இன்று கிருஷ்ண ஜெயந்தி….

குருவாயூரப்பன் மீது நாராயண பட்டத்திரி பாடிய ஸ்தோத்திரம் நாராயணீயம். இதை கிருஷ்ண

ஜெயந்தியான இன்று படிப்பதன் மூலம் நினைத்தது நடக்கும்.

* மஹா விஷ்ணுவே! கிருஷ்ணா! வேதங்களால் போற்றப்படுபவனே! ஆனந்த வடிவானவனே! கோபியரின் மனத்தில் இருப்பவனே! என் துன்பம் நீங்க வணங்குகிறேன்.

* மும்மூர்த்திகளில் சிறந்தவனே! சர்வேஸ்வரனே! கருமை நிறக் கண்ணா! மந்திர சாஸ்திரங்களில் எங்கும் நிறைந்திருப்பவன் நீயே என்று கூறப்பட்டுள்ளது. உன்னை ஆதிசங்கரரும் போற்றி வணங்கிஉள்ளார். அந்த திருப்பாதங்களைப் போற்றுகிறேன்.

* தேவாதி தேவனே! அனைவருக்கும் உயிராக விளங்கும் கிருஷ்ணனே! உண்மையில்லாதவற்றில் ஆசை கொண்டு துன்பம் அடையும் மனிதன், உன்னை வணங்கினால் எல்லா இன்பமும் அடைவான். அவ்வாறு அருள் செய்ய வேண்டுமென உன்னை வணங்குகிறேன்.

* எங்கும் நிறைந்த பரம்பொருளே! உடல், மனம், மொழியால் இந்த பூமியில் எதையெல்லாம்

செய்கிறேனோ அனைத்தையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன். உன் திருவடியில் சரணடைகிறேன்.

* உன்னிடம் சரணடைந்தவர்கள் எல்லா செயல்களிலும் வெற்றி பெறுவர். தேவாதி தேவனே! அப்படிப்பட்ட நல்லவர்களின் தொடர்பு எப்போதும் கிடைக்கட்டும். அவர்களுடைய நல்ல வார்த்தையால் பாவம் நீங்கி பக்தி பெருகட்டும்.

* ஜகந்நாதப் பெருமாளே! ஹரியே! பஞ்சபூதம், பிர பஞ்சம், பறவை, மீன், விலங்கு, தாவரம் என எல்லாவற்றையும், நண்பர், எதிரியையும் கூட, உன்னுடைய வடிவமாகவே கண்டு மகிழ்கிறேன்.

இவ்விதம் வழிபடுவதால் பக்தியும், ஞானமும் வாய்க்கும் பேறு பெற்றேன்.

* பெருமானே! உன்னிடத்தில் மனம் ஒன்றி விட்டதால், வழக்கமான பசி, தாகம் மறந்து விட்டது. கண நேரமும் உன்னை மறவாமல் செயல்களில் ஈடுபாடு கொண்டுள்ளேன். மனதில் சிறிதும் தளர்ச்சி இப்போது இல்லை. உன் அருளால், மகிழ்ச்சியோடு எங்கும் உலாவுகிறேன்.

* பெருமாளே! கலியுகத்தில் உன் பெயரைச் சொன்னாலும், உன்னைப் பற்றிப் பாடினாலும் கூட போதும்! உன் அருளைப் பெற்று விடலாம். இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதால் எல்லாரும் இந்த யுகத்தில் பிறக்க ஆசைப்படுகின்றனர். பாக்கிய வசத்தால் இந்த கலியுகத்தில் பிறந்த என்னை ஏற்றுக் கொள்வாய்!

* வாசுதேவா புருஷோத்தமா! கங்கையில் நீராடுதல், கீதை வாசித்தல், காயத்ரி மந்திரம் சொல்லுதல், துளசி அணிவித்தல், கோபி சந்தனம் அணிதல், சாளக்கிராம பூஜை, ஏகாதசி விரதம், ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரம் இவை எட்டும் உன் அருளுக்கு வழிவகுக்கும். இந்த எட்டு வழிகளிலும் என்னை ஈடுபடுத்தி நல்லருள் புரிய வேண்டும்.

Source…..www.dinamalar.com

Natarajan

அன்பாசிரியர் 2 – தர்மராஜ்: ஊராட்சிப் பள்ளி ஹை-டெக் ஆசான்!

 

ஆசிரியர் எஸ்.தர்மராஜ் | படம்: எம்.சத்யமூர்த்தி

ஆசிரியர் எஸ்.தர்மராஜ் | படம்: எம்.சத்யமூர்த்தி

| மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நல் அடையாள அணிவகுப்புத் தொடர் இது. |

நீலகிரி மாவட்டத்தின் மூலையொன்றில் இருக்கும் தேனாடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர், தேசிய அளவில் புதுமையான கற்பித்தல் முறை போட்டியில் பரிசு பெற்றிருக்கிறார். மத்திய மனிதவள அமைச்சகம் நடத்திய அப்போட்டியில் கலந்து கொள்ளத் தமிழகத்தில் இருந்து தேர்வான ஆறு பேரில் ஆசிரியர் தர்மராஜும் ஒருவர். தகவல் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில், புதுமையான முறையில் கற்பித்ததற்கான பரிசு அது. தொழில்நுட்பம் வழியாக மட்டுமே பயணிக்காமல் பழங்குடி இன மக்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பாடுபடுபவர்.

ஆசிரியர் தர்மராஜின் பயணத்தை, அவர் வழியாகவே கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?

“என்னுடைய சொந்த ஊர் கோத்தகிரி. படித்து முடித்து புதுக்கோட்டை மாவட்டத்தில், முதுகுளம் என்ற ஊரில் ஓர் அரசு நடுநிலைப்பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆரம்பத்தில் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில், கிராமத்திலிருக்கும் பள்ளியில் சேர்ந்துவிட்டோமே என்ற ஆதங்கம் இருந்தது. ஆனால் அங்கு படித்த மாணவர்களின் ஆர்வம், என் ஆதங்கத்தைத் தூக்கியெறிந்தது.

