Life’s Greatest Gift to Grandson ….His Grandma !!!

 

A Beautiful Bond Between the Generations

This beautiful short video captures the magic of a true bond between the generations; between grandmother and grandson

, and the circle of life that bond must go through, in joy and sorrow. All of it without a word spoken. A gentle and wonderful reminder of one of life’s greatest gifts.

 

SOURCE:::::You Tube and babamail site

Natarajan

” வாழ்வில் ஒருமுறை காசி யாத்திரை அவசியம் …”

காஞ்சிப்பெரியவர் 1932ல் ராமேஸ்வரம் வந்தார். கடலில் ஸ்நானம் செய்த அவர் சிறிதளவு மணலைச் சேகரித்துக் கொண்டார். அதை அலகாபாத்திலுள்ள பிரயாகை திரிவேணி சங்கமத்தில் சேர்ப்பிக்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அது மட்டுமல்ல! தீபாவளி கொண்டாடப்படும் அக்டோபர் மாதத்தில் காசிக்கு சென்று கங்கா ஸ்நானம் செய்யவும் அவர் முடிவெடுத்திருந்தார். இதற்காக, அவர் வாகனங்கள் எதுவும் ஏற்பாடு செய்யவில்லை. நடந்தே செல்ல திட்டமிட்டார். அப்போது பெரியவருக்கு வயது 39 தான்.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, தென்காசியைச் சேர்ந்த அனந்த கிருஷ்ண சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் முன்னதாகவே காசிக்கு நடந்தே புறப்பட்டார். எந்தெந்த ஊர்களில் பெரியவர் தங்கிச் செல்ல வேண்டும் என்பதை செல்லும் வழியில் குறித்துக் கொண்டார். அவ்வாறு அவர் நடந்து செல்ல ஆறு மாதங்கள் பிடித்தன.

அவர் திரும்பி வந்து பயணத்திட்டத்தை பெரியவரிடம் அளித்தார். பெரியவரும் சிஷ்யர்களும் 1933 செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் தஞ்சாவூரிலிருந்து பயணத்தைத் துவக்கினர். செல்லும் வழியில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பெரியவர் தங்கினார். அங்கெல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து ஆசி பெற்றனர். அனந்தசர்மா வேகமாகச் சென்று திரும்பியதால் ஆறுமாதங்கள் தான் பிடித்தன. ஆனால், மகாபெரியவர் பல ஊர்களில் தங்கியதால், பிரயாகையை அடைய 1934 ஜூலை 23ம் தேதி ஆகி விட்டது. அங்கு தான் கொண்டு சென்ற ராமேஸ்வரம் மணலை, திரிவேணி சங்கமத்தில் சேர்ப்பித்தார். அங்கேயே செப்டம்பர் மாதம் வரை தங்கி விட்டார். செப்டம்பர் இறுதியில் காசி கிளம்பினார்.

அவரிடம் பக்தர்கள்,””இப்போதே நீங்கள் வெகு தூரம் நடந்து வந்து விட்டீர்கள். இனியும் நடக்க வேண்டாம். சாலை வசதி நன்றாக இருக்கிறது. வாகனத்தில் வாருங்கள்,” என கோரிக்கை வைத்தனர். மகாபெரியவர் அதை ஏற்கவில்லை. தொடர்ந்து நடந்தே காசியாத்திரையைத் தொடர்ந்தார். பிரயாகையில் இருந்த பக்தர்கள் பலரும் அவருடன் சென்றனர். அக்டோபர் 3ம் தேதி காசி எல்லையை அடைந்த சுவாமிகளை காசி மகாராஜா உள்ளிட்டோர் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

வரவேற்பு விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அக்டோபர் 7ல் மகாபெரியவர் கங்கையிலுள்ள மணிகர்ணிகை உள்ளிட்ட தீர்த்தக்கட்டங்களில் தீர்த்தமாடினார். பண்டித மதன்மோகன் மாளவியாவின் அழைப்பை ஏற்று காசி இந்து சர்வகலாசாலையில் (பல்கலைக்கழகம்) உரையாற்றினார்.

ஒவ்வொரு இந்துவும் வாழ்வில் ஒரு முறையேனும் காசி யாத்திரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

நாமும் மகாபெரியவர் ஆசியுடன், அடுத்த தீபாவளிக்குள் ஒருமுறை காசி யாத்திரை சென்று திரும்புவோம்.

Rea d more: http://periva.proboards.com/thread/8187/#ixzz3H3oLJzUS

 

Source::::www.periva.proboards.com

Natarajan

” A Blessing is Something Money can Never Buy …”

 

Diwali is round the corner. While most people, staying away from their parents, have already planned a trip back home, there are a few who can’t. Maybe it’s work, maybe it’s studies or maybe it’s the distance.

This video beautifully captures the emotional journey of an abrupt decision to spend the festive days with your close ones. Because having a place to go is home, having someone to love is family & having both is a blessing.

And that blessing is something money can never buy.

SOURCE::::  Storypick and youtube

Natarajan

” மெட்ராஸ்லே இப்போ மழை பெய்கிறதா…? “

ப்ரவசன மேதை, ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரைத் தெரியாதவர்கள் இல்லை. சைவ வைஷ்ணவ பேதம் அறியாதவர் என்பது மட்டும் இல்லாமல், பெரியவாளுடைய மஹா மஹா பக்தர்! தன்னுடைய ப்ரசங்கங்களில் பெரியவாளைப் பற்றி குறிப்பிடாமல் இருந்ததே இல்லை. முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார மாதிரி!

மெட்ராஸில் ஒரு சமயம் ப்ரவசனம் பண்ணிக் கொண்டிருந்த போது, பெரியவாளுடைய கருணையைப் பற்றி பேசுகையில், பல வர்ஷங்களாக ஒரு துளி கூட மழையே இல்லாத பல இடங்களில், பெரியவாளுடைய கருணையால், மழை பெய்து சுபிக்ஷமான, விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார். எல்லா இடத்திலும் விதண்டாவாதம் பண்ணும் ஆஸாமிகள் இருக்கத்தானே செய்வார்கள்? அந்த சபையிலும் ஒருவர் திடீரென்று எழுந்தார்………..

” நீங்க அந்த ஸ்வாமிகள் மழையை பெய்ய வெச்சார்….ன்னு சொல்லறீங்களே! அது நெஜம்னா…….இன்னிக்கு இங்கே மெட்ராஸ்ல மழையை வரவழைக்க உங்க பெரியவங்களால் முடியுமா?”

கேள்வியில் நையாண்டி, சவால், எகத்தாளம் எல்லாம் தொனித்தது.

