” பாரதியின் பாப்பா பாட்டு ” ….

ஓடி விளையாடு பாப்பா என்பது பாரதியார் எழுதிய பரந்து அறிமுகமான ஒரு குழந்தைகள் பாட்டு. இப் பாடலின் பல பகுதிகள் இலங்கை, இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பாட நூல்களில் இடம்பெற்றுள்ளன.

bharathiyar

இந்தப் பாடல் பெண் குழந்தைகளை சிறப்பாக ஊக்கப்படுத்தி பாடப்பட்டிருக்கும் … இதோ  அந்த  கவிதை !!!…நீங்கள்  உங்கள் குழந்தைகளுக்கு  சொல்லிக்  கொடுக்க !!!

ஓடி விளையாடு பாப்பா, – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.

சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை – நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, – இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா – ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, – தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, – நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, – நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் – அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் – இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு, – நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; – இது
வாழும் முறைமையடி பாப்பா.

source::::Dinamani  Tamil Daily…Blogsite

natarajan

Message For The Day…”Knowledge without Wisdom is Useless “…

True education will make you divine. Education is not mere knowledge of words; it should broaden the mind. The mere acquisition of degrees is valueless. Character is more important and it can be developed only by taking to the spiritual path. Of what use is an education that does not promote good qualities? Together with academic education you have to acquire wisdom and a sense of right and wrong. Knowledge without wisdom, scholarship without determination, music without melody, learning without humility, a society without discipline, friendship without gratitude, and speech without truth – all these are utterly useless. Hence everyone should seek to follow the correct path. It is not greatness that matters but goodness. Make proper use of your education for the good of society.

 Sathya Sai Baba

 

Message For the Day.”Ethical and Spritual Values to Coexist Along with Science “…

Men and women must be governed by morality. In all countries morality and integrity should be like the life breath. It is only when people adhere to morality that human ideals like fraternity, equality and liberty can become meaningful in daily life. It is because of moral values having been given the go-by, that you find today’s society filled with disorder and unrest. The world will have respite from violence only when progress in science and technology is accompanied alongside by development of ethical and spiritual values. In the economic sphere, when one’s desires are governed by righteousness, a divine impulse will arise in that person. When the quest for wealth and the concern for worldly desires are based on righteousness (Dharma), the mind will spontaneously turn towards God.

Sathya Sai Baba

 

இதுவும் ஒரு மேலாண்மைப் பாடமே!!!

தும்பா  ராக்கெட் ஏவுதளத்தில் விஞ்ஞானிகள் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை ஓயாது உழைத்துக் கொண்டிருப்பார்கள். அந்தத் திட்டத்தில் சுமார் 70 விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர்.

kalam-friends-black

தங்கள் வேலைப்பளுவின் காரணத்தாலும், பாஸின் (திட்டத் தலைவரின்) நெருக்குதலாலும் கிட்டத்தட்ட எல்லா விஞ்ஞானிகளுமே மனத்தளவில் வெறுத்துப் போயிருந் தார்கள்.  ஆனாலும் “பாஸின்’ மீது கொண்டிருந்த விசுவாசம் நம்பிக்கையால் யாரும் வேலையை விட்டு வெளியே செல்லவில்லை.

ஒருநாள் காலை ஒரு விஞ்ஞானி, பாஸிடம் வந்து, “”சார்! நம் டவுனில் நடக்கும் கண்காட்சிக்கு மாலை 6 மணிக்கு என் குழந்தைகளை அழைத்துப் போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். அதனால் இன்று 5.30 க்கு நான் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கவும்” என்றார்.
அவரும் “”சரி! நீங்கள் சீக்கிரமே வீட்டுக்குப் போகலாம்” என்று கூறிவிட்டார்.

அந்த விஞ்ஞானி தன் வேலையில் மூழ்கிவிட்டார். ஒரு சிறிய இடைவேளையில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பணியில் மூழ்கினார். தன்னை மறந்து வேலையில் இருந்து, தனது அன்றைய பணி நிறைவடையும் சூழ்நிலையில், கடிகாரத்தைப் பார்த்தால்  மணி 8.30. திடீரென, குழந்தைகளுக்கு அவர் கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்தது. தனது பாஸைப் பார்க்கப் போனால், அவர் இல்லை!

