படித்ததில் பிடித்தது ….” நம் திறமை வெளிப்படும் நேரம் …”

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.

கடவுள் உடனே,
“ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான்.

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

ஈரமான நிலத்தை உழுதான்.

தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான்.

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலமும் வந்தது.

விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

அதிர்ந்தான்.

உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.

கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.

வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?

எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.

Source….unknown….input from a friend of mine

Natarajan

” If anyone asks me, whether I have seen God, my answer would be ‘yes’ because I have seen Periva as my Maha Vishnu.”…

A Miracle in the Life of a Devotee  Gayathri Rajagopal   .. Pl read further and get blessed

Natarajan

Periva brought life to my left leg fingers after six years ….says HIS devotee Gayathri Rajagopal 

I have experienced many Periva’s miracle which I am posting through my weekly articles in Periva forum site. I have also heard the experience of others through “Experience with Mahaperiyava” site in you tube.. But the miracle happened to me on 10th November 2014 is something huge and a medical miracle.

Yes! After six years of my paralytic stoke, my left foot fingers were dead and absolutely no movements. The fingers of my left foot folded inside (against gravity). Hence I could not walk because the folded left foot fingers were scratching on the floor while walking. Consequently there will be ulcers with blood oozing out always, whenever; I try to walk a little. This was very much painful. It is not the pain due to ulcers in the fingers but my inability to go to Kanchi to have darshan of Maha Periva at Periva Adhishtanam was my real pain and unquenchable thirst.

I was unable to wear slippers and go out and if this condition continues my ambitious plan of going to Periva Adhishtanam at Kanchi will become an unfulfilled dream till my last breath. I was really worried and always with the clouded mind and will not speak to others. The food intake was also reduced considerably, which resulted in possible another stoke because of blood pressure variation.

On 9th November 2014, before I retire for bed, I submitted my prayer with the glistened eyes that “I am prepared to undergo my karma but why you don’t, show me some consideration for my prayer. I do not want to go anywhere except “you’re Adhishtanam Periva” at Kanchi “.I submitted my prayer and retired for bed with tears in my eyes. Even during this narration, I shed tears because this miracle was instant by Periva when all my prayers were unanswered by other God and goddess. If anyone asks me, whether I have seen God, my answer would be yes because I have seen Periva as my Maha Vishnu.

On 10th at 4.30 A.M, (next day) I got up with the usual frame of mind and started my morning routine and completed my brahma Muhurtham prayer. Periva already gave life to my left hand fingers and I could light Vilaku without anyone’s help now. I have already posted my article “Periva brought life to my dead fingers after six years” which please note.

With the grace of Periva, lit the Vilaku and dropped the match stick with little fire on the floor but by mistake the match stick was fallen on my left leg fingers. Immediately the fingers started moving and stretching out. The folded left leg fingers for six years were unfolded and released on that day. From that day onwards I started wearing slippers and do walking practice. I was with watery eyes:

“Periva not only wiped my tears 
But hold my tears in his hand 
Before the tears touches the ground.” 

Now I can go to Kanchi with someone’s help. Periva is translating my dream as a reality. Virtually, I was losing mental balance to notice the dead fingers of hand and leg becomes alive instantly on submission of my prayer. Thereby,

Medical Theory was disproved by Periva 
What a way to bless his devotees. 

Periva’s blessing disproved doctor’s conclusion that I cannot show any further improvement. Periva has enabled me to show remarkable sign of improvement. This improvement has given enormous confidence to me and to my people that they can accompany me anywhere without any problem as days go on. From today onwards, I will walk more to regain my functionalities.

After so much of divine miracles happened in my life, within such a short period of time, I could not find an answer, I am heading towards what? Periva will certainly give me the answer shortly or when time is ripe. I will certainly post my experience once Periva show me the way.

Un assumed Periva 
Enabled me to  
Assume what I lost!

Hara Hara Shankara Jaya Jaya Shankara 

Gayathri Rajagopal ….in http://www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/10460/periva-brought-fingers-after-years#ixzz3qBe0XRQZ

Message For the Day…” How to Remove the Barrier of ‘ego’ From our Mind …” ?

