” அடுத்த தடவை கெடைச்சுடும் …” !!!


ஒவ்வொரு ப்ரதோஷத்துக்கும் எங்கிருந்தாலும் பெரியவாளை தர்சனம் பண்ணி விடுவார் ப்ரதோஷம் மாமா. என்றைக்காவது அவர் வர சற்று தாமதமானாலோ, அல்லது
வரமுடியாமல் நிர்பந்தம் ஏற்பட்டாலோ, “ஏண்டா…ப்ரதோஷம் வந்துட்டானா?” என்று பெரியவாளே அன்போடு விஜாரிக்கும் அளவு பெரியவாளிடம் அவருக்கு அன்பு.

கடம் வித்வான் சுபாஷ் சந்தரன் மாமாவின் அத்யந்த பக்தர். ஒருநாள் வயலின் ரெட்டையர்கள் கணேஷ்,குமரேஷை மாமாவின் க்ருஹத்துக்கு அழைத்துக் கொண்டு வந்து கச்சேரி செய்ய வைத்தார் சுபாஷ் சந்தரன். மாமாவின் வீட்டில் எங்கு திரும்பினாலும் பெரியவா, பெரியவா, பெரியவாதான்!

கச்சேரி பண்ணிவிட்டு கிளம்பும்போது கணேஷ்,குமரேஷ் மாமாவிடம், “பெரியவா உருவம் பொறிச்ச காசு கெடைக்குமா மாமா?” என்று கேட்டனர். அப்போது அவரிடம்
கைவசம் காசு எதுவும் இல்லை. மாமாவுக்கு “இல்லை” என்று சொல்லிப் பழக்கமேயில்லை. எனவே “அடுத்த தடவை நீங்க ரெண்டு பேரும் வரச்சே கெடைக்கும்” என்று சொல்லிவிட்டார்.

இருந்தாலும் அவர்கள் கேட்டதை குடுக்க முடியவில்லையே என்ற உள்ளூர ரொம்ப வருந்தினார். கொஞ்சநாளில் அதை மறந்தே போய்விட்டார்.

ஒரு மாசம் கழித்து கணேஷ், குமரேஷ் இருவரும் பெரியவா முன் கச்சேரி செய்யும் பாக்யம் பெற்றார்கள். சுபாஷ் சந்திரன்தான் இதையும் ஏற்பாடு பண்ணியிருந்தார். கச்சேரி செய்தவர்களுக்கு சால்வை போர்த்தி கௌரவிப்பது மடத்தின் வழக்கம். எனவே அவர்களுக்கும் அழகான சால்வை மடத்து அதிகாரியால் போர்த்தப் பட்டது.

கூடவே இருவருக்கும் ஒரு சின்ன டப்பாவும் வழங்கப்பட்டது. திறந்து பார்த்தால்…….

பெரியவா திருவுருவம் பதித்த அழகான வெள்ளிக் காசுகள்!

“அடுத்த தடவை கெடைக்கும்” என்ற பக்தனின் வாக்கை பகவான் சத்யமாக்கினான்!

பக்தன் மேல் பகவானுக்கு எத்தனை ப்ரேமை! மாமாவிடம் இதை சொன்னபோது அவரால் பெரியவாளின் அன்பை எண்ணி எண்ணி நெகிழத்தான் முடிந்தது.

Read more: http://periva.proboards.com/thread/4892/#ixzz3YBvxjcfq

Source…..www.periva.proboards.com

Natarajan

” பெருமாள் கவுண்டர் சௌக்யமா இருக்காரா …” ?

18698_10153209347029244_3030028360467212073_n.jpg

“வயது கூடக் கூட ஞாபகசக்தி குறையுதே’ என்பவர்கள் பலர். ஆனால், காஞ்சி மகா பெரியவரின் ஞாபகசக்திக்கு அளவே இல்லை.

1928… மேட்டூர் அருகேயுள்ள நெருஞ்சிப்பேட்டை கிராமத்தில் மகாபெரியவர் முகாமிட்டு இருந்தார். பக்தர்கள் அவர் முன்னால் அமர்ந்திருந்தனர். அப்போது எங்கிருந்தோ “கோவிந்த கோவிந்த…’ என்ற கோஷம் காற்றில் மிதந்து வந்தது. “”இந்த சப்தம் எங்கிருந்து வருகிறது?” எனக்கேட்டார் பெரியவர்.

“”பக்கத்தில் பாலமலைன்னு ஒரு இடம்… அதன் உச்சியில் சித்தேஸ்வரர் கோயில் இருக்கு! அங்கு ஏறும் பக்தர்கள் தான் இப்படி கோஷமிடுவார்கள்,” என்றார் ஒருவர்.

“”சிவன் கோயிலில் கோவிந்த கோஷமா.. ஆச்சரியமா இருக்கே! நானும் அந்தக் கோயிலுக்கு போகணும்!” என்றார் பெரியவர்.

