ஸ்ரீ ரமண மஹரிஷி வாழ்வில்….ஒரு பிரிட்டிஷ் இந்திய காவல் அதிகாரியின் அனுபவம் …”

இறைவனை, ஞானத்தை ஒவ்வொருவரும் முயன்றுதான் அடைய வேண்டும். There are no any short routes to reach the Feet of God.

–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

பிரிட்டிஷ் இந்திய போலீஸ் அதிகாரியான எஃப். ஹெச். ஹம்ப்ரீஸ் என்பவர் பகவானை முதலில் பார்த்ததும் தனக்கு எப்படி இருந்தது என்ற உணர்வை அப்படியே எழுதியிருக்கிறார்.அதை பழம் பெரும் எழுத்தாளர் லா.சு.ரங்கராஜன் அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார். அதை இப்போது பார்க்கலாம்.

”குகையை அடைந்ததும் நான் அவரது காலடியில் வாய் திறக்காமல் உட்கார்ந்தேன். இப்படி ரொம்ப நேரம் மௌனமாக இருந்ததால் நான் என் வசமிழந்து என்னுள் ஓர் எழுச்சி உண்டாவதை உணர்ந்தேன். அரை மணி நேரம் நான் மகரிஷியின் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.ஆழ்ந்த தியானத்தில் இருந்த அவரது கண்கள் அசையவே இல்லை. புனித ஆவியின் ஆலயமே உடல் என்பதை நான் உணரத் துவங்கினேன்.என் எதிரே அமர்ந்திருந்த மகரிஷியின் உடல், அவர் அல்ல என்கிற உணர்வு தோன்றியது, கடவுளின் செயற்கருவியே அவர். எதிரே சும்மா அசைவற்று உட்கார்ந்த பாணியில் உள்ள உருவம் உயிரற்ற உடல் மட்டுமே. அந்த உடல் மூலம் கடவுள், சரம் சரமாகக் கதிரொளியைப் பரப்புகிறார்.என்னுள் எழுந்த எண்ணங்களை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.’’

பாருங்கள். ஒரு கிறிஸ்துவர், அதுவும் கடுமையான பணி புரியும் காவல் துறை அதிகாரி எப்படி உணர்கிறார் பாருங்கள். அவர் மட்டுமல்ல, அன்று மட்டுமல்ல., இன்றைக்கும் நீங்கள் திருவண்ணாமலை ரமணாச்ரமம் சென்று அவரது சன்னதியின் முன்னால் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பாருங்கள். நீங்களும் ஹம்ப்ரீஸ் போல் உணர்வீர்கள்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!! 

SOURCE::::www.balhanuman.wordpress.com

Natarajan

Jan 9 2015

ஸ்ரீ ரமண மஹரிஷி வாழ்வில்….காவ்யா கண்ட கணபதி முனிவர்…

  

காவ்ய கண்ட கணபதி முனிவர் என்ற மகா பண்டிதர் இருந்தார்.  நினைத்தவுடன் கவிதை எழுதும் ஆற்றல் கொண்டவர். ஏராளமான நூல்களைக் கற்றவர், எழுதியவர்.  பல மொழிகளைப் பேசும் ஆற்றல் உள்ளவர். கடும் தவம் புரிந்தவர்.  பெரும் புகழ் படைத்தவர்.

அப்படிப்பட்ட பெரிய மனிதருக்கு ஒரு சந்தேகம் மட்டும் இருந்துகொண்டே இருந்தது. அதற்கான விடை தேடி அவர் அலையாத இடமில்லை.

1907-ம் ஆண்டு கணபதி முனிவர் திருவண்ணாமலை வந்தார். கிரிவலப் பாதையில் ஒரு மண்டபத்தில் தியானத்தில் ஆழ்ந்திருந்தபோது அவருக்குள் மின்னல் வெட்டியது.  ‘பகவான் அழைக்கிறார்’ என்றது அந்த மின்னல். உடனே எழுந்தார். விடுவிடுவென நடந்தார். அருணாசலேஸ்வரர் வீதி புறப்பாடாகி வந்து கொண்டிருந்தார். நடுச்  சாலையில் இறைவனை விழுந்து நமஸ்கரித்தார்.