The means of getting Divine grace are: Bhakti (devotion),Prapathi (surrender), Niyama (ethical discipline), Vicharana(enquiry) and Deeksha (determination). When you succeed in these tests, you will experience the grace of the Divine. Devotion should manifest itself in every action. Everything done out of love for God and as an offering to God becomes devotion. The devotee is filled with love and shares the love with all the others. The nine different forms of worship are only means to cultivate devotion. But the goal of all of them is to experience oneness with the Divine.Prapathi means total surrender – offering everything to the Divine. The sense of ego separates the individual from the Divine. When the individual offers everything to God, the barrier of ego is removed. Of all diseases to which man is prone, the disease arising from ahamkara (ego) is the most deadly. The only panacea for this disease is surrender to the Will of the Divine.

Sathya Sai Baba

Message for the Day…Woman ‘Lakshmi of the Home ‘ often Lead Men on the Godward Path and the Practice of Holy Virtues …”

Sathya Sai Baba

Heaping respect and honour upon a person who does not followAtmic dharma (righteousness driven by the Self) is like heaping decorations on a body that has no life in it. The soul that left the body cannot enjoy the respect shown to the corpse. So too is the case with the person who is unaware of the Reality and the purpose of life but is crowned with fame and glory. A modest woman will not care for such meaningless trash and tinsel. This characteristic is what confers on her the title ‘The Lakshmi of the home’. The woman is the prop of the home as well as of the practice of religion. She plants and fosters religious faith. Women have natural aptitude for faith and spiritual endeavour. Women with devotion, faith, and humility often lead men on the Godward path and the practice of holy virtues.

வேலவனின் திருவிளையாடல்….

இயற்கையிலேயே பெண்ணின் கூந்தலுக்கு மணம் உள்ளதா என்னும் பாண்டியனின் சந்தேகத்தைப் போக்கும் பாடலை ஏழைப் புலவனான தருமிக்கு அளித்து சிவபெருமான் திருவிளையாடல் நடத்தியதை அறிவோம். இதுபோல் வேலவனும் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தியிருக்கிறான்.

தாமிரபரணி நதி தீரத்திலுள்ள குருகூரில் பிரதிவாதி பயங்கரன் என்னும் புலவர் இருந்தார். அவர் போகுமிடம் எல்லாம் புலவர்களை வாதில் வெல்வார். அதோடு அவர்களிடமிருந்து அடிமை ஓலையையும் வாங்கி வைத்துக் கொள்வார். அப்படியொரு சமயம், திருச்செங்கோட்டில் உள்ள குணசீலன் எனும் புலவருக்கு, அவரோடு தான் வாதாட வருவது பற்றிய விவரத்தை அனுப்பிவைத்தார்.

எந்தப் போட்டியிலும் ஈடுபட விரும்பாத குணசீலன், இந்த இக்கட்டிலிருந்து விடுபட, வேலவனை வேண்டினார். இந்த இக்கட்டிலிருந்து உன்னைக் காப்பேன் என்று குணசீலனுக்கு வாக்களித்தான் வேலவன்.

மீதி வெண்பா எழுதிய வேலவன்

தொலைதூரத்திலிருந்து செங்கோட்டைப் பார்த்த பிரதிவாதி பயங்கரன், “அது என்ன மலை என்றான். உடன் வந்தவர்கள் “அதுதான் திருச்செங்கோடு. நாகாசலம், நாககிரி என்றும் அழைப்பர்” என்றனர்.

உடனே பிரதிவாதி, “சமர முகத் திருச்செங்கோடு சர்ப்ப சயிலமென அமரில் படம் விரித்தாடாததென்னை…” – என்று பாடத் தொடங்கிவிட்டு, மேலும் தொடர முடியாமல் தவித்தான். புதருக்குப் பின்னாலிலிருந்து ஒரு குரல் கேட்டது.

