” நீ என்ன பண்றே …..உன்னாலே முடிஞ்சதை சமைச்சுப் போட்டுடு …”

“இது மகாபெரியவா உத்தரவு;

நமக்கு ஒண்ணும் தெரியாட்டாலும் அவர் பாத்துப்பார்’”

சொன்னவர்-பட்டு சாஸ்திரிகள்.

11262283_1423815861273787_1865469067_n.jpg
தொகுப்பு-சாருகேசி

‘நன்றி-பால ஹனுமான் & சக்தி விகடன்”

”பிடில் சுந்தர சாஸ்திரிகள்ங்கிற பெரியவர் ஒருத்தர், ஆதிசங்கரரோட ஜயந்தியை ரொம்ப வருஷமா நடத்திண்டு வந்தார். மகாபெரியவா என்னைக் கூப்பிட்டு, ‘அவருக்கு ரொம்ப வயசாயிடுத்து. பாவம்… சிரமப்படறார். இனிமே நீ ஏத்துண்டு நடத்து’ன்னார்.

பெரியவா சொன்னபடி, கலவை கிராமத்துல சுமார் ஐம்பது வருஷமா, விடாம நடத்திண்டு வரேன். மகாபெரியவாளும் அந்த விழாவுல நிறைய முறை கலந்துண்டிருக்கா..!” – சிலிர்ப்புடன் விவரித்த பட்டு சாஸ்திரிகள், எந்த முன் அனுபவமும் இல்லாமல்,பெரியவாளின் அனுக்கிரகத்தால் மட்டுமே சமாளித்து, நல்ல பேரெடுத்த சம்பவம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டார்.

”சுமார் 40, 45 வருஷங்கள் இருக்கும். பாதயாத்திரை கிளம்பின மகாபெரியவா, சோளிங்கபுரத்துல வந்து தங்கினா. அது, மிகப்பெரிய நரசிம்ம க்ஷேத்திரம். அங்கே ஆஞ்சநேயர் ஆலயமும் உண்டு. ரொம்ப விசேஷமான தலம் அது.

 

மகாபெரியவா அங்கு முகாமிட்டிருக்கிறதைத் தெரிஞ்சுண்ட முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன், அவர் மனைவி ஜானகி, ஆந்திர தேசத்தோட ஐ.ஜி. ராமநாதன் எல்லோரும் அங்கே வந்திருந்தா. வாலாஜாபேட்டை லேருந்து கோட்டாசெட்டி, டாக்டர் வேணுகோபால்னு எல்லாரும் மகாபெரியவாளைத் தரிசிக்க வந்துட்டா.

ஸ்ரீகண்டன்னு ஒருத்தர், மடத்தைச் சேர்ந்தவர்தான். அவர்தான் மகாபெரியவாளுக்குபிக்ஷை பண்ணிப் போடுவது வழக்கம். அவர், பெரியவாளுக்கு மட்டும்தான் பிக்ஷை பண்ணுவார்; அது மட்டும்தான் அவரோட வேலை.

ஆனா, அன்னிக்கி மகாபெரியவாளுக்கு என்ன தோணித்தோ தெரியலை… என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். ”என்னைப் பார்க்கணும்கிறதுக்காகச் சிரமப்பட்டு எல்லாரும் இந்த ஊருக்கு வந்திருக்கா. அவாளைப் பசியும் பட்டினியுமா இருக்கவிடலாமா? தப்பில்லையோ! நீ என்ன பண்றே, அவாளுக்கெல்லாம் உன்னால முடிஞ்சதை சமைச்சுப் போட்டுடு”ன்னார்.

அதைக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டுது. ஒரு நிமிஷம், அப்படியே பேச்சுமூச்சு இல்லாம நின்னுட்டேன். பின்னே… எனக்கு சமைக்கவே தெரியாது. ‘எனக்கு என்ன சமைக்கத் தெரியும்னு, மகாபெரியவாஎன்னைப் போய் சமைச்சுப்போடச் சொல்றார்?’னு தவிச்சுப்போயிட்டேன். ஆனா, அவர்கிட்டே போய், ‘எனக்குச் சமையல் தெரியாது. வேற யார் கிட்டேயாவது சொல்லுங்கோ’னு சொல்லமுடியுமா, என்ன? பத்து வயசுலேருந்து பெரியவாளைப்பார்த்துண்டிருக்கேன். யாரையும் எந்தச் சங்கடத்துலயும் மாட்டிவிடமாட்டார்னு தெரியும். அதனால அவரே இந்தக் காரியத்துக்கும் ஒத்தாசையா, பக்கபலமா இருப்பார்னு முழுசா நம்பினேன்.

சத்திரத்து மேனேஜர்கிட்டே போய், பாத்திரங்களைக் கேட்டு வாங்கிண்டு வந்தேன். அங்கே… பக்கத்துலயே இருந்த பெட்டிக் கடைல ஒரு தேங்காயும், கொஞ்சம் வெஞ்சனமும் வாங்கிண்டேன்.
அது ஒரு மலையடிவாரம். அந்த இடத்துல, அம்மிக்கல்லுக்கு எங்கே போறது? கொஞ்சம் நீட்டமா இருந்த கல்லு மேல பருப்பு, தேங்காய், மிளகாய்னு எல்லாத்தையும் சேர்த்து வெச்சு அரைச்சுத் துவையல் பண்ணினேன்.

அங்கங்கே கிடந்த கல்லைப் பொறுக்கிண்டு வந்து, அடுப்பு தயார் பண்ணிண்டேன். காஞ்ச குச்சிகளையெல்லாம் பொறுக்கி எடுத்துண்டு வந்து, அடுப்பை மூட்டி சாதம், ரசம் செஞ்சு இறக்கினேன். யாரோ அரிசி கொடுத்திருந்தா. அந்த அரிசியைக் காமிச்சு, ‘இதப் பார்… ராஜா மாதிரி இருக்கு அரிசி!’ன்னு எடுத்துக்கச் சொன்னார் பெரியவா.

ஒரு மலையின் மேல நரசிம்மர்; இன்னொரு சின்ன மலையின் மேல ஆஞ்சநேயர். ரெண்டு மலையிலேயும் ஏறி, தரிசனம் பண்ணினோம். பெரியவாளும் மலைகள் மீது ஏறி வந்து, ஸ்வாமி தரிசனம் பண்ணினார்.

கீழே இறங்கறதுக்கு மத்தியானம் ஆயிடுத்து. அவாளுக்கெல்லாம் நல்ல பசி. எல்லாரையும் உக்கார வெச்சு, சாப்பாடு பரிமாற ஏற்பாடு பண்ணினேன். வந்திருக்கிறவா எல்லாரும் பெரிய மனுஷா. தேசத்துல முக்கியப் பதவிகள்ல இருக்கறவா. இதுவரை, சமைக்கவே சமைக்காதவன் நான். என்னோட சமையல் அவாளுக்குப் பிடிக்குமோ, இல்லையோ?! பயத்தோடயே பரிமாறினேன். ஆனா, வந்தவா எல்லாரும் திருப்தியா சாப்பிட்டா. எனக்குப் பரம நிம்மதி.

‘வைதீக, சம்பிரதாய சாஸ்திரங்கள் மட்டும்தான் எனக்குத் தெரியும். சமைக்கத் தெரியாது’ன்னு பெரியவாகிட்ட சொல்லி, கையக் கட்டிண்டு சும்மா இருந்துடலை நான். ‘இது மகாபெரியவா உத்தரவு; நமக்கு ஒண்ணும் தெரியாட்டாலும் அவர் பாத்துப்பார்’னு அசைக்க முடியாத தைரியம் உள்ளுக்குள்ளே இருந்துது. அவருடைய அனுக்கிரகம்தான், என்னைக் காப்பாத்தித்து!

சமையல் நன்னா இருந்துதுன்னும், வயிறு நிறைய, ருசிச்சுச் சாப்பிட்டதாவும் எல்லாரும் சொன்னா. உத்தரவு வாங்கிக்கறதுக்காகப் போனப்ப, பெரியவாகிட்டயும் என்னைப் பத்தி சிலாகிச்சு ஏதோ சொன்னாப்போல இருக்கு. வந்தவா எல்லாரும் போனப்புறம், பெரியவா என்னைக் கூப்பிட்டா. உள்ளூர பயமா இருந்தாலும், பெரியவா எதிர்ல போய் நின்னேன்.