தன் நெடுநாள் கேள்விக்கு விடை கிடைக்கப் போகிறது என்று அவருக்குத் தோன்றிற்று.

விடுவிடுவென மலை மீது ஏற ஆரம்பித்தார். நல்ல வெயில் நேரம் அது. எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. விரூபாட்ஷி குகைக்கு வந்துதான் நின்றார்.

குகையின் முன் தாழ்வாரத்தில் பகவான் ரமணர் தனியே அமர்ந்திருந்தார்.
கணபதி முனிவர், ரமணர் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். தன் இரு கைகளாலும் பகவானின் பாதங்களைப் பற்றிக் கொண்டு கண்ணீர் உகுத்தபடியே, ”கற்க  வேண்டிய யாவையும் கற்றேன். வேதாந்த சாஸ்திரங்களையும் பயின்றேன். மனம் கொண்ட மட்டும் மந்திரங்களையும் ஜபித்தேன். ஆனாலும் மனம் அடங்க வழியின்றித்  தவிக்கிறேன். தவம் என்பது யாதென தெரியவில்லை. ஐயனே, உன் திருவடியைச் சரணடைந்தேன்.’’ என்றார்.

பகவான், காவ்ய கண்ட கணபதி முனிவரையே பார்த்தார். ரொம்ப நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தார். ஆம். பார்வையிலேயே பதிலை  விளக்கி விட்டு பின்னர்  உபதேசமும் அருளினார்.

”‘நான்’ என்பது எங்கேயிருந்து புறப்படுகிறதோ அதை கவனித்தால் மனம் அங்கே ஒன்றிவிடும். அதுவே தவம்.

ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணும்போது மந்திரத்வனி (ஓசை) எங்கிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால் மனம் அங்கே ஒன்றிணைகிறது. கரைந்து போகிறது, அதுதான்  தவம்.’’

கணபதி முனிவரின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிய ஆரம்பித்தது, அவரது நெடுநாள் சந்தேகத்துக்கு விடை கிடைத்த திருப்தி. அவரது ஐயங்கள் எல்லாம்  தீர்ந்து விட்டன.

அன்றைய தினம் விரூபாட்ஷி குகையிலேயே பகவானுடன் தங்கிக் கொண்டார் கணபதி முனிவர். அதுவரை பிராமண சுவாமிகள் என்றே அழைக்கப்பட்டு வந்த ரமணரை,  ‘பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி’ என்றே அனைவரும் அழைக்க வேண்டும் என்று  அப்போதுதான் சொன்னார் கணபதி முனிவர். ஆமாம்.  ‘மருவிலாக் காட்சிப் பெரியனை  இனிமேல் மகரிஷி என்றே வணங்கிப் பணிக.’ என்று பாடி வணங்கினார். அன்று முதல்தான் பகவான் ரமண மகரிஷி என்ற பெயர் நிலைக்க ஆரம்பித்தது.

ஆமாம். விரூபாட்ஷி குகைதான் அந்தப் பெயரை முதலில் கேட்ட  முதல் இடம். புனித  பூமி.

ஏற்கெனவே புகழ்பெற்ற மனிதராக கணபதி முனிவர் இருந்ததால், அவரது வருகைக்குப் பிறகு, பகவானைக் காண பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. பக்தர்களின்  வினாக்களும் அதிகரித்தன.

அவர்களுக்கு பகவான் அருளிய பதில்களை எல்லாம் தொகுத்து, வட மொழி ஸ்லோகங்களாக அவற்றை அமைத்து எழுதியவர் யார் தெரியுமா?
காவ்ய கண்ட கணபதி முனிவர்தான்.