பெரியவாளுடைய கருணை உள்ளத்தைப் பற்றிப் பேசும்போதும், கேட்கும்போதும் மனஸ் நிரம்பி, கண்களில் நீர் தளும்பும் ஒரு “கத் கத”மான பரவஸ நிலை, சாதாரணமான பக்தர்களுக்கே உண்டு என்றால், எம்பார் போன்ற மஹா மஹா பக்தர்கள் எப்பேர்பட்ட நிலையில் இருந்து அதை அனுபவித்திருப்பார்கள் ! உள்ளிருந்து பேச வைப்பதும் அவர்தானே?

“ஏன் பெய்யாது? பெரியவாளோட அனுக்ரகத்தால இன்னிக்கு நிச்சியமா மெட்ராஸ்ல மழை பெய்யும்!” அழுத்தந்திருத்தமாக, அடித்துச் சொல்லிவிட்டார். அப்போது ஒரு உத்வேகத்தில் அப்படி சொல்லிவிட்டாரே தவிர,” ஒரு வேளை மழை பெய்ய லேன்னா.?………. பெரியவாளோட பேருக்கு ஒரு களங்கம் வந்துடுமே! நாராயணா! அனாவஸ்யமா இப்பிடி ஒரு விதண்டாவாதத்தை நான் கெளப்பி இருக்க வேண்டாமோ……….” என்று உள்ளூர ஒரே கவலை எம்பாருக்கு!

ப்ரசங்கம் முடிந்தும் கூட அந்த விதண்டாவாதி அங்கேயே அமர்ந்திருந்தார்…….. ….மழை வருகிறதா? என்று பார்க்க!

பக்தனை பரிதவிக்க விடுவானா பகவான்? அங்கே காஞ்சிபுரத்தில் பெரியவா சுமார் ஒரு மணிநேரம் ஜபத்தில் இருந்தார். மெதுவாக கண்களைத் திறந்து அருகில் இருந்தவர்களிடம் சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியைக் கேட்டார்…………

“ஏண்டா?…………இப்போ மெட்ராஸ்ல மழை பெய்யறதா?”

சுற்றி இருந்தவர்கள் மலங்க மலங்க முழிப்பதைத் தவிர ஒன்றும் பண்ணத் தெரியாமல் இருந்தனர்! ஆம். மெட்றாஸ் முழுக்க அப்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது! மஹா பக்தரான எம்பாரின் கண்களிலும் நன்றிக் கண்ணீர்! ஆனந்தக் கண்ணீர் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது!

அந்த விதண்டாவாதி, ஒன்று……….மழையில் தொப்பலாக நனைந்து கொண்டே வீடு போய் சேர்ந்திருப்பார். அல்லது, மழை நிற்க காத்திருந்து லேட்டாக வீட்டுக்கு போய் வீட்டுகார அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார்!

யார் கண்டது?

SOURCE:::: WWW.PERIVA.PROBOARDS.COM

Natarajan
Read more: http://periva.proboards.com/thread/1619/surrender#ixzz3Gb30iTFz

Teachers and Friends Recall CEA’s Fun-Filled Student Days @ IIM Ahmedabad !!!

Teachers and friends of India’s new Chief Economic Advisor Arvind Subramanian remember how his friends and he once bought a second-hand car from the money they earned during summer assignments while studying at the Indian Institute of Management (IIM)-Ahmedabad.

Arvind Subramanian

 

“I remember some of the students, including Arvind Subramanian, Ivan Menezes (now, chief executive of Diageo) and Lalit Bhojwani (of Origin Consultants), had bought a second-hand car out of the money they earned for their summer assignments,” said Nayan Parikh, president, IIM-A Alumni Association, and Subramanian’s batchmate. “Often, the car would not start and other students would be called to push it.”

Subramanian was a student at the premier management institute from 1979 to 1981, pursuing a post-graduate programme. He was taught by such luminaries as former Reserve Bank of India (RBI) Governor C Rangarajan and former IIM-A director Bakul Dholakia. They all remember Subramanian as a bright student, interested in research, with a deep liking for economics and finance. They are also confident that the country’s economy is now in safe hands.

“This is a positive development for the IIM-A fraternity. Raghuram Rajan as RBI governor and now Arvind Subramanian as chief economic advisor are going to make significant contribution to the Indian economy,” said Dholakia, now the director-general of International Management Institute.

“A highly established and talented faculty member like Rangarajan became the RBI Governor, as did Rajan. Now, Subramanian is the CEA. IIM-Ahmedabad is making a significant contribution in the building of the Indian economy.”

Remembering Subramanian as a “bright student”, Dholakia said, “He was deeply interested in economics and finance. We had a compulsory course on macroeconomics called Economic Environment and Policy, which Rangarajan and I used to teach.” Dholakia also remembers Subramanian had an inclination for research and was not interested in pursuing a corporate career.

Another faculty who remembers the new CEA from when he was a student is Abhinandan Jain. “He was down-to-earth and understated.”

Source::::www.business-standard.com

Natarajan

” பிள்ளையார் இங்கே தும்பிக்கை ஆழ்வார்…” !!!

1f22d-1

”மகா பெரியவா தனக்கு நெருக்கமா இருக்கறவாகிட்டயும், தன்னைச் சுத்தி இருக்கறவாகிட்டேயும்தான் கருணை காட்டுவார்னு நினைச்சா, அது தப்பு. அவருக்கு எப்பவுமே ஜனங்கமேல அபரிமிதமான அன்பு உண்டு. அவங்க கஷ்டப்படறதைப் பொறுத்துக்கவே மாட்டார். அவரால அதை சகிச்சுண்டு இருக்கமுடியாது!” என்ற பீடிகையுடன், பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி ஒன்றை விவரித்தார் பட்டு சாஸ்திரிகள்.

”திருமழிசைஆழ்வார் பிறந்த க்ஷேத்திரம் திருமழிசை. அந்த ஊருக்குப் பக்கத்திலேயே நூம்பல்னு ஒரு கிராமம் இருக்கு. இங்கே, மகா பெரியவா ஒருமுறை முகாமிட்டிருந்தார்.

ஒருநாள்… திருக்குளத்துல ஸ்நானம் பண்ணிட்டு, பக்கத்திலேயே இருக்கிற பெருமாள் கோயிலுக்கு வந்தார் பெரியவா. அப்போ மணி 11 இருக்கும்; சுள்ளுனு வெயில் அடிச்சிண்டிருந்தது. சூடுன்னா அப்படியொரு சூடு!

கோயில் வாசல்ல பெரிய கதவும், அதுலேயே சின்னதா ஒரு கதவும் இருக்கும். அதைத் திட்டிவாசல்னு சொல்லுவா! அந்த வழியா உள்ளே போன பெரியவா, மதிலை ஒட்டி கொஞ்சம் நிழல் இருந்த இடத்துல போய் அப்படியே சாய்ஞ்சு உட்கார்ந்துட்டார். அவருக்கு எதிரே அடியேன்; பெரியவா கேக்கறதுக்கு எல்லாம் பதில் சொல்லிண்டு இருந்தேன்.