”ரொம்ப நல்ல காரியம் பண்ணினே! க்ஷேமமா இருப்பே!”ன்னு கையைத் தூக்கி, ஆசீர்வாதம் பண்ணினார் மகாபெரியவா. ”அது போதும் எனக்கு! அவரோட ஆசீர்வாதம் போதும், மனசு நிறையறதுக்கு! அதைவிட வேறென்ன வேணும்?!” – நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் பட்டு சாஸ்திரிகள்

Read more: http://periva.proboards.com/thread/9385/#ixzz3bmxXGwDV

Source….www.periva.proboards.com

Natarajan

” அந்த வீணையை என்னிடம் கொடு…நான் வாசிக்கலாம் இல்லையா …” ?

ஒரு சமயம், மகாபெரியவர் மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் தங்கி இருந்தார். ஒரு அரசமரத்தின் கீழ் இளைப்பாறிய அவர், மரத்தின் வேரில் தலையை வைத்துப் படுத்துக் கொள்வார். முன்னால் திரை போட்டிருக்கும்.
பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கும் சமயத்தில் மட்டும், திரையை விலக்குவார்கள்.


அன்று, சென்னையில் இருந்து வீணை வித்வான் ஒருவர் பெரியவரைத் தரிசிக்க நண்பருடன் வந்திருந்தார். பெரியவரைத் தரிசனம் செய்த அவர், அவரது அனுமதி பெற்று, வீணையை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். பக்தர்கள் எல்லாரும் அந்த இசைமழையில் நனைந்து கொண்டிருந்தனர். வாசித்து முடித்ததும், வீணையை உறையில் இட தயாரானார் வித்வான்.
பெரியவர் அவரிடம், “”அந்த வீணையை என்னிடம் கொடு. நான் அதை வாசிக்கலாம் இல்லையா?” என்று கேட்டார்.
பெரியவர் வீணை வாசிக்கப் போகிறாரா என்று எல்லாருக்கும் திகைப்பு. வித்வான் உட்பட..! ஆனால், எதற்காக வாசிக்க இருக்கிறார் என்பது மட்டும் யாருக்கும் புரியவில்லை.
வீணையைக் கையில் வாங்கிய பெரியவர் சுருதி கூட்டி, வித்வானிடம் காட்டினார். “”நான் சுருதி கூட்டியிருப்பது சரியா இருக்கான்னு பாரு,” என்றார்.
வித்வானும், “”சரியா இருக்கு” என்று சொல்ல, பெரியவர் வீணை வாசிக்க ஆரம்பித்து விட்டார்.
சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கும்! வித்வான் பெரியவரின் பாதங்களில் விழுந்தார். கன்னத்தில் போட்டுக் கொண்டு, “”பெரியவா! என்னை மன்னிக்கணும்! என்னை மன்னிக்கணும்! தப்பு பண்ணிட்டேன்! தப்பு பண்ணிட்டேன்,” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே கதறி அழ ஆரம்பித்து விட்டார்.
பெரியவர் வாசித்து முடித்தார். பின் வீணையை அவரிடம் திருப்பிக்கொடுத்து, “”வித்யா கர்வம் ஒருவனுக்கு கூடாது. கவனமாக இரு,” என்று சொல்லி ஆசிர்வாதமும் செய்தார். வித்வானுடன் வந்த நண்பருக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.
பின் நண்பர் வித்வானிடம்,”” இங்கே என்ன நடந்தது? நீ தப்பு பண்ணிட்டதா கதறி அழுதே! பெரியவர் வித்யாகர்வம் கூடாது என்றார். அப்படி என்ன தான் இங்கு தவறு நடந்தது?” என்றார்.
வித்வான் திகைப்பு கலையாமல் பதில் சொல்ல ஆரம்பித்தார்.
“”கைலாய மலையைத் தூக்க முயன்ற ராவணனின் கைகள் மலையின் அடியில் சிக்கிக் கொண்டன. அப்போது, அவன் சாமகானம் இசைத்து சிவனை மகிழ்வித்து விடுதலை பெற்றான் இல்லையா! அதுபோல, நானும் இங்கே சாமகானம் வாசிக்க துவங்கினேன். ஆனால், திடீரென எப்படி வாசிப்பது என்று மறந்து போய்விட்டது. இது யாருக்கு தெரியப்போகிறது என, ஏதோ ஒன்றை வாசித்து நிறைவு செய்து விட்டேன். பெரியவர் இதைக் கண்டுபிடித்து விட்டார். என்னிடம் வீணையை வாங்கி, அந்தப் பகுதியை சரியாக வாசித்து நிறைவு செய்து விட்டார். பெரியவர் ஸர்வக்ஞர் (எல்லாம் அறிந்தவர்). அவருக்கு எல்லாம் தெரியும் என்பது எனக்கு தெரியாமல் போச்சே! அபச்சாரம் பண்ணிட்டேனே! அதனால் தான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்,” என்றார்.
நமக்கு தெரிந்ததைச் செய்ய வேண்டும். தெரியாத விஷயங்களைத் தெளிவாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பாடத்தை இதன் மூலம் வாழும் தெய்வமான மகாபெரியவர் நமக்கு இதன்மூலம் உணர்த்தியிருக்கிறார்.

Read more: http://periva.proboards.com/thread/9358/maha-periva-knows-veena-vadyam?page=1&scrollTo=15889#ixzz3bX05cuZa

Source…..www.periva.proboards.com

natarajan

“அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாதவன் தர்மத்தைக் காப்பாத்தறான் …”

இந்த சம்பவம் சுமார் எழுபது வர்ஷங்களுக்கு முன் நடந்தது.

பெரியவாளிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு முதியவர், காலகதி அடையும் தறுவாயில் தன் மகனை அழைத்து சில விஷயங்களை சொல்லும் போது, தான் ஒருவரிடம் நூறு ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதை அவன் திருப்பித் தரவேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்தார். அப்போது மகனுக்கே 62 வயது. கிராமத்தில் கர்ணம் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். சம்பளமோ 15 ரூபாய்தான். அப்பாவின் கடைசி வாக்கை காப்பாற்ற கஷ்டப்பட்டு மூன்று வர்ஷங்களில் எப்படியோ 100 ரூபாய் சேர்த்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், அப்பாவுக்கு கடன் குடுத்தவர் யாரென்றே தெரியாது! சேமித்த பணத்தை யாரிடம் கொடுப்பது?

மஹாபெரியவா – திக்கற்றவருக்கு தெய்வமே துணை! ஓடினார் பெரியவாளிடம்! விவரத்தை சொன்னார்.

“மடத்ல ஒரு நாள் தங்கு” உத்தரவானது. மறுநாள் காலை பெரியவா அவரிடம் “இங்கேர்ந்து நேரா…………நீ ஆலத்தம்பாடி கிராமத்துக்கு போ! அங்க இருக்கும் அக்ரஹாரத்ல கடைசியா இருக்கும் வீட்ல இருக்கறவர்கிட்டதான் ஒங்கப்பா கடன் வாங்கினார்”.

ஆலத்தம்பாடி அக்ரஹாரத்தில் பெரியவா சொன்ன வீட்டுக்கு சென்றால்……ஆச்சர்யம்! அந்த வீட்டுப் பெரியவர் காலகதி அடைந்துவிட்டார். அவருடைய மகனிடம் விஷயத்தை சொன்னதும், அவருக்கு ஒரே வியப்பு! “எங்கப்பாவும் செத்துப் போகும்போது சில விஷயங்கள்லாம் சொன்னார்……..ஆனா, உங்கப்பாவுக்கு குடுத்த கடன் பத்தின விஷயத்தை சொல்லவேயில்லையே! அதுனால, இந்த பணத்தை நான் வாங்கிக்க மாட்டேன்” திட்டவட்டமாக சொல்லிவிட்டார். அவரையும் அழைத்துக் கொண்டு பெரியவாளிடம் வந்தார். ரெண்டுபக்கத்து ஞாயத்தை கேட்டதும், பெரியவா முகத்தில் புன்னகை.