ரமண கீதை என்ற பெயரில் அற்புதமான நூலாக ஆக்கினார் அவர்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!! 

SOURCE:::: http://www.balhanuman.wordpress.com

Natarajan

Message For the Day…”Regulate Your Mind and be the Master of MiND …”

Your mind can cause bondage; it can also confer liberation. It is an amalgam of the passionate (rajasic) and ignorant (thamasic) attitudes. It is easily polluted. It relishes in hiding the real nature of things and casting on them the forms and values that it desires. Hence the activities of the mind must be regulated. The mind has two characteristics. First, it runs helplessly after the senses. Whichever sense the mind follows, it is inviting disaster. When a pot of water becomes empty, we need not infer that it has leaked away through ten holes; one hole is enough to empty it. So too, even if one sense is not under control, you will be thrown into bondage. Hence master all senses. Second, the potency of the mind can be promoted by good practices like meditation, repetition of the name, devotional singing, and worship. With the strength and skill thus reinforced, the mind can be tuned to help spiritual progress.

Sathya Sai Baba

ரமணர் வாழ்வில்….சுவையான நிகழ்ச்சிகள்…Part 7

அப்படி என்னதான் இருக்கிறது திருவண்ணாமலையில்? கிரிவலம் வருவது எதனால்? என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கதையைப் படித்தாலே போதும்.

படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்குவாதம் எழுந்தது.

அதற்குத் தீர்வு தர, சிவபெருமான் ஓர் ஒளிப் பிழம்பாக, விஸ்வரூபம் காட்டி விண்ணுக்கும் மண்ணுக்கும் பெரிதாய் நின்றார். அன்றைய தினம்தான் சிவராத்திரி.

“என்னுடைய பாதத்தையோ, சிரசையோ யார் முதலில் காண்கிறார்களோ அவர்களே பெரியவர்.’’ என்றார் ஈசன்.

மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பாதம் காண பாதாளம் நோக்கிப் பாய்ந்தார்.

பிரம்மனோ, தலை காண, அன்னப் பறவையாய் ஆரவாரமாய்ப் பறந்தார்.

காலங்கள் கடந்தன. விஷ்ணுவால் இறைவனின் பாதத்தைக் காண முடியவில்லை.

ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான்தான் மிகப் பெரியவர் என்பதை உணர்ந்த விஷ்ணு, தன் பிழையை உணர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார்.

பிரம்மா மட்டும் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. யுகம் யுகமாய் சிவனின் தலையிலிருந்து விழுந்து கொண்டிருந்த ஒரு தாழம்பூவின் உதவியுடன், ‘நான் சிவனின்  தலையைக் கண்டுவிட்டேன்’ என்று பொய்யுரைத்தார்.

அப்புறம் என்ன? பொய் சொன்ன பிரம்மாவுக்கு பூவுலகில் பெரிதாய் வழிபாடு எங்கும் இல்லை. தாழம்பூவும் பூஜைக்குப் பயன்படாத மலர் ஆயிற்று.

நெருப்புத்தூணாக, பிரம்மாண்டமாக ஆரம்பமும் முடிவும் கண்டுபிடிக்க முடியாதவாறு பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் காட்சி தந்த இறைவன், பக்தர்களுக்கும் காட்சி தர  வேண்டும் என்பதற்காக, குளிர்ந்து, தன் உருவத்தை உள்ளடக்கி, அருணாசலமாக, திருவண்ணாமலையாக மாறினார்.

எல்லாம் வல்ல சிவபெருமானே இந்தத் திருவண்ணாமலை பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?

”சூரியனிடமிருந்து சந்திரன் ஒளி பெறுவது போல பூமியில் உள்ள எல்லாத் தலங்களும் இந்தத் திருவண்ணாமலையால் ஒளி பெறுகின்றன. திருவண்ணாமலைதான்  ஓம்காரத்தின் உறைவிடம். ஒளி வெள்ளமாக நான் உரு எடுத்ததை பக்தர்களுக்கு நினைவூட்ட, கார்த்திகை தினத்தில் மலை உச்சியில் தீபமாகக் காட்சி தருவேன். இந்தத்  திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தருவேன்.’’ என்று ஆனந்தமாகக் கூறியிருக்கிறார் சிவபெருமான்.