வழக்கமான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களைப் புதுமையான முறையில் கற்பிக்க எண்ணினேன். தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்தித்தாள்கள் வாங்கப்பட்டன. மாணவர்கள் தினமும் படித்துவிட்டு, காலை பிரேயரில் அதனை வாசிக்க வேண்டும். இதனால் அவர்கள் நாட்டு நடப்புகளை அறிந்து கொண்டதோடு, மொழியறிவும் வளர்ந்தது. ஓவிய வகுப்புகளின்போது, பத்திரிகைகளில் வரும் கேலிச் சித்திரங்களை மாணவர்கள் கரும்பலகைகளில் வரைய வேண்டும்.

வேதியியல் பாடத்தில் தனிம அட்டவணைகளில் இருக்கும் தனிமங்களின் அணு எண், நிறை எண், அணு எடை ஆகியவற்றை எண் வரிசை அடிப்படையில் கற்றுக்கொடுத்தேன். ஆர்வமாய்க் கற்றவர்கள், நாட்கள் செல்லச் செல்ல, அப்படியே அதை ஒப்பிக்க ஆரம்பித்தனர்.

விளையாட்டு மைதானத்தில் சமூக அறிவியல்

அதுபோக சமூக அறிவியலையும் ஆர்வத்துடன் படிக்க, செயல்முறைகளோடு கற்பிக்கலாம் என்று தோன்றியது. இந்திய வரைபடத்தைக் கருப்பொருளாக எடுத்து, பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் வரையும் எண்ணம் வந்தது. ஊருக்குப் போகும்போது, ஊட்டியில் இருந்து புல் கொண்டு வந்தேன்; அதை மைதானத்தில் வளர்க்கத் தொடங்கினோம். புற்கள் புல்வெளியாய் மாறத் தொடங்கியதும், இந்திய எல்லைகளுக்கு ஏற்றவாறு, புல்வெளியைச் சீர்ப்படுத்தினோம்.

இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா ஆகிய நீர்நிலைப் பகுதிகளை ஏற்படுத்த, சுமார் நான்கரை அடிக்குப் பள்ளம் தோண்டினோம். தண்ணீர் வற்றாதவாறு அதில் கான்கிரீட் தளம் போட்டு, தண்ணீர் பாய்ச்சினோம். மேலே இமயமலை, பர்வதை மலைகளுக்குக் கற்கள் இட்டு நிரப்பினோம். வெளியிலிருந்து யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், ஆசிரியர்களும் மாணவர்களுமே இதை செய்து முடித்தோம். மாநில எல்லைகள், தலைநகரங்கள், தொழில்பேட்டைகள் ஆகியவற்றையும் அதில் குறித்தோம். மாணவர்கள் சலிக்காமல் இந்தியா குறித்த கேள்வி- பதில்களைக் கற்றுக்கொண்டே இருந்தனர்.

2002- 2003-ம் ஆண்டுவாக்கில், தமிழகத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எங்கள் பள்ளியிலே முதல்முறையாக அதை ஏற்படுத்தினோம்.

பாடம் தாண்டி…

வழக்கமான பாடத்திட்டங்களோடு நின்றுவிடாமல், கல்வி தாண்டி, வேறு தளங்களிலும் பயணிக்கத் தோன்றியது. கூடுதல் கல்விசார் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தோம். மாவட்ட அளவில் நடக்கும் பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டையில் இருக்கும் அனைத்துப் பள்ளிகளிலும் எங்கள் பள்ளி தனித்துப் பேசப்பட்டது. அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ளும் கருத்தரங்குகள் நடைபெறும் இடங்களில் மாணவர்களால் வரையப்பட்ட ஓவியக் கண்காட்சிகளை நடத்தினோம்.

ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை இலக்கியக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நாடகம், விவாத மேடை, சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், மேடைப்பேச்சு ஆகியவை நடத்தப்பட்டன. மாணவர்கள் வெகு விரைவிலேயே எல்லாத் துறைகளிலும் கற்றுத்தேர்ந்தனர். எட்டாம் வகுப்பு முடித்து, உயர்நிலைப் பள்ளிகளுக்குச் செல்லும்போது, அங்குள்ள மாணவர்கள் இவர்களைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

இயற்கை மீதான அக்கறையை வளர்த்தெடுக்கும் பொருட்டு, மொட்டை மாடித் தோட்டத்தை வைத்தோம். தொட்டிகளில் செடிகள் வைக்காமல், மண் கொண்டுபோய், பாத்தி கட்டினோம். ஊட்டியில் இருந்து பூச்செடிகள் எடுத்து வந்து, மாடியில் நட்டோம். மாணவர்களின் முறையான பராமரிப்புக்குப் பிறகு, பள்ளியே நந்தவனமாகப் பூத்துக் குலுங்கியது” என்கிறார்.

மாணவர்களே இல்லாத பள்ளிக்கு வந்த மாற்றல்

கோத்தகிரி மாவட்டத்தில் தேனாடு என்னும் ஊரில் இருந்த ஆரம்பப்பள்ளி ஒன்று, 4 மாணவர்களுடன் மூடப்படும் நிலையில் இருந்தது. அங்கிருந்த ஆசிரியர், 4 மாணவர்களுக்கும் டிசி கொடுத்து, வேறு பள்ளிக்கு மாறச் சொல்லிவிட்டார். இந்நிலையில் மாற்றலாகி, தேனாடு வந்து சேர்ந்தார் ஆசிரியர் தர்மராஜ்.

அங்கிருந்த பள்ளியின் சுவர்களில் விலங்குகள், தாவர வகைகள், நிலங்களின் வேறுபாடுகள் உள்ளிட்ட ஏராளமான தகவல்களை ஓவியங்களாக வரைந்தார். அந்த நான்கு மாணவர்களையும் அழைத்துக் கொண்டு, வீடு வீடாகச் சென்று, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மெல்ல மெல்ல அப்பள்ளியின் மீது மக்களுக்கு ஈடுபாடு வர ஆரம்பித்தது. மாணவர்கள் சேர ஆரம்பித்து, கல்வியும் கற்கத் தொடங்கினர்.