“இங்கதான் தர்மம் இருக்கு. இன்னொர்த்தர் சாமானை வாங்கறப்போ…….நமக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, அதை திருப்பித் தரணும்னா……யோசிப்போம்! அதுனால, கடன் வாங்கின பாவத்துக்கு பரிகாரமே இல்லை. இங்க, ஒங்க ரெண்டு பேரோட விவகாரம் எப்டி? வாங்கினவர் திருப்பித் தரணும்..ன்னு நெனைக்கிறார்……..குடுத்தவரோட பிள்ளையோ, அப்பா தங்கிட்ட அதைப் பத்தி சொல்லாததால, வாங்கிக்க மாட்டேங்கறார்……ஆனா, தர்மம் ஒங்களுக்கு தெரியாது இல்லியா?

அடுத்தவா பொருளுக்கு ஆசைப்படாதவன் தர்மத்தை காப்பாத்தறான். ரெண்டு பேரும் காமாக்ஷி கோவிலுக்கு போய், இந்த பணத்தை அங்க உண்டியல்ல போட்டுடுங்கோ! அது அவளோட பணம்” ஆசீர்வாதம் பண்ணினார்.

Read more: http://periva.proboards.com/thread/5174/#ixzz3bFfNj1lp

Source….www.periva.proboards.com

Natarajan

“அது இருக்கட்டும் …இந்த ரோட்டில் போனா கிண்டி வந்திடுமா …”?

கலியுகத்தில் நம் ஊனக்கண்களுக்கும் காட்சி அருளும் அவதார மூர்த்தி – காஞ்சி முனிவர் – பெரியவாள் என்றிந்தப் பார் புகழும் தவசிரேஷ்டன் தடுத்தாட்கொள்ளும் தயையால் சென்னையில் முகாம் இட்டிருந்த புண்ணிய மாதங்கள். பிரதானமாக மயிலாப்பூர் ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில், அன்று இளவரசரான புதுப் பெரியவாள் ஸ்ரீ ஜயேந்திரருடன், தங்கியிருந்த அருளாளன் திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், தொண்டையார்ப்பேட்டை, மாம்பலம் என்று மாநகரின் பல பகுதிகளிலும் தனது புனிதத் திருவடிகளைப் பதித்து, பண்டு தருமம் மிகுந்திருந்த சென்னையில் மீண்டும் தருமப் பயிர் தழைக்க அருள் மழை பெய்து மக்களை அனுக்ரஹித்தார்.

ஒரு நாள் அதிகாலையில் மாம்பலம் சிவா-விஷ்ணு ஆலயத்திலிருந்து ஸ்ரீ திரிபுரசுந்தரி அன்னையுடன் ஸ்ரீமருந்தீஸ்வரர் கோயில் கொண்டுள்ள திருவான்மியூருக்கு அண்ணல் பாதயாத்திரை புறப்பட்டிருந்தார். உடன் செல்லும் பாக்கியம் பெற்ற பக்தர் குழாமில் அடியேனும் இடம் பெற்றிருந்தேன். அன்று முதலமைச்சர் திரு பக்தவத்ஸலம் என்று நினைவு. காவல் துறையாளர் இரண்டு மூன்று பேரும் கூட நடந்தனர்.

சிறிது தூரம் சென்றதும் எதிர்திசையிலிருந்து வந்த ஒருவன் ஸ்ரீ பெரியவாளை நெருங்கினான். செருக்கு மிகுந்த நோக்கு. செருப்புகளைக் கழற்றாத பாதங்கள். அலட்சியமும் அவமரியாதையும் அன்வயமாகியிருந்தன அவனது தோற்றத்தில், தோரணையில்.

முனிபுங்கவர் மீது அவனது ஸ்பரிசம் படாது தடுக்க விரைந்த பக்தர்கள், கைகளால் அரண் கட்டினர். காவல் துறையாளரும் முன் வந்தனர். ஆனால் கருணாமூர்த்தி அவர்களை விலகச் சொல்லிவிட்டு கனிவோடு “உனக்கு என்ன வேண்டும்” என்று வினவினார்.

“எனக்கொண்ணும் வேண்டாம். சங்கராச்சாரியார் பெரியவர்ன்னு பேசிக்கிறாங்களே, அது நீங்கதானே?” என்று வினவினான்.

“அதிருக்கட்டும். உன்னோட பேரென்ன? இந்த விடியக்காலத்துலே எங்கே போயிண்டிருக்கே?” – சரணாகத வத்ஸலனின் பரிவான விசாரணை.

அவன் தன் பெயரைச் சொல்லிவிட்டு, “எனக்கு ஜோலியில்லையா? வேலைக்குப் போய்க்கினு இருக்கேன்” என்று அஸ்திரம் ஏவுவது போல் கூறினான். “நீங்கள் மடாதிபதிகள் சோம்பேறிகள். பயனுள்ள காரியம் ஏதும் செய்யாதவர்கள்” என்ற ஏளனம் – கண்டனம் – அவன் பதிலில் தொனித்தது.

“உனக்கு எங்கே வேலை?” தயாநிதியின் தொடர்ந்த விசாரணை.

“கிண்டியில்” என்று கூறியபின் “ஒண்ணு கேக்கறேன். இந்த இந்து மதத்தை யாரு உண்டாக்கினாங்க?” எனக் கேட்டான்; வினாவில் ஞானம் தேடும் விநயமோ அறிவு வேட்கையோ கடுகளவும் இல்லை.

ஸ்ரீபெரியவாளின் – ஞான மேருவின் – “தெரியாதப்பா” என்ற மறுமொழி ஏதோ வாதத்தில் வெற்றி கொண்ட இறுமாப்பை அவனுக்குத் தந்தது போலும்.

“தெரியாதுங்கிறீங்க; அப்புறம் சாத்திரம் அப்படிச் சொல்லுது, இப்படிச் சொல்லுது’ சிலைமேலே பாலை ஊத்து, நெருப்பிலே நெய்யை ஊத்துண்ணு சொல்றீங்களே? எப்படி, இதெல்லாம் நல்லதுக்குன்னு நம்பறது?” எனக் கணை தொடுத்தான்.

கொஞ்சமும் சலனமுறாமல் தயாபரன் “அதிருக்கட்டும், கிண்டிக்குப் போகணும்னியே, இந்த ரோடுல போனா கிண்டி வந்துடுமா?” என்று வீணை ஒலித் தண்குரலில் வினவினார்.

“அதானே நான் போய்ட்டிருக்கேன்” என்ற பதிலில் “இதென்ன அநாவசியக் கேள்வி” என்ற உதாசீனம்.

“ஆமா… இந்த ரோடு யாரு போட்டது?…” அந்தப் பாமரனின் இதய வீணையை மீட்ட முற்பட்டுவிட்டார் முனிபுங்கவர்.

“இது என்னோட பாட்டன், முப்பாட்டன், அவுங்களோட முப்பாட்டன் காலத்துலேருந்து இருக்கற ரோடு… இதை யார் போட்டிருந்தா என்ன? கிண்டிக்குப் போவுது; அம்புட்டுத்தானே வேணும்?”

“இது கிண்டிக்குப் போற ரோடுன்னு நிச்சயமாச் சொல்றியே”

“இதிலே என்னங்க சந்தேகம்? தினமுந்தான் போய்க்கினு இருக்கேனே… மேலாலும் உசரப் பாருங்க… எந்தெந்த சாலை எங்கே போவுதுன்னு கைகாட்டி போர்டு போட்டிருக்காங்களே சர்க்காரிலே”

மான் அன்பு வலையில் சிக்கிவிட்டது. ஆனால் இது சிறைப்படல் இல்லை; மீட்சி!

