்டிருப்பார். கீழே அமர்ந்து சிலர் வேதம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒருவர் ஆற்றில் நனைத்த துணியைப் பிழிந்து கொண்டிருப்பார். மற்றொருவர் நின்று கொண்டு மாத்யான்னிஹ வந்தனை செய்து கொண்டிருப்பார். (அதில் ஒருவர் இரண்டு கைகளையும் கோர்த்து விரலிடுக்கால் உச்சியிலிருக்கும் சூரியனைப் பார்க்கிறார்) பனிரெண்டு மணிக்கு இந்த விஷயம் நடந்தது என்பதைச் சிற்பி தெரிவிக்கிறார். அதைத்தான் ‘பல்லவ கடிகாரம்‘ என்று சொன்னேன்” என்று பெரியவர் சொன்னார்.

பெரியவரின் நுணுக்கமான பார்வையைக் கண்டு எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது.

——————————————————————————-

நாமும் அதைப் பார்த்து ரசித்து வியக்கலாமா. இதோ அந்த சிற்பத்தின் நிழற் படம்

source::::www.perivaproboards .com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/6348/#ixzz2rN6GL9Sw

“விடை காண முடியாத கேள்வி ” …


கும்பகோணத்தில் மடம் இருந்தபோது, ஒருநாள் பெரியவா ப்ரும்மசூத்ர பாஷ்ய பாடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஒரு வித்வான் ஏதோ சந்தேகம் கேட்கவும், பெரியவா “பாமதி” யிலோ, “பரிமளத்தி”லோ இதுக்கு விஸ்தாரமா பதில் இருக்கு. அத படிச்சா போறும்………மடத்து லைப்ரரில அந்த புஸ்தகம் இருக்கா பாக்கலாம்” என்றார்.

லைப்ரரி பொறுப்பாளர், அதை யாரோ வித்வான் எடுத்துக்கொண்டு போயிருப்பதாக சொன்னார்.

அதே சமயம் தெருக்கோடியில் பேரீச்சம்பழக்காரன் குரல் கேட்டது.

“பழைய புஸ்தகத்தை போட்டுட்டு செலபேர் பேரீச்சம்பழம் வாங்கியிருப்பா……..ஒடனே போய் அவன்ட்ட இருக்கற அத்தனை புஸ்தகங்களையும் வெலைக்கு வாங்கிண்டு வா” என்று ஒரு தொண்டரை அனுப்பினார்.

ஒரு கட்டு புஸ்தகத்தோடு அவர் வந்தார். எல்லாம் அபூர்வமான சம்ஸ்க்ருத புஸ்தகங்கள்! பழுப்பேறின காகிதம்!

“சாஸ்த்ரிகளே! என்னென்ன புஸ்தகம் இருக்குன்னு பாருங்கோ!”

வரிசையாக படித்துக்கொண்டே வந்தார். ……….”பாமதி”யும், “பரிமள”மும் ” அதில் இருந்தன!

பாஷ்ய பாடம் நடக்கும் போது பேரீச்சம்பழக்காரன் வருவானேன்? இல்லாத புஸ்தகங்கள் விலைக்கு வாங்கின புஸ்தகங்கள் நடுவில் இருப்பானேன்?

விடை காண முடியாத கேள்வி!

source::::www.periva proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/6347/#ixzz2rMpXNFlB

” You Forgot Our Enmity and Came Home …” !!!

Enmity developed between two close relatives in a village on account of claims over property. The bitterness led to a case in the court. There was not the barest exchange of a civil word between the two. The defendant’s son was to be married. He brought the invitation and placed it before Periyaval.

Periyaval looked at the attendant nearby and said, “Ask him if he will visit all his relatives and invite them?”

“Yes…we will visit all the relatives to invite them…”

After a minute’s pause, Periyaval said, “Ask him if he will visit the plaintiff also”.

The gentleman hesitated for a while. “I thought that if I went there and was insulted, it would be very hurting”.

“No such thing will happen. Give him the invitation in person and tell him that he must attend the wedding”.