பாஸிடம் அனுமதி வாங்கியிருந்தும் இப்படியாகிவிட்டதே என்று வருத்தம் கொண்டு, குழந்தைகளையும் இப்படி ஏமாற்றிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியோடு வீட்டினுள் நுழைந்தார்.  அவர் மனைவி மட்டும் ஒரு பத்திரிகையைப் படித்துக் கொண்டு கூடத்தில் அமர்ந்திருந்தார். நிசப்தமான அந்த வேளையில் இவர் வாயைத் திறந்து எதுகேட்டாலும் அது பூமராங்காக திருப்பித் தாக்குவது போல் இவருக்குத் தோன்றியது.

இவரைப் பார்த்துவிட்ட மனைவி கேட்டாள்… “”என்ன காப்பி போடட்டுமா? அல்லது இரவு உணவே சாப்பிட்டு விடுகிறீர்களா? பசி எப்படியிருக்கிறது?”

இவர் சொன்னார்… “”காபி போட்டாயானால் எனக்குக் காப்பி கொடு. சரி; குழந்தைகள் எங்கே?”

“”உங்களுக்குத் தெரியாதா?” ஆச்சரியமாகக் கேட்டார் அவர் மனைவி. “”உங்கள் மேலாளர் 5.15 க்கு வீட்டுக்கு வந்தார். கண்காட்சிக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்றாரே!” என்று வியப்புடன் பதிலளித்தார்.

அப்போதுதான் இவர் தன் பாஸிடம் கேட்டது நினைவுக்கு வந்தது. இவர் பாஸின் மனதை அறிந்தவராதலால் நடந்ததை ஒருவாறு யூகித்துக் கொண்டார்.

5 மணி வரை இவர் தன் வேலையில் மிக உன்னிப்பாக இருப்பதைக் கண்ட பாஸ், “இவர் இப்போதைக்கு சீட்டை விட்டு எழுந்திருக்கப் போவதில்லை’ என்று முடிவு செய்து, இவர் வேலையையும் தொந்தரவு செய்யாமல், அதே நேரம் இவர் apj_kalamகுழந்தைகளுக்குக் கொடுத்த வாக்கையும் நிறைவேற்றி குழ்தைகளும் ஏமாற்றமடையாமல் இருக்க, தானே குழந்தைகளைக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அவர் ஒவ்வொரு முறையும் இப்படிச் செய்ததில்லை! ஆனால் ஒரேயொரு முறை இப்படிச் செய்ததால், தன்னுடைய அன்பையும் விசுவாசத்தையும் உறுதிப்படுத்தினார்.

எனவேதான் தும்பாவில் உள்ள அந்த விஞ்ஞானிகள்  பல்வேறு மன உளைச்சல்களுக்கும் இடையில் அந்த பாஸின் தலைமையில் தொடர்ந்து வேலை செய்தனர்.

அந்த “பாஸ்’  நமது முன்னாள் ஜனாதிபதி அ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்கள்!

source:::::Dinamalar …Tamil Daily

natarajan

Message For the Day…”A Life without Culture is like a House without Light ” …

A country does not mean a piece of earth. People make a country. And transformation should not be one dimensional. It is the entire process of refinement by which people get rid of their bad thoughts and actions, and cultivate good thoughts and do good acts in daily life. The value of a person is not derived from his or her educational qualifications alone. The cultural refinement of one’s lifestyle is also essential. A life without culture is like a house without light. A person without culture is like a stringless kite, which is tossed hither and thither. An education bereft of culture is worthless like a counterfeit coin. What is meant by culture? It is the realisation of the inherent Divinity in man and making it manifest in one’s way of life. 

Sathya Sai Baba

 

Guards ” Caught Off Guard ” …. Hilarious Video !!!

 

Being a professional guard isn’t an easy job. You have to be ready to perform complex manuavers, ride horses, be quick on your step and above all – never break formation.

Well, that’s how it’s supposed to be, anyway…  even when they are ” caught off guard ” !!!!

 

source :::: baba mail and you tube

natarajan

 

Message For the Day…” What is True Happiness ” ?

Every individual, every family, every society and every nation seeks peace in all possible ways. People are perpetually in quest of happiness. But what is the happiness they seek? Is it worldly happiness and transient pleasures? These cannot confer true happiness. Only spiritual happiness can give true happiness. Why have people lost happiness? It is because they are afflicted with insatiable desires. These desires are the cause of various maladies. It is only by limiting desires and thereby eliminating the diseases arising from them that one can secure peace. Every person should strive in every way to achieve peace as the most desirable objective. Embodiments of Love! There is no greater happiness than contentment (Santhosham). There is no penance superior to peace of mind.