“நானும் உன்னைப் போலத்தாம்பா… இந்த ரோடு யாரு போட்டதுன்னு அலட்டிக்காம, மேலே இருக்கிற கைகாட்டி போர்டையும் நம்பி நீ போற மாதிரி, நான் இந்து மதம் யாரு உண்டாக்கியதுன்னு விசாரப்படாமே போறேன்… நீ இந்தக் கைகாட்டிய நம்பறே… அது கூட காத்துலே மழையிலே தெசை மாறலாம்; கீழே விழலாமே.. நானும் இந்த சாஸ்திரம், வேதம்ங்கிறதையெல்லாம் அப்படியே நம்பிப் போறேன். அதெல்லாம் என்னைவிட எவ்வளவோ பெரியவா, முப்பாட்டனில்ல ஆயிரம் ஆயிரம் வருஷங்களா நெலச்சிருக்கிறதை நம்பறேன்; நம்பச் சொல்றேன்” என்று பரிவு ததும்பும் குரலில் கூறிய தயாநிதி,
“சரி, உனக்கு ஜோலியிருக்கே…. என்னைப் போலயா?… ஜாக்ரதையாப் போய்ட்டு வாப்பா” என்று அபயக்கரம் உயர்த்தினார்.

அடுத்த வினாடி அவன் பாதரட்சைகளை உதறி விட்டு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தான்.

“என்னை மன்னிச்சுடுங்க” என்று நாத்தழுதழுக்கக் கூறினான். கன்னங்களைக் கண்ணீர் நனைத்தது.

Those who came to scoff remained to pray (ஏளனம் செய்ய வந்தவர் பிரார்த்தித்து வணங்க அமர்ந்தனர்) என்ற ஆலிவர் கோல்ட் ஸ்மித்தின் (The village Preacher) (கிராம பூஜாரி) கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.

அதன் பின் ஸ்ரீ பெரியவாளின் பல முகாம்களிலும் தரிசனத்துக்கு வந்தான் அந்தப் பரம பக்தன், ரஸவாதப் பரிணாமத்தால்!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

Source…..Smt.Uma Shankar in http://www.periva.proboards.com

Natarajan
Read more: http://periva.proboards.com/thread/5287/common-mans-change-heart-devotion#ixzz3bA0LOyoo

“1008 பழம் இருக்கும் வாழைத் தார் பார்த்திருக்கிறாயா …” ?!!!

சென்னையிலிருந்து ஒரு முக்யஸ்தர் அன்றைக்கு

ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார். பெரியவாளின்

திருச்சந்நிதிக்கு சமர்பிக்க வேண்டும் என்பதற்காகத்

தன் தோட்டத்தில் விளைந்த இரண்டு தார்

வாழைப்பழ்ங்களைத் தன்னுடன் கொண்டு

வந்திருந்தார்.பெரியவாளுக்கு வாழைத்தார்களை

சமர்ப்பித்து விட்டு,அவருக்கு நமஸ்காரம் செய்து

பிரசாதம் பெற்றுக்கொண்டு புறப்பட்டார்.

மடத்திலேயே கைங்கர்யம் செய்யும்

கிருஷ்ணமூர்த்தியை அழைத்து ‘இந்த ஒவ்வொரு

தார்லயும் எத்தனை பழம் இருக்குன்னு எண்ணிச்

சொல்லு’ என்றார் மகா பெரியவா.

கைகளை உதறிக் கொண்டு கிருஷ்ணமூர்த்தி

எழுந்தார். பெரியவாளிடம், “எண்ணிட்டேன் பெரியவா

ஒரு தார்ல 275 பழம்,இன்னொரு தார்ல 375 பழம்

இருக்கு” என்றார்.

“சபாஷ்..சரி..” என்று இழுத்த பெரியவா,”ஒரு தார்ல

1008 பழம் இருக்கிறதை நீ இதுவரைக்கும்

பார்த்திருக்கியோ..”என்று கிருஷ்ணமூர்த்தியைப்

பார்த்துக் கேட்டார்.

ஒரு சில விநாடிகள் கழித்து கிருஷ்ணமூர்த்தி.

“இல்லே பெரியவா…இதுவரை நான் கேள்விப்

பட்டதில்லே..பெரியவா உத்தரவு கொடுத்தா அப்படி

ஒரு தார் எங்கிருந்தாலும் பிடிச்சுண்டு வந்துடறேன்”

என்றார்.

“ஓ…இந்தக் கேள்விக்கெல்லாம் நானே பதில்

சொல்லுவேன்னு ரொம்ப ஆவலா எம் மூஞ்சியை

பாத்துண்டிருக்கியா?” என்று புன்னகையுடன் கேட்ட

பெரியவா, “இதுக்கு நா பதில் சொல்ல வேணாம்.

இளையாத்தங்குடில மாரியம்மன் கோயில் இருக்கு.

அங்கே போ. அந்த அம்மனை தரிசனம் பண்ணு.

உனக்கு எல்லா விவரமும் தானா கிடைக்கும்”

என்று பொசுக்கென்று முடித்தார் மகா பெரியவா.

‘1008 பழங்கள் அடங்கிய வாழைத்தாரைப்

பார்ப்பதற்கு இளையாற்றங்குடிக்குப் போ’

என்று பெரியவா கட்டளை இட்டதில் வியப்பு ஒன்றும்

இல்லை.இளையாற்றங்குடிக்கும் காஞ்சி ஸ்ரீசங்கர

மடத்துக்கும் நிறைய தொடர்பு உண்டு.

மகா பெரியவா சொன்னபடி அடுத்த நாளே தன் குடும்பத்தோடு

இளையாற்றங்குடி புறப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி.

பெரியவா திருவாக்கின்படி மாரியம்மனைத் தரிசித்தார்.

அப்போது கோயிலில் இருந்த யாரோ இருவர்

வாழைத்தார்களைப் பற்றி திடீரென பேசிக் கொண்டிருந்தனர்.

சட்டென்று இவர்கள் பேச்சு காதுகளில் விழ..ஆச்சர்யப்பட்டு

சம்பாஷணை நிகழ்ந்த திசை நோக்கித் திரும்பினார்.

அவர்களிடம், “ஐயா..1008 வாழைப்பழம் இருக்கிற மாதிரி

நல்ல வாழைத்தார் வேணும்.இந்த ஊரில் எங்கே கிடைக்கும்?”

என்று கேட்டார்.

ஏற இறங்கப் பார்த்த ஒரு ஆசாமி தன் வலக்கையை, நீட்டி,

“தோ…தெக்கால போங்க. ஒரு பெரிய கிணத்தைத்

தாண்டியதும் நிறைய வாழைமரம் இருக்கிற தோட்டம்

ஒண்ணு வரும்.அங்கே இருக்கிறவர்கிட்ட கேட்டுப் பாருங்க”

என்று சொன்னார்.

தலையில் முண்டாசு கட்டிய ஒருவர் இவரை எதிர்கொண்டு

விசாரிக்க 1008 வாழைப்பழங்கள் அடங்கிய தார் ஒன்று

வேண்டும் என்று சொன்னார்.சற்று முன் வாழைமரத்தில்

இருந்து அறுத்துத் தரையில் இறக்கி வைக்கப்பட்டிருந்த

தார்களில் இருந்து ஒன்றைத் தூக்க முடியாமல் சுமந்து

வந்தார்.அவர். “இதான் சாமீ நீங்க கேட்ட 1008 பழத்தாரு..”

என்று இவர் முன்பாக வைத்தார்.

உடலெங்கும் புல்லரிப்பு. மகா பெரியவாளின் தீர்க்க

தரிசனத்தை நினைத்துப் பரவசப்பட்டார்.

தோட்டத்துக்காரன் சொன்ன விலையான ரூபாய் முப்பதைக்

கொடுத்து விட்டு,ஒரு ஆசாமியை கூலிக்கு அமர்த்தி

பெரியவா திருச்சந்நிதியின் முன்னால் அந்த வாழைத்தாரைக்

கொண்டு போய் வைத்தார்.

அதைப் பார்த்து பெரியவா புன்னகைத்தார்.

“1008 பழம் இருக்கிற தாரைப் புடிச்சுண்டு வந்துட்டே

போலிருக்கு?” என்று பெரியவா இடி இடியெனச் சிரித்தார்.

“நேத்து ஊர்ல பாக்கறதுக்குக் காயா இருந்தது. பெரியவா

சந்நிதிக்கு வந்தவுடனே மஞ்ச மசேல்னு பழுக்க ஆரம்பிச்சுடுத்து”

என்றார் கிருஷ்ணமூர்த்தி நெகிழ்ச்சியுடன்.