The defendant went to the complainant’s house in trepidation. he recalled Periyaval’s words. “It is not in our culture to disrespect visitors. Everyone is essentially good’.

The complainant never dreamt that his sworn enemy would visit him in his house. When he saw the defendant, he hugged him to his bosom.

“Welcome, welcome”, he said happily and accepted the invitation. “You forgot our enmity and came home to invite me! I shall certainly come to participate in the celebrations”, he assured his relative.

The gentleman who had gone to give the invitation had a sudden change of heart. “Such a good man’, he thought. “Why did I develop such enmity for him?”

“Brother”, he said, “Let us forget about the case and the courts. Let us settle the matter amicably”.

The two gentleman raised their hands in salutation in Periyaval’s direction.

source:::www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/1162/enmity-desolved?ixzz2rEiZtYBa=undefined#ixzz2rMmXzJLP

” What is The Meaning Of ‘ Equipoise’ ? …”

Another interesting episode as narrated by SriMatam Balu mama.

”CAN YOU NOTICE ANY TRACES OF SADNESS/”

SriMatam, camp in Ilaiyaaththaankudi.

A Government officer, along with his friends( four or five) was proceeding to Ilaiyaththankudi. They were conversing among themselves. In between many topics, came that of Mahaswamikal.

” Periaval knows Samskrit well…”
“He also knows Tamizh, Telugu and Kannada..”
He knows only a few words in English; may have a little working knowledge..”
when we talk, if some English words pop up, He will understand..”

They reached the camp, and were waiting outside the room where Periava was staying.After ten minutes, Periava came out. surrounding Him were a lot of devotees, who were well versed in English, and Periava was talking to them.

“In every language, there are certain peculiar words. Such words can not be translated in other languages that easily. In ENGLISH language, there is a word called “EQUIPOISE”. Can you tell me the meaning of that word? ..”

Each one gave his own explanation but not one word could convey the exact meaning of that word.

Periava saw our Govt. officer and his friends and asked them if they knew.

Our Govt. officer sweated profusely. He tried to explain
something but failed in his attempt.

“EQUIPOISE” means “MENTAL EQUANIMITY”—-said Periava .
Every one was stunned!. He diverted the talk to some other topic. He didn’t give room for the others to feel bad..

After He walked some distance, HE stopped in the centre of the hall..

At some distance, an old lady was sitting, and with her eyes closed, was doing some Japam.

“How does that lady look?”—asked Periava.

” Very calm, quiet, and without any worries in her mind…” answered our friends.

“Do you know, who she is?”—asked Periava.

Nobody answered.

” There was a great writer, by name K.S.Venkataramani. He has written a lot of books.KANDAN, The Patriot, MURUGAN, The Tiller( I have read them too!) are all famous.In these novels the rural setting is very natural.

” He brought a French ‘Thathva Gnani’ by name Paul Brunton to Thiruvannamalai, and brought him to me also. He had a very good bonding with our ‘THATHVAM’

“This couple had a son. K.S.V. passed away. The son is in mental hospital.”

” She doesn’t have any friends, or relatives, no money, nothing, but mountains of sadness! Can you see any trace of those worries on her face?”

” That stage is called “EQUIPOISE”!

Where did Periava do M.A. in English?

“Vaak Dhevatha lives in His tongue!

source:::: http://www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/2499/mahaperiava-dharsana-anubhavangal-3?ixzz2qpGXks5v=undefined#ixzz2qtVbPNmn

” அம்பாள் ‘படி’ அளப்பாள்” …. !!!


பெரியவாள் காசி யாத்திரை (1933) செல்லும் வழியில் ஒரு ஆந்திர குக்கிராமம் ஒன்றில் முகாமிட்டபோது ஸ்ரீ ஸி.எஸ்,விக்கு (விச்வநாதையர்) பொத்துக்கொண்டு வந்து விட்டதாம்.

