“திருக்குறள் படிக்க வேண்டாம் “…என்று மகாபெரியவர் சொன்னாரா என்ன !!!!

ஒரு பத்திரிக்கைக்காரன் என்கிற முறையில் பரமாச்சாரியார் பற்றி இரண்டு முக்கிய செய்திகளில் நான் பங்கு பெற நேர்ந்தது.

ஒன்று – நான் நிருபராக ஒரு மாலை பத்திரிக்கையில் பணிபுரிந்த போது . வயது இருபது தான் இருக்கும்.

அடுத்தது – assosiate editor ஆக வார இதழில் பணிபுரிந்தபோது !

அது 1962 என்று நினைக்கிறேன் . அன்று ஞாயிற்றுக்கிழமை . மாலை பத்திரிக்கைக்கு பரபரப்பாக ஏதாவது வேண்டுமே! அன்று நானும் நியூஸ் எடிட்டரும் என்னன்னவோ செய்தும் – பெரிய சேதி கிடைக்கவில்லை .

ஒரு மணி . எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க , நான் தபாலில் வந்தவைகளை பிரித்து பார்த்துக்கொண்டிருந்தேன். மத சம்பந்தமான ஒரு இதழ் . பிரித்து பார்த்தேன். அதிர்ச்சி அடைந்தேன்.

‘திருக்குறளை படிக்க வேண்டாம்’ என்று பரமாச்சாரியர்கள் சொன்னதாக ஒரு செய்தி . அது மார்கழி மாதம்.

திருப்பாவையில் – பாவை நோன்பு கடைபிடிப்பது பற்றி ஆண்டாள் . ‘ நெய் உண்ணோம் . பால் உண்ணோம் ‘ என்று வரிசைப் படுத்துகிறார். அப்போது தீக்குறளை சென்றோதோம்’ என்று அந்தப்பாடலில் வருகிறது.

இதற்குப்பொருளாக – ‘திருக்குறளை படிக்கக்கூடாது ‘ என்று பரமாச்சாரியார் கூறியதாக அதில் இருந்தது !

தீக்குறளை சென்றோதோம் என்றால் – ஒருவரைப்பற்றி ‘ கோள் ‘ சொல்வது – புறம்கூறுவது செய்ய மாட்டோம் என்று தான் பொருள்.

திருப்பாவை வேதத்தின் சாரம் என்று சொல்லப்படுவது . ஒருவரைப்பற்றி பொல்லாங்கு – கோள் – சொல்வதை வேதம் மாபெரும் பாவம் , தவறு என்று கூறுகிறது. ஆண்டாள் அதைத்தான் கூறினார்.

பரமாச்சாரியார் இப்படி கூறியிருப்பாரா ? எங்கோ தவறு நடந்திருக்கிறது என்று நினைத்தவாறு – அந்தப்பகுதியை நியூஸ் எடிட்டர் பார்வைக்கு அனுப்பினேன் . பிறகு மறந்தேன்

அன்று மாலை பேப்பரை பார்த்து திடுக்கிட்டேன்.

‘திருக்குறளைப் படிக்காதே – காஞ்சி சங்கராச்சாரியார் உத்தரவு !” என்று வெளியிடப்பட்டிருந்தது. இது பரபரப்பு ஏற்படுத்திவிட்டது .தமிழ் அறிஞர்கள் திடுக்கிட்டார்கள் . பெரும் கண்டனம் தமிழ் அறிஞர்களிடம் இருந்து கிளம்பியது.

எனக்கு வருத்தமாக இருந்தது. நிச்சயம் ஏதோ பிழை என்று தோன்றியதை செய்தி ஆசிரியரிடம் கூற தவறி விட்டேனே என்று உள்ளம் உறுத்தியது.

மற்ற தமிழ் நாளிதழ்களிலும் அடுத்தடுத்து வந்த நாட்களில் தினமும் இந்த செய்தி பெரிதுபடுத்தபட்டது. தினம் ஒரு கண்டன அறிக்கை !

ஆச்சாரிய சுவாமிகளிடமிருந்து விளக்கம் வராது என்பது எனக்கு தெரியும் . யாராவது அவரிடம் போய் பேசினால் , தவறு திருத்தப்பட வாய்ப்பு ஏற்படும்.

அதற்குள் ‘ குமுதம் ‘ இதழில் இது குறித்து தலையங்கம் எழுதப்பட்டு விட்டது. தலைப்பு –
‘யானைக்கும் அடி சறுக்கும்?’

குமுதம் தலையங்கம் அக்காலத்தில் மிகவும் விறுவிறுப்புடன் இருக்கும் . சுடச்சுட விஷயங்களைத் தொடுவார் எஸ்.ஏ.பி.

இந்த தலையங்கம் பலன் தந்தது . திருமதி சௌந்திரா கைலாசம் , காஞ்சி பெரியாரை தரிசிக்க சென்றார்.அப்போது இந்த விஷயத்தை மெதுவாக எழுப்பினார். பெரியவர் கூறியது தவறாக வந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார்.

காஞ்சி பெரியவர் கூறிய விளக்கம் அடுத்த குமுதம் இதழில் செய்தியாக திருமதி கைலாசம் எழுதினார் :

“மார்கழி மாதம் கடவுளைப்பற்றிய நினைவுகளுக்கு மட்டுமே செலுத்த வேண்டிய மாதம் .
தீக்குறள் மட்டுமல்ல – திருக்குறள் போன்ற மிக உயர்ந்த நல்ல விஷயங்களைக்கூட கூறாமல் – கடவுள் நாமத்தையே சொல்ல வேண்டும் ”

பெரியவர் இப்படி மார்கழி மாதத்தில் இறைவனை மட்டுமே நினைக்க வேண்டியதை வலியுறுத்த சொல்லி இருக்கிறார் !

இந்த விளக்கம் வந்தவுடன் அமைதி ஏற்பட்டுவிட்டது . சௌந்திரா கைலாசம் அவர்களுக்கு என் மனம் நன்றி கூறியது.

அடுத்த நிகழ்ச்சி – 1987 ம் ஆண்டு .

ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி மடத்தை விட்டு வெளியேறியதை அடுத்து ஏற்பட்ட பரபரப்பு நிகழ்ச்சி.

பல்வேறு அவதூறான செய்திகள் வந்து கொண்டிருந்தன. எனது இதழுக்காக உண்மைகளை சேகரித்தேன்.

காஞ்சிபுரம் சென்று ஸ்ரீமடத்திலும் மெல்ல தகவல் சேகரித்தேன். மகா பெரியவர் – ஓரிடத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். இந்த விஷயமாக மகா பெரியவரை பேட்டி எடுத்தால் என்ன என்றே தோன்றியது. 1962 நிகழ்ச்சியில் – ‘ அவசரப்பட்டதுபோல’ இப்போது கூடாது . எதிரே காட்சி தருகிறாரே … கேட்கலாமே என்று மனசாட்சி கூறியது . பணிந்தேன்.

சுவாமிகளிடம் நான் பேச முற்பட்ட போது சுற்றி இருந்த வயதான பக்தர்கள் தடுத்தார்கள். ‘ பெரியவரிடம் இதைப்பற்றி எல்லாம் கேட்பதா ? அவரை பேட்டி எடுப்பதா ‘ என்று சினந்து என்னை வெளியேறச் சொன்னார்கள்.

“என்ன …. என்ன …. அவன் என்ன கேட்கிறான் ?” என்று சுவாமிகள் நாற்புறமும் திரும்பி
விசாரித்தும் – அதற்கு பக்தர்கள் பதில் கூறாமல் என்னை விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்கள்.

நான் ஸ்ரீமடத்தைவிட்டு வெளியே வந்து , டிபன் சாப்பிட போகலாம் என்று நினைத்தேன். அதற்குள் ஒரு வயதான பக்தர் ஓடிவந்தார். ” பெரியவா கூப்பிடுகிறார்” என்றார். நான் ஓடினேன்.

“என்ன சந்தேகம் ….. கேளு ” என்று மெதுவான குரலில் பரமச்சாரியார் கூறினார். நான் கேள்விகளை பணிவுடன் கேட்டேன்.

“பரமாச்சாரியாரிடம் கோபித்துக் கொண்டே ஜெயேந்திரர் வெளியேறினாரா ? என்று கேட்டேன் . பக்தர்கள் முகத்தில் கோபம் பளிச்சிட்டது.

‘ அப்படி இல்லை . அவருக்கு என் மீது ரொம்ப அன்பு . எனக்கு கனகாபிஷேகம் செய்து பார்த்தரே ” என்று பரமாச்சாரியார் கூறும் போது ஜெயேந்திரர் மீது அவருக்கு இருந்த அன்பு வெளிப்பட்டது.

” ஸ்ரீ மடத்திலிருந்து பணம் எடுத்துச் சென்றாரா ?” என்று கேட்க நேர்ந்தது.

பரமாச்சாரியார் மறுத்து தலையாட்டினார். ” அவருக்கு எதற்கு பணம் ? அவர் நினைத்தால் பணம் கொட்டும் . இந்த மடம் ஏழை மடமாக இருந்தது. அதை மாற்றி – பல நல்ல காரியங்களை செய்பவர் அவர் ” – சுவாமிகள் கூறினார்.

வெளியே சொல்லப்பட்ட வதந்திகளை நான் கேட்க நேர்ந்தது.