“விஷு (மலையாள புத்தாண்டு) வரப் போகிறது. இந்த தாரை

ரொம்ப கவனமா குருவாயூருக்கு அனுப்பிவிடு” என்றார்

பெரியவா தடாலென்று.

அப்போது பெரியவா கைங்கர்யத்தில் இருந்த சீடர்கள்

“விஷுவுக்கு இன்னும் பதினாலு நாள் இருக்கே..அதுக்குள்ள

இந்த தாரை இங்கே வெச்சிருந்தா அழுகி வீணாப் போயிடுமே”

என்று இவர் காதருகே வந்து குசுகுசுத்தனர்.

அப்போது கிருஷ்ணமூர்த்தி சொன்னார்;

“இது குருவாயூருக்குப் போகணும்னு பெரியவா உத்தரவு

போட்டிட்டாருன்னா, அது பதினாலு நாள் இல்லே…

பதினாலு வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாது.

அன்னிக்கிப் பழுத்த பழம் போல பொலிவோட பிரகாசமா

இருக்கும். பெரியவா வாக்கு என்னிக்குமே தப்பாது”

என்று சொல்லி தாரைப் பத்திரப்படுத்துமாறு ஒரு

சிஷ்யரிடம் சொன்னார்.

குருவாயூரில் சமர்ப்பிக்கப்படும் வரை அந்த 1008 பழத்தில்

ஒரு பழம்கூட தாரில் இருந்து கீழே விழவில்லை.

முனையில் கருக்கவில்லை. கொஞ்சமும் வீணாகாமல்

புத்தம் புதிதாக அப்படியே இருந்தது அதிசயம்தான்!.

Read more: http://periva.proboards.com/thread/9289/1008#ixzz3b4JAJWd3

Source….www.periva.proboards.com

Natarajan

“கிராமத்தில் இருந்து வருபவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் …’

“தன்னோட தீர்மானத்தை மத்தவாளுக்கு எந்த ரூபத்துல

வந்து வேணும்னாலும் தெரியப்படுத்துவார்-பெரியவா!”

(கிரிவலம் சம்பவத்தில் நடந்த அற்புதம்)

நன்றி-இந்த மாத குமுதம் பக்தி

77134_693849987312454_1034041963_n.jpg
சர்வேஸ்வரன் சகல ஜீவராசிகளுக்கு படியளக்கறவர். சதா சர்வ காலமும் அவரோட நினைப்பெல்லாம் லோக ரட்சணம் பத்திதான் இருக்கும்னு புராணங்கள் எல்லாம் சொல்றது.

சாட்சாத் அந்தப் பரமேஸ்வரனோட அம்சமாவே வாழ்ந்த பரமாசார்யாளும் அப்படித்தான். எப்பவும் எல்லாரும் நன்னா இருக்கணும். யார் யாருக்கு என்னென்ன தேவையோ அதை தேவை அறிஞ்சு பண்ணணும்கறதையே எப்பவும் சிந்தனையா வைச்சுண்டு இருந்தார்.

திருவண்ணாமலைக்குப் பக்கத்துல காஞ்சி கடலாடின்னு ஒரு கிராமம் இருக்கு. சிங்கம், புலி எல்லாம்கூட உலாவிண்டு இருந்துது. பக்ல்லயே அங்கே போறது ரொம்ப சிரமம். அந்த இடத்துக்குப் பக்கத்துல பெரிய மலைகள் எல்லாம் இருக்கு. அந்த மலைகள்ல ஒண்ணுல பரமேஸ்வரனும், ஈஸ்வரியும் கோயில்கொண்டிருக்கா. அந்த மலைக்குப் பேரு பர்வதமலை. சுவாமி, மல்லிகார்ஜூனர். அம்பாள் பிரமராம்பிகை.

பௌர்ணமியில திருவண்ணாமலையில கிரிவலம் போறமாதிரி பர்வத மலையை மார்கழி மாசம் ஒண்ணம்தேதி பிரதட்சணம் பண்றது சுத்துவட்டாரத்துல உள்ள கிராமத்து மக்களோட வழக்கம். பரமாசார்யா எப்போல்லாம் அந்தப் பக்கமா போறாரோ அப்போல்லாம் அந்த மலையை பிரதட்சணம் பண்ணிடுவார். தோராயமா முப்பத்தஞ்சு, முப்பத்தாறு கிலோமீட்டர் தூரம் சுத்திவர வேண்டியது இருக்கும். ஆசார்யா கூட போறவாள்லாம், மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நடப்பா. ஆனா, பெரியவா வழக்கமா சாதாரணப் பாதையில நடக்கறதைவிட ரொம்ப வேகமா, அதேசமயம் கொஞ்சமும் தடுமாறாம அந்த மலைப்பாதையில நடப்பார்.

ஒருதரம் மார்கழி மாசம் ஒண்ணாந்தேதி அன்னிக்கு பர்வத மலையை வலம் வரணும்னுட்டு முதல்நாளே போய்பக்கத்துல முகாம் போட்டுட்டா பெரியவா. சரியான பாதை இல்லாத அந்தக் காலத்துலயே கிட்டத்தட்ட ரெண்டு லட்சம்பேர் கிரிவலம் பண்ணுவா. அதனால விடியற்காலம்பற மூணு மணிக்கே பிரதட்சணம் பண்ண ஆரம்பிச்சுடணும்னு தீர்மானிச்சார், ஆசார்யா.

அதுக்கப்புறம் பெரியவா கூட வந்த சிப்பந்திகள் எல்லாரும் போஜனம் பண்ணிட்டு தூங்கப் போயிட்டா. பாதிராத்திரி இருக்கும். சிப்பந்தியில ஒருத்தர் திடீர்னு எழுந்து உட்கார்ந்தார். தான் எழுந்துண்டதோட இல்லாம மத்தவாளையும் எழுப்பினார்.

பெரியவா என் சொப்பனத்துல வந்து, “நீங்கள்லாம் சின்ன வயசுக்காரா. பசியைத் தாங்கிண்டு பிரதட்சணம் பண்ணுவேள். சுத்துப்பட்டு கிராமத்துல இருந்தெல்லாம் பலரும் வராளே… அவாள்லாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவா? கைக்குழந்தை இருந்தாலும், அடுத்தவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாலும் எல்லாத்தையும் சகிச்சுண்டு. குழந்தைகளையும் தூக்கிண்டு பிரதட்சணம் பண்றாளே அவாளுக்கு சாப்பிட ஏதாவது பண்ணக்கூடாதா?’ன்னு கேட்டார்னு சொன்னார்.

உடனே இன்னொருத்தர், “எனக்கும் அதேமாதிரி கனவு வந்துது. பண்டிகை, நாள் நட்சத்திரம்னாதான் இனிப்புப் பண்டமெல்லாம் பண்ணணுமா? அன்னதானத்துலயும் இனிப்புப் பலகாரத்தை சேர்த்துக் குடுத்தா, பாவம் ஏழைகள் சந்தோஷப்படுவா இல்லையா?’ எப்படின்னு பெரியவா சொல்றமாதிரி இருந்துது.

அவ்வளவுதான் எல்லாரும் எழுந்துண்டுட்டா. கிரிவலம் வர்றவாளுக்கு அன்னதானம் பண்ணறது. அதுவும் இனிப்போட தர்றதுன்னு தீர்மானிச்சா. ஆனா, பரிசாரகர் சொன்ன ஒரு விஷயம் அவாளை யோசிக்க வைச்சுது. முகாம்ல கொஞ்சமே கொஞ்சம்தான் அரிசி இருக்கு. அதைவைச்சுண்டு, எப்படி லட்சக்கணக்கானவாளுக்கு அன்னதானம் பண்ண சமைக்கறதுன்னுதான் கேள்வி எழுப்பினார் அவர்.