 Sathya Sai Baba

“Explain Your Anger…Don’t Express It …”

Angry people tend to jump to—and act on—conclusions, and some of those conclusions can be very inaccurate. The first thing to do if you’re in a heated discussion is slow down and think through your responses. Don’t say the first thing that comes into your head, but slow down and think carefully about what you want to say. At the same time, listen carefully to what the other person is saying and take your time before answering.
Personally , according to me good communication is very important in any relationship-whether it is with your spouse, your parents, your children , your siblings or your friends. If you take the time and effort to listen to what the other person has to say and understand his doubts – a lot of problems can be solved before they even rise. A lot of us believe in themselves so much that we think we can never be wrong and we start arguing with people just to prove that they are wrong.
I talk to my mom in India every evening and when the sunsets over here- she sees sunrise at her end.. So strange and So true.. We both can go on and on with the argument – she trying to convince me that sun is just rising — and I trying to prove that the sun is setting .. We don’t realize in an argument sometimes that the other person is right keeping in mind her experiences from life and the circumstances that made her understand those kind of situations and facts and at the same time we are also right depending where we are standing. Expressing your anger or having mindless arguments over such matters will just drift us away from our loved ones and give rise to the negative energy.
May Sai give us the wisdom to understand other people and learn to communicate with them in a proper manner  .May He help us to realize that anger and arguments will never solve any problems. They just give rise to ego and make our lives complicated..  
 
 
Quote of BABA:

 Look at me with undivided attention; so will I look at you. This is the only truth that my guru had taught me. 

source>>>http://H.Deepa in debu7370.blogspot.com/   

natarajan

Message For The Day…Love All and Serve All…

You are under the mistaken notion that you are rendering service to others. You should give up such a feeling. Only then does the service you perform become real service in the strict sense of the term. Service does not merely mean helping others. The best way to love God is to love all and serve all. Your acts of service should be suffused with the spirit of love. Without the positive aspect of love, all service you render becomes negative in nature. All bodies are like bulbs and love is the main switch. Only when the main switch is pressed, will the bodies radiate light and happiness to one and all. You are switching off the main switch and trying to enjoy happiness. It is impossible! Hrid + Daya(compassion) = Hridaya (heart). Your heart should be filled with compassion. All your activities should be suffused with love. There is no strength superior to love.

 Sathya Sai Baba

பாரதி: வெடித்து அணைந்த விண்மீன்…

சரியாக, 38 ஆண்டுகள், 9 மாதங்களே வாழ்ந்த பாரதி தன் மொழிக்கும் சமூகத்துக்கும் விட்டுச்சென்றது ஏராளம். தனது குறுகிய வாழ்நாளுக்குள் எவ்வளவு செய்திருக்கிறார் பாரதி. கவிதைகள் மட்டும்தான் அவரது சாதனை என்று இன்றைய தலைமுறையினர் பலர் நினைக்கக்கூடும். கிட்டத்தட்ட, கவிதைகளுக்கு நிகரான சாதனையை பாரதி உரைநடையிலும் செய்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், அவருடைய இதழியல் பணி மகத்தான வீச்சுடையதாகவும் இருந்திருக்கிறது. சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா போன்றவை உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பாரதி பணியாற்றியிருக்கிறார். வேறு சில பத்திரிகைகளில் பங்களிப்பும் செய்திருக்கிறார். தான் ஆசிரியராகப் பணியாற்றிய ‘இந்தியா’ இதழில், தென்னிந்தியப் பத்திரிகைகளிலேயே முதன்முறையாகக் கருத்துச்சித்திரத்தை அறிமுகப்படுத்திய பெருமை பாரதிக்கு உண்டு. சமூகத்துடன் ஊடாடுவதற்கு இதழியலையும் பாரதி மிகவும் திறமையாகக் கையாண்டார். அரசாங்கத்தின் தடை, பொருளாதாரக் காரணங்கள் போன்றவற்றால் ஒவ்வொரு பத்திரிகையும் முடக்கப்பட்டாலும் உடனடியாக வேறொரு பத்திரிகையில் எப்படியும் கால்பதித்து விடுவார். அந்த அளவுக்கு அவரது இதழியல் தாகம் தணியாததாக இருந்திருக்கிறது. அதனால்தான், பத்திரிகை தொடங்குவது குறித்துத் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ‘சொத்தை விற்றேனும்’ பணம் கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்.