“இம் மாதிரி நிகழ்ச்சி ஸ்ரீ மடம் பற்றி மக்கள் என்னவாறு நினைக்க செய்யும் “….

“மக்கள் மிக உயர்ந்தவர்கள் . அவர்கள் கருத்து எதுவானாலும் அது முக்கியம் . அதை அலட்சியப்படுத்தமுடியுமா ?” – பெரியவர் கூறினார். இன்னும் பல கேள்விகள் எழுப்பினேன் !

பத்திரிக்கையில் இந்த பேட்டி பரபரப்பாக வந்தது. ஜெயேந்திரர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. அடுத்து சில நாட்களில் ஜெயேந்திரர் திரும்பினார்.

பரமாச்சாரியாரிடம் சங்கடமான கேள்விகள் கேட்டதற்கு ஒரு சில பக்தர்கள் என்னை திட்டினாலும் , ஜெயேந்திரர் பற்றி பரமாச்சாரியார் அந்த பேட்டியில் உயர்வாக கூறியிருந்தது – தமிழகம் முழுவதும் இருந்த பக்தர்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அளித்தது.

source::::Shri.Ramanathan in periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4472/#ixzz2VQPkrU6M

“இப்போ போட்டோ எடுத்துக்கோ ” !!!….சொன்னார் மகாபெரியவர் !!!

மூலம் : மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் – ஐந்தாம் பாகம்
நினைவு கூர்ந்தவர் : எஸ். சீதாராமன், சென்னை – 28.

புகைப்படம் எடுப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.

பெரியவாள் முன்னிலையில், slide viewer –ல் ஸ்லைடுகளைப் போட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தேன். அது, ஸ்லைடில் உள்ள படங்களை நான்கு மடங்கு பெரிதாகக் காட்டும். படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவாள், “இதில் ஸ்லைடு வைக்குமிடத்தில் நெகடிவ் பிலிமைப் போட்டால், நன்றாகத் தெரியுமா?” என்று கேட்டார்.

(பெரியவாளுக்குப் புகைப்படக் கலையின் ஒவ்வொரு நுட்பமும் தெரியும். ஆனால், தனக்குத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியும்! ஆனால், என்னுடைய அக்ஞானம் என்னை விட்டுப் போய்விடுமா என்ன?)

”நெகடிவ் போட்டால், திரைப்படத்தில், கறுப்பு வெள்ளையாகவும், வெள்ளை கறுப்பாகவும் தெரியும்..”

பெரியவாள் உடனே, “அதுதான் எனக்கு வேணும்.. நரைத்துப் போன என் தலைமுடி, கறுப்பாகத் தெரியும்! நான் இன்னும் இளைமையாக இருப்பேனோல்லியோ…”

அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அட்டகாசமாகச் சிரித்து மகிழ்ந்தார்கள்.

பெரியவாளுடைய நகைச்சுவை உணர்வு, எவரெஸ்டுக்கு மேலே பத்து அங்குலம்!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

***********

வானகரத்தில் ஒரு சவுக்குத் தோப்பில் உட்கார்ந்திருந்தார் பெரியவா. முன்னர் எடுத்திருந்த புகைப்பட ஆல்பத்தைக் கொடுத்தேன். அப்போது, பல்வேறு காரணங்களால் புகைப்படங்களில் குறைகள் ஏற்பட்டிருந்தன.

இந்தத் தோப்பில் எவ்விதக் குறைகளுமில்லாமல் புகைப்படம் எடுக்க முடியும் என்பது என்னுடைய துணிபு.

பெரியவா, ஒரு சிஷ்யரைக் கூப்பிட்டு, ஒரு தாழங்குடை கொண்டுவரச் சொல்லி, அதைத் தன் தலைக்கு மேல் பிடிக்கச் சொன்னார்.

“இப்போ போட்டோ எடுத்துக்கோ…”

அப்போது நான் எடுத்த புகைப்படம் மிக அருமையாக வந்திருந்தது. (பின்னால் கல்கி தீபாவளி மலர் ஒன்றில் ஸ்ரீருத்ர வாக்கியமான, ‘நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச’ என்ற விளக்கத்துடன் முகப்புப் படமாக வெளியாயிற்று).

பெரியவாள் தாழங்குடையைப் பிடிக்கச் சொன்னதற்கும் காரணம் இருந்தது. மரங்கள் வழியே வந்த ஒளி, அவர்கள் மேல் திட்டுத் திட்டாக விழுந்து கொண்டிருந்தது. அந்த நிலையில் படம் எடுத்தால் நன்றாக வராது என்பதால், அந்த ஷாட் நன்றாக அமைய வேண்டும் என்பதற்கான சூழ்நிலையை உண்டாக்கிக் கொடுத்தார்கள்.

மெய்ப் படங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் அவர்கள். நிழற் படங்களின் நுட்பங்களை எந்தக் குருகுலத்தில் கற்றுத் தெளிந்தார்கள்?
ஆயிரம் படம் படைத்த ஆதிசேஷ்னே அறிவார்!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::periva.proboards.com

Natarajan
Read more: http://periva.proboards.com/thread/4494/maha-periyavaa-photographer/#ixzz2VFnPJvMb

“எங்கேயும் போகலே பாட்டி …இங்கேதான் இருக்கேன் “

இடம்: ரிஷிவந்தியம் என்ற பெயரில் தமிழகத்திலுள்ள சில கிராமங்களில் தஞ்சை மாவட்ட ரிஷிவந்தியம். அக்கிராம எல்லையில் தனித்து உள்ள ஒரு பழைய வீடு.
காலம்:1930-களீல் ஒரு வைகறை வேளைக்குச் சிறிது முன்னர்.

“எங்கே அவன்? எங்கே அவன்?” என்று வாய் விட்டுக் கோபமாகச் சொல்லிக்கொண்டு ஓர் அந்தண விதவையம்மாள் தனக்கு இடது பக்கம் கண் தெரிந்த வரையில் பார்வையைச் செலுத்துகிறாள்.{வலப் பக்கத்தில் கிராமம் முடிந்து விடுகிறது).

உள்ளே சென்றவள் மறுபடி வெளியே வந்து சாணி தெளிக்கிறாள். கோமய ஜலம் நிலத்தில் தொப்புத் தொப்பு என்று விழும் ஓசையையும் மீறிக்கொண்டு, பாட்டியம்மை தனக்குத் தானே பொரிந்து தள்ளீக் கொள்ளும் கோபச் சொற்கள் தொப்புத் தொப்பென்று விழுகின்றன.

“கட்டேல போறவன்! இப்படியா ஒரு பால்காரன் வாய்ப்பான்? கெழவி, வாசக்கதவைத் தெறந்து வச்சவ, ஏதோ சித்த்க் கண்ணசந்துட்டேன்னா, நாலு தரம் கையைத் தட்டிக் கூப்பிட்டு எழுப்ப மாட்டான்? என்ன திமிரு? அவனே சர்வ சுதந்திரமா ஆத்துக்குள்ள வந்து அடுக்களை வாசப்படி கிட்ட பாத்திரத்துல பாலை விட்டுட்டுப் போயிருக்கானே! கட்டேல போக! எங்கோயோ போய்ட்டானே அதுக்குள்ளே!”

“எங்கேயும் போகலே பாட்டி! இங்கேதான் இருக்கான்” என்று சொல்லிக் கொண்டே அப்போது பாட்டியம்மாளின் முன் போய் நின்றது——ஸாக்ஷாத் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்!

பாட்டியம்மை ஆடிப் போய்விட்டாள் ஆடி! அவளுக்குக் கையும் வரவில்லை, காலும் வரவில்லை, வாயும் வரவில்லை. வாயடைத்து நின்றாள். “ பெரியவாளா? நிஜமாகவே பெரியவாள்தானா? விடிய விடியத் தன் பொத்தல் குடிசை வாசலிலா? அதோடு என்ன விபரீதம்?’ க’—போனவனாகத் தம்மையே சொல்லிக்கொள்கிறார்! மூளை கெட்ட பாவி, மஹா அபசாரமா ஏதோ பண்ணீப்பிட்டேனா என்ன?”
பதைபதைத்தப் பாட்டிக்கு அபயம் தரும்போதே ஸ்ரீசரணரின் திவ்ய நேத்ரங்களில் ஒரு குறும்புக் குறுகுறுப்பு! ஹிதமாகச் சொல்வார்,: “ பயப்படாதே பாட்டீ ! பால்காரன் கூப்பிட்டுக் கூப்பிட்டுத்தான் பார்த்தான்! நீ நன்னாத் தூங்கிப்பிட்டே! எழுந்தே வரல்லை ஒனக்காக ஒன் மாதிரி வேஷம் போட்டுக்கிண்டு நான்தான் பாலை வாங்கி உள்ளே வெச்சேன்! அவன் ஒண்ணும் தப்புப் பண்ணல்லை. நான்தான் திருட்டுத்தனம் பண்ணீயிருக்கேன்!”

