“நீங்கள் ஆணையிட்டால் ….” ” நடக்கட்டும் …நடக்கட்டும் …” !!!

 

1956 – ஜனவரி

இரண்டு இளைஞர்கள் – ஆங்கிலக் கல்வியுடன் நாட்டியக் கலையையும், கர்நாடக இசையையும் கசடறக் கற்றவர்கள். ஒருவர் பரத நாட்டியத்திலும், மற்றவர் கர்நாடக இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர். பல்கலைக்கழக மேற்படிப்பு படித்து முடித்ததும், படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும் வரை, சென்னையிலிருக்கும் தங்கள் நாட்டியக் கலா நிலையத்தில் தங்கி இருந்தனர். அங்கு பாடங்கள் நடத்துவதில் உதவியாக இருந்துகொண்டு, எதிர்காலத்தைக் குறித்த கவலையுடன், நாட்களை நடனமும் கர்நாடக இசையும் பயில்வதிலும், கற்றுக் கொடுப்பதிலும் கழித்துக் கொண்டிருந்தனர்.

இவ்விருவரில் ஒரு இளைஞர் வேதவித்தகரின் மகன். சிறுவயதிலிருந்தே மஹாபெரியவர் மீது மரியாதையும் பக்தியும் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஒரு நாள் காலை, “புறப்படு; நாம் இருவரும் காஞ்சிபுரம் சென்று மஹாபெரியவரைத் தரிசித்து வருவோம். அவருக்குப் பாடலில் உள்ள அளவுக்கு ஆடலில் அவ்வளவு விருப்பம் உண்டா என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும், நீ நடனமாடுவதற்கேற்ற வேஷ்டியும் மேலாடையும் எடுத்து வா…. அவர் அருளிருந்தால், அவர் முன் நீ ஆடும் பாக்யம் உனக்குக் கிடைக்கும். நீ ஆடுவதற்கு நான் பாடும் பாக்யமும் எனக்குக் கிடைக்கும்” என்றார்.

இருவரும் பேருந்தில் காஞ்சியை அடைந்தனர். மஹாபெரியவர் அப்போது ஓரிக்கையில் இருப்பதாகத் தெரிந்து, ஓரிக்கை அடைந்தனர். அங்கு மஹாபெரியவர் ஒரு சிறு சிவன் கோவில் திண்ணையில் அமர்ந்திருந்தார். அந்தச் சிறிய இடத்தில் அவரைக் காண, அருள் பெற பக்தர்கள் கூடியிருந்தனர்.

நம் இளைஞர்கள் இருவரும் மஹாபெரியவரை நெருங்கி, வணங்கி எழுந்தனர். மஹாபெரியவர் அன்று மெளனம் கடைப்பிடிக்கிறார் என்று அறிந்தனர். வெகு சில சைகைகள் மூலமாக மிக முக்யமானவைகளை மட்டும் மற்றவருக்குத் தெரிவிக்கும் விதமான மெளனத்தில் இருந்தார்.

கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்ற நம் இளைஞர், மஹா பெரியவரிடம் நெருங்கி, “என் நண்பன் பரதநாட்டியம் கற்றிருக்கிறார். தங்கள் முன்னிலையில் ஆட வேண்டுமென்று விருப்பம்… நீங்கள் ஆணையிட்டால்….” என்று சொல்லி முடிக்கு முன்னாக, பெரியவர், “நடக்கட்டும்” என்பதற்கான சைகையைச் செய்ய, நம் இளைஞருக்கு ஒரே மகிழ்ச்சி. தன் நண்பனிடம் வந்து, “சீக்கிரம் நடனமாடுவதற்கேற்ப உடைமாற்றி வா… பெரியவர் ஆக்ஞை தந்துள்ளார்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற இரண்டாவது இளைஞர், அப்பொழுது தயாராகவே இருந்தார்.

ஒருவர் பாட, மற்றவர், “நடனம் ஆடினார்” என்ற பாடலுக்கு ஆடத் தொடங்கினார்.

அந்தச் சிறிய இடத்தில், பெரியவர் உட்கார்ந்திருந்த இடம் போக, மற்ற பக்தர்கள் அமர்ந்திருந்த இடமும் போக, மீதமுள்ள மிகச் சிறிய இடத்தில், நடராஜரின் மேல் அமைந்திருந்த அந்தப் பாடலுக்கு, “குதித்த மெட்டு” என்றழைக்கப்படும் ஜதியுடன் ஆடல் ஆரம்பித்தது. இந்த ஜதியுடன் காலைத் தூக்கி நடராஜர் அபிநயம் பிடிக்கவும், அவரது, கால்விரல்கள் மஹாபெரியவருக்கு மிக அருகில் வரவேண்டியதாயிற்று.

