Meet Auto Annadurai….A Role Model For Others !!!

Annadurai own’s an  Auto Rickshaw in Chennai City . Similar to the other Auto-drivers he also does the same thing but What makes his auto different  from others is he provides a lot of things inside the Auto for the passengers/customers . You can find the following facilities in the Auto which is owned by him. 1.Free mobile battery charger
2. Watch T.V for Free of cost
3. Free WiFi
4. Free Books to read
5. Bumper prize contest for customers
6. Refer a poor child for Studies
7. And discount in fare for teachers and on special days.
8. Mobile and DTH recharge

Photo of Annadurai in his Auto . Photo Courtesy : MRR Photography
Photo of Annadurai in his Auto .

Annadurai is now 29 Years old. Annadurai’s auto runs between Thiruvanmiyur bus terminus and Sholinganallur areas of chennai .His main goal is to get his customers feel happy and he needs customer satisfaction . The vehicle is Wi-Fi enabled and, if you’re not carrying a laptop or smartphone to connect to the internet, Annadurai will slip you a 10-inch tablet. He carries an internet dongle attached to a Wi-Fi router and offers free access to the internet. “Most people who take my auto work for IT companies and I know access to the internet is important for them,” Annadurai says. “It takes about half an hour to cover the distance between Thiruvanmiyur and Sholinganallur. Why waste that time?” Says Annadurai

The auto also has lots for magazines and newspapers that contain the latest editions. Annadurai spends 4,000 Ruppes a month on subscriptions to 35 various news publications. There are dailies for the customers who need to keep up on the news, weekly magazines for passengers who are taking a long ride, and glossy fortnight-lies for those interested in lighter reading.

Magazines in AnnaDurai Auto . Photo Courtesy : MRR Photography
Magazines in AnnaDurai Auto .
Live Television Channels and F.M System in Anna Durai's Auto , Photo Courtesy : MRR Photography
Live Television Channels and F.M System in Anna Durai’s Auto ,
Wi-fi Connection Status in Mobile in Anna Durai’s Auto ,
Notification of Contest Anna Durai Conducts every Month , Photo Courtesy : MRR Photography
Notification of Contest Anna Durai Conducts every Month ,
Mission Statement of Anna Durai's Auto
Mission Statement of Anna Durai’s Auto
Anna Durai's Auto Registration Number , Photo Courtesy : MRR Photography
Anna Durai’s Auto Registration Number ,

Then there are the offers. Annadurai gives free rides to children on Children’s Day, free rides to mothers (accompanied by their children) on Mothers Day, free rides to couples on Valentine’s Day and free rides to women on Women’s Day. On September 15, his birthday, customers get a 50% discount.

Gadjets for Anna Durai Customers ,
Magazines in AnnaDurai Auto .
Magazines in AnnaDurai Auto .

Annadurai spends more than 5,000 to give his customers an auto ride like no other in the city, yet makes a good living, taking home a profit of around 1,000 a day. “That is more than enough for a bachelor like me,” he says. “I drive from 8am to 1pm and from 5pm to 11pm,” he says. He charges Rupees 15 for the 11km route he covers, while other share auto drivers demand 20 for the same distance. “Money really isn’t too important to me,” he says. “What gives me pleasure is that people remember me and are grateful for the service I offer,” Annadurai Says

Driver Name: Annadurai
Mobile Number : 098 84 123413

Content & Photo Credits: MRR Photography 2012

Courtesy :  Post Reblogged from Propel steps @wordpress.com

Before publishing this post i spoke to Mr.Annadurai  in his mobile number 98841 23413 and congratulated him for his “differently thinking attitude ” . He was humble in his reply , when he stated that  ” whatever   work  we do , we should it with cent percent satisfaction ” !!!!  A  practical management  technique for  the customer satisfaction and customer delight !!!

He is available in  durai5285@gmail.com

natarajan

natarajan

“ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வித்தை ” !!!

ஒர் அரசியல் கதை

Kripananda Variar

 

திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் கல்லூரி ஒன்றில் சொற்பொழிவாற்றிக் கொண்டு இருந்தார். சொற்பொழிவின் நிறைவில் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பட்டம் பயிலும் மாணவர்கள் ‘அரசியல் பற்றி தங்கள் கருத்து என்ன ?’ என்ற கேள்வி எழுப்பினார்கள். வாரியார் ஸ்வாமிகள் ஒரு கதை சொன்னார்.

ஒரு சாம்ராஜ்யம் இருந்தது. அங்கு பட்டத்து யானை மூலம் அரசனை தேர்ந்தெடுக்கும் முறை பின்பற்றப்பட்டது. அப்படி யானையினால் மாலை சூட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுபவர் எல்லாவித ராஜ போகங்களுடன் ஆட்சி புரியலாம். ஆனால் அவரது பதவி காலம் ஐந்து ஆண்டுகள் மட்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரை நாட்டை விட்டு வெளியேற்றி கடலுக்கு அப்பால் உள்ள தீவுப் பிரதேசத்துக்கு நாடு கடத்தி விடப்படுவார் .
அரசராக தேர்ந்தெடுக்கப்படுபவர் தனது ஆட்சி காலத்தில் மக்களுக்கு சேவை செய்வதையே லட்சியமாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். ஐந்தாண்டு கால நிறைவில் தீவில் விடப்பட்டு வறுமையில் வாடுவார்கள்.

மக்கள் அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறை ஐந்தாண்டு முடிவில் பதவி இழந்தவருக்கு மாற்றாக வேறு ஒருவரை யானை தேர்ந்து எடுத்தது. அவர் ஆட்சியில் மக்கள் ஒன்றும் அவ்வளவு நன்றாக இல்லை. அனியாயமாக வரி போட்டு மக்களை வாட்டி வதைத்து விட்டார். எப்போது ஐந்து ஆண்டுகள் முடியும், இவர் ஆட்சி பீடத்தில் இருந்து இறக்கப்பட்டு தீவுப் பிரதேசத்துக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் எதிர்பார்த்த ஐந்தாண்டு காலம் முடிவுக்கு வந்தது. அந்த கொடுங்கோல் அரசனை ஆட்சியில் இருந்து நீக்கி படகில் ஏற்றிக் கொண்டு தீவுப் பிரதேசத்துக்கு கொண்டு போனார்கள். இப்படி கொண்டு போகும் போதெல்லாம் பதவி இழந்த அரசர்கள் வருந்திப் புலம்பிக் கொண்டே இருப்பார்கள்.

ஆனால் இந்த நபர் எந்த வருத்தமும் இல்லாமல் படகில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அவரை படகில் ஏற்றிக் கொண்டு போனவர்களுக்கு வியப்பாக இருந்தது. அவரைப் பார்த்துக் கேட்டார்கள் ‘ பதவி இழந்து தீவில் வறுமையில் வாழப் போகிறீர்கள். அதைப் பற்றி கொஞ்சம் கூடக் கவலையில்லாமல் மகிழ்ச்சியோடு இருக்கறீர்களே எப்படி ?’ அதைக் கேட்ட அந்த முன்னாள் அரசன் ”என்னுடன் அந்த தீவுக்கு வந்து பாருங்கள்” என்று சொன்னான்.

படகு தீவின் கரையை அடைந்தது. உடன் வந்தவர்கள் அந்த தீவைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். வறண்டு போய் இருந்த தீவு அங்கு இல்லை. மிகப் பெரிய அரண்மனை, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், தோட்டங்கள், பூங்காக்கள் என்று அந்த தீவே செல்வச் செழிப்புடன் சொர்கலோகம் போலக் காட்சி அளித்தது. உடன் வந்தவர்கள் திகைத்துப் போனார்கள்.