காசியில் இறக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி. ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. காசியில் இறப்பது எல்லோருக்கும் வாய்க்காது. திருவாரூரில் பிறப்பது நம் செயல் அன்று. சிதம்பரத்திற்கு நேரில் சென்று தரிசிப்பது என்பது எல்லோராலும் இயலாது. ஆனால் திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே. அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம்.

எங்கோ திருச்சுழியில் பிறந்த பகவான், திருவண்ணாமலை நாடி வந்த மகத்துவம் புரிகிறதா உங்களுக்கு? அது மட்டும் அல்ல, மனம், அறிவு, ஆன்மா ஆகிய மூன்றும்தான் விஷ்ணு, பிரம்மா, சிவன் என்று உருவகப்படுத்தி  உணர்ந்தால் வாழ்க்கையின் தத்துவம் புரிபடும்!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!! 

 

SOURCE::::: http://www.balhanuman.wordpress.com

Natarajan

7 Jan 2015

Message For the Day…” No One can conceal anything from God …HE is Everywhere…”

Embodiments of Divine Love! The Lord pervades everything in the cosmos with His myriad feet, hands, eyes, faces and ears. But not recognizing this fact, people imagine themselves to be the doer and indulge in all kinds of speculation and self-praise. The Lord sees everything. No one can conceal anything from Him. He dwells within and outside every living being. Hence nothing can be hidden from Him. God is present in all beings in one and the same form. Although living beings vary in appearance from each other, God’s presence is consistent. The Sun shines over the water in the lake, in a well, in a vessel, in a river or over the ocean – it is reflected in many ways but the Sun is one. So too, God is one and the same in all beings. There is no one in the world nearer to you than the Divine.   

Sathya Sai Baba

ரமணர் வாழ்வில்…. சுவையான நிகழ்ச்சிகள்…Part 6

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.

–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

திருவண்ணாமலை கிரிவலத்தை பகவான் எப்போதும் ஊக்குவித்தார். உடல் நலம் குன்றியவர்கள்,முதியவர்கள் கூடகிரிவலம் செல்வதை ரமணர் தடுத்ததில்லை. ‘‘அமைதியாக இறைவனை நினைத்துக் கொண்டு நடந்து செல்லுங்கள்’’என்றே அவர் கூறுவார். அனைவரும் திருவண்ணாமலையைச் சுற்றி வந்து இறைவனின் ஆசியைப் பெற வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். பகவானும் பல முறை கிரிவலம் சென்றுள்ளார். அண்ணாமலையைச் சுற்றி வருவது பற்றி ஒரு உண்மைக் கதையையும் பகவான் பக்தர்களிடம் சொல்வார்.கதையின் க்ளைமாக்ஸ் பகுதியை மட்டும் அவர் சொன்னதேயில்லை.அந்த க்ளைமாக்ஸை பகவானின் அனுக்ரஹத்துடன் நான் உங்களுக்கு இங்கே சொல்லப் போகிறேன்.

திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பைப் பற்றி பகவான் சொல்லும் உண்மைக் கதை இதுதான்.

கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கிப் போன ஒரு பெரியவர், கவட்டுக் கட்டைகளின் உதவியுடன், நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.அவர் அதுபோல் அடிக்கடி மலை வலம் வருவது உண்டு. ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி, மிகுந்த சோர்வுடனும் கலக்கத்துடனும் அந்த மாற்றுத் திறனாளி மலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.

அதற்குக் காரணம் இருந்தது.பல முறை கிரிவலம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.
ஏன்?