அருகிலிருந்த மற்ற பக்தர்கள், “நிறுத்து, நிறுத்து, அபசாரம், அபசாரம்” என்று கூவ, மஹா பெரியவரோ, தன் திருக்கைகளில் ஒன்றால், மற்ற பக்தர்களை நோக்கி “நிறுத்துங்கள்” என்பதாகவும், நம் இளைஞரைப் பார்த்து, “ஆடுவதைத் தொடரலாம்” என்பதாகவும் ஒரே நேரத்தில் அபிநயம் செய்தார்.

இளைஞர் ஆட, மற்றவர் பாட, அற்புதமான நடனம் பெரியவர் முன் அரங்கேறியது.

இருவரும் மஹாபெரியவரிடம் ஆசிபெற்று சென்னை வந்து சேர்ந்தனர்.

நடனமாடிய இளைஞர், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் மற்றும் பரோடா எம்.எஸ்.பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்து, 1992 ஆம் வருடம் பணி நிறைவு Head of the Faculty of Performing Arts of M.S. University, Baroda பெற்றார்.

அவருக்கு 1993 வருடம் சங்கீத நாடக அகாடமி விருதும், 2008 ஆம் வருடம் காளிதாஸ் ஸம்மான் எனப்படும் விருதும், 2011 ஆம் வருடம் பத்ம பூஷன் விருதும் கிடைத்தன..

கடந்த 60 ஆண்டுகளாகப் பல உலக மேடைகளிலும் தான் ஆடியதும், விருதுகள் பெற்றதும், தனது 80ஆவது வயதிலும், பரதநாட்யம் ஆடுவதும், அந்த ஒரு மதியம் மஹாபெரியவர் “தொடர்ந்து ஆடு” என்று உத்தரவு அளித்ததின் விளைவே என்று மிக அடக்கத்துடன் கூறும் அந்த இளைஞர் பத்மபூஷன் ஸி.வி.சந்த்ரசேகர் அவர்களே.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

Read more: http://periva.proboards.com/

Natarajan

Message For the Day…” Mind is Like Water and it Needs to be Diverted Towards Higher Realms…”

Mind is present inside the body amidst the five sheaths (Pancha Koshas). The five sheaths are gross body sheath (Annamaya Kosha), Pranamaya Kosha (pertaining to the life force), Manomaya Kosha (mind sheath), Vijnanamaya Kosha (intellect sheath), and Anandamaya Kosha (Bliss sheath). Above the mind sheath is Prana (life force) and below it is discrimination power. Both of these are related to Fire. Mind is related to Water. The Moon is the presiding deity for the Mind. Hence coolness is its nature. Because of the presence of life force above and discrimination power below, the Mind melts and gets transformed into water. Water’s nature is to flow towards a lower level. It does not have the nature of flowing upwards. Hence the mind always wanders around the sensory and worldly pleasures. It cannot voyage towards the pure and higher stages. To divert the mind towards higher realms, spirituality is of utmost necessity.

Sathya Sai Baba

” காலத்தின் தூண்கள் கோவில் தேர்கள்…”

 

பொங்கியெழும் ஜனத்திரள் சமுத்திரத்தின் நடுவே, மனிதத் தலைகளைத் தாண்டி பிரம்மாண்டமான கலைப்பொருளாக அசைந்தாடி வரும் தேரைக் கண்டு ரசிக்கும் கண்கள் பாக்கியம் செய்தவை. கலாச்சாரம், பக்தி ஆகியவற்றுடன் பிரமிப்பூட்டும் கலைநுட்பங்களைக் கொண்டவை கோயில் தேர்கள்.

தமிழகமெங்கும் உள்ள கோயில்களில் ஆயிரக் கணக்கான தேர்கள் உள்ளன. மாசிமகம், ஆடிப்பூரம், பங்குனி மாதம், தைப் பூசம், சித்திரை மாதம், மார்கழி உற்சவம் போன்ற பல நிகழ்ச்சிகளில் நான்கு வீதிகளிலும் தேரோட்டங்கள் நடைபெறுவது பல ஊர்களில் இன்றும் வழக்கமாக உள்ளது. பிரம்மாண்டமான திருவாரூர் ஆழித்தேர், கும்பகோணம் சாரங்க பாணி கோயில் தேர், வில்லிபுத்தூர் பெருமாள் கோயில் தேர் போன்ற பல தேர்களை வடகயிற்றால் இழுத்துச் செல்பவர்களின் முகத்தில்தான் எத்தனைப் பிரகாசம்!