நடந்தது இதுதான். கிராமம் கிராமமாக ஸ்ஞ்சரித்து வந்த பெரியவாள் முதல் நாள் இரவில் மேனாவில் ரிஷிவந்தியம் பக்கம் வந்திருக்கிறார். பல்லக்குத் தூக்கும் போயிக்கள் நெடுநேரம் சுமந்து வந்து விட்டதால், இரவு இரண்டாம் ஜாமமாயிருக்கலாம். அப்போது அவர்களைக் கிராம வெளீ எல்லையிலேயே ஓரமாக ஒரு மரத்தடியில் ‘ஸவாரி” கட்டச் சொல்லி விட்டு (அதாவது மேனாவை இறக்கி வைக்கச் சொல்லிவிட்டு) உறங்கப்போகுமாறு ஸ்ரீசரணர் பணித்தார். தாமும் வழக்கம் போலவே மேனாவுக்குள் முடங்கிக் கொண்டார். பாட்டியம்மாளின் வீட்டுக்கு வலப் புறத்தில் அம் மரத்தடி இருந்தது.

விடிவதற்கு முஹூர்த்த காலம் முன்பு பாட்டியம்மை வாசற்கதவின் பழைய தாழ்ப்பாளைத் திறக்கும் சப்தம் “கிறீச், கிறீச்” கேட்டது. இரவு மூன்று—முன்றரைக்கே துயிலெழுந்து விடும் பெரியவாள்தான் அதை மேனாவிலிருந்தே கேட்டுக்கொண்டது. அம்மையார் வாசலில் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் பால்காரன் வராததால், தனக்குத் தானே பேசிக்கொள்ளூம் சுபாவப்படி அவனுக்கு அஷ்டோத்தர சத அர்ச்சனை பாடி விட்டு உள்ளே போனாள். அடுத்து வாசற்கதவின் ‘கிரீச்’ எழாததை, அதாவது, பாட்டியம்மை கதவைச் சாத்தவில்லை என்பதைக் கவனம் கொண்டார், எந்தச் சிறிய விஷயத்தையும் கவனிக்கத் தவறாத மேனா மேலவர். வீட்டின் பின்புறத்திலிருந்து, நிலத்தோடு பதிந்து விட்ட உளுத்த கதவைத் திறப்பதன் ‘ மதுர ஸ்வர’ங்களை அடுத்தாற்போல் ஸுப்ரபாத கீதமாக அம் மேலவர் கேட்டுக் கொண்டார். பாட்டியம்மை கொல்லைப்புறம் செல்வதைப் புரிந்து கொண்டார். சில நிமிஷங்கள் ஆகியும் ஸுப்ரபாதம் ‘ரிபீட்’ ஆகாததால் அந்தக் கதவையும் சத்தாமலே பாட்டியம்மாள் வீட்டுக்குள் திரும்பியிருக்கிறாள் என்பதையும் கவனம் கொண்டார்.

பின்னரே பால்காரர் வந்தார், பன்முறை குரல் கொடுத்துப் பார்த்தார்.

‘ பாவம், பாட்டி தூங்கிப் போய் விட்டாள்’ என்று ஸ்ரீசரணர் புரிந்து கொண்டார்.நெஞ்சில் அருள் அரும்பியது. அதில் குறும்பும் கலந்து குதூஹலிக்க எண்ணீனார். அவருடைய சூழ்ச்சித் திட்டத்திற்கு வசதியாக மேனா மூலையில் வெள்ளைச் சால்வை ஒன்றிருந்தது. அதை எடுத்துத் தலையோடு கால் நன்றாக முக்காடிட்டுப் போர்த்திக்கொண்டு மேனாவிலிருந்து வெளீ வந்தார். சற்றுத் தொலைவில் போயிக்கள் நித்ரா தேவியின் அணைப்பிலிருந்து வெளீவராது கிடந்ததும் அவருக்கு வசதியாயிற்று. இருள் மூட்டம் விலகாத அவ் வேளையில் அடி மேல் அடி வைத்துப் பாட்டியம்மை வீட்டுப் புறக்கடை வந்து, குட்டிச் சுவர் ஏறிக் குதித்து—ஆம், திருட்டு ஸம்ஸ்காரத்தில் மிச்சம் மீதி வைக்காமல்தான்—உள்ளே தோட்டப்புறத்தில் இறங்கி, திறந்தே இருந்த சுப்ரபாதக் கதவைத் தாண்டி வீட்டினுள்ளேயே பாதம் பதித்தார்.பின்புற ரேழி வழியாக முற்றத்தண்டை வந்தார். பக்கத்தில் அடுக்களை வாசலில் காலிப் பால் பாத்திரமிருந்தது. அதை எடுத்துக்கொண்டு, கூடத்து மூலையில் இரண்டாம் தூக்கம் போட்டுக் கொண்டிருந்த பாட்டியம்மாளை ‘கப்சிப்’ என்று கடந்து, வஸ்திரத்தை மீண்டும் நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டு வெளி வாசலுக்கு வந்தார். பால் பாத்திரத்தைத் திண்ணையில் வைத்தார்.

பாட்டாளிப் பால்காரருக்கு பால் வாங்குபவரை ஏறிட்டுப் பார்க்க எங்கே நேரமிருந்தது? அந்த இருள் மூட்டத்தில் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஒரு ஏழைப் பாட்டியம்மையாக வேஷமிடுவார் என்று அவர் சொப்பனத்திலேனும் எண்ணீயிருப்பாரா என்ன? கொண்டு வந்திருந்த கைப் பாலைப் பாத்திரத்தில் ஒரே கவிழாக கவிழ்த்து விட்டு நடையைக் கட்டினார்.

போலிப் பாட்டியம்மை அடுக்களை வாசலில் பாலை வைத்து விட்டு மீண்டும் மேனாவுக்கு ஏகி, தமது நகைச்சுவை நாடகத்திற்குப் பாட்டியம்மாள் எப்படி அடுத்த காட்சி அமைக்கப்போகிறாள் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தார். அக்காட்சிதான் பார்த்து விட்டோமே!

கண்ணன் பாலைத் திருடி விட்டுத் திட்டு வாங்கினான். இவரோ, திருட்டுத்தனமாகப் பாலை வாங்கி வைத்துப் பாட்டியம்மைக்குச் சேவை செய்து விட்டு, அந்தக் கண்ணன் கூட வாங்காத ‘க—போகிற’ திட்டை வாங்கிக் கட்டிக் கொண்டு தானே திட்டுக்கு உரிமையாளன் என்று திட்டியவளிடமும் தெரிவித்துக் கொள்கிறார்!

விஷயமறிந்த பாட்டியம்மை விலவிலத்து விட்டாள். எப்பேற்பட்ட ராஜோபசார தேவோபசாரத்துடன் வரவேற்கப்பட வேண்டியவர், எளியவராகத் தன் வீடு முழுவதும் பாதம் பதித்து ,ஐயோ இந்த அவலப் பிண்டத்திற்காக பால் வாங்கி வைத்துப் போயிருக்கிறார்? அந்த தெய்வத்தை என்ன வார்த்தை சொல்லிவிட்டோம்?

மன்னிப்புக் கேட்கக்கூட வராமல் உளறிக் கொட்டி, கண்ணீரைக் கொட்டிக்கொண்டு நிற்கும் பாட்டியிடம் ப்ர்ஸன்ன முகராக ஸ்ரீசரணர்,” நீ சொன்னது திட்டே இல்லே! நான் போறது கட்டேலதானே? கட்டைப்பல்லாக்குல தானே ஊர் சுத்தறேன்? நடந்து போறச்சேயும் பாக்குறடுக் கட்டையிலே தானே போகிறேன்?” என்றார். அவளுடைய வசவுக்கும் மெய்ம்மை கூட்டி, பாஷ்யம் செய்தார், வைதாரையும் வாழவைக்கும் வள்ளற்பிரான்.

source:::periva.proboards.com

Natarajan
Read more: http://periva.proboards.com/thread/4476/#ixzz2V9VE9zyd

“பிள்ளையார் கண் திறந்து விட்டார் “….சொன்னார் மகாபெரியவர் !!!

Source: Email from our respected member Sri G Vaidyanathan

http://www.periva.proboards.com

Natarajan

பல வருடங்களுக்கு முன் காஞ்சி மகா பெரியவர் தமிழகத்தின் தென்பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம்….. தஞ்சாவூர் ,திருச்சி, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம்,திண்டுக்கல், சோழவந்தான் ஆகிய ஊர்களுக்கு விஜயம் செய்துவிட்டு, மதுரையை நோக்கித் தன் பரிவாரங்களுடன் வந்துகொண்டிருந்தார். ஸ்வாமிகள் . வழி நெடுகிலும் உள்ள கிராம மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் திரளாக வந்து ஸ்வாமிகளை தரிசித்து ஆசிபெற்றுச் சென்றனர். அவர்களுக்கெல்லாம் இன்முகத்தோடு அருளாசி வழங்கினார். பழம், கல்கண்டு ஆகியவற்றைப் பிரசாதமாக கொடுத்துக்கொண்டே நடந்தார் ஸ்வாமிகள்.

மதுரை மாநகரை நெருங்கும் நேரம். அங்கிருந்த ஒரு கிராமத்து ஜனங்கள் அனைவரும் ஒன்றுகூடி “பூர்ணகும்ப” மரியாதையுடன் ஸ்வாமிகளை வரவேற்றார்கள்.அந்த ஜனங்களின் பக்தியையும் ஆர்வத்தையும் பார்த்த ஸ்வாமிகளுக்கு ஏக சந்தோஷம். சாலையோரம் இருந்த ஓர் அரசுமரத்து வேரில் வந்து அவராகவே அமர்ந்துகொண்டார் . அனைவரும் கீழே விழுந்து நமஸ்கரித்தனர்.