முளைத்த கணிப்பொறி ஆர்வம்

ஆசிரியர் தர்மராஜ், 2005-ம் ஆண்டு வரைக்கும் கணிப்பொறி என்றால் என்னவென்றே தெரியாமல்தான் இருந்திருக்கிறார். பாடப் புத்தகங்களை வைத்து மட்டுமே கற்பித்தார். 2006-ல் சென்னையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் கணிப்பொறி குறித்த பயிற்சி எடுத்தவர், அங்குதான் முதன்முதலில் மடிக்கணினியையே கண்டிருக்கிறார்.

அது குறித்து ஆர்வமாகப் பேசுபவர், “அப்போதுதான் முதன்முதலாக அந்தக் கறுப்பு நிறத் தோஷிபாவைப் பார்த்தேன். அபூர்வப் பொருளாகக் காட்சி கொடுத்தது அது. அங்கிருந்த அதிகாரியிடம், இதைத் தொட்டுப் பார்க்கலாமா என்று கேட்டேன். உடனே அவர், அதை உயிர்ப்பித்து, அடிப்படைச் செயல்பாடுகளைக் கற்றுக் கொடுத்தார்” என்கிறார்.

சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வந்திறங்கிய ஆசிரியர் தர்மராஜ், நண்பர்கள் சிலரின் உதவியுடன் மடிக்கணினி ஒன்றை வாங்கிய பின்னரே, வீடு திரும்பினார். மறுநாள் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகூட இல்லாத தேனாடு பள்ளிக்கு, அக்கணினியை எடுத்துச் சென்றார். காலையில் வீட்டிலேயே சார்ஜ் செய்து பள்ளிக்கு எடுத்து வந்து, மதியம் வரை தனக்குத் தெரிந்த அடிப்படை விஷயங்களை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். மதிய உணவு இடைவேளைகளில் அருகிலிருக்கும் வீடுகளில் சார்ஜ் செய்து, திரும்பவும் கற்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தேசிய அளவில் தேனாடு பள்ளி

2009-ம் ஆண்டு இந்திய அரசின் எரிசக்தி அமைச்சகம் தொடங்கிய ஓவியப் போட்டியில், மாணவர்களைக் கலந்துகொள்ள வைத்தார். எரிசக்தியின் பயன்பாடுகள் என்ன? அவற்றை எப்படி மிச்சப்படுத்துவது? இயற்கை வளங்களின் முக்கியத்துவம் உள்ளிட்டவைகளைத் தன் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து மாணவர்களைத் தயார் செய்தார். 2009-ல் இருந்து, 12 வருடங்களாகத் தேசிய அளவில் நடந்து வரும் இப்போட்டியில், ஆயிரக்கணக்கான மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி பள்ளிகளுடன் போட்டி போட்டு, 7 முறை முதல் 10 இடங்களுக்குள் வந்திருக்கிறது தேனாடு பள்ளி.

பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலோடு, செயல்வழிக் கற்றல் முறையைக் கணிணிவழிப்படுத்தி இருக்கிறார். ஆறாம் வகுப்பில் தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடவகைகளுக்கு அது தொடர்பான இடங்களுக்குச் சென்று படம்பிடித்து, காணொளியாக்கி, அதன் பின்னணியில் தமிழில் குரல் விளக்கங்களையும் கொடுத்திருக்கிறார்.

உதாரணமாக, காடு மற்றும் விலங்கு வகைகள் என்னும் தலைப்பில் இருக்கும் காணொளியில் இந்தியா முழுக்க உள்ள காடுகள், அதன் வகைகள், இருப்பிடங்கள், பயன்பாடுகள், மழைப்பொழிவுகள், வளர்ச்சி, காடுகளின் பரப்பளவு உள்ளிட்ட தகவல்களை, நேரடியாகச் சென்று படம்படித்து, தொகுப்பாக்கி, பின்னணி இசை சேர்த்து, உள்ளடக்கத்துக்கான குரல் கொடுத்திருக்கிறார். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறையின் ஒப்புதலுக்குப் பின்னரான வெளியீட்டுக்காகக் காணொளித் தொகுப்புகள் காத்து நிற்கின்றன.

காண: http://denadschool.blogspot.in/

சமூக சேவையிலும் சாதனை

கற்பித்தல் தாண்டி, சமூக ரீதியான செயல்பாடுகளிலும், ஆசிரியர் தர்மராஜ் அதிக அக்கறை காட்டி வருகிறார். வருடந்தோறும் எய்ட்ஸ் ஒழிப்பு தினத்தில் விழிப்புணர்வுப் பேரணி நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர், பழங்குடி மக்களுக்காக ஹெச்ஐவி எதிர்ப்பு, இரத்த தானம், கண் தானம், உடல்நலம் தொடர்பான முகாம்களையும் நடத்தி வருகிறார்.

அத்தோடு பழங்குடி இன மக்களின் குழந்தைகளுக்காகவே, தனியாக பள்ளியொன்றையும் நிர்வகித்து வருகிறார் ஆசிரியர் தர்மராஜ். அரசின் உதவியோடு 13 வருடங்களாக இயங்கும் இப்பள்ளியில் இருந்து, இதுவரை 824 பழங்குடி மாணவர்கள் கல்வி கற்று அடுத்த நிலைக்கு உயர்ந்திருக்கின்றனர்.