பெருமாள், சிவன் கோயிலுக்கு ஏற்ப பத்து தாளம் எனும் தசதாள அளவிலான தேர்கள், நவதாளம் எனப்படும் ஒன்பது தாளத்தில் செய்யப்பட்ட அம்மன் கோயில் தேர்கள், பஞ்ச தாளம் எனப்படும் ஐந்து தாளத்தில் குறுகிய வடிவில் செய்யப்படும் விநாயகர் கோயில் தேர்கள் என்று விதவிதமான தேர்களைப் பவனிவரச் செய்து இன்றும் அழகுபார்ப்பவர்கள் தமிழர்கள். கோயில் தேர்களுக்கென்றே படிகளுடன் கூடிய தேரேற்றுக் கூடங்களும் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளன.

அலங்கரிக்கும் அதிசயங்கள்

தேரைச் சுற்றி நான்கு புறமும் ஆடும் அசைந்தாடிகள், நான்கு முகப்பிலும் வாச மாலைகள், சுவாமிக்கு மேல் விதான ஓவியங்கள், தேர்களின் எட்டுப் புறமும் பட்டங்கள், சிவ வைஷ்ணவக் கொடிகள், எல்லாவற்றுக்கும் மேலாகக் கூம்பிய வடிவில் கலசம் போன்ற துணிகளால் ஆன கலங்கரி ஓவியத் துணிகள், தேரை இழுத்துச் செல்வது போன்ற வடிவில் மூங்கிலால் உருவாக்கப்பட்ட குதிரைகள் என்று தேருக்குத் தெய்வீகக் களை சேர்க்கும் விஷயங்கள் பார்க்கத் திகட்டாதவை.

தேர்களின் நான்கு வெளிப்புறத்திலும் சித்திர வேலைப்பாடுகள் அழகு சேர்க்கும். வைணவத் தேராக இருந்தால் பெருமாளின் தசாவதாரங்களைக் காட்டும் மரச் சிற்பங்களும், சிவன் கோயில் தேர்களாக இருந்தால் சிவபுராணக் கதைகள், சிவத்தொண்டர்களான 63 நாயன்மார்களின் கதைகளைச் சித்தரிக்கும் அழகிய மரச் சிற்பங்கள் வடிவமைக்கப் பட்டிருக்கும். அவற்றைக் காணும் வெளிநாட்டுப் பயணிகளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிவதைப் பார்ப்பதே தனி அழகு.

பிரான்ஸைப் பின்பற்றலாமே!

தேரோட்டம் முடிந்த பிறகு, தேரின் அத்தனை அலங்காரங்களையும் பிரித்து, இரும்புத் தகடுகளால் தேரை முழுவதுமாக மறைத்துப் பயணிகள் பார்க்க இயலாமல் கோயில் அதிகாரிகள் மூடிவிடுகின்றனர். இதனால் தோ்த் திருவிழா முடிந்த மற்ற நாட்களில், இதனைப் பார்க்க வரும் பயணிகளால் அவற்றின் கலை அழகைக் காண இயலாமல் போய்விடுகிறது.

100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த கலைப் பொருட்கள், கட்டிடங்கள் போன்றவற்றை பிரான்ஸ் நாட்டினர் திறந்தவெளி அருங் காட்சியகம் எனும் முறையில் இன்றும் பாதுகாத்துவருகின்றனர்.

தமிழகத்திலோ 350 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த 100-க்கும் மேற்பட்ட தேர்கள் சிதிலம் அடைந்தும், கேட்பாரற்றுக் கிடப்பதும் வேதனை யளிக்கிறது. இவற்றைப் புத்தாக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல், அழகிய நிலையில் உள்ள தேர்களை, தேரோட்டத்துக்குப் பிறகு மக்கள் அவற்றின் கலை அழகைக் கண்டுகளிக்கும்படியாகத் திறந்தவெளி அருங்காட்சியமாக வைக்கலாம். ஏனெனில், தேர் ஓடினால் மட்டுமல்ல, நின்றாலும் அழகுதான்!

– தேனுகா, கலை விமர்சகர், தொடர்புக்கு: dhenuga.srinivasan@gmail.com

Message For the Day…” Know That YOU are the Spark of the Divine…”

Lord Krishna said, “Don’t conduct yourself like a beast, not even like a human being. Know that you are the spark of the Divine. You are ancient, eternal and essentially Divine. Mamaivamsho Jeeva Loke Jeeva Bhoota Sanatanaha.” Being the sparks of Divine, you must have the sacred qualities of Truth, Righteousness, Peace, Love and Nonviolence. Instead of behaving in accordance with these noble virtues, people submit themselves to evil qualities like lust, greed, anger, jealousy, hatred and avarice which does not befit a human being. These changes are due to one’s food habits and behavior. The food you take and the water you drink must be pure, and timely. Lead a well regulated human life and realise the Divine within you.

Sathya Sai Baba

” இதை மாற்றினால் போதும் …”

இதை மாற்றினால் போதும்!