அந்த அர்த்தராத்திரியில எங்கேயும் போய் அரிசி கேட்கவோ, வாங்கிண்டு வரவோ வசதி கிடையாது. அன்னதானம் பண்ணணும்னா, விடியற்காலம்பறவே சமையல் பண்ணிடணும் அதனால என்ன செய்யறதுன்னு அவா யோசிச்சுண்டு இருந்தப்போ, முகாமோட வாசல்ல மாட்டுவண்டி ஒண்ணு வந்து நின்றது.

அதுல இருந்து இறங்கிவந்த ஒருத்தர், “என்ன ஆச்சர்யம்! எல்லாரும் தூங்கிண்டு இருப்பேள்னு நினைச்சேன். முழிச்சுண்டு இருக்கேளே… நான் பக்கத்து ஊர்க்காரன். பரமாசார்யா பிடி அரிசித் திட்டத்தை அறிவிச்சதுல இருந்து எங்க ஊர்க்காரா எல்லாரும் அதைத் தட்டாம செஞ்சுண்டு இருக்கோம். மூணுமாசமா சேர்த்த அரிசியை காஞ்சிபுரத்துல கொண்டு வந்து தரலாம்னு நினைச்சுண்டு இருந்தப்போ, ஆசார்யா இங்கேயே முகாம் போட்டிருக்கான்னு தெரிஞ்சுது. அதான் இங்கேயே கொடுத்துடலாம்னு கொண்டு வந்தேன்’ சொல்லிவிட்டு அரிசி மூட்டைகளை இறக்கிவைக்க ஆரம்பிச்சார்.

கிட்டத்தட்ட முப்பது மூட்டை அரிசியோட சர்க்கரை, உளுந்தும் இறக்கிவைச்சார். அதெல்லாமும் சிலர் குடுத்ததா சொன்னார். “விடியற்காலம்பறவே எனக்கு முக்கியமான வேலை இருக்கு. அதனால ஆசார்யாகிட்டே என்னோட வந்தனத்தை சொல்லிடுங்கோ, நான் புறப்படறேன்’னு சொன்னவர் பதிலுக்குக்கூட காத்துண்டு இருக்காம புறப்பட்டுப் போயிட்டார்.

அன்னதானத்துக்கு ஆசார்யாளோட அனுகிரகம் கிடைச்சுடுத்துங்கறதைப் புரிஞ்சுண்டு மளமளன்னு அடுப்பைப் பத்தவைச்சு சமையலைத் தொடங்கினா எல்லாரும் உளுந்தும் சர்க்கரையும் கிடைச்சுட்டதால ஜாங்கிரியும் சேர்த்துத் தரலாம்னு தீர்மானிச்சு பண்ண ஆரம்பிச்சுட்டா.

எல்லாரும் சமைக்கறதுல தீவிரமா இருந்ததுல மணியைக்கூட பார்க்கலை. தீர்மானிச்சபடி மூணுமணிக்கு டாண்ணு பிரதட்சணத்தை ஆரம்பிச்சட்ட ஆசார்யா, சமைச்சுண்டு இருந்தவா பக்கம் மெதுவா திரும்பினார். “முப்பது மூட்டை அரிசி… அன்னதானம் பண்ண போதுமோன்னோ! பக்குவமா பண்ணி ஒருத்தர் விடாம எல்லாருக்கும் குடுத்துடுங்கோ!’ சொன்னவர், மௌனமா புன்னகைச்சட்ட நடக்க ஆரம்பிச்சுட்டார்.

வந்தது முப்பது மூட்டை அரிசிங்கறதை யாருமே மகா பெரிவா கிட்டே சொல்லலை. அது மட்டுமல்லாம, அன்னதானம் பண்ணணும்னு ஆசார்யா நேரடியா யார்கிட்டேயும் சொல்லலை. சொப்பனத்துல வந்த காட்சியை வைச்சுதான் பாதிராத்திரியில தீர்மானமே பண்ணினாங்க. இதெல்லாம் எப்படி அவருக்கு தெரிஞ்சுது? இதையெல்லாம்விட புரிஞ்சுக்கவே முடியாத புதிர் என்ன தெரியுமா? சமைச்ச முப்பது மூட்டை அரிசி ரொம்ப சரியா கிரிவலம் வந்த கடைசி நபருக்குக் குடுத்ததோட தீர்ந்துடுத்து. அதுக்கப்புறம் யாரும் வலமும் வரலை. அன்னமும் மீறலை.

கிரிவலம் வர்றவாளுக்கு அன்னதானம் பண்ணணும்கறதை தீர்மானிச்சது யாரோ, அவரேதான் அதுக்கான அரிசி உள்ளிட்ட எல்லாத்தையும் கொண்டுவந்து சேர்த்திருக்கார்ங்கறது அப்போதான் எல்லாருக்கும் புரிஞ்சுது. தெய்வம் அசரீரியாவோ கனவுல வந்தோ பேசும்னு சொல்லுவாளே, அதேமாதிர பரமாசார்யாளும் தன்னோட தீர்மானத்தை மத்தவாளுக்கு எந்த ரூபத்துல வந்து வேணும்னாலும் தெரியப்படுத்துவார்ங்கறதையும் உணர முடிஞ்சது.

Read more: http://periva.proboards.com/

Natarajan

 

” இருங்கோ ….உங்களுக்கும் ஒரு ஐஸ் வாங்கித் தரட்டுமா …” ?

குழந்தைகள் என்றாலே மகா பெரியவாளுக்கு அத்தனை

இஷ்டம். அவர்களைத் தன் அருகே காந்தம் போல் இழுத்து,

அவர்களுடன் நகைச்சுவையாகப் பேசிக் கவர்ந்து விடுவார்.

1477915_676387145739787_1550639156_n.jpg

அந்தத் தெய்வத்திடமும் குழந்தைகள் மயங்கிப் போய் விடும்.

குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கென்று மகா பெரியவாளிடம்

எப்போதும் கல்கண்டு ஸ்டாக் இருந்து கொண்டே இருக்கும்.

ஒரு முறை மகா பெரியவா காமாட்சி அம்மனைத் தரிசித்து

விட்டு காஞ்சி ஸ்ரீமடத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தார்.

அப்போது ஸ்ரீமடத்தின் வாசலில் பணக்காரக் குடும்பத்தைச்

சேர்ந்த சிறு குழந்தை (நாலைந்து வயது இருக்கலாம்)

ஒன்று குச்சி ஐஸைக் கையில் வைத்துக்கொண்டு

ரசித்து சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

ஸ்ரீமடத்தின் உள்ளே நுழையப் போன மகா பெரியவா,

வாசலில் நின்று கொண்டு இந்தக் குழந்தை குச்சி ஐஸ்

சாப்பிடும் அழகைப் பார்த்து மேலும் நகராமல் அப்படியே

நின்று விட் டார். ஆனால் குழந்தை வேறு எங்கோ

பார்த்தபடி ஐஸை நக்கிக் கொண்டிருந்தது.

ஒரு சொடக்குப் போட்டுக் குழந்தையின் பார்வையைத்

தன் பக்கம் திருப்பிய மகா பெரியவா, “என்ன,ஐஸ்

சாப்பிடறியா” என்று மழலை பாஷையில் கேட்டார்.

“ஆமா….” என்று மழலையில் துடுக்கத்தனமாகப் பதில்

சொன்ன குழந்தை, “இருங்கோ…ஒங்களுக்கும் ஒரு ஐஸ்

வாங்கித் தரட்டா?” என்று ஆர்வ மிகுதியில் கேட்டு விட்டது.

மகா பெரியவாளின் கைங்கர்யத்தில் இருந்த சிப்பந்திகளும்

மகானைத் தொடர்ந்து வந்த ஒரு சில பக்தர்களும் அந்தக்

குழந்தையை அடக்கும் வகையில் ஏதோ சொல்ல வாய் திறக்க..

அவர்கள் அனைவரையும் கை தட்டி ‘ஸ்ஸ்ஸ்..’ என்று அடக்கி

விட்டார் மகா பெரியவா.