அந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் மிகுந்த பக்தியுடன் ஸ்வாமிகளை நமஸ்கரித்தார் . பிறகு, “பெரியவங்ககிட்ட ஒண்ணு பிரார்த்திக்கிறோம் . நாங்க ஏழை சனங்கல்லாம் ஒண்ணா சேந்து, பக்கத்துல ஒரு புள்ளயார் கோயிலை புதுசா கட்டி முடிச்சிருக்கோம். சாமி பாதம் அங்க படணும்னு வேண்டிக்கிறோம்….கருண பண்ணணும்!” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்.

குதூகலத்தோடு எழுந்த ஆச்சார்யாள், “கோயில் எங்கே இருக்கு?” என வினவினார்.

பஞ்சாயத்துத் தலைவர், “இதோ கூப்பிடு தூரத்திலதான் சாமி இருக்கு.வந்து அருள் பண்ணணும்!” என்றார்.

ஸ்வாமிகள் மிக வேகமாக பிள்ளையார் கோயிலை நோக்கி நடந்தார். மேளதாள -பூரணகும்ப மரியாதையுடன் ஆச்சார்யாள் கோயிலுக்குள் பிரவேசித்தார் . கர்ப்பக்கிருகத்துள் ஆறடி உயர சிலா ரூபமாக விநாயகர் வீற்றிருந்தார். விக்கிரகம் கம்பீரமாக பளிச்சென்று
இருந்தது . வைத்த கண் வாங்காமல் சற்று நேரம் விநாயகரையே பார்த்த பெரியவா,பஞ்சாயத்துத் தலைவரிடம், “கோயிலுக்கு கும்பாபிஷேகம் ஆயிடுத்தோ?” என்று கேட்டார்.

” இன்னும் ஆகலீங்க சாமி” என்றார் தலைவர்.

” அதான் எல்லாமே பூர்த்தியாகி இருக்கே…ஏன் இன்னும் கும்பாபிஷேகம் நடத்தலே?” என்று கேட்டார் ஸ்வாமிகள்.

பஞ்சாயத்துத் தலைவர் பவ்வியமாக பதில் சொன்னார்.; “எல்லாமே பூர்த்தி ஆயிடுச்சு சாமி. இன்னும் ஒரு மாசத்துக்குள்ளாற மகாத்மா காந்தி இந்த வழியா மதுரைக்கு வாராறாம்.அவுரு வர்றன்னிக்கு , ‘அவருக்கு முன்னால வெச்சே கும்பாபிஷேகத்த நடத்த ஏற்பாடு பண்ணித் தர்றோம்’னு மதுரையைச் சேர்ந்த சில பெரிய மனுஷங்க உறுதி கொடுத்திருக்காங்க! அதனாலதான் காந்தீஜீக்காகக் காத்துக்கிட்ருக்கோம்!”

ஆச்சார்யாள் தனக்குள் சிரித்துக்கொண்டார். இரண்டு நிமிஷம் கண்ணிமைக்காமல் விநாயகரையே பார்த்துவிட்டுச் சொன்னார்.

” அதுக்கு அவசியம் இருக்காது போலத் தோண்றதே! கணபதி கண்ணத் திறந்து நன்னா பாத்துண்ருக்காரே…இனிமே கும்பாபிஷேகத்த தாமசப்படுத்தப்படாது. ஒடனேயே நல்ல நாள் பார்த்து பண்ணிடுங்கோ.”

உடனே பஞ்சாயத்துத் தலைவர், “இல்லீங்க சாமி! கண் தொறக்கிற சடங்கு விநாயகருக்கு இன்னும் நடக்கலீங்க சாமி! நீங்க இப்படி சொல்றத பாத்தா ஒண்ணும் புரியலீங்களே..” என்று குழம்பினார்.

ஸ்வாமிகள் மீண்டும் சிரித்துக்கொண்டே, “இது நானா சொல்லலே! கணபதி கண்ணைத் திறந்து நன்னா “ஸ்பஷ்டமா” பார்த்துண்ருக்கார். சீக்கிரமே கும்பாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் பண்ணுங்கோ! காந்தி வந்தா நன்னா தரிசனம் பண்ணிட்டுப் போகட்டுமே” என்று கூறினார் . குழுமியிருந்த ஜனங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அமைதியோடு காத்திருந்தனர்.

பஞ்சாயத்துத் தலைவருக்கும் குழப்பம் தீரவில்லை. உடனே ஆளனுப்பி விநாயகர் சிலையை வடிவமைத்த ஸ்தபதியை வரவழைத்தனர் .அவரிடம் ஆச்சார்யாள் சொன்ன விஷயம் தெரிவிக்கப்பட்டது .

சிற்பியும் அடித்துச் சொன்னார்; “இல்லீங்க ஸ்வாமி..இன்னும் விநாயகருக்கு கண் தொறக்கலீங்க. தொறந்தா விக்கிரகத்தச் செதுக்கின நான்தானே தொறக்கணும்..இன்னும் அது ஆவுலீங்க..” மூன்று தடவை ஆச்சார்யாள் காலில் விழுந்து கை கட்டி நின்றார் சிற்பி.

மீண்டும் ஒருமுறை விக்கிரகத்தையே உற்று நோக்கிய ஸ்வாமிகள் “மகா கணபதிக்கு நன்னா கண் தெறந்தாச்சு! அவர் சந்தோஷமா பாத்துண்டிருக்கார் . இனிமேலும் தாமதிக்கிறது நல்லதில்லே. சீக்கிரமா ஒரு நல்ல நாள் பாத்து கும்பாபிஷேகத்த நடத்துங்கோ..
க்ஷேமம் உண்டாகும்” என்று சொல்லிவிட்டு வேகவேகமாகப் புறப்பட்டுவிட்டார் ஆச்சார்யாள். பரிவாரம் பின்தொடர்ந்தது. ஆச்சார்யாளை அந்த ஊர் எல்லை வரை சென்று வழி அனுப்பி வைத்துவிட்டுத் திரும்பினர்,அத்தனை பேரும்.

சற்று நேரத்துக்கெல்லாம் அந்த ஊர் கிராமப் பஞ்சாயத்து சபை’ கூடியது . ஆச்சார்யாள் கூறிவிட்டுப் போன விஷயம் குறித்து அலசி ஆராயப்பட்டது. விநாயகர் விக்கிரகத்தைச் செதுக்கிய சற்று வயதான ஸ்தபதி அடித்துச் சொன்னார். “ஆச்சார்ய ஸ்வாமிங்களுக்கு ஞான திருஷ்டில எல்லா விஷயங்களும் தெரிஞ்சுடும்.இருந்தாலும் எங்கையால் நான் இன்னும் கண்ண தொறக்கலே.சாமி எப்டி சொல்றாங்கனு தெரியலே .நானும்கூட விக்கிரகத்துகிட்ட போயி உன்னிப்பா கவனிச்சுப் பாத்துட்டேன்.அப்டி ஆனதா தெரியலீங்க…. இப்ப என்ன பண்றது?”

அங்கே மௌனம் நிலவியது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. திடீரென்று பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க உள்ளூர்ப் பையன் ஒருவன் அந்த இடத்துக்கு ஓடி வந்தான்.கை கட்டி நின்றான்.

அவனைப் பார்த்த தலைவர், “தம்பி! ஏன் இப்படி ஓடி வர்றே? என்ன விஷயம்?” என்று கேட்டார்.

உடனே அந்தப் பையன் “தலைவரே! கோயில் விநாயகர் சிலை பத்தி எனக்கு ஒரு விஷயம் தெரியும்..சொல்லலாங்களா?” என்று கேட்டான் பவ்யமாக.

” ஒனக்கு என்ன தெரியும்..சொல்லு தம்பி!” என்று மிக ஆர்வம் காட்டினார் தலைவர். கூட்டமும் அந்தப் பையனையே பார்த்துக் கொண்டிருந்தது.

பையன் பேச ஆரம்பித்தான்; “ஐயா தலைவரே! எனக்கு தெரிஞ்ச உண்மையை சத்தியமா சொல்றேங்க. அந்த சாமியார் சாமி [ஆச்சார்யாள்] ‘புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு’னு சொல்லிட்டுப் போனது மெய்தாங்க! எப்படீன்னா ஒரு பத்து நாளுக்கு முந்தி ஒரு நாள் உச்சி வெயில் நேரமுங்க.இதோ ஒக்காந்துருக்காரே ..புள்ளையார் விக்கிரகத்தைச் செஞ்ச தாத்தா.. இவரோட பேரப் பையன்..என் சிநேகிதன். என்ன வேலை பண்ணான் தெரியுமா? இவங்க தாத்தா சிலைகளின் கண்ண தொறக்கறத்துக்கு வெச்சிருக்கிற சின்ன உளியையும்,சுத்தியையும் எடுத்துக்கிட்டு ,எங்களையும் கூட்டிக்கிட்டு கோயிலுக்குப் போனான்.

” இதோ பாருங்கடா! எங்க தாத்தா இப்புடித்தான் சிலைங்க கண்ணைத் தொறப்பாருன் ‘ன்னு சொல்லிகிட்டே,’புள்ளையாரே,கண்ணத்தொற… புள்ளையாரே ,கண்ணத் தொற!’னு அவனும் சொல்லி, எங்களையும் ஒரக்க சொல்லச் சொல்லி, “டொக்கு..டொக்குனு” உளிய புள்ளயாரின் ரண்டு கண்ணுலயும் வச்சு தட்டினான்..”புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு “னு எல்லாப் பசங்களும் குதிச்சு ஆடினோம்.இந்த விஷயம் ஊர்ல ஒருத்தவங்களுக்கும் தெரியாது. நாங்களும் வெளியிலே மூச்சு வுடலே! இது தாங்க நடந்துச்சு….எங்களை மன்னிச்சுருங்க.”