“”அந்த மலையில் ஏற வேண்டுமானால் 12 மைல் (18 கி.மீ.,) நடக்கணும். வழித்துணைக்கு ஆள் வேணும்,” என்ற ஒரு பக்தர், அங்கு வழிகாட்டியாக இருந்த பெருமாள் கவுண்டர் என்பவரை அழைத்து வந்தார்.

கவுண்டருக்கு அப்போது 25 வயதிருக்கும்.கவுண்டர் வழிகாட்ட பெரியவர் ஆர்வமாக மலையேறி சித்தேஸ்வரரை தரிசித்தார்.

“”நீங்க வேணுமானா பாருங்க! இந்த சித்தேஸ்வரருக்கு ஒருத்தர் தன் சொந்தச் செலவில் கோயில் கட்டுவார். இது நடக்கும்,” என்று தன்னுடன் வந்த பக்தர்களிடம் சொன்னார் பெரியவர்.

ஆனால், ஆண்டுகள் வேகமாக ஓடி விட்டது. 62 ஆண்டுகள் சென்ற பின் 1990ல் சேட் ஒருவர் சித்தேஸ்வரரைத் தரிசிக்க வந்தார். அவரே கோயில் கட்டி கும்பாபிஷேகமும் செய்து வைத்தார்.

மேட்டூர் அணைக்கு வந்த பெரியவர், “”அடியிலே பொக்கிஷம்’ என்று சொன்னார்.

அங்கிருந்தவர்களுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. அதற்கான விளக்கமும் யாரும் கேட்கவில்லை. 70 வருடங்கள் கழித்து, அணையில் சில பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டது. உள்ளிருந்து அனுமன், ராமன், சீதா சிலைகள் கிடைத்தன. அப்போது தான் பெரியவர் சொன்னதன் அர்த்தம் ஊர் மக்களுக்கு புரிந்தது. சிலைகளை ஒரு மினிலாரியில் ஏற்றி காஞ்சிபுரத்துக்கு கொண்டு வந்தனர்.

அவற்றை பார்வையிட்ட பெரியவரிடம், “”இந்தச் சிலைகளைக் கொண்டு நாங்கள் கோயில் கட்ட தங்கள் ஆசிர்வாதம் வேண்டும்,” என்றனர். “விரைவில் நடக்கும்’ என ஆசிர்வதித்த பெரியவர், “”அது சரி…உங்க ஊருக்கு நான் 1928ல் வந்த போது, எனக்கு வழிகாட்டினாரே பெருமாள் கவுண்டர்…அவர் சவுகரியமா இருக்காரா!” என்று கேட்டார்.

வந்தவர்கள் சிலிர்த்துப் போனார்கள். நேற்று பார்த்த ஒருவரையே மறந்து விடும் இந்தக் காலத்தில், 70 வருடம் கழிந்தும் தன்னோடு வந்த வழிகாட்டியை பற்றி விசாரித்தது அவர்களுக்கு ஆச்சரியமளித்தது.

“”அவருக்கு 95 வயசாச்சு! இன்னும் நல்லாஇருக்கார்,” என்று அவர்கள் சொல்லவே, ஒரு தாம்பாளத்தில் புதுவஸ்திரங்கள் வைத்து, இதை அவரிடம் கொடுத்துடுங்கோ! நான் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்கோ” என்றார் பெரியவர்.

மகாபெரியவரின் கருணைக்கும், ஞாபகசக்திக்கும் ஈடு இணையே இல்லை…

Source……..www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/9055/#ixzz3Y32c4shA

” ஹனுமான் பலமும் பாகவதர் பாரமும் …” !!!

ஜூன் 12 காஞ்சிப்பெரியவர் ஜெயந்தி

காஞ்சிப்பெரியவர் வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். அவரது அவதார நாளை ஒட்டி, அவர் நிகழ்த்திய நகைச்சுவை சம்பவம் ஒன்றை அறிவோமா!
கும்பகோணம் சிவாலயம் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள காஞ்சிப்பெரியவர் வந்திருந்தார். கும்பாபிஷேகம் முடிந்த கையோடு, மற்ற சிவத்தலங்களுக்குச் சென்று விட்டு மாலையில் மடத்திற்கு திரும்பினார். அந்த சமயத்தில் மடத்தில் பாகவதர் ஒருவர் ராமாயண உபன்யாசம் செய்து வந்தார்.

