Message For The Day….Want of Faith is a Source Of True Weakness…

Look at Arjuna! When the choice was placed before him to decide which he should receive – the entire army of redoubtable Yadhava war heroes or Lord Krishna alone, unarmed and refusing to fight – without any hesitation, he chose Krishna alone! He knew; he believed; and so, he was saved. What profit will an individual or country make if it accumulates money, gold and grain? The bliss derived from the worship of the Lord which arouses spiritual joy is, any day, far more desirable than the above. Want of faith is a source of true weakness. Love (Prema) is the seed, the overpowering experience of merging with the Divine is the tree (thanmayathwam), and inexhaustible bliss (Anandam) is the fruit. Achieve this consummation with firm faith in the Divine.

 

Sathya Sai Baba

” Customer Is Always Right ” !!!

 

 Senior’s Banking… PRICELESS!!


Shown below, is an actual letter that was sent to a bank by a  Senior customer ..
The bank manager thought it amusing enough to have it published in the Times.

Dear Sir:

I am writing to thank you for bouncing my cheque with which I endeavored to pay my plumber last month.

By my calculations, three nanoseconds must have elapsed between his presenting the cheque and the arrival in my account of the funds needed to honor it.

I refer, of course, to the automatic monthly deposit of my entire pension, an arrangement which, I admit, has been in place for only eight years.

You are to be commended for seizing that brief window of opportunity, and also for debiting my account £30 by way of penalty for the inconvenience caused to your bank.

My thankfulness springs from the manner in which this incident has caused me to rethink my errant financial ways. I noticed that whereas I personally answer your telephone calls and letters, — when I try to contact you, I am confronted by the impersonal, overcharging, pre-recorded, faceless entity which your bank has become.

From now on, I, like you, choose only to deal with a flesh-and-blood person.

My mortgage and loan repayments will therefore and hereafter no longer be automatic, but will arrive at your bank, by cheque, addressed personally and confidentially to an employee at your bank whom you must nominate.

Be aware that it is an OFFENCE under the Postal Act for any other person to open such an envelope.

Please find attached an Application Contact which I require your chosen employee to complete.

I am sorry it runs to eight pages, but in order that I know as much about him or her as your bank knows about me, there is no alternative.

Please note that all copies of his or her medical history must be countersigned by a Notary Public figure, and the mandatory details of his/her financial situation (income, debts, assets and liabilities) must be accompanied by documented proof.

In due course, at MY convenience, I will issue your employee with a PIN number which he/she must quote in dealings with me.

I regret that it cannot be shorter than 28 digits but, again, I have modelled it on the number of button presses required of me to access my account balance on your phone bank service.

As they say, imitation is the sincerest form of flattery.

Let me level the playing field even further.

When you call me, press buttons as follows:

IMMEDIATELY AFTER DIALING, PRESS THE STAR (*) BUTTON FOR ENGLISH

#1. To make an appointment to see me

#2. To query a missing payment.

#3. To transfer the call to my living room in case I am there.

#4 To transfer the call to my bedroom in case I am sleeping.

#5. To transfer the call to my toilet in case I am attending to nature.

#6. To transfer the call to my mobile phone if I am not at home.

#7. To leave a message on my computer, a password to access my computer is required.

Password will be communicated to you at a later date to that Authorized Contact mentioned earlier.

#8. To return to the main menu and to listen to options 1 to 9

#9. To make a general complaint or inquiry.

The contact will then be put on hold, pending the attention of my automated answering service.

While this may, on occasion, involve a lengthy wait, uplifting music will play for the duration of the call.

Regrettably, but again following your example, I must also levy an establishment fee to cover the setting up of this new arrangement.

May I wish you a happy, if ever so slightly less prosperous New Year?

Your Humble Client

source::::: unknown…input from a friend of mine…
natarajan

தமிழ் வளர்த்த பெரியவர்கள் !!!

ரசிகமணி டி.கே.சிதம்பரநாதனின் மகனான தீர்த்தாரப்பன் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். ஆற்ற முடியாத துயரத்தில் அமர்ந்திருந்த டி.கே.சி.க்கு ஒரு கடிதத்தை தந்தார்கள். அதை வாங்கி, கண்களை இடுக்கி மெதுவாக படித்தார். திடீரென்று கண்கள் பிரகாசமாகின. மகனின் மரணத்தை மீறியும் அவரின் குரலில் ஓர் உற்சாகம். “ஆஹா! ஆஹா” என்று அவர் பூரித்துப்போக, ‘என்ன சங்கதி’ என்று அவர் கையில் இருந்த தாளை வாங்கிப்பார்த்தார்கள். கவிமணி அவரின் மகனின் மறைவுக்கு எழுதியிருந்த இரங்கற்பா அது. “இப்படி ஓர் இரங்கற்பா கிடைக்க எத்தனை மகனை வேண்டுமானாலும் இழக்கலாம்!” என்று சொன்னாராம் ரசிகமணி. பெயருக்கு ஏற்ற ஆள்தான் அவர்.