ஒரு பக்கம் சாஸ்திர நம்பிக்கையுள்ள கட்டுப் பெட்டிகள், மறுபக்கம் நவீனக் கல்வி படித்தவர்கள் என்று பிரிந்திருப்பதே தவறு. சாஸ்திரத்தில் நம்பிக்கை மட்டுமில்லாமல், நாமே எல்லா சாஸ்திரங்களையும், வித்யைகளையும் படித்தால் கட்டுப்பெட்டிகளாக இருக்க வேண்டியதேயில்லை. அதனால் அவற்றையும் படித்து, மாடர்ன் ஸயன்ஸ்களையும் படித்து, இந்த ஸயன்ஸிலும் நிறைய அம்சங்கள் நம் சாஸ்திரங்களில் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதே மாதிரி ஸயன்ஸ்காரர்களும் சாஸ்திரங்களைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. இதற்காக பகவானைப் பிரார்த்தனை பண்ணுகிறேன். ஒன்றுக்கொன்று ‘காம்ப்ளிமென்டரி’யாக பழசும் புதிசும் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டும்.

நானும் சரி, மற்றவர்களும் சரி எவ்வளவு பேசினாலும் லெக்சரால் கல்சர் (கலாசாரம்) வளராது. படிப்பதாலும் வளராது. நமக்கென்று காரியத்தில் பின்னி வைத்திருக்கிற அநுஷ்டானங்களைப் பண்ணினால்தான் சித்த சுத்தி ஏற்பட்டு, நாம் படிப்பதில் ஸாரம் எது என்று புரிந்துகொண்டு அதைக் கிரஹித்துக் கொண்டு கல்சரை வளர்க்க முடியும். பிற தேச விஷயங்களில் எதை எடுத்துக் கொள்வது என்று பரிசீலித்து முடிவு செய்வதற்கு அஸ்திவாரமாக முதலில் நம் சாஸ்திரப்படி வாழ முயற்சி பண்ண வேண்டும்.

இக்காலத்தில் ஆஹாரம், விஹாரம், வாஹனம் எல்லாமே மாறித்தான் விட்டது. அத்தனையும் நம் பண்பாட்டுப்படி மாற்ற முடியுமா என்று மலைப்பாயிருந்தாலும், கொஞ்சம் strain பண்ணிக் கொண்டாவது (சிரமப்படுத்திக் கொண்டாவது) சிலதையாவது மாற்ற ஆரம்பிக்கத்தான் வேண்டும். நம் மதத்துக்கு ஆதாரமான ஆசாரங்கள், ஆஹார சுத்தி முதலியவை, பழக்கத்தில் இருந்தால்தான் போஷிக்கும். முதலில் லெக்சராகவும் அப்புறம் லைப்ரரியில் புஸ்தகமாகவும் மட்டும் இருந்தால் வெறும் வறட்டுப் பெருமை தவிர பிரயோஜனமில்லை.

நான் சொல்கிறபடி மாறுவது ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. ஒரே ஒரு அம்சத்தை மட்டும் நாம் பிடிவாதமாக மாற்றிக் கொண்டு விட்டால் இது ஸாத்யம்தான். ‘பணம்தான் பிரதானம்’ என்பதே அந்த அம்சம். பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடுதான் ஆசாரங்கள், வித்யா ஞானம் எல்லாமே போய்விட்டன. நம் தேசத்தில் பணம் முக்யமாய் இருந்ததேயில்லை. லௌகிக வாழ்க்கையை ஆத்ம அபிவிருத்திக்கு உபாயமாக மட்டும் வைத்துக் கொள்வதுதான் நம்முடைய தேசாசாரம்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Source::::Input from a friend of mine

Natarajan

Message For the Day…” Strive to Cultivate The Lasting Bliss of Divine Love …”

Devotion these days appears more as a way of spending one’s time rather than as the royal road to the eternal mansion of the Divine. You need not make much effort to grow grass. But to raise a useful crop you have to labour hard. Likewise, it is no great achievement to experience the trivial and transient pleasures of mundane existence; it is like growing grass. You must strive to cultivate the nectarous and lasting bliss of divine Love. Those who aspire for such love are not easy to find. All appear as devotees. But the one who has experienced the Divine Principle will not go after sensuous pleasures.

Sathya Sai Baba

” Nandi Baba”…A Regular Visitor to a Shop !!!

 

Twenty-five years ago, a bull walked into the Lucknow Chikan Shop, a cloth store tucked away in the dusty folds of Varanasi. It stayed on for half a day. Paramanand Chhugani, the shop owner, rubbed his eyes and scratched his head.

The next day, the bull returned and stayed put till the lights went out at 9 pm. Chhugani’s surprise took on the form of devotion. A devotee of Lord Shiva, the supreme deity of Varanasi, Chhugani decided that the bull’s visit was a sign from the Lord. By the third day, the bull had a name—Nandi Baba. “Outside every Shiva temple there sits Nandi (bull). I am a bhakt of Shivji so it was natural to name him Nandi Baba,” Chhugani told Open. “I am overwhelmed by his presence in my shop.”