வாட்டசாட்டமான தோற்றமும், சிவப்பு நிறமும் கொண்ட பாகவதர், தனது அந்தஸ்தை பறை சாற்றிக் கொள்ளும் விதத்தில் வைரக்கடுக்கண், பத்து விரலிலும் தங்க மோதிரம், கழுத்தில் தொடங்கி வயிறு வரை அடுக்கடுக்காய் தங்கச் சங்கிலிகள், நான்கு விரல் கட்டை ஜரிகையுடன் பட்டு வேஷ்டி, அங்க வஸ்திரம், இடுப்பில் பச்சைத் துண்டு, சிரித்தால் தெரியும் தங்கப்பல், வெற்றிலை போட்டுச் சிவந்த வாய் என படாடோபமாக இருந்தார். போதாக்குறைக்கு தான் பேசும் போது கை தட்ட பத்து “ஜால்ராக்களையும்’
அழைத்து வந்திருந்தார்.

பெரியவரும் உபன்யாசம் கேட்க வருகிறார் என்பதை அறிந்த பக்தர்கள் திரளாக கூடினர். பெரியவர் அமர்ந்திருக்க, பாகவதர் உபன்யாசத்தை தொடங்கினார். அன்றைய தினம் அனுமன் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு வந்த விதத்தை விவரித்தார். ஜால்ராக்கள் தேவையில்லாத இடத்தில் கூட கை தட்டினர். அந்தளவு அவர் ஒரு புகழ் விரும்பி.
பேச்சின் இடையே அவ்வப்போது, “ம்ஹும்…ம்ஹும்…’ என்று பெருமூச்சுவிட்டபடி, முக்கி முனங்கினார் பாகவதர். பேச்சைக் கேட்டவர்களுக்கு இது மிகவும் சங்கடமாக இருந்தது. உபன்யாசம் முடியவும், பெரியவரை அருளுரை வழங்கும்படி விழாக்குழுவினர் கேட்டுக் கொள்ள, “பெரியவர் என்ன சொல்லப் போகிறார் என கேட்க பக்தர்கள் காத்திருந்தனர். ஏன்… பாகவதரும் கூடத் தான்!

பெரியவர் ஆசியுரை வழங்கும் போது, பாகவதரின் உபன்யாசம் பற்றியும் பேசினார்.

“”பாகவதர் ஆஞ்சநேயரின் பலம் பற்றி நமக்கெல்லாம் எடுத்துச் சொன்னார். சந்தோஷம் தான்…. ஒண்டி ஆளா சஞ்சீவி பர்வதத்தை தூக்கின போது கூட அவர் இப்படி முக்கி முனங்கினாரோ தெரியல…. ஆனா, பாகவதர் வரிக்கு வரி முக்கி முனங்கியது தான் ஏன்னே புரியலை! ஒருவேளை அவர் போட்டிருக்கிற வைர, தங்க நகைகளின் பாரத்தை சுமக்க முடியாமல் தான் இப்படி முக்கி முனங்கினாரோ என்னவோ….” என்று நகைச்சுவையுடன் சொல்ல பாகவதர் தலை குனிந்து கொண்டார்.

இதைக் கண்ட பெரியவர், “”மரக்கிளை உச்சில தேனெடுக்கிறப்போ, எடுப்பவரை தேனீக்கள் கொட்டுவதுண்டு. ஆனா, தேன் கிடைக்கிற ஆசையில அதை தாங்கிப்போம். அது மாதிரி, பாகவதரின் உபன்யாசத்தைக் கேட்கிறப்போ, இந்த சின்ன குறைபாட்டையும் நாமும் பெரிசா எடுத்துக்க வேண்டியதில்லை,” என்று அவரது சொற்பொழிவு நன்றாக இருந்தது பற்றியும் சொல்லி முடித்தார்.

Read more: http://periva.proboards.com/thread/7480/#ixzz3XqoTQ97p

Source……www.periva.proboards.com

Natarajan

படித்து ரசித்தது ….” அங்கே பாட்டு , இங்கே பட்டு …” !!!