“அஃதாய்ந்திலையோ நமரன், குறவள்ளிபங்கன், எழுகரை நாட்டுயர்ந்த குமரன், திருமருகன் மயில் வாகனம் கொத்துமென்றே..”

– என்று வெண்பாவை நிறைவு செய்தான் புதருக்குப் பின்னால் மாடு மேய்க்கும் சிறுவனாக தோன்றிய வேலவன். அவனிடம் `நீ யார்?’ என்று கேட்டார் பிரதிவாதி பயங்கரன்.

“திருச்செங்கோட்டில் வாழும் தலைசிறந்த புலவர் குணசீலனின் கடை மாணாக்கன் நான்” என்றான் அச்சிறுவன். “படிப்பு வராததால் என்னை மாடு மேய்க்க அனுப்பிவிட்டார். என்னை மாணாக்கனாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார் புலவர்” என்றான்.

அவன் கூறியதைக் கேட்ட பிரதிவாதி, “உன் குருவுக்கு என் வந்தனத்தைத் தெரிவி…” என்று சொல்லிவிட்டு, வந்தவழியே திரும்பிச் சென்றுவிட்டார்.

முத்துசாமிக்கோனார் எழுதிய திருச்செங்கோட்டு மான்மியத்தில் மிக விரிவாக இத்திருவிளையாடல் பற்றி தரப்பட்டுள்ளது.

Source…..யுகன்….in http://www.tamil.thehindu.com

Natarajan

“க்ரகங்களைத் திட்ட வேண்டாமே …”

18698_10153209347029244_3030028360467212073_n.jpg

ஐயோ…சனியன் புடிச்சு போனவனே…இந்த பாவி என்றைக்கு விலகுறது… இவனுக்கு படிப்பு மண்டையிலே ஏறப்போவுது…!”

“இந்த குரு நீசமாகி கிடக்கிறாராமே! இவளுக்கு எப்ப தான் கல்யாண யோகம் வந்து தொலையப் போகுதே…”

“ராகுவைப் போல கொடுப்பாருமில்லை… கெடுப்பாருமில்லையாம்…இவர் என்னத்த கொடுத்தாரு… கெடுக்கிறதுக்குனே என்னை தேர்ந்தெடுத்திருக்கிறானே…”

இப்படி ஒவ்வொரு கிரகத்தையும் திட்டித் தீர்ப்பவர்கள் ஏராளம். இப்படி கிரகங்களைத் திட்டக்கூடாது என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.

ஒருமுறை, பெரியவரைத் தரிசனம் செய்ய ஜோதிடர் ஒருவர் வந்தார். அவரது குடும்பம் மிகவும் பெரியது. ஜோதிடம் கணித்துச் சொல்வதில் கிடைக்கும் வருமானம் போதவில்லை. செலவுக்கு ரொம்பவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

பெரியவரை தரிசனம் செய்த அவர், “பெரியவா… எனக்கு வருமானம் போறலே! ரொம்ப சிரமப்படறேன்… நீங்க தான், எனக்கு அனுக்கிரகம் செய்து, வருமானம் உயர அருளாசி தரணும்,” என்று வேண்டிக் கொண்டார்.

பெரியவர் அவரிடம், “நீ உன்னோட அப்பா வசித்த பூர்வீக வீட்டில் தானே இருக்கே…?” என்று கேட்டார்.

அதற்கு ஜோதிடர், “இல்லை பெரியவா… அங்கே என் அண்ணா இருக்கான். அதற்கு மேலண்டை இருக்கிற ஒரு வீட்டில் நான் குடியிருக்கேன்…” என்று பதிலளித்தார்.

“நீ அந்த வீட்டில் குடியிருக்க வேண்டாம். உன்னோட பூர்வீக வீட்டிற்கு கிழக்கு பக்கத்திலே இருக்கிற பழைய மாட்டுக்கொட்டகை இருக்குதே…அந்த இடத்திலே, ஒரு குடிசை போட்டுகிட்டு அங்கே போய் குடி இரு,” என்றார் பெரியவர்.