The first Nandi Baba died. But other bulls followed, all named ‘Nandi Baba’ by Chhugani. The current incumbent is Nandi Baba the Fourth. Chhugani’s business has expanded since his first bovine visitor. In 2003, he opened a second shop, Lucknow Chikan Centre. It is mandatory for employees of both shops to pay obeisance to Nandi Baba IV.

Chhugani saw a divine hand even in the inauguration of his second shop. He spotted a Nandi in the vicinity and realised he had found his chief guest. “I kept the door open and waited,” Chhugani said. “Sure enough, Nandi walked into the shop. What’s more, it went straight to Shivji’s idol inside the shop. It looked at the idol for some time, then licked it. Afterwards it sat down at the foot of the idol. We couldn’t believe our eyes. Since then, Nandi Baba visits my shop every day.”

Nandi Baba is organised. It arrives at the shop at 9.30 am, except in the summer, when it waddles in half an hour later. The shutters are opened only after the bull reaches the shop. It walks in first and everyone else follows. Then, it walks up to the idol of Lord Shiva, licks it and sits down at its feet. The shop is cleaned even as Nandi Baba sits there. The area around the idol is cleaned only after it leaves the shop in the afternoon to stroll around the market. Chhugani ensures that it gets a sumptuous lunch. Post lunch, it returns and sits till closing time. Fearing that the bull will be inconvenienced if the shop is closed, Chhugani keeps it open every day of the year.

Shoppers in Varanasi are used to Nandi Baba’s presence. In fact, the shop has become a tourist attraction. People in Varanasi have anointed Nandi’s visits to the shop as a miracle. Sometimes, they flock there only to worship it. The Chhuganis do not turn back anyone who is keen to worship their Nandi Baba.

“We are blessed by Nandi Baba’s presence. How can we deprive other devotees of the pleasure of worshipping him?”

Source:::: oyepages.com

Natarajan

 

” வில்லேந்திய வேலன் …” !!!

வில்லேந்தியவன் வேலன்…

Muruga with Bow

Murugn with Bow Villudayanpatti

 

ஆன்மீக மாத இதழ் ஞான ஆலயத்தில் மே மாதம் (வைகாசி விசாகம் முருகன் சிறப்பிதழ்) வெளி வந்த ‘வில்லேந்தியவன் வேலனா? இராமனா? என்ற மிகச் சுவையான கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாலதி ஜெயராமன்.

வில்லேந்தியவன் வேலனா? இராமனா?
(திருமதி உமா பாலசுப்பிரமணியன்)

“சூலம், வாள், தண்டாயுதம், செவ்விய வேல், கோதண்டம் (வில்) இவைகளை அணிந்துள்ள தோள்களையும் அகன்ற அழகிய திருமார்பையும், தூய்மையுள்ள தாளில் அமைந்துள்ள தண்டையையும் நான் காணும்படி, அன்பு கொண்டுள்ள மயிலின் மீது ஏறி என் முன்னே வந்து திருவருள் புரிய வேண்டும்” என்று திருச்செந்தூர் திருப்புகழில் அருணகிரிநாதர் வேண்டுகிறார்.இப்பாடலிலிருந்து முருகன் கையில் கோதண்டம் இருக்கிறது என்று தெரிகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் மூத்த புலவராக இருந்த நக்கீரரும், திருமுருகாற்றுப் படையில் “வானோர் வணங்கும் வில் தானைத் தலைவா” எனப்
பாடியிருக்கிறார்.

இராமன் என்றாலே வில்லுடன் கூடிய கோதண்ட ராமன்தான் எல்லோர் நினைவுக்கும் வரும்.ஆனால் மேற்கண்ட பாடல்களிலிருந்து முருகனும் வில்லைப் பிடித்தவனாக வில்லேந்திய வேலவனாக விளங்குகிறானே! என்று வியக்கத் தோன்றுகிறது.

வேலவன் வில் ஏந்தியது ஏன்?

முருகன் எப்பொழுது வில்லை ஏந்தினான்? இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மனதில் எழுகின்றன. இந்தச் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் “சுப்பிரமண்ய பராக்ரமம்” என்ற பழம் தமிழ் நூலில், முருகன் வில்லேந்திய காரணம் சுவையாகக் கூறப்பட்டிருக்கிறது.

கங்கையாற்றின் கரையில் ‘சிருங்கிபேரி புரம்’ என்ற ஒரு ஊர். அங்கு வசித்து வந்த வேடர்களின் தலைவன் குகன் ஆவான்.

உருவிலும் உடையிலும், தொழிலிலும், உணவிலும் மென்மை என்பதே அறியாத குகன், அயோத்தியிலிருந்தே சக்ரவர்த்தித் திருமகனான மென்மையான இராமனிடம், அளவு கடந்த அன்பு கொண்டிருந்தான்.