தான் கேட்ட கேள்விக்கு மகா பெரியவா ஏன் இன்னும் பதில்

சொல்லாமல் இருக்கிறார் என்று யோசித்த குழந்தை, தான் குச்சி

ஐஸ் வாங்கித் தந்தால் மகா பெரியவா சாப்பிடமாட்டார்

போலிருக்கிறது என்று தீர்மானித்து விட்டது. உடனே,

மகா பெரியவா மேல் கோபம் கொண்டு முகத்தை வேறு பக்கம்

திருப்பிக் கொண்டது. ஆனாலும் ஐஸை சாப்பிடுவதை

மட்டும் நிறுத்தவில்லை.

இந்த ரசமான காட்சிகளை மகா பெரியவா உட்பட அங்கு கூடி

இருந்த அன்பர்கள் பலரும் ரசிக்கத்தான் செய்தார்கள்.

மீண்டும் ஒரு சொடக்குப் போட்டுக் குழந்தையின் பார்வையைத்

திருப்பி, “என்ன குழந்தே… கோபமாயிட்டே போலிருக்கு…

நான் எனக்குதான் வேண்டாம்னுதான் சொன்னேன்.

சரி….நான் சொல்ற ரெண்டு குழந்தைகளுக்கு நீ குச்சி ஐஸ்

வாங்கித் தர்றியா?”என்று மிகவும் சாந்தமான குரலில் அந்தக்

குழந்தையின் முகம் கோணாத வகையில் அமைதியாகக்

கேட்டார் மகா பெரியவா.

இந்தக் குழந்தையின் பெற்றோர் அநேகமாக,ஸ்ரீமடத்துக்குள்

மகா பெரியவா தரிசனத்துக்காகக் காத்திருக்கிறார்கள்

போலிருக்கிறது. குழந்தை ஐஸ் கேட்டதால், கையில் காசை

கொடுத்து அனுப்பிவிட்டார்கள். போலிருக்கிறது. தனக்கு ஐஸ்

வாங்கியது போகக்கையில் கொஞ்சம் காசும் மிச்சம் வைத்திருந்தது.

மகா பெரியவா கேட்டதும் அந்தப் பெண் குழந்தையின் முகத்தில் ஒரு சந்தோஷம். “சொல்லுங்கோ…நானே வாங்கித் தர்றேன்” என்றது.

உடனே ஸ்ரீமடத்தில் அப்போது பணியில் இருந்த மேலே சொன்னபணியாளரின் இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்து வரச்சொன்னார். ஒரு சிப்பந்தி ஓடிப் போய், ஸ்ரீமடத்தின் உள்ளிருந்துஅந்த இரு பெண் குழந்தைகளையும் சட்டென்று அழைத்து வந்தார்.

மகா ஸ்வாமிகள் அருகே அவர்கள் வந்தவுடன்,

“”தோ…இந்த ரெண்டு பேர்தான் நான் சொன்னவா. இவர்களுக்கும்குச்சி ஐஸ் வாங்கிக் கொடேன், சாப்பிடட்டும்” என்று சொல்ல…அந்தப் பணக்கார வீட்டுப் பெண் குழந்தை வாசலின் அருகே நின்று கொண்டிருந்த ஐஸ் வண்டிக்கு அருகே ஓடிச் சென்றுவாங்கிக்கொண்டு வந்து கொடுத்தது.

பணியாளரின் இரண்டு குழந்தைகளும் முகத்தில் மகிழ்ச்சி பொங்கஅந்தக் குச்சி ஐஸை வாங்கிச் சப்பி சாப்பிட ஆரம்பித்தன.

மகா பெரியவா முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம். பணக்கார

வீட்டுக் குழந்தையும்,ஏழையின் இரண்டு குழந்தைகளும்

ஒருசேர ஐஸ் சாப்பிடும் அழகை ஒரு சில நிமிடங்களுக்கு

நின்று வேடிக்கைப் பார்த்தார் மகா பெரியவா.

“பாவம்…இந்த வேலைக்காரனோட குழந்தை எல்லாம்

குச்சி ஐஸைப் பாத்திருக்குமா…இல்லே, இது போன்ற

தின்பண்டங்களைத்தான் வாங்கிச் சாப்பிட்டிருக்குமா?”

என்று ஸ்ரீமடத்தின் சிப்பந்திகளைப் பார்த்துச் சொல்லி விட்டு,

விடுவிடுவென ஸ்ரீமடத்தினுள் நுழைந்தார்.

‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ என்ற கோஷம் முழங்க

பக்தர்கள் கூட்டம் அவரைப் பின் தொடர்ந்து உள்ளே சென்றது.

source…..www.periva.proboards.com

natarajan

” HIS Tail is Beautifully Raised above HIS Head…”

The Anjaneyar Temple at Nanganallur, Chennai is famous for the Hanuman which is 32 feet tall and sculpted from a single piece of stone. The idol was installed in 1989 and consecrated in 1995 with the blessings of Sri Kanchi Paramacharyar.
Sri Ramani Anna of Nanganallur, Chennai planned to build a temple with a big Anjaneyar of 32 feet high, in Nanganallur. He went to Sri Kanchi Mutt, met Sri Maha Periyava and sought his permission and blessings. With great 

difficulty, they hunted for a single big stone and finally the sculptor selected a suitable one and began his work. One fine morning he finished the work and the statue of the great Anjaneyar was brought to Nanganallur and kept at the place where the temple was to be built. The Palalayam (before prathishta, the statue had to be kept for a certain period separately in the water, milk, paddy, grains etc) was established properly.
In the meantime, Ramani Anna went to Sri Kanchi Mutt to inform about the arrival of the Anjaneyar at Nanganallur and get further

instructions from Maha Periyava. Like Lord Ganesha, Anjaneya is also Maha Periyava’s favourite God! Periyava inquired enthusiastically about the full shape of Anjaneya part by part. Ramani Anna too explained and answered all the questions to the satisfaction of Periyava. Finally, Periyava asked about the position of Anjaneyar’s tail part. Ramani Anna replied, “The tail is curvaceously and beautifully raised above his head Periyava!” expecting an appreciation from the Periyava. But, Periyava was silent for a few

minutes. Ramani Anna felt a bit uneasy. Finally Periyava said, “You say you are also going to keep Sri Rama there opposite to Anjaneyar! Maruthi never stands with his tail raised above in front of Sri Rama! Ramani Anna’s worry increased considerably. He asked, “Oh! Periyava! What can I do now? The statue is completed and ready! The Palalayam too is ready. The muhurtham date and time has also been fixed. If we remove the tail now, we should again reorganise the Palalayam and the Kumbhabhishekam again. The Prathishta of Anjaneyar cannot be done in the already fixed auspicious best muhurtham. Periyava only has to show me a way and a solution for this!
Periyava said calmly, “You just proceed further with your fixed schedule. Everything will be alright. Anjaneyar will co-operate! Periyava then blessed them with prasadam. Ramani Anna came back to Nanganallur and he was thinking about Anjaneyar’s tail all the time. After the Palalayam was complete, they did all the proper Homams and other rituals and brought a big crane to lift and keep Anjaneyar on the Peetam at the auspicious time. When all the other things were over, they went to lift Anjaneyar. To their great astonishment, they found that the tail had already been cut off so expertly at the right place as though it had been done by a sculptor and that too without any flaw!!!
Can there be words to describe the state of mind of Ramani Anna and other members of the committee? They simply raised their folded hands in the direction of Sri Kanchi with tears rolling down their cheeks!!!
Jaya Jaya Sankara!!! Hara Hara Sankara!!! 
Source: shodasee.blogspot
Rama Krishnan's photo.

” இப்போ நீங்க எந்த “விங்க்”லே இருக்கிங்க …” ?

11061714_927176563979794_3577538682040105331_n.jpg

ஒருமுறை ஸ்பெயின் நாட்டிலிருந்து ஓர் அரச குடும்பத்தைச்

சேர்ந்த ஒரு பிரமுகர் வந்து மகானைத் தரிசனம் செய்கிறார்.

அவர் ஸ்பானிஷ் மொழியில் பேசியதை மகானுக்கு ஒருவர்

மொழிபெயர்த்துச் சொல்லிக்கொண்டு இருந்தார்.

நாட்டின் அதிபரைப் பற்றியோ, சீதோஷ்ண நிலையைப்

பற்றியோ விசாரிக்கலாம். இல்லை மக்களின் பண்பாடு,

கலாச்சாரம் இவற்றைப் பற்றியும் பேசி இருக்கலாம்.