சுசுமு ஓனோ எனும் ஜப்பானிய பேராசிரியர் தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர் பொற்கோவுடன் இணைந்து எண்ணற்ற ஆய்வுகளை தமிழ் மொழி மற்றும் ஜப்பானிய மொழி ஆகியவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமை சார்ந்து செய்தார்கள். அந்த ஆய்வு வெகுகாலம் நகர்ந்தது. அப்போது எண்பது வயதில் இருந்த ஓனோ, “நான் அறுபது வயதிலேயே இறந்திருக்க வேண்டியவன். தமிழ் கொடுத்த ஆற்றல்தான் என்னை இத்தனை தூரம் உயிரோடு வைத்திருந்திக்கிறது. உயிர் தந்த மொழி தமிழ்” என்று கண்ணீர் மல்க அந்த ஆய்வு முடிகிறபோது சொன்னது வரலாறு.

பாண்டித்துரை தேவர் நான்காம் தமிழ்ச் சங்கம் ஆரம்பித்து, கடந்த நூற்றாண்டில் தமிழ் வளர்த்தது வரலாறு. அவரை எல்விஸ் துரை எனும் ஆங்கிலேயர் சந்தித்தார். அவர் திருக்குறள் தவறாக எழுதப்பட்டு இருப்பதாகவும், அதை மாற்றிக் கொண்டுவந்திருப்பதாகவும் சொன்னார். உள்ளுக்குள் எழுந்த அதிர்ச்சியை சற்றும் காட்டிக்கொள்ளாமல், “எத்தனை பிரதிகள் போட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். “ஐநூறு!” என்று ஆர்வம் கொப்பளிக்க விடை வந்து விழுந்தது. அத்தனை பிரதியையும் அப்படியே பணம் கொடுத்து வாங்கிக்கொண்டார் பாண்டித்துரை தேவர். வேலையாளை அழைத்தார். “எல்லாத்தையும் குழி தோண்டி சீமெண்ணெய் ஊத்தி கொளுத்திடு!” என்றார். ஒரு தவறான திருக்குறள் பிரதிகூட தமிழனுக்கு போய் சேர்ந்துவிடக்கூடாது என்று அத்தனை கவனம் இருந்தது அவரிடம்.

Keywords: தமிழ், மொழி, அறிஞர்கள், ரசிகமணி, பாண்டித்துரை தேவர், திருக்குறள்
Topics: சிறுவர்| இலக்கியம்| தகவல்| வரலாறு|

source ::::The Hindu  Tamil

natarajan

Message For The Day….What Does Gopikas Love Towards Krishna Mean …

The love of the Gopis towards Krishna has led many ignorant people enmeshed in worldly attachments and physical attractions, to turn their faces away from God. Before passing judgement on any subject, you must investigate closely. The love of the Gopis towards Krishna was super-physical, the love of the soul for the Over-soul, of the river for the sea. Their joy when they feel His presence is as supreme as their grief when they feel they are deprived of it. That is why among the songs of the saints, you have Nindhaasthuthi also; that is to say, songs, which blame Him for being cruel, partial, negligent, etc.! Persons deep in this type of love see nothing else, hear nothing else; they behave like mad persons in the world’s view.

 

Sathya Sai Baba

காந்தி கணக்கு என்றால் என்ன அர்த்தம் !!!

காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட ‘நாமம்’ என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரியாது. அதை இப்போது தெரிந்துகொள்வோம்.

மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் “நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, ‘காந்தி கணக்கு’ என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்” என்றார்களாம் அந்த வியாபாரிகள்.

அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு. ஆனால், நாம் இதற்கு அர்த்தம் வைத்திருப்பதோ புரியாத கணக்கு. ஒவ்வொரு சொல்லிலும் அதன் உள் அர்த்தத்தை புரிந்து செயல்பட்டால் அறிவு விசாலமாகும்.