அவர் அவ்வாறு சொன்னதற்கு காரணம் இருந்தது. அந்த ஜோதிடரின் குடும்பம் பரம்பரை பரம்பரையாய் அம்பாளை உபாசனை (பூஜை) செய்த குடும்பம். அதனால், புனிதம் மிக்க பசு கொட்டிலில் குடியிருக்கச் சொன்னார் பெரியவர்.

அத்துடன், “நீ எல்லாருக்கும் பலன்கள் சொல்லும் போது, கிரகங்கள் சரியில்லேன்னு பொதுவாகச் சொன்னால் போதுமே…!

எதுக்காக, உங்க ஜாதகத்திலே குரு நீசன்… சனி பாபி, புதன் வக்ரம் என்றெல்லாம் சொல்றே…குரு என்பவர், தட்சிணாமூர்த்தி சொரூபம். சனி என்பவர் சூரியனின் புத்திரர். ஈஸ்வர பட்டம் பெற்றவர். அவரை பாபி என சொல்லலாமா!

திருமணப் பொருத்தம் பார்க்க வருகிறவர்களிடம் கூட, “”பொருத்தம் இல்லே…” என நிர்தாட்சண்யமாக சொல்லாமல், பெண்ணுக்கு விவாகம் வர கொஞ்சம் தாமதமாகும் என்று சொல். புத்திர பாக்கியம் பற்றி கேட்டால், அதற்கு பாக்கியமில்லை என வெளிப்படையாகச் சொல்லாமல், கொஞ்சம் பொறுத்து பார்க்கலாமே… என சமாளி,” என்று புத்திமதி கூறினார்.

“இனிமேல் நீங்கள் சொன்னபடியே செய்கிறேன்,” என்ற ஜோதிடர், பெரியவரிடம் ஆசி பெற்று கிளம்பினார்.

நாமும் இனி கிரகங்களைத் திட்டாமல், அவை தரும் சோதனைகளை கடவுளிடம் ஒப்படைத்து விட்டு, நம் பணியைத் தொடர வேண்டும். அப்படி செய்தால், கிரகங்கள் மகிழ்ந்து நம்மை நல்வாழ்வுக்கு அழைத்துச் செல்லும்

Source….www.periva.proboards.com

Natarajan

 

Message for the Day…” Be a Light ,radiating Virtue and Self -Control Wherever You are…’

Sathya Sai Baba

You have had the valuable opportunity to listen to Divine discourses and directions, they have been printed upon your hearts; many of your conversations is centered on Me or on My divine play (leelas) and glory (mahima). My advice to you is: Apply this adoration in your life. Let your companions see how disciplined you are, how sincerely you obey your parents, and how deeply you revere your teachers. Be a light, radiating virtue and self-control wherever you live, just as commendably as you did when in My divine presence. Do not slide back into indiscipline, bad manners, irresponsibility and evil habits. Do not complain against food; eat with pleasure whatever you get. Do not protest against any errand that your parents may assign you. Run gladly and fulfil it. When they want you to nurse them, do it happily, intelligently, and feeling glad that you got the chance. Live anywhere but such that I can pour My Grace on you, more and more.

Message for the Day…”Discipline is the soil on which Virtue Grows …”

Sathya Sai Baba

These days virtue is becoming rare at all levels – in the individual, family, society and community, and also in all fields of life – economic, political and even ‘spiritual’. Life must be spent in accumulating and safeguarding virtue, not riches. Listen and ruminate over the stories of the great moral heroes of the past, so that their ideals may be imprinted on your hearts. There is also a decline in discipline, which is the soil on which virtue grows. Each one must be respected, whatever be their status, economic condition or spiritual development; else there will be no peace and happiness in life. This respect can be aroused only by the conviction that the same Real Self (Atma) that is in you is playing the role of the other person. See that Divinity (Atma) in others; feel that they too have hunger, thirst, yearning and desires as you have, develop sympathy and the anxiety to serve and be useful to everyone.