எதிர்காலச் செயல்பாடுகள் குறித்தும் ஆர்வமாய்ப் பேசுகிறார். ” எங்களின் ஆரம்பப் பள்ளி மாணவர்களை வைத்து, ஒரு படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறோம். பத்தாண்டுகளுக்கு முன்பு நீலகிரியின் நிலை என்ன, இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து நீலகிரி எப்படி இருக்கும் என்பதைப் பற்றிப் பேசும் படமாக அது இருக்கும். அதற்காக மாணவர்களுக்கு கேமரா பயிற்சியளித்து வருகிறோம். அரசுப் பள்ளி மாணவர்களால் எடுக்கப்படும் அப்படம், மாறி வரும் நீலகிரி மாவட்டம் குறித்த வேதனையை உரக்கப்பேசும். நிலத்தடி நீர்க் குறைவு, மழைநீர்ப் பற்றாக்குறை, நிலச்சரிவு உள்ளிட்ட முக்கியப் பிரச்சனைகளை வலிமையாக எடுத்துரைக்கும்.

ஆசிரியப்பணி குறித்து என்றுமே எனக்குப் பெருமிதம்தான். ஒரு முறை, கோவையில் இருந்து கோத்தகிரி திரும்பிக் கொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதில், இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் இருக்க நேரிட்டது. அப்போது எனக்கு அடிபட்ட சம்பவம், தேனாடு மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. கோவிலில் எனக்காகச் சிறப்பு பூஜைகள் செய்து, நான் குணமாக வேண்டுமென்று பலவித வேண்டுதல்களை வைத்திருக்கின்றனர். எதையும் அறியாமலே, குணமானவுடன் பள்ளிக்குச் சென்றேன். அங்கே நான் கண்டது அழுகையோடு கூடிய ஆனந்தக் கண்ணீரை உதிர்த்த அன்புள்ளங்களை!

கல்வியை கற்றுக் கொடுத்ததற்காக, ஓர் ஊரே அழுது புலம்பி, பிரார்த்தனைகள் செய்தது. இதைவிட ஒரு ஆசிரியனுக்கு, வேறு என்ன தேவைப்பட்டுவிடும்?

க.சே. ரமணி பிரபா தேவி – தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

Source…..www.tamil.the hindu.com

Natarajan

Message for the Day…” Trust in the God and March to the best of your Ability…”

Sathya Sai Baba

Virtues must be cultivated in each home; each member sharing in the joy with the rest, each one seeking for opportunities for helping others. This attitude must be stuck to, so that it may stay as character. How can a vessel kept with a closed lid be filled with water? It must be open to receive good impulses! In all your efforts, trust in a Higher Power which is ever ready to help you. Then your work is made easy. This comes out of devotion, and reliance on the Lord who is the source of all Power. When you travel by train, you only have to purchase the ticket, board the proper train and take a seat, you can leave the rest to the engine. Do you carry your luggage on your head? So too, trust in the Lord and march to the best of your ability. Have faith and earn the Lord’s grace by using the intelligence and the conscience He has endowed you with.

Fish Can Now Snack On Ganesh Idols Made From Fish Food…. Great Initiative !!!

If you live in Maharashtra, you must be knowing that Ganesh Chaturthi is celebrated with such aplomb and on a large scale. People go crazy and pray to Lord Ganesha for their well-being. Towards the end, the Ganesha idols are the immersed in water (Visarjan). But does it end here? NO.

The main problem with Ganesh Chaturthi is the immersion of idols. It affects the marine life after it is immersed in water.

Sprouts Environmental Trust, with support from a private company, has come up with an idea of creating Ganesha idols which are eco-friendly –  a way to keep oceans clean and also FEED THE FISH.

Ganesha idols were first made with Plaster of Paris (PoP). In 2004, a company resorted to making these idols with clay so that it doesn’t pollute the environment.

But this time idols will be made by vegetarian food and corn so that aquatic organisms can devour that and not be killed. Also, these food items will be coloured in an innovative way with turmeric, Chandan, and geru. Isn’t this amazing?

The founder of NGO Sprouts said that they have made around 40 idols and they are receiving orders from across the country.

How Visarjan ruins the water bodies?

 

The materials that are used to make these idols ruin the aquatic life as these react with organic matter. The Plaster of Paris material that is usually used lessens the oxygen level of marine life and the chemicals like sulphur, phosphorus, and magnesium act as a spoilt sport.

If you wish to buy one of these idols, you can refer to this.

How was this idea implemented?

1. A Campaign named God save the Ocean was designed by two senior creative directors. A lot of ideas were put and an extensive research followed.

2. Soon, they came across a person from Nagpur who makes idols out of chocolate. While this idea seemed good, but wasn’t implemented.

3. After this, vegetable powder seemed a feasible idea but even that had a potential to deteriorate the environment. And thus, vegetarian food seemed plausible. And thus, this was the solution – An idols that fish can eat! The small fish can consume this and larger fish can consume small fish, which is a healthy cycle and saves the environment.

 

After seeing these reactions, I hope this trend catches on and people buy this idol because even Gods want us to save marine life.

News Source: Hindustan Times

source…Aparajita Mishra….www.storypick.com

Natarajan

Message for the Day….” Ways to attain Bliss…”

Sathya Sai Baba

Your heart should be like glass, with the spiritual light inside illuminating the world outside. The inner urges on interacting with the world outside should make one lean towards service, empathy and mutual help. Presently, people read and study all kinds of unintelligible Vedantic texts and struggle with commentaries and translations to grasp their sense. Knowledge is being poured down their throats; but the potion does not get down to soften their heart. The spiritual truths should not be put on for mere public exhibition, as in a drama, where appropriate dresses are worn on the stage but taken off when the actor moves off the stage. They must be adhered to all the time to derive the Atma ananda (Bliss of the Soul) which they genuinely confer. Bliss is easily attained by careful, well-timed and regulated discipline; it cannot be got by spurts and skips. You must take the effort to learn each lesson of virtue through systematic study and diligent application to attain success.