அப்போதுதான் தெரிந்தது, அந்த முன்னாள் அரசர் தம் ஐந்தாண்டு கால ஆட்சியில் தன் வரும்கால சந்ததியினர் பலரும் பயன்பெறும் வகையில் அந்த தீவில் சொத்துக்களை சேர்த்து வைத்துக் கொண்டார் என்பது. அந்த காலத்தில் அரசனை யானை மாலைப் போட்டுத் தேர்ந்தெடுத்தது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர் எப்படிப்பட்டவர் என்று அதற்குத் தெரிய வாய்ப்பில்லை.

அதனால் அதிருஷ்டம் உள்ளவர்கள் எவர் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வர முடிந்தது. அவர் இஷ்டம் போல ஆட்சி புரிய முடிந்தது. ஐந்தாண்டு காலம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆட்சி செய்ய முடிந்தது.

ஆனால் இப்போது ஜனநாயக முறைப்படி ஆட்சி நடக்கிறது.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது. முன்னைப் போல அரசரை தேர்ந்தெடுக்கவில்லை நாம். அரசருக்குப் பதிலாக அமைச்சர்களை தேர்ந்தெடுக்கிறோம் நாம். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறுகிறது. ஆனாலும் முன்பு சொன்ன அரசர் பதவி இழந்தாலும் பரம்பரைக்கே சொத்து சேர்த்தது போல இந்நாளில் பதவி இழந்தாலும் அமைச்சர்கள் சொத்து சேர்த்து விடுகிறார்கள். இந்தக் கதையைக் கூறி விட்டு வாரியார் ஸ்வாமிகள் கூறினார் ‘ எனக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது. கதை மூலமாக உங்களுக்கு அரசியல் பற்றி எதாவது தெரியுதா சொல்லுங்கள்’ என்றார்.

‘ஐயா நீங்கள் சொன்னக் கதையினால் இன்றைய அரசியல்வாதிகளின் முறையற்றப் போக்கு புரிகிறது’ என்றனர். அதற்கு வாரியார் ஸ்வாமிகள் சொன்னார், ‘இந்தக் கதையை சொன்னதின் நோக்கம் அது மட்டும் அல்ல . கதை உணத்தும் இன்னொரு கருத்தும் இருக்குது. நீங்கள் இங்கு இம்மையில் சுகம் அனுபவிக்கும்போதே நம் பிற்காலத்துக்கும் அதாவது மறுமைக்கும் புண்ணியம் சேர்த்து வைக்க வேண்டும் என்பதுதான் அது’.

வாரியார் ஸ்வாமிகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வித்தையை கற்றவரல்லவா!

source:::::murugan.org

natarajan

” கணினி வலைத்தளம் யுகத்தில் இசைக்கு வானமே எல்லை ” !!!

“இளம்த்லைமுறையினரிடையே இசை வளமாக வளரும்!”” -கர்நாடக இசைக்கலைஞர் திரு நெய்வேலி சந்தான கோபாலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:

An interesting and thought provoking interview of Shri .Neiveli Santhanagopalan..  Eminent  Carnatic vocal music artist…

I have had few opportunities to interact with him .. More Than a musician . my  good friend Shri, Neiveli Santhanagopalan is a standing example of  a great PERSONALITY  following the footsteps of his GURU .. Let the present day younger generation learn from him and  follow his foot steps for a right and bright future .

Natarajan

‘மாதா பிதா குரு தெய்வம்’ என்பது நமது முன்னோர் வாக்கு! தாய், தந்தை, குரு இவர்களுக்குப் பின்னர்தான் தெய்வம் என்று இதற்கு ஒரு விளக்கம் உண்டு. ‘தாய், தந்தை, குரு இவர்களே நம் கண் முன்னால் நடமாடும் தெய்வங்கள்’ என்றும் ஒரு விளக்கம் வழக்கத்திலிருக்கிறது. இன்று பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்த அத்தனை மனிதர்களுக்கும் வாழ்க்கையில் நல்ல ஆசான்கள் அமைந்து தன்னலம் கருதாது மாணவ சமுதாயத்தின் முன்னேற்றம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு அதற்காகவே தனது வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணித்திருக்கிறார்கள் என்பதை அவர்களின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்து அறிய முடிகிறது. அப்துல்கலாம், அம்பேத்கர் ஆகியோரது வாழ்க்கையில் ஆசிரியர்களின் பணி மகத்தானது. தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த அம்பேத்கரை அவரைச் சுற்றியிருந்த சமுதாயம் வெறுத்து ஒதுக்கியபோது ‘அம்பேத்கர்’ என்ற பிராமண குலத்தைச் சேர்ந்த அவரது ஆசிரியர் பீமாராவ் என்ற பெயர் கொண்ட அந்த சிறுவனின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு அரவணைத்து தனது இல்லத்திலேயே தங்கவைத்து உணவும் உடையும் அளித்து படிக்கவும் வைத்தார். தனக்கு ஆதரவு அளித்த ஆசிரியரின் பால் மரியாதை கொண்டு அவரது பெயரும், நினைவும் தனது மனதில் நிரந்தரமாக இருக்கவேண்டும் என்ற நந்றியுணர்வுடன் தனது பெயருடன் ஆசிரியரின் பெயரையும் இணைத்து ‘பீமாராவ் அம்பேத்கர்’ என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். ஆசிரியர்களின் பெருமையை உணர்த்த இதை விட சிறந்த உதாரணம் தேவையா?

இன்று நம்மிடையே இருக்கும் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்த வித்தகர்களின் வாழ்வில் ஆசிரியர்களின் பங்கினை அவர்களிடமே நேர்காணல் மூலமாக அறியும் முயற்சியே இந்தத் தொடர்!

இலக்கியம், சங்கீதம், கலைகள், வியாபாரம் இப்படி அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் பெருமக்களிடமும் நமது நேர்காணல் தொடரும்.
முதலாவதாக கர்நாடக சங்கீத்தில் சாதனை படைத்து வரும் திரு நெய்வேலி சந்தான கோபாலன்! சங்கீதத்தில் பெரிய அளவு பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்து கர் நாடக சங்கீதத்தின்பால் இயல்பான ஆர்வம் கொண்டு அதைக் கற்பதற்காக தான் எடுத்த முயற்சிகளையும், தனக்கு அமைந்த ஆசிரியர் பெருமக்களையும் நன்றியுடன் நினைவு கூர்ந்த நெய்வேலி சந்தான கோபாலன் தனது குருகுல வாசத்துக்கே சந்தோஷ மான தொரு ‘பிளாஷ்பேக்’ சென்றார்.