இந்த எல்லா விஷயங்களையும் பத்திரிகை வாயிலாக

எல்லோருக்கும் தெரிய வாய்ப்பு உண்டு.

ஆனால் மகான் இதைப் பற்றியெல்லாம் அந்த ஸ்பெயின்

பிரபுவிடம் கேட்கவில்லை.

அவர் என்ன கேட்டார் பாருங்கள்.

“உங்கள் அரண்மனையில் நியூவிங், ஓல்ட்விங் என்று

இரண்டு இருக்கோ?”

“ஆமாம்”

“இப்ப நீங்க எந்த ‘விங்’லே இருக்கீங்க?”

“நியூவிங்” என்கிறார் அவர்.

“அங்கே தண்ணீர்,மத்தவசதி எல்லாம் இருக்கோ?”

“ஆமாம் நியூவிங் மிகவும் வசதியாக இருக்கிறதாலே தான்

அங்கே தங்கியிருக்கிறோம்.”

அடுத்து மகான் அவரிடம் ஒரு பெரிய குண்டைத்

தூக்கிப் போடுகிறார்.

“அப்போ அந்த உபயோகப்படாம இருக்கிற ஓல்ட்விங்கை

இடிச்சுட்டு, நந்தவனமா பண்ணிடலாமே” என்று அந்த

மகான் சொன்னதைக் கேட்டதும் ஸ்பெயின்

பிரமுகருக்கு ஒரு பலமான சந்தேகம் மனதில் எழுந்தது.

இப்படி தன் நாட்டின் ஒரு குறிப்பட்ட இடத்தைப் பற்றி

இத்தனை விரிவாகச் சொல்லி, அதை இப்படி மாற்றலாம்

என்று அறிவுரை வேறு கூறுகிறாரே என்று நினைத்த அவர்,

மொழிபெயர்ப்பாளரிடம், “மகான் எப்போது ஸ்பெயின்

நாட்டிற்கு விஜயம் செய்தார்?” என்று கேட்டார்.

மொழிபெயர்ப்பாளர் அதை மொழிபெயர்ப்பு செய்து பதில்

கேட்பதற்கு முன்பே சாட்சாத் பரமேஸ்வரரான மகான்,

ஒரு சைகையின் மூலம் அந்த ஸ்பெயின் பிரமுகருக்கு

பதிலளித்து விட்டார்.

தன் திருக்கரத்தால் ஒரு வட்டம் போடுவது போல் சைகை

காண்பித்து, ஓர் அர்த்த புன்னகையோடு அந்தப் பிரமுகரைப்

பார்த்தார். ஸ்பெயின் பிரமுகருக்கு அந்தக் கணமே எல்லாம்

புரிந்து போயிற்று.

‘இவர் சாட்சாத் பரமேஸ்வரரின் கலியுக அவதாரம்” என்று

தெரிந்து கொண்ட அவருக்கு மெய்சிலிர்க்க, கீழே விழுந்து

வணங்கி எழுந்து, மகானின் ஆசியைப் பெற்றார்.

Source….www.periva.proboards.com

Natarajan

” அஸ்வமேத யாகத்துக்கு நிகர் என்ன தெரியுமா …” ?

இறந்தவரை அடக்கம் செய்ய உதவுவது அஸ்வமேத யாகம் செய்ததற்கு சமம்)

ஏப்ரல் 21,2015,-தினமலர்.

18698_10153209347029244_3030028360467212073_n.jpg
அட்சய திரிதியை நாளில் செய்யும் தானம் பன்மடங்கு புண்ணியம் தரும். இந்த நன்னாளில், காஞ்சிப் பெரியவரின் பக்தர் வாழ்வில் நடந்ததைக் கேளுங்கள்.

தினமும் பிடி அரிசி தானமளித்தல், முடிந்த சேவையைச் செய்தல், அனாதையாக இறந்தவரை அடக்கம் செய்வதற்கு உதவுதல் ஆகியவற்றைக் காஞ்சிப் பெரியவர் வலியுறுத்தி வந்தார். இறந்தவரை அடக்கம் செய்ய உதவுவது அஸ்வமேத யாகம் செய்ததற்கு சமம் என்பார் அவர். பெரியவரின் இந்தக் கொள்கைகளை டில்லியில் வசித்த பெரியவர் பக்தர் ஒருவர் கடைபிடித்து வந்தார்.

ஒருநாள், கரோல் பாக் பகுதிக்குச் சென்றார். நடைபாதையில் வசித்த ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி இறந்ததை அறிந்தார். உடலை அடக்கம் செய்ய பணமின்றி, அவரது மனைவி, குழந்தைகள் செய்வதறியாமல் நின்றனர். அந்த பக்தர் அவர்களுக்கு உதவியதோடு, அவர்களுக்கு தேவையான கோதுமை மாவை தினமும் வழங்க ஏற்பாடு செய்தார். வீட்டு வேலை செய்து சம்பாதிக்கவும் வழிகாட்டினார். பிள்ளைகள் வளர்ந்து ஆளாகி விட்டனர்.

ஒருநாள் தொழிலாளியின் மனைவி பக்தரைச் சந்தித்து, “”ஐயா! இவ்வளவு காலம் உதவி செய்தீர்கள். இப்போது நல்ல நிலைமைக்கு வந்து விட்டோம். ஆதரவின்றி வாடும் ஏழைகளுக்கு நானும் உதவ விரும்புகிறேன்,” என்றார்.

பக்தரும், “”காஞ்சிப்பெரியவர் அருளால் உங்கள் தர்மச்செயல்கள் நல்லபடியாக அமையட்டும்,” என்று வாழ்த்தி அனுப்பினார். அந்த அம்மையாரும் தன்னால் முடிந்த உதவிகளை வாழ்நாள் முழுக்க செய்தார்.

பக்தர் வாழ்வில் நடந்த இன்னொரு சம்பவமும் உண்டு.

ஒருநாள் காலை 3 மணிக்கு யாரோ ஒருவர் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்தார்.

வந்தவர், தன் உறவினர் ஒருவர் மருத்துவமனையில் இறந்து விட்டதாகவும், அவர் உடலை சென்னைக்கு அனுப்ப உதவுமாறும் வேண்டினார். பக்தரும் உடலை விமானம் மூலமாக அனுப்பும் பணியில் ஈடுபட்டார்.

இதைக் கவனித்த டாக்சி டிரைவர் ஒருவர் வலிய உதவி செய்ய வந்தார். சவப்பெட்டி ஒன்றைத் தன் செலவில் தயார் செய்து, அதை விமானத்தில் ஏற்றும் வரை பக்தருக்கு உதவியாக உடனிருந்தார். டிரைவருக்கு பணம் கொடுக்க முன் வந்தார் பக்தர். அவர் மறுத்ததோடு, “”ஐயா! உங்களை எனக்குத் தெரியும். சாலை விபத்தில் சிக்கிய நான் மருத்துவமனையில் இருந்த போது, நீங்கள் நோயாளிகளுக்கு காஞ்சிப் பெரியவரின் பிரசாதம் அளித்ததோடு, விரைவில் உடல்நலம் பெறவும் பிரார்த்திக் கொண்டீர்கள். வாழ்நாளில் ஒருமுறையாவது தங்களைச் சந்திக்க எண்ணியிருந்தேன். அந்த எண்ணம் இன்று நிறைவேறியது,” என்று சொல்லி கண் கலங்கினார்.

“பெரியவர் திருவருளால் நன்மை உண்டாகும்’ என்று பக்தர் அவருக்கு நன்றி கூறினார்.

அட்சய திரிதியை என்றாலே தானத்திருநாள் தான். அவரவர் சக்திக்கேற்ப ஆதரவற்றோருக்கு உதவி செய்ய இந்நாளில் உறுதியெடுப்போம்.

காஞ்சிப்பெரியவரின் நல்லருள் பெறுவோம்

Read more: http://periva.proboards.com/thread/9118/#ixzz3YoIWdaLj

source…..www.dinamalar.com  and http://www.periva.proboards.com

natarajan