Keywords: காந்தி கணக்கு, காந்தி, ரூபாய், காந்தி

 

source::::: தி  இந்து …தமிழ்

நடராஜன்

நனவாகும் நூறாண்டுக் கனவு!….தமிழால் இணைவோம் !!!

நூறு ஆண்டு காலக் கனவு நனவாகிறது. இதோ, ‘தி இந்து’ குழுமத்திலிருந்து அதே பெயருடன் தமிழ் நாளிதழ் மலர்கிறது. கதிரோன் காட்டும் புது விடியல், பறவைகள் கூட்டத்தின் புதுப் பயணம், எங்கும் நிறையும் இனிய இசை, நுரைக்கும் காபியின் புதிய மணம்… இவற்றுடன் இனி தினந்தோறும் உங்கள் அதிகாலையை அலங்கரிக்கப்போகிறது ‘தி இந்து’ நாளிதழின் தமிழ்க் கோலம்.

இந்து குடும்பத்தின் கனவு மட்டும் அல்ல இது; தமிழ்ச் சமூகத்தின் நெடுநாள் கனவு என்பதை நாங்கள் அறிவோம். இன்று அதை நனவாக்கியுள்ளோம்.

தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஓர் ஆண்டு 1878.

சுதேசிகளின் அரசியல் எழுச்சியை ஒடுக்கும் நடவடிக்கைகள் அரங்கேறிய காலகட்டம் அது. ஆங்கிலேய அரசுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் உள்நாட்டுப் பத்திரிகைகளை மொத்தமாக முடக்கிப்போடும் வகையில் அடக்குமுறைச் சட்டம் கொண்டுவந்தார் வைஸ்ராய் லிட்டன்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி நாற்காலியில் ஒரு தமிழர் – டி. முத்துசுவாமி ஐயர் – அமரும் வாய்ப்புக்கு எதிராகப் பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன ஆங்கிலேயர் ஆதரவுப் பத்திரிகைகள். மோசமான இந்தச் சூழலை எதிர்த்து, ஆறு இளம் தமிழர்கள் ஏகப்பட்ட நெருக்கடிகளுக்கு நடுவே ஓர் ஆங்கிலப் பத்திரிகையைத் தொடங்கினர். இப்படித்தான் பிறந்தது ‘தி இந்து’.

‘‘பத்திரிகை என்பது மக்களின் கருத்தை வெளிப்படுத்தும் சாதனம் மட்டும் அல்ல. சூழலுக்கு ஏற்ப மக்களின் கருத்துகளைச் செழுமைப்படுத்தி உருவாக்குவதும் ஆகும். அந்தத் தேவையைப் பூர்த்திசெய்யவே நாங்கள் களம் இறங்குகிறோம்.’’

‘‘நியாயமும் நீதியுமே எங்களை வழிநடத்துவதற்காக நாங்கள் நிர்ணயித்துக்கொண்டிருக்கும் எளிய கோட்பாடுகள்.’’

‘‘நம் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும். மதச்சார்பின்மையை உறுதியாகப் பின்பற்ற வேண்டும். விவேகமான எல்லாக் கருத்துகளுக்கும், நியாயமான அனைத்துத் தரப்பு விமர்சனங்களுக்கும் பாரபட்சமின்றி இடம் அளிக்க வேண்டும். ஆள்பவர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை உருவாக்க வேண்டும். இவையே எங்கள் லட்சியம்.’’

-‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் முதல் நாள் தலையங்கத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் இவை. ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கும் இந்த வாசகங்கள் பொருந்தும்.

உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழில், எம் சொந்த மொழியில், கால் பதிக்கும்போது, எம் முன்னே நிற்கும் பெரிய எதிர்பார்ப்புகளையும் சவால்களையும் நாங்கள் உணர்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுக் கலாச்சார வளம் மிக்க ஒரு சமூகம் மொழி, இனம் சார்ந்து எதிர்கொள்ளும் சவால்களையும் தமிழ் ஊடகங்கள் முன் இருக்கும் பெரும் பொறுப்புகளையும் நாங்கள் முழுமையாக உணர்கிறோம்.

இன்றைக்குப் பூமிப் பந்தின் எந்த மூலைக்குப் போனாலும், அங்கே தமிழர்களின் கம்பீரக் குரலைக் கேட்க முடிகிறது. தம் அசாத்திய அறிவாலும் உழைப்பாலும் முன்னேறிக்கொண்டேயிருக்கும் தமிழர்கள் பதிக்கும் சாதனைச் சுவடுகளைப் பார்க்க முடிகிறது.