பிரமிப்போடு அமர்ந்திருந்தது கூட்டம். பஞ்சாயத்துத் தலைவர் கண்களில் நீர் சுரந்தது.ஆச்சார்யாளின் மகிமையைப் பார்த்து அந்த ஊரே வியப்பில் ஆழ்ந்தது . சிற்பியின் பேரனுக்கு எட்டு வயதிருக்கும். பஞ்சாயத்து அந்தச் சிறுவனை அழைத்து விசாரித்தது. விநாயகருக்கு, தான் கண்களைத் திறந்துவிட்டதை ஒப்புக் கொண்டான். எல்லோரும் கோயிலுக்கு ஓடிச் சென்று விநாயகரை விழுந்து வணங்கினர். சிற்பி, ஒரு பூதக் கண்ணாடியின் உதவியோடு கணபதியின் கண்களை நன்கு பரிசீலித்தார். மிக அழகாக “நேத்ரோன் மீலனம்” [கண் திறப்பு] செய்யப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்.

ஊரே திரண்டு ஆச்சார்யாள் சென்ற திசையை நோக்கி ஓடியது. அடுத்த கிராமத்தில் சாலை ஓரமிருந்த ஒரு பெரிய ஆலமர நிழலில் பரிவாரங்களுடன் இளைப்பாறிக்கொண்டு இருந்தார் ஸ்வாமிகள். அனைவரும் ஓடிப் போய் ஸ்வாமிகள் காலில் விழுந்து எழுந்தனர்.
அந்தப் பஞ்சாயத்துத் தலைவரும்,சிற்பியும் கேவிக்கேவி அழ ஆரம்பித்துவிட்டனர்.

இவர்களைப் பார்த்த அந்த பரப்பிரம்மம் சிரித்துக்கொண்டே கேட்டது; “புள்ளையாருக்குக் கண் தெறந்தாச்சுங்கறத பிரத்தியட்சமா தெரிஞ்சுண்டுட்டேளோல்லியோ ? போங்கோ….போய் சீக்கிரமா கும்பாபிஷேகத்த நடத்தி முடியுங்கோ. அந்த பிராந்தியத்துக்கே க்ஷேமம் உண்டாகும்.”

சிரித்தபடியே கை தூக்கி ஆசிர்வதித்தது அந்த நடமாடும் தெய்வம்.

Read more: http://periva.proboards.com/thread/4379/#ixzz2U2DTOEps

Newspaper Vendor Of Bangalore Walks In to IIM Kolkata….

As the alarm goes off at 4am, N Shiva Kumar is up on his feet, stacking his bicycle with newspapers. He has to deliver them before the sun appears on the horizon. A habit since Class 6, Shiva’s life is set to change now. Come June 16, this newspaper-boy-turned-vendor will walk down the corridors of the Indian Institute of Management-Calcutta as a PGP student.

 

It sounds like a fairy tale, but the TOI vendor who cracked CAT 2012 has indeed grabbed a seat in the premier business school. Shiva, 23, an engineering student from Banaswadi, is the son of an illiterate mother and a father who was a truck driver. He started working as a newspaper delivery boy and for his debt-ridden family of four the Rs 150 he would bring home was a huge relief.

“Every morning people would come home asking my father to return the money he had borrowed. My father had a truck. But there were more liabilities than what he could earn with it. When I was in Class 3 or 4, I sold flowers that my mother strung into garlands by the roadside. It was only later that I found the job of newspaper boy,” said the 8th semester computer science student of Bangalore Institute of Technology.

Shiva managed the part-time job along with school. “I was studying in an ICSE school. In Class 9, I was asked not to come to school till I paid the fees. The next day, I approached the first customer I was delivering the paper to, Krishna Veda Vyasa, and requested him to fund me. He hesitated, and said he didn’t even know me. I asked him to do a background check, and he found I was the topper there. I requested him to pay one term’s fee, but he paid for the entire year. He continued funding me ever since. I owe it all to him,” he said.

He soon found an opportunity to be a vendor and started his own agency when in Class 10. “I’d learnt the tricks of the trade by then. My vendor had some 50 extra copies to sell and I took them from him. That’s how I started,” he said. The 50 copies have now grown to 500. “After school, I would take my cycle and identify new buildings and residents. I would approach them for business and ensured the papers reached before 6am. I had my own targets for a month,” he explained his marketing tactics. He still delivers the paper along with four of his delivery boys.

“It was hard work. I had to get up at 4am every day, deliver the papers and head to school. I had to skip breakfast to be on time, but would still be late. In college, I opted to sit in the last bench during the first hour so I could catch up on some sleep.”

IIM could not have rejected a seat for an aspirant like him. “After my family stabilizes, I want to start a charitable institution, Educate India, by which I can help the underprivileged gain some education. I could achieve this because someone helped me. In turn, I want to help at least 10 people,” he said. Shiva is taking an education loan to fund his IIM course.

At IIM-C, he plans to “work extremely hard” while he specializes in finance. It’s an attitude that has already made a mark on teachers and faculty members at his new school. “We are really impressed with the boy. He will certainly serve as an example to others and we will look forward to teaching him,” said Subir Bhattacharya, chairman of IIM-C’s post graduate programmes.

(With inputs from Jhimli Mukherjee Pandey in Kolkata)

Times of India

Natarajan

மகாபெரியவர் படிப்பிலே “மக்கு ” இல்லையே !!!!!!

பெரியவா
படிப்பிலே ‘மக்கு’ ன்னு நீ நெனச்சியோ  !!!illaiye

நான் திண்டிவனம் பள்ளிக்கு சென்று பெரியவா படித்ததற்கு அடையாளமாக ஏதாவது கிடைக்குமா என்ற ஆர்வத்தில் தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் பழைய ரெக்கார்ட்கள் வைக்கப்பட்டிருந்த அறையை துழாவினேன். அதிசயத்திலும் அதிசயமாக ஒரு வருகை பதிவேட்டின் ஒரே ஒரு காகிதம் மட்டும் கிடைத்தது. அது 1904 ஆம் வருடம், பெரியவா ரெண்டாம் பாரம் படித்தபோது, அந்த வகுப்பின் வருகை பதிவேட்டின் ஒரு ஷீட்.

அதில் ‘சுவாமிநாதன்’ என்ற பெயரை கண்டபோது எனக்கு மகிழ்ச்சி நிலைகொள்ளவில்லை. மறுநாளே, ஆந்திராவில் இருந்த பெரியவாளை தரிசிக்க சென்றேன்.

நடுநிசி, பூர்ண நிலா, பெரியவா ஓர் ஊரில் இருந்து வேறோர் கேம்ப் க்கு மேனாவில் பயணித்து கொண்டிருந்தார். கூடவே ஓடி, திண்டிவனம் சென்ற விவரத்தையும், ‘வருகை பதிவேடு’ காகிதம் கிடைத்த செய்தியையும் கூறினேன். சற்று தொலைவு சென்றதும் மேனா நின்றது. உடன் வந்தவர்களையும் மேனாவை தூக்கி வந்தவர்களையும் ஆகாரம் செய்து விட்டு, வரும்படி பணித்துவிட்டு, பெரியவா அந்த வருகை பதிவேட்டு ஷீட்டை வாங்கி டார்ச் லைட் லென்ஸ் உதவியோடு பார்த்தார். முகம் மலர்ந்தது.

இது எப்படிடா உனக்கு கிடச்சுது? என்று ஆச்சரியத்துடன் கேட்டு விட்டு, அதில் இருந்த பெயர்களை ஒவ்வொன்றாக படித்தார். அறுபத்து நான்கு வருடங்கள் முந்தய நாட்களின் நினைவுகளில் ஒரு கணம் மூழ்கி போனார். தம்முடன் ரெண்டாம் பாரத்தில் படித்த மாணவர்களை நினைவு கூர்ந்தார்.

அவர்களில் யார் யார் அப்போது உயிருடன் இல்லை என்பதையும் மற்றவர்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பதையும் சொன்னார்.

இறுதியாக, ‘என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே ‘மக்கு’ ன்னு நீ நெனச்சியோ?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

‘இல்லே, பெரியவா பேர் ஏன் கடைசிலே இருக்குன்னு நெனச்சிண்டேன்’ என்ற உண்மையை சொன்னேன்.

‘என் பூர்வாச்ரம தகப்பனாருக்கு ஸ்கூல் இன்ஸ்பெக்டர் உத்தியோகம். அடிக்கடி அவரை, ஊர் மாத்திடுவா. சிதம்பரத்திலேருந்து திண்டிவனத்துக்கு செப்டம்பர் மாசம் மாத்தலாயி வந்தார். பாதியிலே வந்து இந்த ஸ்கூல் லே சேர்ந்தேன். அதனால தான் என் பேரு கடைசிலே இருக்கு’ என்று விளக்கம் தந்தார்.

அன்பே அருளே புத்தகத்தில் ஸ்ரீ. பரணீதரன் அவர்கள்.

Natarajan

அக்ஷய திருதியை !!!….என்ன செய்ய வேண்டும் அன்று ?