மறைந்த தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன் எழுதுகிறார்: மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோவிலில், ஒட்டக்கூத்தர் திருவிழா நடந்தது. அப்போதைய அறநிலைய துறை ஆணையர் நரசிம்மன் தலைமையில், நானும், சிலரும் பேசினோம்.
கூட்டம் துவங்குவதற்கு முன், கோவில் அறங்காவலர்கள், ஆணையர் நரசிம்மனுக்கு, ஒரு தட்டில் மாலை மற்றும் பட்டு வஸ்திரம் எடுத்து வந்தனர். சட்டென்று அந்தப் பட்டை எடுத்து எனக்குப் போட்டு, மாலையையும் அணிவித்தார் நரசிம்மன். எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.
சுவாமி தரிசனம் முடிந்த பின், கூட்டம் துவங்கியது. தலைவர் உரை முடிந்ததும், பேசத் துவங்கினேன்…
‘இன்று நாம் ஒட்டக்கூத்தர் திருநாளைக் கொண்டாடுகிறோம். சிறிது நேரத்திற்கு முன், இறைவன் சன்னிதியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது, ஒட்டக்கூத்தர் காலத்து நிகழ்ச்சி ஒன்றை நினைக்கச் செய்தது.
‘ஒட்டக்கூத்தர் அடுத்தடுத்து, மூன்று சோழர்கள் காலத்தில் வாழ்ந்தவர். இரண்டாம் குலோத்துங்கனுக்கு, அவர் ஆசிரியராகவும், அவை புலவராகவும் இருந்தார். ஒரு நாள், புலவர்களும், அறிஞர்களும் கூடியிருந்த அரசவையில், சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான் குலோத்துங்கன். அப்போது ஒட்டக்கூத்தர், அவனைப் புகழ்ந்து பாடத் துவங்கினார்.
‘தன் அரண்மனை வாயிலில் தொங்கும் ஆராய்ச்சி மணியின் நா என்றும் அசையாதபடி, யாருக்கும் குறையில்லாமல் செய்து, இவ்வுலகமெல்லாம் பரந்த குடையைத் தரித்த பிரான்…’ என்ற பொருள் அமைய,
ஆடும் கடைமணி நா அசை
யாமல் அகிலமெல்லாம்
நீடும் குடையைத் தரித்த பிரான்…
– என, தொடர்ந்து பாட்டை அவர் சொல்வதற்குள், குலோத்துங்க சோழன், தானே அப்பாட்டின் பிற்பகுதியைச் பாடினான்.
‘தினந்தோறும் புதிய கவிதையைப் பாடும், கவிப் பெருமானாகிய ஒட்டக்கூத்தனுடைய பாதத் தாமரைகளை, தலையில் அணியும் குலோத்துங்க சோழனென்று என்னை உலகினர் சொல்வர்…’ என, பொருள் அமைத்து,
என்றும் நித்தம் நலம்
பாடும் கவிப்பெரு மான் ஒட்டக்
கூத்தன் பாதாம் புயத்தைச் சூடும் குலோத்துங்க சோழன் என்றே
எனைச் சொல்லுவரே!
என்று பாடி முடித்தான். அவையோர், குலோத்துங்கனின் குரு பக்தியை பாராட்டினர்.
‘தனக்கு வந்த புகழ் மாலையை ஏற்றுக் கொள்ளாமல், அதை ஒட்டக்கூத்தருக்கே அளித்து விட்டான் குலோத்துங்கன். இங்கே, ஆண்டவன் சன்னிதியில் தமக்குப் போட இருந்த பட்டையும், மாலையையும் எனக்குப் போட்டு விட்டார் ஆணையர் நரசிம்மன். அந்த நிகழ்ச்சியும், இந்த நிகழ்ச்சியும் ஒரு வகையில் ஒப்புமை உடையதாகத் தோன்றுகிறதல்லவா? அங்கே பாட்டு; இங்கே பட்டு…’ என்றேன்.
அவையோர் இதைக் கேட்டு, கைதட்டி ஆரவாரித்தனர்; எனக்கும், என் நன்றியை ஒரு விதமாக வெளிப்படுத்தி விட்ட மகிழ்ச்சி!

Source………www.dinamalar.com

Natarajan

” பூமி பூஜை செய்த புண்ணியம் …”

ஒரு முறை ஒரு கோடீஸ்வரர் குடும்பத்தோடு வந்து காஞ்சியில் மஹா சுவாமியை வணங்கிவிட்டு , தங்கள் குறைகள் நீங்கிட வழி கூறுமாறு வேண்டினர். சில நிமிட மௌனத்திற்குப் பின் ஆச்சாரியார்

“அன்றாடமும் அதிகாலையில் வாசலில் நீர் தெளித்து கோலமிடுவது உண்டா ”

என்று கேட்டார்.

பணக்காரக் குடும்பத்தினருக்கு, ஒரு நொடி ‘சப்’பென்று போய்விட்டது. தங்களின் செல்வத்திற்கு மதிப்பு அளித்து,

‘ஒரு கோயிலுக்கு குடமுழுக்கு செய்’ , ‘ஆயிரக்கனக்கானவர்க்கு அன்னதானம் செய்’

என்று பெரிய அளவில் தான் எதாவது கூறுவார் என்று நினைத்திருந்தனர். இருந்தாலும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு, ‘செய்யப்படுகிறது’ என்றனர்.

ஆச்சரியார் அதோடு விடுவதாக இல்லை.
‘யாரால் செய்யப்படுகிறது?’ என்று வினவினார்.

இது கூடத் தெரியவில்லையா? என்ற தொனியில் ‘வேலைக்காரிதான்’ என்றாள் தனவானின் மனைவி.

மஹா ஸ்வாமிகள் பொறுமை இழக்கவில்லை. , நிதானமாக, “பூமி பூஜை செய்த புண்ணியம் வேலைக்காரியை அடைந்துவிட்டது!” என்றார்.

அவ்வளவு தான் . . . அடுத்த நொடி குடும்பமே சாஷ்டாங்கமாக பணிந்துவிட்டது.