“எடுத்துச் செலவழிப்பதற்கு நம் மடத்தில் என்ன கொட்டியா கிடக்கிறது? இந்தத் தரித்திரம் பிடித்த ஊரில் இத்தனை யானையையும்,ஒட்டையையும்,ஜனங்களையும் கட்டித் தீனி போடுவதென்றால் எப்படி?” என்கிற ரீதியில் பெரியவாள் காதுபடப் பொரிந்து தள்ளி விட்டாராம்.

பெரியவாள் அவரைக் கூப்பிட்டார். சாந்தமாக ” நீ ஏன் பதட்டப்படறே? நாம நல்ல காரியத்தை உத்தேசிச்சுப் பொறப்பட்டிருக்கோம்.நம்ப லக்ஷ்யம் நன்னாயிருந்தா அம்பாள் கை கொடுக்காமப் போவாளா? அவதானே எல்லாருக்கும் படியளக்கிறா? நமக்கும் நிறைய அளப்பா”என்றாராம்.

மறுநாள், விச்வநாதய்யரால் நம்பவே முடியவில்லை! அந்தக் கிராமத்தில் ஏதாவது திருவிழா நடந்ததா, அல்லது சந்தை கூடிற்றா, அல்லது இப்படி எதுவுமே
நடக்காமல் பெரியவாளின் சக்தி மட்டும்தான் வேலை செய்ததா என்று அவருக்குச் சொல்ல தெரியவில்லை.

ஆனால் சொல்லத் தெரிந்தது, மறுநாள் காலையிலிருந்து அந்த நிர்மாநுஷ்யக் குக்கிராமத்தில் புற்றீசலாகப் பக்தர்கள் பெரியவாளை வழிபட வந்து கொண்டேயிருந்ததுதான். வந்தது மட்டும் இல்லை.

அக்காலத்தில் வெள்ளி நாணயம் வழங்கி வந்ததல்லவா? வந்த பக்தர்கள் யாவரும் இப்படி நாணயங்களைக் கொண்டு வந்து கொட்டினார்கள். “நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா இதை (எஸ்,வி.என்னிடம் கூறியது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு-கட்டுரை-1960-பின் பாதியில்) அந்த மாதிரி ஒத்தை ஒத்தை ரூபாயா வந்து குன்று மாதிரி குவிஞ்சதேயில்லை! மடத்து ஜாகையிலே எல்லாத்தையும் சேத்துக் குவிச்சு எண்ணிட்டுப் படியாலே எடுத்து எடுத்துச் சாக்கிலே போட்டுக் கட்டினோம்.

பெரியவாள்,”அம்பாள்,’படி’ அளப்பாள்’னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே ‘படியாலே’ அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?”ன்னா!

“பெரியவாளுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. பெரியவா செய்ய முடியாதது எதுவும் இல்லை. இருந்தாலும் ‘எங்களைக் கூட வெச்சுண்டு ஆட்டம் போட்டிருக்கா” என்று முடித்தார் விச்வநாதையர்
source:::: http://www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/5902/#ixzz2qtSzm8HJ

” Are You Smarter than ” Seniors ” !!!

 

This is a test for us ‘older kids’!

The answers are printed below, (after the questions) but don’t cheat! answer them first…..

01. After the Lone Ranger saved the day and rode off into the sunset, the grateful citizens would ask, Who was that masked man? Invariably, someone would answer, I don’t know, but he left this behind. What did he leave behind?________________.

02. When the Beatles first came to the U.S. .In early 1964, we all watched them on The _______________ Show.

03. Get your kicks, __________________.’

04. ‘The story you are about to see is true. The names have been changed to ___________________.’

05. ‘In the jungle, the mighty jungle, ________________.’

06. After the Twist, The Mashed Potato, and the Watusi, we ‘danced’ under a stick that was lowered as low as we could go in a dancecalled the ‘_____________.’

07. Nestle’s makes the very best… _________ ______.’

08. Satchmo was America ‘s ‘Ambassador of Goodwill.’ Our parents shared this great jazz trumpet player with us. His name was _________________.