தந்தைக்கு மரியாதை அளித்து, தாய் சொல்லைத் தட்டாது, வனவாசம் செல்லக் காடுகளைக் கடந்து, கங்கையைக் கடக்கும் தருவாயில், இராமனும் வேட்டுவத்தலைவன் குகனும் சந்திக்க நேர்ந்தது.

மறு நாள் கங்கையைக் கடக்க நாவாய் எடுத்து வரச் சொன்னபோது வருத்தமுற்று, இராமனிடம் தான் வைத்திருந்த அன்பினை அழகாக வெளிப்படுத்தினான்.

குகன் சொல்கிறான், “காளத்தி அப்பனது இன்னல் கண்டு, தன் கண்களையே எடுத்து அப்பினான் என் தொல்குல முன்னொருவன். யான் அவ்வாறு செய்ய முடியாத கள்வனாக இருக்கிறேன். ஆதலால் என்னை மிக வெறுத்து நீ அகற்றுகின்றனை போலும்? ஐயனே! இவ்வாறு செய்யலாகாது. கண்ணிடத்து அப்பவல்லன் அல்லேன் ஆயினும், என்னாலான அடிமையைச் செய்யப் பணிந்தருள். நானும் உன்னோடே வருகிறேன்” என்று சொல்ல இராமபிரானும் தன் அருகிலிருந்த சீதைக்கும் தன் தம்பிக்கும் தன் பால் குகன் வைத்திருந்த தீராக் காதலை எடுத்துரைத்தான்.

பின், “என் உயிர் போன்றவன் நீ. என் தம்பி, உனக்குத் தம்பி. இந்தச் சீதை உனக்கு உறவினள். குளிர்ந்த கடலால் சூழ்ந்த இடமெல்லாம் உன்னுடையது. நான் உனக்குத் தொழில் செய்யும் உரிமையுடையேன். இனி, நாம் ஐவரானோம்” என்று சமாதானம் கூறி கங்கையைக் கடந்து சென்றான்.

இதற்குப் பிறகு ஆண்டுகள் பல சென்றன. வேடர் தலைவனுக்கோ இராமனைப் பற்றிய தகவல் ஒன்றும் தெரியவில்லை தெற்கே சென்றவர்கள் எங்கிருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள், என்றெல்லாம் தெரிந்து கொள்ள வழியும் இல்லை. குறித்த காலம் வந்துவிட்டதா? இல்லையா எனக் கூடத் தெரியாத நிலை.இதே நினைவாக, இதனையே சிந்தனை செய்து அன்ன ஆகாரம் இன்றி உடல் மெலிந்து உள்ளம் நைந்து உருகி நின்றான் குகன்.

குகனின் துயர் தீர்த்த குமரன்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் குகன் படும் துயர் தீர்க்க அவன் வழிபட்டு வந்த கடவுளாகிய முருகப் பெருமான், ஒரு திட்டம் தீட்டினான். தன் மனைவியரான வள்ளியை சீதையாக மாற்றி, தெய்வயானையை லட்சுமணனாக ஆக்கி, வேல் ஏந்திய கையில் வில்லை ஏந்தி, தாமே இராமன் உரு ஏற்று, குகன் கனவில் தோன்றி, “தம்பி, கவலைப்படாதே.
எங்களுக்குக் குறித்த தவணை முடிய இன்னும் சிறிது காலம் இருக்கிறது. விரைவில் திரும்பி விடுவோம். கவலையை விடு” எனச் சொல்லி மறைந்து விடுகிறான். குகனும் அன்று முதல் தேறி வந்து இராமன் வருகைக்காகக் காத்திருந்தான்.

ஆனந்தத்தை அருளிய அந்த குகன், அன்று முதல் குகஸ்வாமி மூர்த்தி என்றும், ஆனந்த நாயக மூர்த்தி என்றும் பெயர் பெறுகின்றான். இந்த வரலாற்றைத் திருச்செந்தூர் புராணமும் கூறுகிறது.

சுந்தரச் சிலை யிராமன் தோற்றமும் காட்டி ஞான
முந்திய பிரம்மானந்த சித்தியும் கொடுத்து வேத
மந்திரக் குகஸ்வாமி என்னவும் வாய்ந்தது பேர்
ஆனந்த நாயகன் என்று ஓது நாமமும் குமரன் பெற்றான்.