தாய்க்குலம் குழந்தைகளை மட்டுமே அதுவும், பத்து மாதம் மட்டுமே சுமக்கிறது. பூமித் தாயோ எல்லாவற்றையும் எப்போதும் தாங்கிக் கொண்டிருக்கிறாள்.

எனவே நாம் அனைவரும் நம் குடும்பம் சிறக்க பூமி பூஜையை தினமும் நாமே செய்வோமே…

மன்மத வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன்
தேனுபுரீஸ்வரதாசன் இல.சங்கர்., மாடம்பக்கம்.சென்னை.

Read more: http://periva.proboards.com/thread/9027/#ixzz3XHGctChO

Source…….. http://www.periva.proboards.com

Natarajan

 

” படித்து ரசித்தது …” ” குடத்திலே கங்கை அடங்கும் ” !!!

சிலேடை விருந்து’ நூலிலிருந்து:

அகத்தியர், தன் கமண்டலத்தில் சமுத்திரத்தை அடக்கினார்; அது, அவரது தவ வலிமை.
காளமேகப் புலவர், குடத்திலே கங்கையை அடக்கிக் காட்டுகிறார். இது, அவரது தமிழ் வலிமை.
‘குடத்திலே கங்கை அடங்கும்…’ என்ற ஈற்றடி கொடுத்து, வெண்பா தருமாறு காளமேகத்திடம் கேட்டனர் மற்ற புலவர்கள்.
குடத்திலே, கங்கையை எப்படி அடக்குவது? காளமேகம், மறுநொடியே தம் தமிழ் மந்திரத்தால் அடக்கிக் காட்டினார்.
விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் – பெண்ணை
இடத்திலே வைத்த ஈசன், சடாம
குடத்திலே கங்கை யடங்கும்.
பொருள்: விண், மண் மற்றும் மலை என்று எதற்கும் அடங்காத கங்கை, இறைவனின் சடாமுடியில் (சிவபெருமான் தலையில்) அடங்கியிருக்கிறது!

Source:::: http://www.dinamalar.com

Natarajan

Marvellous Richie Benaud …Elder Statesman of Cricket …

Batting against England in the 1956 Ashes series.

Batting against England in the 1956 Ashes series. Source: Supplied

LEGENDARY cricket commentator Richie Benaud has died at the age of 84. In honour of his memory, we’ve pulled together his 10 greatest lines in the commentary box.

Speaking of pulling, how about this for an opener:

1. “He’s usually a good puller but he couldn’t get it up that time.”

Richie Benaud turns 84 today.

Richie Benaud turns 84 today. Source: News Limited 

 

That’s just one of many moments of comic genius Benaud has provided over the years.

He’s occasionally taken the mickey out of players.

2. “Well, Bruce Reid is not the worst batsman there is at international level? But those who are worse would not need to hire the Myer Music Bowl to hold a convention.”

3. “And Glenn McGrath dismissed for two, just ninety-eight runs short of his century.”

4. (On a Justin Langer six) “He’s not quite got hold of that one. If he had, it would have gone for nine.”

And he delivered some other classic lines as well.

5. “The slow-motion replay doesn’t show how fast the ball was really travelling.”

6. “His throw went absolutely nowhere near where it was going.”

7. “Laird has been brought in to stand in the corner of the circle.”

8. “There were no scores below single figures.”

9. (After a streaker ran on the field): “There was a slight interruption there for athletics.”

And who can forget the way he accompanied Shane Warne’s Ball of the Century in 1993.

10. “Gatting has absolutely no idea what happened to it. (He) still doesn’t know.”

 

” இந்த தூணுக்கு அடிப்பாகம் எது ….நுனி எது …” ?

1234201_315112848661397_4724600860700186658_n.jpg

பத்ராசலத்தில் ஸ்ரீராமர் கோயில் திருப்பணி

நடந்து முடிந்தது. கோயில் திருப்பணியில்

கை தேர்ந்த கணபதி ஸ்தபதி அந்த பொறுப்பை

ஏற்றிருந்தார்.

பத்ராசலத்துக்கு யாத்திரையாக வந்திருந்த

மகாபெரியவர்களிடம் “தாங்கள் அவசியம் வந்து

பார்வையிட வேண்டும்.தங்கள் கடாக்ஷம் வேண்டும்”

என அழைத்தார் ஸ்தபதி.பெரியவர்கள் கோதாவரியில்

ஸ்நானத்துக்குச் செல்லும் வழியில் அங்கே

நுழைந்தார்கள்.

கல்தூண் ஒன்றில் சிற்பம் செதுக்கும் வேலை

நடந்து வந்தது.

“இந்தத் தூணுக்கு அடிப்பாகம் எது,நுனிப்பாகம் எது”

என்று கேட்டார்கள் பெரியவர்கள். ஸ்தபதிக்கு ஒரே

திகைப்பு! ‘இதைப் பார்த்தாலே தெரிகிறதே! இப்படி

ஏதோ குழந்தைத்தனமாகக் கேள்வி கேட்கிறார்களே!’