படித்து ரசித்தது …” நம் நிலை உயரும்போது பணிவு கொள்ள வேண்டும் “

Rajesh Kumar

சமீபத்தில் வாசகர் ஒருவர் கேட்ட கேள்வி இது. பல பெயர்களிலும் பல உருவங்களிலும் கடவுள்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
இந்தக் கேள்வியைப் படித்ததும் எனக்கு காஞ்சி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் சொன்ன வரிகள்தான் ஞாபகத்துக்கு வந்தன. “கடவுள் ஒருவரே… ஆனாலும் பல பெயர்களிலும் பலவித உருவங்களிலும் கடவுளை வழிபடுவது கேலிக்குரிய ஒன்றல்ல. ஒரு பிள்ளையை அவனுடைய அம்மா ஒரு பெயரிலும், அப்பா இன்னொரு பெயரிலும், நண்பர்கள் பிறிதொரு பெயரிலும் அழைப்பார்கள். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேறு ஒரு பெயரைச் சொல்லி அழைப்பார். அந்தப் பிள்ளையோ ஒவ்வொரு வேளைக்கும் ஒவ்வொரு உடையாக அணிந்து செல்லும். விதவிதமாய் அலங்கரித்துக் கொள்ளும். இத்தனைக்கும் ஆள் மாறுபடுவதில்லை. பெயர் மாறும், உடை மாறும். அதைப் போலத்தான் பலப்பல பெயர்களிலும் உருவங்களிலும் இருந்தாலும் கடவுள் ஒருவரே! ஒவ்வொருவரும் எப்படியும் இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கடவுளுக்கு பல உருவங்கள் ஏற்பட்டுள்ளன.
சிலர் இந்த உருவ வழிபாடுகளில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் உலகத்தை படைத்து நடத்துகிற ஒரு தெய்வீக சக்தி இருப்பதாக நம்பி, கசிந்து உருகிய மனதோடு ஒருவன் ‘பகவானே! உன்னுடைய உருவம் எது என்று எனக்குத் தெரியாது. எனக்கு உன்னுடைய உண்மையான உருவத்தைப் பார்க்கஆசை. என்னுடைய இந்த ஆசையை நீ நிறைவேற்ற வேண்டும்’ என்று மனம் உருகி பிரார்த்தனை செய்தால் சர்வ நிச்சயமாய் கடவுள் ஏதாவது ஒரு வகையில் கனவிலாவது தோன்றி தன் உருவத்தைக் காட்டுவார்.
கடவுள் எல்லாவற்றையும் அறியும் தன்மை கொண்டவர். சிறு துரும்பு கீழே விழும் சத்தத்தையும் அவர் அறிவார். எனவே உங்கள் பிரார்த்தனை ஒவ்வொன்றும் சர்வ சத்தியமாய் அவர் காதுகளில் விழும். சிலருக்கு மனிதனைப் படைத்தது கடவுள்தானா என்பதில் சந்தேகம். ஒரு வீட்டை வடிவமைத்துக் கட்டியது ஒரு எஞ்ஜினியர் என்று சொன்னால் ஒப்புக் கொள்ளும் நாம், மனிதனைப் படைத்தது இறைவன்தான் என்பதை ஒப்புக் கொள்ள மறுத்து விஞ்ஞானம் பேசுகிறோம்.
கடவுள் மனிதனைப் பார்த்துப் பார்த்துப் படைத்திருக்கிறான். ஒரு சாண் வயிறு,பார்க்கஇரண்டு கண்கள், கேட்க இரு காதுகள், சுவாசிக்க நாசி, உணவு உண்ண வாய், பற்கள், நாக்கு, பேசக் குரல் நாண்கள். இந்த ஆச்சர்யங்களைக் காட்டிலும் பெரிய ஆச்சர்யம் எது என்றால், உரலில் அரசி போட்டு தண்ணீர் விட்டு ஆட்டுவார்கள். ஆனால் நாம் சாப்பிடும்போது, நமது உணவை வாயில் அரைப்பதற்கு நீர் எங்கிருந்து வருகிறது? அந்த உமிழ்நீரைச் சுரக்கச் செய்தது இறைவன் அல்லவா!
இறைவனின் படைப்பில் மனிதன் மட்டும் அதிசயமானவன் கிடையாது. அவன் படைத்த எல்லாமே அதிசயமானது, பாதுகாப்பானது. புளி பிசுபிசுப்பாக உள்ள ஒரு பொருள். அது மரத்திலிருந்து கீழே விழுந்தால், அந்த பிசுபிசுப்பில் மண் ஒட்டிக் கொண்டு யாருக்குமே உபயோகப்படாமல் போய்விடுமே என்பதற்காக அதற்கு ஒரு உறையைக் கடவுள் போட்டுள்ளார். உயரத்தில் காய்க்கின்ற தேய்ங்காய்க்கு கெட்டியான ஓடு, அந்த ஓட்டுக்கு மேல் ‘ஷாக் அப்சர்வர்’ மாதிரி கெட்டியான நார். இவையெல்லாம் ஏன் தெரியுமா? தேங்காய் எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தாலும் உடையாமல் இருப்பதற்காகத்தான். இப்படி நாள் முழுக்க இறைவன் படைத்த பொருள்களையும், அந்தப் பொருள்களுக்கு அவன் செய்து வைத்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்.