Message for the day….” Always keep the Highest Goal …”

Sathya Sai Baba

When you do not discriminate the process and purpose of every act, and go ahead doing them with no understanding, you reduce them to a funny fossilized routine. Once even Prahlada observed, “Since it is difficult to destroy egotism, people take the easier option to offer dumb animals at the altar. Animal sacrifice is the manifestation of the quality of inertia (tamo guna); it is the path of bondage. Sacrifice of the animal of egotism is the purest sacrifice (satwic yajna) on the Godward path of liberation.” Thus the highest goal(paramaartha) of the past is turned into the fool’s goal(paaramaartha) of these days! Similarly every one of the ancient practices, which were once full of meaning has grown wild beyond recognition. It is now impossible to pluck the tree by the roots and plant a new one. So the existing tree must be trimmed and trained to grow straight. Always remember the highest goal and never dilute it into the lowest.

Message For ONAM Day…” Strive to Manifest , Cultivate and Express Love, Suppressing Ego and Pride …”

Sathya Sai Baba

When you eat a banana, you have to first remove the skin; so it is with other fruits as well be it a mango or an orange. The sweet substance has to be reached after removal of the bitter skin. For Emperor Bali to be received and accepted by God, the bitter cover of egoism and power-mania had to be removed. Ignorance,maya (delusion), illusion, pride, etc. are the components of the skin. The festival of Onam comes and goes, but you are no way nearer to God. This is because while Onam is thoroughly welcomed and enjoyed, generosity, renunciation, love and the spirit of service are not given an equally hearty welcome. Take this as the Onam Message – strive to manifest, cultivate and express Love, suppressing pride and egoism, so that you win the Grace of God.

Miracles Happening Inside our Body Every Single day….

 

Sometimes you may feel like your body is beginning to creak and fail you on the outside, but do you ever stop to consider the incredible work that is taking place inside of it? There is so much going on and everything fits together so well, that it’s almost impossible to comprehend it. This presentation will remind you that there are miracles going on inside your body every single day.

Heart

Info source: sentientdevelopments.com

Info Source: wonderopolis.com/Image Source: fleetfeetcolumbus
 

Cancer

Info source: cracked.com/Image source dream designs, freedigitalphotos.net 

Brain

Info Source: sentientdevelopments.com
 

Stomach

Info Source: cracked.com/Image source dream designs, freedigitalphotos.net
 

Eyes

Info Source: listverse.com

Energy

Info source: physlink.com

Red Blood Cells

Skin

Hair

Words

Liver

Saliva

Testicles

Kidneys

Hair

 

Digestion

Regeneration

Final Slide

Source….www.ba-bamail.com

Natarajan

 

 

” மகாபெரியவா கொடுத்த வாழைப் பழம் பிரசாதம் ….குழந்தைக்கு …”

இரண்டரை வயது வரை நடக்காமலேயே இருந்த ஒரு குழந்தை, மகா பெரியவா ஆசி பெற்று நடக்க ஆரம்பித்த கதை இது.

பிறந்த குழந்தை வாய் திறந்து மழலை மொழி பேசாதா என்பதே தாய் உட்பட அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால், குழந்தை பிறந்ததும் தத்தித் தவழ்ந்து நடக்காமலே இருந்தால் எப்படி இருக்கும்? அது எத்தனை பெரிய துயரம்! அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தானே அந்த வலி தெரியும்?!

இரண்டரை வயது வரை நடக்காமலேயே – உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே தரையில் தத்தித் தத்தி நகர்ந்துகொண்டிருந்தது அந்தக் குழந்தை. பெயர் சுப்பிரமணியன். நடக்கவேண்டிய வயது வந்த பிறகும் குழந்தை நடக்காமலே இருந்தால் எந்தத் தாய்தான் பரிதவித்துப் போகமாட்டாள்? சுப்பிரமணியனின் நிலையைப் பார்த்த புவனேஸ்வரியும் அப்படித்தான் பரிதவித்துப் போனார்.

அரசுப் பணியில் இருந்த கிருஷ்ணமூர்த்தியும் அவருடைய மனைவியான ராஜமும் பேரனின் இந்த நிலை குறித்து ரொம்பவே கவலைப்பட்டனர். தங்கள் மகள் வயிற்றுப் பேரனான சுப்பிரமணியனுக்கு நேர்ந்த இந்த அவலம் தாத்தா மற்றும் பாட்டியைத் தடுமாற வைத்தது. ‘பேரன் சரியாக வேண்டுமே’ என்பதுதான் அவர்களின் கவலையாக இருந்தது.

‘‘பூர்வ ஜன்ம கர்மாவா இருக்கும். அதனாலதான் அவன் இப்படிப் பொறந்திருக்கான். நிறைய கோயில்களுக்கு அவனைக் கூட்டிட்டுப் போய் பிரார்த்தனை பண்ணு. பரிகாரம் செய்’’ என்று கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னார் நண்பர் ஒருவர். அதன்படி பல கோயில்களுக்கும் போய் தெய்வத்தின் சந்நிதிகளில் பிரார்த்தனையையும் வைத்தார்.

மருத்துவத் துறையில் சுப்பிரமணியனை ‘க்யூர்’ செய்ய இப்படி ஒரு டாக்டர் இங்கே இருக்கிறார் என்று எவராவது தகவல் சொன்னால் போதும்… அடுத்த நாளே அப்பாயின்ட்மென்ட் வாங்கி அந்த டாக்டரிடத்தில் இருப்பார் கிருஷ்ணமூர்த்தி. சுப்பிரமணியன் எழுந்து நடக்க வேண்டும் என்பதற்காக சின்ஸியரான இந்தத் தாத்தா பார்க்காத மருத்துவர் இல்லை; செய்யாத சிகிச்சை இல்லை.