என்று எண்ணியபடி அந்தப் பாகங்களைச் சுட்டிக்

காண்பித்தார்.

“இந்த அடிப்பாகத்தை நுனியாகவும்,நுனியை

அடிப்பாகமாகவும் மாற்றலாமா?”என்று கேட்டார்கள்.

ஸ்தபதிக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

“செதுக்குவதற்கு முன்னால் ஒவ்வொரு தூணுக்கும்

இதுதான் அடிப்பாகம்,இதுதான் நுனி என்று எப்படித்

தீர்மானம் செய்வாய்” என்று கேட்டார்கள் சுவாமிகள்.

ஸ்தபதி பதில் சொல்லத் தெரியாமல் நின்றார்.

“சுத்தி எடுத்துவா, இதைக் கீழேயிருந்து மேல் வரை

கத்தியால் தட்டு.ஏதாவது தெரிகிறதா பார்”என்றார்கள்.

தட்டியபிறகு ஸ்தபதிக்கு ஏதோ ஒரு சந்தேகம்.

ஆனால் சொல்லத் தெரியவில்லை.

“மீண்டும் ஒருமுறை தட்டு.அதிலிருந்து வரும்

சத்தத்தைக் கவனி” என்றார்கள்.

“கீழே சத்தம் ‘கணீர்’ என்று வருகிறது. மேலே செல்லச்

செல்ல சத்தம் குறைகிறது” என்றார்,ஸ்தபதி.

“மரத்திலே வைரம் பாய்ந்த கட்டை என்பார்கள்.

அது சிகப்பாகக் கெட்டியாக இருக்கும். சுலபமாகப்

பிளக்க முடியாது.அதிலிருந்துதான் மரப்பாச்சி-

மரப்பொம்மை செய்வார்கள்.நீ அதைப்பற்றி

கேட்டிருப்பாய். அதுபோலதான் கல்லிலும்

வைரம் பாய்ந்த பாகம் கெட்டியாய் இருக்கும்.

அதிலிருந்து வெண்கலம் போல ‘கணீர்’ என்று

சத்தம் வரும். அதுவும் கெட்டியாக (அடர்த்தி

நிறைந்ததாக) இருக்கும். அந்தப் பகுதியைத்தான்

அடிப்பாகமாகக் கொள்வார்கள்.

“சத்தம் அதிகம் வரும் பாகம் அடி; குறைவாக

உள்ளது நுனி. நீ சரியாகத்தான் வைத்திருக்கிறாய்.

உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. சொல்லத்தான்

தெரியவில்லை” என்றார்கள் பெரியவர்கள்.

ஸ்தபதி உடனே சாஷ்டாங்கமாகப் பெரியவர்களின்

காலில் விழுந்து நமஸ்கரித்து, “தங்கள் அருளால்தான்

எல்லாம் நன்றாக அமைய வேண்டும்” என்று

பிரர்த்தித்தார். அப்படியே அமைய ஆசீர்வதித்தார்கள்

பெரியவர்கள்.

எல்லாக் கலைஞர்களுமே இப்படித்தான் முதலில்

சாமான்யமாக மதித்து,கடைசியில்,’இவர்களிடம்

நாம் கற்கவேண்டியது நிறைய இருக்கு’ என்ற

முடிவுக்கு வருவார்கள்.

தெய்வத்துக்கு தெரியாத கலை ஏதும் உண்டா?

Read more: http://periva.proboards.com/thread/8986/#ixzz3WbYK3Z4e

source……. http://www.periva.proboards.com

Natarajan

” ஆணவமும் பொறாமையும் அறிவுக்கு சத்துரு …”

பொறாமை! அது, மனிதர்கள் அனைவரையுமே ஆட்டிப் படைக்க கூடியது. அதற்கு, படித்தவர் – படிக்காதவர் என்ற பேதமில்லை; பொறாமை, உத்தமமான பக்தர்களைக் கூட ஆட்டிப் படைத்திருக்கிறது என்பதற்கு, இக்கதையே உதாரணம்.