நான் என்னுடைய பனிரெண்டாவது வயதிலேயே இந்த உலகத்தில் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதையும், அந்தக் கடவுள் ஒரு தாயின் அம்சமாக இருந்து அருள்பாலிக்கத் தயாராக இருக்கிறார் என்பதையும் புரிந்து கொண்டேன். கோவையில் தெப்பக் குளம் மைதானம் என்ற இடம் மிகவும் பிரசித்தமானது. காரணம், கோவையில் ஒரு பெரிய பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமென்றால், எந்த அரசியல் கட்சியாவது விருப்பப்பட்டால் கைகொடுக்கக் கூடிய ஒரே இடம் இந்த தெப்பக் குளம் மைதானம்தான். இந்த மைதானத்தில் மைக் பிடித்துப் பேசாத அரசியல் கட்சித் தலைவர்களே கிடையாது. தங்களை நாத்திகவாதிகள்

என்று பெருமையாய் சொல்லிக் கொண்டவர்கள், பிள்ளையார் சிலைகளை போட்டு உடைத்ததும் இந்த தெப்பக் குளம் மைதானத்தில்தான். பின் அதே நாத்திகவாதிகள், மார்கழி மாத பஜனையில் கலந்து கொண்டு திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை சத்தம் போட்டுப் பாடி வந்ததையும் அதே மைதானத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த தெப்பக்குள மைதானத்தில்தான் எனக்கு வீடு.
மைதானத்தின் மேற்குப் பகுதியில் அன்னை ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரியின் கோயில் அமைந்து இருந்தது. என்னுடைய பனிரெண்டாவது வயது வரையிலும் இந்தக் கோயில் என்னைப் பொறுத்தவரைக்கும் பிரசாதம் வழங்கும் இடம். நவராத்திரி நாட்களில் புளியோதரை, சுண்டல், மார்கழி மாத காலைகளில் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கள். அமாவாசை நாட்களில் இலைபோட்டு அன்னதானம், ஏகாதசி, சிவராத்திரி நாட்களில் தொன்னைகளில் பால் பாயாசம். இந்த மெனு எனக்கு மட்டுமல்ல, அந்த நாட்களில் என் வயதையொத்த
எல்லாருக்குமே மனப்பாடம்.
பிரசாதங்களைப் பெற்று சாப்பிடுவதற்காக மட்டுமே கோயிலுக்குச் சென்று வந்து கொண்டிருந்த நான், என் பனிரெண்டாவது வயதில் முதல் முறையாக ஒரு பர்சனல் கோரிக்கையோடு, அம்பாளைக் கும்பிடப் போனேன். அம்பாளிடம் நான்வைத்த பர்சனல் கோரிக்கை இதுதான்: “அம்மா தாயே.. இப்ப எனக்கு கணக்குப் பாடம் சொல்லித் தர்ற வாத்தியார் ரொம்ப கோவக்காரர். கணக்கை தப்பா போட்டுட்டால் கண் மண் தெரியாமல் அடிக்கிறார். வகுப்புக்குப் போகவே பயமாய் இருக்கு. அந்த கோபக்கார கணக்கு வாத்தியாருக்கு பதிலாக வேறு ஒரு நல்ல கணக்கு வாத்தியாரை அனுப்பி வைக்கக் கூடாதா…? அப்படி நீ அனுப்பி வச்சா, இந்த கோயிலுக்கு தினசரி வந்து உன்னைக் கும்பிடறேன்!’ இப்படி பிரார்த்தனை செய்து விட்டு மறுநாள் காலை பள்ளிக்குப் போனேன். 11 மணிக்கு கணக்கு வகுப்பு. நம்பினால் நம்புங்கள். அந்த முரட்டுக் கணக்கு வாத்தியார் வரல. அவருக்குப் பதிலாக சிரிக்கச் சிரிக்கப் பேசும் புது கணக்கு வாத்தியார் கணக்குப் பாடம் எடுத்தார்.