பள்ளிக்கால அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்?
முதலில் நாம் காஞ்சிப் பெரியவரின் திருவுருவை மனதில் தியானித்து அவரது பாத மலர்களைத் தொழுது நமது நேர்காணலை தொடங்குவோம்! அவர் எங்கள் குடும்ப சொத்து! எங்களுக்கெல்லாம் முதல் குரு அவர்தான்! (இவரது இல்லத்தின் பெயரே ‘பெரியவா பிச்சை!) அவர் ஜகத்குரு! நான் சிறியன்! ஆசிரியர்களின் ஆசிகளால் நான் இன்று ஓரளவுக்கு சங்கீதத்தில் வளர்ந்திருக்கிறேன் என்பதுதான் உண்மை! குரு இல்லாத வித்தை பாழ் என்று சொல்வார்கள். தான் தோன்றி பெருமான் என்று சிவனைச் சொல்வார்கள். சிவனுக்கு மட்டும்தான் அந்தப் பெருமை உண்டு. நம் எல்லோருக்கும் குரு தேவை! எழுத்தறிவித்தவன் இறைவனாவான்! ஆக குருமார்கள் நாம் தெய்வங்களாகக் கருதத்தக்கவர்கள்! நான் வாழ்ந்தது நெய்வேலியில்! தண்ணீருக்குப் பஞ்சமில்லை. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல்! படித்தது நெய்வேலி லிக்னைட் கார்ப்பொரேஷன் பள்ளி! அருமையான பள்ளி. ஆசிரியப் பெருமக்கள் அனைவருமே நினைந்து போற்றத்தக்கவர்கள்! சங்கரன் என்று ஒரு ஆசிரியர். அவர் வந்து வகுப்பில் நின்றார் என்றால் சூரியன் வந்து நின்றது போல இருக்கும். அத்தனை தேஜஸ்! இவர் தவிர , சிங்காரம்பிள்ளை, ஆளவந்தார், சோழன் ஆகியோர் தமிழ் ஆசிரியர்கள். நடராஜன் என்ற தனது இயற்பெயரை தமிழின்பால் உள்ள காதலால் ‘சோழன்’ என்று மாற்றி வைத்துக்கொண்டார். இவர் பாடங்களையும், பாடல்களையும் சங்கீதமாகவே இசைப்பார். மோகன ராகம் அவருக்கு மிகவும் கைவந்த ராகம்! அவருக்கு ராக லட்சணங்கள் தெரியுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் பாடினால் அது தேனாய் இனிக்கும். ஆசிரியப்பா, வெண்பாவில் புலி! அந்த காலத்தில் தலைமை ஆசிரியர்தவிர மற்ற அத்தனை பேர்களும் சைக்கிளில்தான் வருவார்கள். புலவர் சோழன் சைக்கிளில் வரும்போதும் இலக்கியம் சார்ந்த பாடல்களை சங்கீதமாய் பாடிக்கொண்டே வருவார். வயிற்றுப் பிழைப்புக்காக தமிழ் ஆசிரியராக இல்லாமல் தமிழுக்காகவே வாழ்ந்தவர். மறக்கமுடியாத மாமனிதர் அவர்! இனொரு ஆசிரியர் கொஞ்ச காலம் மட்டும் எங்கள் பள்ளியில் இருந்தார். அவர் எல்லாப் பாடல்களுக்கும் சோகமயமான ராகங்களையே இசைப்பார். இருந்தாலும் அந்த ராகம் அவரது குரலுக்கு அவ்வளவு இனிமையாக இருக்கும். நான் அதைத் திரும்பத்திரும்பப்பாடி ‘மாயாமாளவ கௌள’ ராகம் என கண்டுபிடித்தேன். பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி இப்படிப் பல நடக்கும். எனக்கு இயல்பாகவே தமிழில் ஆர்வம் இருந்தது. நான் எழுதிய கவிதை ஒன்றுக்குப் பரிசு கிடைத்தபோது புலவர் சோழன் அந்தக் கவிதையை அழகாகப் படித்து ரசித்து விளக்கம் சொல்லி மாணவர்களிடம் கைதட்டல் பெறவைத்து கோப்பையை எனக்களித்தார். நினைவில் நின்ற சம்பவம் இது! இன்னொரு ஆசிரியர் செந்தமிழில்தான் பேசுவார். நடன சபேசன் என்றொரு ஆசிரியர் தங்கபட்டனை சட்டையில் அணிந்திருப்பார். அதனால் அவரது பெயரே ‘தங்க பட்டன்’ என்றாகிவிட்டது. தானே துவைத்து வெள்ளை வெளேர் என்று தும்பைப் பூவாய் ஆடை அணிந்து வருவார். ஆளவந்தார் என்ற் ஆசிரியர் மாணவர்களையே படிக்கவைப்பார். தவறு செய்தால் சட்டென்று நிறுத்தி விளக்கம் கொடுப்பார். தமிழில் எனக்கேற்பட்ட ஆர்வத்துக்கு இந்த ஆசிரியப்பெருமக்களே காரணம்! மாவட்ட அளவில் நடக்கும் கவிதை மற்றும் இசைப்போட்டிகளில் பங்கு கொண்டு பல பரிசுகள் பெற்றிருக்கிறேன். ஒரே ஒரு முறை சென்னைக்கும் வந்திருக்கிறேன். பள்ளிக்காலத்தில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசாக அப்போதெல்லாம் சோவியத் நாட்டிலிருந்து வெளிவரும் வண்ண வண்ண சித்திரைக் கதைப் புத்தகங்களைப் பரிசாகத் தருவார்கள். அவற்றைப் பார்க்கும்போது ஒரு புதிய விந்தை உலகத்துக்குப் போய்விட்டார்ப்போலத் தோன்றும். அந்தப் புத்தகங்களின் வாசனை கூட நினைவிருக்கிறது. மு.மு.இஸ்மாயில் எழுதிய கம்பனைப் பற்றிய புத்தகங்கள், சித்பவானந்தர், சிவானந்தர் இவர்களின் நூல்கள் ஆன்மீக உலகின் கதவைத் திறந்து விட்டன. ப்ளஸ் டூ படிக்கும்போது எங்கள் ஊரில் நாற்சந்தியில் வாழைப்பழம் விற்கும் நண்பர்- அவரைப் புலவர் என்றழைப்போம். – பழைய ஆனந்தவிகடன், கலைமகள் போன்ற புத்தகங்களைப் பைண்ட் செய்து வைத்திருப்பார். அவர் கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்கத்தருவார். தினமும் அங்கு சென்று அவருடன் உரையாடி புத்தகங்கள் படிப்பேன். மகாகவி பாரதி, கி.வா.ஜ. ஆர்.சூடாமணி, ல.ச.ரா, கல்கி, சாண்டில்யன், சுஜாதா இவர்களைப் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதிலும் பாரதி பைத்தியமாகவே ஆகிவிட்டேன். சென்ற ஆண்டு ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டம் முழுவதையும் பாடல்களாக இயற்றி இசையமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவற்றை அனிதா குகாவின் குழுவினர் நாட்டிய நாடகமாக்கினார்கள். நல்ல வரவேற்பையும் பெற்றது. அரங்கில் என்னைப் பாராட்டியபோது என்னுடைய தமிழ் ஆசிரியர்களை மானசீகமாக நினைத்துக் கொண்டேன். இந்த ஆண்டு மகாபாரதத்தில் வனபவர்வத்தை பாடல்களாக இயற்றிக்கொண்டிருக்கிறேன். அமெரிக்காவில் க்ளீவ்லேண்டில் அரங்கேறப்போகிறது.

