
source:::: Google”s Doodle on MOTHERS DAY ….This Morning…
natarajan

மனைவி ஹிரா மணியுடன் வெற்றிச் சின்னத்தை காட்டும் சியாம் சரண் நேகி.
இமாசலப் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தின் மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை வாக்களித்தார் 97 வயது சியாம் சரண் நேகி. இந்தத் தேர்தலில் இந்தத் தொகுதியைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடியோ ராகுல் காந்தியோ அர்விந்த் கேஜ்ரிவாலோ கதாநாயகன் அல்ல. நேகிதான். காரணம் சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தல் முதல் ஒன்றுவிடாமல் தவறாமல் வாக்களித்து வருகிறார் நேகி.
ஜனநாயகத்தின் உண்மை யான மன்னர்கள் மக்கள்தான் என்பதை நிரூபிக்கும் கோடானுகோடி இந்தியர்களில் நேகி முதன்மையானவர். தான் வசிக்கும் கல்பா என்ற இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வாக்குச் சாவடிக்கு வந்தபோது அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. வெண்ணிற முடியும் சுருக்கம் விழுந்த சருமங்களும் இந்திய வாக்காளர்களில் அவர்தான் பீஷ்ம பிதாமகர் என்பதைச் சொல்லாமல் சொல்லின. உடன் அவருடைய 87 வயது மனைவி ஹிரா மணியும் வந்தார்.
இமாசல மாநிலத்துக்கே உரிய பாரம்பரிய தொப்பி அணிந்திருந்த நேகி வாக்களித்துவிட்டு மை தோய்ந்த கையை தொலைக்காட்சி கேமராக்களுக்குக் காட்டினார்.
அதிகம் கேள்விப்பட்டிராத ஒரு கிராமத்தைச் சேர்ந்த பள்ளிக்கூட ஆசிரியர் நேகி, நவ இந்தியாவை உருவாக்கும் சிற்பிகளில் ஒருவரானதுதான் சுதந்திர இந்தியாவின் வரலாறு.
1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கடுமையான குளிரில் பாதையெல்லாம் பனிபெய்து மூடியிருக்க நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் முதல் வாக்காளராக வாக்களித்தவர்தான் சியாம் சரண் நேகி. அப்போது அவருக்கு வயது 34. 1952 பொதுத் தேர்தல் முதல் கட்டமாக 1951-லேயே இமாசலத்தில் தொடங்கியது. பிற மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது இமாசலத்தில் கடும் குளிர்காலமாக இருக்கும் என்பதாலும் அது வேட்பாளர் களுக்கும் வாக்குச்சாவடி அதிகாரி களுக்கும் பெரிய இடை யூறாக இருக்கும் என்பதாலும் தேர்தல் அங்கு முன்கூட்டியே நடந்தது.
அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நாளை நேகி மறக்கவில்லை. சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் முதல் வாக்காளராக வாக்கைப் பதிவுசெய்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியும் பெருமையும் கர்வமும் நேகிக்கு ஏற்பட்டது. அதை இப்போதும் அவருடைய முகத்தில் பார்க்க முடிகிறது.
ஜனநாயகத்தில் உறுதியான நம்பிக்கையுள்ள நேகி, ஒரு தேர்தலிலும் வாக்களிக்காமல் இருந்ததில்லை. வயோதிகம் வளைத்துவிட்ட முதுகை, வாலிப உற்சாகத்தோடு நிமிர்த்தி, கையில் கோலுடன் நடந்து வருகிறார் நேகி. “மழையோ, பனியோ எது வந்தாலும் வாக்களிக்கத் தவறி யதே இல்லை” என்று கூறுகிறார்.
வாக்குச் சாவடிக்கு காலை யிலேயே வந்த வாக்காளர்களில் நேகியும் அவருடைய மனைவியும் ஒருவர். வாக்களித்த பிறகு நிருபர் களைச் சந்தித்த நேகி, “இந்த முறை யும் தவறாமல் என்னுடைய மதிப்பு மிக்க வாக்கைச் செலுத்தி விட்டேன்” என்று அறிவித்தார்.
Pl also see the following link …
https://natarajank.com/2014/04/23/an-inspiring-video-must-watch/
source:::: The Hindu…Tamil
natarajan
It is not in English, but when you touch the heart, it doesn’t matter.
source:::: You Tube & You gottobekidding blog site
natarajan
மிருதங்க வித்வான் ஒருவர் சிறு பையனாக இருந்தபோது பெரியவாளுடைய சந்நிதியில் நடந்த சங்கீத கச்சேரிக்கு தன் அப்பாவோடு போனார். அவருடைய அப்பாவும் மிருதங்க வித்வானானதால், அன்று மகனை மிருதங்கம் வாசிக்க
அமர்த்திவிட்டார். இரவு எல்லாருக்கும் ப்ரஸாதம் வழங்கினார்கள். அப்போது பெரியவா அந்தப் பையனை மட்டும் அழைத்து ஒரு சிவப்புப் பட்டு வழங்கி ஆசிர்வதித்தார்.
பல வர்ஷங்கள் கழித்து அந்தப் பையன் வானொலி நிலையத்தில் பணி புரிந்துவந்தார். அப்போது வானொலி நிலைய இயக்குனரோடு பெரியவாளை தர்சனம் பண்ணப் போனார். போகும்போது ஞாபகமாக அந்த சிவப்புப்பட்டையும்
எடுத்துக் கொண்டு போனார். பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு “இந்த பட்டு வஸ்த்ரம் பெரியவாதான் அனுக்ரகம் பண்ணிக் குடுத்தேள் …” என்றதும், “ஆமா….அப்போ ஒனக்கு ஒம்பது வயஸ்..” என்று சொன்னதும், ஆடிப்போய்
விட்டார்!
45 வர்ஷங்களுக்கு முந்தி நடந்ததை, ஏதோ நேற்று நடந்த மாதிரி பெரியவா சொன்னார். ஞானிகள் காலம், இடம் இரண்டையும் கடந்தவர்கள் இல்லையா?
அதே பக்தர் வீட்டில் பெரியவாளுடைய படங்கள் விதவிதமான போஸ்களில் மாட்டியிருந்தார். சொந்த ஊரை விட்டு தஞ்சாவூரில் சிலகாலம் வசிக்க வேண்டிய சூழ்நிலை! அந்த வீட்டில் பெரியவாளுடையது ஒரு படம் கூட இல்லை! மனசுக்குள் ஏதோ தவிப்பு! சஞ்சலம் ! அரிசி வாங்குவதற்காக கடைக்குப் போனார். புது ஊர்!
மாதிரிக்காக ஒரு கிலோ அரிசி வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். அவர் குடுத்த பேப்பர் பை ரெண்டு நாட்களாக வீட்டில் கிடந்தது. மூன்றாவது நாள் அதை குப்பையில் போடுவதற்காக எடுத்தால்……..அந்தப்பையின் மேல் பக்கத்தில் “இதோ! வந்துட்டேன் பாத்தியா!..” என்று அழகாக சிரித்துக்கொண்டு பெரியவா! பக்தருக்கு நன்றியில் அழுவதைத்தவிர என்ன பண்ண முடியும்?
————————————————————————————
உண்மையான குழந்தை உள்ளத்தோடு தேடினால், பெரியவா நிச்சயம் கிடைப்பா!
———————————————————————————–
source::::: http://www.periva.proboards.com
natarajan