வெயில் நெருப்பா கொதிச்சிண்டு இருந்த இடத்துல நின்னுண்டிருந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே நின்னுண்டிருந்தா, காலே பொசுங்கிடும்போல இருந்துது. அப்படியரு சூடு! பெரியவாகிட்டே பேசிண்டிருந்த அதே நேரம், தரையோட சூடு பொறுக்கற வரைக்கும் ஒரு கால், அப்புறம் சட்டுன்னு அடுத்த கால்… இப்படியே கால்களை மாத்தி மாத்தி வெச்சு நின்னு சமாளிச்சுண்டிருந்தேன்!

மகா பெரியவா, நம்மோட மனசுல என்ன இருக்குங்கறதையே தெரிஞ்சுக்கற மகான். எதிர்ல நிக்கற என்னோட நிலைமை அவருக்குத் தெரியாம இருக்குமா? சட்டுன்னு பேச்சை நிறுத்தின பெரியவா, ”வெளியில என்னவோ பேச்சு சத்தம் கேக்கற மாதிரி இருக்கு. என்னன்னு போய்ப் பார்த்துட்டு வந்து சொல்லு!”ன்னார்.

விறுவிறுன்னு வெளியே வந்தேன். வாசல்ல நின்னு எட்டிப் பார்த்தேன். அங்கே ஒரு நூத்தம்பது, இருநூறு பேர் நின்னுண்டிருந்தா. எல்லாரும் மகா பெரியவாளை தரிசிக்கிறதுக்காகத்தான் நிக்கறாங்கன்னு தோணுச்சு. பெரியவாகிட்ட வந்து விவரத்தைச் சொன்னேன்.

ஆனா மகா பெரியவாளோ, ”அவா எதுக்கு வந்திருக்கா? ஸ்வாமி தரிசனத்துக்குதானே வந்திருக்கா?! சரியா கேட்டுண்டு வா!”ன்னு மறுபடியும் என்னை அனுப்பினார்.

‘அடடா… பெரியவா சொல்றதுபோல, வெளியில நிக்கறவா எல்லாரும் ஸ்வாமி தரிசனத்துக்கு வந்திருக்கலாம், இல்லையா? நமக்குத் தோணாம போச்சே! பெரியவாளை தரிசனம் பண்ணத்தான் வந்திருக்கானு நானாவே எப்படி நினைச்சுக்கலாம்?’ என்று யோசிச்சபடி, வாசல் பக்கம் நகர்ந்தேன்.

”அப்படியே கையோட, அவாள்லாம் வெயில்ல நிக்கறாளா, நிழல்ல நிக்கறாளானு பார்த்துண்டு வா”ன்னார் பெரியவா.

‘நீ மட்டும்தான் கால் சூட்டோட என்கிட்ட பேசிண்டு நிக்கறதா நினைக்கறியோ?! உன்னைப்போல எத்தனை பேரு வெயில்ல கால்கடுக்க நின்னுண்டிருக்கானு உனக்குத் தெரியவேணாமா?’ன்னுதான், மகா பெரியவா என்னை அனுப்பிவைச்ச மாதிரி தோணிச்சு எனக்கு.

ஜனங்க கூட்டமா நின்னுண்டிருந்த இடத்துக்கு வந்தேன். ”எல்லாரும் கோயிலுக்கு ஸ்வாமி தரிசனத்துக்கு வந்திருக்கேளா… இல்ல, மகா பெரியவாளை தரிசிக்க வந்திருக்கேளா?”ன்னு கேட்டேன்.

”பெரியவாளை தரிசனம் பண்ணி, ஆசீர்வாதம் வாங்குறதுக்குதான் வந்திருக்கோம்”னு கோரஸா பதில் சொன்னா. ஓடி வந்து பெரியவாகிட்ட விஷயத்தைச் சொன்னேன்.

அவர் உடனே எல்லாரையும் உள்ளே அனுப்பிவைக்கச் சொன்னார். ”இங்கே மதிலோட நிழல் விழறது. எல்லாரும் அப்படியே நிழல்ல உட்கார்ந்துக்குங்கோ”ன்னார்.

வெயிலின் உக்கிரத்தைத் தாங்கமுடியாம தவிச்ச என்னோட நிலைமையைக் கவனிச்ச அதே நேரம், வெளியே ஜனங்க நின்னுட்டிருக் கிறதையும், அவங்களும் வெயில்ல கஷ்டப் படுவாங்களேங்கிறதையும் பெரியவா யோசிச்சு, அவங்களை உடனே உள்ளே அனுப்பச் சொன்னார் பாருங்கோ, அதான் பெரியவாளோட பெருங்கருணை.

இதைக் கேட்கறதுக்கு ரொம்பச் சின்ன விஷயம்போலத் தெரியலாம். ஆனா, எந்த ஒரு சின்ன விஷயத்துலேயும் நுணுக்கமான பார்வையோடு, ஜனங்க மேல மகா பெரியவா காட்டின அன்பையும் அக்கறையையும்தான் நாம இங்கே முக்கியமா கவனிக்கணும்.

கூட்டத்தோடு பேசிண்டிருந்த நேரத்துல, ”நீ போய் கோயிலைச் சுத்திப் பார்த்துட்டு வா”ன்னு என்னை அனுப்பினார். பெரியவா உத்தரவு ஒவ்வொண்ணுக்கும் ஏதாவது உள் அர்த்தம் ஒண்ணு இருக்கும்.

நான் பிராகாரத்தை வலம் வந்தப்ப, அங்கே பிள்ளையார் சந்நிதியைப் பார்த்தேன். ஆச்சரியமும் குழப்பமுமா இருந்தது. தென்கலை நாமத்தோட காட்சி தந்தார் பிள்ளையார். பெருமாள் கோயில்ல பிள்ளையார் எப்படி? தலையைப் பிய்ச்சுண்டேன். யோசிக்க யோசிக்க, பதிலே கிடைக்கலை.

கோயிலைச் சுத்தி முடிச்சு, மகா பெரியவா எதிரே வந்து நின்னேன். என்னை ஒருகணம் உத்துப் பார்த்தார்.

”என்ன… தென்கலை நாமம் போட்ட பிள்ளையார் இருக்காரேனு பிரமிச்சுட்டியோ? வைஷ்ணவ சம்பிரதாயப்படி அவரை ‘தும்பிக்கை ஆழ்வார்‘னு சொல்லுவா!”னு விளக்கம் சொல்லிட்டுச் சிரிச்சார் பெரியவா.

SOURCE::::www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/3023/thumbikkai-aazhwar#ixzz3GCEjiAW2

” அந்த வீணையை நான் வாசிக்கலாமா ….” ?

Source: Dinamalar dated 07 Oct 2014

ஒரு சமயம், மகாபெரியவர் மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் தங்கி இருந்தார். ஒரு அரசமரத்தின் கீழ் இளைப்பாறிய அவர், மரத்தின் வேரில் தலையை வைத்துப் படுத்துக் கொள்வார். முன்னால் திரை போட்டிருக்கும்.

பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கும் சமயத்தில் மட்டும், திரையை விலக்குவார்கள்.

அன்று, சென்னையில் இருந்து வீணை வித்வான் ஒருவர் பெரியவரைத் தரிசிக்க நண்பருடன் வந்திருந்தார். பெரியவரைத் தரிசனம் செய்த அவர், அவரது அனுமதி பெற்று, வீணையை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். பக்தர்கள் எல்லாரும் அந்த இசைமழையில் நனைந்து கொண்டிருந்தனர். வாசித்து முடித்ததும், வீணையை உறையில் இட தயாரானார் வித்வான்.

பெரியவர் அவரிடம், “”அந்த வீணையை என்னிடம் கொடு. நான் அதை வாசிக்கலாம் இல்லையா?” என்று கேட்டார்.

பெரியவர் வீணை வாசிக்கப் போகிறாரா என்று எல்லாருக்கும் திகைப்பு. வித்வான் உட்பட..! ஆனால், எதற்காக வாசிக்க இருக்கிறார் என்பது மட்டும் யாருக்கும் புரியவில்லை.
வீணையைக் கையில் வாங்கிய பெரியவர் சுருதி கூட்டி, வித்வானிடம் காட்டினார். “”நான் சுருதி கூட்டியிருப்பது சரியா இருக்கான்னு பாரு,” என்றார்.

வித்வானும், “”சரியா இருக்கு” என்று சொல்ல, பெரியவர் வீணை வாசிக்க ஆரம்பித்து விட்டார்.

சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கும்! வித்வான் பெரியவரின் பாதங்களில் விழுந்தார். கன்னத்தில் போட்டுக் கொண்டு, “”பெரியவா! என்னை மன்னிக்கணும்! என்னை மன்னிக்கணும்! தப்பு பண்ணிட்டேன்! தப்பு பண்ணிட்டேன்,” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே கதறி அழ ஆரம்பித்து விட்டார்.

பெரியவர் வாசித்து முடித்தார். பின் வீணையை அவரிடம் திருப்பிக்கொடுத்து, “”வித்யா கர்வம் ஒருவனுக்கு கூடாது. கவனமாக இரு,” என்று சொல்லி ஆசிர்வாதமும் செய்தார். வித்வானுடன் வந்த நண்பருக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.

பின் நண்பர் வித்வானிடம்,”” இங்கே என்ன நடந்தது? நீ தப்பு பண்ணிட்டதா கதறி அழுதே! பெரியவர் வித்யாகர்வம் கூடாது என்றார். அப்படி என்ன தான் இங்கு தவறு நடந்தது?” என்றார்.

வித்வான் திகைப்பு கலையாமல் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

“”கைலாய மலையைத் தூக்க முயன்ற ராவணனின் கைகள் மலையின் அடியில் சிக்கிக் கொண்டன. அப்போது, அவன் சாமகானம் இசைத்து சிவனை மகிழ்வித்து விடுதலை பெற்றான் இல்லையா! அதுபோல, நானும் இங்கே சாமகானம் வாசிக்க துவங்கினேன். ஆனால், திடீரென எப்படி வாசிப்பது என்று மறந்து போய்விட்டது. இது யாருக்கு தெரியப்போகிறது என, ஏதோ ஒன்றை வாசித்து நிறைவு செய்து விட்டேன். பெரியவர் இதைக் கண்டுபிடித்து விட்டார். என்னிடம் வீணையை வாங்கி, அந்தப் பகுதியை சரியாக வாசித்து நிறைவு செய்து விட்டார். பெரியவர் ஸர்வக்ஞர் (எல்லாம் அறிந்தவர்). அவருக்கு எல்லாம் தெரியும் என்பது எனக்கு தெரியாமல் போச்சே! அபச்சாரம் பண்ணிட்டேனே! அதனால் தான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்,” என்றார்.

நமக்கு தெரிந்ததைச் செய்ய வேண்டும். தெரியாத விஷயங்களைத் தெளிவாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பாடத்தை இதன் மூலம் வாழும் தெய்வமான மகாபெரியவர் நமக்கு இதன்மூலம் உணர்த்தியிருக்கிறார்.

Read more: http://periva.proboards.com/thread/8118/#ixzz3G2m7uTIf

Source”::::: http://www.periva.proboards.com

Natarajan

” இது அவார்டா …இல்லை விருதா ….” ?

சுக்கல் சுக்கலாக உடைந்த கடமும் பெரியவரின் ஆசியும்”

விநாயக் ராம்-எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி-காஞ்சி பெரியவர்.

(குருவே சரணம் புத்தகத்தில் விநாயக் ராம் கட்டுரை)

கட்டுரையில் ஒரு பகுதி.

1f22d-1

இப்படி நிறைய வாசித்துக்கொண்டு இருக்கும் போது எனக்கு காஞ்சி சங்கர மடத்தின் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் அருள் கிடைத்தது. மடத்திற்கு 88, 89 லிருந்தே போவேன். அவர்கள்தான் தெய்வம் என்று எண்ணி உள்ளேன். எம்.எஸ் அம்மாவுடன் மடத்தில் வாசித்திருக்கிறேன். அப்பா இறந்து போன பிறகுதான் எனக்கு கலைமாமணி போன்ற எல்லாப் பட்டங்களும் கிடைத்தன. அக்காலத்தில் சங்கீத நாடக அகாடெமி விருது பிரதான வித்வான்களுக்குத்தான் கிடைக்கும். பிறகு வயலின், மிருதங்கத்திற்குக் கொடுக்க ஆரம்பித்தனர். உப பக்க வாத்தியங்களுக்கு கிடையாது. இவர்களையெல்லாம் தாண்டி கடத்துக்கு கிடையவே கிடையாது. ஆனால் எனக்கு சங்கீத நாடக அகடெமி அவார்டு கிடைத்தது. கிடைத்தவுடன் பெரியவரிடன் சென்றேன். ஆசீர்வாதம் வாங்கப் போனேன். அவரிடம் கூறியபோது, ‘இது அவார்டா, இல்லை விருதா?’ என்றார். இரண்டிற்கும் வித்யாசம் எனக்கு புரிய வில்லை. ‘என்ன அவார்ட் பணம் அவார்டா, எவ்வளவு, ஒருதரம் தான் கொடுப்பார்களா அல்லது ஒவ்வொரு ஆண்டுமா?’ என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