09. What takes a licking and keeps on ticking? _______________.

10. Red Skeleton’s hobo character was named __________________ and Red always ended his television show by saying, ‘Good

Night, and ‘________ ________.. ‘

11. Some Americans who protested the Vietnam War did so by burning their______________.

12. The cute little car with the engine in the back and the trunk in the front was called the VW. What other names did it go by? ____________ &_______________.

13. In 1971, singer Don MacLean sang a song about, ‘the day the music died.’ This was a tribute to ___________________.

14. We can remember the first satellite placed into orbit. The Russians did it. It was called ___________________.

15. One of the big fads of the late 50’s and 60’s was a large plastic ring that we twirled around our waist. It was called the __ ______________.

Answers:
01. The Lone Ranger left behind a silver bullet.
02. The Ed Sullivan Show
03. On Route 66
04. To protect the innocent.
05. The Lion Sleeps Tonight
06. The limbo
07. Chocolate
08. Louis Armstrong
09. The Timex watch
10. Freddy, The Freeloader and ‘Good Night and God Bless.’
11. Draft cards (Bras were also burned. Not flags, as some have guessed)
12. Beetle or Bug
13. Buddy Holly
14. Sputnik
15. Hoola-hoop

Send this to your ‘older’ friends, (Better known as Seniors.) It will drive them crazy! And also keep them busy and let them forget their aches and pains for a few minutes !!!

source::::baba mail site

natarajan

மகாகவி பாரதியாரின் சகோதரருடன் ஒரு சந்திப்பு !!!