அவர் கணக்குப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்கும் முறையும் சுலபமாக இருந்தது. எல்லா மாணவர்களும் ‘ஹோம் ஒர்க்கை’ ஒழுங்காகச் செய்து முடித்தால், பீரியட் முடிவில் ஒரு பத்து நிமிஷம் ஒரு குட்டிக் கதை சொல்வார். என் வேண்டுகோளை ஒரு நாளில் நிறைவேற்றி வைத்த அம்பாள் கோயிலுக்கு அன்று முதல் மாலை வேளைகளில் செல்ல ஆரம்பித்தேன். அதன்பிறகு, நான் அம்பாளிடம் வைத்த சின்னச் சின்ன கோரிக்கைகள் எல்லாம், கோரிக்கைகள் வைத்த அடுத்த சில நாள்களிலேயே நிறைவேறின.
இப்போது நான் அந்தக் கோரிக்கைகளை எல்லாம் நினைத்துப் பார்த்தால், அவைகளில் பொதிந்து இருந்த ஒரு உண்மை பிடிபட்டது. நான் அம்பாளிடம் வைத்த எல்லா கோரிக்கைகளிலும், ஒரு தார்மீக நியாயம் இருந்தது. “கடவுள் ஒருவர் நிச்சயமாய் இருக்கிறார்” என்று நான் ஆணித்தரமாய் நம்புவதற்கு இன்னொருவரும் காரணமாயிருந்தார். அவர் வேறு யாருமில்லை. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள்.
அப்போது பள்ளிக்குப் பின்புறம் இருந்த மைதானத்தில் ஒரு பெரிய பந்தல் போடப்பட்டு, அங்கே வாரியார் ஸ்வாமிகளின் மஹாபாரத கதாகாலட்சேபம் தினசரி நடைப் பெற்றுக் கொண்டிருந்தது. (மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும்) வாரியார் ஸ்வாமிகள் கதாகாலட்சேபம் நடத்தும்போது அவருக்கு முன்பாய் பத்து பதினைந்து சிறுவர்கள் எப்போதும் உட்கார்ந்து இருப்பார்கள். அவர் ஏதாவது ஒரு கேள்வி கேட்டுவிட்டு சிறுவர்களிடம் பதில் என்ன என்று கேட்பார். சரியான பதில் சொல்லும் சிறுவனுக்கு அவர் ஒரு சிறிய பாக்கெட் சைஸ் கந்தர் சஷ்டி புத்தகத்தைக் கொடுப்பார். நானும் அந்த கும்பலில் இருப்பேன். ஆனால் ஒரு தடவை கூட பரிசு வாங்கியது கிடையாது.
ஆனால் வாரியார் சுவாமிகள் ‘கடவுள் இருக்கிறார்’ என்பதற்கு அவர் சொல்லும் எளிமையான உதாரணங்கள் என்னுடைய மனதுக்குள் அப்படியே சம்மணம் போட்டு உட்கார்ந்து கொள்ளும். அவர் ஒரு முறை இப்படிச் சொன்னார். “சில பேர் கோயிலுக்குப் போவாங்க. விழுந்து விழுந்து கும்பிடுவாங்க. கும்பிடும்போதே மனசுக்குள் ஒரு சந்தேகம் லேசா எட்டிப் பார்க்கும். கடவுள் உண்மையிலேயே இருக்கிறாரா இல்லையாங்கற சந்தேகம்தான் அது. என்னோட தலைக்கு மேல வெளிச்சம் கொடுத்துக்கிட்டிருக்கிற இந்த ட்யூப் லைட்டை மாட்டினது யார்னு கேட்டா உடனே எலக்ட்ரீஷியன்னு பதில் வரும். இந்த பதிலை நாம் எல்லோரும் நம்பறோம். ஏன்னா அது உண்மை. இந்த இடத்துக்கு மட்டும் வெளிச்சம் தர்ற ட்யூப்லைட்டை மாட்டினது ஒரு எலக்ட்ரீஷியன்னு சொன்னா நம்பற நாம், இந்த உலகம் முழுவதற்கும் வெளிச்சம் தரக்கூடிய சூரியனை உயரத்திலேயே ஒரு பாதுகாப்பான இடத்தில் பொருத்தி வச்சிருக்கிறது கடவுள்னு சொன்னா ஏன் நம்ப மாட்டேங்கறோம்?”