வில்லேந்திய வேலனை இங்கும் காணலாம்

வில்லேந்திய வேலனை, திருவையாற்றில், ஐயாரப்பன் சன்னதியில் மூல ஸ்தானத்திலேயே தரிசிக்கலாம். வில்லுடையான் பட்டியில் வில்லேந்திய வேலனின் விசேஷ சன்னதி உள்ளது. திருவெண்காட்டை அடுத்த சாய்காட்டில் நின்ற நிலையில் நான்கு கரங்களுடன் (வில்லுடன்) வில்லேந்திய வேலன் செப்பு உருவில் திகழ்கிறான். இந்த வேலன் ஆதியில் திருச்செந்தூரில் இருந்தவன் என்றும் பின்னர் காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்த கடலிலிருந்து வெளி வந்தான் என்றும் கூறப்படுகிறது.

போர்க்காலத்தில் வில்லேந்தி ஒய்யாரமாக நிற்கும் முருகனை திருப்போரூருக்குச் சென்றால் காணலாம். பிரகாரத்தின் ஒரு கோடியில் மிக கம்பீரமான அழகிய செப்பு வடிவம், ஒரு காலைத் தரையிலும் ஒரு காலை மயிலின் முதுகிலும் ஊன்றி உடல் வளைத்து நிற்பதில் சேனாபதியின் மிடுக்கு தெரிகிறது.

வீரவேல் முருகனுக்கும் வெற்றி வில் இராமனுக்கும் உரியவைகளாயின.

இவ்வாறு வில்லும், வேலும் அறத்திற்குத் துணையாக நின்று, மறத்தினை அறுத்த சரித்திரம் இரண்டு காவியங்களில் விளக்கப் படுகிறது. பெருமை வாய்ந்த வில்லவனையும் வேலவனையும் மனதார நினைந்து அவர்களின் அருளைப் பெறுவோமாக!

இக்கட்டுரையை எழுதிய திருமதி உமா பாலசுப்பிரமணியன் அவர்கள் தன் தந்தையார் வாகீச கலாநிதி திரு கி.வா.ஜ அவர்களைப் போலவே இறைப்பற்றும் தமிழ்ப்பற்றும் மிக்கவர். இவர் சென்னையில் பல இடங்களில் திருப்புகழ் பயிற்றுவிக்கிறார். திருப்புகழ் இசைப் பேருரைகள் நிகழ்த்துகிறார். இவர் எழுதிய ஆன்மீகக் கட்டுரைகள் பல தமிழ் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. சிறந்த சமூக ஆர்வலர்.

இவ்வாறு வில்லும், வேலும் அறத்திற்குத் துணையாக நின்று, மறத்தினை அறுத்த சரித்திரம் இரண்டு காவியங்களில் விளக்கப் படுகிறது. பெருமை வாய்ந்த வில்லவனையும் வேலவனையும் மனதார நினைந்து அவர்களின் அருளைப் பெறுவோமாக!

நன்றி: ஞான ஆலயம்  …. Thro Murugan Bhakti SITE

Natarajan

படித்ததில் பிடித்தது …” மறக்க முடியாத வாரியார் வாக்கு …”

விபுதி மணம்

வாரியாரின் நகைச்சுவை பொதிந்த சொற்ப்பொழிவுகள், கருத்துக்கள் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்பவை.அப்படிப்பட்ட வாரியாரின் கருத்துக்கள் கொஞ்சம் இங்கே உங்கள் பார்வைக்கு.

‘கம்’ முனு இரு: “கம்முனு சும்மா ஒரு. எல்லாம் தானே நடக்கும்” என்று பேச்சுவாக்கில் சொல்வதுண்டு. உண்மையில் “கம்” எனபது

விநாயகரின் பீஜ மந்திரம். “ஓம் கம் கணேசாய நம” எனபதாகும். ‘கம்’ என்ற விநாயக மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருந்தால், எல்லா காரியங்களும் மங்களமாகவே முடியும் என்ப்தே இதன் பொருள்.

உலாவ இடமா இல்லை : “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்” என்று பாடினார் பாரதியார். அங்கு ஏன் உலாவ வேண்டும்? உலாவ பீச்,பார்க் என்று எத்தனையோ இடம் இருக்கிறதே? அங்கெல்லாம் உலாவுவோம் என்று ஏன் எழுதவில்லை. காரணம், பாரத தேசத்தின் அந்தப்புற எல்லையாக இருக்கிறது பனிமலை. அங்கே இருப்பவர்கள், நாட்டை காக்கும் இராணுவ வீரர்கள். அவர்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால், பகைவர்கள் நுழைந்து விடுவார்களே.அதனால்தான் வெள்ளிப் பனி மலையில் உலாவிக் கொண்டே, நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்க்காகத்தான் பாரதி இப்படி பாடினான்.

வேறுபாடு இல்லா பெண் உலகம் : எல்லா வேறுபாடுகளும் ஆண் உலகிலேயே காணப்படுகின்றன. பெண் உலகுக்கு இந்த வேறுபாடுகள் கிடையாது. ஐயர்,செட்டியார்,நாயுடு, முதலியார் முதலிய ஜாதிப் பெயர்கள் எல்லாம் ஆணின் பெயரை ஒட்டியே வருகின்றன. பெண் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் மீனாட்சி அம்மாள், காமாட்சி அம்மாள் என்றுதானே வழங்குகின்றன.