அட்சயத் திருதியை 13-5-2013

“அட்சயத் திருதியை” பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது என்பதை பார்போம். எனக்கு தெரிந்த, புரிந்து கொண்ட விவரங்களை இந்த பதிவினில் பதிவு செய்து உள்ளேன். பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

அக்ஷயா எனும் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் கூறப்படும் பொருள்‘’

எப்போதும் குறையாதது’’. அள்ள அள்ளக் குறையாது,அள்ளித் தரும் அற்புதத் திருநாள் இது. இதற்கு உண்மையான அர்த்தம் என்ன வென்றால் இந்நாளில் செய்யப்படும் எந்த நற்காரியமும் தான தருமங்களும் அதிகப் பலன்களைத் தரும் என்பது தான்.

பூரியசஸ் மன்னரின் கதை சிறுவயது முதல் தமிழர் அனைவரும் அறிந்ததே, பூரியசஸ் மன்னருக்கு மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள்தான் திரிதியை.

அந்த நல்ல நாளில் செய்யும் தான தருமங்கள் “அட்சய பாத்திரம்” போல அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால் திரிதியை தினத்தை “அட்சய திரிதியை” என்று சொல்லும் வழக்கம் வந்தது.

இந்து மதத்தை பொறுத்தவரை “வளருதல் அல்லது என்றுமே குறையாதது” என்னும் பொருளே “அட்சயம்”, பார்வதி தனது பிறந்த வீட்டுக்கு வந்ததும், பரசுராமர் அவதரித்ததும் அட்சய திருதியையன்றுதான்.

அக்ஷய திருதியை நவன்ன பர்வம் எனவும் அழைக்கப்படுகிறது. அக்ஷய திருதியை ரோஹிணி நட்சத்திரத்துடன் வரும் தினம் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

ஹிந்து இதிகாசப்படி, அக்ஷய திருதியை தினத்தன்றே வேத வியாசர் மகாபாரத இதிகாசத்தை அறிவுக்கும் தடைத் தகர்புக்குமான யானைத் தலைக் கடவுளர் விநாயகர் எழுதச் சொல்லி கட்டளையிட்டார். அது வழமையாக பகவான் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. புராண வேதப்புத்தகங்கள் அவர் எவ்வாறு கடலிலிருந்து நிலத்தை மீட்டார் என்பது பற்றிக் கூறுகின்றன.

செல்வத்திற்கு அதிபதியான கடவுளர் குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லக்ஷ்மியை வணங்குவார் என லக்ஷ்மி தந்தரம் கூறுகிறது. இந்த நாளில், குபேர லக்ஷ்மி பூஜை நடத்தப்படுகிறது. அதில் லக்ஷ்மி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்ஷன குபேர யந்தரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.

கிருதயுகத்தில் வறுமையில் வாடிய குசேலர் தனது பால்ய நண்பர் கிருஷ்ணரை சந்திக்க தனது கந்தலான மேலாடையில் ஒரு படி அவலை எடுத்துக்கொண்டு வந்தபோது, அந்த அவலை பாசத்துடன் உண்ட கிருஷ்ணர் ‘அட்சயம்’ என சொல்ல, குசேலரின் மண் குடிசை மாளிகையாகி குசேலர் வற்றாத பெரும் செல்வத்துக்கு அதிபதியானார், இவை நடந்ததும் அட்சயத் திருதியை அன்றுதான்.

கண்ணபிரான் அட்சய திருதியைப் பற்றி, தருமருக்கு ஒரு கதை கூறியதாக பவிஷ்யோத்ர புராணம் விளக்குகிறது. அந்தக் கதை:

சாகல் என்ற நகரில் தர்மன் என்ற ஏழை வணிகன் ஒருவன் இருந்தான். தெய்வ பக்தி மிகுந்தவன். அவன், வருடம் தோறும் அட்சய திருதியையின்போது புனித நதியில் நீராடி, இயன்றளவு தான தர்மங்கள் செய்தான். இதனால் மறு பிறவியில் அரசனாகப் பிறந்தான். அப்போதும் அட்சய திருதியை திருநாளில் தான தர்மங்கள், யாகம் ஆகியவற்றைச் செய்து மென்மேலும் சிறப்பு பெற்றான். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், அட்சய திருதியை அன்று புனித நதியில் நீராடி, தான தர்மங்கள் செய்தால் உடல் பிணிகள் நீங்கும்.

இந்த நன்னாளில் சிவபார்வதி, ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீலட்சுமி ஆகியோரை பூஜித்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். அன்று பித்ருக்களுக்கும், மறைந்த முன்னோருக்கும் சிராத்தம், பூஜை செய்தால் பாவ விமோசனம் பெறலாம்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெண்கள் அட்சய திருதியை அன்று சுவர்ண கௌரி என்ற விரதம் கடைப் பிடிக்கிறார்கள். அன்று, கௌரி எனப்படும் பார்வதி தேவி தனது பிறந்த வீட்டுக்கு வருவதாகவும், மறு நாள் அன்னைக்குப் பாதுகாப்பாக ஸ்ரீவிநாயகர் வருவதாகவும் ஐதீகம். திருமணமான பெண்கள், இந்த நாளில் சுமங்கலி பூஜை செய்து, மற்றவர்களுக்கு ஆடை வழங்குவது வழக்கம்.

கங்கை பூவுலகை முதலில் தொட்ட இடம்தான் கங்கோத்ரி. கங்கையின் வலது கரையில் கங்கோத்ரிக்கான ஒரு கோயில் இருக்கிறது. 20 அடி உயரத்தில் உள்ள இந்த அழகிய கோயில் வெள்ளை கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. அட்சய திருதியை அன்று இந்த கோயில் திறக்கப்படுகிறது. தீபாவளி முடிந்த பிறகு கோயில் மூடப்படும். கடுங்குளிர் காலத்தில் பனி உறைந்து கிடக்கும்போது இந்த திருவுருவச் சிலை 25 கி.மீ. கீழேயுள்ள ‘முகிமடம்’ என்ற கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

அட்சய திருதியை அன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில், ‘முக்கூடல்’ எனப்படும் மூன்று புண்ணிய நதிகள் கூடும் துறையில், ஏராளமான பக்தர்கள் நீராடுகிறார்கள். அட்சய திருதியை அன்று இந்தப் புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை.

16 கருட சேவை! அட்சய திருதியை நாளன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பதினாறு பெருமாள் கோயில்களில் இருந்து புறப்படும் 16 பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பட்டு, குடந்தை பெரிய தெருவுக்கு வந்து தரிசனம் தருகின்றனர்.

தயிர்சாதம் தானம் செய்தால், ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் தந்தால், திருமணத் தடை அகலும். உணவு தானியங்களை தானம் செய்தால், விபத்துகள் அகால மரணம் போன்றவை சம்பவிக்காது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.

பெண்கள் சொல்ல வேண்டிய பாஞ்சாலி அபய மந்திரம்!

சித்திரை  மாத வளர்பிறையின் மூன்றாம்நாள், அட்சய திரிதியை நாளாகும். பெண் மானம் காத்த தினம் என இதை அழைக்கலாம். பாண்டவர்களில் மூத்தவரான தர்மர், சூதாடி கவுரவர்களிடம் தனது சொத்துக்களை இழந்ததுடன், தன் மனைவி பாஞ்சாலியையும் பந்தயப் பொருளாக வைத்து இழந்தார்.

துர்க்குணம் கொண்ட துரியோதனன், பாஞ்சாலியின் துகிலுரிய உத்தரவிட்டான். மானம் காக்கவேண்டி பாஞ்சாலி கதறினாள். பீஷ்மர் போன்ற மகாத்மாக்கள்கூட அவளுக்கு உதவ முன்வரவில்லை. இந்நிலையில் தெய்வமே துணை என

சங்க சக்ர கதாபாணே த்வாரகா நிலயா

ச்யுத!

கோவிந்த! புண்டரீகாக்ஷ!

ரக்ஷமாம் சரணாகதம்

எனக் கதறினாள். ஸ்ரீகண்ணனின் அருளால் பாஞ்சாலியின் மானமும் காப்பாற்றப்பட்டது.

இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பெண்கள், பாஞ்சாலி சொன்ன அபய மந்திரத்தைச் சொல்லி, கிருஷ்ண பரமாத்மாவின் அனுக்ரஹத்தைப் பெறலாம்.

உண்மையில் அன்று சுமங்கலி பூஜைசெய்வது மற்றும் உணவு, ஆடை போன்ற நம்மால் முடிந்த வாழ்வின் அடிப்படை பொருட்களை தானம் கொடுப்பதுதான் மிக சிறந்த செயலாகும். அன்றைய தினம் தானம் கொடுபவர்களிடம் எப்போதும் குறையாத அட்சய பாத்திரம் இருப்பது போல பலன் கிடைக்கும் என்பது இந்துமத நம்பிக்கை.

அட்சய திருதியைக்கு செல்வம் (தங்கம்) வாங்க வேண்டும் என்று ஏன் வந்தது என்றால்? அத்தினத்தன்று லட்சுமி குடியிருக்கும் பொருட்களை வாங்கலாம் என்பதும் இந்துமத நம்பிக்கை.
இந்து பெண்கள் தாலி முதல் அனைத்து தங்க ஆபரங்களையும் செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியாக பார்ப்பதால் வந்த இடை சொருகல்தான் இந்த “தங்கம் வாங்க வேண்டும்” என்பது.