மருத்துவர்களாலேயே ‘இதுதான் பிரச்னை’ என்று ஆணித்தரமாக எதையும் எடுத்துச் சொல்ல முடியவில்லை. ஒரு டாக்டர்… அவருக்கு அடுத்து இன்னொரு டாக்டர்… என்று நாட்கள் நகர்ந்தனவே தவிர, நல்ல சிகிச்சை இல்லை; சுப்பிரமணியனின் செயல்பாடுகளிலும் முன்னேற்றம் இல்லை. சிகிச்சையின் பொருட்டு பொருட்செலவும் அதிகமானது.
‘‘அவன் நடக்க மாட்டேங்கிறான்னு அப்படியே விட்டுடாதே… நீ பாட்டுக்கு அவனை நிக்க வெச்சு நடக்கறதுக்கு உண்டான முயற்சிகள்ல தொடர்ந்து ஈடுபட்டுண்டே இரு. ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்கும் உன் பேரன் இதே நிலையிலயே இருந்துட்டான்னா – அதாவது நடக்காமவே இருந்துட்டான்னா பிற்காலத்துல உம் பாடு இன்னும் சிரமமாகிப் போய்விடும்’’ என்று கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒருவர் எச்சரிக்கை என்ற பெயரில் பயமுறுத்தியது வேறு, அவரது குடும்பத்தினரை ஏகத்துக்கும் களேபரப்படுத்திவிட்டது. எனவே, அலுவலக நேரம் தவிர, தான் வீட்டில் இருக்கும் நேரங்களில் பேரன் சுப்பிரமணியனைத் தூக்கி நிற்க வைப்பார் கிருஷ்ணமூர்த்தி. ஆனால், குழந்தையின் இளம் கால்கள் தரையில் நிற்காமல் வளைந்து, மடிந்து தடுமாறும். சட்டென்று பேலன்ஸ் சரிந்து கீழே விழும் பேரனைக் கைத்தாங்கலாக அரவணைத்துக்கொள்வார் கிருஷ்ணமூர்த்தி.

ஒரு நாள் கிருஷ்ணமூர்த்தியின் அலுவலக நண்பர் ஒருவர், ‘‘ஏம்ப்பா கிட்டு… ஒரு நாள் காஞ்சிபுரம் போய் மகா பெரியவாளைப் பாரு. குழந்தைக்கு அவரோட ஆசி கிடைச்சா எல்லாம் சரியா போயிடும். கூட்டிண்டு போய்ப் பாரேன்’’ என்று அனுசரணையாகச் சொன்னார்.

மனைவி ராஜத்திடம் இந்த விஷயத்தைச் சொல்ல… ‘‘கண்டிப்பா போயிட்டு வருவோம். கண்கண்ட அந்த தெய்வத்தோட பார்வை இவன் மேல விழுந்தா, ஒருவேளை எல்லாம் சரியாயிடும்னு தோண்றது’’ என்று மனைவி ராஜமும் தன் பங்குக்குச் சொல்ல… ஒரு நாள் வாடகை காரை அமர்த்திக் கொண்டு காஞ்சிபுரம் கிளம்பினார்கள்.

அது ஒரு கோடை விடுமுறைக் காலம். பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு விட்டதால், குடும்பத்தோடு பலரும் காஞ்சி ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தனர். தங்கள் ஊரில் இருந்து கிட்டத்தட்ட ஒரு பிக்னிக் போல் புறப்பட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள திருத்தலங்களை எல்லாம் தரிசித்துவிட்டு, அப்படியே ஸ்ரீமடத்துக்கும் பெரியவா தரிசனத்துக்காக வந்திருந்தார்கள்.

காஞ்சி மடமே மனிதத் தலைகளால் நிரம்பியதுபோல் காணப்பட்டது. கூட்டத்தினரிடையே ஒருவாறு ஊர்ந்து, நீந்தி மகா பெரியவா அமர்ந்து அருட்காட்சி தந்துகொண்டிருக்கும் சந்நிதானத்தை அடைந்தனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர். பேரன் சுப்பிரமணியனைத் தன் இடுப்பில் தூக்கி வைத்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி. ஏகத்துக்கும் காணப்பட்ட கூட்டம் வேறு சுப்பிரமணியனை ஹிம்சை செய்தது போலும். விடாமல் அழுதுகொண்டே இருந்தான். தாய் புவனேஸ்வரியும் பாட்டி ராஜமும், பெரியவா சந்நிதானத்தைக் காட்டி, ‘‘அங்கே பார், உம்மாச்சித் தாத்தா. அழக்கூடாது. அவரைக் கும்புட்டுக்கோ’’ என்று சொல்லிக்கொண்டே இருந்தனர்.

அன்று மகா பெரியவா மௌனத்தில் இருந்தார். எவரிடத்திலும் எதுவும் பேசவில்லை. முக்கியமான சந்தர்ப்பங்களில் மட்டும் தன் அந்தரங்கக் காரியதரிசிகளிடம் சைகையின் மூலம் சில விஷயங்களைக் கேட்டறிந்தார். மற்றபடி தன் முன் வந்து செல்லும் பக்தர்களின் குறிப்பறிந்து பிரசாதத்தையும் திருக்கரங்களால் ஆசியையும் வழங்கிக்கொண்டிருந்தது அந்தப் பரப்பிரம்மம்.

கூட்டம் வேறு அதிகமாக இருந்ததால், பெரியவா தரிசனம் முடிந்து செல்லும் பக்தர்களை விரைவாக அங்கிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள் சீடர்கள்.

மகனை மேல்படிப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு முன் ஆசி பெற வந்தவர்கள், கல்லூரி அட்மிஷன் கிடைக்க வேண்டுமே என்கிற பிரார்த்தனையுடன் வந்த பக்தர்கள், திருமணத்துக்கு அழைப்பிதழை அவரது சந்நிதானத்தில் வைத்து அனுக்ரஹம் வேண்டி வந்தவர்கள் என்று திரளான கூட்டம் கொஞ்சமும் கலையாமல் அப்படியே இருப்பதுபோல்தான் பட்டது கிருஷ்ணமூர்த்திக்கு. தரிசனம் முடிந்து பத்துப் பேர் வெளியேறினால், இருபது பேர் வந்து புதிதாகச் சேர்ந்து கொள்கிறார்கள்.

அப்போதுதான் கிருஷ்ணமூர்த்தியின் மனதுக்குப் பட்டது – கூட்டமே இல்லாமல் இருக்கும் ஒரு தினத்தில் வந்து மகா பெரியவாளிடம் இவனைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லி, ஆசியை வேண்டிப் பெற்றிருக்கலாமே என்று! ஆனால், பெரியவாளின் அனுக்ரஹம் எப்படி இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்?

‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ நாம கோஷத்தை மனதுக்குள் முணுமுணுத்தபடியே ‘கருணை தெய்வத்தின் திருப்பார்வை பேரன் மேல் விழுந்து, அவன் நல்லபடியாக நடக்கவேண்டும்’ என்று பிரார்த்தித்துக்கொண்டே வரிசையில் நடந்து கொண்டிருந்தார் ராஜம். இப்படி ஒரு பிள்ளையைப் பெற்ற புவனேஸ்வரியும் தன் தாயைப் பின்தொடர்ந்து நடந்தார்.

பெரியவாளின் அருகே வந்து நின்றபோது, பரவசப்பட்டுத்தான் போனார் கிருஷ்ணமூர்த்தி. சுப்பிரமணியனைக் கீழே இறக்கித் தரையில் அமர வைத்தார். பிறகு, நமஸ்கரிப்பது போன்ற பாவனையில் அவனையும் குப்புறப் படுக்க வைத்து, தானும் கீழே விழுந்து நமஸ்கரித்தார். இவரைத் தொடர்ந்து ராஜமும் புவனேஸ்வரியும் பெரியவாளை நமஸ்கரித்தனர்.

சுப்பிரமணியன் மீது தீர்க்கமாகத் தன் பார்வையைச் செலுத்தினார் மகா பெரியவா. பிறகு, ‘அவனைத் தூக்கி வெச்சுக்கச் சொல்லு’ என்பதாக ஒரு சிஷ்யனுக்குப் பெரியவா சைகை காண்பிக்க… அவன் கிருஷ்ணமூர்த்தியிடம், ‘‘மாமா… குழந்தையைத் தூக்கி இடுப்புல வெச்சுக்குங்கோ’’ என்றான். அதன்படி பேரனைத் தூக்கித் தன் இடுப்பில் வைத்துக்கொண்டார் கிருஷ்ணமூர்த்தி. இவர்கள் அனைவருக்கும் கல்கண்டு மற்றும் குங்குமப் பிரசாதம் கொடுத்தார் மகா பெரியவா. ஏதோ சொல்லவேண்டும் என்று சுப்பிரமணியனின் நிலையை விவரிப்பதற்காக கிருஷ்ணமூர்த்தி வாயைத் திறக்கவும், பெரியவாளே அவரைக் கையமர்த்தி விட்டார்.

ராஜமும் புவனேஸ்வரியும் கண்களில் நீர் பெருக அந்த மகானின் சந்நிதியில் தங்களின் பிரார்த்தனைகளை வைத்தனர். ‘குழந்தை நடக்கவேண்டும்… குழந்தை நடக்கவேண்டும்’ என்பது மட்டுமே அப்போதைய அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

‘‘தரிசனம் செஞ்சவா எல்லாம் நகருங்கோ… நகருங்கோ’’ என்று பெரியவாளுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த சில சிஷ்யர்கள் குரல் கொடுக்கவும்… மெள்ள நகரலாம் என்று தீர்மானித்துக்கொண்டு ஓரடி எடுத்து வைத்தார் கிருஷ்ணமூர்த்தி. ‘அவாளை சித்த இருக்கச் சொல்லு’ என்பதாகத் தன் சீடன் ஒருவனுக்குப் பெரியவா சைகையால் உத்தரவு பிறப்பிக்க… சட்டென்று நகர்ந்த அவன் கிருஷ்ணமூர்த்தியின் கையைப் பிடித்து, காத்திருக்குமாறு பெரியவா சொன்னதாகச் சொன்னான்.

பெரியவாளுக்கு முன்னால் நெகிழ்ச்சியுடன் காத்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி. அதற்கு மேல் அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. குரல் உடைய… ‘‘திருவையாறு பூர்வீகம். எம் பேரன் இவன். பொறந்து ரெண்டரை வருஷம் ஆச்சு… இன்னும் தரையில் கால் பாவிச்சு நடக்கலை. எத்தனையோ வைத்தியர்கிட்ட போயிட்டேன். காசு செலவானதும் கவலை அதிகமானதும்தான் மிச்சம். பெரியவா கருணை பண்ணணும்…’’ என்றார். கண்களில் இருந்து வழியும் நீரை மேல்துண்டால் துடைத்தார்.

ஒரு புன்னகை பூத்த அந்தப் பரப்பிரம்மம், தன் முன்னால் சற்றுத் தள்ளி வைக்கப்பட்டிருந்த பழத் தட்டை இன்னும் தன் அருகே கொண்டு வருமாறு சீடனிடம் சைகையால் சொன்னார். அவனும் அப்படியே செய்தான். அந்தத் தட்டிலிருந்து ஒரு ரஸ்தாலி வாழைப்பழத்தைத் தன் கையால் எடுத்தார். உரித்துச் சாப்பிடும் பாவனையில் அதன் மேல்தோலை உரித்தார். பாதி வாழைப்பழம் உரிக்கப்பட்ட நிலையில் அது காட்சி அளித்தது. இதை கிருஷ்ணமூர்த்தியின் இடுப்பில் இருந்த சுப்பிரமணியனுக்கு நேராக நீட்டினார் பெரியவா. அதற்கு ஏற்றாற்போல் கிருஷ்ணமூர்த்தியும் கொஞ்சம் நெருங்கி வந்தார். இருந்தாலும், மகா பெரியவா நீட்டிய அந்தப் பழத்தைத் தான் வாங்கி, சுப்பிரமணியனுக்குக் கொடுத்துவிடலாமே என்கிற எண்ணத்துடன் ஒரு சீடன் சட்டென முன்வந்து பெரியவாளிடம் கையை நீட்டினான்.