இசையின்பால் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
பள்ளிக்காலத்தில் ஒரு பட்டி மன்றம் தொடங்குவதற்கு முன்னால் ‘வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்’ என்ற பாரதியின் பாட்டைப் பாடினேன். அதுவே எனது ஆரம்பம்! புலவர் சோழன் என்னைப் பாராட்டிப் பேச அனைத்து பேச்சாளர்களும் என்னைப் பாராட்டியபிறகுதான் தங்களது உரையைத் தொடங்கினார்கள். எனக்கு இசையின்பால் ஆர்வம் ஏற்படுத்தி தன்னம்பிக்கையை ஏற்படுத்திய ஒரு நிகழ்ச்சி அது! ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கைக்குச் சென்றிருந்தபோது கம்ப வாரிதி ஜெயராஜ் அவர்களின் நட்பு கிடைத்தது. எனது சங்கீதத்தை அவர் சிலாகித்துப் பேசியபோது இத்துறையின் நான் மேலும்பொறுப்போடு செயல்படவேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போதெல்லாம் வானொலியில் இசை கற்றுத்தருவார்கள். அப்படித்தான் எனது தாயார் இசை கற்றுக்கொண்டார். அவருக்குத் தமிழின் மீது ஆர்வம் அதிகம். எனது நண்பர்களின் நாடகங்களுக்கு அவர்தான் இசையமைத்துக் கொடுப்பார். முறையான இசைப்பயிற்சி என்றால் செம்பை வைத்ய நாத பாகவதரின் மருமகன் அனந்தமணி நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் பணியாற்ற வந்தார். அவரே எனக்கு முதல் குருவாகவும் அமைந்தார். முதல் நாள் அவர் வருவதற்குத் தாமதமாகவே நான் தூங்கி விட்டேன். என்னை எழுப்பி பாடவைத்தார். என் அம்மா சொல்லிக்கொடுத்த தியாகாராஜ கிருதி ஒன்றைப் பாடினேன். அடுத்த நாள் காலையிலேயே ஐந்து மணிக்குப் பாட்டு சொல்லித்தர வந்துவிட்டார். தொடர்ந்து சாதகம். நட்புடன் பழகினார். ஒரு கட்டத்தில் ‘எனக்கு இவ்வளவுதான் தெரியும். இதற்கு மேல் சொல்லித்தர வேறொரு ஆசிரியரை நானே ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டார். இப்படி வெளிப்படையாக சொன்ன அவரது பாங்கு வியப்பாக இருந்தது. நான் முதலில் கச்சேரி செய்த தருணத்தில் எனது குரு அனந்த மணி அவர்களே எனக்குத் தம்புரா போட்டார். ரசிப்பின் உச்சத்தில் அவரது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழியும். அத்தனை ரசிகர் அவர்! அடுத்து ஸ்ரீரங்கம் ரங்கநாதன் என்ற் ஆசிரியர் பாண்டிச்சேரியிலிருந்து வாராவாரம் வந்து சொல்லித்தந்தார். இவர் ஆயிரம் கீர்த்தனைகள் தெரிந்த அபூர்வ ஆசிரியர்! இருந்தாலும் ஒருதடவை வந்தால் கால் கீர்த்தனைதான் கற்றுத்தருவார். பின்னால்தான் காரணம் புரிந்தது. அந்தக் கால் கீர்த்தனையை நான் பாடிப்பாடி சாதகம் செய்து எனது கற்பனையை அபிவிருத்தி செய்யவேண்டும் என்று அவர் எண்ணியிருக்கிறார். ஒரு கலையைக் கற்றுத்தரும்முறைகளில்தான் எத்தனை விதங்கள்! தவிர ஒவ்வொரு தடவையும் இசைப் பயிற்சி முடிந்தவுடன் அவர் எங்கோ செல்வார். ஒரு நாள் அவர் பின்னாலேயே சென்றபோது வேறொரு வித்வான் வீட்டுக்குச் செல்வதைக் கண்டுபிடிக்க முடிந்தது. அவர் பெயர் வெங்கட சுப்ரமணியம்! அபாரமான திறமை படைத்தவர். வயலின் வித்வான். நானும் அங்கு சென்று அவர்கள் பேசும் பேச்சுக்களையும், இருவரும் சேர்ந்து பாடும் பாடல்களையும் மெய்மறந்து கேட்பேன். ஒரு தடவை விடிய விடிய பாடினார்கள். இசைக்கடலில் ஆனந்தமாக மிதந்தேன். தேடித்தேடி ஒரு கலையைத் தேடும்போது அதில் ஒரு ஆனந்தம் இருக்கிறது. எங்கள் ஊர் சபாவுக்கு வராத வித்வான்களே கிடையாது. அங்கு பாடும் பாடல்களை டேப்களில் பதிவு செய்வோம். சென்னையிலிருந்து டேப்புகள் வரவேண்டும். நான் கஷ்டப்பட்டு ஒரு யுக்தி செய்து ஒரே டேப்பில் இரண்டு மடங்கு பாடல்களைப பதிவு செய்யும் முறையைக் கண்டுபிடித்தேன். இதெல்லாம் பெரிய சுவாரஸ்யம். பெரிய வித்வான் களெல்லாம் எங்கள் வீட்டில் வந்து சாப்பிட்டுப் போவார்கள். அது எங்களது பாக்கியம்.

உங்களது இசைப் பயிற்சிக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்தது எப்போது?
சேஷ கோபாலன் சார் எங்கள் ஊருக்கு வந்தபோது அவரது இசையால் வசீகரிக்கப்பட்டு மயங்கி அவருடனேயே அவர் செல்லும் இடமெல்லாம் செல்வது என்று தீர்மானித்து விட்டேன். ஆனால் அவ்ர் ப்ளஸ்டூ முடித்து விட்டு வரச் சொன்னார். அதன்படியே படிப்பு முடிந்தவுடன் மதுரைக்குச் சென்று அவரது இல்லத்திலேயே தங்கி குருகுலவாசமாக இசை பயின்றேன். அவரது ரசிகனாகத்தான் நான் சென்றேன். அவரது இசை எனக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர் எனக்கு குரு நாதராக அமைந்தது என் பாக்கியம். தினமும் எனது குருமார்கள் அனைவரையும் நினைத்துக் கொள்வேன். தொடர்ந்து இசைப்பயிற்சி, கற்பனை வளம் எல்லாவற்றுடனும் கூட குரு பக்தி மிகவும் அவசியம். இதை இன்றைய தலைமுறையினரும் உணரவேண்டும்.

தாங்கள் இன்று கர்நாடக இசையுலகில் அனைவராலும் விரும்பி ரசிக்கப்படும் ஒரு இசைக்கலைஞராக இருக்கும் அதே சமயம் பல மாணவர்களுக்கும் இசைப் பயிற்சியளிக்கவும் செய்கிறீர்கள். அதைப் பற்றி?
இப்போது இந்த கணினி யுகத்தில் உலகத்தின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் பாட்டு கற்றுக்கொள்ளலாம். என்னிடம் அமெரிக்காவில் இருக்கும் மாணவர்கள் பலபேர்களும் ‘ஸ்கைப்’ என்ற மென்பொருள் வழியாக இசை பயில்கிறார்கள். அங்கு செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு நேரிலும் பயிற்சியைத் தொடர்கிறேன். ஆக முன்பெல்லாம் ‘sky is the limit’ என்பார்கள் இப்போது ‘Skype is the limit’ என்று சொல்லலாம். தவிர முன்பெல்லாம் அசரீரி என்று வானில் இருந்து வரும் ஒலியைச் சொல்வார்கள். இப்போது electronic வழியாக எல்லாம் நடப்பதனால் கணினி வரும் ஒலியையும், காட்சிகளையும் ‘ஈ-சரீரி’ என்றும் கூடச் சொல்ல்லாம். எனது மனைவி மீரா நன்றாகப் பாடுவார். எனது மகள் ஸ்ரீ ரஞ்சனி மேடைக்கச்சேரிகள் செய்து வருகிறார். மகன் சங்கரப் பிரசாத் மிருதங்கம் பயில்கிறான். இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் அவர்களது வேலைகளைச் செய்ய பறக்கவேண்டியதாக இருக்கிறது. அதற்கிடையிலும் ஆர்வத்துடன் இசை பயில்கிறார்கள். அதற்கு கணினியும். வலைத்தளமும் பயன்படுகிறது. எதிர்காலத்தில் கர்நாடக இசை மேலும் அமோகமாக வளர்ச்சியடையும் என்பதில் சந்தேகமேயில்லை.

நேர்காணல்:  ‘க்ளிக்’ ரவி
‘KLIK’ RAVI
BLOCK: E2, FLAT: 203,
PARAMESWARAN VIHAR
(NEAR BARANI STUDIOS)
ARCOT ROAD,
SALIGRAMAM.  CHENNAI- 600 092
PHONE:  98411 55500,  044-23652705

klikravi13@gmail.com

source:::::

வானமே எல்லை ஆசிரியர்:  ncs_sridharan @yahoo.com

அமுதசுரபி  ஆசிரியர்:  திருப்பூர் கிருஷ்னன்   thiruppurkrishnan@hotmail.com

natarajan

இதயம் காக்க …. இதமான யோசனை சில !!!