காலத்துக்கு ஏற்ப ரசனைகளும் மாறுகின்றன. வாசிப்பின் தரம் இன்னும் மேலே செல்கிறது. உங்கள் தேவைகளை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம். ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் அத்தனை சிறப்பியல்புகளையும் நீங்கள் தமிழிலும் எதிர்பார்க்கலாம். அதேசமயம், ஒரு தேசிய நாளிதழாக ஆங்கில நாளேடு செயல்படும் களத்திலிருந்து இந்தத் தமிழ் நாளிதழின் முகமும் களமும் மாறுபடும். இந்தப் புதிய நாளிதழ், உலகைத் தமிழ் மண்ணின் கண் கொண்டே பார்க்கும்.

உள்ளூர்ச் செய்திகளில் தொடங்கி உலகச் செய்திகள்வரை தருவதோடு இலக்கியம் முதல் சினிமாவரை தமிழ் மக்களின் ருசி அறிந்து இந்த நாளிதழ் விருந்து படைக்கும். நவீன வாழ்வை எதிர்கொள்ள வாழ்வியல் வழிகாட்டுவதோடு மன அமைதிக்கு ஆன்மிக ஆறுதலும் தரும். பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்களுக்கு எனப் பிரத்தியேக இணைப்புகளும் உடன் வரும். அதேசமயம், எவை எல்லாம் உங்கள் குடும்பத்துக்குத் தேவை என்பதோடு, எவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையும் எங்களின் நீண்ட அனுபவம் கற்றுக்கொடுத்திருக்கிறது. அநாகரிகமான அந்தரங்கச் செய்திகள் ஒருபோதும் இதில் இடம்பெறாது. சுருக்கமாக, ஒவ்வொரு புதிய நாளையும் தொடங்கும்போது, நம்பிக்கையைத் தாங்கிவரும் உங்கள் குடும்ப நாளிதழாக இது திகழும்.

முக்கியமாக, வாசகர்களாகிய உங்களுடைய பங்கேற்புக்கும் விசாலமான களம் இங்கே காத்திருக்கிறது. கருத்துச் சித்திரம் வரையும் பொறுப்பை இன்று முதல் உங்களிடமே ஒப்படைக்கிறோம்.

இனி, தரம் விரும்பும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் மேடையாக உங்கள் ‘தி இந்து’ தமிழ் திகழும்… என்றென்றும்!

Keywords: தி இந்து, தமிழ் நாளிதழ், தலையங்கம்
Topics: சமூகம்| இந்தியா| தமிழ்நாடு|

“உங்களுக்கு தெரியுமா உத்தவ கீதை ” ?