டெல்லியில் அப்போது அவார்ட் வாங்குகிறவர்கள் கச்சேரி செய்ய வேண்டும். பாட்டு, வயலின், மிருதங்கம் எல்லாம் தனித்தனியாக வாசித்து விடுவார்கள். ஆனால் கடத்திற்கு தனியாக கச்சேரி கிடையாது. மிருதங்கத்துடன்தான் வாசிக்க வேண்டும். அப்போது செகரெட்டரி, ‘கடத்திற்கு தனி அந்தஸ்து கொடுத்து இருக்கிறோம். நீங்கள் தவிலுடன் வாசிக்கிறீர்களா’ என்றார். சரி என்று சொல்லிவிட்டேன். வலையப்பட்டியுடன் வாசிக்க வேண்டும். அவர், நான் தனியாக தவில் வாசிக்க மாட்டேன் எனக்கு உடன் திருவிழா ஜெய்சங்கர் நாகஸ்வரம் வாசிக்க வேண்டும் என்று கூறி விட்டார். சரி என்று சொல்லிவிட்டனர். இப்போது நாதஸ்வரத்திற்கு தவில், கடம் என்றானது. முதன் முதலில் நாதஸ்வரத்திற்கு நான் கடம் வாசித்ததால் பெரும் பெயர் கிட்டியது. உப பக்க வாத்யம் மாதிரி இல்லாமல் நாகஸ்வரத்திற்கு கடம் என்றானது. அவர் வாசிக்க, எனக்கு பரிபூரணமாக என்னுடன் இருக்கும் காஞ்சிப் பெரியவரின் ஆசியுடன் நான் வாசிக்க, ரசிகர்கள் மனதில் மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்து. அது எனக்கு பெரிய கைதட்டலை வாங்கிக் கொடுத்தது.

ஆர்.வெங்கட்ராமன் அவர்கள்தான் அப்போது ஜனாதிபதி, கிரீஷ் தான் செகரெட்டரி. இதுவரை இந்த அவார்டுக்கு, 10,000, 15,000 ரூபாய்தான் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். இந்த ண்டு முதல் 25,000 ரூபாயாக ஆக்குகிறோம் என்று சொல்லி, ரூ25,000/- கொடுத்தார்கள். காஞ்சிப் பெரியவரின் கேள்வியின் அர்த்தம் எனக்கு அப்போதுதான் புரிந்தது. திரும்பி வந்தவுடன் அப்பாவிடம் இதைக் கூறினேன்.

பதினைந்தாயிரம்தான் தருவார்கள். எனவே அந்தப் பத்தாயிரத்தை பெரியவர் பாதத்தில் சமர்ப்பித்துவிடு என்றார். பெரியவர் லேசில் பாதம் காட்ட மாட்டார். அவர் என்னை வாசிக்கச் சொன்னார். என்னுடைய அண்ணா, அவர் நிறுத்தச் சொல்லும் வரை வாசி என்றார். நீயாக நிறுத்தாதே என்றும் சொன்னார். நான் அரை மணி வாசித்தேன், ஒரு மணி வாசித்தேன், அவர் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. வாசித்து வாசித்து என்னிடமிருந்த சரக்கெல்லாம் தீர்ந்துவிட்டது. அவர் பாட்டுக்கு வருபவர்களுடன் பேசுகிறார். பிரசாதம் தருகிறார். நானோ வாசித்ததையே திரும்ப வாசிக்கிறேன். எனக்கு அசந்து போய்விட்டது. பெரியவர் திரும்பிப் பார்க்கும் போது, போதும் வா என்று கூப்பிடுவார் என்று எண்ணினால் இன்னும் வாசி என்று சொல்லிவிட்டார். எனக்குக் கையெல்லாம் ஓய்ந்து கண்களில் கண்ணீர் வந்து விட்டது. அதன் பிறகும் ஒரு மணிநேரம் கழித்து போதும் என்றார். நான் உன்னை வாசி என்றேன். அதைத் திருப்பிப் போட்டு வாசி என்றார். இது சிவனுக்கு அர்ப்பணம் என்று சொல்லி பிரசாதம் கொடுத்தார். ஆசீர்வாதம் செய்தார். அவர் பாதத்தில் 10,000 ரூபாயை வைத்து காணிக்கையாக செலுத்தி விட்டு வந்தேன்.

கதையல்ல, உண்மை

அதன் பிறகு நிறைய வாசித்தேன். ரவிசங்கர், அல்லா ராக்கா, ஹரிப் பிரசாத் சௌராஸ்யா போன்ற வட இந்தியக் கலைஞர்கள் பலருடனும் வாசித்தேன். ஒரு மாதம் டூர் ஜெர்மனியில். நான், ஜாஹிர் ஹுசைன், ஹரிப்பிரசாத் சௌராஸ்யா எல்லோரும் போயிருந்தோம். எல்லாம் முடிந்து கடைசிக் கச்சேரி. ஏர் போர்ட்டில் இறங்கியவுடன் டிராலி என்ற தள்ளு வண்டி இருக்கும். இங்கேயும் இருந்தது. னால் இங்கே கைப்பிடியைப் பிடித்தால் நிற்கும் விட்டால் போய்விடும் என்பது எனக்குத் தெரியாது. நான் மற்ற பொருட்களுடன் கடத்தையும் வைத்துவிட்டு, கையை விட்டுவிட்டேன். வண்டி நேரே சென்று சுவற்றில் மோதி கடம் சுக்கல், சுக்கலாக உடைந்து விட்டது. ஜெர்மனியில் இருந்து எழுபது கிலோமீட்டர் தள்ளிக் கச்சேரி. என்ன செய்வது என்று ஒருவருக்கும் ஒன்றும் புரிய வில்லை. ஒருமணி நேரம் பயணம் செய்து கச்சேரிக்குச் செல்ல வேண்டும். அவர்கள் ‘கொன்னக் கோல்’ சொல்லி விடுங்கள்’ என்றனர். முதலில் ஒரு மணி நேரம் ராகம் வாசிப்பார்கள் அப்புறம்தான் தபலா, கடம் எல்லாம். நான் அவர்களை போகச் சொல்லிவிட்டு, பசை ட்யூப் ஒன்றும் கொஞ்சம் கயிறும் வாங்கிக் கொண்டேன். ‘க்ளு’ (GLUE) என்பது ‘பெவிகால்’ போன்றது. அதைக் கயிற்றில் தடவி கடம் உருவத்திற்கு அத்துடன் ஒட்டி விட்டேன். தட்டிப் பார்த்தேன் சுருதி மிகச் சரியாக இருந்தது, பெரியவர் ஆசிதான். கடத்தைக் கட்டவோ ஒட்டவோ முடியாதுதான். அங்கு அவர்கள் ராகம் வாசித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒட்டிக்கொண்டு கடத்துடன் வருவேனா என்ற சந்தேகம்தான். வாசிப்பவர்களுக்குத் தெரியும் கடம் சுருதி சேராது. ‘சுருதி சேர்ந்தால் கடம், இல்லாவிட்டால் சங்கடம்’ என்று ஒரு பழ மொழி உண்டு