கவிதைகள், உரைநடை, இதழியல் எழுத்துக்கள் என்று பாரதியை எழுத்து சார்ந்த மனிதராக மட்டுமே பார்த்துவிட முடியாது. தான் வாழ்ந்த காலத்தில் மகத்தான புரட்சியாளராக பாரதி இருந்திருக்கிறார். இந்து மதத்தில் ஈடுபாடுடையவராக இருந்தாலும், சாதிப் பிரிவினைகளையும் தீண்டாமைக் கொடுமையையும் கடுமையாக எதிர்த்தார். இந்த எதிர்ப்புணர்வைத் தனது வாழ்க்கை முறையிலும் செயல்படுத்திக் காட்டினார். பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் பாகுபாடு பார்க்காமல் பழகுதல், அவர்கள் வீட்டில் உணவருந்துதல் போன்ற பழக்கங்களைத் தான் பின்பற்றியதோடு மட்டுமல்லாமல், பிறரையும் பின்பற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார். இந்தச் செய்கைகளெல்லாம் அவருடைய சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதேபோல், மத வேற்றுமையும் பாராதவர் பாரதி. அவருக்கு இஸ்லாமிய, கிறித்தவ நண்பர்கள் உண்டு. 1920-ல் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளன்று பொட்டல் புதூரில் அங்குள்ள இஸ்லாமிய மக்களிடையே இஸ்லாம் மார்க்கத்தின் பெருமையைப் பற்றி பாரதி பேசியதோடல்லாமல், தான் எழுதிய ‘அல்லா… அல்லா… அல்லா!’ என்ற பாடலையும் பாடிக்காட்டியிருக்கிறார்.

எப்பாடுபட்டாவது இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித்தர வேண்டும் என்று தவிப்புடன் போராடியவர்களில் பாரதிக்கு முதல் வரிசையில் இடம் உண்டு. இந்தத் தவிப்பின் பிரதிபலிப்புதான் மிதவாதம், தீவிரப்போக்கு ஆகிய இரு வழிகளில் தீவிரப்போக்கை பாரதி தேர்ந்தெடுத்தது. விடுதலைபெற்ற இந்தியாவை, தீண்டாமை போன்ற பிரச்சினைகள் ஒழிந்த இந்தியாவை வாழ்த்திப் பாடும் முதல் பாடகனாக, தான் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய பெருங்கனவு. நாடு விடுதலை பெறுவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டாலும்கூட, ஏதோ ஒரு முன்னெச்சரிக்கை உணர்வால் மேற்குறிப்பிட்ட லட்சிய பாரதத்தை வரவேற்று முன்கூட்டியே பாடல்களைப் பாடிவிட்டுப் போயிருக்கிறார்.

பாரதியை நம் நாடு உரிய வகையில் கெளரவித்திருக்கிறதா என்று பார்த்தால், இல்லை என்பதுதான் உண்மை. தேசப்பற்றையும் சுதேசி உணர்வையும் வடிவமைத்ததில் தேசத்தின் எந்தத் தலைவருக்கும் நிகராகப் பங்குவகித்த பாரதி, இறுதியில் தமிழகத்துக்கு மட்டுமே உரியவராகப் பார்க்கப்பட்டவரானார். தமிழகத்தால் மட்டுமே தற்போது கொண்டாடப்படுகிறார். தாகூரின் புகழை இந்திய அளவில் பரப்பவும் நிலைநாட்டவும் இந்திய அரசும் மேற்கு வங்க அரசும் எவ்வளவோ திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன. இதற்கெல்லாம் தாகூர் தகுதி வாய்ந்தவர் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால், தாகூருக்கு இணையாகக் கருதப்பட வேண்டிய பாரதி போன்றவர்களும் கெளரவப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

சமீபத்தில் பாரதியின் படம் பொறித்த நாணயம் வெளியிடப்பட வேண்டும் என்று எழுந்த சிறிய கோரிக்கையை, ‘பொருத்தமான காலம் இதுவல்ல’ என்று கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டது. ஒரு நாணயத்துக்கே பாரதிக்கு இந்தப் பாடு! இந்தப் போக்கு இந்திய அரசுக்கு அழகல்ல. தேசத் தலைவர்கள், தேச உணர்வைத் தட்டி எழுப்பிய ஆளுமைகள் போன்றோர் விஷயங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே தொடர்ந்து கவனம் கொடுக்கப்பட்டு மற்றவர்கள் நிராகரிக்கப்படுவது முறையல்ல.

‘மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்’ என்றார் பாரதி. அப்படி உயிர்த்துடிப்பு கொண்ட ஒரு சொல்லாகத் தான் வாழ்ந்து மறைந்திருக்கிறார் அவர். அந்தச் சொல்லின் பெயர் ‘உத்வேகம்’, 100 ஆண்டுகள் கடந்தும் ஒளிவீசிக்கொண்டிருக்கும் உத்வேகம் அது.

source::::The Hindu…Tamil… Editorial Tribute to  Subramania Bharathi  on his Birthday today…11 dec.