இப்படி அவர் சொன்ன எத்தனையோ விஷயங்கள் என்னை நிரம்பவே கடவுளிடம் நெருங்க வைத்தது. போகப் போக, வயது ஏற ஏற இன்னொரு உண்மையும் புரிந்தது. வெறுமனே கோயிலுக்குப் போய், நெற்றியில் விபூதி குங்குமம் வைத்துக் கொண்டு கடவுளைக் கும்பிடுவதால் மட்டுமே அவனுடைய அருள் கிடைத்துவிடாது. நம்முடைய எண்ணங்களும் செயல்களும் தூய்மையாக இருக்க வேண்டும். நாம் பேசும் வார்த்தைகள் ஒருவரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமே தவிர, புண்படுத்தக் கூடாது. பெற்றவர்களையும் பெரியோர்களையும் மதிக்க வேண்டும். செய்யும் தொழிலே தெய்வமாய் நினைக்க வேண்டும். நம் நிலை உயரும்போது பணிவு கொள்ள வேண்டும். எல்லோரிடமும் திறமை இருக்கிறது என்று எண்ண வேண்டும்.
நான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் அந்த இறையருளே தவிர, வேறு ஒரு காரணமில்லை. ‘நீ எழுது!’ என்று இறைவன் எனக்கு இட்ட பணியை நான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். நான் என் கையில் ‘பேனா’ பிடிப்பதோடு சரி. என்னை எழுத வைப்பதும்… அதை வாசகர்களைப் படிக்க வைப்பதும்.. அந்த இறையருள் மட்டுமே.
Source…..Tamil Writer  Rajesh Kumar www. balhanuman.wordpress.com
Natarajan

Message for the day… ” What is the Minimum Qualification for Seeking the Grace of God…” ?

Sathya Sai Baba

Just as you prescribe minimum qualifications for every profession, the minimum qualification for grace is surrender of egoism, control over senses and regulated food and recreation (ahara and vihara). A person is made or marred by the company kept. A bad person who falls into good company is able to shed their evil quickly and shine forth in virtue. A good person falling into evil company is overcome by the subtle influence and slides down into evil. The lesser is overpowered by the greater. A drop of sour curd transforms milk, curdling it, separating the butter and turning it into whey. Sacred books are also equally valuable for this transmuting process, but they have to be read and pondered upon, and their lessons have to be put into daily practice. The Gayatri Mantra is a Vedic prayer to the Supreme Intelligence that is immanent in the Universe to kindle the intelligence of the supplicant.