உண்மையில் அன்றைய தினம் லட்சுமி குடியிருக்கும் பொருட்கள் என்று பார்த்தால், நாம் வாங்க வேண்டிய பொருட்கள் மஞ்சள், கைக்குத்தலில் வந்த முனை முறியாத பச்சரிசி மற்றும் “கல்”உப்பு போன்றவைதான்

நம் புது வீட்டின் கிரஹப் பிரவேசத்தில் முதன் முதலில் பசு நுழைய அத்துடன் “கல்”உப்பு மற்றும் அரிசியை முதலில் கொண்டு சென்று வைத்து, பின் கறந்த பசுவின்பாலை காய்ச்சுவது என்பது அந்தப் பொருட்களில் லட்சுமி குடியிருப்பதால் என்ற நம்பிக்கையில்தான் (இப்போது பாக்கெட் பால்தான் எல்லாம் என்பது வேறு விசையம்).

இது போல அட்சயத் திருதியை தினத்தில் லட்சுமிகரமான எந்த ஒரு மங்களகரமான பொருட்களையும் வாங்குவதே அடிப்படை அட்சயத் திருதியையின் அர்த்தம்.

கற்காலத்தில் இடி, மின்னல், பாம்பு என்று தனக்கு தீங்கு அல்லது தன்னை விட சத்தி கொண்ட இயற்கை, வானம் பூமி என்று அனைத்தும் மனிதனுக்கு கடவுளாக தெரிந்தது.

அந்த வழி வந்த நமக்கு இன்னும் நம் அடிப்படை எண்ணம் மாறாமல் இப்போது தங்கம் அல்லது பணத்தில் அதிக மதிப்பு கொண்டவை மட்டும் லட்சுமியாக(கடவுளாக) தெரிகிறது.

அப்படி பார்த்தல் கூட சுக்கிரனை உரிய கிரகமாக கொண்ட லட்சுமிக்கு பொருத்தமாக அட்சயதிருதியை தினத்தில் வெள்ளி வாங்குவதுதான் குடும்ப நலனுக்கு பொருந்தும் என்பதுதான் சரியான கருத்து.

சான்றோர்கள் அட்சயத் திருதியை அன்று யாகங்கள் செய்யவும்,பூஜைகள் செய்து கடவுள் வழிபாட்டில் மனம் லயிக்கவும்,அத்தினத்தில் முடிந்த அளவிற்கு தான தருமங்கள் செய்து மனதை நல்வழியில் கொண்டுசெல்லவும் கூறினார்களே தவிர தற்காலங்களில் நடைபெறுவதைப் போல தங்க வெள்ளி நகைகளை வாங்கிக் குவிக்கச் சொல்லவில்லை.ஆக, அட்சயதிருதியை அன்று லட்சுமியை மட்டும் மனதில் கொண்டு தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்று நினைப்பது அறியாமை.

வசதி படைத்தவர்களால் நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்யமுடியும். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலையில் தலையை அடகு வைத்தாவது அட்சய திருதியை அன்று நகை வாங்கியே தீருவேன் என்று அடம்பிடிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். அன்று தானம் கொடுப்பதால் ஆயுள் பெருகும்.கால்நடைகளுக்கு உணவு அளித்தால் வாழ்வு வளம் பெறும் என்று கூறப்படுகிறது.

அட்சயதிருதியை அன்று லட்சுமி மட்டுமில்லாமல், சிவன் பார்வதி, நாராயணனனையும் மற்றும் நம் நலனுக்காக வாழ்ந்த முன்னோகளையும் நினைத்து பூஜை செய்தால், நம் பாவம் அனைத்தும் விலகி நல்ல வாழ்வை பெறலாம் என்பதை புரிந்து கொண்டு, நம் வாரிசுகளுக்கும் இந்த உண்மை கருத்தை சொல்லி அவர்களை சரியான பாதையில் கொண்டு செல்வது நம் கடமையாகும்.

இவ்வளவு நன்மைகள் இருக்கும் போது, அதை விடுத்து தங்கம் வாங்குவது மட்டுமே நல்லது எனறு நினைப்பது எந்த விதத்தில் சரி? அட்சய திருதியைக்கு பொருட்கள் மட்டுமே வாங்க வேண்டும் என்பது தவறான நம்பிக்கை.முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்த அட்சயத் திருதியை மோகம் மக்களைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. இந்நாளில் நகை வாங்க நகைக்கடைகளில் முன்பதிவு எல்லாம் செய்து கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது மக்களின் இந்த மோகம்.

யோசிச்சு பார்த்தால் மக்களின் அறியாமையே இந்த முட்டாள் தனத்திற்கு காரணம்ன்னு தோன்றும். அரசியல் வாதிகளை போலவே நகை கடைக்காரர்களும் மக்களை முட்டாளாகவே வைத்து கொள்ள விரும்புகின்றனர்.

அட்சய திருதியை சொல்லியிருக்கும் நம் மதம் புண்ணியம் ,பாவத்தை பற்றியும் சொல்லியுள்ளது. அட்சய திருதி அன்று எத்தனை கிராம் தங்கம் வாங்கினோம் என்பதை அளவுகோலாக வைத்து இறைவன் நம்மை எடை போட போவதில்லை.

அட்சய திருதியை நாளில் செய்யும் பூஜைகளில் பலன் பன்மடங்கு அதிகரித்து அதனால் நமக்கும் நம் சந்ததியினருக்கும் கடவுளின் ஆசி பரிபூரணமாய் கிடைக்கும் என்பதுதான் பெரியோர்களின் கருத்து. ஒரே நாளில் நகைக்கடைக்காரகளின் லாபத்தைப் பன்மடங்காகப் பெருக்குவது அல்ல நோக்கம்..

தங்கம் ,வைரம் போன்றவைக்கு விலை என்று ஒன்று உண்டு.ஆனால் பணத்தால் வாங்க முடியாத விஷயங்கள் என்று இவ்வுலகில் சில விஷயங்கள் இருக்கின்றன. உண்மையில் விலை மதிப்பில்லாதவை அவைகள் தாம். அவையெல்லாம் என்னவென்று யோசித்து பார்த்தால் உங்களுக்கே புரியும்.

ஆகவே……. இனி அடுத்த அட்சய திருதியில் இருந்தாவது ………வாங்காதீர்கள், கொடுங்கள். (வாங்கியே தீருவேன் என்றால் வாங்குவதோடு மட்டும் நிறுத்தி கொள்ளாதீர்கள் ——- கொடுங்கள்)

ஏழை மாணவர்கள் கல்வி கற்க உங்களால் முடிந்ததை கொடுங்கள். பசித்திருப்போருக்கு அன்னதானம் செய்யுங்கள். முடிந்த அளவிற்கு இல்லாதவர்களுக்கு தான தருமங்களைச் செய்யுங்கள்.. அன்று செய்யும் நல்ல காரியங்களுக்கு ஒன்றுக்கு பத்தாக பலன் உண்டு. இவ்வளவு நன்மைகள் இருக்கும் போது அதை விடுத்து தங்கம் வாங்குவது மட்டுமே நல்லது என்று நினைப்பது எந்த விதத்தில் சரி???

ஆக, சித்திரை வளர்பிறையின் மூன்றாவது நாளான அட்சய திருதியையன்று செய்யும் எந்த ஒரு செயலும் விருத்தியாகும் என்றும், அதனால் அட்சயத் திருதியையன்று கடவுளுக்கு பூஜைகள் செய்து, தன்னால் ஆன தான தருமங்களை செய்து நல்ல முறைகள் வாழவே இந்து மதம் சொல்கிறது.

source::::input from a friend of mine…

Natarajan

Do You Know ?…Costus Igneus ?…Insulin Plant !!!

Costus igneus a medicinal plant is a Magic Cure for Diabetes. Its leaves helps to build up insulin in the human body so it is commonly known as insulin plant in India This plant was grown in America and is becoming popular in India because of its medicinal chemicals. It is now accepted and used widely as an Ayurvedic medicinal herb. Consumption of the leaves are believed to lower blood glucose levels, and diabetics who consumed the leaves of this plant did report a fall in their blood glucose levels.

Costus igneus plant leaves Costus igneus plant flowers

 

Costus igneus plant leaves        Costus igneus plant flowers

 

Insulin Plant
Insulin plant (Costus igneus) is native to Southeast Asia, especially on the Greater Sunda Islands in Indonesia. It is a relatively new entrant to Kerala and India. The plant is characterized by large fleshy looking leaves. The undersides of these large, smooth, dark green leaves have light purple shade. The leaves are spirally arranged around the stem, forming attractive, arching clumps arising from underground rootstocks.
The maximum height of these plants is about two feet. The flowers are orange in color and are beautiful, 1.5-inch diameter. Flowering occurs during the warm months. And they appear to be cone-like heads at the tips of branches. The flower petals are quite sweet and nutritious. It’s a lower grower and makes a great ground cover. The long red flower spikes of Costus pulverulentus are unique to the family.
Costus igneus plant grows very quickly. Propagation of this plant is by stem cutting. It needs sunshine but it also grows in slightly shady areas. Costus does not have a problem with pests and diseases. Outdoor plants might be chewed by caterpillars, and in indoors plants might be affected by red spider mite.
Common name
Botanical name: – Costus igneus. Costus igneus common name is *Fiery Costus* or *Spiral Flag*, is a species of herbaceous plant in the Costaceae family. Insulin plant (Costus igneus) common name in Hindi is keukand and in Gujarati – pakarmula. In Marathi, Malayalam and Sanskrit is – pushkarmula and in Tamil is kostam
Medicinal use
In Ayurvedic treatment diabetes patients are advised to chew down the Insulin plants leaves for a month. The patient has to take two leaves per day in the morning and evening for one week. The leaves must be chewed well before swallowing. After one week the patient should take one leaf each in the morning and evening. This dosage should be continued for 30 days. Allopathic doctors too recommend it and it is found to be effective in bringing blood sugar levels under completely under control. There is also dried and ground powder of the leaves now available in the market.
In Traditional Medicine it is also used to Promotes longevity, Treats rash, Reduces fever, Treats asthma , Treats bronchitis and  Eliminates intestinal worms.