நான் கடத்துடன் மேடை ஏறி சுருதி தட்டிப் பார்த்தேன் மிக சரியாக இருந்தது. உடைந்திருந்த கடம் முழு ரூபத்திற்கு வந்திருந்தது. அனைவருக்கும், -விஷயம் தெரிந்தவர்கள் அனைவருக்கும் – ஒரே ஆச்சரியம். அன்று மிகவும் நன்றாக வாசித்து மிகப் பெரிய கைதட்டல் வாங்கினேன். இது மிகப் பெரிய அதிசயம் இல்லையா? இது நடந்தது பெரியவரின் ஆசியால்தான். அதைவிட மிகப் பெரிய அதிசயம், கச்சேரி முடிந்து வந்தால், கடம் சுக்கல் சுக்கலாகப் போய்விட்டது. இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி ஆகும். கடம் உடையும், வேறு கடம் எடுத்து வாசிப்பார்கள், ஆனால் இது இதுவரை யாருக்குமே நடக்காத ஒரு அதிசய நிகழ்வு கும். இதை நான் புகைப் படம் எடுத்துக்கூட வைக்கவில்லை. நம்புவது கூட கடினம்தான், ஆனால் உண்மை

Read more: http://periva.proboards.com/thread/8121/#ixzz3Fnr69YDR

Source:::: http://www.perivaproboards.com

Natarajan

தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம் ….

பக்தவத்சலம் பிறந்த நாள்: 09.10.1897

மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தலைவர்களுள் பக்தவத்சலமும் ஒருவர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம் பிறந்தது புரட்டாசி உத்திரட்டாதியில். 90 ஆண்டுகள் வாழ்ந்தவரோடு இறுதி 13 ஆண்டுகள் எனக்குப் பழக்கமுண்டு. அது எனக்கு மீண்டும் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்தது போலாயிற்று. அன்றைய தலைவர்களோடு இன்றைய தலைவர்களை வைத்துப் பார்த்தால், பகல் சுருங்கி இரவு கவிந்ததாகத் தெரியும்.

பக்தவத்சலம் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலுமே நல்ல புலமையையும் தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டை யும் கொண்டிருந்தார். “எனது தமிழாசிரியர் உ. வே. சாமிநாத ஐயர். ஆங்கில ஆசிரியர் ஹென்றி ஸ்டோன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனது தர்க்கப் பேராசிரியர்” என்பார்.

மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர்

முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.வி. அளகேசன் 1978-ல் பக்தவத்சலத்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி ஒன்று அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியில், “பொதுவாழ்விலும் இருந்துகொண்டு தூய்மையாகவும் இருக்க முடியும் என்னும் உண்மையை வாழ்ந்து காட்டுபவர் பக்தவத்சலம்” என்று சொல்லியிருந்தார் அளகேசன்.

சென்னை ராஜாஜி மண்டபத்தில் 1987 மார்ச் 13-ம் நாள் பக்தவத்சலத்துக்கு நினைவுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசும்போது, “மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மனிதர். ஆனால், விமர்சனம் அவரை வருத்தாது” என்றார் கேரளத்தின் முன்னாள் ஆளுநர் பா. ராமச்சந்திரன். பக்தவத்சலத்தின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையையும் சுருக்கமாகச் சொல்லிவிடக் கூடிய இரு குறிப்புகளாக இவற்றைச் சொல்லலாம்.

சட்டமன்றத்தில் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு பக்தவத்சலம்தான் இலக்கணம். எதிராளிகளின் மனம் புண்படாமல் தனது கருத்தைச் சொல்வதில் பக்தவத்சலம் வல்லவர் என்றும் சொல்வார்கள். கேள்வி களுக்குச் சட்டமன்றத்தில் ராஜாஜி பதில் சொல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், பதில் சொல்லும்படி தன்னைத்தான் அவர் தூண்டுவார் என்று சொல்லி, ராஜாஜி தன்மேல் வைத்த நம்பிக்கையைக் குறித்து பக்தவத்சலம் பெருமைப்பட்டுக்கொள்வார்.

மாற்றுக் கட்சியானாலும் நண்பர்தான்

அந்நாட்களில் பக்தவத்சலத்தின் பிறந்த நாளன்று காலையிலேயே வீட்டுக்கு வந்து, அவருக்கு நேரில் வாழ்த்து சொல்பவர்கள் பட்டியல் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. அந்தப் பட்டியலில் முக்கியமானவர் திமுக தலைவர் கருணாநிதி. அப்படி வருபவரை அங்கு கூடியிருக்கும் பக்தவத்சலத்தின் நண்பர்கள் சற்று நேரம் உரையாற்றச் சொல்லி அவர் பேசுவதை ஆர்வமாகக் கேட்பார்கள். சொந்த ஊரிலிருந்த தனது பூர்வீக வீட்டை ஒரு நூலகமாக மாற்ற கருணாநிதி முடிவெடுத்தபோது, அதைத் திறந்துவைக்க அவர் அழைத்ததும் பக்தவத் சலத்தைத்தான். பக்தவத்சலம் சந்தோஷமாகச் சென்று திறந்துவைத்தார். பக்தவத்சலத்தின் கடைசிக் காலத்தில், மதுரையில் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவுக்கு அழைத்தார் பி.டி.ராஜன். “இந்தத் தள்ளாத வயதில், உடல் நலமும் சரியில்லாத நிலையில், மதுரைக்குச் செல்ல வேண்டாம்” என்று எவ்வளவோ கூறினார்கள் பக்தவத்சலத்தின் உடனிருந்தோர். எதையும் பொருட்படுத்தாமல், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தனக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தவரின் பிறந்த நாள் விழாவுக்கு காரிலேயே சென்று, விழாவில் உரையாற்றிவிட்டுத் திரும்பினார் பக்தவத்சலம்.

ஐந்து லட்சம் கொடுத்தால் கல்லூரி

ஐந்து லட்சம் கொடுத்தால் கொடுப்பவர் பெயரால் கல்லூரி ஆரம்பிக்கப்படும் என்று பக்தவத்சலம் காலத் தில் ஒரு திட்டம் இருந்தது. பெரியார் பார்த்தார், “இது நல்ல திட்டம். ஆனால், பணத்துக்கு நான் எங்கே போவேன்? திருச்சியில் எனக்கு இருக்கும் நிலத்தைத் தருகிறேன். ஒரு கல்லூரி தொடங்குங்கள்” என்று கொடுத்தார். அப்படிப் பிறந்த கல்லூரிதான் திருச்சி ஈ.வெ.ரா. அரசுக் கலைக் கல்லூரி.