கிஞ்சன்வாடி என்ற கிராமத்தில், கணேச பட்டர் எனும் விநாயக பக்தர் வாழ்ந்து வந்தார். விநாயகர் மீது அவர் வைத்திருந்த துாய பக்தியின் காரணமாக, அவர் அளிக்கும் விபூதி பிரசாதத்தால், நோய் மற்றும் பிரச்னைகள் தீரும்; வறுமை நீங்கும் என்று அப்பகுதி மக்கள் நம்பினர். அதன் காரணமாக, அனைவரும் கணேச பட்டரைப் போற்றினர்.
அதே காலகட்டத்தில், துகாராம் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர், ஞான திருஷ்டி படைத்தவர்; அத்துடன், அவர், பண்டரிநாதனுக்கு படைக்கும் உணவை இறைவன் உண்டு செல்வார் என்றெல்லாம் அவரின் புகழ் பரவியிருந்தது.
இவ்விஷயத்தை கேள்விப்பட்ட கணேச பட்டருக்கு, ஒரு குடம் பாலில், துளி விஷம் கலந்தாற் போல, மனதில் பொறாமை தீ வளர்ந்தது.
‘நாளை துகாராமிடம் போய், என் கண்முன் பண்டரிநாதனை
வரவழையுங்கள் பாக்கலாம் என கேட்கப் போறேன். அப்போது, அவரோட பொய் வெளிப்பட்டு விடும். அத்துடன், நான் விநாயகரை வரவழைத்து, துகாராமை விட நான் தான் பெரிய பக்தன் என, அனைவர் முன்பும் நிரூபிப்பேன்…’ என, சபதமிட்டார் கணேச பட்டர்.
மறுநாள், நீராடி, துாய ஆடைகள் அணிந்து, ஆசார அனுஷ்டானங்களை முடித்து, கோவிலுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார் பட்டர். அப்போது, ‘ஸ்வாமி… உள்ளே வரலாமா?’ எனக் குரல் கேட்டது. வெளியே வந்து பார்த்தார். அங்கே, துகாராம் நின்று கொண்டிருந்தார். ‘ஸ்வாமி… நீங்க என்னைப் பாக்க விரும்புவதாகவும், அவருக்கு சிரமம் கொடுக்காமல், நீயே அவரைப் போய் பார்ன்னு பண்டரிநாதர் எனக்கு கட்டளையிட்டார். அதன்படி உங்களப் பாக்குறதுக்காக வந்துருக்கேன்…’ என்றார் துகாராம்.
அதைக் கேட்டதும், பட்டருக்கு கோபம் வந்து, ‘பொய் சொல்லாதீர்; இன்று நான் உங்கள சோதனை செய்ய வரப் போறத
எப்படியோ தெரிஞ்சு, பண்டரிநாதன் சொன்னதாக பொய் சொல்கிறீர். ஒரு சாதாரண வணிக குலத்தில் பிறந்த நீர், உயர் குலத்தில் பிறந்த என்னிடம் பொய் சொல்லாதீர்…’ என்றார்.
துகாராம் எவ்வளவோ சொல்லியும், அதை ஏற்கவில்லை பட்டர். இதனால், ‘சரி… இதோ நான் பண்டரிநாதரை அழைக்கிறேன், என் பக்திக்கு இரங்கி அவர் வருவார். நீங்க உங்க விநாயகரை அழையுங்க, நானும் அவரை தரிசிக்கிறேன்…’ என்றார்.
இதைக் கேட்டதும், பட்டருக்கு கோபம் அதிகமாகி, ‘அப்படியா… இதோ விநாயகரை அழைக்கிறேன்; அவர் கண்டிப்பாக வருவார்…’ என்றார்.
தகவல் அறிந்து ஊரே கூடி விட்டது. கணபதி பட்டர் கைகளைக் கூப்பி, மந்திரங்களைச் சொல்லத் துவங்கினார். ஊஹூம்… என்னென்னவோ செய்தும், விநாயகர் வரவில்லை.
அப்போது துகாராம், ‘ஸ்வாமி… விநாயகரின் பக்தர் ஒருவர், குளிப்பதற்காக குளத்திற்குச் சென்றிருந்தவர் படிக்கட்டில் வழுக்கி, குளத்தில் விழுந்து விட்டார். ‘கணேசா காப்பாற்று…’ என்று கதறிய அப்பக்தரை விநாயகர் காப்பாற்றி கரை சேர்த்து, அமைதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதனால் தான் உங்க குரலுக்கு வரவில்லை…’ என்று கண்களை மூடியபடியே சொன்னார்.
ஆனால், அதை நம்பவில்லை பட்டர்.
‘நான் சொல்வதில் நம்பிக்கை இல்லன்னா நீங்க பூஜை செய்யும் விநாயகர் கோவில்ல போய் பாருங்க உண்மை தெரியும்…’ என்றார். அதன்படி, பட்டரும், மற்றவர்களும் கோவிலுக்கு சென்று பார்த்த போது, அங்கே ஈரக் காலடிச் சுவடுகள் இருந்தன. விநாயகரின் திருமேனி முழுவதும் நனைந்திருந்தது. விநாயகர் அணிந்திருந்த ஆடைகளில் இருந்து, தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.
அனைவரும் வியக்க, உண்மையை உணர்ந்த கணேச பட்டர் தலை குனிந்தார். அவர் மனதில் இருந்த பொறாமையும் அகன்றது.
ஆணவமும், பொறாமையும் அறிவுக்கு சத்ரு; அதுவும், ஆன்மிகத்தில், பொறாமை அறவே கூடாது.
பி.என்.பரசுராமன் in Dinamalar.com