கால்கள் தொய்வுற்ற தான் தன் குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றிற்று. குடும்பத்தினருக்குத் தன்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.அவர்களுக்குச் சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்குப் புலனாகவே, பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை விட்டு விலகி, யாரிடமும் சொல்லாமல் கண் காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்றுவிடலாம் என்று அந்தப் பெரியவர் முடிவெடுத்தார்.அதனால் கடைசி முறையாக திருவண்ணா-மலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார்.

விந்தி,விந்தி சூம்பிய கால்களுடன் பெரியவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தபோது,பாதி வழியில் ஒரு வாலிபன் எதிர்ப்பட்டான்.

பெரியவரை நெருங்கிய வாலிபன், “ஓய், கால் சரியில்லாத நீ கவட்டைக்கட்டையுடன் கிரிவலம் வரவேண்டும் என்று யார் அழுதார்கள்? இப்படி நடந்தால் எல்லாம் நீ மலையைச் சுற்றி வர முடியாது. இதெல்லாம் உனக்குச் சரிப்படாது’’ என்று கூறிக் கொண்டே, எதிர்பாராத ஒரு செயலைச் செய்தான்.

ஆமாம்.அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கெனப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு,அவன் பாட்டுக்குச் சென்றுவிட்டான்.

அந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில்லை. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வந்தான், திட்டினான், கவட்டைக் கட்டையைப் பிடுங்கினான், தூர எறிந்தான். இப்படியா ஒருத்தன் மனிதாபிமானமே இல்லாமல் இருப்பான்? ஆவேசத்துடன் அவனைத் திட்ட ஆரம்பித்த அந்தப் பெரியவர், ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும் மனமும் சிலிர்த்து, அப்படியே நின்றார்.

ஆமாம்.கால் ஊனம் காணாமல் போய்,கவட்டுக் கட்டைகளின் உதவியின்றி ஜம்மென்று நேராய் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அந்த இளைஞன் சென்ற திசை நோக்கி அவர் தொழுதார். அவர் கண்களிலிருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது.

அதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்தப் பெரியவர் எங்குமே செல்லவில்லை.

இந்த உண்மைச் சம்பவத்தை பக்தர்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறார் பகவான். இதோ இந்த விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது நடந்த சம்பவம் இது. அந்தப் பெரியவர் அதற்குப் பிறகு பல்லாண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்ததைப் பலரும் அறிவார்கள். அருணாசல மலையைச் சுற்றி வருவதால் அத்தனை பலன் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார்.

ஆனால் இந்த உண்மைக் கதையில் பகவான் சொல்லாத ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். பகவான் கடைசி வரை அதன் க்ளைமாக்ஸைத் தன் வாயால் சொல்லவே இல்லை.

ஆமாம். அது என்ன தெரியுமா?

விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது அவரது வயது என்ன? 20. கால் சுவாதீனமில்லாத பெரியவரின் ஊன்றுகோலைப் பிடுங்கி எறிந்து குறும்பு செய்தது யார்? ஓர் இளைஞன்.

ஆமாம். நம் பகவான் ரமண மகரிஷிதான் அந்த இளைஞன்!

எழுதும்போதே மெய் சிலிர்க்கிறது.கால்கள் கொடுத்தவர் பகவான்தான். அவர் செய்யாத அற்புதங்கள் இல்லை.ஆனால் அவர் அதையெல்லாம் சொல்லிக் கொண்டதும் இல்லை.தட்சிணாமூர்த்தியின் அம்சமாயிற்றே. கடவுள் எல்லாம் நன்மைகள் செய்துவிட்டு, தான்தான் செய்தோம் என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா என்ன?நம் குரு தேவரும் அப்படித்தான்.

அப்போது என்று இல்லை.இப்போதும் நீங்கள் ரமணாச்ரமம் சென்று பகவானின் சன்னதி முன்னால் நின்று பாருங்கள்.உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் உடனே தருவார் பகவான். இந்த அனுபவத்தை உணர்ந்தவர்கள் ஆயிரம், ஆயிரம்!