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்:

1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள்.சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.

2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும்.சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.

3. உடல் எடை குறைவு -சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும்.குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம்.

4. நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம்.அவற்றை குறைவாக,அவ்வபோது சாப்பிடுங்கள்.

5. மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால்,மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு நல்லது.

6. பிரஷ் ஆக உள்ள காய் பழங்கள் தினம் சாப்பிடுங்கள்.ப்ரிட்ஜில் வைக்கப்படும் காய் -பழங்கள் 50முதல் 60 %வரை சத்துக்களை இழக்கின்றன.

7. பிரஷ் ஆக உள்ள காய் பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.

8.உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகபடுதாதீர்கள்.

9.புகை பிடிப்பதும் அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை விளைவிக்கும்.

10. தக்காளி,வெங்காயம்,பூண்டு,எலுமிச்சை,கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

11. சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.

12. மிக சிறிய ,உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் பெரும்பாலும் (90 %)நமக்கு மனச்சுமை (Stress)வருகிறது.

13. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.

14. எல்லா விஷயங்களும் மிக சரியாக
(perfect )இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள்.நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள்.இது உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.

15. சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள் ( Delegate ).

16.கோபம்,வருத்தம்,மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள்.அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.

17. அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.வேலையை விட்டு செல்பவர்களை விட,அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கபடுகிறார்!

18. குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.

19. உங்கள் படுக்கை அறையில் தொலை காட்சி,கணினி,வளர்ப்பு பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.

20. உடல் எடை கூடுவதற்கு தொலை காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்

21. உங்கள் அலை பேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்;அது மோசமான பழக்கம்;மேலும் மனச்சுமையை கூட்டும்.

22. மகிழ்ச்சியுடனும்,பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை.

23. சிரிப்பு ( Laugh therapy)புற்று நோய்,இதய நோய்,மன சுமை போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்க பட்டுள்ளது.

24. தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகபடுத்த உதவும்

25. உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசி தீர்க்க பாருங்கள்.

26. நேர் மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள்.நல்லதே நடக்கும் என
( Optimist )நம்புங்கள்.

27. மகிழ்வாக வாழும் கணவன்-மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு.தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.

28. நம்பிக்கையும் நேர் மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து மீள உதவும்

29. வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.

30. பழைய நட்புகளை விடாது தொடருங்கள்.புது நட்புகளும் உருவாக்கி கொள்ளுங்கள்.நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்.

Join Only-for-tamil

source ::::input from a friend of mine.

natarajan

படித்ததில் பிடித்தது …செந்தூர் இலை விபூதி மகிமை !!!!

படித்ததில் பிடித்தது

பார்த்தாலே நோயைப் பறக்கடிக்கும் விபூதி

ஆன்மீக மாத இதழ் ஞான ஆலயம் மார்ச் 2013 இல் வெளி வந்த சித்ரா மூர்த்தி அவர்கள் எழுதிய செந்தூர் விபூதியின் மகிமையைப் பற்றிய அருமையான கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். –

எழுதியவர் சித்ரா மூர்த்தி, திருப்புகழ் ஆய்வாளர், சிறந்த இசைப்பேருரையாளர்.
“அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ
பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே”

Senthil Andavar பொருள்:
“தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்.”

ஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பார்த்த மாத்திரத்திலேயே நோய்களைப் பறக்கடிக்கும் என்று அவர் குறிப்பிடும் ‘பத்ர பூதி’ என்பது என்ன?

விபூதியின் வரலாறு
‘பத்ர’ என்பது இலை. பூதி என்பது நீறு. செந்திலாண்டவன் திருக்கோயிலில் இறைவனது பிரசாதமாகிய திருநீறு, பன்னீர் இலையில் வைத்துத் தரப்படுகிறது. இதன் மணமே தனித்தன்மை உடையதாக இருக்கும்.

இலையினால் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. என்னவானாலும் சரி, இலை விபூதியில் செந்திலாண்டவனின் அருள் மணம் வீசுகிறது என்பதுதான் நிஜம்.

இலை விபூதியின் வரலாறு, என்னவென்று பார்ப்போம். செந்தூரில் சூரபத்மாதியர்களை ஒடுக்கிவிட்டு கடற்கரையில் கலங்கரை விளக்கம் போன்று ஒளி வீசி நின்றான் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.

எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.

தாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.

Adi Sankaraஆதி சங்கரரும் செந்திலாண்டவனின் நீறும்
ஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், ஆபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.

அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, “என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்” என்று கூறினார். உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.

கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.

அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து சுலோகங்கள் வெளிவந்தன. வடமொழியில் பாம்பைப் புஜங்கம் என்பர். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள். பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.

தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.

விபூதியே கூலி
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனததைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.

திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது. தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில் கோயிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார்.

“என் புகழைப் பிள்ளைத் தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்” என்று கூறி இலை விபூதியைக் கையில் கொடுத்திட்டு மறைந்தாராம். உரையாசிரியர் குகஸ்ரீ ரசபதி அவர்கள், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

கந்தர் கலி வெண்பா பாடிய குமரகுருபரரின் சரித்திரத்தை எழுதியருளிய வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகர்கள் இலை விபூதிப் பிரசாதத்தை எடுத்து வழங்குவதைக் குமரகுருபரர், தான் கண்டபடி அழகாகப் பாடியுள்ளார்.

“இலையமில் குமரவேள் முன் வணங்குவார்க்கு என்றும் துன்பம்
இலை.அடுபகை சற்றேனும் இலை.படுபிணி நிரப்பும்
இலை,அளற்றுழன்று வீழ்தல் இலை,பல பவத்துச் சார்பும்
இலை என இலை விபூதி எடுத்தெடுத்துதவல் கண்டார்”
என்று பாடுகிறார்.

விபூதியின் மகிமையைப் பாடவந்த அருணகிரிநாதரும்,
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள்
பதமே துணையதென்று…”

என்று பாடுகிறார். நாமும் “ஆறுமுகம்” என்று ஆறு முறை ஓதி இலை விபூதியைத் தரித்து செந்திலாண்டவன் திருவருளுக்குப் பாத்திரமாவோமாக.

நன்றி: 2013 மார்ச் மாத ஞான ஆலயம்.

source::::input from a friend of mine…

natarajan

“மணலில் போட்ட அட்சதை ….அதன் தாத்பர்யம் என்ன !!! “

வெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவா மணலில் போட்ட அட்சதையை, அவரது ஆணைப்படி சேலம் வக்கீல் ராமசாமி ஐயரும்,அவரது மனைவியும் கண்களில் ஒற்றிக் கொண்டு தங்களது மேல்வேஷ்டி மற்றும் புடவைத் தலைப்பில் சர்வ ஜாக்கிரதையாக முடிந்து வைத்துக் கொண்டனர்.

எல்லோருக்கும் அவரவர் மேல்வஸ்திரத்திலோ,புடவைத் தலைப்பிலோ விழுமாறு அட்சதையைப் போட்ட மகா பெரியவா, தனக்கு மட்டும் மேல்வஸ்திரத்தில் போடாமல் ஏன் தரையில் போட்டார் என்று மருகிப் போனார் ராமசாமி ஐயர். எவ்வளவு முயன்றும்,யோசித்தும் இதற்கான விடை அவருக்குக் கிடைக்கவில்லை. மகான்களின் இயல்பை மனிதர்கள் அறிய முடியுமா?