திருமந்திரம்!
என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனை செய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறை ஓங்கும்
நண்பால் ஒருவனை நாடுகின்றேனே!
கருத்து:
எலும்புகளால் பின்னி, நரம்புகளால் இழுத்துக் கட்டி, ரத்தம், சதையால் அமைக்கப்பட்ட, உடம்பு எனும் வீட்டில், உயிர் என்பது இன்பமாக நிலை பெற்று இருக்கிறது. அவ்வாறு உடம்பையும், உயிரையும் சேர்த்துத் திருவருள் புரிந்த இறைவனை, துாய்மையான அன்பினால் நான் நாடுகிறேன்.

Source……….www.dinamalar.com

Natarajan

” எத்தர்கள் எத்தனை விதம் ….Eiffel Tower ” விலைக்கு வந்த கதை …” !!!

 

‘உலக மகா எத்தர்கள்’ நூலிலிருந்து  ………….

:பாரிஸ் நகர இரும்பு வியாபாரிகளான அந்த ஐந்து பேரும், அந்நகர பொதுக் கட்டடங்களைப் பராமரிக்கும் அரசு அதிகாரியான விக்டர் லஸ்ட்விக் சொல்வதை, வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர். ‘பாரிஸ் நகரின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் சின்னமான, ‘ஈபில் டவர்’ விலைக்கு வருகிறது. அதைப் பராமரிக்க ஆகும் செலவு அதிகமாவதால், அரசு கஷ்டப்படுகிறது. எனவே, அதை அடியோடு இடித்து அப்புறப்படுத்த முடிவெடுத்துள்ளது. அதற்கு குத்தகை எடுப்பவர்கள் தங்கள், ‘டெண்டர்’களை முத்திரையிட்ட உறைகளில், தனித்தனியே கொடுத்து விட வேண்டும்…’ என்றார் லஸ்ட்விக்.
ஐந்து வியாபாரிகளும், மனக் கணக்குப் போட்டனர். ‘ஈபில் டவரை உடைத்தால், மிக உயர் ரக இரும்பு, 7,000 டன் கிடைக்குமே… என்ன ஒரு அதிர்ஷ்டம்!’ என நினைத்து மகிழ்ந்து, ஐந்து வியாபாரிகளும், ‘டெண்டர்’ அனுப்பி வைத்தனர். மறுநாளே, ஆண்ட்ரி பாஸன் என்பரின் டெண்டர் எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதாகவும், பணத்தைக் கட்ட வேண்டும் என்றும் தகவல் சொல்லப்பட்டது.
பணத்தை தயார் செய்து விட்டார் பாஸன். ஆனால், அவருக்கு ஒரு சந்தேகம்… ஈபில் டவரை இடிப்பது, டெண்டர் எடுப்பது போன்ற மிக முக்கியமான விஷயத்தை ஒரு அரசு அலுவலகத்தில் கூப்பிட்டுப் பேசாமல், ஓட்டல் அறையில் ஏன் பேசுகிறார் என்று!
மறுநாள், விக்டர் லஸ்ட்விக்கை அவரது அரசு அலுவலகத்தில் சந்தித்த போது, இச்சந்தேகத்தைக் கேட்டார் பாஸன். உடனே விக்டர், தன் உதவியாளரை வெளியே அனுப்பி விட்டு, ‘ஒரு அரசு ஊழியன் வாழ்க்கை இருக்கிறதே… அது ரொம்ப மோசம்; இதுபோன்ற பெரிய, ‘டெண்டர்’ விஷயங்களில், நாங்கள் பல கோடீஸ்வரர்களைக் கூப்பிட்டு, விருந்து கொடுக்க வேண்டும்; அன்றைக்கு பிரமாதமாக ஆடை அணிந்து, ஓடி ஓடி உபசரிக்க வேண்டும்; இவற்றை எல்லாம் இந்த அரசு கொடுக்கும் பிச்சைக் காசிலேயே முடிக்க வேண்டும். முடிகிற காரியமா? அது தான், இந்த மாதிரி, குத்தகை விடும்போது…’ என்று கூறி, ‘ஹி… ஹி…’ என்று சிரித்தார்.
புரிந்து கொண்ட பாஸன், ‘டெண்டர்’ கொடுத்ததற்காக அதிகாரிக்கு, ஒரு பெரிய தொகையைக் கொடுத்து விட்டு, ராஜநடையில் வெளியேறினார்.
ஒரு மணி நேரத்தில், ‘செக்’கைப் பணமாக்கிக் கொண்டு தலைமறைவாகி விட்ட விக்டர், அதன் பின், இன்று வரை போலீசிடம் பிடிபடவே இல்லை. !!!

Source………www.dinamalar.com

Natarajan