1984ம் ஆண்டு.
“பாரதியார் பிறந்தநாள் வரப் போவுதே.. என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று கேட்டார்கள் திருநெல்வேலி வானொலி நிலைய நண்பர்கள்.
நான் யோசித்தேன்.
“இந்த தடவை கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது செய்யலாமே…’ என்று யோசனை கூறினார் ஒரு நண்பர்.
“வித்தியாசமா…ன்னா…?’
“பாரதியாரை நேரில் பார்த்தவர்கள், அவரோடு பழகியவர்கள், இப்படிப் பட்டவர்களை நேரிலே சந்தித்துப் பேசி… அதையெல்லாம் தொகுத்துக் கொடுக்கலாமே…!’
“நல்ல யோசனைதான். இருந்தாலும் பாரதியாரோடு பழகியவர்கள் இந்தக் காலத்திலே இன்னும் யார் இருக்கப் போகிறார்கள்?’
“என்ன சார் அப்படிச் சொல்லிபுட்டீங்க.. பாரதியாரின் தம்பி இருக்காரே… அவரைப் போய்ப் பார்க்கலாமே…!’ என்றார் டி.கே.ஆர். (நண்பர் தெ.கு.இராமச்சந்திரன் அப்போது எங்களோடு வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொணிடருந்தார். அவரை எல்லோரும் செல்லமாக டி.கே.ஆர். என்றுதான் அழைப்பது வழக்கம்)
“பாரதியாரின் தம்பியா?’ என்றேன் ஆச்சரியத்தோடு.
“ஆமாம். சி. விஸ்வநாத ஐயர்!’ என்றார் டிகேஆர்.
“எங்கே இருக்கார்?’
“மானாமதுரையிலே இருக்கார். அந்த ஊர் பள்ளிக் கூடத்துலே தலைமை ஆசிரியரா ரொம்ப காலம் இருந்தார். இப்ப ரிட்டையர் ஆகி அந்த ஊரிலேயே தான் இருக்கார்.’
“இப்ப அவருக்கு வயது என்ன இருக்கும்?’
“அது… வந்து 88 க்கும் மேலே இருக்கும் இருந்தாலும் இந்த வயசுலேயும் நல்லா சுறுசுறுப்பாக இருக்கார்.’
இவ்வளவு விவரங்களும் தெரிந்து கொண்ட பிறகு சும்மா இருக்க முடியுமா?
அலுவலகத்தில் முறையான சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு ஒலிப்பதிவுக் கருவிகளோடு நானும் நண்பர்களும் புறப்பட்டோம்.
மானாமதுரையில் எதிரே வந்த ஒருவரை நிறுத்தி வழிகேட்டோம்.
“அதோ.. அந்தப் பாலத்தை தாண்டி அடுத்த பக்கம் போங்க… வாசலிலே கம்பி போட்டிருக்கும். அந்த வீடுதான்.’
வீட்டுக்கு முன்னால் எங்கள் கார் போய் நின்றது.
வாசல்புறம் நின்றிருந்த ஒருவரிடம் நாங்க வந்திருக்கின்ற விவரத்தைச் சொன்னோம்.
உடனே அவர் எங்களை அழைத்துக் கொண்டு மரப்படிகளின் வழியாக மாடிக்குச் சென்றார்.
அங்கே அந்தப் பெரியவரை – மகாகவி பாரதியின் சகோதரரைச் சந்தித்தோம்.
அன்போடு எங்களை வரவேற்று அமரச் செய்தார். உபசரித்தார். உயரே சுவரில் பழங்காலத்துப் படங்கள் நிறைய மாட்டப்பட்டிருந்தன. அந்தக் காலத்துப் பாரதியின் படங்களை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தோம்.
கொஞ்ச நேரத்தில் பேட்டி தொடங்கியது.
வெளியுலகத்துக்குத் தெரியாத நிறைய விவரங்களை அவர் சொன்னார்.
“எங்க அப்பா சின்னசாமி ஐயர்… அவருக்கு இரண்டு மனைவிகள்…’
முதல் மனைவி லட்சுமி அம்மா… அந்த லட்சுமி அம்மாளின் மகன்தான் பாரதி.
பாரதிக்கும் அஞ்சு வயசு ஆவதற்குள்ளே தாயார் இறந்துவிட்டார்.
அதுக்கப்புறம் இரண்டரை வருஷம் கழிச்சி சின்னசாமி ஐயர் வள்ளியம்மாளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். வள்ளியம்மாளின் பிள்ளை தான் நான். அதாவது எனக்கும் பாரதிக்கும் அப்பா ஒருவர் தான் அம்மாதான் வேறு.
“உங்களுக்கு வேறு சகோதரர்கள் சகோதரிகள்…’
“எனக்கு மூத்த சகோதரி ஒருத்தர் உண்டு. லட்சுமின்னு பேரு.. எட்டு வருஷத்துக்கு முன்னாடி அவங்க இறந்து போயிட்டாங்க’
“பாரதி கூட நீங்க இருந்த நாள்கள்… இப்ப உங்களாலே ஞாபகப்படுத்திச் சொல்ல முடியுமா?’
“பாரதி சென்னையிலே இருந்தார் இல்லையா…?’
“திருவல்லிக்கேணியிலே தானே…’
“அதுக்கும் முன்னாடி மயிலாப்பூரிலே இருந்தார். சித்திரைக்குளம் கீழவீதியும் தெற்குவீதியும் சேர்ற இடம். அங்கே இருந்து தெற்கே போற ஒரு சின்ன தெரு. அங்கே ஒரு பெரிய வீட்டுலே நாங்க குடியிருந்தோம்.