கிரிவலம் சென்றால் இத்தனை நன்மை இருக்கிறதே, அப்படி என்னதான் இருக்கிறது அந்தத் திருவண்ணாமலையில்?

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!! 

 

SOURCE::::: http://www.balanuman.wordpress.com

Natarajan

ரமணர் வாழ்வில்…. சுவையான நிகழ்ச்சிகள்…Part 5

முழு தியான நிலை என்பது கிணற்றில் கயிற்றால் கட்டித் தொங்கும் குடம் (தோண்டி) போன்றது. குடத்தில் உள்ள தண்ணீர் (மனம்),கிணற்றில் குடம் அமிழும்போது கிணற்று நீருடன் (ஆன்மா)ஒன்று கலந்து விடுகிறது. ஆனாலும் குடத்தில் நிரம்பிய நீரோ, கயிற்றின் (அகந்தையின்) மற்றொரு நுனியால் வெளியே இழுக்கப்பட்டுவிடும்.

–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்தபோது கண் பார்வை இல்லாத ஒரு பாட்டி,தினமும் தட்டுத் தடுமாறி யார் உதவியுடனாவது மலை ஏறி வந்து, பகவானுக்கு ஏதாவது அன்புடன் தருவாள்.

அன்றைய தினம், பாட்டி பகவானுக்கு மிகவும் பிடித்த அரிசிப் பொரியைக் கொண்டு வந்தாள்.ரமண மகரிஷியும் அதை அன்புடன் பெற்றுக் கொண்டு, “பாட்டி, உனக்கோ முடியவில்லை. கண் பார்வையும் இல்லை. எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு மலையேறி வருகிறாய்?’’என்று வினவினார்.

அந்தப் பாட்டி, “பகவானே, உங்களை தரிசனம் செய்யத்தான் வருகிறேன்’’ என்றாள்.

”நீதான் என்னைப் பார்க்க முடியாதே? கீழேயிருந்தே என்னை நினைத்துக் கொள்ளக் கூடாதா?’’ என்றார் பகவான்.

”பகவானே, என்னால் உங்களைப் பார்க்க முடியாதுதான். ஆனால் உங்கள் அருட்பார்வை என் மீது விழுமே.அந்த பாக்கியத்துக்காகத்தான் நான் தினமும் வருகிறேன்’’ என்றாள் பாட்டி.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!! 

 