சேலம் திரும்புவதற்கு ராமசாமி ஐயருக்கு மகா பெரியவா உத்தரவு கொடுத்த பிறகு,வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து மனைவியுடன் வண்டியில் புறப்பட்டார்.சுகமான காற்று உடலை வருடிக் கொண்டிருந்தாலும், ராமசாமி ஐயரின் மனம், மணலில் போட்ட அட்சதையிலேயே இருந்தது. ஆனால், சேலத்துக்கு வந்ததும் இந்த நிகழ்வு அன்றே அவரது நினைவில் இருந்து விடுபட்டது.

காரணம் – வழக்கமான அவரது வக்கீல் பணிகள். இயல்பு வேலைகளில் பிஸியானார் ராமசாமி ஐயர். வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து சேலத்துக்கு வந்த இரண்டாம் நாள் மதியம்… அன்று ஏதோ முக்கிய பணிக்காக வீட்டில் இருந்த ராமசாமி ஐயருக்கு, கனமான பதிவுத் தபால் ஒன்று வந்தது. அனுப்பியவர் முகவரியைப் பார்த்தார். அதில், அவரது மாமனாரின் பெயரும் விலாசமும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சாதாரணமாக ஒரு இன்லேண்ட் கடிதம் எழுதி, சம்பிரதாயத்துக்கு விசாரிப்பவர், பதிவுத் தபாலில் என்ன அனுப்பி இருப்பார் என்கிற ஆவலுடன், மனைவியையும் உடன் வைத்துக் கொண்டு பிரித்தார். உள்ளே – ரெஜிஸ்திரார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரம் ஒன்று இருந்தது. ஒரு கணம் குழம்பியவர்,பத்திரத்தில் உள்ள வாசகங்களை முழுக்கப் படித்து விட்டுப் பிரமித்துப் போனார்.

பத்திரத்துடன் இருந்த ஒரு கடிதத்தில், ராமசாமியின் மாமனார் தன் கைப்பட எழுதி இருந்தார்: ‘வக்கீல் தொழிலில் சிறந்து விளங்கினாலும், சொந்தமாக நில புலன் எதுவும் இல்லாமல் இருந்து வரும் உங்களுக்கு – உங்கள் பெயரிலேயே ஏதாவது நிலம் எழுதி வைக்கலாம் என்று திடீரெனத் தோன்றியது. அதன் வெளிப்பாடுதான், இத்துடன் இணைத்திருக்கும் பத்திரம். தங்கள் பெயருக்குப் பதிவு செய்து, சில ஏக்கர் நன்செய் நிலங்களை எழுதி வைத்திருக்கிறேன். இறைவனின் அருளுடனும், தாங்கள் வணங்கும் மகா பெரியவா ஆசியுடனும் இதை நல்லபடியாக வைத்துக் கொண்டு சுபிட்சமாக வாழுங்கள்.’

ராமசாமி ஐயருக்கும் அவரது மனைவிக்கும் ஏக சந்தோஷம்.இருக்காதா பின்னே!எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி ஒரு சொத்து – அதுவும் நல்ல நன்செய் நிலம் – தானாகக் கைக்கு வந்து சேர்ந்தால், மனம் மகிழ்ச்சியில் துள்ளாதா? பரவசப்பட்டுப் போனார்கள் இருவரும். மாமனாரிடம் இருந்து தானமாக வந்த நில புலன்களில் ஏற்கெனவே பயிர்கள் நன்றாக விளைந்து கொண்டிருந்தன. மகசூலும் நன்றாக இருந்தது. அதனால், இதைப் பராமரிப்பதில் பெரிதாக ஒன்றும் சிரமம் இல்லை ராமசாமி ஐயருக்கு.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் போய் நல்ல முறையில் பார்த்து வந்து கொண்டிருந்தார். இதற்கிடையில் வெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவா,அட்சதையை ஏன் தரையில் போட்டார் என்கிற சம்பவத்தை ஏறக்குறைய மறந்தே போயிருந்தார் ராமசாமி ஐயர். ஆனால், அப்படி அட்சதை போட்டு ஆசி புரிந்த மகா பெரியவா இதை மறப்பாரா?

நில புலன்கள் சேர்ந்தால் நிலச் சுவான்தார்தானே! இப்படி ஒரு நிலச் சுவான்தார் ஆன பிறகு, ‘இந்த நல்ல செய்தியை மகா பெரியவாளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.’ என்று எண்ணினார் ராமசாமி ஐயர்.ஒரு நாள் காஞ்சிக்குப் போய் அவரைத் தரிசிக்க ஆர்வம் கொண்டார்.அந்த நாளும் கூடிய விரைவிலேயே வாய்த்தது. தனது நிலத்தில் இருந்து முதன் முதலாக அறுவடை ஆன நெல்லில் இருந்து,அரிசி அரைத்துக் கொண்டு,அந்த அரிசி மூட்டைகளுடன் காஞ்சிபுரம் மடத்துக்கு வந்தார் ராமசாமி ஐயர்.

அந்த மூட்டைகளுள் ஒன்றில் இருந்து சில அரிசி மணிகளை எடுத்து, தன் மேல்துண்டில் முடிந்து வைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் மகா பெரியவா முன்னால் போய் நின்றார். உடன், அவரது மனைவியும் இருந்தார். “வாப்பா ராமசாமி… சேலத்துலேர்ந்து வர்றியா? இல்லே உன் வயல்லேர்ந்து நேரா இங்கே வர்றியா?” – மகா பெரியவா கேட்டதும், ராமசாமி ஐயர் வாயடைத்துப் போனார். ஏதும் பேசவில்லை.

மகா பெரியவாளே தொடர்ந்தார்:“இப்பல்லாம் உன் நிலத்துல விளைஞ்ச அரிசியைத்தான் சமைச்சு சாப்பிடுறாயாமே?” மகா பெரியவா திருவாய் மலர்ந்தருளிய மறுகணம் விதிர்விதிர்த்துப் போனார் ராமசாமி ஐயர்.

சட்டென்று நிதானத்துக்கு வந்து,“ஆமா பெரியவா.வெங்கடாத்திரி அகரத்துக்கு வந்து பெரியவாளைத் தரிசனம் பண்ணிட்டு ஊருக்குப் போன உடனே,என் மாமனார்கிட்டேர்ந்து பத்திரம் வந்தது. நிலமே இல்லாமல் இருந்த எனக்கு, அவராவே சில ஏக்கர்களை எழுதி சாசனம் பண்ணி, தபால்ல அனுச்சிருந்தார். அதான் பெரியவாளைப் பாத்துச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.முதல் விளைச்சல்ல வந்த சில அரிசி மூட்டைங்களையும் மடத்துக்குக் காணிக்கையா கொண்டு வந்திருக்கேன்.”

“எல்லாம் சரிதான். அன்னிக்கு உன் மேல்வஸ்திரத்துல போட வேண்டிய அட்சதையை நிலத்துல போட்டபோது குனிஞ்சு எடுக்கறப்ப, அவ்வளவு வருத்தப்பட்டியே ராமசாமி… இன்னிக்கு அதே மாதிரிதானே, இந்த அரிசியைக் கொண்டு வர்றதுக்கும் குனிஞ்சு நிமிர்ந்திருக்கே! உன் சொந்த நிலத்துல குனிஞ்சு, கதிர் அறுத்த நெல்லை அரிசி ஆக்கி, உன் மேல்வஸ்திரத்துல முடிஞ்சு வெச்சுண்டு இப்ப என்னைப் பாக்க வந்திருக்கே?! இல்லியா?” என்று சொல்லி விட்டு, இடி இடியென பெரியவா சிரித்தபோது, ராமசாமியின் கண்களில் இருந்து பொலபொலவென்று நீர் சுரந்தது.

மகா பெரியவாளின் ஞான திருஷ்டியை உணர்ந்து மெய் சிலிர்த்தார். பெரியவாளின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு அவரது மனைவிக்குப் பேச்சே எழவில்லை.