உத்தவ கீதை
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் 
செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள்புரிந்தவர், உத்தவர். இவர் தனது 
வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.
 துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், 
உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், உத்தவரே, இந்த அவதாரத்தில்பலர் என்னிடம் பல
 வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே
 கேட்டதில்லை. ஏதாவதுகேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது 
நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்கநினைக்கிறேன் 
என்றார்.
 தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின்
செயல்களைக்கவனித்து வந்த உத்தவருக்கு… சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக 
இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராகஇருந்தன. அவற்றுக்கான காரண,
 காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார். 
பெருமானே! நீ வாழச் சொன்ன வழிவேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ 
நடத்திய மகாபாரத நாடகத்தில்… நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில்,
எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை 
அறிய ஆவலாக இருக்கிறேன்நிறைவேற்றுவாயா? என்றார் உத்தவர்.
உத்தவரே! அன்று குரு÷க்ஷத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, பகவத்
கீதை. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், உத்தவ கீதை. அதற்காகவே
உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன்.தயங்காமல் கேளுங்கள் என்றான் 
பரந்தாமன்
 உத்தவர் கேட்க ஆரம்பித்தார்; கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்
உண்மையான நண்பன் யார்?
நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லாமலேயே வந்து 
உதவி செய்பவனே உற்ற நண்பன்என்றான் கண்ணன். 
கிருஷ்ணா! நீ பாண்டவர்களின்
உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாகநம்பினார்கள்.
நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ… உற்ற 
நண்பன் யார் என்பதற்கு நீஅளித்த விளக்கத்தின்படி… முன்னதாகவே சென்று, 
தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் ஏன்அப்படிச் 
செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம்
அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். 
அதையும் நீ செய்யவில்லை.
 தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டைஇழந்தான்;
 தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை 
விட்டிருக்கலாம். தம்பிகளை அவன்பயணம் வைத்த போதாவது, நீ சபைக்குள் 
நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.
 திரௌபதிஅதிர்ஷ்டம் 
மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் 
தருகிறேன் என்று சவால்விட்டான் துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக
சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச்சாதகமாக விழும்படி
செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.
மாறாக, திரவுபதியின் துகிலை 
உரித்து, அவளின்மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, துகில் 
தந்தேன். திரவுபதி மானம் காத்தேன் என்று மார்தட்டிக்கொண்டாய். 
மாற்றான் 
ஒருவன், குலமகள் சிகையைக் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் 
முன்னிலையில்,அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன 
இருக்கிறது? 
எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா 
ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா? என்றுகண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர். 
இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம்
அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே 
கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர். 
பகவான்சிரித்தார். உத்தவரே… விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது 
தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம்தருமனுக்கு இல்லை. அதனால்
தான் தருமன் தோற்றான் என்றான் கண்ணன். 
உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க,கண்ணன் தொடர்ந்தான். துரியோதனனுக்கு
சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான
ஆஸ்தியும் இருந்தது. பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை 
உருட்டிச் சூதாடுவார் என்றார்துரியோதனன். அது விவேகம். 
தருமனும் அது போலவே விவேகத்துடன் செயல்பட்டு, நானும் பணயம் வைக்கிறேன்.ஆனால், 
என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான் என்று 
சொல்லியிருக்கலாமே?
சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் 
எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக்காய்களில் போடத்தான் முடியுமா? 
அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைகளை என்னால்தான் போட முடியாதா?போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் 
என்பதையாவது மன்னித்து விடலாம்.
ஆனால், அவன் விவேகமில்லாமல் 
மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான். ஐயோ…. விதிவசத்தால் சூதாட
ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் 
தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும்சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் 
இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்; என்னை மண்டபத்துக்குள் 
வரமுடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென 
என்னிடமே வேண்டிக்கொண்டான்.யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் 
கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டுநின்றேன்.
பீமனையும், அர்ஜுனனையும், நகுல சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, 
அவர்களும் துரியோதனனைத்திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து
கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிடமறந்துவிட்டார்களே! 
அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரவுபதியின் 
சிகையைப் பிடித்தபோது,அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும்
தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்துகொண்டிருந்தாளே 
ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! 
நல்லவேளை… துச்சாதனன் துகிலுரித்தபோதும்
தனது பலத்தால்போராடாமல், ஹரி…. ஹரி… அபயம் கிருஷ்ணா… அபயம் எனக்
குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக்காப்பாற்ற அப்போதுதான்
எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் 
காக்க வழிசெய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு? என்று 
பதிலளித்தான் கண்ணன்.
அருமையான விளக்கம் கண்ணா!அசந்துவிட்டேன். ஆனால் ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி
 கேட்கிறேன் என்றார் உத்தவர். கேள் என்றான்கண்ணன். 
அப்படியானால்,கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, 
ஆபத்துகளில் உன்அடியவர்களுக்கு உதவ வரமாட்டாயா? புன்னகைத்தான் 
கண்ணன். உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படிஅமைகிறது. நான்
அதை நடத்துவதும் இல்லை. அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் சாட்சி
பூதம்.நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான்
தெய்வ தர்மம் என்றான். 
நன்றாயிருக்கிறதுகிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் 
தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள்தவறுகளைத் தொடர்ந்து
செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக்
கொண்டேஇருக்க வேண்டும். அப்படித்தானே? என்றார் உத்தவர். 
உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாகஉணர்ந்து 
பாருங்கள்.நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, 
உங்களால் தவறுகளையோ தீவினைகளையோநிச்சயமாகச் செய்ய முடியாது. 
அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச்
செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள்
நிகழ்வதும் அப்போதுதான்.
எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது
அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாகஎப்போதும், எல்லோருடனும் இருப்பவன் 
என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக
முடிந்திருக்கும் என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா… எத்தனைஆழமான 
தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்! பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை 
செய்வதும், அவனை உதவிக்குஅழைக்கும் ஓர் உணர்வுதானே! அவனின்றி ஓர் 
அணுவும் அசையாது என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சிபூதமாக அருகில்
 நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் 
செயலாற்ற முடியும்?
 இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு 
 உபதேசித்தான்.  
source:::: input from a friend of mine
natarajan