அப்ப நான் மயிலாப்பூர் பி.எஸ்.ஹைஸ்கூல்லே இரண்டாவது பாரம் (ஏழாம் வகுப்பு) படிச்சிக்கிட்டிருந்தேன். அதுக்குப்புறம்தான் திருவல்லிக்கேணியில் பெரிய தெருவுக்குப் போனோம். (வீரராகவ முதலி தெரு)
அதுக்கப்புறம் நல்லதம்பி முதலி தெருவிலேயும் இருந்தோம். அந்தச் சமயம் நான் திருவல்லிக்கேணி ஹிந்து ஹைஸ்கூல்லே படிச்சேன்.
1918க்கு அப்புறம் அவர் கடையத்துலேயும் எட்டயபுரத்திலேயும் மாறி மாறி இருந்தார். அப்பல்லாம் நானும் அவர் கூடவே இருந்தேன்.’
“பாரதியார் உங்களைப் பத்தி பேசினது எழுதினது ஏதாவது ஞாபகப்படுத்திச் சொல்ல முடியுமா?’
சிறு பிள்ளைகளைப் போல ஆர்வத்தோடு அவரை விசாரித்தோம்.
“ஞானரதம்-ங்கற நூல்லே மண்ணுலகம்-ன்னு ஒரு பகுதி. அதுல எழுதியிருக்கிறதெல்லாம். நாங்க நல்லதம்பி முதலி தெரு வீட்டுலே தங்கியருந்தப்போ கிடைச்ச அனுபவங்கள். அதிலே அவர் என்னைப் பத்தி எழுதியிருக்கிறதைப் பாருங்க!’ என்று சொல்லி ஒரு வாரப் பத்திரிகையை எடுத்து எங்களிடம் கொடுத்தார். அதில் அந்தப் பகுதியை எடுத்துப் போட்டிருந்தார்கள். அதில் பாரதியார் எழுதியிருக்கிற வாசகங்கள் இவை:
“22ம் தேதி தம்பிக்குப் பாடசாலைச் சம்பளம் கொடுக்க வேண்டிய நாள். நான் காரியாலயத்திலிருந்து பணம் கொண்டு வந்து வைக்க மறந்து விட்டேன். நான் சுதேசிய விஷயத்தில் பாடுபடுவதில் பொருட்டாக என்னை எப்பொழுதும் கவனித்து வரும்படியாக ராஜாங்கத்தாரால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள் என் தம்பியிடம் செய்த சம்பாஷணையில் “உம்முடைய அண்ணனது சிநேகிதரான இன்னவரை ராஜாங்கத்தார் பிடிக்கப் போகிறார்கள்’ என்ற மங்கள சமாசாரம் சொல்லிவிட்டுப் போனதாகத் தம்பி சொன்னார்.’
“பாரதியார் பாடல்கள் இயற்றுவது மட்டுமல்லாமல் அவற்றைப் பாடவும் செய்வாராமே?’
“1920ல் நாங்க திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் இருந்தப்ப வ.வே.சு. ஐயர் ஒரு நாள் வீட்டுக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் பாரதி “அண்ணா, இன்று ஒரு பாட்டு இயற்றியிருக்கிறேன் கேட்கிறீர்களா?”ன்னார்.
“ம்… சொல்லுங்க!’ன்னார் வ.வே.சு. ஐயர்.
உடனே பாரதி பாட ஆரம்பித்தார்.
காயிலே புளிப்பதென்ன?
கண்ணபெருமானே – நீ
கனியிலே இனிப்பதென்ன
கண்ணபெருமானே
அந்தச் சமயம் அவர் அதைக் கம்பீரமா பாடறப்போ நானும்கூட இருந்துகேட்டேன். மறக்க முடியாத அனுபவம்
“பாரதி நூற்றாண்டு விழா ரஷ்யாவுலே கொண்டாடப் போறாங்களாமே கேள்விப்பட்டீங்களா?’
“ஆமாம்… அதுலே வந்து கலந்துக்கணும்னு அந்த அரசாங்கமே என்னை அழைச்சிருக்கு.’
“போக போறீங்களா?’
“மனசுல ஆசை இருக்கு.. உடம்புல பலம் இல்லை’ என்று சொல்லி லேசாக சிரிக்கிறார்.
“அப்படின்னா…?’
“நான் வர்றதுக்கு என் உடம்பு இடம் கொடுக்காதுன்னு அவங்ககிட்டே சொல்லிட்டேன்’
நீண்ட நேரம் நிறைய விஷயங்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு புறப்பட்டோம். தள்ளாத வயதிலும் வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
அதற்கு அடுத்த வருடமே நான் சென்னை வானொலி நிலையத்துக்கு மாற்றலாகி வந்துவிட்டேன்.
இங்கு வந்த பிறகு ஒருநாள் நண்பர் ஒருவரிடம் நான் பாரதியின் தம்பியை பேட்டி கண்ட விஷயத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தேன்.
“சந்தர்ப்பம் கிடைச்சா, இன்னொரு முறை மானாமதுரைக்கு போய் அந்தப் பெரியவரைப் பார்த்துட்டு வரலாம்னு நினைச்சிக்கிட்டிருக்கேன்!’ என்றேன்.
அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, “உனக்கு விஷயம் தெரியாதா?’ என்றார்.
“என்ன?’ என்றேன்.
“அவர் இப்போது உயிரோடு இல்லை. அவர் காலமாகி விட்டதாக உறவினர்கள் சிலர் மூலமாகக் கேள்விப்பட்டேன்’
நான் ஒரு நிமிடம் மௌனமாகி… பிறகு யோசித்தேன்.
“எத்தனை பெரியவர்கள் இந்த உலகத்தில் வருவதும் தெரியாமல், போவதும் தெரியாமல் வாழ்ந்துவிட்டுப் போய் விடுகிறார்கள்.’