மேல்வஸ்திரத்தை எடுத்துப் பிரித்து, அதில் முடிந்து வைத்திருந்த அரிசியைக் கையில் திரட்டி, மகா பெரியவாளின் முன்னால் இருந்த ஒரு பித்தளைத் தட்டில் சமர்ப்பித்தார் ராமசாமி. பிறகு, அவரது திருப்பாதங்களுக்குப் பெரிய நமஸ்காரம் செய்தார்.

“ஆமா பெரியவா… அன்னிக்கு நீங்க பண்ண அனுக்ரஹத்தாலதான் எனக்கு இன்னிக்கு இப்படி ஒரு சொத்து கிடைச்சிருக்கு. கூடிய சீக்கிரமே நிலம் உனக்குக் கிடைக்கப் போறதுங்கறதை சொல்லாம சொன்னேள்! அட்சதையை நிலத்துல போட்டேள். இந்த மூளைக்கு அப்ப இது எட்டலை. உங்களோட கருணைக்கும், தீட்சண்யத்துக்கும் அளவேது பெரியவா” என்று சொல்லி, முகத்தை மூடிக் கொண்டு தேம்பலானார்.

இதை அடுத்து, அந்தப் பரப்பிரம்மம், தியானத்தில் மூழ்கியது.‘சொந்தமாக நில புலன் உனக்குக் கிடைக்கும்’ என்பதை தீர்க்க தரிசனமாக ராமசாமி ஐயருக்கு உணர்த்த விரும்பிய மகா பெரியவா, வஸ்திரத்தில் போட வேண்டிய அட்சதையைத் தரையில் போட்டதன் தாத்பர்யம் அவரைத் தவிர வேறு யாரால்தான் புரிந்து கொள்ள முடியும்?

source::::www.periva.proboards.com
natarajan
Read more: http://periva.proboards.com/thread/4708/#ixzz2aCygEvnK

அமெரிக்க வாழ் தமிழர் ஸ்ரீகாந்தின் தமிழ் பற்றும் பணியும் !!!!

கல்கி, உ.வே.சுவாமிநாதையர் ஆகியோரின் நூல்களை, முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் சிரமமின்றி கேட்கும் வண்ணம், அமெரிக்க வாழ் தமிழர், ஸ்ரீகாந்த், ஆடியோ புத்தகங்களை உருவாக்கி வருகிறார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த, ஸ்ரீகாந்த், 20 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் குடியேறினார். அங்கு, மென்பொருள் துறையில், திட்ட மேலாளராக வேலை பார்த்தபடி, தமிழ் மன்றத்தை நிறுவிய ஸ்ரீகாந்த், அதன் மூலம், தமிழ் தொடர்பான, பணிகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, குழந்தைகளுக்கான இசை, கவிதை, பேச்சு, நாடகங்கள் போன்றவற்றை அரங்கேற்றி வருகிறார்.தற்போது, சான்பிரான்சிஸ்கோ பாரதி தமிழ் மன்றத்தின் தலைவராக பணிபுரிந்து வருகிறார். அங்கு உள்ள, ஸ்டான் போர்டு பல்கலை கழக வானொலியில், மூன்று மணி நேரம், தமிழ் சேவைக்காக ஒதுக்கப்படுகிறது. அதில், பாடல், நேர்காணல், நாடகம் என, பலவற்றை ஒலிபரப்பி வருகிறார். அவருடைய பணிகளில் முக்கியமானது, நாவல்களை, ஆடியோ புத்தகமாக தயாரிப்பது.கல்கியின், “பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு’ ஆகிய நாவல்களை, ஆடியோ புத்தகமாக வெளியிட்டுள்ளார். மேலும், உ.வே.சா.,வின், “என் சரித்திரம்’ நூலை, ஆடியோ புத்தகமாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.”ஆடியோ புத்தகம் எனில், செய்தி வாசிப்பது போல் இருக்கும்’ என்ற, பொதுவான விமர்சனங்களை தாண்டி, தனித்துவத்துடன் உருவாக்கி இருக்கிறார்.நாவலின் நடையில், காட்சி விவரிப்புக்கு ஒரு குரலையும், கதாபாத்திரங்கள் பேசுவதற்கு ஒரு குரலையும் பயன்படுத்தி உள்ளார். கல்கியின், “பொன்னியின் செல்வன்’ நூலில் வரும், 40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை, தானே பேசி அசத்தியுள்ளார். இது, 75 மணி நேரமாக ஓடும் ஆடியோ புத்தகமாக உள்ளது.

 

 

இதுகுறித்து, ஸ்ரீகாந்த் கூறியதாவது: துவக்கத்தில் துபாயில், மென்பொருள் துறையில் வேலை பார்த்த நான், அடுத்த, மூன்று ஆண்டுகளில், அமெரிக்கா சென்றேன். அங்கு, ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள் இருந்தன. அவர்கள், பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது; குறிப்பாக, மொழி பிரச்னை அதிகமாக இருந்தது. அடுத்த தலைமுறையினர், ஆங்கிலத்திலேயே எழுதி, பேசுவதால், தமிழ் மொழி மறந்தே போகும் அபாயம் இருந்தது.எனவே, இங்குள்ளவர்கள் தமிழை மறக்காமல் இருக்க, என்னால் இயன்ற வகையில், பணியாற்றி வருகிறேன்.என் வேலை, மிகவும் பரபரப்பானது; மனதளவில் அழுத்தம் கொடுக்க கூடியது. இதில், போதுமான ஓய்வு கிடைப்பது, சாத்தியமில்லாதது. இருந்தாலும், எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில், அடுத்த தலைமுறையினருக்கு சென்று சேரும் வகையில், தமிழ் சேவை செய்வது, சுகமானது.இவ்வாறு, அவர் கூறினார்.

இவருடைய ஆடியோவை கேட்ட, மாற்றுத் திறனாளிகளும், முதியோரும், இவருடைய சேவையை பாராட்டி, நேரிலும், மின்னஞ்சல் மூலமாகவும், பாராட்டி வருகின்றனர். அவருடைய இணைய முகவரி: http://www.tamilaudiobooks.com

 

source:::::Dinamalar .com

natarajan

வாக்கு சாதுர்ய வாலி !!!!

1.வாக்குச் சாதுர்ய வாலி

வாலியிடம் ஒரு சந்திப்பில் எழுத்தாளர் நா. பார்த்தசாரதி கேட்டார்.
நீங்க ஏன் வாலின்னு பேர் வச்சிகிட்டு இருக்கீங்க ?
வாலி சொன்னார் – ராமாயண வாலி யை யாரும் வெல்ல முடியாததற்குக் காரணம் அவன் எதிரில் யார் வந்து நின்றாலும்எதிராளியின் பலத்தில் பாதி வாலி க்கு வந்துவிடும். அதுமாதிரி நான் யாரை சந்திச்சாலும் எதிராளியின் அறிவில் பாதி எனக்கு வந்துடும்.

நா. பா அவரை கிண்டலடித்தார் – உங்களைப் பார்த்தா அவ்வள ஒண்ணும் அறிவாளியா தெரியலையே..!

வாலி சொன்னார் : நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கலையோ என்னவோ !!