அப்போது பெரியவாளின் முகத்தைப் பார்க்கணுமே…! ‘தள்ளிப் போ’ என்பதாக அந்தச் சீடனுக்கு உத்தரவுபோல் வலது ஆட்காட்டி விரலை மட்டும் இடமும் வலமும் வேகமாக அசைத்துக் காண்பித்தவர், சுப்பிரமணியனைத் தன் அருகே வந்து அந்த வாழைப்பழத்தை வாங்கிக்கொள்ளுமாறு முக பாவனையால் அழைத்தார். அதற்கேற்றாற்போல் கிருஷ்ணமூர்த்தியும் தன் இடுப்பில் இருந்த சுப்பிரமணியனை இன்னும் கொஞ்சம் அருகே கொண்டுபோனார். தன் கையில் உரித்த நிலையில் இருந்த வாழைப்பழத்தைப் பெரியவா நீட்ட… தன் கையை நீட்டி அதை வாங்கிக்கொண்டான் சுப்பிரமணியன்.

அங்கே கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் ருசிகரமான இந்தக் காட்சியைப் பார்த்து மெய்சிலிர்த்தனர். வயதான ஒரு மாமி, ‘‘எத்தனையோ குழந்தைகளுக்குப் பெரியவா கல்கண்டு கொடுத்துப் பார்த்திருக்கேன். பழங்களைத் தந்தும் பார்த்திருக்கேன். ஆனா, ஒரு வாழைப்பழத்தை – அதன் தோலை உரிச்சு – பெரியவாளே அந்தக் குழந்தையோட கையில கொடுத்தார்னா… இது அந்தக் குழந்தைக்குப் பெரிய அனுக்ரஹம்’’ என்று பக்கத்தில் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார்.

சுப்பிரமணியன் தன் கையிலிருந்து வாங்கிய வாழைப்பழத்தை முழுதுமாக அவன் சாப்பிடும் வரை வேறு எந்த பக்தரையும் பார்க்கவில்லை பெரியவா. அவன் சாப்பிட்டு முடித்து, அவர்களை அங்கிருந்து அனுப்பிய பின்னர்தான் மற்ற பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்க ஆரம்பித்தார் மகா பெரியவா.

ஊருக்கு வந்த கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர் பெரிதும் சந்தோஷப்பட்டனர். ‘‘ஏதோ நம் பிரார்த்தனை அந்த மகான் காதுலயே விழுந்துடுத்து போலிருக்கு. நம்மை எல்லாம் நன்னா ஆசிர்வாதம் பண்ணிட்டார். அதுவும், நம்ம சுப்பிரமணிக்குத் தன் கைப்பட வாழைப்பழம் கொடுத்ததை இப்ப நினைச்சுப் பார்த்தாலும் சிலிர்ப்பா இருக்கு’’ என்றார் ராஜம் தன் கணவரிடம்.

‘‘பெரியவா ஆசிர்வாதத்துல அவன் நடக்க ஆரம்பிச்சாலே போதும். வேற எதுவும் வேண்டாம்’’ என்ற கிருஷ்ணமூர்த்தி, அந்த வேளையில் காஞ்சி மகானை நினைத்து, இருந்த இடத்தில் இருந்தே வணங்கினார்.

காஞ்சிபுரத்தில் இருந்து வீட்டுக்கு வந்து சுமார் மூன்று நாட்கள் ஆகி இருக்கும். பணி புரியும் அரசு அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் ஏதோ ஒரு பேச்சுவாக்கில் தான் காஞ்சி சென்று வந்ததைப் பற்றிச் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி. கூடவே, பெரியவாளின் ஆசி குறித்தும் அங்கு தன் பேரனுக்கு வாழைப்பழம் தந்த அனுபவத்தையும் சொன்னார். அப்போது சென்னையில் ஓரிடத்தில் ஒரு பள்ளியைப் பற்றிச் சொல்லி, ‘‘அங்கு உன் பேரனைக் கூட்டிக்கொண்டு போய்ப் பார். எதற்கும் ஒரு வேளை வரவேண்டும். உனக்கு இப்பதான் பெரியவா உத்தரவு கொடுத்திருக்கா போலிருக்கு’’ என்றார்.

அதை அடுத்து, உயர் அதிகாரி சொன்ன அந்தப் பள்ளிக்குப் பேரனைக் கூட்டிப் போனார் கிருஷ்ணமூர்த்தி. சரியாக நான்கே மாதங்களில் சுப்பிரமணியனுக்கு நடக்கக்கூடிய பயிற்சியை அன்போடு சொல்லித் தந்தார்கள். ‘‘பெரியவாளின் பார்வை பட்ட சில மாதங்களிலேயே அவனிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. பயம் குறைந்தது. தைரியமாக நடக்க ஆரம்பித்தான். இப்ப அவனுக்கு வயசு இருபத்திநாலு. அவன் நடக்கிற நடைக்கு வேற யாருமே ஈடு கொடுக்க முடியாது. அப்படி ஒரு வேகம். அவன் வேகமா நடக்கறதைப் பார்த்தா எனக்கு பெரியவா ஞாபகம்தான் வருது. அந்த தெய்வம்தானே இவனை இப்படி நடக்க வெச்சிருக்கு!’’ என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள் கிருஷ்ணமூர்த்தி தம்பதியர்

Source….www.periva.proboards.com

Natarajan

 

 

 

Message for the Day…” Speak the Truth and Walk on the Path of Righteousness…”

Sathya Sai Baba

The Gurus (preceptors) of the past taught only from experience; they loved their pupils and sought to correct their faults and failings, that is how their students lead happy and useful lives. When the pupils finally left the Guru’s home, he exhorted them to follow two guidelines (Sutras) which were as essential for life as the two eyes(netras) – Speak the truth; Walk on the path of righteousness(Satyam vada, Dharmam chara). The Guru had the faith that the pupil (shishya) would take the advice to heart, for he himself was the living proof of their value and validity. The Guru always takes great care to remove from the heart of the pupil the weeds of evil habits and tendencies, and implant therein the seeds of love. He insists on spiritual discipline (sadhana) for purifying the pupils’ minds and to render them strong enough to overcome temptations of all kinds. Virtue and character alone marks a truly educated person.