– தென்கச்சி கோ. சுவாமிநாதன்  in “KALAIMAGAL ”  TAMIL MONTHLY 

Natarajan

What is Happening to My Newspapers !!!

The morning paper with coffee is a perfect start of the day for many of us and over a century (nearly getting to two centuries), our favourite papers have been evolving all through, trying to please us readers. I’m proud I’m reading the same paper, The Hindu, my grandfather and my father read. I have never swerved in my loyalty when we moved for a few years to Mumbai, my husband and I felt so forlorn that he would go to a special paper dealer and get the previous day’s issue of The Hindu. Perhaps, our paper had not spread its wings as much as it has done today.

When people tell me to read news online, I’m still resisting. Can anything replace the comfort of holding the paper and even smelling the fresh scent of the ink and reaching out for it the whole day whenever I’m free to play Sudoku and Crossword? Though we can play these on the Net too, it is never a match for the pleasure of pencil marks I make on the side of the puzzle to guess a correct number or an anagram or two.

In Mumbai, The Times of India also grew familiar to our family as it was important for local events as well. We would stand on the pavement near the paper’s printing press near the Victoria station, now Chhatrapati Shivaji, to get the heady scent that emanates in the surroundings. Have you experienced it? Where is this scent when reading news from the computer?

With the coffee cup in hand, we were able to read the headlines even on a folded paper. Now, this pleasure is denied as the top sheet has a huge advertisement which may not mean anything to us and to turn the paper without spilling coffee, we have to learn juggling!

Really sad to say that the comfort of reading while holding the paper spread out in two hands, especially when you want to shut out your surroundings (I’m sure many men will agree with me!) is slowly being denied to us. Why? The top sheet is cut in half, lengthwise, and it flaps and slips when you try to turn the sheets or fold them, to get the item closer for the ease of reading. It makes us feel clumsy. The latest discomfort is caused by an extra two-inch length of paper jutting out at the edge, making it more difficult to turn the page. By the way, am I the only one complaining?

Another feature, of sticking some free gift on the paper — like a shampoo or a real estate booklet or any other goodies — makes the paper lose balance and get sticky when this ‘gift’ is removed. Of course, I can’t even mention the ad pamphlets which slip out irritatingly. My brother found a use for them as rough paper for market lists and phone messages when one side is blank.

However, all is not negative and all is not lost. Let me not keep whining.

The features suitable children and teens are commendable. As seniors we can learn a lot and also brush up some of our forgotten knowledge. But I am yet to see a feature just for seniors, but what exactly can go into it? We already have health, fitness, politics, history and what-not, covered in detail.

Newspapers are doing a great service to the country by promoting education to the downtrodden, to the unlettered of all age groups and to special needs groups. They are waking us up from stupor and complacency and making us aware of our responsibilities in personal and social lives. Newspapers are the first stop for information and for general knowledge of current affairs. They are not dramatic and distracting like TV news channels.

I am praying for a long life to our newspapers so that my grandchildren can read them too.

Just one request. Do make my paper comfortable to hold while reading. Please!

(The writer’s e-mail: malathimohan00@yahoo.com)

Keywords: morning paper with coffeenewspaper industry

source::::Malathi Mohan  in The Hindu

natarajan