தன்னிடம் வரும் எந்தக் கோப்பிலும், அதற்கான முடிவைத் தானே எடுத்து, குறிப்பு அனுப்புவது பக்தவத்சலத்தின் வழக்கம். “ஐரோப்பிய ஐ.சி.எஸ். அதிகாரிகள் நிறைய பேர் என்னிடம் பணியாற்றியிருக் கிறார்கள்; ஆனால், நான் ஒருபோதும் என்ன செய்யலாம் என்கிற முடிவை அவர்களிடம் கேட்டதில்லை” என்று பக்தவத்சலம் ஒருமுறை என்னிடம் கூறினார். கக்கனும் அப்படித்தான். “கக்கனிடமிருந்து ஏதேனும் வந்தால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கும்; எங்களுக்குச் சங்கடம் ஏதும் இருக்காது” என்று முன்னாள் தலைமைச் செயலர் கார்த்திகேயன் சொல்வதுண்டு. ‘பரிசீலித்துப் பார்வைக்கு வைக்கவும்’ என்று மட்டுமே அமைச்சர்கள் குறித்து வைப்பதைத்தானே பின்னாட்களில் பார்க்கிறோம்?

பக்தி பழமைவாதியாக்கிவிடவில்லை

இறைப்பற்றாளர் பக்தவத்சலம். ஆனாலும், பக்தியை எங்கே நிறுத்திவைக்க வேண்டும் என்பதை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நாட்களில், “கோயிலில் இருக்கும் தங்கக் குடங்களை நாட்டுக்குத் தரக் கூடாதா?” என்று கேட்டவர் அவர். கோயில்களுக்கு நிலச்சொத்து ஒத்துவராது. குத்தகை, பண்ணைச் சாகுபடியெல்லாம் பார்த்தாகிவிட்டது. பலனில்லை. காணி நிலத்துக்கு பாரதியார் ஏங்கவில்லையா? ஆண்டவனுக்கே நிவேதனம் என்ப தெல்லாம் அகம்பாவம். எனவே, நான்கு லட்சம் ஏக்கர் கோயில் நிலத்தை வைத்திருப்பவர்களிடமே விற்று முதலீடு செய்து, வட்டிப் பணத்தில் கோயில் களைப் பராமரிக்கலாம் என்பது 1976-ல் அவரது திட்டம். அதற்கு எழுந்த எதிர்ப்புக்கு, மயிலாப்பூர் அகாடமி கூட்டத்தில் பதில் சொன்னார், “நானேதான் நில உச்சவரம்புச் சட்டத்திலிருந்து கோயில்களுக்கு விலக்களித்தேன். நானேதான் கோயில்களுக்கு நிலச் சொத்து சரிவராது என்றும் சொல்கிறேன்.”

துணியின் இழைகளைப் பிரிக்கலாமா?

இந்திய ஓர்மையில் தளராத நம்பிக்கையுள்ளவர் பக்தவத்சலம். இனவழி அரசியலைக் குறிப்பிட்டு “வடக்கத்தியர் எல்லோரும் ஆரியர்களா? அல்லது பிராமணர்கள் அல்லாத எல்லோரும் திராவிடர்களா? இனங்களும் பண்பாடுகளும் மதங்களும் சாதி களும்கூட கலந்து, நெருக்கி நெய்த துணியாக இந்தியா உருவாகியுள்ளது. இதன் இழைகளைப் பிரித்துக் குலைக்க வேண்டாம்” என்றார். “புஷ்கரம், பிருந்தாவனத்தில் உள்ள கோயில்களும் வழிபாடும் காஞ்சிபுரத்தில் உள்ளதுபோல் இருக்கும். ராஜஸ்தானில் நம்மைப் போன்றே பொங்கல் கொண்டாடுவார்கள். முற்கால வரலாற்றில் இந்தப் பிரிவுகள் இருந்திருக்கலாம். பின்னர் எல்லாம் ஒன்றாகிப்போனதும் வரலாறுதானே?” இப்படியெல்லாம் இந்திய ஒற்றுமையை விளக்குவார்.

நான் தனியாக நின்றேன்

காங்கிரஸ் வழியிலான அவரது மொழிக் கொள்கை, 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அவர் கையாண்ட விதம், இவை இரண்டையும் குறைகூறுவார்கள். 1965 முதலாகவே மாறிவந்த அரசியல் சூழலை பக்தவத்சலம் கவனமாகப் புரிந்து கொள்ளவில்லை என்றும் சொல்வார்கள். இந்த விமர் சனங்களுக்கு அவர் பதில் என்னவாக இருந்திருக்கும்?

1950 முதல் 15 ஆண்டுகளுக்கு இந்தியோடு ஆங்கிலமும் தொடர்வதை அரசியல் சாசனம் உறுதி செய்தது. அந்த ஏற்பாடு தற்போது காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே இருப்பவர்கள் இந்தியில் ஒரு அட்சரம்கூடக் கற்க வேண்டிய கட்டாயம் இல்லை. தமிழகத்தின் இருமொழிக் கொள்கை என்பது மூன்றாவதாக ஒரு மொழியையும் கற்கக் கூடாது என்பதல்ல. 1937-ல் நடந்ததைப் பார்த்திருந்ததால் இங்கே இந்திக்கு மாணவரிடையே ஒரு ஒவ்வாமை இருப்பது தெரிந்தது. எனவே, விரும்பினால் அந்த மொழியைக் கற்கலாம் என்பதாக மட்டுமே இருந்தது. எதற்கும் வழுக்கலாகப் பதில் சொல்லி அறியாத பக்தவத்சலத்தின் பதில் இதுவேதான்.

தன் கட்சிக்காரர்களே குறை சொல்வதைப் பற்றிக் கேட்டால், “இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது இவர்கள் என்ன செய்தார்கள்? சூழ்நிலையை நான் சந்திக்க வேண்டியிருந்தது. நான் தனியாக நின்றேன்” என்பார். சரியா, தவறா என்பதெல்லாம் வரலாற்றுப் பொருளாக விவாதிக்கப்படும். ஆனால், இவர் கட்சியைக் கைவிட மறுத்தார், கட்சி இவரைக் கை விட்டது என்றுதான் எனக்குத் தோன்றியது.

– தங்க. ஜெயராமன்,  in The Hindu…Tamil

ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்,

தொடர்புக்கு: profjayaraman@gmail.com

Natarajan

” என்னை இங்கு சங்கராச்சார்யா என்று சொல்லுவா …” !!!

அம்பத்தூரில் வசித்த கம்பெனி தொழிலாளி ஒருவர். அவர் மனைவி ஒரு நோயாளி.அவருக்குப் பிறந்த பிள்ளைகளோ பொறுப்பு இல்லாமல் தறுதலையாக அலைந்தார்கள். இப்படி சிரமங்களையே சந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு நண்பர் ஒருவர். மகானின் பக்தர்.

“கருணைக் கடலாக இருக்கும் காஞ்சி மகானிடம் ஒரு தடவை சென்று தரிசித்தபின் அவரது ஆசியைப் பெற்றுக்கொண்டு வா… உன் சிரமங்கள் எல்லாம் காற்றோடு போய்விடும்”- என்று யோசனை சொன்னார்.

அப்போதிலிருந்து அவரது மனதில் “காஞ்சி மகானைப் பார்க்க வேண்டும்” என்கிற எண்ணம் வேர் விட ஆரம்பித்தது.