அதிகம் எது? : பாண்டவர்கள் ஐந்து பேர். கவுரவர்கள் நூறு பேர். அந்த காலத்திலேயே நல்லவர்கள் ஐந்து பேரும், கெட்டவர்கள் நூறு பேரும் ஆக இருந்தார்கள். இப்போது கேட்கவா வேண்டும்?

கள் தேவை : கள்ளை குடித்தால்தான் போதை எனபது இல்லை. ‘கள்’ என்று சொன்னாலே பலர் மயங்கி விடுகிறார்கள். “நீ” என்பதற்க்கு பதில் நீங்’கள்’ என்று சொல்லிப்பாருங்கள். எல்லாம் அந்த ‘கள்’ செய்யும் வேலைதான்.

சினிமா: இப்போதைய சினிமாக்களை (கவனியுங்க!) பணம் பண்ணும் சாதனமாக ஆக்கிவிட்டார்கள். சினிமாக்கள் மூலம் நல்ல கருத்துக்களை இந்த சினிமாக்காரர்கள் சொல்லாமே? ஏன் சொல்லத் தயங்குகிறார்கள்? நான் ஆயிரம் சொற்பொழிவு நடத்துவதும் சரி, ஒரு நல்ல சினிமா வருவதும் சரி. பணம் சம்பாதியுங்கள். அதே சமயம் சமுதாயத்தையும் உருப்படவிடுங்கள்.

பதவி அலைச்சல்: ராமபிரான், ஆட்சியே வேண்டாம் என்று, பெரிய பதவியை துறந்து தந்தை சொல்லைக் கேட்டு காட்டுக்கு போனார். ஆனால், இப்போது சிலர் பிள்ளையார் கோவில் அறங்காவலர் பதவிக்கே அலையாய் அலைகிறார்கள்.

சாமியார் பட்டம்: கலெக்டரிடம் சினேகம் பண்ணுபவனுக்கு மக்கள் மதிப்பு கொடுக்கிறார்கள் அதுபோல, கடவுளிடம் பழகுபவனுக்கும் மக்கள் மதிப்பு கொடுக்கிறார்கள்.ஆனால், தினமும் விபுதி கொடுப்பவனையே சாமியார் ஆக்கி விடுகிறார்களே!.

நாத்திகவாதிகள் வாழ்க: இறைவனை எதிர்த்து பேசி வருவதால், இறைவனின் புகழ் மேலும் வளரும். ஆதலால், இறைவனை எதிர்ப்பவரும் இறைத்தொண்டுதான் செய்கின்றனர். குடையை விரித்து யாரும் சூரியனை மறைத்து விட முடியாது.

கோவில் எதற்கு? : இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும், கோவிலில் உள்ள திரு உருவத்தில் விளங்கித் தோன்றுகின்றான். பசுவின் உடம்பில் பாலைப் பெற முயற்சி செய்கின்ற ஒருவன், பசுவின் கொம்பையோ, காதுகளையோ,வாலையோ வருடினால் பால் கிடைக்குமா? எனவே, பசுவின் பால் பெற விரும்புவோன், பசுவின் மடியை வருடிப் பால் பெறுவது போல, இறைவனின் அருளைப் பெற விரும்புவோன், கோவில் சென்று இறைவன் திருமுன் நின்று வழிப்பட்டு திருவருளைப் பெறுதல் வேண்டும்.

வாரியாரின் அர்த்தமிக்க, அற்புதமான கருத்துக்களை உள்ளடக்கிய வார்த்தை விளையாட்டுகள்தான் மக்களிடம் ஆன்மிகம் எளிதாக சென்றடைய காரணம் என்பது உங்களுக்கு விளங்குகிறது அல்லவா?

தன் குரலை வைத்து ‘மிமிக்ரி” செய்பவர்களை (செய்துவருபவர்களை) பற்றி வாரியார் பின்வருமாறு கூறி இருக்கிறார்.

“என் குரலை நிறைய பேர் “மிமிக்ரி” கிண்டல் பண்ணுகிறார்களே. அதை நான் கிண்டல் என்று சொல்லமாட்டேன். கஷ்டப்பட்டு பயிற்சி செய்து என்னைப் போலவே பேசுகின்றார்களே. அதை எண்ணி ஆச்சரியப்படுவேன். பேசினால் பேசட்டுமே. “முருகா,முருகா” என்று அவர்கள் சொல்லித்தானே ஆக வேண்டும். அது அவர்களுக்குப் புண்ணியம் அல்லவா?

– See more at: http://educationalservice.net/

Source::::Input from a friend of mine

Natarajan