 

Research::::
According to International Journal of Ayurveda Research a new study on Insulin plant (Costus igneus) was pblished recently. The leaves of insulin plant (Costus igneus) reduced the fasting and postprandial blood sugar levels, bringing them down towards normal, in dexamethasone-induced hyperglycemia in rats. Reduction in the fasting and the postprandial blood sugar levels with leaves of insulin plant was comparable with that obtained with Glibenclamide 500 µg/kg at 250 mg/kg/day and 500 mg/kg/day of powdered leaves of the insulin plant(Costus igneus).
References
1. Devi VD, Urooj A (August 2008). “Hypoglycemic potential of Morus indica.. L and Costus igneus./ Nak.—A preliminary study”
2. Arun N, Udhaya A & Rajaguru P (December 2011). “In vitro root induction and studies on antibacterial activity of root 3 extract of Costus igneus on clinically important human pathogens.”
3. Babu V, Gangadevi T, Subramonium A. Antidiabetic activity of ethanol extract of Cassia “Kleinii” leaf in streptozotocin induced diabetic rats and isolation of an active fraction and toxicity evaluation of the extract. Indian J Pharmacol. 2003
4. Sathyaprakash R, Henry RR. Preventing diabetes by treating aspects ofthe metabolic syndrome.

 

source:::::Gits 4you.com

Natarajan

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

In Lord Rama”s Footsteps….Rameshwaram and Dhanushkodi !!!

The walkway to Villondi Teertham, a sweet-water well that appears mysteriously in the midst of the ocean.

The walkway to Villondi Teertham, a sweet-water well that appears mysteriously in the midst of the ocean.  A small well here is filled with water. You are allowed a sip and the water is absolutely sweet. “This is where Rama pierced his arrow to ensure sweet water flowed to quench Sita’s thirst,” says the caretaker. Rama’s bow and arrow are said to be buried here. Hence the name Villondi Teertham.

.

The Ramanathaswamy Temple in Rameshwaram has the world’s longest corridor.   The temple, which has the longest corridor in the world, stretches as stories from Ramayana are painted on every wall. There are many legends here, but the one that is most often reinforced is how Rama prayed to Lord Shiva to absolve him of any sins committed during the war. Rama asked Hanuman to get him a lingam from the Himalayas but as the monkey god took time, Sita carved a small lingam, which is placed in the sanctum here. The RamanathaswamyTemple stands tall inside the town as devotees make their way to cleanse themselves with a sacred bath at the 22 wells or teerthams that surround it. Rameshwaram,  has close to 64 theerthams and the holy water is stored in wells, ponds, tanks and one of them, the Agni Theertham, is the sea itself. Even today, it is believed that the tanks around the temple have a perennial source of water.

Road leading to Dhanushkodi from Rameswaram. It was on this island in January 1897 that Swami Vivekananda, after his triumphant visit to Chicago to attend the Parliament of Religions in September 1893, set foot on Indian soil from Colombo.  Pilgrims from all over India visit Rameswaram Temple to bathe in the holy wells and in the sea. It is a well-known pilgrimage site. Only a few, though, know the mythological and historical importance of nearby Dhanushkodi.

Dhanushkodi is today a ghost town and human habitation is almost non-existent as only a few fishermen with their families now live here. On the fateful night of December 22, 1964, Indian Railways train number 653, the Pamban-Dhanushkodi Passenger, left Pamban with 110 passengers and five railway staff. It was only a few yards before Dhanushkodi railway station when it was hit by a massive tidal wave. The train was washed away, killing all 115 on board. In all, over 1,800 people perished in the cyclonic storm. Following this disaster, the town was declared unfit for living.

A survivor of the 1964 cyclone who now lives in Dhanushkodi supplies drinking water to tourists from a well on Dhanushkodi beach.

It is amazing that the well, which is just a few yards from the sea, supplies sweet drinking water.

A view from Kothandaramaswamy Temple, located 12 km from Rameswaram. Popular belief goes that Vibishana, brother of the demon king Ravana of Lanka, surrendered before Lord Rama here. The mythological importance assigned to this town is that when Lord Rama returned to India after vanquishing Ravana, Vibhishana pleaded with him to break the setu (bridge) so that no other armies would use it. Rama acquiesced to his request and broke the Indian side of the bridge with the end of his bow. This place came to be known as Dhanushkodi (Dhanush is ‘bow’ and kodi is ‘end’ in Tamil) and remains to this day a holy place for Hindus.

source::::Laksmi Sharath in Yahoo lifestyle..

Natarajan

“சூரியனக்கு அக்னியின் நினைவு இல்லையாம் “!!!

ஒருநாள் காலை தர்சனத்துக்கு ஒரு வயஸான தம்பதி வந்திருந்தனர். பெரியவா ஒரு வாதா மரத்தின் கீழ் அமர்ந்து தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். தம்பதிகள் பழங்களை சமர்ப்பித்துவிட்டு நமஸ்கரித்தனர்.

“இதே மாதிரி வாதா மரம் ஒங்காத்து வாசல்ல இருந்துதே!……இன்னும் இருக்கோ?….”

“ஆமா…இன்னும் இருக்கு! பெரியவா பாத்து இருவது வர்ஷத்துக்கு மேலேயே இருக்கும்….இப்போ நன்னா பெருஸா வளந்திருக்கு; நெறைய காயக்கறது; தெருப் பசங்க கல்லை விட்டெறிஞ்சு வாதம் பழத்தை பொறுக்கித் திங்கறதுகள்..”

“கூடத்ல ஒரு பத்தாயம் இருந்துதே!….அதுல கரையான் அரிச்சு ரிப்பேர் பண்றா..ப்ல ஆயிருந்துதே!..”

“ஆமா….அத அப்போவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதுலதான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வெக்கறோம்….”

“ஒரு சே…ப்பு பசுமாடு கன்னு போடாம இருந்துதே!…..”

“அது ஆறு கன்னு போட்டுது பெரியவா…..இப்போ, சமீபத்லதான் தவறிப் போச்சு. எல்லாக் கன்னும் நன்னா இருக்கு…நல்ல வம்சம்….”

“ஐயங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே! திருநக்ஷத்ரம் எம்பதுக்கு மேலே இருக்குமோ இப்போ?….”

“சதாபிஷேகத்துக்கு ரெண்டு வர்ஷம் முன்னாடி, வைகுண்டம் போய்ட்டார் பெரியவா….”

“எட்டுக்குடி முருகனுக்கு தைப்பூசம் காவடி எடுக்கற வழக்கமாச்சே! ஒங்க புத்ராள் யாராவுது வந்து காவடி எடுக்கறாளா?…”

“பெரியவா க்ருபைல எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்துண்டிருக்கு..”

“வடுவூர் துரைஸ்வாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள்,பம்மல் சம்மந்த முதலியார் நாவல்கள், மதனகாமராஜன், விக்ரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நெறைய இருந்துதே! இருக்கா? யாராவுது படிக்கறாளா?….”

“எல்லாப் புஸ்தகமும் இருக்கு…ஆனா யாரும் படிக்கறதில்லே பெரியவா…..”

“ராமாயண பாராயணம் பண்ணிண்டிருந்தியே! நடக்கறதா..?”

“கண் செரியாத் தெரியறதில்லே, அதுனால ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்…”

கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்! பாட்டி சொன்னாள்….”எத்தனையோ வர்ஷத்துக்கு முன்னாடி பெரியவா எங்க க்ராமத்துக்கு வந்தப்போ, எங்காத்துக்கு வந்து, கொஞ்ச நேரம் இருந்திருப்பேள் …..ஆனா, எப்டி இத்தனை நுணுக்கமா எல்லாத்தையும் பாத்து, இத்தனை வர்ஷத்துக்கப்புறம் கூட எதையுமே மறக்காம, அவ்வளவு ஞாபகமாக் கேக்கறேளே!…பெரியவா கேட்டதுல பாதி விஷயங்கள், அந்தாத்துல இருக்கற நேக்கே நெனைவுல இல்லே!……”

பெரியவா படாரென்று ஒரு பெரிய விஷயத்தை போட்டுடைத்தார்……..

“ஆமா……இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…” ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!

குறை என்று வரும்போது, பெரியவா மாதிரி மஹான்கள் தங்களை முன்னிறுத்தி சொல்லுவார்கள். நம்மை மாதிரி அல்பங்களோ, குறை என்றால் அடுத்தவர்களைத்தான் முன்னிறுத்திச் சொல்லுவோம்.
source::::periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4095/eswara-smaranai-prayers-new-year/#ixzz2RlqjYAfJ