SOURCE:::: http://www.balhanuman.wordpress.com

Natarajan

ரமணர் வாழ்வில் …. சுவையான நிகழ்ச்சிகள்…Part 4

சிலந்திப் பூச்சி,எப்படி தன் வாயிலிருந்து வெளியில் நூலை நூற்று, மறுபடியும் தன்னுள் இழுத்துக் கொள்கிறதோ அப்படியே மனமும் தன்னிடத்திலிருந்து உலகத்தைத் தோற்றுவித்து, மறுபடியும் தன்னிடமே ஒடுக்கிக் கொள்கிறது.
–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
திருவண்ணாமலையின் தென்கிழக்குச் சரிவில் அமைந்திருக்கும் விரூபாட்ஷி குகையில் பகவான் பல வருடங்கள் இருந்தார்.அப்போது குகைக்கு வெளியே, மலைச் சரிவு அருகில் ஒரு பாறை இருந்தது. அதன் மேல் பகவான் தினமும் அரை மணி நேரம் அமர்ந்திருப்பார்.அங்கே உட்கார்ந்துதான் தினமும் பல் துலக்குவார்.
கடும் பனியாக இருந்தாலும் சரி, கொட்டும் மழையாக இருந்தாலும் சரி, பகவான் அந்தப் பாறையில் அமர்வதை தவறவிட்டதே இல்லை..
பக்தர்களுக்கு இது வியப்பாக இருந்தது. “பகவானே, மழை, பனியில் கூட ஏன் பாறையில் போய் அமர்கிறீர்கள்.உடம்பு சுகம் இல்லாமல் போய்விடாதா? குகைக்குள் இருந்தபடியே பல் தேய்த்தால் என்ன?’’ என்று துணிந்து ஒருவர் கேட்டுவிட்டார்.
பகவான் கேள்வி கேட்டவரைப் பார்த்துப் புன்னகைத்தார்.”கீழே மலையடிவாரத்தில் சௌபாக்கியத்தம்மாள் என்று வயதான பெண்மணி ஒருத்தி குடியிருக்கிறாள். அவள் தினமும் இங்கே வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போய்தான் உணவருந்துவாள்.ஒரு நாள் அவள் வரவில்லை. ஏன் வரவில்லை என்று மறுநாள் கேட்டேன். “வயசாச்சு சாமி. மலையேறி வர முடியல. உடம்பு முடியல. ஆனா உங்களைத் தரிசனம் செய்யாம எப்படி இருக்கறதுன்னு தவிச்சபடியே மலை மேலே பார்த்தேன். அந்தக் காலை நேரத்துலதான் நீங்க வெளியில இருக்கற பாறை மேல உட்கார்ந்து இருந்தீங்க. கீழே இருந்தபடியே உங்களைவிழுந்து கும்பிட்டேன் சாமி’’ன்னு கண் கலங்கினா.
பாவம், வயசான காலத்துல அவளால எப்படி மலையேறி வரமுடியும்? அதனாலதான் அவளுக்காக தினமும் காலையில் இந்தப் பாறையில் உட்கார்ந்துக்கறேன். மழை, பனி எதுவா இருந்தாலும் அந்த வயசான அம்மா ஏமாந்துடக் கூடாதே? பாவம், அவ அண்ணாந்து பாத்துக்கிட்டிருப்பாளே. அதான்’’ என்றார் பகவான்.
நீங்களே சொல்லுங்கள். யாரோ ஒரு ஏழை பக்தைக்காக பல வருடங்கள் தினமும் அரை மணி நேரம் ஓர் பாறையில் அமர்ந்திருந்த ஓர் அளவற்ற கருணை கொண்டவரை, ரமணரைத் தவிர உலகம் எங்காவது கண்டிருக்கிறதா?
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!
Natarajan

Message For the Day…” What is the True Devotion to God … ” ?

In ancient times, sages who performed severe penance to realise the Ultimate Reality, experienced Him and declared that the Supreme Lord is beyond Tamas. This means, to experience the Lord we must get rid of our Tamo-guna (the darkness of ignorance). The Lord is beyond the veil of Tamas. When the veil is removed, the Lord can be seen. If one is filled with Tamo-guna from head to foot, how can they experience God? You have a mountain of desires in your heart; you offer a petty coconut to the Lord! Is this love? Is this devotion? No! It is not the way to pray to the Lord. To seek a favour is not prayer at all. On the contrary, the person filled with selfless love will accomplish anything in life, and is ever ready to make any sacrifice. You are God. Get rid of your body consciousness, and you will realise your Divinity. Develop the qualities of love and sacrifice.

Sathya Sai Baba

Message For the Day… ” Take Everything that happens to You as Gift of God…”

For every being, life is a series of acceptances and rejections, of joy and grief, benefits and losses. Take everything that happens to you as gifts of grace. Of course, you must act with all the skill and devotion you are capable of. And you must do your duties with as much sincerity as you worship God. Then, leave the result to the all-powerful, all-knowing, all-merciful Lord. Why do you hold yourself responsible for the results? He prompted it, He got it done through you; He will give whatever result He feels He must! Can you store gold in a gold box? No! You store it in a steel or iron safe almirah, isn’t it? So too, understand that the gift of joy comes packed in the rind of grief. Do not pray to God to give you only joy; that will be foolish. Pray for the fortitude to realise that grief and joy are but two sides of the same coin.   

Sathya Sai Baba