தொழில் சம்பந்தமாக அவர் வெளியூர் செல்லும்போது காஞ்சி வழியாகப் போகும் சந்தர்ப்பம் வரவே,காஞ்சியில் இறங்கி யாரிடமோ வழிகேட்டு வரும்போதுதான் அவரது
மனதில் அந்த எண்ணம் தோன்றியது.

“உலகோர் போற்றிப் புகழும் நிலையில் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக நிற்க, பரிவாரங்களுடன் அமர்ந்திருக்கும் இந்த சாமியாரைத் தான் எப்படிப் பார்ப்பது” என்கிற
எண்ணத்துடன் இவர் அந்த குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் சென்று கொண்டு இருந்தார். இவர் எதிர்பார்த்த மாதிரி ஆடம்பரங்களோ..ஆரவாரமோ ஏதும் தென்படவில்லை.

“அந்த சாமியார் வேறு எங்கோ போய்விட்டார் போலிருக்கிறது” என்று இவர் நினைத்துக் கொண்டார். தனக்கு விடிவுகாலம் பிறக்க அவரிடம் ஆசி பெறலாம் என்று வந்த அவரது
கடுகளவு ஆசையும் மறையத் தொடங்கியது.

யாரிடம் போய்க்கேட்பது? ஆள் அரவமே இல்லையே என்று அவரது கண்கள் தேடியபோது,ஒரு பெரியவர் மட்டும் அவரது கண்களில் தென்பட்டார்.

வந்தவர் அவரிடம் கேட்டார்.

“இங்கே ஒரு சன்யாசி இருக்காராமே…அவர் எங்கே போயிருக்கார்?”

“அவரையா பார்க்க வந்தேள்? யார் சொல்லி அனுப்பினா?”

இந்தக் கேள்வியும் அவரது அமைதியான முகபாவமும் வந்தவரின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தின. அதனால் வந்தவர் தனது குடும்ப சூழ்நிலையையும் தற்போது
ஏற்பட்டுள்ள வறுமையான சூழ்நிலையையும் சொல்லி, தன் நண்பர் ஒருவர் இங்கே இருக்கும் சாமியாரைப் பார்த்து ஆசிகள் வாங்கச் சொன்னார் என்றார்.

“அவர் கிட்டே சிரமங்களைச் சொன்னா தீர்வு கிடைக்குமா என்ன?” கேள்வி பிறந்தது.அவருக்கு

வந்தவரோ, ‘இந்த வயதான கிழவர் தன்னிடம் ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறார்’ என்று நினைத்தார்.

வயதான பெரியவர் தொடர்ந்தார். “சிரமம்..சிரமம்னு சொல்றியே..அதை ஏன் நீ படறதா நினைக்கிறே..அந்தப் பாரம் உன்னோடது இல்லையின்னு நீ நினைச்சிட்டா மனம் லேசாயிடுமே…”

இது எப்படி சாத்தியம் என்று வந்தவருக்கு மனதில் சந்தேகம்.

“அது எப்படி சுவாமி? நான்தானே அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்க வேண்டிருக்கு..என் கஷ்டங்களை வேறு யார் சுமப்பா?”

வயதான பெரியவர் சிரித்தபடியே சொன்னார். “இப்போ ஊருக்குப் போறோம்னு வையுங்க..உங்களோட பெட்டி,மூட்டை முடிச்சு எல்லா பாரத்தையும் சுமந்துண்டு
போய்த்தானே ஆகணும்? அப்ப என்ன பண்றோம்? யாராவது கூலியாள் கிட்டே குடுத்து சுமக்கச் சொல்றோம் இல்லையா? அது போலத்தான் நாம படற சிரமங்களை
நம்மது இல்லே,பகவான் பார்த்துப்பான்னு பூரண சரணாகதி அடைஞ்சுட்டா நமக்கு எந்த பாதிப்பும் வராது..”

இதைக் கேட்ட அம்பத்தூர்காரருக்கு கொஞ்சம் மனத்தெளிவு ஏற்பட்டது போல் இருந்தது.

அவர் வயதான பெரியவரைப் பார்த்து, “பெரியவரே இப்ப எனக்கு கொஞ்சம் மனசு லேசானது போல இருக்கு.என்பாரம் உன்னோடதுன்னு பகவான்கிட்டே சொல்லிடறது நல்லதுதான்..நீங்கள் சொல்ற மாதிரி இந்த சாமியார் கிட்ட வந்து என் பாரங்களை இறக்கி வெச்சுட்டுப் போகலாமுன்னு வந்தா, இங்கே அவரைப் பார்க்க முடியல்லே..
எனக்கு உடனே மெட்ராஸ் போயாகணும்…காத்திருந்து அவரைப் பார்க்க முடியாது.எனக்கு இன்னமும் நல்ல காலம் வரலே போலத் தோணுது. ஆனா உங்களாண்டை பேசினதுனாலே மனசுக்குக் கொஞ்சம் இதமாக இருக்கு…ஆமா நீங்க யாரு? இதே ஊரா?”என்று கேட்டார்.

வயதான பெரியவர் முகத்தில் சிரிப்பு. “என்னை இங்கே சங்கராச்சார்யார்னு சொல்லுவா” என்று சொன்னதும் அம்பத்தூர்காரருக்கு இன்ப அதிர்ச்சி.

வியப்போடு அந்த எளிமையின் உருவத்தைப் பார்த்தவண்ணம் ஒன்றுமே தோன்றாமல்…மலைத்து நின்றார்.

அதுவரை அந்த மனித தெய்வத்திடம் அஞ்ஞானமாகப் பேசிக் கொண்டிருந்தவர் சற்றே திரும்பிப் பார்க்க, அந்தத் தவமுனிவரைத் தரிசிக்க ஒரு பெருங்கூட்டமே காத்திருந்தது.

இத்தனை நேரம் ஒரு மாபெரும் மகானிடம் சர்வ சாதாரணமாகப் பேசி, அவரிடம் யோசனைகள் பெற்றதை எண்ணி அந்தப் பக்தர் வியந்தார்.

“நமஸ்காரம் பண்ணிக்கிறேன்” என்ற பக்தரை சட்டையை கழற்றும்படி சொன்னார் மகான். தான் பூணூல் அணியாததால் சட்டையைக் கழற்ற அந்தப்பக்தர் யோசிக்க, மடத்து
சிப்பந்தி ஒருவரிடம் சொல்லி அவரை உள்ளே அழைத்துக் கொண்டுபோய் பூணூல் அணிவிக்கச் செய்து ஆசிர்வதித்தார் மகான்.

யாருக்குமே கிட்டாத மாபெரும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து அவரது இன்னல்கள் யாவும் பனிபோல் விலகின…..

எளிமைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

Read more: http://periva.proboards.com/thread/4661/#ixzz3FNSj5vJE

Natarajan