2. வார்த்தை விளையாட்டு வாலி

இங்கிலீஷ், இந்தி தமிழ் எல்லாம் கலந்து கட்டி அடிக்கும் கவிஞர் வாலியின் வார்த்தை விளையாட்டுக்கு ஒரு உதாரணம். வி எஸ் ராகவன் நடித்த டிவி படம் ஒன்றில் அவரின் ஒரு வசனம் — பப்ளிக் பிராசிக்யூட்டர் ( நீலு) குற்றம் சாட்டப்பட்டரை கேள்விகேட்டு வாதம் செய்கையில். குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவம் நடந்த அன்று நான் திருப்பதியில் இருந்தேன் யுவர் ஆனர் என்று சொல்லி திருப்பதியில் வாங்கிய லட்டு ஒன்றை சாட்சியாக நீதிபதியிடம் கொடுப்பார்..
நீலு லட்டை வாங்கி விண்டெடுத்து வாயில் போட்டு, நீதிபதியைப் பார்த்து
“மை லார்ட், திஸ் இஸ் பொய் லாட்

 

source:::::input from a friend of mine …

natarajan

“நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ” சொன்னபடி வாழ்ந்த வாலி இன்று இல்லை…

வாலி கடந்து வந்த பாதை…(1931-2013)   கவிஞர் வாலி காலமானார்...! திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

கவிஞர் வாலி, 1931 அக்., 29ல் திருச்சிக்கு அருகே உள்ள திருப்பராய்த்துறையில் பிறந்தார். இவரது பெற்றோர் ஸ்ரீனிவாச அய்யங்கார் – பொன்னம்மாள். பின் ஸ்ரீரங்கத்துக்கு குடி பெயர்ந்தார் வாலி. இளம் வயதில் நண்பர்களின் உதவியுடன் நேதாஜி எனும் கையெழுத்து பத்திரிகையை துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. இதில் பங்கேற்ற பல இளைஞர்களில் ஒருவர் தான், பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா. துவக்க விழாவுக்கு திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததாலும், வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக்கொடுக்கும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. இதன் மூலம் வாலியின் கவிதை திறன் வெளிப்பட்டது.

வாலியானது எப்படி…?

தமிழ் மேல் பற்று கொண்டிருந்த இளம் வயதில் வாலி ஓவியத்தில் ஈடுபாடு மிக்கவராக இருந்தார். பள்ளிப் பருவத்தில், பிரபல ஓவியர் மாலி மீது கொண்ட பற்றினால், தானும் ஒரு சிறந்த ஓவியராக வரவேண்டும் என விரும்பினார். இதையடுத்து நீயும் அவரைப் போல வரவேண்டும் என இவரது பள்ளி நண்பர் பாபு, இவருக்கு வாலி எனப் பெயர் வைத்தார்.

வாலிப கவிஞர்…!

எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சிக்குப் பின், சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பை முடித்தார். இவரை சினிமாவுக்கு பாட்டெழுத அழைத்து வந்தவர் டி.எம்.சவுந்தர்ராஜன். 1958ம் ஆண்டு பாடலாசிரியராக சினிமாவில் கால்பதித்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் முதல் இன்றைய தனுஷ், சிம்பு வரை சுமார் மூன்று தலைமுறை சினிமாவிற்கு 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். குறிப்பாக எம்.ஜி.ஆரின் சூப்பர்-டூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த பெருமைக்குரியவர் வாலி என்று சொல்லலாம். இவரது பாடல்வரிகளில் விஷேசம் என்னவென்றால் தூய தமிழ் வார்த்தைகள் மட்டுமல்லாது போஃக், ஹிப்-ஹாப் போன்ற பாடல்களையும் கலந்து கட்டி தனது பாடல் வரிகளில் கொடுக்கும் வல்லமை படைத்தவர். இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றவாரும் பாடல்களை கொடுத்தவர்.

இதுக்கு மேல என்னால் முடியாது

அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு பாடல் வரிகள் எழுதும்போது கமல், காதல் தோல்வியை மையப்படுத்தி ஒரு பாட்டு எழுதுங்கள் என்று வாலியிடம் சொல்லியிருக்கிறார். அவரும் சுமார் 5 பாடல்களை கமலுக்கு எழுதி கொடுத்துள்ளார். ஆனால் கமல் திருப்திபடவில்லை. பின்னர் இறுதியாக 6வதாக ஒரு பாட்டை எழுதி கமலிடம் கொடுத்து, இதுக்கு மேல் என்னால் பாடல் எழுத முடியாது என்று சொல்லியுள்ளார். அந்தப்பாடல் தான் உன்ன நெச்சேன் பாட்டு படிச்சேன் என்ற பாடல்… அந்தப்பாடல் தான் தேசிய விருது பெற்றது.

பன்முக வாலி

பாடலாசிரியராக மட்டுமல்லாமல், அவதார புருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம், வாலிப வாலி… உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். மேலும் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் 17 திரைப்படங்களுக்கு, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். வடை மாலை எனும் திரைப்படத்தை, மாருதிராவுடன் சேர்ந்து இயக்கியுள்ளார்.

பிடித்தது

* வெற்றிலை பாக்கு பிரியரான இவர், 15 வயதிலிருந்து தொடர்ந்த இப்பழக்கத்தை, 76 வயது வரை தொடர்ந்தார். பின் நிறுத்திவிட்டார். கவிதை, உரைநடை, சிறுகதை உட்பட, 15 புத்தகங்களை எழுதியுள்ளார்.

* வெள்ளை மற்றும் சந்தன நிற ஆடையை விரும்பும் இவர், இதுவரை, வெளிநாடு எங்கும் சென்றதில்லை. இவருக்கு இஷ்ட தெய்வம், முருகன்; பிடித்த விளையாட்டு, கிரிக்கெட்.

மனம் மாறி வாலி

கவிதையின் இமயமாக கருதப்படும் வாலி இளமைக்காலத்தில் வறுமையின் காரணமாக தனது வாழ்க்கையில் ஒருமுறை தற்கொலை முடிவை எடுத்தார். அப்போது கண்ணதாசன் சுமைதாங்கி என்ற படத்துக்காக எழுதிய’  ‘மயக்கமா  கலக்கமா வாழ்க்கையில் வருத்தமா “என்ற பாடலில் ” உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்து பார்த்து நிம்மதி தேடு ” என்ற பாடல் வரியைக் கேட்டு வாலி மனம் மாறி, தற்கொலை முடிவை கைவிட்டார். இதன் பின் தன்னம்பிக்கையுடன் புதிய வாழ்க்கையை தொடங்கினார்.

விருதுகள்…

வாலியின் கலைச்சேவையை பாராட்டி 2007ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இதுதவிர தமிழக அரசு மாநில விருதுகளை ஐந்து முறை (எங்கள் தங்கம் -1970, இவர்கள் வித்தியாசமானவர்கள் – 1979, வருஷம் பதினாறு, அபூர்வ ராகங்கள் – 1989, கேளடி கண்மணி – 1990, தசாவதாரம் – 2008) பெற்றுள்ளார்.

கடைசி பாடல்…

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் காவியத்தலைவன் படத்திற்காக எழுதப்பட்டுள்ள கோடாளி மூடிச்சு போட்டு… என்று தொடங்கும் பாடல் தான் வாலி எழுதியிருக்கும் கடைசி பட பாடல். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

வாலியின் பிரபலமான பாடல் வரிகள்….

புதிய வானம் புதிய பூமி, ஏமாற்றாதே ஏமாறாதே, வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கைகளில்,, கண் போன போக்கிலே கால் போகலாமா, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன், நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், மன்னிக்க வேண்டுகிறேன், தரைமேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் , இறைவா உன் மாளிகையில், நான் மலரோடு தனியாக ஏன், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், அம்மா என்றழைக்காத உயிர் இல்லையை, மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள், அந்த நாள் ஞாபகம் நெஞ்சினிலே வந்ததே நண்பனே, கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது.

வாலி அவர்கள் இன்று மண்ணுலகை விட்டு சென்றாலும் அவர் தந்த காலத்தால் அழியாத பாடல்கள் பல என்றும் இந்த உலகம் இருக்கும் வரை இருக்கும் என்பது திண்ணம்…!!

source:::: Dinamalar …Tamil Daily &Yahoo India

natarajan